Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் நலன் கொண்ட அரசாங்கம் இது என்று சொல்பவர்களுக்காகப் பரிதாபப்படுவதைத் தவிர ஒன்றும் செய்வதற்கில்லை:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் நலன் கொண்ட அரசாங்கம் இது என்று சொல்பவர்களுக்காகப் பரிதாபப்படுவதைத் தவிர ஒன்றும் செய்வதற்கில்லை:

tissainayagamyasikaran1.jpg

சரியாக ஒரு வருடத்திற்கு முன்னர் 2008ஆம் ஆண்டு மார்ச் 7ம் திகதி. அவுட்றீச் இணையத்தளத்தின் ஆசிரியரான ஜே.எஸ்.திசநாயகம் கொழும்பிலுள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்குச் செல்கிறார். அதற்கு முன்தினமான ஆறாம் திகதி இரவு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்த வி.ஜசிகரனையும் அவரது துணைவியார் வளர்மதியையும் பார்வையிடுவதற்காக. (வி.ஜசிகரன் அவுட்றீச் இணையத் தளத்தின் தமிழ்ப் பகுதியின் ஆசிரியராகவும் குவாலிற்றி கிராபிக்ஸ் என்கிற அச்சகத்தின் உரிமையாளராகவும் இருந்தவர். வளர்மதி மகாராஜா நிறுவனத்தின் முகாமைத்துவப் பயிலுனராக பணிபுரிந்து வந்தவர்.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்குப் பார்வையிடச் சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அவருடைய ஊடக நண்பர்கள் அவருடைய கைத்தொலைபேசிக்கு அழைத்துப் பார்த்தனர். அவரது கைத்தொலைபேசி எடுப்பாரின்றி ஒலித்துக் கொண்டே இருந்தது.

இறுதியாகத்தான் தெரிய வந்தது ஜசிகரனையும் அவரது துணைவி வளர்மதியையும்; பார்வையிடச் சென்ற திசநாயகத்தையும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் தடுத்து வைத்துள்ளனர் என்று.

மார்ச் 7ஆம் திகதி தடுத்து வைக்கப்பட்ட திசநாயகம் ஓகஸ்ட் 24ஆம் திகதி வரை விசாரணை என்ற பெயரில் காரணம் எதுவுமின்றியே தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இதற்கிடையில் இலங்கையில் உள்ள ஊடக அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் தொழிற்சங்கங்கள் என்பன கைது செய்யப்பட்டவர்களை காரணமின்றித் தடுத்து வைத்திருப்பது தவறு என்றும் அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரி சுதந்திர ஊடக இயக்கத்தின் தலைமையில் தொடர் போராட்டங்களை நடாத்தி வந்தன. சர்வதேச ஊடக அமைப்புக்களும் அவர்களுடைய விடுலையைக் கோரி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்தன.

எனினும் ஜசிகரன் மற்றும் திசநாயகத்திற்கு புலிகளுடைய உளவுப் பிரிவினருடன் தொடர்பு எனவும் அவர்கள் பலமுறை வன்னி சென்று புலிகளின் தலைவர்களைச் சந்தித்து வந்ததாகவும் அரச சார்பு ஊடகங்களுடாகப் பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் முடுக்கி விட்டது இலங்கை அரசாங்கம்.

ஆனால் பிரச்சாரம் என்ற அளவுக்குமேல் அத்தகைய புனைவுகளால் எதுவும் ஆகவில்லை. விசாரணை என்ற பெயரில் வழக்குத் திகதி;கள் பின்தள்ளப்பட்டுக் கொண்டே வந்தன.

ஐந்து மாதத்திற்கு மேலாக எவ்வித குற்றச்சாட்டுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இக்காலப்பகுதியுள் அவருடை குடும்பத்தவர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்போ அவருடைய சட்டத்தரணியைச் சந்திப்பதற்கான வாய்ப்போ அவருடைய உடல்நலக்குறைவுக்கு மருத்துவரைச் சந்திப்பதற்கான வாய்ப்போ சீராக ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.

