Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய தேர்தல் கருத்து கணிப்புகளும், தமிழக + இந்திய தேர்தல் தொடர்பான செய்திகளும்

Featured Replies

இந்திய நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தமிழகத்தில் இடம்பெற்று வரும் கருத்து கணிப்புகள், அது தொடர்பான செய்திகள் மற்றும் இந்திய அளவிலான தேர்தல் நிலவரங்கள் சிலவற்றை இணைக்கின்றேன்

-------------------------------------------------------------------------

தமிழக பெண்களிடம் விகடன் நடாத்திய கருத்து கணிப்பு விவரங்கள்: இந்த கணிப்பு 2221 பேரிடம் இருந்து பெறப்பட்டது.

p12s.jpg

p16a.jpg

p14a.jpg

p15b.jpg

p15a.jpg

Edited by நிழலி

  • தொடங்கியவர்

குமுதம் ரிப்போர்ட்டரில் இருந்து

கடந்த வாரம் தமிழகத்தில் உள்ள முப்பத்தொன்பது நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மெகா சர்வே ஒன்றை ஏறத்தாழ நடத்தி முடித்துவிட்டது ஆளுங்கட்சி டி.வி.

`2009 - நாடாளுமன்றத் தேர்தல் - கண்ணோட்டம்' என்ற பெயரில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் முழுமையாக நடத்தப்பட்ட அந்த மெகா சர்வே, திடுக்கிடச் செய்யும் முடிவுகளையும், திகைப்பூட்டும் திருப்பங்களையும், எதிர்பாராத தகவல்களையும் கொண்டதாக இருக்கிறதாம்.

இந்தத் தகவல்களைக் கேள்விப்பட்டு, சர்வே குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் இறங்கினோம். பெரும் முயற்சிக்குப் பிறகே அதுபற்றி அறிந்துகொள்ள முடிந்தது.

அந்த விவரங்களுக்குப் போவதற்கு முன்னால், மிக முக்கியமான விஷயத்தையும் இங்கே சொல்லியாக வேண்டும். சர்வே எடுத்த அந்த டி.வி. டீமுக்கு அதன் அலுவலகத்திலிருந்து, பொதுமக்களிடம் `ஆளுங்கட்சி டி.வி. சார்பாகத்தான் சர்வே எடுக்கிறோம்' என்பதை ஞாபகமறதியாகக் கூட சொல்லிவிடாதீர்கள். ஒவ்வொரு நாடாளுமன்றத்துக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் கட்டாயம் சர்வே நடத்தப்பட வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு சட்டமன்றத் தொகுதி வீதம் ஆறு நாட்களுக்குள் முழுமையாக சர்வே நடத்தப்பட வேண்டும். நகரங்களில் மட்டுமே சுற்றிக் கொண்டிருக்காமல், பட்டி தொட்டி, குக்கிராமங்களிலும் சர்வே எடுக்கப்பட வேண்டும். சர்வே படிவத்தை நிரப்பித் தரும் ஒவ்வொருவரிடமும் தி.மு.க. ஆட்சி பற்றி, தேர்தல் கூட்டணி பற்றி வாய்மொழியாகவும் கேள்விகள் கேட்டுப் பதிவு செய்து கொள்ளுங்கள் என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டதாம்.

இந்த டி.வி.தான் என்று கூறிக்கொண்டு மக்களைச் சந்தித்தால், சர்வேயில் எண்பது சதவிகிதம் போலியாக இருக்கும். அதாவது, பொதுமக்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவோ அல்லது எதிர்ப்பாகவோ சாய்ந்து தங்களின் உண்மையான மனநிலையை வெளிப்படுத்தாமல் மறைத்து விடுவார்கள் என்பதால்தான் பொதுவான சர்வே டீமாக தங்களைக் காட்டிக்கொண்டு களம் இறங்கியதாம் அந்த டீம்.

ஏறத்தாழ முடிந்துவிட்ட அந்த சர்வே பற்றிய விஷயங்களைப் பார்ப்போம்.

`2009 நாடாளுமன்றத் தேர்தல்- கண்ணோட்டம்' என்ற பொத்தாம் பொதுவான தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள சர்வே படிவத்தில் மொத்தம் பத்துக் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. கேள்வி ஒவ்வொன்றும் ரொம்பவும் நுட்பமானவை. தமிழக மக்களின் மனநிலை தி.மு.க.வுக்கு ஆதரவாக இருக்கிறதா? அல்லது எதிர்ப்பாக இருக்கிறதா? அல்லது குழப்பமாக இருக்கிறதா? என்பதை அட்சரம் பிசகாமல் வெளியே கொண்டு வரும் விதமாகவே அந்தப் பத்துக் கேள்விகளும் அமைந்திருக்கின்றன.

