Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2008 பதிவுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2008 பதிவுகள் (பகுதி 1)

வீரகேசரி நாளேடு 12/31/2008 12:38:04 PM -

ஜனவரி உள்நாட்டு அரசியல்

ஜன.01

* ஐ.தே.கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இந்து கலாசார அமைச்சருமான தியாகராசா மகேஸ்வரன் கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் சுட்டுக்கொலை.

ஜன.02

* யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொள்ள அரசு முடிவு.

ஜன.03

* கொம்பனி வீதியில் நடைபெற்ற கிளேமோர் தாக்குதலில் இராணுவ வீரர் உட்பட 4 பேர் பலி.

* உடன்பாட்டிலிருந்து விலகுவது மோதல்களை தீவிரமடையச் செய்யும் பொது மக்களின் பாதுகாப்பையும் பலவீனமாக்கும் என்கிறது நோர்வே.

ஜன.4

* இலங்கையின் முடிவு குறித்து ஐ.நா. அமெரிக்கா, கனடா ஆழ்ந்த கவலை. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணுமாறு வலியுறுத்தல்.

ஜன.05

* போர் நிறுத்தத்தை இருதரப்பும் நேர்மையுடன் அணுகவில்லை. பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் தெரிவிப்பு.

ஜன.06

* கொழும்பில் பயணிகள் வாகனங்கள் படையினரால் கடுமையான சோதனை 198பேர் கைது.

ஜன.07

* இரவு வேளைகளில் வீடுகளில் படையினர் தேடுதல் நடத்தக் கூடாது. உயர் நீதிமன்றம் உத்தரவு.

ஜன.08

* தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சர் டி.எம். தசனாயக்க ஜாஎல ருக்மணி தேவி சிலைக்கருகில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் பலி. அம்பாறையில் அடை மழையினால் 46 ஆயிரத்து 382 குடும்பங்கள் பாதிப்பு. லேக்கவுஸ் சுற்றுவட்டப்பகுதியிலுள்ள பொது தொலைபேசி கூண்டிற்குள் குண்டு வெடிப்பு.

ஜன.09

* மட்டக்களப்பில் இரு தமிழ் இளைஞர்கள் அடித்துப் படுகொலை.

* பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு 4 பொலிஸ் அதிகõரிகளை வழங்க தீர்மானம்

ஜன.10

* விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசனை யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் சொல்பேர்க் சந்தித்து பேச்சு.

ஜன.11

* கோட்டை ரயில் நிலையத்துக்குள் குண்டு வெடிப்பு; ஒருவர் காயம்.

ஜன.12

* மன்னாரில் நடைபெற்ற மோதலில் 66 புலிகள் உயிரிழப்பு; 28 படையினர் காயம். படையினர் தெரிவிப்பு.

ஜன.13

* ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாசி இலங்கை விஜயம்.

ஜன.14

* வவுனியாவில் கிளேமோர் தாக்குதல் படையினர் உட்பட மூவர் பலி, நால்வர் படுகாயம்.

ஜன.16

* மொனராகலை, புத்தள ஹெலகம பகுதியில் பயணிகள் பஸ் மீது கிளேமோர் தாக்குதல் 26 பொதுமக்கள் பலி; 64 பேர் காயம்.

* வெலியார பகுதியில் விவசாயிகள் மீது ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு ஐவர் பலி.

ஜன.17

* மொனராகலை மாவட்டம் தனமன்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு கிராமங்களுக்குள் புகுந்து ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஊர்காவற்படை வீரர் உட்பட 10 பேர் பலி

ஜன.18

* மனித நேயப் பணிகளுக்காக இலங்கைக்கு 23 மில்லியன் டொலர் நிதியுதவி

ஜன.19

* புலிகளுக்கு எதிரான போரிற்கு ஆதரவு வழங்க அமெரிக்கா உதவி.

ஜன.20

* மன்னாரில் பாலைக்குழிப் பகுதியில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் 10 படையினர் உயிரிழப்பு; 25 இற்கும் மேற்பட்டோர் படுகாயம்.

ஜன.21

* கற்பிட்டி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பு தேடுதலில் 13 தமிழர்கள் சந்தேகத்தில் கைது.

ஜன.23

* பதுளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் 15 இளைஞர்கள் கைது.

* மட்டக்களப்பிலிருந்து கொழும்பு வந்த 8 தமிழ் இளைஞர்கள் கோட்டை புகையிரத நிலையத்தில் கைது.

ஜன.24

* அனுராதபுரம் கெப்பிட்டிகொல்லாவ, கிரிக்கெட்டுவான பகுதி குப்பை மேட்டிலிருந்து 16 சடலங்கள் மீட்பு.

ஜன.25

* கருணாவுக்கு 9 மாதம் சிறை, லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு.

ஜன.26

* கண்டி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் 6 தமிழர்கள் கைது.

ஜன. 28

*பலாலி விமானப்படைத்தளம் மீது புலிகள் ஷெல் தாக்குதல். பாதுகாப்பு உயர் மட்டக்குழு மயிரிழையில் உயிர் தப்பியது.

ஜன.29

*மன்னார் தட்சணாமருதமடுப் பகுதியில் பயணிகள் பஸ் ஒன்று கிளேமோர் தாக்குதலில் சிக்கியதில் 12 பாடசாலை மாணவர்கள் உட்பட 17 பேர் பலி.

ஜன.30

* மட்டக்குளியில் 3 தமிழர்கள் வெள்ளைவானில் வந்தோரால் கடத்தல்.

*யாழ்ப்பாணம், தென்மராட்சி, மட்டுவில் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் மூவர் சுட்டுக்கொலை.

* யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இடம் பெற்ற குண்டுத்தாக்குதலில் 4 பேர் பலியானதுடன் 15 பொதுமக்கள் காயமடைந்தனர்.

ஜன.31

*யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 4 பேர் பலி.

ஜனவரி வெளிநாட்டு அரசியல்

ஜன. 02

* பெனாஸிர் பூட்டோவை படுகொலை செய்தவர்களை கண்டுபிடிப்பவர்களுக்கு 10 மில்லியன் ரூபா வெகுமதி என பாகிஸ்தான் அரசாங்கம் அறிவிப்பு

ஜன.04

* இஸ்ரேல் காஸாவில் தாக்குதல்; 9 பேர் பலி.

ஜன.06

* கிர்ஸில் பாரிய பூமியதிர்ச்சி.

ஜன.07

* ஈராக்கில் இரட்டைக் குண்டு வெடிப்புகள், ஆயுதக் குழுத் தலைவர் உட்பட 14 பேர் பலி.

* பாகிஸ்தானைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான அகதிகள் ஆப்கானிஸ்தானில் தஞ்சம்.

ஜன.08

* ஈரானை அச்சுறுத்தும் பாரிய பனிப்புயல். 21 பேர் பலி; 88 பேர் காயம்.

* படுகொலை முயற்சியில் இருந்து உயிர்தப்பிய மாலைதீவு ஜனாதிபதி.

* தென்கொரிய களஞ்சியசாலையில் தீ விபத்து, நச்சுப் புகையை சுவாசித்து 40 பேர் பலி.

ஜன. 09

*ஜனாதிபதி தேர்தலுக்கான நியூ ஹெம்ஷயர் வாக்கெடுப்பில் ஹிலாரி கிளின்டன் வெற்றி.

ஜன.10

*பாகிஸ்தான் உயர் நீதிமன்றத்தின் முன்னால் தற்கொலை குண்டுத் தாக்குதல். 22 பேர் பலி; 60 பேர் காயம்.

* தினமலர் அலுவலகம் மீது தாக்குதல்.

ஜன. 13

* மசெடோனியாவில் ஹெலி விபத்து; 11 பேர் பலி.

* பூமிக்கு முடிவுகட்ட புறப்பட்டுள்ள பாரிய இராட்சத "வாயு முகில்' பில்லியன் கணக்கான நட்சத்திரங்களை உருவாக்கக் கூடிய வாயு உள்ளடக்கம்.

ஜன.14

* சீனாவின் கல் சுரங்கத்தில் மண் சரிவு.

* முதல் தடவையாக 33 வருடகாலம் பயணித்து புதன்கிரகத்தை நெருங்கியுள்ள விண்கலம்.

ஜன.15

* பாகிஸ்தானில் குண்டு தாக்குதல்; 10 பேர் பலி.

* ஆப்கானிஸ்தான் ஆடம்பர ஹோட்டலில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 6 பேர் பலி.

ஜன.16

* இஸ்ரேலிய படையினர் காஸாவில் தாக்குதல். 19 பேர் பலி.

* பாகிஸ்தான் படைத்தளத்தில் போராளிகள் உக்கிர தாக்குதல். 7 படையினர், 40 போராளிகள் பலி.

ஜன.18

* பாகிஸ்தான் பள்ளிவாசலில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 10 பேர் பலி, 20 பேர் காயம்.

ஜன.21

* யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து இலங்கை அரசாங்கம் விலகியதை கண்டித்து சென்னையில் பட்டினி போராட்டம்.

ஜன.22

* ஈராக்கில் மரணச் சடங்கில் நடைபெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 15 பேர் பலி; 10 பேர் காயம்.

ஜன.23

* இந்தோனேஷியா நியாஸ் தீவில் பாரிய பூமியதிர்ச்சி.

ஜன.24

* போலந்தின் பிரோஸ்லாவியக் நகரிற்கு அண்மையில் 19 பேரை ஏற்றிச் சென்ற இராணுவ விமானம் நடுவானில் தீப்பற்றி எரிந்தது.

* ஈராக்கில் வெடி பொருட்கள் வெடித்துச் சிதறியதில் 17 பேர் பலி; 132 பேர் காயம்.

ஜன.27

* இந்தோனேஷிய முன்னாள் ஜனாதிபதி சுஹார்ட்டோ மரணம்.

* பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகர் ஹபாஷ் மரணம்.

* தென் கரோலினா வாக்கெடுப்பில் ஒபாமா வெற்றி.

ஜன.28

* துருக்கியில் பயணிகள் புகையிரதம் விபத்து: 9 பேர் பலி; 50 பேர் காயம்.

ஜன.29

* சவூதி அரேபியாவில் வயோதிபமாது ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் ஒரு பெண் உட்பட இரு இலங்கையருக்கு மரணதண்டனை.

* சீனாவில் பனியால் உறைந்த மலைப் பகுதியில் பயணித்த பஸ் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் பலி;13 பேர் காயம்.

ஜன.30

*புளோரிடா மாநில ஜனநாயக கட்சி வாக்கெடுப்பில் ஹிலாரி மாபெரும் வெற்றி.

* ஆப்கானிஸ்தானில் தற்கொலை குண்டுத் தாக்குதலில் பிரதி ஆளுநர் பலி

* துருக்கியில் இஸ்தான்புல்லின் ஆடை நிறுவன கட்டிடம் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலி 40 பேர் காயம். பெப்ரவரி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2008 பதிவுகள் (பகுதி 2)

வீரகேசரி நாளேடு 12/31/2008 12:36:41 PM -

பெப்ரவரி உள்நாட்டு அரசியல்

பெப்.02

* தம்புள்ளவில் இடம்பெற்ற பஸ் குண்டு வெடிப்பில் 18 பொதுமக்கள் பலி; 93 பேர் படுகாயம்.

பெப்.03

* கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 10 பேர் பலி; சிறுவர்கள் உட்பட 100 பேர் காயம்.

* வவுனியா, மன்னார் மாவட்டங்களிலிருந்து தெற்கு நோக்கி பயணிக்கத் தடை

* தெஹிவளை மிருகக் காட்சிசாலையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 4 பேர் காயம்.

பெப்.03

* கொழும்பு பம்பலப்பிட்டி, தெஹிவளை, நுகேகொடை பகுதிகளில் இடம்öபற்ற திடீர் சுற்றிவளைப்பில் 25 தமிழர்கள் கைது.

பெப்.04

* மணலாறு (வெலிஓயா) பகுதியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் 13 பொதுமக்கள் பலியானதுடன் 17 பேர் படுகாயமடைந்தனர்.

பெப்.04

* இலங்கையின் 60 ஆவது சுதந்திர தினம் இடம்பெற்றது.

