Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கு ஆபத்து வந்தபோது... ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க இறுதியாக எழுதிய ஆசிரியர் தலையங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஆபத்து வந்தபோது...

ஜ08.01.09 படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின்

ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க இறுதியாக எழுதிய ஆசிரியர் தலையங்கம்

இலங்கையினைப் பொறுத்த வரையில் பத்திரிகைத்துறையினைத் தவிர எந்தத்துறையிலும் தங்களது தொழிலைச் சரியாகச் செய்தவர்கள் எவரும் அவர்களது உயிரினை விலையாகக் கொடுக்கவில்லை.

கடந்த சில வருடங்களாக நாட்டினது சுதந்திர ஊடகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன, குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டிருக்கின்றன, சீல் வைக்கப்பட்டிருக்கின்றன மற்றும் அச்சுறுத்தப்பட்டிருக்கின்ற

அருமையான துணிச்சல் மிக்க பத்திரிகையாளர்

அருமையான துணிச்சல் மிக்க பத்திரிகையாளர்

ஆமா 30 வருசமாக தமிழனை சாகடிக்க பார்த்துக்கொண்டிருகிற சிங்கள பத்திரிகை உலகம். சும்மா உப்புச்சப்புக்கு

ஏதோ நாலு வார்த்தை எழுதினவுடன் தூக்கி பிடியு.ங்கோ

தூக்கி பிடிச்சு மற்றவனுக்கு சேவகம் செய்து அழிந்த இனம் தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியொரு மடலை எழுதிவிட்டே மரணத்தை தழுவிக்கொண்டாரா?!! ஆச்சரியம் தான்...

இந்த வரிகள் வெகுவாகப் பாதித்தன:

யூதனுக்கு ஆபத்து வந்தது. நான் பேசவில்லை.

ஏனெனில் நான் யூதன் இல்லையே.

கொம்யூனிஸ்டுக்கு ஆபத்து வந்தது. நான் பேசவில்லை.

ஏனெனில் நான் கொம்யூனிஸ்ட் இல்லையே.

தொழிலாளிக்கு ஆபத்து வந்தது. நான் பேசவில்லை.

ஏனெனில் நான் தொழிலாளி இல்லையே.

எனக்கு ஆபத்து வந்தது. யாரும் பேசவில்லை.

ஏனெனில் நான் யாருக்காகவும் பேசவில்லையே.

  • கருத்துக்கள உறவுகள்

எதையும் பொருட்படுத்தாது தனது கடமையில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருந்தால் இதுதான் பரிசா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதர்மம் தலெவிரித்தாடுது

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியொரு மடலை எழுதிவிட்டே மரணத்தை தழுவிக்கொண்டாரா?!! ஆச்சரியம் தான்...

மகிந்தவுக்கு எவ்வளவு எரிச்சலூட்ட முடியுமோ அவ்வளவு செய்து வந்தார். கொழும்பு மாநகரசபைத் தேர்தலில், நடத்தப்பட்ட இலஞ்சம் தொடர்பான நிகழ்வை வீடியோ பிடித்து இலவசமாக கேட்பர்களுக்குக் கொடுக்கப்பட்டது.

அதில் சிறிலங்கா அரசின் முக்கியமான அமைச்சர் ஒருவரும் மாட்டுப்பட்டிருந்தார்.

இநந்தக்கட்டுரை எப்போது எழுதப்பட்டதோ தெரியில்லை. ஆனால் அவர் இறந்து 3 நாளுக்குப் பிறகு தான் ் ிரசுரமாகியுள்ளது.

http://www.thesundayleader.lk/20090111/editorial-.htm

Edited by தூயவன்

ஆமா 30 வருசமாக தமிழனை சாகடிக்க பார்த்துக்கொண்டிருகிற சிங்கள பத்திரிகை உலகம். சும்மா உப்புச்சப்புக்கு

ஏதோ நாலு வார்த்தை எழுதினவுடன் தூக்கி பிடியு.ங்கோ

தூக்கி பிடிச்சு மற்றவனுக்கு சேவகம் செய்து அழிந்த இனம் தான்

தனதுயிருக்கு ஆபத்து இருந்தும் தனது எண்னத்தையும் கொள்கையையும் விட்டு அவர் விலகவில்லை.தனக்கு சாவு வரும் என தெரிந்து இந்த தலையங்கத்தை எழுதி வைத்திருந்த அவர் சிறந்த பத்திரிகையாளன் என சொன்னதில் எந்த தவறும் இல்லை