இறுதியாக அவருடைய சட்டத்தரணி திசநாயகம் சட்டத்திற்குப் புறம்பாகத் தடுத்து வைக்கப்பட்டமை சித்திரவதை இனப்பாரபட்சம் சமனான சட்டப்பாதுகாப்பு மறுக்கப்பட்டமை ஆகிய அடிப்படைகளின் மீது அடிப்படை உரிமை மீறல் வழக்கைத் தொடர்ந்தார். எனினும் அது நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து உள்நாட்டு சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வந்தது. இனியும் காரணமின்றி தடுத்து வைத்திருப்பது சாத்தியமில்லை என்று உணர்ந்து கொண்ட அரசு அவசர அவசரமாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இம் மூவர் மீதும் வழக்குத் தாக்கல் செய்தது.

அதுவரை காலமும் புலிகளின் உளவுப்பிரிவுடன் தொடர்பு புலிகளின் தலைவர்களை வன்னி சென்று சந்தித்திருக்கிறார்கள் புலிகளிடம் இவர்கள் பணம் வாங்கியிருக்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்து வந்த அரசாங்கம் அவற்றை விடுத்து வேறு காரணங்களை முன்வைத்தது.

2006‐ 2007 காலப்பகுதியில் திசநாயகம் நோர்த் ஸ்டன் மன்த்லி என்றொரு 40 பக்க சஞ்சிகையை மூன்று மாத காலத்திகொரு முறை வெளியிட்டு வந்தார். இது சிவராமுடன் இணைந்து திசநாயகம் நோர்த் ஸ்டன் ஹெரால்ட் என்ற பத்திரிகைளை வெளியிட்டு அது நின்ற பிற்பாடு சிவராமும் படுகொலை செய்யப்பட்டதற்கும் பின்னர் திசநாயகத்தால் தொடங்கப்பட்டது.

அவுட்றீச் இணையத்தளத்தை ஆரம்பித்ததன் பின்னர் அதுவும் நின்று போய் விட்டது. அந்தச் சஞ்சிகையை எழுதியது அச்சிட்டது வெளியிட்டது விநியோகித்தது என்பதன் பேரில் இரண்டு குற்றச்சாட்டுக்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழும் அவசரசாலச்சட்டத்தின் கீழ் இன்னொரு குற்றச்சாட்டுமாக மூன்று குற்றச்சாட்டுக்கள் இம் மூவர் மீதும் சுமத்தப்பட்டன.

இதற்கு அடிப்படையாக அவர் 2006இல் நோர்த் ஸ்டன் மன்த்லியில் எழுதிய இரண்டு கட்டுரைகள் ஆதாரமாக்கப்பட்டன. அவற்றில் அரசாங்கத்தின் இராணுவமயப்படுத்தும் பிரச்சாரத்தை விமர்சித்ததோடு அது பொதுமக்களிடம் எத்ததகைய தாக்கத்தை விளைவிக்கும் என்று திசநாயகம் வெளிப்படுத்தியிருந்தார்.

இலங்கையில்; பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதலாது ஊடகவியலாளர் திசநாயகம் என்பது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 17ஆம் திகதி உடனடியாக மகசீன் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். தமிழ்க் கைதிகளுக்கெதிரான தாக்குதலுக்குப் பெயர் பெற்றது இந்த மகசின் சிறைச்சாலை. அதேநேரம் அவர் உடல்ரீதியான தாக்குதலுக்கு ஆளானதான மருத்துவ அறிக்கைகள் தெரிவித்திருந்தன.

ஒரு வருடத்திற்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள திசநாயகம் விடுதலை செய்யப்பட வேண்டும் என உலகின் முன்னணி ஊடக மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

அனைத்துலக மன்னிப்புச்சபை (AI) ஆர்ட்டிக்கிள் 19 (Article 19) எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு (RSF) ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் கூட்டமைப்பு (CPJ) அனைத்துலக ஊடக சம்மேளனம் (IFJ) சுதந்திரமான குரல்கள் ( Free Voice) சர்வதேச ஊடக ஆதரவு அமைப்பு (IMS) சர்வதேச பத்திரிகை நிறுவகம் (VAN) செய்திப்பத்திரிகைகளின் உலகக் கூட்டமைப்பு (IPI) ஆகிய 9 அமைப்புக்களின் பிரதிநிதிகள் நேற்று வெள்ளிக்கிழமை இலங்கை அரசிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். எனினும் அரச தரப்பில் இருந்து இதுவரை எந்தவித பதிலும் வழங்கப்படவில்லை.