பெப்.05

* கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு பகுதிகளில் விமானக் குண்டு வீச்சு. இருவர் உயிரிழப்பு; நால்வர் படுகாயம்.

* புசல்லாவைப் பகுதியில் தனியார் பஸ் வண்டி 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர் உட்பட மூவர் பலி; 50 பேர் படுகாயம்.

பெப்.06

* யாழ்ப்பாணம் நாகர்கோவில், கிளாலி பகுதிகளில் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையே இடம்பெற்ற கடும் மோதலில் 12 புலிகள் பலி; 5 படையினர் காயம் என படைத்தரப்பு அறிவிப்பு

* இலங்கைக்கான ஆயுத உதவிகளை கண்டித்து இந்திய பாராளுமன்றத்துக்கு முன் ஆர்ப்பாட்டம்.

* பொதுமக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து வவுனியா, மன்னார் மாவட்டங்களில் ஹர்த்தால்.

பெப்.07

* இலங்கைக்கான இந்தியாவின் ஆயுத உதவியை நிறுத்தக் கோரி 10 இலட்சம் கையொப்பத்துடனான மகஜர் இந்திய பாதுகாப்பு அமைச்சரிடம் கையளிப்பு.

பெப்.08

* வெலிக்கந்தைசெவலப்பிட்டிய பகுதியில் இருந்து இரு தமிழ் இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

பெப்.09

* அநுராதபுரம் தம்புத்தேகமவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு அமைப்பாளர்களில் ஒருவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீபதி சூரியாராச்சியும் அவரது மெய்ப்பாதுகாவலர்களும் பலி.

பெப்.11

* வவுனியா, மன்னார் பகுதிகளில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் இரு பொலிசார் உயிரிழப்பு; மற்றொருவர் காயம்.

* கொட்டாஞ்சேனையில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை.

பெப்.12

* மன்னார் தள்ளாடி இராணுவ முகாம் மீது விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட ஆட்டிலறி ஷெல் தாக்குதலில் 6 படையினர் பலி; 10 பேர் படுகாயம்.

பெப்.13

* கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்தக ரன்னகொட இந்தியா விஜயம்.

பெப்.14

* ஊடக அடக்கு முறையைக் கண்டித்து கொழும்பில் ஐந்து ஊடகவியலாளர் அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டம்.

பெப்.15

* ஐ.நா.வின் வதிவிடப் பிரதிநிதி நெகில் புகுனே யாழ். குடாநாட்டிற்கு விஜயம்.

பெப்.18

* கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சிவில் பாதுகாப்பு குழுக்களுக்கான மத்திய நிலையம் திறந்து வைப்பு.

* அம்பாறை நகர கிறிஸ்தவ தேவாலயத்தின் பாதிரியார் அருட் சகோதரர் நீல் எதிரிசிங்க சுட்டுக்கொலை; மனைவி, குழந்தை படுகாயம்.

பெப்.19

* தமிழ் பொலிஸ் கான்ஸ்டபிள் அக்கரைப்பற்றில் சுட்டுக்கொலை

பெப்.20

* நீர்கொழும்பில் வெள்ளைவானில் வந்த ஆயுததாரிகளால் கருவாடு வியாபாரி சுட்டுக்கொலை

* ஐ.நாடுகள் ஸ்தாபனத்தின் உதவிச் செயலாளர் அஞ்சலா கனே இலங்கை வருகை

பெப்.22

* பூநகரியில் விமானக்குண்டு வீச்சு. 8 பொது மக்கள் பலி; 14 பேர் படுகாயம்.

பெப்.23

* மொறட்டுவையில் இருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த பயணிகள் பேருந்து கல்கிசையில் குண்டு வெடிப்புக்கு இலக்கானது. 18 பேர் படு காயம்.

பெப்.24

* கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் படையினரும் பொலிஸாரும் இணைந்து நடத்திய தேடுதலில் 13 பேர் கைது.

பெப்.25

* வெல்லம்பிட்டியவில் 8 மலையக இளைஞர்கள் உட்பட 10 பேர் கைது.

* கதிரேசன் வீதியிலுள்ள விடுதியில் சிங்கப்பூர் பிரஜை ஒருவர் வெள்ளை வானில் கடத்தல்.

* பண்டாரவளையில் இரு தமிழ் இளைஞர்கள் வெள்ளை வானில் கடத்தல்.

பெப்.27

* புத்தளத்தில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் 27 தமிழர்கள் கைது.

* வன்னிப் பகுதியில் இடம்பெற்ற ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதலில் 8 பொது மக்கள் பலி.

* 3 தமிழ்ப் பெண்கள் தெஹிவளையில் சந்தேகத்தின் பேரில் கைது

பெப்.29

* மட்டக்களப்பு ஏறாவூர் தளவாய் பிரதேசத்தில் இராணுவத்தினர் நடத்திய சுற்றி வளைப்பு தேடுதலின் போது 25 தமிழ் இளைஞர்கள் கைது.

பெப்ரவரி வெளிநாட்டு அரசியல்

பெப்.01

* ஈராக் தலைநகர் பாக்தாத்தில் வளர்ப்பு பிராணிகள் சந்தையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 53 பேர் பலி; 94 பேர் படுகாயம்.

பெப்.03

* ஆபிரிக்காவில் கொங்கோ, ருவண்டா பகுதிகளில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியில் 39 பேர் பலி; 550 பேர் காயம்.

* பெண்கள் முக்காடு அணிவது தொடர்பான அரசாங்கத்தின் சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து துருக்கியில் ஒரு இலட்சம் பேர் ஆர்ப்பாட்டம்.

பெப்.04

* பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 8 பேர் பலி; 25 பேர் காயம்.

பெப்.05

* வட பாக்தாத்தில் வடக்கே 100 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள சமராவை அண்மித்த பிரதேசத்தில் 50 சடலங்களைக் கொண்ட பாரிய புதைகுழி ஒன்றை ஈராக் பாதுகாப்பு படையினர் கண்டுபிடிப்பு.

பெப்.06

* தென் அமெரிக்காவில் வீசிய கடும் புயல் காரணமாக 26 பேர் பலி; பலர் காயம்

* பெனாஸிர் பூட்டோவின் அரசியல் உயில் வெளியீடு.

பெப்.07

* பாகிஸ்தான் இராணுவ ஹெலி விபத்தில் இராணுவ ஜெனரல் உட்பட 8 பேர் பலி.

பெப்.09

* பாகிஸ்தானில் எதிர்க்கட்சி ஊர்வலத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல். 25 பேர் பலி; 40 பேர் காயம்.

பெப்.10

* அவுஸ்திரேலியாவில் முதி÷யார் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலி; 6 பேர் காயம்.

பெப்.11

* ஈராக்கின் சோதனைச் சாவடியருகே தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் 33 பேர் பலி; 45 பேர் காயம்.

பெப்.14

* பொலிவியாவில் வெள்ளத்தால் 60 பேர் பலி. தேசிய அனர்த்த நிலைமை பிரகடனம்.

பெப்.15

* கிரீஸில் 6.7 ரிச்டர் அளவில் பாரிய பூமியதிர்ச்சி.

பெப்.16

* பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 46 பேர் பலி;, 100 பேர் காயம்.

பெப்.17

* சேர்பியாவின் கொசோவா பிராந்தியம் சுதந்திர தின பிரகடனத்தை வெளியிட்டு தனி நாடாக மலர்வு.

பெப்.19

* பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும் வெற்றி.

* ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதாக பிடல் காஸ்ட்ரோ அறிவிப்பு.

பெப்.20

* கொசோ÷வாசேர்பிய எல்லைப் பகுதி நேட்டோ படையினரால் மூடி "சீல்' வைப்பு.

* இந்தோனேஷியாவில் 7.5 ரிச்டர் அளவு பாரிய பூமியதிர்ச்சி.

பெப்.21

* கொசோவோ சுதந்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெல்கிரேட்டில் பாரிய ஆர்ப்பாட்டம்.

பெப்.22

* சேர்பியாவிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்களால் தீ வைப்பு, ஒருவர் பலி.

பெப்.24

* பாகிஸ்தானில் திருமண விருந்துபசாரத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 13 பேர் பலி; பலர் காயம்.

பெப்.25

* யாத்திரிகர்களை இலக்கு வைத்து ஈராக்கில் நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் 40 பேர் பலி; 60 பேர் காயம்.

பெப்.27

* பெனாஸிர் மீதான குண்டுத் தாக்குதல் சந்தேக நபர் அக்தார் கைது.

* லண்டனில் 5.3 ரிச்டர் அளவில் பாரிய பூமியதிர்ச்சி.

பெப்.28

* 25 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது.

* குஜராத்தில் ரயில் மோதி 16 பேர் பலி

பெப்.29

* பங்களாதேஷில் இரு படகுகள் மோதி விபத்து; 39 பேர் பலி.

* கென்யாவில் வரலாற்று முக்கியத்துவமிக்க அதிகாரப் பகிர்வு உடன்படிக்கை கைச்சாத்து. ஐ.நா. முன்னாள் பொதுச் செயலாளர் கொபி அனான் மத்தியஸ்தம்.

மார்ச் உள்நாட்டு அரசியல்

மார்.01

* கச்சதீவு பெருவிழாவில் கலந்துகொள்ள தமிழக யாத்திரிகர்களுக்கு தடை விதிப்பு.

மார்.02

* வவுனியாவில் இடம்பெற்ற இருவேறு கிளேமோர் தாக்குதல்களால் ஒரு இராணுவ வீரர் பலியானதுடன் 10 பொது மக்கள் காயமடைந்துள்னர்.

* கொழும்பு முகத்துவாரப் பிரதேசத்தில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நடத்தி சுற்றிவளைப்பில் 7 தமிழர்கள் உட்பட 8 பேர் கைது.

மார்.03

* முல்லைத்தீவு கடலில் தத்தளித்த கப்பலில் 71 மியன்மார், பங்களாதேஷ் பிரஜைகள் மீட்கப்பட்டதுடன் மரணித்த இருவர் கடலில் வீசப்பட்டதாக தகவல்.

மார்.04

* மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை கருங்காலிச்சோலை பிரதேசத்தில் பாடசாலை மாணவிகள் இருவர் வெள்ளை வானில் கடத்தல்.

* தட்சனா மருதமடுவில் கிளேமோர் தாக்குதல் 4 பொது மக்கள் பலி.

மார்.05

*அநுராதபுரம், ஹொரவபொத்தானையில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் பொலிஸார் படுகாயம்.

மார்.06

* யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கி. சிவனேசன் வன்னி கனகராயன் குளம் பகுதியில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் உயிரிழந்தார்.

மார்.08

* பெந்தோட்டை அத்துருவௌ பாலத்துக்கருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் பலி; 11 பேர் படுகாயம்.

மார்.09

* மொனராகலை புத்தலவில் தமிழ் வர்த்தகர் ஒருவர் இனந் தெரியாதோரால் கடத்தல்.

மார்.10

* மட்டக்களப்பு மாநகர சபை உள்ளிட்ட 9 உள்ளூராட்சி சபைகளுக்கு 101 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெற்றது.

* வெள்ளவத்தை காலி வீதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஒருவர் பலி; 4 பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் காயம்.

மார்.11

* ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

மார்.12

* மன்னாரில் விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 5 படையினர் பலி. 15 பேர் காயம்.

* புத்தளம் வண்ணாத்திவில்லு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலவங்குளம் பகுதியில் இளம் தமிழ் தம்பதியினர் சுட்டுக்கொலை.

மார்.13

* பாகிஸ்தான் வெளிவிவகாரங்களுக்கான செனட் சபை உறுப்பினர்கள் இலங்கை வருகை.

* இளம் தம்பதியினரின் கொலையை அடுத்து வண்ணாத்திவில்லு பிரதேசத்திலிருந்து 75 குடும்பங்கள் வெளியேற்றம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2008 பதிவுகள் (பகுதி 3)

வீரகேசரி நாளேடு 12/31/2008 12:34:39 PM -

மார்.14

* ரூபவாஹினி கூட்டுத்தாபன பிரதி பணிப்பாளர் ஹெட்டிகே மீது தாக்குதல்; கழுத்தில் கடும் காயம்.

* பதுளையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் மண் சரிவினால் சிறுமி பலியானதுடன் 175 வீடுகள் சேதம்; 400 பேர் நிர்க்கதி.

மார்.15

* ஐந்து மிக் 29 விமானங்களை வாங்க ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை.

* மன்னார், மணலாறு பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்குமிடையே ஏற்பட்ட மோதலில் 6 படையினர் பலி, 21 பேர் காயம்.

மார்.16

* ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும் முன்னாள் சபாநாயகரும் அமைச்சரும் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர பண்டாரநாயக்க 59 ஆவது வயதில் காலமானார்.

மார்.17

* முன்னாள் பிரதி சபாநாயகரும் இராணுவ மேஜர் ஜெனரலுமான சரத் முனசிங்க (வயது 59) காலமானார்.

* கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் 54 பேர் கைது.

மார். 18

* மன்னார் முருங்கன் அருவியாறு பகுதியில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் இராணுவ வீரர் பலி; இருவர் காயம்.

மார்.19

* விஞ்ஞான புனைகதை எழுத்தாளரும் வானியலாளருமான ஆர்தர் சி. கிளார்க் (வயது 90) காலமானார்.

மார்.20

* நாடளாவிய ரீதியில் பெய்த அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, மண்சரிவு மற்றும் மின் தாக்குதல்களால் 8 பேர் பலி. 6 பேர் காயம்; 3 இலட்சத்து 81 ஆயிரம் பேர் பாதிப்பு.

மார்.21

* ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கை அரசாங்கத்தினால் முற்றாக நிராகரிப்பு.

மார்.22

* முல்லைத்தீவு நாயாறுக் கடற்பரப்பில் அதிவேக பீரங்கி படகொன்று மர்மமான முறையில் வெடித்துச் சிதறியதில் கட்டளை அதிகாரி உட்பட 16 கடற்படையினர் பலி; 10 பேரைக் காணவில்லை.

மார்.23

* கிண்ணியாவில் டெங்கு காய்ச்சல் நோயினால் 4 பேர் உயிரிழப்பு. 100 பேர் பாதிப்பு.

* ஜனாதிபதியின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷவின் தாயாரான வயலட் விக்கிரமசிங்க காலமõனார்.

மார்.26

* மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச் சோலை வவுணதீவு வீதியில் வாழைக்காடு சந்தியில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் இரு பொலிஸார் பலி; ஐவர் படுகாயம்.

மார். 28

* வவுனியாவில் கைக்குண்டு வீச்சு, இரு பெண்கள் படுகாயம்.

மார்.30

* கொழும்புகிராண்ட்பாஸ், பாணந்துறை, பண்டாரகம மற்றும் நாத்தாண்டியா போன்ற பகுதிகளில் இடம்பெற்ற வெவ்வேறு சம்பவங்களில் பெண் உட்பட 5 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மார்.31

* இலங்கை வந்த பிரித்தானிய பாராளுமன்ற தூதுக் குழுவினரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து பேச்சு.

மார்ச் வெளிநாட்டு அரசியல்

மார்.01

* காஸாவில் இஸ்ரேல் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 61 பேர் பலியானதுடன் 105 பேர் காயமடைந்துள்ளனர்.

மார்.02

* பாகிஸ்தானில் பாரம்பரிய நிகழ்வில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 30 பேர் பலியாகியதுடன் 80 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

மார்.03

* ஈராக்கில் கார்க் குண்டுத் தாக்குதலில் 18 பேர் பலி. 35 பேர் காயம்.

* ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் டமித்ரி மெட்வேடேல் அதிகளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி.

மார்.04

* நேபாளத்தில் ஐ.நா. ஹெலி விபத்தில் 10 பேர் பலி.

* பாகிஸ்தானிய கடலில் படகு கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி.

மார்.05

* பிரதான மூன்று மாநில வாக்கெடுப்புகளில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி வெற்றி.

மார்.06

* ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் கடைத் தொகுதி பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டை குண்டு தாக்குதலில் 68 பேர் பலி; 130 பேர் காயம்.

மார்.07

* இஸ்ரேலிய பாடசாலையில் நுழைந்து பாலஸ்தீன துப்பாக்கிதாரியொருவர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் 8 பேர் பலி; 9 பேர் காயம்.

மார்.09

* வயோமிங் வாக்கெடுப்பில் ஒபாமா வெற்றி.

மார்.10

* முக்கிய அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தில் சர்தாரி நவாஸ் ஷெரீப் கைச்சாத்து.

* ஹொண்டூரஸின் தலைநகர் தெருகுசிகல்பாவில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைப்பதற்கு போராடிய 7 பேர் தீயில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழப்பு.

* அமெரிக்கா, கனடாவில் பெய்த பனிப் பொழிவில் சிக்கி 4 பேர் பலி.

மார்.11

* பாகிஸ்தானின் லாகூர் நகரில் இடம்பெற்ற 3 தற்கொலைக் குண்டுத் தாக்குலில் 24 பேர் பலி. 170 பேர் காயம்.

* ஈராக்கில் தெருவோரம் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 16 பேர் பலி; 22 பேர் காயம்.

மார்.12

* மிஸிஸிப்பி வாக்கெடுப்பில் ஒபாமா வெற்றி.

மார்.13

* சர்தாரியின் பெயரை பிரதமர் பதவிக்கு குறிப்பிட பாகிஸ்தான் மக்கள்கட்சி தீர்மானம்.

* காபூல் விமான நிலையத்திற்கு அருகில் தற்கொலைகார் குண்டுத் தாக்குதலில் 8 பேர் பலி; 35 பேர் காயம்.

மார்.14

* சூடான், சாட் ஜனாதிபதிகள் முக்கிய சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்து.

மார்.15

* பாகிஸ்தானில் உணவகத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பிரித்தானிய, அமெரிக்க இராஜதந்திரிகள் காயம்; துருக்கிய பெண் பலி.

மார்.16

* சீனாவின் ஜனாபதியாக ஹுஜிந்தாவோ மீண்டும் தெரிவு

மார்.17

* சீன ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து திபேத்தியர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தில் 100 பேர்வரை பலி.

* பாகிஸ்தானில் இடம்பெற்ற எறிகணைத் தாக்குதலில் 16 பேர் பலி.

மார்.18

* ஈராக்கில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் பலி; 73 பேர் காயம்.

மார்.19

* தென் இந்திய திரைப்படத் துறையின் பிரபல வில்லனும் குணச்சித்திர நடிகருமான ரகுவரன் காலமானார்.

மார்.20

*பாகிஸ்தானின் புதிய பிரதமராக யூஸுப் ராஸா கிலானி தெரிவு.

*இலங்கைக்கான ஆயுத உதவியை கண்டித்து தென் ஆபிரிக்காவில் ஆர்ப்பாட்டம்.

மார்.21

* சீனாவில் 7.3 ரிச்டர் பூமியதிர்ச்சி இடம்பெற்றது.

மார்.23

* தமிழகத்தில் ஏற்பட்ட தொடர் மழையால் 12 பேர் பலி.

மார்.26

* ஈராக்கில் படையினருக்கும் ஷியா முஸ்லிம் போராளிகளுக்கும் இடையே இடம்பெற்ற உக்கிர மோதலில் 50 பேர் பலி. 200 பேர் காயம்

மார்.27

* பிரான்ஸ் ஜனாதிபதி சார்க்கோஸி பிரித்தானிய பிரதமருடன் பேச்சுவார்த்தை.

* சீனாவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 22 பேர் பலி; 10 பேர் காயம்.

மார்.28

* கனடாவுக்கு விஜயம் செய்யும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவரும் எம்.பி. யுமான அர்ஜுன ரணதுங்கவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு பட்டி போராட்டம்.

மார்.30

* தான்சானியாவில் சுரங்கங்களில் வெள்ள அனர்த்தம்; 75 பேர் நீரில் மூழ்கி பலி.

ஏப்ரல் உள்நாட்டு அரசியல்

ஏப்.02

* கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் ஹசன் அலி மற்றும் பஷீர் சேகுதாவூத் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா.

* மின்னேரியா இராணுவ முகாமில் மின்னல் தாக்கியதில் படையினர் நால்வர் பலி; 65 பேர் காயம்.

ஏப்.03

* நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து நாடு பூராவும் பானை சட்டி உடைத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.

ஏப்.04

* கட்சி அங்கத்துவத்திலிருந்து விமல் வீரவன்ச இடை நிறுத்தம்.

ஏப்.06

* கம்பஹா, வெலிவேரிய பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே (55வயது) உட்பட 15 பேர் பலி; 96 பேர் படுகாயம்.

ஏப்.05

* மடுமாதாவின் திருவுருவச் சொரூபத்தை புலிகளின் பகுதியில் வைக்க முடிவு.

ஏப்.07

* புத்தளத்தில் ஊர்காவற்படை வீரரின் துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மரணம்; 16 வயது யுவதி சந்தேக நபரால் கடத்தல்.

ஏப்.08

* மக்கள் விடுதலை முன்னணியினர் இரு பிரிவுகளாக பிளவுபட்டு கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவரும், பிரசார செயலாளருமான விமல் வீரவன்சவின் தலைமையில் 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிக்குழுவாக செயற்பட தீர்மானம்.

ஏப்.11

* வாகனக் கடத்தல் தொடர்பில் ஜே.வி.பி. எம்.பி. விஜயசேகர விளக்கமறியல்.

ஏப்.14

* மன்னார் இராணுவ கட்டுப்பாடற்ற பகுதியில் மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக யுனிசெப் தெரிவிப்பு.

ஏப்.16

* தெனியாய ஆண்டாரதெனிய பகுதியிலுள்ள நீர் வீழ்ச்சியில் குளிக்கச் சென்று காணாமல் போன 5 இளைஞர்களும் சடலமாக மீட்பு.

ஏப்.17

* வடக்கில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களில் 34 படையினர் பலி 236 பேர் காயம்.

*யாழ்ப்பாணத்தில் இருவேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரு இளைஞர்கள் பலி.

ஏப்.18

* அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை விதித்ததை அடுத்து மொத்த வியாபாரிகள் கடையடைப்புச் செய்து எதிர்ப்பு.

ஏப்.20

* வன்னியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் தலைவர் மரியாம்பிள்ளை சேவியர் கருணாரட்னம் அடிகளார் பலி.

ஏப்.21

* இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்சவுடன் சந்திப்பு.

ஏப்.22

* கிளிநொச்சி ஆனைவிழுந்தானில் நடைபெற்ற கிளைமோர் தாக்குதலில் 2 பொதுமக்கள் காயம்.

ஏப்.23

* கிளாலி முகமாலை முன்னரங்கில் படையினர் புலிகள் கடும் மோதல். 38 இராணுவத்தினர் பலி, 84 பேர் படுகாயம்.

ஏப்.24

* முகமாலை மோதலில் 43 படையினர் பலி. 33 பேரைக் காணவில்லை. 160 பேர் காயம்.

ஏப்.25

* பிலியந்தலையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 16 பொதுமக்கள் பலி; 40 பேர் படுகாயம்.

ஏப்.26

* மணலாறு ஜனகபுர வடக்கு சிங்கபுர மற்றும் கற்குளம் பகுதியில் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் 7 இரõணுவத்தினர் பலி, 13 பேர் படுகாயம்.

ஏப்.27

* கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அண்டிய பிரதேசங்களில் பொலிஸாரும், படையினரும் இணைந்து நடத்திய திடீர் தேடுதலில் 17 தமிழர்கள் உட்பட 28 பேர் கைது.

ஏப்.28

* கல்கிசை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் பொலிஸாரும் படையினரும் இணைந்து நடத்திய தேடுதலில் 15 தமிழ் இளைஞர்கள் கைது.

ஏப்.29

* தெஹியத்த கண்டிய அரலகன் வில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிவலி, களனி திட்ட பிரதேச சபை தலைவர் பலி. அமைச்சர் மேர்வின் உட்பட 3 பேர் படுகாயம்.

ஏப்.30

* இலங்கை மீனவர்கள் 60 பேர் இந்திய கடற்படையினரால் கைது.