அதிலும், முதல் நான்கு கேள்விகள் தேனுக்குள் மருந்தை மறைத்துக் கொடுக்கும் லாகவத்தோடு இருக்கின்றன. அந்த நான்கு கேள்விகளும் தி.மு.க. ஆட்சி மீது மக்கள் கொண்டிருக்கும் விருப்பு -வெறுப்புகளை வெளிப்படுத்தக் கூடியவை. அந்த நான்கு கேள்விகளுக்கும் பொது-மக்களும் நிஜமான அக்கறையோடும், உண்மையோடும்தான் சர்வேயில் பதில் கூறி இருக்கிறார்களாம்.

அதாவது `தமிழக அரசின் இலவசத் திட்டங்கள் உபயோகமாக உள்ளதா?' - இது முதல் கேள்வி. இந்தக் கேள்வியின் முக்கிய நோக்கமே, இலவச கலர் டி.வி., இலவச நிலம் போன்ற தி.மு.க. அரசின் சாதனைத் திட்டங்கள் குறித்து மக்கள் மனநிலை என்ன என்பதை அறிவதற்காகத்தானாம்.

கிராமப்புற மக்களில் பெரும்பாலானோர், `சிறப்பான திட்டம்' என்றும், நகர்ப்புற மக்களில் அதிகம் பேர், `பரவாயில்லை' என்றும் தங்கள் கருத்தைப் பதிவு செய்து இருக்கிறார்கள். இதில் ஆச்சரியமான தகவல் என்னவென்றால், யாருமே இந்தத் திட்டம் தேவையற்றது என்றோ, கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்றோ டிக் செய்யவில்லையாம்.

இரண்டாவது கேள்வியான, `தமிழக அரசின் வெள்ள நிவாரணம் உரிய முறையில் கிடைத்ததா?' என்பதற்கு `உடனடியாகக் கிடைத்தது' என்று முப்பது சதவிகிதத்தினரும் `தாமதமாகக் கிடைத்தது' என்று ஐம்பது சதவிகிதத்தினரும் `போதுமானதாக இல்லை' என்றும் `கிடைக்கவில்லை' என்றும் இருபது சதவிகிதத்தினரும் பதில் கூறியுள்ளார்களாம்.

`விலைவாசி உயர்வுக்கு யார் காரணம்?' என்ற மூன்றாவது கேள்விக்கு மத்திய அரசு, மாநில அரசு என்று மாறி மாறி பெரும்பாலானோர் கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றனராம். மிகக் குறைந்த அளவு சதவிகித மக்கள்தான், உலக அளவிலான பொருளாதார மந்தம் என்றும், தவிர்க்க முடியாதது என்றும் தங்கள் கருத்தைப் பதிவு செய்து இருக்கிறார்களாம்.

நான்காவதாக `திருமண உதவி, மகளிர் சுய உதவிக்குழு, கர்ப்பிணிப் பெண்கள் நலம் போன்ற மகளிர் மேம்பாட்டுத் திட்டங்கள்?' என்ற கேள்விக்கு `நல்ல பலன் உண்டு' என்று பெரும்பாலானோரும் `முழுமையாகக் கிடைக்கவில்லை' என்று குறிப்பிட்ட சதவிகிதத்தினரும் தங்கள் கருத்தைக் கூறி இருக்கிறார்களாம். அதேபோல், மிகச் சொற்பமானவர்கள் `கருத்து இல்லை' என்ற காலத்தை டிக் செய்து இருக்கிறார்களாம். யாருமே மகளிர் சம்பந்தப்பட்ட உதவிகள் கிடைக்கவில்லை என்று கூறவில்லையாம்.

சர்வே படிவத்தில் முதல் நான்கு கேள்விகள் தி.மு.க. ஆட்சியைப் பற்றிய மக்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை ஸ்கேன் பண்ணிப் பார்க்கும் விதம் என்றால், அடுத்த நான்கு கேள்விகள் தமிழ்நாட்டை உலுக்கிப் போட்ட அரசியல் சம்பந்தமாகவும், அதுபற்றி பொதுமக்களின் உண்மையான கருத்து என்ன என்பதை `எக்ஸ்-ரே' எடுக்கும் விதமாகவும் இருக்கின்றன.

கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக, தமிழக அரசியலில் ஒரு புயலாகவே நிலை கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர் பிரச்னையைப் பற்றித்தான் சர்வே படிவத்தில் ஐந்தாவது, ஆறாவது கேள்விகளாக உள்ளன. இந்த இரண்டு கேள்விக்கான சர்வே முடிவுகள் தி.மு.க.வுக்கு ரொம்பவே அதிர்ச்சியூட்டும் விதமாகவே இருக்கிறதாம்.

அதாவது, `ஈழத்தமிழர் பிரச்னையில் தமிழக அரசின் செயல்பாடு?' என்ற கேள்விக்கு `பரவாயில்லை' என்று குறைந்த தரப்பினரும், `பலன் இல்லை, மோசம்' என்ற கருத்தை பெரும்பான்மையோரும் தங்களது பதிலாக அளித்திருக்கிறார்களாம். ஐந்து சதவிகிதத்துக்கும் மிகக் குறை-வானவர்களே `சிறப்பாக உள்ளது' என்று வாக்களித்திருக்கிறார்களாம்.