ஆனால் தமிழ் மானம் வித்து சிங்களவனுக்கு குண்டி கழுவும் தமிழன் என சொல்லி திரியும் கூட்டத்தை விட எவ்வளவோ மேல்

அவரின் கொள்கைப்பற்று பாராட்டத்தக்கது ஒருவரை பாராட்டுவது சேவகம் செய்வது என நீங்கள் அர்த்தம் கற்பிக்கின்றீர்கள். என் மனதுக்கு சரி என படுவதை நான் செய்வேன் அதற்கு சேவகமோ அல்லது வேறு எது என சொன்னாலும் நான் கணக்கெடுப்பவன் அல்ல என்பதனை உங்களுக்கு சொல்ல ஆசைப்படுகின்றேன்.

நீங்கள் பாராட்டுவது சரிதான்

அதேநேரம் அவரொரு சிங்களவன் என்றரீதியில்தான் எழுதினார் என்று சொன்னால்.......???ஏன் கோபப்படவேண்டும்.......???

அது உண்மைதானே

நீங்கள் பாராட்டுவது சரிதான்

அதேநேரம் அவரொரு சிங்களவன் என்றரீதியில்தான் எழுதினார் என்று சொன்னால்.......???ஏன் கோபப்படவேண்டும்.......???

அது உண்மைதானே

அவரின் கொள்கை பிடிப்பைத்தான் பாராட்டினேன் அவரின் இனத்தை நான் பாராட்டவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

இனம் அழிவதை நியாயப்படுத்தி எழுதுவேன் என்ற கொள்கைப்பிடிப்பா????

தயவு செய்து கையொப்பமிடுங்கள்

http://www.tamilsforobama.com/sign/usersign.html

Edited by விசுகு

லஸந்தவின் கருத்துகள் தமிழ்நாதம் மொழி பெயர்ப்பில் தமக்கு சாதகமானதை மட்டும் இணைத்துள்ளது.

உண்மைகளை அப்படியே விடுங்கள். நாங்கள் உண்மைகளை மறைத்து எமக்கு ஏற்றவிதத்தில் ஏமாற்றியே பழக்கப்பட்டுவிட்டோம் என நினைக்கிறேன்.

ஒருவரது கருத்தை வெளியிடுவதும் வெளியிடாததும் அவரவர் பிரச்சனை. ஆனால் அதையே நமக்கு ஏற்றவாறு திணிப்பதில் என்ன காணப் போகிறோம்.

இது நாம் தொடர்ந்து செய்து வரும் தவறு.

இவை இப்போது நமக்கே எமனாகி இருக்கிறது.

இது அவரது உண்மையான மடல் என நினைக்கிறேன்.

http://inioru.com/?p=1692

http://inioru.com/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலே குறிப்பிட்ட தளத்தின் மொழிபெயர்ப்பு.

பிறகு அவர்கள் என்னிடம் வந்தார்கள் - லசந்த விக்கிரமதுங்கவின் இறுதி ஆசிரியத் தலையங்கம்:மொழிபெயர்ப்பு : ரஃபேல்By இனி • Jan 12th, 2009 • Category: அரசியல் - சமுகம்

(லசந்த விக்கிரமதுங்கவின் இறுதி ஆசிரியத் தலையங்கம். சண்டே லீடர், ஜனவரி 11 2009)

இலங்கையில், தங்கள் தொழிலின் நிமித்தமாக உயிரை விடும்படியான தேவை இராணுவத்தினரையும் பத்திரிகையாளரையும் தவிர வேறு எந்த தொழிலுக்கும் இல்லை.

சுயமான ஊடகங்கள் கடந்த சில ஆண்டுகளாக தாக்குதலுக்குள்ளாவது அதிகரித்து வருகிறது. இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் எரிக்கப்பட்டும் குண்டுவீசப்பட்டும் இழுத்துமூடப்பட்டும் மிரட்டப்பட்டும் வருகிறது. எண்ணிலடங்கா பத்திரிகையாளர் நெருக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, மிரட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இந்த அனைத்திலும் இருந்தது எனது பெருமையாக இருந்தது. தற்போது சிறப்பாக, கடைசி வகையும் அமைகிறது.