ஏப்ரல் வெளிநாட்டு அரசியல்

ஏப்.01

* அங்கோலாவின் தலைநகர் ருவன்டாவில் இடிந்து விழுந்த 7 மாடிக் கட்டிடத்திலிருந்து 21 சடலங்கள் மீட்பு.

ஏப்.02

* தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு தமிழக தலைவர்கள் கண்டனம்.

*இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற கூட்டத்துக்கு தடை.

ஏப்.03

* ஈராக்கில் மரண ஊர்வலத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 15 பேர் பலி; 30 பேர் காயம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2008 பதிவுகள் (பகுதி 4)

வீரகேசரி நாளேடு 12/31/2008 12:30:59 PM -

ஏப்.07

* ஹிலாரி கிளின்டனின் தலைமை தந்திரோபாய ஆலோசகர் இராஜினாமா.

ஏப்.10

* ஆப்கானிஸ்தானில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 8 பொதுமக்கள் பலி. 24 பேர் காயம்.

* ஈராக் தலைநகரில் இடம்பெற்ற மோதல்களில் 20 பேர் பலி. 38 பேர் காயம்.

* 54 மியன்மார்க் சட்டவிரோத குடியேற்றவாசிகள் மூடிய வாகனத்தில் மூச்சுத் திணறி தென் தாய்லாந்தில் மரணம். 67 பேர் கைது.

ஏப்.11

* பாகிஸ்தான் லாகூர் சந்தையில் எரிவாயு வெடித்ததில் 8 பேர் பலி. 20 பேர் காயம்.

ஏப்.14

* ஈராக் தலைநகர் பக்தாத்தின் வடக்கே 20 முதல் 30 சடலங்களை கொண்ட பாரிய மனித புதைகுழியை அமெரிக்க இராணுவத்தினர் கண்டு பிடித்தனர்.

* ஈரான் பள்ளிவாசலில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 12 பேர் பலி. 191 பேர் காயம்.

ஏப்.15

* இத்தாலிய தேர்தலில் பழைமைவாத கட்சி வெற்றி.

* உகண்டா பாடசாலை விடுதியில் 19 சிறுமிகள் உடல் கருகிப் பலி.

* ஈராக்கில் கார் குண்டுத் தாக்குதலில் 20 பேர் பலி; 60 பேர் காயம்.

ஏப்.16

* பங்களாதேஷில் இடம்பெற்ற பஸ் புகையிரத விபத்தில் 18 பேர் பலி; 19 பேர் காயம்.

ஏப்.17

* ஈராக்கில் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 49 பேர் பலி.

* பலஸ்தீன காஸா பகுதியில் இடம்பெற்ற மோதலில் சிறுவர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட 22 பேர் பலி.

* ஆப்கான் பள்ளிவாசலில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 20 பேர் பலி. 30 பேர் காயம்.

ஏப்.19

* பிரியங்கா வேலூர் மத்திய சிறையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைபிடிக்கப்பட்ட நளினியை சந்தித்து பேச்சு.

ஏப்.21

* சோமாலியாவில் அரசாங்க ஆதரவு எதியோப்பிய படையினருக்கும் இஸ்லாமிய போராளிகளுக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் 81 பேர் பலியானதுடன் 119 பேர் காயம்.

* இந்தியாவின் ஏற்றுமதி தடையால் சவூதியில் அரிசித் தட்டுப்பாடு.

ஏப்.23

* ஈராக்கில் பெண் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 6 பேர் பலி.

ஏப்.25

* நேபாளத் தேர்தலில் மாவோவாத கட்சி 217 ஆசனங்களைப் பெற்று வெற்றி.

ஏப்.28

* ஈரான் ஜனாதிபதி இலங்கை விஜயம்.

* ஈராக்கில் 100 இற்கு மேற்பட்ட சடலங்களைக் கொண்ட இரு பாரிய புதைகுழி மீட்பு.

ஏப்.29

* ஆப்கானிஸ்தான் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 15 பேர் பலி; 14 பேர் காயம்.

ஏப்.30

* ஆப்கானிஸ்தானில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 19 பேர் பலி.

மே உள்நாட்டு அரசியல்

மே 01

*மொறட்டுவை, கட்டுப்பெத்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு தேடுதலில் 6 தமிழர் உட்பட 13 சந்தேக நபர்கள் கைது.

மே 02

*இலங்கை மீனவர்கள் 45 பேர் இராமேஸ்வரத்தில் கைது.

மே 03

* கொழும்பில் பல பகுதிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நடத்திய தேடுதலில் 15 பேர் கைது.

மே 06

* மேலதிக வாக்குகளால் அவசரகாலச் சட்டம் நிறைவேற்றம்.

மே 07

* அம்பாறை பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற பாரிய குண்டு வெடிப்பில் 11 பேர் உயிரிழந்ததுடன் 29 பேர் படுகாயம்.

* கொழும்பு முகத்துவாரம் டிலாசாலைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் 4ஆம் குறுக்குத் தெருவில் வெள்ளை வானில் வந்தோரால் கடத்தல்.

மே 10

* கிழக்கு மாகாணசபை தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்ற இடங்களான மட்டு /திருகோணமலை/ அம்பாறை மாவட்டங்களில் 175 வன்முறைகள் இடம்பெற்றன.

மே 11

* புத்தளம் பகுதியில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வெள்ளை வானில் கடத்தல்.

மே 13

* மட்டக்களப்பு பனிச்சங்கேணியில் கிரனேட் வெடிப்பு. ஒருவர் பலி; 11 பேர் படுகாயம்.

* வவுனியா, மன்னார் மற்றும் மணலாறு பகுதிகளில் புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் 11 படையினர் பலி.

மே 14

* சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் ஆலோசகரும் மனித கௌரவத்துக்கான மன்றத்தின் செயலாளருமான சட்டத்தரணி மகேஸ்வரி வேலாயுதம் சுட்டுக்கொலை.

மே 16

* கொழும்பு புறக்கோட்டை சம்போதி விகாரைக்கு அருகில் பொலிஸார் பயணித்த இரண்டு பஸ்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 7 பொலிஸார் உட்பட 10 பேர் பலியானதுடன் 95 பேர் காயம்.

* கிழக்கு மாகாண முதலமைச்சராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம்.

மே 17

* கொழும்பு கோட்டை சம்÷பாதி விகாரைக்கருகில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக திருமலையைச் சேர்ந்த ஒருவர் தனது மூன்று சகோதரர் மற்றும் பெற்றோருடன் கைது.

மே 20

* மன்னாரில் பொலிஸாரும் படையினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் 50 பேருக்கு மேற்பட்டோர் கைது.

* விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் மாரடைப்பால் மரணம்.

மே 22

* கிழக்கு மாகாண அமைச்சராக ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி மஹிந்த முன்னிலையில் பதவி ஏற்பு.

* தமிழ் மக்கள் விடுதலைப் புலி முக்கியஸ்தர் சாந்தன் மற்றும் உதவியாளர் சுட்டுக்கொலை.

* மட்டு. ஆரையம்பதி பிரதேசத்தில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 முஸ்லிம்கள் பலி.

மே 22

* மட்டக்களப்பு ஏறாவூரில் இரண்டு முஸ்லிம்கள் கடத்தல்.

மே 24

* வன்னியில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட 6 சிறார்கள் உட்பட 16 பேரின் சடலம் அருகருகே நல்லடக்கம்.

மே 25

* கட்டுநாயக்க அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் பொலிஸாரும் படையினரும் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலில் 8 பெண்கள் உட்பட 14 பேர் கைது.

மே 26

* தெஹிவளையில் ரயிலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 9 பொது மக்கள் பலி; 73 பேர் காயம்.

மே 27

* கச்சதீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 23 இந்திய மீனவர்களை தலைமன்னார் மீனவர்கள் கைது செய்தனர்.

* தெஹிவளை ரயில் குண்டு வெடிப்பையடுத்து தெஹிவளை, களுபோவில பகுதியில் இடம்பெற்ற தேடுதலில் 20 பேர் கைது.

மே 28

* மட்டக்களப்பு சின்ன ஊரணி காந்தி கிராமத்தில் தமிழ் மீனவர்கள் இருவர் வெட்டிக் கொலை.

மே 29

* யாழ்ப்பாணம் மண்டைதீவுக்கு அருகிலுள்ள சிறுத்தீவு முகாம் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் 13 கடற்படையினர் பலி.

மே 30

* கொழும்பில் ஊடக அடக்கு முறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.

மே 31

* கொழும்பு வெள்ளவத்தையில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதுடன், 10 பேர் காயம்.

மே 31

* பாராளுமன்ற உறுப்பினரும் சப்ரகமுவ மாகாண சபை முன்னாள் ஆளுநருமான ரெஜி ரணதுங்க காலமானார்.

மே வெளிநாட்டு அரசியல்

மே 01

* ஹொங்கொங்கில் பாரிய பஸ் விபத்து. 17 பேர் பலி; 47 பேர் காயம்.

* மலேசிய இந்திய வம்சாவளி அரசியல் கட்சித் தலைவர் எம்.ஜி.பண்டிதன் மரணம்.

மே 04

* மியன்மாரை தாக்கிய நர்கிஸ் சூறாவளியால் 15,000 பேர் பலி; 30,000 பேரைக் காணவில்லை.

மே 05

* குவைத்தில் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சிறுவர்கள் பலி.

* அரிசி ஏற்றுமதியை நிறுத்த மலேசியா தீர்மானம்

மே 07

* ரஷ்யாவின் புதிய ஜனாதிபதியாக திமித்றி மெட்வே பதவி ஏற்பு

மே 10.

* அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் இளைய மகள் ஜென்னா புஷ்ஷின் திருமணம்

மே 11

* பாகிஸ்தானில் படையினர், போராளிகள் சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்து.

மே 12

* வடகிழக்கு பங்களாதேஷில் படகொன்று புயலில் சிக்கி விபத்துக்குள்ளானதில் 32 பேர் பலி. 20க்கு மேற்பட்டோரைக் காணவில்லை.

* சீனாவை உலுக்கிய பாரிய பூமியதிர்ச்சியினால் 15 ஆயிரம் பேர் பலி. ஆயிரக்கணக்கானோர் காயம்.

* ஈழத் தமிழர் படுகொலை செய்யப்படுவதையும் மற்றும் தமிழக மீனவர்கள் சுடப்படுவதையும் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் உட்பட பலர் பொலிஸாரால் கைது.

மே 13

* ஜெய்ப்பூரில் தொடர்ச்சியாக 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 85 பேர் பலி. 200 இற்கும் அதிகமானோர் காயம்.

மே 14

* சீன பூமியதிர்ச்சியில் பலியானவர்கள் தொகை 50 ஆயிரமாக அதிகரிப்பு.

மே 15

* ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 18 பேர் பலி.

* நைஜீரியாவில் வீடுகள் மற்றும் பாடசாலைகள் அமைந்துள்ள பகுதியில் அமைக்கப்பட்டிருந்த எரிபொருள் குழாயொன்று தீப்பற்றி எரிந்ததில் 100 பேருக்கும் அதிகமானோர் பலி.

மே 20

* மெக்ஸிக்கோவில் பஸ் விபத்தில் 24 பேர் பலி.

மே 22

* வட நைஜீரியாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் 43 உள்நாட்டுப் படையினர் பலி.

மே 24

* ராஜஸ்தானில் குஜ்ஜார் இன மக்களின் கலவரத்தை அடக்க பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் 36 பேர் பலி.

மே 25

* ஈரான் அராக் நகரில் இரசாயன தொழிற்சாலையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் 30 பேர் பலி; 38 பேர் படுகாயம்.

மே 26

* பாகிஸ்தானின் சுலாட் பள்ளத்தாக்கில் இடம்பெற்ற வெள்ளம், மண்சரிவில் சிக்கி 6 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி.

மே 27

* இத்தாலிய பாதாள உலக கோஷ்டியைச் சேர்ந்த 50 பேர் கைது.

மே 28

* தென் ஆபிரிக்காவில் ஏற்பட்ட பஸ் விபத்தில் 30 பேர் பலி.

மே 29

* பனாமா நகரில் கட்டிடமொன்றில் உலங்கு வானூர்தி மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலி.