இதுவாவது பரவாயில்லை. ஆறாவது கேள்விக்கான பதில்தான் ஆளுங்கட்சிக்குக் கூடுதல் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருக்கிறதாம். `ஈழத்தமிழர் பிரச்னையில் எந்தக் கட்சி சிறப்பாகச் செயல்படுகிறது?' என்பதுதான் கேள்வி. கிடைத்திருக்கும் பதில் என்ன தெரியுமா? ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்கும், கட்டத்தில் குறிப்பிடப்படாத இ. கம்யூனிஸ்டுக்கும் (இந்தக் கட்சியின் பெயரை மக்களே படிவத்தில் எழுதி டிக் செய்து இருக்கிறார்களாம்!) தான் பெரும்பான்மையான ஆதரவு கிடைத்திருக்கிறதாம். விடுதலைச் சிறுத்தைகளுக்கும் ஓரளவு வாக்குகள் கிடைத்திருக்கிறதாம்.

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு பெரிய கட்சிகளுக்கும் இரண்டு சதவிகிதத்துக்கும் குறைவான வாக்குகளே கிடைத்திருக்கின்றனவாம். காங்கிரஸ் மற்றும் தே.மு.தி.க.வுக்கு பெரிய முட்டைதானாம்!

ஏழாவதாகக் கேட்கப்பட்டிருக்கும் கேள்விக்கு மக்கள் மத்தியில் தி.மு.க.வுக்கு ஆதரவான நிலையே இருப்பது ஆச்சரியகரமான விஷயம் என்கிறார்கள். `வழக்கறிஞர்கள் பிரச்னையில் காவல்துறை நடந்துகொண்ட விதம்?' என்ற அந்தக் கேள்விக்கு எண்பது சதவிகிதம் பேர் `சரியானதுதான்' என்றும், பாக்கி இருபது சதவிகிதம் பேர் `தேவையில்லாதது' என்றும், `வேறு வழி இல்லை' என்றும் தங்கள் கருத்தைப் பதிவு செய்து இருக்கிறார்களாம். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வழக்கறிஞர்கள் கோர்ட்டைப் புறக்கணித்து, கோர்ட் நடவடிக்கைகளை ஸ்தம்பிக்க வைத்திருந்ததன் காரணமாக எழுந்த மக்களின் நியாயமான கோபம்தான் போலீஸாருக்கு ஆதரவாக தங்கள் ஒட்டுமொத்த வாக்கையும் பதிவு செய்திருக்கிறார்கள் என்று இதற்குக் காரணம் சொல்லப்படுகிறது.

உங்கள் தொகுதியின் அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்க்க நாடாளுமன்ற உறுப்பினர் ஆற்றிய பணிகள்?' என்ற கேள்விக்கு முப்பத்தொன்பது தொகுதிகளிலும் மாறுபட்ட பதில்களே கிடைத்திருக்கிறதாம். `சிறப்பாக இருந்தது' என்றும், `சரியில்லை' என்றும், `பரவாயில்லை' என்றும், `கருத்து இல்லை' என்றும் அந்தந்த நாடாளுமன்றத் தொகுதிகளின் அடிப்படைப் பிரச்னைகளுக்கு ஏற்றவாறு தி.மு.க.வுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்துகள் பதிவாகி இருக்கிறதாம். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தி.மு.க. எம்.பி.க்கள் உள்ள தொகுதிகள் அத்தனையுமே ஆளுங்கட்சிக்குச் சாதகமாகவே உள்ளதாம்.

இதுவரைக்கும் பார்த்த எட்டுக் கேள்விகளில் தி.மு.க.வுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் வாக்களித்த பொதுமக்கள், கடைசி இரண்டு அதிமுக்கியமான கேள்விகளுக்கு மிகத் தெளிவாக பதிலளித்து இருக்கிறார்களாம்.

மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும்?' என்ற கேள்விக்கு `காங்கிரஸ்' என்று பதில் கூறி இருப்போரின் சதவிகிதம் தொண்ணூறாம். பத்து சதவிகிதம்தான் பா.ஜ.க.வுக்கு ஆதரவாகப் போயிருக்கிறதாம். மூன்றாவது கூட்டணிக்கு ஒரு ஓட்டு கூட விழவில்லையாம். விலைவாசி கட்டுக்குள் இருப்பது, பெட்ரோல், டீஸல், காஸ் விலைக் குறைப்பு போன்ற காரணங்கள் காங்கிரஸுக்கு ஆதரவாக மக்கள் ஓட்டளிக்கக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

இறுதியாக, `யாருடன் தி.மு.க. கூட்டணி அமைக்க வேண்டும்?' என்ற கடைசிக் கேள்விக்கு, `தேர்தலுக்கு முன்பா? பின்பா?' என்று கேள்வி கேட்டு விட்டேதான் பொதுமக்கள் வாக்களித்திருக்கிறார்களாம். இதில் நூறு சதவிகிதம் பேர் `காங்கிரஸ்' என்றே பதில் கூறி அசத்தி இருக்கிறார்களாம்.