பத்திரிகைத்துறையில் பலஆண்டுகளாக இருந்து வருகின்றேன். உண்மையில் 2009 சண்டேலீடரின் 15 ஆவது ஆண்டு. இந்த காலகட்டத்தில் பல மாற்றங்கள் இலங்கையில் நிகழ்ந்துள்ளன. இதில் பெரும் பகுதி மோசமான மாற்றங்கள் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. எல்லையற்ற இரத்த வேட்கை பிடித்த தலைமைகளால் இரக்கமற்ற முறையில் நடத்தப்படும் ஓர் உள்நாட்டுப் போரின் நடுவில் நாமிருக்கிறோம். அது பயங்கரவாதிகளால் உருவாக்கப்பட்டாலும் அரசினால் உருவாக்கப்பட்ட்டாலும், பயங்கரவாதம், அன்றாட நடைமுறையாக மாறிவிட்டது. சுதந்திரத்தின் கரங்களை ஒடுக்குவதற்கு அரசு முதன்மையாக எடுத்திருக்கும் கருவியாக கொலை அமைந்துள்ளது. இப்போது பத்திரிகையாளர்கள், நாளை நீதிபதிகள். இதில் எவருக்கும் முன்னெப்போதையும்விட சிக்கல் அதிகமாயும் தப்பும் வாய்ப்பு குறைவாகவும் உள்ளது.

பிறகு ஏன் நாங்கள் இவற்றை மேற்கொள்ள வேண்டும்? நான் அடிக்கடி இது குறித்து ஆச்சரியப்படுவேன். நான் ஓர் கணவன் மற்றும் மூன்று அருமையான குழந்தைகளின் தந்தைதானே.

எனக்கும் எனது தொழிலை மேவிய பொறுப்புக்களும் கடப்பாடுகளும் இருக்கின்றன, அது பத்திரிகைத் துறையாயினும் சட்டமாயினும். இந்தளவு ஆபத்தை எதிர்கொள்வது பொருத்தப்பாடுடையதா? பலர் இது தேவையில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.

நண்பர்கள் என்னைச் சட்டத்துடன்மட்டும் நின்றுகொள்ளும்படி அறிவுறுத்தியிருக்கிறார்கள். அது பாதுகாப்பான சிறப்பான வாழக்கையைத் தரும் என்பது தெரிந்ததே. பிறர், இரண்டு பக்கமும் இருக்கும் அரசில் தலைவர்கள் உட்பட, பல வேளைகளில் அரசிலில் ஈடுபடத் தூண்டினார்கள். எனக்கு விரும்பிய அமைச்சினைக்கூடத் தருமளவிற்குச் சென்றார்கள்.

வெளிநாட்டு ராசதந்திரிகள், இலங்கையில் பத்திரிகையாளர் எதிர்கொள்ளும் ஆபத்தைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பான பயணத்தையும் அவர்கள் நாட்டில் தங்குவதற்கு உரிமையையும் வழங்குவதாகக் கூறினார்கள். எவையெல்லாம் என்னைச் சிக்கவைப்பதற்கு முன்னாலிருந்தனவோ அவை எவற்றிலும் நான் தேர்ந்தெடுத்துச் சிக்கிக் கொள்ளவில்லை.

உயர்பதவி, புகழ், பொருள், பாதுகாப்பு அனைத்துக்கும் மேலாக ஒரு அழைப்பு இருக்கிறது. அதுதான் மனச்சாட்சி.

சண்டே லீடர் ஓர் சர்ச்சைக்குரிய செய்தி ஏடாக இருக்கிறது, ஏனெனில் நாங்கள் பார்ப்பவற்றை நாங்கள் சொல்கிறோம். உன்னத ஆளாயிருப்பினும் கள்ளனாயிருப்பினும் கொலைகாரனாயிருப்பினும் நாங்கள் அந்தப் பெயரால் அழைக்கிறோம். நாங்கள் திரிபுச் சொற்களின் பின்னால் அவற்றை மறைப்பதில்லை. புலனாய்வு செய்து நாங்கள் அச்சிடும் கட்டுரைகள் ஆவண ஆதாரங்களுடன் உள்ளன.