மே 30

* தாய்லாந்து அமைச்சர் ஜக்ராபொப் பென்காயிர் இராஜினாமா.

மே 31

* இலங்கை சிறையில் உள்ள 23 தமிழ் மீனவர்களை விடுவிக்கக் கோரி பாம்பன் தங்கச்சி மட மீனவர்கள் நீரில் இறங்கிப் போராட்டம்.

ஜூன் உள்நாட்டு அரசியல்

ஜூன்.01

* 9 மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு, மண்சரிவு, சிறுவர் உட்பட அறுவர் பலி. 72,916 பேர் நிர்க்கதி; 109 வீடுகள் சேதம்.

* எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து ஐ.தே.க. வாகன நிறுத்தப் போராட்டம்.

ஜூன்.02

* மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட இருவர் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை.

ஜூன்.03

* விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான மாங்குளத்தில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் இரு சிறுவர்கள் உட்பட 6 பேர் பலி.

ஜூன்.04

* தெஹிவளை வெள்ளவத்தைக்கிடையிலுள்ள ரயில் பாதையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 3 பெண்கள் உட்பட 24 பேர் காயம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2008 பதிவுகள் (பகுதி 5)

வீரகேசரி நாளேடு 12/31/2008 12:26:44 PM -

ஜூன் 05

* காத்தான்குடி, ஆரையம்பதி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு, கல் வீச்சு சம்பவங்களில் 32 பேர் காயம்.

ஜூன் 06

* மொரட்டுவ பிலியந்தலை கட்டுப்பெத்த பிரதான வீதியில் சுவர்ண சைவ பிம்பராம விகாரைக்கு அருகில் பயணிகள் பஸ் மீது இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் 21 பொது மக்கள் பலி; 84 பேர் படுகாயம்.

* கண்டி பொல்கொல்ல பகுதியில் பயணிகள் பஸ்ஸில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 2 பேர் பலி; 20 பேர் காயம்.

* கிழக்கில் ஊடகவியலாளர்களின் வீடுகள் மீது தீ வைப்பு. கல் வீச்சு.

ஜூன் 09

* அவிசாவளை, பேலியகொடை பகுதிகளில் இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் 62 தமிழர்கள் உட்பட 200 பேர் கைது.

* இலங்கையில் மனித உரிமை மீறல்களை எதிர்த்து சர்வதேச மன்னிப்புச் சபை லண்டனிலுள்ள பொதுநலவாய செயலகத்தின் முன் ஆர்ப்பாட்டம்.

ஜூன் 10

* முகத்துவாரத்தில் தமிழ் இளைஞர் கடத்தல்.

ஜூன் 11

* மன்னார், எருக்கலம்பிட்டி பகுதியில் கடற்படையினரின் கூட்டுப் படைத்தள முகாம் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் 10 கடற்படையினர் பலி.

ஜூன் 12

* இலங்கை அப்பாவி பொது மக்கள் பலியாகி வருவது கவலை அளிக்கிறது பிரதமர் மன்மோகன்.

* கொட்டாஞ்சேனை, வத்தளை பகுதிகளில் ஆயுததாரிகளினால் தமிழர்கள் மூவர் கடத்தல்.

ஜூன் 13

* சிலாபம் பகுதியில் இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் 17 தமிழர்கள் கைது.

* வத்தளை, ஹெந்தளை பிரிதிபுர கடல் பகுதியில் குளிக்கச் சென்ற 4 மாணவர்கள் மூழ்கி பலி.

* கண்டி நகரில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் தேசிய அடையாள அட்டை இல்லாத 22 பேர் கைது.

ஜூன் 14

* மணலாறு மற்றும் மன்னார் பெரிய மடுப் பகுதிகளில் படையினருக்கும் புலிகளுக்குமிடையில் இடம்பெற்ற தொடர் மோதலில் 7 படையினர்உயிரிழந்ததுடன் 16 பேர் காயமடைந்தனர்.

ஜூன் 15

* உடப்பு, கண்டி மற்றும் பொலன்னறுவை பகுதிகளில் இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின் போது 65 தமிழர்கள் சந்தேகத்தில் கைது.

* தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தான தலைவி சிவத்தமிழ் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி (வயது 83) காலமானார்.

* இலங்கை வந்திருந்த மாலைதீவு ஜனாதிபதி அப்துல் கையூமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரிமாளிகையில் சந்தித்து பேச்சு.

ஜூன் 16

* வவுனியா, கண்டி வீதியில் உள்ள பொலிஸாரின் விடுதிக்கு முன்னால் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 12 பொலிஸார் பலி; 23 பேர் காயம்.

ஜூன் 17

* வவுனியா, கண்டி வீதியில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலையடுத்து சந்தேகத்தின் பேரில் 10 பேர் கைது.

* பொலன்னறுவையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு தேடுதலில் 8 பேர் கைது.

ஜூன் 18

* மட்டக்களப்பு, நாவலடி வாவிக் கரையில் இருந்து மாணவனின் சடலம் மீட்பு.

ஜூன் 19

*காலி நகரில் இடம்பெற்ற திடீர் சுற்றிவளைப்பில் 7 தமிழர்கள் கைது.

ஜூன் 20

* இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் இலங்கைக்கு விஜயம்.

ஜூன் 21

* டில்லி வருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இந்திய உயர் மட்டக்குழு அழைப்பு.

ஜூன் 22

* மட்டக்களப்பு மாவட்டத்தில் களுதாவளை பிரதேசத்தில் இடம்பெற்ற தேடுதலில் 2 தமிழ் இளைஞரின் சடலங்கள் மீட்பு.

* கொழும்பு, ஆட்டுப்பட்டித் தெருவில் இனந்தெரியாத ஆயுததாரிகள் சிலர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் தந்தை பலி; மகன் படுகாயம்.

ஜூன் 23

* அமெரிக்க நாட்டு இந்து மத துறவியும் அகில இலங்கை இந்து சமய அபிவிருத்திச் சபையின் தலைவருமான ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா மகராஜ் காலமானார்.

* மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதேசத்தில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் 3 பொலிஸார் பலி; ஒருவர் காயம்.

ஜூன் 24

* வவுனியா பூந்தோட்டத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் தமிழ் குடும்பஸ்தர் பலி.

* டீசலின் விலை 10 ரூபாவால் குறைப்பு.

ஜூன் 25

* வெலிக்கடையில் பெண் கைதிகள் மோதல்

* ஊர்காவற்றுறையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு.

ஜூன் 26

* அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி மீது பொலிஸார் நடத்திய கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலில் 5 மாணவர்கள் காயம்; 11 பேர் பொலிஸாரால் கைது.

ஜூன் 27

* யாழ்ப்பாணம் வைமன் வீதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாதோரால் வெட்டிக் கொலை.

ஜூன் 28:

*மன்னார் ஆண்டான்குளம் பரப்புக்கடந்தானை படையினர் கைப்பற்றினர்.

ஜூன் 29

* முல்லைத்தீவு துணுக்காயில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் துணுக்காய் உதவி அரசாங்க அதிபர் நாகலிங்கம் நந்தகுமார் (வயது 36) உயிரிழந்தார்.

ஜூன் 30

* மன்னார் கடலில் எண்ணெய் அகழ இந்திய தனியார் நிறுவனத்திற்கு இலங்கை அரசு அனுமதி.

ஜூன் வெளிநாட்டு அரசியல்

ஜூன் 01

* நேபாள அரச மாளிகையிலிருந்து வெளியேற கஜேந்திரா இணக்கம்

* எதியோப்பியாவில் பெய்த அடைமழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 25 பேர் பலி; 45 பேர் காயம்

* பிலிப்பைன்ஸில் 6.4 ரிச்டர் அளவான பூமியதிர்ச்சி

ஜூன் 02

* புயர்ரோ றிகோவில் ஹிலாரி கிளின்டன் வெற்றி

* உலகப் பிரபல பிரான்ஸ் நாட்டு நவநாகரிக வடிவமைப்பாளர் மரணம்

ஜூன் 03

* குண்டுத் தாக்குதலில் ஈராக்கில் 10 பேர் பலி; 50 பேர் காயம்

* பிரான்ஸில் புகையிரதம் பஸ்மோதி விபத்து

* 7 சிறுவர்கள் உட்பட 8 பேர் பலி 25 பேர் காயம்

* மத்திய வியட்னாமில் பஸ் ஒன்று டிரக் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலி 18 பேர் காயம்.

ஜூன் 04

* ஜனநாயகக் கட்சியின் போட்டியில் ஒபாமா வெற்றி

* பாகிஸ்தான் வீடொன்றில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 5 சிறுவர்கள் பலி

* இஸ்ரேலிய பிரதமர் ஈரானுக்கு எச்சரிக்கை

ஜூன் 05

* ஈராக்கின் தலைநகரில் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 18 பேர் பலி; 65 பேர் காயம்.

* ஊட்டி அருகே உள்ள மலைப் பாதை ஒன்றில் 400 அடி பள்ளத்தில் பஸ்ஸிலிருந்து விபத்துக்குள்ளாகியதில் 11 பேர் பலி 48 பேர் காயம்.

ஜூன் 06

* காஷ்மீர் விமான நிலையத்தில் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காததால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தடுத்து வைக்கப்பட்டார்.

ஜூன் 09

* அல்ஜீரியாவில் புகையிரத நிலையத்தில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுத்தாக்குதலில் 12 பேர் பலி.

ஜூன் 10

* அமெரிக்க மாட்டிறைச்சி இறக்குமதி நெருக்கடிகளை அடுத்து தென்கொரிய பிரதமர் உட்பட முழு அமைச்சரவையும் இராஜினாமா.

* முன்னாள் பிரதமர் ஷெய்க் ஹஸினா தடுப்புக்காவலில் இருந்து விடுதலை

* சூடானின் கார்டொம் விமான நிலையத்தில் தரையிறங்கிய பயணிகள் விமானம் வெடித்து தீப்பற்றி எரிந்ததில் 28 பேர் பலி; 66 பேரை காணவில்லை

* முன்னாள் வியட்நாம் பிரதமர் மரணம்

* பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் இடம்பெற்ற உக்கிர மோதலில் 18 பேர் பலி.

ஜூன் 12

* சீனா, தாய்வான் நாடுகளுக்கிடையே வரலாற்று முக்கியத்துவப் பேச்சுவார்த்தை

ஜூன் 13

* அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் மழை வெள்ளம்; 4 பேர் பலி.

* ஐரோப்பாவிற்கு இறுதி விஜயத்தை மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் வத்திக்கானில் பாப்பரசர் 16ஆம் ஆசீர்வாதப்பரை சந்தித்து உரையாடினார்.

ஜூன் 15

* தென் சீனாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 55 பேர் பலி.

* சீன நிலக்கரி சுரங்க வெடிப்பில் 27 பேர் பலி.

* ஜப்பானில் 7.2 ரிச்டர் அளவில் பாரிய பூமியதிர்ச்சி. 9 பேர் பலி; 200 பேர் காயம்.

ஜூன் 16

* தென் நேபாளத்தில் பஸ் நிலைய மொன்றில் இடம்பெற்று குண்டு வெடிப்பு சம்பவத்தில் இருவர் பலி; 13 பேர் காயம்.

* உலக தமிழர் பேரவை பயங்கரவாத பட்டியலில் சேர்ப்பு

ஜூன் 17

ரோமானியாவில் நெகுவால் ஜவாஸ்கு என்ற இறந்த நபருக்கு தமது வாக்குகளை அளித்து மேயராக தெரிவு செய்த மக்கள்.

ஜூன் 18

* தென் ஈராக்கில் பஸ் நிலையமொன்றில் இடம்பெற்ற கார்க்குண்டுத்தாக்குதலில் 63 பேர் பலி; 73 பேர் காயம்

* 33 இலங்கையர்கள் சந்தேகத்தின் பேரில் இத்தாலியில் கைது.

ஜூன் 19

* கட்டாரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 இலங்கையர் பலி.

*சோமாலிய ஜனாதிபதியை இலக்கு வைத்து தெருவோர குண்டுத்தாக்குதலில் அவர் மயிழையில் எதுவித காயமும் இன்றி உயிர் தப்பினார்.