ஆக மொத்தத்தில் இலங்கைப் பிரச்னை என்பது தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே எதிராகத்தான் இருக்கிறதாம். அதை விட்டுவிட்டுப் பார்த்தால் ஆளும்கட்சிக்கே சாதகமாக இருப்பதால் அவர்கள் உற்சாகமாக இருக்கிறார்களாம்!

  • தொடங்கியவர்

பா.ம.க வின் தேர்தல் அறிக்கையில் உள்ள ஈழத்தமிழர்கள் தொடர்பான விவரங்கள்

* பா.ம.க தொட‌ங்‌கிய 1989-‌ல் இரு‌ந்து இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் ‌சி‌க்கலு‌க்கான ஒரே ‌தீ‌ர்வு, த‌மி‌ழீழ‌ம்தா‌ன் எ‌ன்பதை‌த் தொட‌ர்‌ந்து அதனுடைய கொ‌ள்கையாக வ‌லியுறு‌த்‌தி வரு‌கிறது. பு‌திய அரசு ம‌த்‌தி‌யி‌ல் பொறு‌ப்பே‌ற்றவுட‌ன், இல‌ங்கை அர‌சிட‌ம், இல‌ங்கை‌யி‌ல் உடனடியாக போ‌ர் ‌நிறு‌த்த‌ம் செ‌ய்ய உ‌ரிய நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம்.

* இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களு‌க்கு ம‌தி‌ப்பையு‌ம், க‌ண்‌‌ணிய‌த்தையு‌ம் உறு‌தி‌ப்படு‌த்து‌கிற வகை‌யி‌ல், பே‌ச்சு‌க்க‌ள் மூல‌ம் அர‌சிய‌ல் ‌தீ‌ர்வு கா‌ண்பத‌ற்கு ஒரு வரைவு‌த் ‌தி‌ட்ட‌த்தை இல‌ங்கை அரசு வெ‌ளி‌யிட வே‌ண்டு‌ம். அ‌த்தகைய ‌வரைவு‌த் த‌ி‌ட்ட‌ம் 1985, ஜூலை 13-ல் ஏ‌ற்ப‌ட்ட ‌‌தி‌ம்பு ‌பிரகடன‌த்‌தில‌் அட‌ங்‌கியு‌ள்ள நா‌ன்கு முத‌ன்மையான கோ‌ட்பாடுகளை அடி‌ப்படையாக‌க் கொ‌ண்டிரு‌க்க வே‌ண்டு‌ம்.

* இல‌‌ங்கை‌த் த‌மிழ‌ர்களை ஒரு தே‌சிய இனமாக அ‌ங்‌கீக‌ரி‌த்த‌‌ல், இல‌ங்கை‌யி‌ல் த‌மிழர்க‌ளி‌ன் தாய‌க‌ம் எ‌ன்று அடையாள‌ம் கா‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ள பகு‌தி இரு‌ப்பதை அ‌ங்‌கீக‌ரி‌த்த‌ல், த‌மி‌ழ்‌‌த் தே‌‌சிய இன‌த்‌தி‌ன் சுய ‌நி‌ர்ணய உ‌ரிமையை அ‌ங்‌கீக‌ரி‌த்த‌ல், இ‌ல‌ங்கை‌யி‌ல் உ‌ள்ள அனை‌த்து‌த் த‌மிழ‌ர்களு‌க்கு‌ம் குடியு‌ரிமை‌க்கான உ‌ரிமை ம‌ற்று‌ம் அடி‌ப்படை உ‌ரிமைகளை அ‌ங்‌கீக‌ரி‌த்த‌ல், அ‌ங்கே ஒரு அமை‌தி‌ப் பே‌ச்சுவா‌ர்‌த்தை நட‌த்துவத‌ற்கான சூ‌ழ்‌நிலை உருவா‌க்க‌‌ப்படு‌ம்.

* இல‌ங்கை அரசு‌க்கு‌த் த‌ற்போது அ‌ளி‌த்து வரு‌ம் அனை‌த்து உத‌விகளு‌ம் ‌நிறு‌த்த‌ப்படு‌ம். இல‌ங்கை அரசு, த‌மிழ‌ர்களு‌க்கு எ‌திரான ம‌னித உ‌ரிமை ‌‌மீற‌ல் நடவடி‌க்கைக‌ளி‌ல் ஈடுபடுவ‌தினா‌ல், அ‌ந்த அரசா‌ங்க‌த்தை‌த் த‌ண்டி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ச‌ர்வதேச‌ சமூக‌த்தை‌ப் பு‌திய அரசு கே‌ட்டு‌க் கொ‌‌ள்ளு‌ம். சுய ந‌ி‌ர்ணய உ‌ரிமையோடு கூடிய ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ள் ‌விரு‌ம்பு‌ம் த‌மிழ‌ர் த‌னி‌த் தாயக‌ம் அமைவத‌ற்கு‌ப் பா.ம.க. பாடுபடு‌ம்.