இந்த மாதிரி ஆவணங்களைக் குடிமக்களுக்குரிய உந்துதலுடன் தங்களுக்கு இருக்கும் பெரும் ஆபத்துக்கு மத்தியிலும் தந்து உதவும் மக்களுக்கு நன்றியுடையோம். நாங்கள் ஊழலுக்கு மேல் ஊழல்களை அம்பலத்தில் கொண்டு வந்திருக்கிறோம். இவை கடந்த 15 ஆண்டுகளில் ஒரு தடைவகூட தவறானது என்று நிரூபிக்கப்படவுமில்லை சட்டத்தின் முன் தண்டனை பெறவும்; இல்லை.

சுதந்திர ஊடகம் மக்களுக்கு கண்ணாடியாகச் செயற்படுகிறது. மக்கள் இதன் மூலம் தங்களை ஒப்பனைகள் இன்றிப் பார்த்துக் கொள்ள முடியும். எங்களிலிருந்து நீங்கள் உங்கள் நாட்டின் அரசைப்பற்றி அறிந்து கொள்ளலாம். குறிப்பாக மக்களால் தங்கள் குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலத்தை தருவதற்காக தேர்வு செய்யப்பட்ட அரசின், அவற்றின் ஆட்சிமுறைகள் பற்றி அறிந்து கொள்ள முடியும். சிலவேளைகளில் இந்தக் கண்ணாடியில் நீங்கள் பார்க்கும் பிம்பம் ரசிக்கும்படி இருக்காது.

ஆனால் நீங்கள் தனிமையில் உங்கள் சாய்மணைக் கதிரைகளில் இருந்தபடி அவற்றைப் புரட்டுகையில் அந்தக் கண்ணாடியைப் பிடித்திருக்கும் பத்திரிகையாளர் தங்கள் முன்னிருக்கும் பெரிய ஆபத்துநிலையையும் பொருட்படுத்தாமல் வெளிப்படையாக நிற்கிறார். இதுதான் எங்கள் அழைப்பு. நாங்கள் அதைத் தவிர்க்க மாட்டோம்.

ஒவ்வொரு செய்தி ஏடும் தங்களுக்கான பார்வைக் கோணங்களை கொண்டவை. நாங்களும் அப்படியொரு கோணத்திலிருந்து பார்க்கிறாம் என்ற உண்மையை மறைக்கவில்லை. சிறிலங்காவை வெளிப்படையான - மதச்சார்பற்ற - சுதந்திரமான- மக்களாட்சியுடையதாகப் பார்ப்பதே எங்கள் நோக்கு. இந்த ஒவ்வொரு சொல்லையும் பற்றிச் சிந்தித்து பாருங்கள் . அவை சிறப்பான பொருளுடையவை. வெளிப்படையானது என்பது அரசு மக்களுக்கு திறந்ததாக நம்பிக்கைக்குரியதாகவும் அவர்களின் நம்பிக்கையை பாழடிக்காததாகவும் இருக்கவேண்டும் என்பதைக் குறிக்கிறது.

மதச்சார்பற்றது என்பது எங்களைப்போன்ற பல்பண்பாண்டு பல்லின சமூகத்தில் மதச்சார்பின்மைதான் நாங்கள் அனைவரும் ஒன்றுபடுவதற்கான தளத்தை வழங்கும் என்பதனால். சுதந்திரமானது என்பது நாங்கள் அனைத்து மனிதர்களும் வேறுபாடுகளுடன் படைக்கப்பட்டள்ளனர் என்பதை ஏற்றுக் கொள்ளுதலும் பிறரை நாம் அவர்கள் எப்படி யிருக்க வேண்டும் என்று நினைக்காமல் அவர்கள் அப்படியிருப்பதன்படியே ஏற்றுக் கொள்ளுதலுமாகும். மற்றும் மக்களாட்சி என்பது…சரி, ஏன் இது முதன்மையானது என்று விளக்கவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்களாயிருந்தா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதவாதிகளும் சித்துகள் செய்வார்கள். பத்திரிகையாளர்களும் சித்து செய்யலாம். அவரும் நமது தமிழ் இரத்தில் குளிர்காய்பவர்தான்.