ஜூன் 20

* ஆப்கானிஸ்தானில் தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் 10 பேர் பலி

ஜூன் 22

* பிலிப்பைன்ஸை தாக்கிய பெங்சென் புயலில் சிக்கி 155 பேர் பலி; 700 பேரைக் காணவில்லை

* ஈராக்கில் பெண் தற்கொலை குண்டுதாரி தாக்குதல் 15 பேர் பலி 39 பேர் காயம்

ஜூன் 23

* பாகிஸ்தான் சிறைச்சாலையில் இந்திய மீனவர் பலி.

ஜூன் 24

* ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள அமெரிக்க படையினரால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது தலிபான் போராளி குழுவின் முக்கிய தலைவர்கள் 3 பேர் உட்பட 55 போராளிகள் பலி.

* உலகின் முதலாவது பணக்காரரான மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகரும் தலைவருமான பில்கேட்ஸ் ஓய்வு பெற்றுள்ளார்.

ஜூன் 25

* பாகிஸ்தானில் தலிபான் போராளிகளால் கடத்தப்பட்ட 22 பேர் சடலமாக மீட்பு

* கொலம்பியாவில் மண்சரிவு; 10 பேர் பலி

ஜூன் 26

* பிலிப்பைன்ஸில் புயலில் சிக்கி கவிழ்ந்த பிரின்ஸஸ் ஒப் கப்பலில் பயணித்த, 70 பேர் சடலமாக மீட்பு 700 பேரைக் காணவில்லை.

ஜூன் 27

* இந்தோனேசிய விமானப்படை விமானமொன்று 13 பயணிகளுடனும் 5 விமான ஊழியர்களுடனும் மாயம்.

ஜூன் 28

* பயங்கரவாத பட்டியலில் இருந்து நெல்சன் மண்டேலா நீக்கம்.

ஜூன் 29

* சீனாவில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 9 பேருக்கு மரண தண்டனை.

ஜூலை உள்நாட்டு அரசியல்

ஜூலை 01

* வவுனியா நகரிலும் மன்னார் தாலிக்குளம் பகுதியிலும் பொலிஸாரும் படையினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் 3 பெண்கள் உட்பட 92 பேர் கைது.

ஜூலை 02

* ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களையும் அச்சுறுத்தல்களையும் கண்டித்து கொழும்பு கொள்ளுப்பிட்டி சந்தியில் ஊடக அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம்.

* இலங்கை இதழியல் கல்லூரியின் பயிற்சி ஒருங்கிணைப்பாளரும் ஊடக செயற்பாட்டு பதில் முகாமையாளருமான நாமல் பெரேரா மீது இனந்தெரியாதோர் தாக்குதல்.

* வவுனியாவில் தேடுதல்; 24 பேர்கைது

ஜூலை 04

* மன்னார் சன்னார் பகுதியில் படையினர் புலிகள் மோதல்; 15 படையினர் பலி

ஜூலை 05

* புத்தளம் மற்றும் நாவுல பிரதேசங்களில் பொலிஸாரும் இராணுவத்தினரும் நடத்தும் தேடுதலில் 65 தமிழர்கள் கைது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2008 பதிவுகள் (பகுதி 6)

வீரகேசரி நாளேடு 12/31/2008 12:20:05 PM -

ஜூலை 07

* வவுனியா மகா இறம்பைக்குளத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் அடையாளம் காணப்படாது எரிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு.

* ஊடகவியலாளர் மீதான தாக்குதலைக் கண்டித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தந்தி அனுப்பி ஊடகவியலாளர் போராட்டம்.

ஜூலை 11

* புத்தல கதிர்காமம் வீதியில் பயணிகள் பஸ் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் பலி; 25 பேர் காயம்

ஜூலை 13

* புத்தளம், தப்போவ பகுதியில் பாலர் பாடசாலை ஆசிரியர் வெள்ள வானில் கடத்தல்.

ஜூலை 16

* மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பாலமீன்மடு அகதிகள் முகாம் வளவில் மனிதப் புøதகுழி கண்டுபிடிப்பு

* தெல்தெனிய, தம்புள்ள பகுதியில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 27 பேர் கைது.

ஜூலை 17

* வவுனியா, பூந்தோட்டம் அகதி முகாமில் தீ விபத்து அகதிகள் நிர்க்கதி.

ஜூலை 18

* கொழும்பு கொம்பனித்தெருப் பகுதியில் சட்டவிரோதக் கட்டடங்களை நகர அபிவிருத்தி அதிகாரசபை இடித்ததையிட்டு மக்கள் ரயில் மறியல் போராட்டம்.

ஜூலை 19

* கச்சதீவை மீளப்பெற வேண்டும் என கலைஞர் கருணாநிதி வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம்.

ஜூலை 21

* தெஹிவளையில் இரு தமிழ் இளைஞர்கள் வெள்ள வானில் கடத்தல்.

ஜூலை 20

* அவரிவத்தையில் பஸ்ஸுடன் கார் மோதியதில் ஒரு வயது குழந்தை உட்பட நால்வர் பலி.

ஜூலை 21

* முல்லைத்தீவு முழங்காவில் அன்புபுரம் கிராமம் மீது விமானப்படையினரின் குண்டு வீச்சில் சிறுவர் உட்பட மூன்று பேர் காயம்

ஜூலை 23

* மடுமாதா திருச்சொரூபம் தேவன்பிட்டியிலிருந்து மன்னார் ஆயர் இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டது.

ஜூலை 24

* முல்லேரியாவில் மூன்று இளைஞர்கள் இனந்தெரியாதோரால் சுட்டுக்கொலை.

ஜூலை 25

* வன்னி ஒட்டுசுட்டான் பகுதியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் கிளிநொச்சி அபிவிருத்தி உத்தியோகத்தரும், பூநகரி பிரதேச பிரதித் திட்டமிடல் பணிப்பாளருமான சாந்தலிங்கம் விமலகுமார் பலி.

ஜூலை 27

* 15ஆது சார்க் மாநாடு இலங்கையில் ஆரம்பமானது.

ஜூலை 29

* நீதிமன்றத்தினை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உட்பட மூவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை.

ஜூலை வெளிநாட்டு அரசியல்

ஜூலை 01

* ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் கட்டிடம் ஒன்று இடிந்து 19 தொழிலாளர்கள் பலி.

மியன்மாரில் இரவடிப் பிராந்தியத்தில் மூழ்கிய கப்பலில் பயணம் செய்த 38 பேர் சடலமாக மீட்பு.

ஜூலை 02

* மொங்கோலியாவில் பாரிய கலவரம் 5 பேர் பலி; 300 பேர் காயம்.

ஜூலை 03

* ஆபிரிக்காவிலிருந்து ஐரோப்பா வரை உள்ள கிறிஸ்தவர் மற்றும் நாஸ்திகர்களுக்கு எதிரான யுத்தமொன்றை ஆரம்பிக்கப் போவதாக அச்சுறுத்தல் விடுத்த ஆன்மிகத் தலைவர் கைது; 66 போராளிகள் கைது.

ஜூலை 06

* ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்திய தூதரகத்தின் நுழைவாயிலில் இடம்பெற்ற கார் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 41 பேர் பலி; 141 பேர் காயம்.

ஜூலை 07

* கிழக்கு பங்களாதேஷில் பஸ் விபத்தில் 50 பேருக்கு மேற்பட்டோர் பலி.

ஜூலை 11

* பாகிஸ்தானில் 5.9 ரிச்டர் பூமி அதிர்ச்சி.

ஜூலை 13

* ஆப்கானிஸ்தானில் இராணுவ வாகனத்தை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 8 படையினர் பலி.

ஜூலை 15

* ஈராக்கில் இராணுவ ஆட்சேர்ப்பு நிலையத்தில் இடம்பெற்ற இரட்டை தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 35 பேர் பலி. 70 பேருக்கும் அதிகமானோர் காயம்.

ஜூலை 17

* எகிப்தில் வாகனங்களுடன் புகையிரதம் மோதி ஏற்பட்ட விபத்தில் 40 பேர் பலி. 50 இற்கும் அதிகமானோர் காயம்.

ஜூலை 19

* கச்சதீவை மீளப் பெறவேண்டும் என்று கலைஞர் கருணாநிதியை வலியுறுத்தல்.

* நேபாளத்தில் மலைப் பாதையிலிருந்து ஆற்றுக்குள் பஸ் பாய்ந்ததில் 15 பேர் பலி. 28 பேர் காயம்.

ஜூலை 21

* பாகிஸ்தானில் பலோஜிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் போராளிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 43 பேர் பலி.

* இந்தியப் பாராளுமன்றத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் வகையில் நம்பிக்கைத் தீர்மானம் தாக்கல்.

ஜூலை 22

* இந்திய பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் சிங் அரசு 275 வாக்குகள் பெற்று வெற்றியீட்டியது.

ஜூலை 24

* ஜப்பானில் ஏற்பட்ட 6.8 றிச்டர் பூமி அதிர்ச்சியால் 107 பேருக்கும் அதிகமானோர் காயம்.

ஜூலை 25

* பெங்களூரில் இடம்பெற்ற ஆறு தொடர் குண்டு வெடிப்பில் 3 பேர் பலி. பெருமளவானோர் காயம்.

ஜூலை 26

* அஹமதாபாத்தில் 17 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புத் தாக்குதலில் 45 பேர் பலி; 100 இற்கு மேற்பட்டோர் காயம்.

ஜூலை 27

* ஈரானில் 29 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்.

* ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையில் 70 ஆப்கான் போராளிகள் பலி.

ஜூலை 28

* துருக்கிய நகரமான இஸ்தான்புல்லில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்பில் 17 பேர் பலி. 15 பேர் காயம்.

ஜூலை 30

* தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்குதலுக்கு உள்ளாவதைக் கண்டித்து சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகத்திற்கு முன்னால் இந்திய கம்யூனிஸ் கட்சியினர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். தேசிய செயலாளர் ராஜா உட்பட 500 பேர் கைது.

ஜூலை 31

* யாழ். அரியாலைப் பகுதியில் மனித எலும்புக் கூடும் துறப்புக் கோர்வையும் மீட்பு.

ஆகஸ்ட் உள்நாட்டு அரசியல்

ஆக.01

* 15ஆவது சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு இந்திய, பாகிஸ்தான் பிரதமர்கள் இலங்கை வருகை.

ஆக. 02

* பயங்கரவாத கட்டமைப்புக்கு சார்க் அங்கீகாரம்.

ஆக.03

* 15 ஆவது சார்க் உச்சி மாநாட்டில் நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்து.

ஆக. 04

* இலங்கை கடல் எல்லைப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதி

* வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து நடத்திய தேடுதலில் பெண் உட்பட 6 பேர் கைது.

ஆக.05

* கண்டியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நடத்திய தேடுதலில் சந்தேகத்தில் 30 தமிழர்கள் கைது.

ஆக.06

* "வீரகேசரி' 78 ஆவது ஆண்டு நிறைவை பூர்த்தி செய்தது.

* முல்லைத்தீவுப் பகுதியில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் 8 பொது மக்கள் காயம்.

* வவுனியா, சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்தில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் 3 பெண்கள் உட்பட 22 பேர் கைது.

* பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒரு மாதத்திற்குள் 146 படையினர் பலி. 647 பேர் காயம்.

ஆக.07

* இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றோரில் 1679 பேர் கைது. 1700 பேர் மீண்டும் இணைவு.

ஆக.08

* கொழும்பு, பாலத்துறை பகுதியில் காரில் பயணித்துக் கொண்டிருந்தவர் மீது இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காரில் இருந்த மூவரும் ஸ்தலத்திலேயே பலி.

* முல்லைத்தீவு வைத்தியசாலையின் வளாகத்தினுள் ஷெல்கள் வீழ்ந்து வெடித்ததில் 1 1/2 வயது குழந்தை பலி; முல்லைத்தீவு அரச அதிபர் உட்பட 18 பேர் காயம்.

ஆக.08

* அமைச்சர் மேர்வின் சில்வாவினால் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து கொழும்பில் ஊடக அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம்.