* த‌மி‌ழ்நாடு, காரை‌க்கா‌ல் ‌‌மீனவ‌ர்க‌ள் இல‌‌ங்கை‌க் கட‌ற்படை‌யின‌ரி‌ன் அ‌த்து‌மீற‌ல்க‌ளி‌ல் இரு‌ந்து கா‌‌ப்பா‌ற்ற‌ப்படுவா‌ர்க‌ள

இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் சிலவற்றைப் பார்க்கும்போது இதில் பங்குபற்றியவர்கள் அரசியலில் மிகவும் தெளிவாக இருப்பது புரிகிறது. :(

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

1644 பேர் இலங்கை தமிழர் கொல்லப்படுவதை கண்டிப்போடு தடுத்திருக்க வேண்டும் என்ற முடிவு தமிழ் நாட்டு பெண்கள் எம்மக்கள் மீது கொண்ட அன்பையே காட்டுகிறது.

  • தொடங்கியவர்

வைகோவை வெளியேற்றும் ஜெயலலிதா

(Junior Vikatan)

"அதாவது, 'அ.தி.மு.க. கூட்டணிதான் தமிழகத்தில் அதிக இடங்களைப் பிடிக்கும். அதன்பிறகு, அவர்களையும் சேர்த்து அழைத்துக்கொண்டு காங்கிரஸ் அரசு அமைக்க ஆதரவு தருகிறோம்' என்பதுதான் காங்கிரஸின் அகமது படேலிடம் பா.ம.க. கொடுத்துவிட்டு வந்த வாக்கு!

"

மேலும்...........

'வீட்டைவிட்டு கோபித்துக்கொண்டு போய்விட்டு, பிறகு தானாகத் திரும்பி வந்த மனம் திருந்திய மைந்தனுக்கு கொழுத்த ஆட்டை அடித்து விருந்து கொடுத்த தந்தையைப் பார்த்து, மருகிப் போய் நின்ற மூத்த மகனாக' மனம் வெதும்பி நிற்கிறார் ம.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் வைகோ!

'வந்தவருக்கு முதல் மரியாதை... இருந்தவருக்கு இல்லை மரியாதை...' -- என்ற குமுறலோடு மிக சீரியஸான முடிவை எடுக்கும் மனநிலையில் அவர் இருப்பதுதான் மார்ச் 31, செவ்வாய்கிழமை நிலவரம்!

இலங்கைப் பிரச்னையில் ஆரம்பம் முதலே ஒரு நிலைபாட்டில் இருந்ததோடு, அதுவே தமிழ்நாட்டின் ஓட்டு பிரச்னையாக மாறிய சூழ்நிலையில்... மாறாத

ஜெயலலிதாவையும் மாற வைத்து, இலங்கைப் பிரச்னைக்கு ஆதரவாக உண்ணாவிரதம் மூலம் அ.தி.மு.க-வைப் பந்தக்கால் நடச் செய்தார் வைகோ. ஆனால், தொகுதிப் பங்கீடு என்ற பெயரில் ஜெயலலிதா பந்தி பரிமாற ஆரம்பித்தபோதுதான் அவருக்கு பெருத்த அதிர்ச்சி காத்திருந்தது!

ஒருசில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க. கூட்டணிக்குத் திரும்பி வந்த பா.ம.க-வுக்கு ஏழு தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா ஸீட் என துரிதகதியில் ஒதுக்கீடு செய்ததோடு 'அண்ணன்... அண்ணன்' என்று டாக்டர் ராமதாஸை நோக்கி ஜெயலலிதா உருகியபோதே, ம.தி.மு.க-வினர் வயிற்றில் புளி கரைத்தது. பயந்ததுபோலவே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கி... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் பேச்சு வார்த்தை நடந்து வரும் நிலையில்... ம.தி.மு.க-வுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் சிக்கலோ சிக்கல்!

காரணம் ஐந்து...

'ம.தி.மு.க-வின் பொதுச்செயலாளரா? அ.தி.மு.க-வின் கொள்கை பரப்புச் செயலாளரா?' - வைகோவைப் பற்றி எதிரணி மேடைகளில் வெளிப்படையாகக் கேட்கப்படும் கேள்வி இது. இதையே ம.தி.மு.க., அ.தி.மு.க. தொண்டர்கள் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எம்.ஜி.ஆரையும், அ.தி.மு.க-வையும் ஜெயலலிதாவைவிட அதிகம் தூக்கிப் பிடித்தவர் வைகோ. 2006-ம் வருடம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்தார். தி.மு.க. அரசு மைனாரிட்டி அரசாக அமையும் அளவுக்கு அ.தி.மு.க. அதிக சட்டமன்ற தொகுதிகளைப் பிடித்தது. முதல் முறையாகத் தமிழகத்தில் மைனாரிட்டி அரசாங்கம் அமைந்ததைப் பற்றி, அப்போது பத்திரிகைகள் எல்லாம் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளின. இதுபற்றி ஆங்கிலப் பத்திரிகை ஒன்று ஸ்பெஷல் ஸ்டோரியே வெளி யிட்டது. 'அ.தி.மு.க-வின் வெற்றி எதனால்?' என்ற கேள்விக்கு அந்தப் பத்திரிகை ஐந்து காரணங்களைச் சொல்லியிருந்தது.