திசநாயகமும் ஜசிதரன் மற்றும் வளர்மதி ஆகியோர் கைது செய்யப்பட்டு இந்த ஒரு வருட காலப்பகுதியில் ஊடகத்துறை மீதான அச்சுறுத்தல் அதிகளவில் அதிகரித்து வந்திருக்கிறது.

ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பின் அறிக்கையின்படி மகிந்த ராஜபக்ச பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் இருந்த காலப்பகுதியுள் எட்டு ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவற்றைத் திட்டமிட்ட படுகொலைகளாகவே அது கருதுகிறது.

இப்படுகொலைகள் குறித்து எந்தவிதமான விசாரணைகளும் நடைபெறவில்லை. குற்றவாளிகள் இனம் காணப்படவில்லை. கைது செய்யப்படவில்லை. தண்டிக்கப்படவில்லை. போர்ப்பிராந்தியத்தில் துப்பாக்கிச் சூட்டினுள் அகப்பட்டோ விபத்தாலோ ஊடகவியலாளர்கள் படுகொலைக்காளாவது போலல்லாமல் இவை யாவும் முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளன என்கிறார் ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பின் பிரதிநிதி றொபேர்ட் பொப்ஸ் டைற்ஸ்.

ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டோர் ‐ 11

சுப்ரமணியம் சுகிர்தராஜா (24.01.2007) ‐ சுடர் ஒளி திருமலைச் செய்தியாளர்

விசாரணை நிலை: காவற்துறையினர் விபரம் தர மறுத்து விட்டனர்.

ஊகம்: விசாரணை முடக்கப்பட்டுள்ளது.

சுபாஸ் சந்திரபோஸ் (16.04.2007) ஆசிரியர் நிலம் வவுனியா.

விசாரணை நிலை: காவற்துறையினர் விபரம் தர மறுத்து விட்டனர்.

ஊகம்: விசாரணை முடக்கப்பட்டுள்ளது.

சுரேஸ்குமார் ரஞ்சித்குமார் (03.05.2007) உதயன் யாழ்ப்பாணம்

விசாரணை நிலை: காவற்துறையினர் விபரம் தர மறுத்து விட்டனர்.

ஊகம்: விசாரணை முடக்கப்பட்டுள்ளது.

லக்மால் டி சில்வா (02.07.2007) பொரலஸ்கமுவவில் வைத்துக் கடத்தப்பட்டவர் 3 கி.மீற்றருக்கு அப்பால் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

விசாரணை நிலை: காவற்துறையினர விபரம் தர மறுத்து விட்டனர்.

ஊகம்: விசாரணை முடக்கப்பட்டுள்ளது.

மரியதாஸ் மனோஜன் ராஜ் (01.08.2007) பத்திரிகை விற்பனையாளர் யாழ்ப்பாணத்திற்கு வரும்வழியில் கண்ணிவெடியில் கொல்லப்பட்டார்.

விசாரணை நிலை: காவற்துறையினர் விபரம் தர மறுத்து விட்டனர்.

ஊகம்: விசாரணை முடக்கப்பட்டுள்ளது.

இதற்குப் புறம்பாக இந்த இடைப்பட்ட காலத்தில் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் பட்டியல் மிக நீளமானது. கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் பட்டியலும் அதே போன்றதே. சில உதாரணங்கள் இவை.

கே.குமாரதாஸ் உதயன் யாழ்ப்பாணம் 23.06.2007

ஆர்தர் வாமனன் சண்டே லீடர் மவுண்லவனியா 24.10.2007

அசோக் பெர்ணாண்டோ சண்டே லீடர் கொழும்பு 28.11.2007

கெமுனு அமரசிங்க ஏ.பி கொழும்பு 05 12.02.2008

வே.ஜசிகரன் அவுட்றீச் கொழும்பு 06.03.2008

வளர்மதி மகாராஜா கொழும்பு 06.03.2008

ஜே.எஸ்.திசநாயகம் அவுட்றீச் கொழும்பு 07.03.2008

சிவகுமார் எப்.எம்.எம். கொழும்பு 08.03.2008

அலி எக்ரம் (இந்தியா) காலி 30.07.2008

நா. கென்யூட்சன் ஐரிஎன் தெகிவளை 26.08.2008

பின்சிறி பெரேரா தெரண தெகிவளை 30.11.2008

ஏ.ஆர்.வாமலோசனன் வெற்றிஎப்.எம். கொழும்பு 10.11.2008

என்.வித்தியாதரன் உதயன் கல்கிசை 26.02.2009

இப்போதைய அதன் இறுதி இலக்கு ஊடகவியலாளர் வித்தியாதரன்.