இனம் அழிவதை நியாயப்படுத்தி எழுதுவேன் என்ற கொள்கைப்பிடிப்பா????

தயவு செய்து கையொப்பமிடுங்கள்

http://www.tamilsforobama.com/sign/usersign.html

சற்று மூளையை கசக்குங்கள்நான் என் இனம் அழிவதை நியாயப்படுத்தவில்லை

ஒரு பத்திரிகையாளன் இறக்க முன் தனக்கு இறப்பு நிச்சயம் என தெரிந்த பின் வெளியிட கூடியதாக எழுதி வைத்த கட்டுரையை பார்த்து அதில் தெரிந்த அவரின் துணீவு எனக்கு பிடித்தது

மற்றது நீங்கள் எனக்கு பாடம் எடுக்க வேண்டியதேவை இல்லை. கையொப்பம் இட லிங் தந்ததுக்கு நன்றிகள்.என்றறலும் நான் இந்த கையொப்பம் சேர்க்க தொடங்கிய நாளிலேயே கையெழுத்து செய்து விட்டேன் ^_^

  • கருத்துக்கள உறவுகள்

கேள்விக்கு பதில் எழுதுங்கள்

அல்லது விட்டுவிடுங்கள்

ஏதாவது என்றால் உடனே பாடம் எடுக்காதையுங்கோ என்பது எமது வழக்கமாகிவிட்டது

ஒற்றுமையே இன்று தேவை

கேள்விக்கு பதில் எழுதுங்கள்

அல்லது விட்டுவிடுங்கள்

ஏதாவது என்றால் உடனே பாடம் எடுக்காதையுங்கோ என்பது எமது வழக்கமாகிவிட்டது

ஒற்றுமையே இன்று தேவை

ஆமாம் நான் ஒற்றுமையாக செயல்படவில்லை செயல்படவும் மாட்டேன் நான் ஒரு தமிழினவிரோதி களத்தில தனிதலைப்பு தொடங்கி விவாதம் செய்யும் ^_^

வேணுமானால் வாக்கெடுப்பும் செய்யும் :wub:

ஆமாம் நான் ஒற்றுமையாக செயல்படவில்லை செயல்படவும் மாட்டேன் நான் ஒரு தமிழினவிரோதி களத்தில தனிதலைப்பு தொடங்கி விவாதம் செய்யும் ^_^

வேணுமானால் வாக்கெடுப்பும் செய்யும் :wub:

ஈழவன்

சிலர் , தான் மட்டுமே போராடுவதாக ஒரு எண்ணம். இதுவே நம் இன அழிவுக்கு பிரிவினையாகி நின்றது. எனவே மற்றவர்களுக்காக உணர்ச்சி வசப்பட வேண்டாம்.

ஒரு பத்திரிகையாளன் : பொதுப்படையாக அநீதிகளை எதிர்த்து நின்று உயிர் துறந்துள்ளார். அது தெரியாதோருக்கு 0 தான். தமிழர் சார்பில் அரசுக்கு எதிராக பல விடயங்கைள எழுதியுள்ளார். நம்மையும் சாடியுள்ளார். ஆனால் அரச பயங்கரவாதத்தை உலகுக்கு காட்டியுள்ளார். நமக்காக குரல் கொடுப்போர் பல இனங்களில் இருக்கிறார்கள். நமக்கு பலரோடு அந்த சிலரைத் தெரிவதில்லை. ஒபாவுக்கான தமிழர் கையெழுத்து வேட்டை தொடங்கி பல காலமாகிவிட்டது. சிலருக்கு நேற்று தெரிந்து தாம் ஏதோ இதை செய்வது போல ஒரு வேகம்.

நமக்காக , நம் இனத்துக்காக பணி செய்வதென்றால்

பொறுப்பு-பொறுமை-தியாகம்-பணிவு தேவை.

நான் என்ற அகங்காரம் வேண்டாம்.

நம்மை நாமே அழித்துக் கொள்வோம்.

Edited by Thalaivan

ஒருவர் இளமை காலத்தை இவர்களுக்காக செலவிட்டு போராட்டம் நடத்தி கொண்டிருக்கின்றார் ஆனால் இந்த பொறம் போக்குகள் தெருநாய் சண்டை பிடிப்பதிலே ஒவ்வொரு தலைப்பின் பின்னும் குறியாய் இருக்குதுகள்.அவருடைய கடைசி காலத்தையாவது சந்தோசமாக இருக்க விடுவீர்களா அல்லது ????

