Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாணவர் எழுச்சி

பிரித்தானிய மாணவர் எழுச்சி 14 members have voted

  1. 1. பிரித்தானிய மாணவர்களின் மேற்குறிப்பிட்ட போராட்ட முறை சரியா?

    • ஆம்
      13
    • இல்லை
      1
    • தெரியவில்லை
      0

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

31.01.2009அன்று பிரித்தானியாவில் நடைபெற்ற வரலாறு காணாத தமிழர்களின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்;கள் புரட்சிகரமாக காவல்துறையினரின் தடுப்புவேலிகளை தாண்டி ஊர்வலப் பாதையில் அல்லாத Wesminster Bridge க்கு ஓடிச் சென்று அப்பாலத்தின் போக்குவரத்தை கிட்டத்தட்ட நான்கரை மணிநேரம் இடைமறித்து கோரிக்கைகளை வைத்தார்கள்.

uk3101.jpg

ஆரம்பத்தில் சிறிய எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே தடைகளை உடைத்துக் கொண்டு பாலத்தை நோக்கி ஓடிச்சென்று மூன்று வரிகளாக கைகளைக்கோர்த்துக் கொண்டு வீதியின் குறுக்கே வாகனங்களைப் பொருட்படுத்தாது படுத்துக் கிடந்தனர். பின்னர் அங்கே குவிந்த காவல்படையின் கலகமடக்கும் பிரிவினர் அங்கு குவிந்து மாணவர்கள் மீது தடியடிப்பிரயோகம் செய்த போதும் மாணவர்கள் அதனைப் பொருட்படுத்தாது வீதியிலேயே "We Want Tamil Eelam" "Stop Genocide of Tamils", "Our Hero Muthukumar" மற்றும் "Stop killing Tamil people" என்ற வாசகங்களை ஓங்கி ஒலித்துக்கொண்டபடி கிடந்தனர். பின்னர் மாணவர்களின் உறுதியைக்கண்ட காவல்துறையினர் மாணவர்களை ஒவ்வொருவராகத்தூக்கி வெளியேற்ற முயன்றபோதும் மாணவர்கள் வீதியின் ஓரமாக எல்லோரும் ஒற்றுமையாக குவிந்து கிடந்தனா.; அதனை தொடர்ந்து மேலும் அதிக காவல்;துறையினர் அங்கே குவிந்து பாலத்தின் ஒருபக்க போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

uk3102.jpg

விட்டுக்கொடுக்காத மாணவர்கள் தொடர்ந்தும் வீதியின் மறுபக்கத்தில் கிடந்தபடி "We Want Tamil Eelam" மற்றும் மேற்குறிப்பிட்ட வாசகங்களை ஓங்கி ஒலித்தவாறு தொடர்ந்தனர். இதனைத்தடுக்கும் நோக்கத்தில் காவல்துறையினர் ஒரு மாணவனை கைது செய்து காவல்துறை வாகனத்தில் வைத்து தாக்கினர். அதனை படம் பிடித்த Gaza மாணவர்களின் படப்பிடிப்பு கருவிகளை காவல்துறையினர் பறித்து எறிந்தனர். அம்மாணவனை கைது செய்த காவல்துறையினர் மாணவர்களின் கோரிக்கையை கேவலப்படுத்தும் வகையில் கேலி செய்தனர்.

பின்னர் காவல்துறையினர் மாணவர்கள் மீது தடியடிப்பிரயோகம் செய்ததை கண்ட மக்கள் பெருந்திரளாக மீண்டும் ஊர்வலத்தில் இருந்து தடைகளை உடைத்துக்கொண்டு மாணவர்களுடன் இணைந்து பாலத்தை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தனர். மக்களின் பலத்தைக் கண்ட காவல்துறையினர்; பாலத்தின் போக்குவரத்தை திசைதிருப்பி விட்டிருந்தனர். உலகப்புகழ் Wesminster பாலம் முழுவதும் மக்கள் மாணவர்களுக்கு ஆதரவாக குளிரையும் பொருட்படுத்தாது அமர்ந்திருந்தனர்.