கடந்த 26ஆம் திகதி கல்கிசையிலுள்ள மகிந்த மலர்ச்சாலைக்கு அவரது உறவினர் ஒருவரது மரணச்சடங்கிற்குச் சென்றிருந்தார் வித்தியாதரன். காலை 9.45 மணியளவில் அங்கு வெள்ளைவான் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து காவற்துறை சீருடையுடன் இறங்கிய மூவர் நேரே அந்த மலர்ச்சாலையுள் வித்தியாதரன் இருந்த இடத்திற்குச் சென்று வித்தயாதரனின் கையைப்பிடித்து இழுத்தனர்.

அவர் எங்கே என்று கேட்கவும் தாம் தெகிவளை காவற்துறையில் இருந்து வந்துள்ளதாகவும் விசாரணைக்கு வருமாறும் அவரை இழுத்தனர்.

உடனே அங்கிருந்த உதயன் சுடரொளி பத்திரிகைகளின் பணிப்பாளர் சரவணபவான் வித்தியாதரனை மலர்ச்சாலையின் உட்புறமாக இழுத்துச் செல்ல முயன்றார். உடனே சிவில் உடை தரித்த மேலும் மூவர் அந்த வெள்ளiவானிலிருந்து இறங்கி வந்து வித்தியாதரனை வாகனத்தில் தள்ளினர்.

வான் புறப்பட்டு தெகிவளை காவற்துறை நிலையத்திற்குப் போகாமல் அதற்கு எதிர்ப்புறமாகச் சென்றது.

வானுள் தள்ளிய வித்தியாதரனை வானுள் இருந்தவர்கள் தாக்கியுள்ளார்கள். வானின் பின்புற இருக்கைகள் உயர்த்தப்பட்டிருந்தது. இருக்கைகளுக்குக் கீழே தள்ளப்பட்டேன். சில நிமிடங்களுக்குள்ளேயே உடைகள் களையப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டேன். கைகள் பின்னால் கட்டப்பட்டன. இன்னொரு பிரிவினர் எனது கால்களை மடக்கி உள்ளங்காலில் தாக்கினார்கள். கண்களும் கட்டப்பட்டன. ஏறத்தாழ ஒரு மணித்தியாலம் வான் ஓடியது. தலையிலும் என்னைத் தாக்கினார்கள். இறுதியாக வானிலிருந்து ஒரு அறைக்குள் தள்ளப்பட்டேன். நான் நினைத்தேன் நான் மரணத்தின் வாசல்கதவு அருகில் நிற்கிறேன் என. இப்போது என்னை வைத்திருக்கும் பிரிவினரிடம் என்னை ஒப்படைத்தமைக்காக என்னைக் கொண்டு சென்ற குழுவினருக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.

என்னுடைய தலையிலும் காலிலும் அடி காயங்கள் உள்ளன. இதுவரை என்மீதான எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படவில்லை. நான் விடுதலை செய்யப்படுவேன் என நான் நம்புகிறேன். என வித்தியாதரன் தெரிவித்ததாக ஒரு தகவல் கிடைத்திருக்கிறது.

வித்தியாதரன் இவ்வாறெல்லாம் கடத்தப்படவில்லை அவர் கைது செய்யப்பட்டார் என்று இப்போது அரசு தெரிவிக்கிறது.

சூரியன் எப்எம். செய்திமுகாமையாளர் நடராஜா குருபரனும் இதேபாணியில் தான் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி அதிகாலை கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

வித்தியாதரன் கடத்தப்படவில்லை கைது செய்யப்பட்டார் என்று உண்மையை மூடி மறைக்க அரசு முயற்சி செய்வது தெரிகிறது. ஆனால் உண்மை இப்படித் தான் இருக்கிறது.