அதில் பிரதானமாக வைகோவின் பிரசாரம்தான் அ.தி.மு.க-வுக்கு இவ்வளவு தொகுதிகளைப் பெற்றுக் கொடுத்தது என்று சொல்லியிருந்தது. அந்தக் கட்டுரைதான் தி.மு.க. தலைமைக்கு வைகோ மீது ஆத்திரத்தைக் கிளப்பியது. அந்த ஆத்திரத்தில்தான் எல்.ஜி., செஞ்சி, கண்ணப்பன், ராமகிருஷ்ணன் என ஒவ்வொருவரையாக ம.தி.மு.க-விலிருந்து சமயம் பார்த்து வெளியே இழுத் தார்கள். இன்னும் பின்னோக்கிப் போனால், 2001-ம் வருடம் ஜெயலலிதா தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவும் வைகோதான் காரணம். அப்போது வைகோ தனியாக நின்று இருபத்தேழு தொகுதிகளில் தி.மு.க-வின் ஓட்டுகளைப் பிரித்ததால்தான், அ.தி.மு.க. எளிதாக ஆட்சியைப் பிடிக்க முடிந்தது.

நட்பைக்கூட கற்பைப் போல எண்ணுவோம்!

திருமங்கலம் இடைத்தேர்தல் சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்தபடியே ம.தி.மு.க-வினர் நம்மிடம் பேசி னார்கள். ''தொகுதியில் பெரும் கலவரம் நடந்து முடிந்த நேரம். அ.தி.மு.க. நிர்வாகிகள் எல்லாம் பதுங்கி விட, எங்கள் தலைவர் அ.தி.மு.க. நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக அழைத்துக்கொண்டு சென்று, தேர்தல் பார்வையாளரிடம் முறையிட்டார். கூடவே, கலவரம் நடந்த இடங்களுக்கும் சென்று 'கொலைகாரக் கூட்டம்' என்று தி.மு.க-வை இரவு ஏழு மணிக்கு வசைபாடினார். வைகோ பேசிய இடமெல்லாம் தி.மு.க. அனுதாபிகள் நிறைந்த இடம். தலைவருக்கு பிரத்தியேக பாதுகாப்பெல்லாம் இல்லை. அவருடைய உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்த நாங்கள், 'பிரசாரம் போதும். தோழமைக் கட்சிக்காக உங்கள் உயிரைக் கொடுத்தால், எங்கள் எதிர்காலம் என்னாவது?' என்று உருக்கமாகக் கேட்டோம்.

'தோழமை என்று வந்து விட்டால் உயிரையும் விடவேண்டும்' என்று உணர்ச்சிப் பிழம்பாகச் சொல்லி விட்டு, தன்னுடைய பிரசாரத்தைத் தொடர்ந்தார். அப்போது தலை வருக்கு நெருக்கமான சிலர், 'அந்தம் மாவுக்காக ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுக் கறீங்க? நாளைக்கேகூட ஜெயலலிதா உங் களை உதாசீனப்படுத்தலாம்! உங்கள் உயிர் முக்கியம்...' என்று சொன்னார்கள். அதையெல்லாம் அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், அப்போதைக்கு அவர்களுக்கு சமாதானம் சொல்லிவிட்டு, எதிரணியை பிரசாரத்தின் மூலம் பிரித்து மேய்ந்தார். அப்போது அவர்கள் சொன்னது, இப்போது பலித்துவிடும் போல இருக்கிறது!'' என்றார்கள்.

அஞ்சுக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு...

தொகுதிப் பங்கீடு குறித்து ம.தி.மு.க. சார்பில் நியமிக்கப் பட்ட குழு, இதுவரை ஏழு தடவை அ.தி.மு.க. தேர்தல் குழுவுடன் பேசியிருக்கிறது. இதுபற்றி தாயக வட்டாரத்தில் பேசினோம். ''ஏழு முறையும் காபி, போண்டா சாப்பிட்டு விட்டு வந்ததுதான் மிச்சம். என்னென்ன தொகுதிகள் என்பதை பட்டியல் போட்டு, மொத்தம் எட்டு தொகுதி களைக் கையில் வைத்துக்கொண்டு ம.தி.மு.க. குழு பேச ஆரம்பிக்கும். ஆனால், 'பிரசாரம் எதை நோக்கிப் போகும்? மக்கள் மனசு என்ன? இதைப் பற்றியெல்லாம் இந்தக் கூட்டத்துல பேசுவோம்!' என்று தொகுதிப் பங்கீட் டுக்கு முட்டுக்கட்டை போட்டுவிடும் அ.தி.மு.க. குழு! எங்கள் குழுவும் தோழமையை மனதில் வைத்து, எதுவும் சொல்லாமல் வந்துவிடும்.

