Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத்திய கிழக்குப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பதவியேற்ற முதல் நாளிலேயே நடவடிக்கை - பராக் ஒபாமா உறுதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய கிழக்குப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பதவியேற்ற முதல் நாளிலேயே நடவடிக்கை - பராக் ஒபாமா உறுதி

வீரகேசரி நாளேடு 1/12/2009 9:41:28 PM -

பதவியேற்ற முதல் நாளிலேயே மத்திய கிழக்கில் நடைபெறும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

"ஏ.பி.சி.' செய்திச் சேவைக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தனது தலைமைத்துவத்தின் கீழ் ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா புதிய அணுகுமுறையொன்றை எடுக்கவுள்ளதாக அவர் கூறினார். ""ஈரானானது எமது மிகப் பெரிய சவால்களிலொன்றாக உள்ளது.

இந்நிலையில் நாங்கள் புதிய அணுகுமுறையொன்றை முன்னெடுக்கவுள்ளோம். மத்திய கிழக்கில் அணு ஆயுத போட்டியொன்று உருவாக்கப்படுவதற்கு அணு ஆயுத வல்லமையுள்ள ஈரான் தூண்டுகோலாக உள்ளது'' எனத் தெரிவித்த பராக் ஒபாமா, ""நமது பிரச்சினைகளின் மூலõதாரம் தொடர்பில் தெளிவுபடுத்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கும் நாம் மதிப்பளிப்போம். நாங்கள் அதற்கு தயாராகி வருகிறோம்'' என்று கூறினார்.

ஈரான் மட்டுமல்ல, ஹமாஸ் போராளிகள், ஹிஸ்புல்லாஹ் இயக்கங்கள் என்பனவும் அமெரிக்காவின் புதிய அரசாங்கத்திற்கு சவாலாக உள்ளதாக தெரிவித்த ஒபாமா, தான் ஜனாதிபதி பதவியை ஏற்றவுடனேயே மத்திய கிழக்கிலான பரந்தளவு சமாதான செயற்கிரமங்களை ஆரம்பிக்கவுள்ளதாக கூறினார்.

ஈரானானது லெபனானிய ஹிஸ்புல்லா போராளிகளுக்கு ஆதரவு அளித்து வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார். ""நான் இவ்விவகாரம் தொடர்பில் தற்போது செயற்பட்டு வருகிறேன். எனவே, நான் எதிர்வரும் 20 ஆம் திகதி ஜனாதிபதியாக சேவையாற்ற ஆரம்பிக்கும் முதல் நாளிலேயே மத்திய கிழக்கிலான முழுமையான சமாதான செயற்கிரமமொன்றில் உடனடியாக களம் இறங்க முடியும் என ஒபாமா தெரிவித்தார்.

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் உக்கிர தாக்குதல்கள் தொடர்பில் ஒபாமா மௌனமாக இருப்பதாக அராபிய உலகம் குற்றஞ்சாட்டுவது பற்றி அவர் கூறுகையில், ""பாதிக்கப்படுபவர்கள் பாலஸ்தீனர்களாக இருப்பினும் இஸ்ரேலியர்களாக இருப்பினும், பொதுமக்கள் கொல்லப்படுவது வருந்தத்தக்க ஒன்றாகும். இது தொடர்பில் முடிவு ஒன்றைக் காண்பது தொடர்பில் நான் தீவிரமாக அக்கறையெடுத்துள்ளேன்'' என்று கூறினார்.

கடந்த ஜூலை மாதம் இஸ்ரேலிய விஜயத்தின்போது ஒபாமா, "எனது இரு மகள்மாரும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கையில், எவராவது என் வீட்டின் மீது எறிகணைத் தாக்குதல் நடத்துவார்களாயின், நான் என்னால் இயன்ற அனைத்தையும் பயன்படுத்தி அதை தடுத்து நிறுத்தவே முயற்சிப்பேன். அதைத்தான் இஸ்ரேலியர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்' என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கௌதமாலா சிறைச்சாலையை மூடுவது குறித்து ஒபாமா விபரிக்கையில், தான் பதவி ஏற்று 100 நாட்களுக்குள் அந்த சிறைச்சாலை மூடப்படும் எனக் குறிப்பிட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.