அதற்கு கருத்து எழுதியிருப்பொருக்கு !

இன்று நாம் நிற்கின்ற நிலையில் இது தேவை தானா ? அவன் ஒரு சிங்களவனை சிங்களவனே படு பொலை செய்ததை இங்கு கொண்டு வந்து இணைச்சு அதற்கு 18 பேர் கருத்த எழுதுங்கோ !!! ஏன் என்றால் எமது சிவராமும் நடசேனும் கொல்லபட்ட பொழுது எமக்கா சிங்களவர்கள் அழுது கவலைப்பட்டார்கள் தானே ??? சிங்களவன் தனக்கள் படுகொலை செய்து சாகிறான் என்றால் அதானல் எமக்கு என்ன நன்மை வந்தது அல்லது தீமை வந்தது அல்லது அதை கதைப்பiதால் எமக்கு என்ன லாபம் வந்துவிட்டது.??? ஏன் அநியாமாக எவனோ ஒரு சிங்களவனுக்காக தேவையற்ற விதத்தில் நேரத்தை செலவு செய்கீர்கள் ???

இதுவே எமது குழந்தைகள் படுகொலை செய்து வருகின்ற செய்திகை சில வேளைகளில் பார்பவர்களின் எண்ணிக்கையே குறைவு.... யோசித்துப் பாருங்கள்துவையில்லதா விடயங்களில் நாம் சில வழிக்கின்ற நேரத்தை எமது மக்களிற்காக செலவு செ;சயக் கூடாதா ???

இனிமேலாவமு சிங்களவனனை படுகொலை செய்யததிற்கு யாழில் தேவையில்லதாமல் அதனை இணைத்து விணடிக்காதீர்கள்.

இந்தியா வேண்டாம் என்றோம் : இன்று நேசக் கரம் நீட்டி நிற்கிறோம்

அதுவோ கண்டு கொள்ளாமல் கடுமையாக இருக்கிறது.

அந்த அரசு வேறு : நமக்காக கண்ணீர்விடும் போராடும் உண்ணாவிரதம் இருக்கும் இந்திய தமிழர் வேறு.

டில்லி அரசு தமிழனை கொல்ல அனைத்தும் செய்கிறது.

தமிழகம் எமக்காக கதறுகிறது.

இதை நாம் வேறுபடுத்தும் விவேகம் இருக்க வேண்டும்.

உலகம் என்ன அறிவுரை எமக்கு சொல்வதென்று கடுப்பானோம்.

இன்று யுத்தத்தை நிறுத்துங்கள் என்று உலக நாடுகளிடம் மன்றாடுகிறோம். முறையிடுகிறோம்.

அவர்கள் இன்று பாராமுகத்தோடு நிற்கிறார்கள்.

சிறீலங்கா அரசு எம்மை படுகொலை செய்யும் இந்நேரமும்

சில சிங்களவர்கள் அறிவு ஜீவிகள் எமக்காக குரல் கொடுக்கிறார்கள்

மகிந்த ஊடக படுகொலைகள் மூலமும் வெருட்டல்கள் மூலமும் உலக கண்களுக்கு எதுவும் வெளிவராமல் அமுக்க பார்க்கிறது.

எமக்காக பேசும் ஒரு சிலர் குறித்து நாம் ஒன்றுமே பேசாவிட்டால் இனியும் எவரும் பேசமாட்டார்கள்.

ஒரு கிராமத்தவன் மற்றொரு கிராமத்தவனை தாக்கினால்

வழிப்போக்காக வரும் தாக்கிய மற்றொரு அப்பாவி கிராமத்தவனைத் தாக்கி நாம் பழி தீர்த்துக் கொண்டோம்.

அதில் என்ன நியாயம் இருக்கிறது?

இதுபோன்ற நடத்தைகளால்

நாம் நம்மாலேயே ஒருநாள் வெறுக்கப்படுவோம்.

வெற்றிக் கழிப்பில் வெறியானோம்.

வீழ்சியிலாவது விவேகமாக யோசிக்கலாமே?

அது ஒரு விடிவுக்காய் வழி வகுக்குமே?