அதன் பின்னர்தான் கடந்த 29-ம் தேதி எங்கள் பொதுச்செயலாளர் வைகோ போயஸ் கார்டனுக்குப் போனார். அங்கு முற்றிலும் எதிர்பாராத விதமாக ஜெய லலிதாவின் அணுகுமுறை அவரைத் தாக்கி இடிந்து போகச் செய்தது'' என்றார்கள்.

போயஸில் நடந்தது என்ன என்பது பற்றி விவரமறிந்த வட்டாரங்களிடம் பேசினோம். ''அன்று மாலை ஏழு மணிக்கு வைகோ, போயஸ் தோட்டத்துக்கு வந்தார். அவரை வரவேற்றது, அ.தி.மு.க-வின் தொகுதிப் பங்கீட்டுக் குழுதான். வைகோ தன் கையில் ஆறு தொகுதிகளின் லிஸ்ட், ஏன் அந்தத் தொகுதிகளை ம.தி.மு.க. கேட்கிறது என்பதற்கான காரணங்கள் ஆகிய வற்றை வைத்திருந்தார். ஆனால், முதலில் இந்திய கம்யூனிஸ்ட்களிடம் பேச்சுவார்த்தை ஆரம்பமானது. வட சென்னையை ம.தி.மு.க-வும் கேட்டுக் கொண்டிருக்க... என்ன காரணமோ, அந்தத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப் பட்டது!

அடுத்து, திருப்பூரை மார்க்சிஸ்ட் கட்சியும் கேட்க, வைகோவுக்கும் வரதராஜனுக்குமே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவிடம் பேசி தொகுதியை வாங்கிவிடலாம் என்று நினைத்த வைகோவுக்கு சிறிது நேரமே பேச வாய்ப்பளிக்கப்பட்டது. 'நீங்களே (ம.தி.மு.க., மார்க்சிஸ்ட்) பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள்... பிறகு பேச்சுவார்த்தை தொடருவோம்' என்று சொல்லி, விருட்டென எழுந்து மாடிக்குப் போய்விட்டாராம் ஜெ.! திகைத்துப் போய் நின்றார்களாம் அங்கிருந்தவர்கள்.

அதைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை அடங்கிய அ.தி.மு.க-வின் தொகுதிப் பங்கீட்டுக் குழு வைகோவிடம் பேசியது. 'தற்போது உங்கள் வசமிருக்கும் இரண்டு எம்.பி-க்களின் தொகுதிகளையே வாங்கிக் கொள்ளுங்கள். மற்றதை அப்புறம் பார்க்கலாம்' என்று அ.தி.மு.க. குழு சொல்ல, வைகோ உறைந்தேபோனார். தன் தரப்பை அவர் விரிவாக எடுத்துச் சொல்ல, அதற்குப் பிறகு மூன்று தொகுதிகள் என்று அப்பம் பிரித்திருக்கிறது அ.தி.மு.க.! அதற்கு மேல் பேச எதுவும் இல்லை என்று வைகோ கனத்த நெஞ்சுடன் அங்கிருந்துகிளம்பினார்.

ஈழ கோஷம்... ம.தி.மு.க-வின் தோஷம்!

ம.தி.மு.க-வை திடீரென்று அ.தி.மு.க. அவமானப்படுத்த என்ன காரணம் என்பதை, பெயர் சொல்ல விரும்பாத அ.தி.மு.க. மற்றும் ம.தி.மு.க. நடுநிலையாளர்கள் சிலர் சொன்னார்கள். ''சில வாரங்களுக்கு முன்பு வரை காங்கிரஸோடு கூட்டுவைக்க ஜெயலலிதா எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டார். இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸின் நிலைப்பாடே தனக்கும் இருப்பதை அவர் களுக்கு பல்வேறு வகையிலும் உணர்த்திக் காட்டினார். அப்படியும் தி.மு.க. மீது சோனியா கொண்டிருந்த பாசத்தால் அது நடக்கவில்லை. அதன்பிறகுதான், வெளிப்படையாக இலங்கைப் பிரச்னையை கையில் எடுத்தார் ஜெயலலிதா. மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்தார். அதற்கு வைகோவின் உதவியையும் உற்சாக மாகப் பெற்றுக்கொண்டார்.

ஆனால், பா.ம.க-வினர் இந்தக் கூட்டணிக்கு மாறி வருவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியதுமே ஜெயலலிதாவின் அணுகுமுறையில் பெரிய மாற்றம் தெரிந்தது. மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த பா.ம.க., அங்கிருந்து கிளம்பும்போது கொடுத்த வாக்குறுதிதான் ஜெயலலிதாவின் மாற்றத்துக்குக் காரணம். அதாவது, 'அ.தி.மு.க. கூட்டணிதான் தமிழகத்தில் அதிக இடங்களைப் பிடிக்கும். அதன்பிறகு, அவர்களையும் சேர்த்து அழைத்துக்கொண்டு காங்கிரஸ் அரசு அமைக்க ஆதரவு தருகிறோம்' என்பதுதான் காங்கிரஸின் அகமது படேலிடம் பா.ம.க. கொடுத்துவிட்டு வந்த வாக்கு!

