Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா அரசு ஜெனிவா உடன்பாடுகளுக்கு எதிரான போர்க் குற்றங்களை தினமும் தொடர்கின்றது.- த.தே.கூ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசு ஜெனிவா உடன்பாடுகளுக்கு எதிரான போர்க் குற்றங்களை தினமும் தொடர்கின்றது.- த.தே.கூ

திங்கள், 05 ஜனவரி 2009, 14:25 மணி தமிழீழம் []

சிறிலங்கா அரசு ஜெனிவா உடன்பாடுகளுக்கு எதிரான போர்க் குற்றங்களை தினமும் தொடர்ந்து செய்து வருகின்றபோதும், சர்வதேச சமூகம் மௌனம் காத்து வருவதுடன் சிறிலங்கா அரசுக்கே இராணுவ உதவிகளையும் வழங்கிவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

வன்னிப் பிரதேசத்தில் உள்ள மக்கள் நத்தார், புதுவருடம், மற்றும் தைப்பொங்கல் ஆகிய விஷேட தினங்களில் பொருளாதார நெருக்கடி, உணவு, மருந்து தட்டுப்பாடு என்பவற்றிற்கு முகங்கொடுத்துள்ளனர். இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்

சிறிலங்கா படைகள் வன்னிப் பிரதேசத்தில் வேண்டுமென்றே திட்டமிட்டு பொதுமக்கள் மீது நத்தார், புதுவருடம், தைப் பொங்கல் ஆகிய விஷேட கொண்டாட்ட காலங்களில் தாக்குதல்களை நடாத்துகின்றது. அத்துடன் வைத்தியசாலை வசதிகளை முடக்கி மனித உரிமை மீறல்களைச் செய்து வருகின்றது.கடந்த தினங்களில் இடம்பெயர்ந்துள்ள பொதுமக்கள் மீது தொடர்ந்து நடாத்தப்பட்ட தாக்குதல்கள் வருமாறு:- டிசம்பர் 17 இல் வட்டக்ககச்சி பகுதியில் 4 முறை சிறிலங்கா வான்படை நடத்திய தாக்குதலில் 5 மாத குழந்தை மற்றும் 25 வயது இளைஞர் கொல்லப்பட்டனர். 3 குழந்தைகள் உட்பட 13 பேர் ஏதிலிகள் காயமடைந்தனர். டிசம்பர் 19 இல் முள்ளிவாய்க்கால் கிராமத்தின் மீது நடத்தப்பட்ட வான்படைத் தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட 11 பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.

அதேதினம் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதலில் முல்லைத்தீவு பொது வைத்தியசாலை சேதமடைந்தது. மருத்துவப் பணியாளர் இருவர் காயமடைந்தனர். டிசம்பர் 20 இல் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் வட்டக்கச்சியில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பொதுமக்களின் குடியிருப்புக்கள் சேதமடைந்தன. இதேதினம் முல்லைத்தீவு கடலோரப் பகுதிகளில் இடம்பெயர்ந்து வாழும் சுமார் ஆயிரம் பொதுமக்கள் வாழும் தற்காலிக குடியிருப்புக்களை இலக்கு வைத்து வான்படையினர் 8 குண்டுகளை வீச மீன்பிடி படகுகளும்,மீன் வாடிகளும் அழிந்து போயின.

டிசம்பர் 25 நத்தார் நாள் கிளிநொச்சி பொது மருத்துவமனையை இலக்கு வைத்து சிறிலங்கா படைத்தரப்பு மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் வைத்தியசாலை கட்டிடங்கள் சேதமடைந்தபோதும் பணியாளர்கள் பலர் மயிரிழையில் உயிர் தப்பினர். டிசம்பர் 27 இல் சிறிலங்கா வான்படையினர் இயக்கச்சி, இரணைமடு மற்றும் வட்டக்கச்சி பகுதிகளில் பொதுமக்கள் மூன்று குடியிருப்புக்களை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் 24 வயது இளம்பெண் கொல்லப்பட்டார். 10 பொதுமக்கள் படுகாயமடைந்தனர். 18 வயது இளம்பெண் இரு கால்களையும் இழந்தார்.

டிசம்பர் 30 இல் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் கிளிநொச்சி மருத்துவமனை கடும் சேதமடைந்தது. டிசம்பர் 31 இல் சிறிலங்கா படையினர் முல்லைத்தீவு - பரந்தன் வீதியில் உள்ள முரசுமோட்டை பகுதியில் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். வேறு ஒருவர் படுகாயமடைந்தார். ஒரு குடும்பம் அடங்கலாக 16 பொதுமக்கள் படுகாயமடைந்தனர். கரைச்சி பகுதியில் அதே நாளில் இடம்பெயர்ந்த மக்கள் குடிசைகள், ஆலயம், பாடசாலை, விவசாய நிலங்கள் என்பனவற்றை இலக்கு வைத்து வான்படையினர் தாக்குதல் நடத்தினர்.

ஜனவரி 1 இல் புதுவருடப் பிறப்பு நாளில் மீண்டும் முரசுமோட்டை மற்றும் கண்டாவளை சந்தி பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் படுகாயமடைந்தனர். மூன்று கடைகள் அழிவடைந்தன. ஆறு கடைகள் சேதமடைந்தன.

ஜனவரி 2 இல் புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதலில் இருஅம்புலன்ஸ் வண்டிகளும் 13 பொதுமக்களும் படுகாயமடைந்தனர். அதே நாளில் முரசுமோட்டை 3 ஆம் கட்டையில் பொதுமக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பொதுமக்கள் படுகாயமடைந்தனர். அத்துடன் பன்னங்கண்டியில் எறிகணைத் தாக்குதலினால் ஒருவர் காயமடைந்தார். அதே தினம் முல்லைத்தீவில் பஸ் டிப்போ மற்றும் பெற்றோல் நிரப்பு நிலையப் பகுதியில் வான்படையினர் நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர் 8 பேர் காயமடைந்து முல்லைத்தீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஜனவரி 3 ஆம் நாள் வன்னி புளியம்பொக்கணை பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒரு வயோதிப பெண் படுகாயமடைந்தார். அப்பகுதியை நோக்கி 6 ஷெல்கள் ஏவப்பட்டன. வன்னிப் பெருநிலப்பரப்பில் 3 இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்கள் உள்ளக அகதிகளாகி உள்ளனர். அத்துடன் 5 இலட்சம் பேர் அங்கு தங்கியுள்ளனர்.

ஜெனீவா போர் சட்டங்களுக்கு எதிராக தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு இனப் படுகொலையை சிறிலங்கா அரசு மேற்கொண்டு வருவது போர்க்குற்றமாகும். ஆனாலும் இது தொடர்பில் அனைத்துலக சமூகம் தொடர் மௌனம் காத்து வருவது எமக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது. மாறாக சிறிலங்காவுக்கே படைத்தரப்பு உதவிகளை வழங்கி வருகிறது. எனவே அனைத்துலகத்திலும் வாழும் மொத்த தமிழர்கள் 70 இலட்சம் மக்கள் ஒற்றுமையாகவும் ஆற்றலுடனும் இருக்க நீங்கள் வழி ஏற்படுத்தி தருவீர்கள் என்றுநம்புகின்றோம். என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் குழு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு

pathivu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.