நாங்கள் எவருக்கும் எதிரிகளல்ல. எமது உரிமைகளை தா என்றே போராடுகிறோம்.

பல இணையங்கள் அவற்றை செய்யவில்லை.

தெரு சண்டைகளையே நடத்துகின்றன.

எம் இனத்தவரை இணைப்பதை விடுத்து இழக்கவே செய்துள்ளன.

முழு புளுகு மூட்டைகளை அவிழ்த்து மக்களை ஏமாத்திய பாவம் பல இணைய தளங்களை சாரும்.

அவர்களுக்கு மன்னிப்பே இருக்காது.

நாங்கள் வெல்வதோ தோற்பதோ பெரிய விடயமல்ல.

அங்கு நம்பிக்கையோடு இருந்தவன் நடுத்தெருவில் நாதியற்றுக் கிடக்கிறான்.

அவன் இனி எவரையும் நம்ப மாட்டான்.

மனிதன் வாழ்வதே உயிர் வாழும் ஆசையில்தானே தவிர உலகாழும் பேராசையிலல்ல.

இணையத்தில் யுத்தத்தை நிறுத்து என்றால் யாரும் யுத்தத்தை நிறுத்தப் போவதில்லை.

தமிழ் தமிழ் என்று தமிழ் வாழப் போவதுமில்லை சாகப் போவதுமில்லை

தமிழன் இருந்தால்தானே மொழி பேச?

உலகம் முழுக்க பரந்து வாழும் தமிழர்கள் அதுவும் அறிவு ஜீவிகள் வாய் மூடி நிற்பது ஏன்?

அவர்களது பேச்சுகளை கருத்துகளை மதிப்பதை விட

அடிக்கு அடி : குத்துக்கு குத்து : கொலைக்கு கொலை என

பணம் வைத்து விளையாடும் கோழிச் சண்டை போல தமிழர் போராட்டத்தை ஆக்கினோம்.

பந்தாட்ட வெற்றியில் குதூகலித்தோம். அதையே இன்னும் எதிர்பார்க்கிறோம்.

வாய்ப்புகளும் வெற்றிகளும் அதிஸ்டமாக எப்போதும் இருக்காது.

காற்றுள்ள போது தூற்றிக் கொள்ள வேண்டும்.

ஆற்றில் விழுபவனுக்கு புல்லும் கயிறாகவே தெரியும்.

அதையாவது பிடித்து மேலே முயற்சிப்பது அவனது நம்பிக்கை.

அதையும் பிடிக்க தவறிவிட்டோம்?

அந்த விவேகமும் : உலக ஆதரவும் அற்றுப் போய் விட்டதை நாம் உணருகிறோம்.

எமக்கு எல்லாமே தெரியும் என்றோம்.

வெற்றிக்கழிப்பில் திளைத்த ஒருவன் தோல்வியில் துவழத் தொடங்கினால் அனைத்தையும் வெறுத்து வீசி எறிவான்.

தன்னையே அழித்துக் கொள்வான்.

சிந்திக்கக் கூடியவன் அதன் தவறை உணர்ந்து தன்னை மாற்றிக் கொண்டு

அடுத்த வெற்றிக்கான பணிகளுக்காக சிந்திப்பான்.

சிறு துரும்பும் பல்லுக்குத்த உதவும்.

இப்போதும் காலம் கடந்து விடவில்லை.

எமக்கு ஏனைய இனங்களும் உதவ வேண்டும்.

எமது உரிமைகள் கொடுக்கப்பட வேண்டும் என சொல்ல வேண்டும்

அதற்கான கருத்துகள் சிந்தனைகள் இனியாவது தொடர வேண்டும்.......

நீங்கள் கூற வருகின்ற விடயங்களில் நானும் ஓத்துக் கொள்கின்றேன். கடந்த காலங்களில் எமது தரப்பக்கியில் இருந்த வெளிவந்த சில விடயங்கள் எம்மை ஒரு போதை நிலைக்கு தள்ளி வைத்திருந்ததை . ஆனாலும் நீங்கள் கூறிப்பிட்டதைப் போல இன்று எமக்க துன்பம் வன்னிக்கள் வந்தவுடன் தான் நாம் இந்தியாவின் நண்பர்கள் நாம் என்று கோசம் இடுவது பிழை தான் 2002 பேச்சு வாhத்தை ஆரம்பமாகிய நிலையில் ஈரந்தே செய்தழருக்க வேண்டிய வேலைகளை நாம் இன்று செய்ய அரம்பித்திரப்பது தான் வேதனையான விடயம் கூட .....