அதேசமயம், புதிய காங்கிரஸ் அரசை தங்களுக்குச் சாதகமாகக் கொண்டு வந்து, இதுவரை அவர்கள் தி.மு.க-வுக்கு அளித்து வரும் ஆதரவையும் வாபஸ் பெறச் செய்வதுதான் அ.தி.மு.க. கூட்டணியின் புதிய திட்டம். இப்படியரு திட்டம் உள்ள பட்சத்தில் இலங்கைப் பிரச்னை உள்ளிட்ட விவகாரங்களில் காங்கிரஸை ஜெயலலிதாவால் எப்படி விமரிசிக்க முடியும். விமரிசிக்க முடியாது என்ற பட்சத்தில் இலங்கைப் பிரச்னை பற்றியே திரும்பத் திரும்பப் பேசும் வைகோவுக்கு அவர் முக்கியத் துவம் அளிக்கவேண்டிய அவசியம் என்ன? அதன் விளைவுதான், கூட்டணிப் பங்கீட்டில் 'வெறும் இரண்டு தொகுதி தருகிறோம்' என்று அதிரடியாக வைகோவிடம் சொல்லப்பட்டது.

ஜெயலலிதா இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தபோது, 'என் அரசியல் எதிர் காலமே நிர்மூலமானாலும் என்னுடைய ஈழத் தமிழனுக் கான போராட்டம் ஓயாது. அவனை நிந்தனை செய்ப வர்களின் முகத்திரைகளைக் கிழிப்பேன்!' என்று வைகோ பேசினார். அந்த நேரத்து அவசியத்துக்காக அதைப் பொறுத்துக்கொண்டாலும்... இப்போது ஜெயலலி தாவுக்கு அதெல்லாம் உறுத்தும் போலிருக்கிறது. வைகோ தங்கள் கூட்டணியில் இருப்பது எதிர்கால திட்டங்களுக்கு தடங்கலாக இருக்கும் என்பதே இன்று ஜெயலலிதாவின் கணக்கு. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க-வுடனான தொகுதிப் பங்கீட்டில் கூடுதலாக ஒரு தொகுதி கிடைக்காததால்தானே கோபித்துக் கிளம்பினார் வைகோ...அதுபோல், இப்போது தானும்தொகுதி உடன்பாட்டில் சீண்டினால் துண்டை உதறிப் போட்டுக்கொண்டு கிளம்பிவிடுவார் என்றுதான் திட்டமிட்டே 'டார்ச்சர்' கொடுக்கிறார் அந்த அம்மையார்'' என்கிறார்கள்.

தி.மு.க-வின் 'தில்' திட்டம்!

'காங்கிரஸ§க்காகத்தான் ம.தி.மு.க-வை வெளியேற்ற நினைக்கிறது அ.தி.மு.க.' என்ற கூற்றை மறுக்கும் சில அ.தி.மு.க. தலைவர்கள், ''ம.தி.மு.க-வின் இன்றைய நிலவரப்படி அந்தக் கட்சிக்கு உள்ள பலத்தை வைத்து தான் தொகுதி தரமுடியும். விசுவாசம், அன்பு, நட்பு என்பதெல்லாம் அரசியலில் பார்க்க முடியாது. தொடர்ந்து ம.தி.மு.க-வைவிட்டு முக்கிய தலைகள் வெளியேறி வரும் நிலையில்... தன் கட்சியின் பலத்தை வைகோவே நன்றாக உணர்ந்திருக்கிறார்'' என்று வேறு லாஜிக் சொல்கிறார்கள்.

புறக்கணிப்பா... பி.ஜே.பி. நட்பா?

எல்லாம் சரி, அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து வைகோ வெளியேறினால் திரும்பவும் 'அண்ணன் கலைஞரிடம்' போவாரா என்ற கேள்விக்கும் பதில் கிடைக்கிறது அரசியல் வட்டாரத்தில். ''கூட்டணியில், தான் நீடிக்க இருந்த தடைகளை மக்களிடம் பட்டியல் போடுவார் வைகோ. ஈழப்பிரச்னைக்காக தான் உளமாற உழைத்ததையும், அதே பிரச்னைக்காக தான் ஓரம் கட்டப்பட்டதையும் மக்களிடம் சொல்வார். 'ஈழத்தில் நடக்கும் உணர்வுப் போராட்டத்தைவிட, பதவிகளுக்காக இங்கு நடக்கும் தேர்தல் போராட்டம் பெரியது என்பதை உணர்ந்து தேர்தலை ஒரு பார்வையாளனாகப் பார்த்து ஒதுங்குகிறேன்' என்று வைகோ சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!'' என்கிறார்கள்.

கூட்டணிக்கு வாகான கட்சி கிடைக்காமல் அலை பாயும் பி.ஜே.பி. அப்படியெல்லாம் வைகோவை சும்மா விட்டுவிடுமா என்பதும் இப்போதைய கேள்வி!

- எஸ்.சரவணகுமார், எம்.பரக்கத் அலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.