ஆக.10

* ஜனவரி முதல் இதுவரை 204 பேர் கடத்தப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 61 பேர் சித்திரவதையின் பின் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், 22 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2008 பதிவுகள் (பகுதி 7)

வீரகேசரி நாளேடு 12/31/2008 12:11:35 PM - ஆக.08

* சீனாவில் தூதரக சமர்ப்பண வைபவத்தில் புஷ் பங்கேற்றார். * சீனாவின் பீஜிங்கில் ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக ஆரம்பம்.

ஆக. 09

*ஜோர்ஜியா மீது ரஷ்ய விமானங்களின் தொடர் தாக்குதலில் 2000 க்கும் அதிகமான ஜோர்ஜிய மக்கள் கொல்லப்பட்டனர்.

ஆக.11

* ஆந்திராவில் தொடர் மழையால் 100 இற்கும் அதிகமானோர் பலி. * ரஷ்ய விமானக் குண்டுத் தாக்குதல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க யுத்த நிறுத்த உடன்படிக்கையில் ஜோர்ஜிய ஜனாதிபதி கைச்சாத்திட்டார்.

ஆக.15

* ஈராக்கில் பெண் தற்கொலை குண்டுதாரி தாக்குதல் 19 பேர் பலி; 75 பேர் காயம். * அமெரிக்க போலந்து முக்கியத்துவம் மிக்க பாதுகாப்பு உடன்படிக்கையில் கைச்சாத்து.

ஆக.18

*நேபாளத்தில் புதிய பிரதமர் பிரசன்டா உத்தியோகபூர்வ பதவியேற்பு.

ஆக.21

* சீனாவின் பொதுவுடைமைக் கட்சியின் முன்னாள் தலைவர் ஹுவா குவோப்பிங் மரணம்.

ஆக.24

* அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் உப ஜனாதிபதி வேட்பாளராக ஜோபிடென் தெரிவு.

ஆக.27

* ஈரானிய விமானம் டார்பு போராளிகளால் கடத்தல்.

ஆக.29

* அமெரிக்க ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பராக் ஒபாமா உத்தியோகபூர்வ நியமனம்.

செப்டெம்பர் உள்நாட்டு அரசியல்

செப்.01

* லாப்காசின் விலை 189 ரூபாவால் அதிகரிப்பு.

செப்.02

* திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் 14 சந்தேக நபர்கள் கைது.

செப்.03

* உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீனாவின் வெளிவிவகார அமைச்சர் ஜாங் யெய்ச்சி இலங்கை வருகை.

செப்.04

* கொழும்பு, கிராண்ட்பாஸ் டிமெல் வத்தையில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் தெய்வங்களின் திருவுருவச்சிலைகள் சிலரால் உடைத்து சேதமாக்கப்பட்டது.

செப்.05

* பௌத்த பிக்குகள் எழுந்து நின்று நீதிமன்றுக்கு மரியாதை செலுத்தாமையினால் ராஜகிரிய வெலிக்கடவத்தை விகாராதிபதி பன்னல பஞ்சாலோக தேரரின் பிணை மனு கோரிக்கை உயர் நீதிமன்றால் நிராகரிப்பு.

* வெள்ளவத்தையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் இரு பெண்கள் உட்பட 9 பேர் கைது.

செப்.07

* தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லையென தமிழக முதல்வர் இந்திய பிரதமருக்குக் கடிதம்.

செப்.08

* தொண்டு நிறுவனங்களை வன்னியிலிருந்து வெளியேறுமாறு அரசாங்கம் உத்தரவு.

செப்.09

* வவுனியாவில் அமைந்துள்ள வன்னிக் கூட்டுப் படைத்தலைமையகம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகாய மார்க்கமாகவும் தரை மார்க்கமாகவும் மேற்கொண்ட தாக்குதலில் 13 படையினர் பலி; 25 பேர் காயம்.

செப்.10

* கிளிநொச்சியில் விமானக் குண்டு வீச்சு கர்ப்பிணிப் பெண் உட்பட மூவர் காயம்.23 வீடுகள் சேதம்.

* மொனராகலை கொட்டியாகலை காட்டுப் பகுதியில் அடையாளம் காணப்படாத நிலையில் 7 சடலங்கள் பொலிஸாரால் மீட்பு.

செப்.12

* சர்வதேச தொண்டு நிறுவனங்கள் வன்னியிலிருந்து வெளியேறுவதைக் கண்டித்து கிளிநொச்சியில் மக்கள் ஆர்ப்பாட்டம்.

செப்.15

* கொழும்பு விடுதிகள் மற்றும் தற்காலிக வசிப்பிடங்களில் தங்கியிருந்த 50 இற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர், யுவதிகள் பொலிஸாரால் கைது.

செப்.16

* கொழும்பு கோட்டன் பிளேசில் பஸ்ஸில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 7 பேர் காயம்.

* இராணுவ நடவடிக்கை காரணமாக கிளிநொச்சியிலிருந்து 652 குடும்பங்கள் இடம்பெயர்வு.

செப்.17

* கொழும்பு கோட்டன் பிளேஸில் பொலிஸாரும் இராணுவத்தினரும் நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதலில் 28 தமிழர்கள் கைது.

* கொழும்பு, வெள்ளவத்தை, பிலியந்தலை பகுதியில் 28 தமிழர்கள் கைது.

செப்.19

* கொழும்பு மற்றும் சுற்றுப் புறங்களில் பொலிஸாரும் இராணுவத்தினரும் மேற்கொண்ட தேடுதலில் 182 பேர் கைது.

செப்.21

* வட பகுதியிலிருந்து 5 வருட காலத்திற்குள் கொழும்பு உட்பட மேல் மாகாணத்திற்கு வருகை தந்திருந்த 36 ஆயிரம் மக்கள் பொலிஸில் பதிவு செய்து கொண்டனர்.

* மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் தளவாய் சவுக்கடி போன்ற பகுதிகளில் பொலிஸாரும் படையினரும் மேற்கொண்ட தேடுதலில் 40 பேர் கைது.

செப்.24

* ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியூயோர்க் வருவதைக் கண்டித்து ஐ.நா. சபை முன்னால் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம்.

* முன்னாள் ஜனாதிபதி டி.பி. விஜேயதுங்க காலமானார்.

செப்.25

* வன்னி அவலம் குறித்து ஐ.நா. சபை மௌனம் காப்பதைக் கண்டித்து ஜெனிவாவிலுள்ள தலைமையகத்துக்கு முன்பாக தமிழர்கள் கவன ஈர்ப்புப் போராட்டம்.

செப்டெம்பர் வெளிநாட்டு அரசியல்

செப்.01

* ஈராக்கின் அன்பர் மாகாணத்தின் கட்டுப்பாட்டை ஈராக்கிய படையினரிடம் அமெரிக்கப் படையினர் கையளிப்பு.

செப்.03

* படுகொலை முயற்சியிலிருந்து பாகிஸ்தான் பிரதமர் மயிரிழையில் உயிர் தப்பினார்.

செப்.04

* டுபாயில் ஏற்பட்ட ஹெலி விபத்தில் இரு இந்தியர்கள் உட்பட 7 பேர் பலி.

செப்.05

* ஹெயிட்டியை தாக்கிய "ஹன்னர்' புயல் காரணமாக 136 பேர் பலி.

செப்.06

* பாகிஸ்தானின் ஜனாதிபதியாக முன்னாள் பிரதமர் பெனாஸிர் பூட்டோவின் கணவரான ஆசிப் அலி சர்தாரி தெரிவு

* எகிப்தின் தலைநகர் கெய்ரோவுக்கு அண்மையில் ஏழை மக்கள் குடியிருந்த குடிசையின் மீது பாரிய பாறைகள் உருண்டு விழுந்ததில் 500 பேர் புதையுண்டனர்.

செப்.08

* ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸிலின் 9 ஆவது அமர்வு ஜெனீவாவில் ஆரம்பமானது.

செப்.10

* இஸ்ரேல் உடனான 330 மில்லியன் டொலர் ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா அங்கீகாரம்.

செப்.11

* பாகிஸ்தானின் ஆப்கான் பள்ளிவாசல் ஒன்றில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 20 பேர் பலி; 30 பேருக்கும் அதிகமானோர் காயம்.

செப்.13

* டில்லியில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் 20 பேர் பலி; 90 பேர் காயம்.

* அமெரிக்காவில் "ஐக்' என்ற பேராபத்தான சூறõவளியினால் 10 இலட்சம் பேர் இடம்பெயர்வு.

செப்.14

* சேர்பிய நகரமொன்றில் தரை இறங்க முயன்ற 737 00 ரஷ்ய பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 88 பேர் பலி.

செப்.15

* சிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் ஜனாதிபதி ரொபட் முகாபேயும் எதிர்க்கட்சித் தலைவர் மோர்கன் தஸ்வான் கிறேயும் வரலாற்று முக்கியத்துவ உடன்படிக்கை கைச்சாத்து.

செப்.20

* பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 62 பேர் பலி; 200 பேர் காயம்.

செப்.23

* இலங்கைத் தமிழர் மீதான இரõணுவ நடவடிக்கைகளைக் கண்டித்தும் கச்சதீவை மீளப் பெறுமாறு வலியுறுத்தியும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திராவிட கழக தலைவர் கீ. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் அணியின் தலைவர் திருமாவளவன் உட்பட 500இற்கும் மேற்பட்டோர் பொலிஸாரால் கைது.

செப்.24

* சீனாவின் புதிய பிரதமராக தரோ அஸோ தெரிவு

செப்.30

* ராஜஸ்தான் மலைக்கோயில் சனநெரிசலில் சிக்குண்டு 177 பேர் பலி; 250 பேர் படுகாயம்.

ஒக்டோபர் உள்நாட்டு அரசியல்

ஒக்.01

* கிளிநொச்சியில் விமான படையினர் நடத்திய விமானக் குண்டுவீச்சில் இரு பொதுமக்கள் உடல் சிதறி பலி; 13 பேர் காயம்.

ஒக்.02

* கிளிநொச்சி நகரில் படையினர் குண்டு வீச்சு; இரு பொதுமக்கள் பலி; 16 பேர் காயம்.

ஒக்.04

* ஒட்டுசுட்டான் விசுவமடு பிரதேசம் சூனிய பிரதேசமாக பிரகடனம்

ஒக்.05

* கிழக்கில் இருந்து கொழும்பு வந்து தங்கி இருக்கும் பொதுமக்கள் பொலிஸ் பதிவு.

ஒக். 08

* அநுராதபுர நகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் வடமத்திய சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா அவரது மனைவி உட்பட 29 பேர் பலி.

* தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் .

ஒக்.08

* பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா வைத்தியசாலை ஊழியர்கள் அடையாள பணி பகிஷ்கரிப்பு

ஒக்.09

* அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்து பொரலஸ்கமுவவில் தற்கெõலை குண்டு தாக்குதல்; 7 பேர் காயம்.

ஒக்.10

* களுவாஞ்சிக் குடியில் தமிழ் மக்கள் விடுதலைப்பபுலி உறுப்பினர்கள் சுட்டுக் கொலை

ஒக்.16

* அம்பாறை சாகாமம் வட்டமடு வயல் பிரதேசத்தில் வயலுக்கு சென்ற விவசாயிகள் 4 பேர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை.

ஒக். 19

* கொழும்பு புறக்கோட்டை பஸ் நிலையத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 3 பஸ்கள் சேதம்.

ஒக்.22

* யாழ். காங்கேசன்துறை கடற்பரப்பில் பயணித்த கடற்படையினருக்கு சொந்தமான இரு விநியோக கப்பல்கள் புலிகளின் தற்கொலை தாக்குதலில் மூழ்கடிப்பு.

ஒக்.24

* எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு.

ஒக். 25

* ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ இந்தியா பயணம்.

ஒக் 28

* மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அலுவலகம் மீது குண்டு தாக்குதல் 4 பேர் பலி 5பேரை காணவில்லை.

* கொழும்பு களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையம் மற்றும் கல்லடி இராணுவ முகாம் மீதும் விடுதலை புலிகளின் இலகுரக விமானம் குண்டு தாக்குதல் ஒருவர் பலி நால்வர் காயம்.