உண்மையில் சொல்லப் போனால் நாம் எல்லோரையும் அரவணைத்திருக்க வேண்டும் நசரி தான் ஆனால் நான் இங்கு குறிப்டபிட்டது தனியே வெறும் லசந்த என்பவரைப் பற்றியே தவிர இந்தியihயோ அல்லது எனைய நாடுகளையோ அல்ல அதாவது எமது தரப்பில் இருந்து தான் சமத்தவம் நல்லெண்ணம் மனிதாயிமானம் பற்டறி கதைக்கப்டுகின்றதே தவிர சிங்களத் தரப்பகிள்டமிந்து வந்ததிற்கான எந்த அடையாளங்ளும் இல்லை என்றே கூற வேண்டும்....அத்தடன் உண்மையிலேயே லசந்த என்பவர் " உலகிலேயே மிக மிக படு மோசமான கொலைகாரஇயக்கத்தை இந்த நாட்டில் இரந்து அழித்டதேயாக வேண்டம் "என்ற தனது கருத்தகளை கறிப்பட்டுவந்ததை பல மறந்த விடுவது வேதனைக்கரியத ஆனால் ஏதோ அவர் எமக்கா தான் குரல் கொடத்தார் அதனால் தான் மகிந்தவினால் படுகொலை செய்யப்படடார் போன்ற புலம்பவது என் என்று புரியவில்லை. அத்தடன் " உலகிலேயே பயங்கரவாத இயக்கமான புலிகளிற்கு உதவி செய்வர்களும் பயங்கரவாதிகைளை கையாள்வதைப் போல கையாள வேண்டும் " என்ற கொள்ளை உடையவர். ஆகவே இவரிற்கா இங்கு புலம்பவது சரியாக படவில்லை .....என்னைப் பொறுத்தவரையில்இந்;த விடயத்தில் மகிந்தவை நாம் பாராட்டியாக வேண்டும். .......

மகிந்தவை நீங்கள் பாராட்டுவதென்ன கழுத்தில் ஏற்றி கூத்தும் ஆடுவீர்கள். அதை செய்ய சுயநலவாதிகள் பலர் ரெடி. நான் ரெடியில்லை. நன்றி வணக்கம்.

இது மகிந்தவின் தம்பி கோட்டாபய சொன்னது:-

2005ஆம் ஆண்டு ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டிராவிட்

தயவு செய்து உங்கள் கவனங்களை ஈழத்து தமிழ்மக்களின் விடிவு எதிர்காலத்தில் கவனம் செலுத்தி உலகத்திற்கு நவீன கிட்லரின் இன அழிப்பை தொடர்ந்து ஆதாரங்களுடன் தெரிவித்து வாருங்கள்...

எம்மக்கள் இக்கட்டான நிலையில் நீங்கள் என்னவென்றால் ...... எப்போதும் குறுகிய சிந்தனைகளை விட்டு பரந்த மனப்பாண்மையுடன் சிந்தித்து மற்றவர்கள் செய்யும் தவறுகளை புண்படுத்தமால், நாகரிகமாக எழுதபேச கற்றல் மிக முக்கியம்... தமிழரினில் ஒற்றுமையின்மை வளர்வதற்கு காரணங்களில் ஒன்று வார்த்தை பிரயோகங்கள், முகத்தில் அடித்தமாதிரி பதில்கள்....இப்படியே அடிக்கு கொண்டு போகலாம்.. மற்றைய நாகரிமான இனங்களை அவதானியுங்கள் எப்படி அவர்கள் தங்கள் இனங்களிடையே பேசுகிறார்கள், பிழைவிடும் போது மன்னிப்பு கேட்கிறார்கள்...மற்றைய மக்களுடன் எப்படி பழகுகிறார்கள்...

உலகம் இன்னும் அழியவில்லை, நாகரிகம் இன்னும் அழியவில்லை.. எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு..மற்றவர்களுக்கு என்னால் பாதிக்கப்படாதவரை....ஒவ்வொருவர

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.