uk3103.jpg

மாணவர்களின் போராட்டத்தை SKY News வந்து பதிவு செய்தது. மாணவர்கள் BBC யும் அங்கு வந்து பதிவு செய்யவேண்டும் என்றும் மற்றும் பிரித்தானிய பிரதமர் Gordon Brown தங்களுடன் வந்து தங்கள் கோரிக்கைகளை கேட்க வேண்டும் என்றும் கோரி இருந்தனர். பின்னர் ஊர்வலத்தில் பங்கு கொண்ட மக்கள் கலைந்து சென்ற பின்னர் பாலத்தில் இருந்த மக்களின் எண்ணிக்கை போன்று ஒன்றரை மடங்கு காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டு மக்களிடையே இறங்கி அடிக்கப்போவதாகவும் கண்ணீர்ப்புகை பாவிக்கப்போவதாக மிரட்டியும் மாணவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

uk3104.jpg

இதில் பங்கெடுத்த மாணவர்கள் சிலரிடம் வினவிய போது:

கேள்வி: மிகப்பெரிய ஊர்வலம் அனுமதி பெறப்பட்டு சீராக நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போது இவ்வாறான ஒரு குழப்பம் தேவையா என்று மக்கள் கருதுகின்றார்கள் அதைப்பற்றி உங்கள் கருத்து?

பதில்: மாணவன் ஐங்கரன் பொறியியல் 3ம் ஆண்டு: "நாங்கள் இது போல அமைதியாக ஏற்கனவே நிறையவே செய்திருக்கிறம் ஆயிரம் ஆயிரமாக கூடி எங்கட மக்களின் துன்பங்களை எடுத்து காட்டி இருக்கிறம் ஆனா யாருமே அதை கண்டு கொண்டது போல எங்களுக்கு தெரியேல்ல. பொலிஸ் கட்டிய வேலிக்குள்ள மந்தைகள் போல தலையை குனிஞ்சு கொண்டு போய் பிரித்தானியா பொலிஸ் கிட்ட நல்ல பெயர் வாங்கிக் கொண்டு வரவேண்டும் என்று நினச்சா அங்க குண்டுகள் எப்ப வரும் என்று பார்த்துக் கொண்டு இருக்கிற எங்கட மக்களை யாரும் காப்பாத்த முடியாது.

uk3105.jpg

கேள்வி: நீங்கள் செய்கின்றது உங்களிற்கு வன்முறையாக தோன்றவில்லையா?

பதில்: மாணவன் பாலா கணக்கியல் 1ம் ஆண்டு: "எங்கட மக்களை கொலைக்களத்தில வச்சிருக்குது இலங்கை அரசாங்கம், ஆனா உலகம் அத கணக்கில எடுக்கிற மாதிரி தெரியெல்ல…பிரித்தானிய மக்கள், ஊடகங்கள், அரசாங்த்தின்ர கவனத்த பெறுறதுக்கு தான் இப்பிடி செய்தனாங்கள்….இது வன்முறை இல்;லை… பொலிஸ், எங்கட தலையில இரும்புத்தடியால அடிக்க கையய கட்டிக் கொண்டு அடி வேண்டினம்…., எங்கட மக்கள் தலையில குண்டே விழுகிற போது எங்கட தலையில அடி தானே விழுகுது, வாங்கிறதுக்கு நாங்க தாயார். எல்லா இடத்திலையும் அடி வாங்கிறவங்களை வன்முறை செய்யுறதா தான் சொல்லுறாங்கள்."

uk3106.jpg

இறுதியாக Leicester East Keith Vaz MP பாலத்திற்கு வருகை தந்து மாணவர்களுடைய கோரிக்கைகளை செவிமடுத்தார்.

கோரிக்கைகள்;:

1) வன்னியில் உடனடியாக நிரந்தரப் போர் நிறுத்தம் பிரித்தானியா உட்பட சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

2) யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அல்லலுறும் மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும்

3) 2004ம் ஆண்டில் இலங்கையின் வடக்கு, கிழக்கில் வாழும் மக்கள் ஜனநாயக ரீதியாக எடுத்த முடிவை இலங்கை அரசும் சர்வதேச சமூகமும் கவனத்தில் கொண்டு தமிழ் மக்களின் தாயகமான தமிழீழத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும்.

uk3107.jpg

இதனை செவிமடுத்த Leicester East Keith Vaz MP மாணவர்களில் இருந்து ஐந்து பிரதிநிதிகளை பெப்ரவரி 7ம் திகதி பாராளுமன்றத்துக்கு அழைத்துச் சென்று விவாதிக்க உறுதியளித்துள்ளார்.

uk3108.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.