உடனடிச் செய்திகள் 26.02.2009

காலை 10.12: சுடரொளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் வித்தியாதரன் மரணச்சடங்கில் கலந்து கொண்டிருந்த போது ஆயுதம் தாங்கிய குழுவினரால் கடத்தப்பட்டார். டெய்லி மிரர்

காலை 10.12: சுடரொளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் வித்தியாதரன் கல்கிசையில் மரணச்சடங்கில் கலந்து கொண்டிருந்த போது ஆயுதம் தாங்கிய குழுவினரால் கடத்தப்பட்டார். அததெரணவின் அலுவலகச் செய்தியாளர்

காலை 10.25: சுடரொளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் வித்தியாதரன் கல்கிசையில் மரணச்சடங்கில் கலந்து கொண்டிருந்த போது வானில் வந்தவர்களால்; கடத்தப்பட்டதாக சுடரொளி பணிப்பாளர் தெரிவித்ததாக காவற்துறையினர் தெரிவிப்பு ‐ ஜே.என்.டபிள்யூ

மதியம் 12.05: சுடரொளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் வித்தியாதரன் வெள்ளைவானில் வந்த குழுவொன்றினால் கடத்தப்பட்டதாக காவற்துறை பேச்சாளர் தெரிவிப்பு ‐ அத தெரண

மதியம் 12.22: சுடரொளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் வித்தியாதரன் அண்மையில் இடம்பெற்ற புலிகளின் விமானத் தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக காவற்துறையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிப்பு‐ அததெரண

மதியம் 12.23: சுடரொளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் வித்தியாதரன் ஏற்கெனவே சந்தேகித்தது போல கடத்தப்படவில்லை. விசாரணைக்காகப் காவற்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ‐ காவற்துறைப் பேச்சாளர்.

ர்ஓ 0640 என்ற இலக்கம் கொண்ட வெள்ளைவானில் கடத்தப்பட்ட ஊடகவியலாளர் வித்தியாதரன் இப்போது குற்றப் புலனாய்வுப் காவற்துறையினரால் பயங்கரவாதப் புலனாய்வுப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்.

வித்தியாதரன் கடத்தப்பட்டதை மறுத்து அவர் விசாரணைக்கென அழைத்துச் செல்ல முற்பட்டதாக கதையளக்கிறது அரசு.

இதேவேளை விசேடமாகக் கைதுசெய்கின்ற போது காவற்துறை வாகனம் பயன்படுத்தப்பட மாட்டாது என ஊடக அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயுகணுவுரு;து;துனு தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை விசேடமாகக் கைதுசெய்கின்ற போது காவற்துறைய வாகனம் பயன்படுத்தப்பட மாட்டாது என்று கூறுவதன் மூலம் வெள்ளை வான் கடத்தலுடன் அரசாங்கத்திற்குத் தொடர்பு இருக்கின்றமையை ஊடகத்துறை அமைச்சரே ஒப்புக் கொள்கின்றாரா என்று ஐ.தே.க. எம்.பி.யான தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊடக அமைச்சர் ஒப்புக் கொள்கிறாரோ இல்லையோ என்பதல்ல பிரச்சினை. வெள்ளைவான் கடத்தலுடன் அரசாங்கத்தற்கு நெருங்கிய தொடர்பிருப்பது அண்மைக்காலமாக அம்பலப்பட்டு வருகிறது. அதுவும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுடன் அவர்கள் மீதான ஒடுக்குமுறைகளுடன் அரசாங்கத்திற்கு நெருங்கிய தொடர்பிருப்பது ஒன்றும் இரகசியமல்ல.

இன்னமும் இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் நலன் கொண்ட அரசாங்கம் என்று சொல்பவர்களுக்காகப் பரிதாபப்படுவதைத் தவிர ஒன்றும் செய்வதற்கில்லை.

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க குறித்துக்காட்டியது போல இறுதியாக அந்தப் பாசிசக் கரங்கள் இவர்களை நோக்கி நீளும் போது இவர்களுக்காகக் குரல் கொடுக்க யாரும் இருக்கப் போவதில்லை.

சங்கரன் சித்தார்த்தன்:

http://globaltamilnews.net/tamil_news.php?nid=6861&cat=5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.