ஒக்.29

* பாகிஸ்தான் பாலோசிஸ் மாகாணத்தை தாக்கிய பூமியதிர்ச்சியில் 50 பேர் பலி நூற்றுக்கணக்கானோர் காயம்.

ஒக்.30

* இந்தியா அசாம் மாநிலத்தில் அடுத்தடுத்து 12 இடங்களில் குண்டு வெடிப்பு. 61 பேர் பலி 300 பேர் காயம்.

ஒக்.31

* இலங்கை தமிழருக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் கடையடைப்பு.

ஒக்டோபர் வெளிநாட்டு அரசியல்

ஒக். 01

* ஜப்பானின் வீடியோ கடையில் தீ விபத்து 15 பேர் கருகிப் பலி.

ஒக். 02

* வன்னி பொதுமக்கள் மீது குண்டு வீச்சினை கண்டித்து லண்டனில் மாபெரும் போராட்டம்.

ஒக். 03

* இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணுமாறு வலியுறுத்தி சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.

* ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பள்ளிவாசல் அருகே இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 16 பேர் பலி.

ஒக். 05

* சிரேஸ்ட அல்கொய்தா சூத்திரதாரி சுட்டுக்கொலை

ஒக். 06

* இலங்கை இனப்பிரச்சினையில் பிரதமர் மன்மோகன் சிங்கை தலையிட கோரி த. மு. க. சென்னை மயிலாபூரில் போராட்டம். ஒக். 07

* அவுஸ்ரேலியா பயணிகள் விமானத்தின் சமநிலை பாதிக்கப்பட்டதில் 40 பேர் படுகாயம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2008 பதிவுகள் (பகுதி 8)

வீரகேசரி நாளேடு 12/31/2008 12:01:16 PM - ஒக். 09

* பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் 11 பேர் பலி.

ஒக். 10

* இலங்கை தமிழர் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து சென்னையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உட்பட ஆயிரக்கணக்கானோர் கைது.

* பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 25 பேர் பலி, 48 பேர் காயம்.

ஒக். 11

* ஈழத் தமிழர்கள் படுகொலையை கண்டித்து கோவை பல்கலைக்கழக மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஒக். 14

* இலங்கை பிரச்சினை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தின் முடிவின்படி த. மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி இராஜினாமா.

ஒக். 15

* இலங்கைத் தமிழர்கள் படுகொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் பாடசாலைகள், கல்லூரி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டம்.

ஒக். 17

* இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்.

ஒக். 18

* தமிழர் படுகொலையை கண்டித்து தமிழக திரையுலகத்தை சேர்ந்தவர்கள் போராட்டம்.

ஒக். 19

* இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து தமிழ் திரையுலகத்தினர் போராட்டம்.

ஒக். 24

* சென்னையில் மனித சங்கிலி போராட்டம் தமிழக முதல்வர் கருணாநிதி ஆரம்பித்து வைத்தார்.

ஒக். 25

* வைகோ கைது; கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் இயக்குநர் சீமான் அமீர் உட்பட 500 பேர் கைது.

ஒக். 29

* மாலைதீவு ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சித் தலைவர் மொஹமட் நஷீத் வெற்றி.

நவம்பர் உள்நாட்டு அரசியல்

நவ. 02

* புத்தளம் பகுதியில் படையினர் பொலிஸார் இணைந்து தேடுதல்; 43 பேர் கைது.

நவ. 05

* கம்பஹா மாவட்டத்தின் 11 பொலிஸ் பிரிவுகளில் பொலிஸாரும் இராணுவமும் தேடுதல்; 51 பேர் கைது.

நவ. 06

* 2009ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் வாசிப்பு.

* கிளிநொச்சி பரந்தன் மக்கள் குடியிருப்புகள் மீது விமான படையினர் குண்டு தாக்குதல். 12 பேர் காயம், 15 வீடுகள் சேதம்.

நவ. 08

* வெலிக்கடை, அநுராதபுரம் சிறைகளிலுள்ள 141 கைதிகள் உண்ணாவிரதம்.

நவ. 09

* வவுனியா தோணிக்கல் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஒருவர் பலி.

நவ. 12

* மாலைதீவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டின் ஜனாதிபதி மொஹமட் ரஷீட்டை சந்தித்து பேச்சு.

நவ. 13

* ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியா விஜயம்.

நவ. 14

* கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் பிரத்தியேக செயலாளர் குமாரசுவாமி நந்தகோபன் (ரகு) அவரது சாரதி ஆகியோர் அத்துருகிரியவில் சுட்டுக்கொலை.

நவ. 15

* 15 வருடங்களின் பின் பூநகரி படையினர் வசம்.

நவ. 17

வவுனியா குருமண்காடு பகுதியில் இனந்தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் இரு இளைஞர்கள் பலி. இருவர் காயம்.

நவ. 18

* வன்னி புளியங்குளம் நெடுங்கேணி வீதியில் கிளைமோர் தாக்குதல். பொது மக்கள் பலி. இருவர் காயம்.

நவ. 20

* வன்னியில் யுத்த நடவடிக்கையால் இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்தியாவினால் அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் இந்திய தூதுவர் அலோக் பிரசாத்தினால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிப்பு.

நவ 21

* தம்புள்ளை ஹத்துன்கமுவ கெமுனுஓய பகுதியில் இராணுவ மோட்டார் சைக்கிள் ஒன்று பஸ்ஸுடன் மோதியதில் இராணுவ வீரர் இருவர் பலி.

நவ. 23

* ஏறாவூர் பகுதியில் பொலிஸாரும் படையினரும் மேற்கொண்ட தேடுதலில் 12 தமிழர்கள் கைது.

நவ. 24

* கிளிநொச்சி பகுதியினை நோக்கி முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டிருந்த படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 27 படையினர் பலி. பலரை காணவில்லை.

* காலி, கம்பஹா, பிலியந்தலை பகுதிகளில் 21 மணித்தியாலத்தில் பெண் உட்பட நால்வர் படுகொலை.

நவ. 26

* யாழ். மாவட்டத்தில் பெய்துவரும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 8400 குடும்பங்கள் இடம்பெயர்வு.

* மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை பிரதேசத்தில் ஆயுததாரிகளினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சுட்டுக்கொலை.

நவ. 27

* மட்டக்களப்பில் கோவில் பூசகர் உட்பட நால்வர் சுட்டுக்கொலை. 48 மணித்தியாலத்தில் 19 பேர் படுகொலை.

நவ. 28

*காலி பூசா தடுப்பு முகாமில் 35 பெண்கள் உட்பட 328 பேர் தடுத்து வைப்பு.

*கிளிநொச்சி கல்லாற்றிலுள்ள நாதன் குடியிருப்பு பகுதியில் இலங்கை விமானப் படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில் 5 வயது சிறுவன் உட்பட மூவர் கொல்லப்பட்டதுடன் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

நவ. 30

* கொழும்பில் பல பகுதிகளில் பொலிஸாரும் படையினரும் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலில் 25 பேர் கைது.

நவம்பர் வெளிநாட்டு அரசியல்

நவ. 01

* போரை நிறுத்தக் கோரி இந்திய தென் இந்திய நடிகர், நடிகைகள் உண்ணாவிரத போராட்டம்.

நவ. 02

* சம்பிய ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளர் ருபியாஹா பண்டா வெற்றி .

நவ. 04

* அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்.

நவ. 05

* அமெரிக்காவின் 44 ஆவது ஜனாதிபதியாக பராக் ஒபாமா தெரிவு.

நவ. 06

* இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 ஆயிரம் தொன் உணவு சென்னையிலிருந்து கப்பல் மூலம் அனுப்பி வைப்பு.

நவ. 08

* பாகிஸ்தானில் தற்கொலைக்குண்டுத் தாக்குதல் 24 பேர் பலி.

நவ. 09

* ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இடம்பெற்ற இரட்டை குண்டுத் தாக்குதலில் 25 பேர் பலி.

நவ. 10

* இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடிகர் விஜய் தன் தந்தை சகிதம் சென்னையில் உண்ணாவிரத போராட்டம்.

நவ. 12

* சவுதி அரேபியாவின் அனுசரணையுடன் மதரீதியான சகிப்புத் தன்மையை வலியுறுத்தும் ஐக்கிய நாடுகள் மாநாடுகள் நடைபெற்றது.

நவ. 15

* ஆபிரிக்க நாடான புர்கினா பஷோவில் பயணிகள் பஸ் ஒன்றும் லொறியொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில் 66 பேர் பலி.

நவ. 19

* இலங்கையில் இடம்பெறும் யுத்தத்தினை நிறுத்துமாறு கோரி ம.தி.மு.க. செயலாளர் வைகோ உண்ணாவிரத போராட்டம்.

நவ. 24

* ஈராக் தலைநகரில் இரட்டைக் குண்டுவெடிப்புகள் 18 பேர் பலி பலர் படுகாயம்.

நவ. 27

* இந்தியாவின் 9 இடங்களில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டு தாக்குதல் 100 க்கு அதிகமானோர் பலி. 1000 பேர் வரை காயம்.

நவ. 30

* மும்பை சம்பவத்தை தொடர்ந்து இந்திய மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டேல் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாராயணன் பதவிகளை இராஜினாமா.

டிசம்பர் உள்நாட்டு அரசியல்

டிசெ. 01

* வத்திக்கானுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாப்பரசர் 16 ஆவது ஆசீர்வாதப்பரை சந்தித்து ஆசி.

* முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதிகளில் விடுதலை புலிகள் நடத்திய தாக்குதலில் இராணுவத்தின் ஆழஊடுருவும் படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் லலித் ஜயசிங்க பலி.

டிசெ. 05

* இந்தியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட நிவாரண பொருட்கள் வன்னியில் விநியோகம்.

டிசெ. 08

* ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சர் பதவி வகித்த கருஜெயசூரிய மீண்டும் ஐ.தே.க.வுடன் இணைந்தார்.

டிசெ. 10

* ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்து பேச்சு.

* மனித உரிமை ஆர்வலர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்.

* புதுமுறிப்பிலும் முறிகண்டியிலும் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 12 படையினர் பலி.

* கிளிநொச்சி திருமுறிகண்டியில் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கடும் மோதலில் 20 இராணுவ வீரர்கள் பலி.

* கிளிநொச்சி கனகபுரத்தில் படையினரின் எறிகணை தாக்குதலில் 5 மாத குழந்தை உட்பட மூவர் பலி.

* யாழ்ப்பாணம்முகமாலை, கிளாலி மற்றும் கிளிநொச்சிபரந்தன் இரணைமடு பகுதிகளில் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் 25 இராணுவத்தினர் பலி 160 பேர் காயம்.

டிசெ. 17

* கிளிநொச்சியை நோக்கி முன்னேற முயன்ற படையினர் மீது புலிகள் தாக்குதல் நடத்தியதில் 130 படையினர் பலி.

டிசெ. 19

* முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் விமானப்படையின் குண்டு வீச்சு விமானங்கள் நடத்திய குண்டு தாக்குதலில் 11 பொதுமக்கள் படுகாயம்.

டிசெ. 21

* கிளிநொச்சி இரணைமடு முறிகண்டி ஆகிய பகுதிகளில் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 13 படையினர் பலி, 40 பேர் காயம்.

டிசெ. 23

* சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ். மாவட்டப் பணியாளர் சுந்தரலிங்கம் கெங்காதரன் சுட்டுக் கொலை.

டிசெ. 25

* விடுதலைப்புலிகளைத் தடைசெய்வது குறித்து முப்படைத் தளபதிகளுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆராய்வு.

டிசெ. 26

* மட்டக்களப்பு உறுகாமம் பகுதியில் தமிழ் குடும்பஸ்தர்கள் இருவர் ஆயுததாரிகளால் வெட்டிக் கொலை.

* சுனாமி நாலாவது ஆண்டு நினைவுதினம் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

டிசெ. 28

* வத்தளை கேஹித்தை புனித அன்னம்மாள் தேவாலய வளாகத்தில் உள்ள சிவில் பாதுகாப்பு பிரிவு முகாம் மீது நடத்தப்பட்ட தற்கொலைக்குண்டுத்தாக்குதலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.