Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழீழத் தேசியக் கொடிகளுடன் சிட்னி மாநகரில் 'உரிமைக்குரல்' பேரணி: 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு

Featured Replies

Edited by தேசம்

  • கருத்துக்கள உறவுகள்

நானும் எனது இரு நண்பர்களும் காலை 10.30 மணியளவில் வெஸ்ட்மீட் புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்டோம். புகையிரத பெட்டிகள் எங்கும் தமிழ் முகங்கள். பெரியவர்கள் சிறியவர்கள் என்று எங்கு பார்த்தாலும் எம்மவர் முகங்கள். அதிலேயிருந்த சில வெள்ளைக்காரர்களுக்கு எதுவுமே புரியவில்லை. மிகவும் ஆச்சரியத்துடன் எம்மைப் பார்த்துக்கொண்டார்கள். நாங்கள் பேரணி முன்றலை 11.15 மணியளவில் அடையும் போது அஙே மிகப்பெரிய கூட்டம். அந்தப் பகுதியெங்கும் தமிழரின் தேசியக்கொடி காற்றிலே ஆடிப் பறந்து கொண்டிருந்தது. எமது தேசியத் தலைவரினது படங்களும், எமது தேசியக்கொடியும் அந்தத் தேசமெல்லாம் பறந்து எங்கும் ஒரே சிவப்பு மயம்.மக்கள் சேர்ந்ததும் மெது மெதுவாக எமது ஊர்வலத்தை ஆரம்பித்தோம்.

"எங்கள் தலைவன் பிரபாகரன்", "எமக்கு வேண்டும் தமிழீழம்", "எமக்கு வேண்டும் சுதந்திரம்", "சிறிலங்காவே இனக்கொலையை நிறுத்து". "அவுஸ்த்திரேலியாவே தமிழரைக் காப்பாற்று" என்று இளையவர்கள் ஒலிபெருக்கிகளில் தொடங்க மக்கள் கூட்டம் தொடர்ந்து முழங்கியது. வழியெங்கிலும் எமது பேரணியை ஆச்சரியத்துடன் பார்த்த அவுஸ்த்திரேலிய நாட்டுக்காரர், எல்லார் முகங்களிலும்,என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் தெரிந்தது. சிலர் மெதுவாக அணுகி எம்மை விசாரித்ததையும் கண்டேன்.இன்னும் விடயம் ஓரளவிற்குத் தெரிந்த சில வெள்ளைக்காரர்கள் தமது நண்பர்களுக்கு எம்மைக் காட்டி விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

அவுஸ்த்திரேலியப் போலீஸார் பாதுகாபுத்தர நகர வீதியெங்கும் தடைகள் போட்டு எமது பேரணி ஊர்ந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை செந்நிரக் கொடிகளும் எமது தேசியத் தலைவரின் படங்களும் தலைகளுக்கு மேல் நடந்து சென்று கொண்டிருந்ததைப் பார்க்கும் போது இது எனக்கு அவுஸ்த்திரேலியாவாகத் தெரியவில்லை.

இறுதியாக கூட்டம் நடைபெறும் இடத்தை மெதுவாக வந்தடைந்தோம். தாரை தப்பட்டைகளுடன் வானதிரக் கோஷம் போட்ட மக்களனைவரும் சிறிது அமைதியானார்கள். முதலில் தமிழ் இளையோர் சார்பில் ஒரு இளம் பெண் உறையாற்றினார். எமக்கு நடக்கும் அவலம் அங்கே உரத்துச் சொல்லப்பட்டது. அனைவரின் ஏகோபித்த பாராட்டுடன் அவர் முடித்துக்கொள்ள, இன்னொரு தமிழ் ஆர்வளர் தமது உஅரையைத் தொடங்கினார், "1949 இல் இஸ்ரேலியர்கள் தமது எதிரிகளுக்கெதிராக ஒன்றிணைந்தது போல நாமும் இணைந்து எமது எதிரியைத் தோற்கடிப்போம் " என்று அவர் சொல்ல மக்கள் கூட்டாம் பெருத்த கரகோஷத்துடன் அதை ஆமோதித்தது.பின்னர் வைத்திய கலாநிதி திரு மனமோகன் அவர்கள் வன்னிக்கு அனுப்பவிருக்கும் வைத்திய உதவிகள் பற்றி தெரிவித்தார். இறுதியில் இளையோர் அமைப்பின் ஒருவர் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் தனது உரையை ஆற்றினார். "எமது விடுதலையை வென்றெடுப்போம்" என்று அவர் முடிக்கவும் மக்கள் ஆர்ப்பரித்துக் கரகோஷம் செய்தனர்.

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" என்று ஓங்கி ஒலித்து விட்டு எமது இன்றைய கடமையை தற்காலிகமாக நிறைவு செய்துவிட்டு வந்தோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் !!!!!!!

  • தொடங்கியவர்

நானும் எனது இரு நண்பர்களும் காலை 10.30 மணியளவில் வெஸ்ட்மீட் புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்டோம். புகையிரத பெட்டிகள் எங்கும் தமிழ் முகங்கள். பெரியவர்கள் சிறியவர்கள் என்று எங்கு பார்த்தாலும் எம்மவர் முகங்கள். அதிலேயிருந்த சில வெள்ளைக்காரர்களுக்கு எதுவுமே புரியவில்லை. மிகவும் ஆச்சரியத்துடன் எம்மைப் பார்த்துக்கொண்டார்கள். நாங்கள் பேரணி முன்றலை 11.15 மணியளவில் அடையும் போது அஙே மிகப்பெரிய கூட்டம். அந்தப் பகுதியெங்கும் தமிழரின் தேசியக்கொடி காற்றிலே ஆடிப் பறந்து கொண்டிருந்தது. எமது தேசியத் தலைவரினது படங்களும், எமது தேசியக்கொடியும் அந்தத் தேசமெல்லாம் பறந்து எங்கும் ஒரே சிவப்பு மயம்.மக்கள் சேர்ந்ததும் மெது மெதுவாக எமது ஊர்வலத்தை ஆரம்பித்தோம்.தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் !!!!!!!

Could you please post the same comment in English as well,

http://tamilnational.com/world-news/austra...-in-sydney.html

அவுஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்னி மாநகரில் சுதந்திர தமிழீழத்துக்கான 'உரிமைக்குரல்' பேரணி இன்று மிகவும் எழுச்சிபூர்வமாக நடைபெற்றது. இதில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

தேசம் எதை ஆங்கிலத்தில் தரும்படி கேட்கிறீர்கள்? நீங்கள் மேற்கோள் காட்டிய பகுதியையா?

  • தொடங்கியவர்

தேசம் எதை ஆங்கிலத்தில் தரும்படி கேட்கிறீர்கள்? நீங்கள் மேற்கோள் காட்டிய பகுதியையா?

can you put all your comments in English also, under the events comments here

http://tamilnational.com/world-news/austra...-in-sydney.html

  • கருத்துக்கள உறவுகள்

தேசம், நீங்கள் சொன்ன இணையத் தளத்தில் எனது இன்றைய அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறேன். வாசித்து விட்டுச் சொல்லுங்கள்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நேர்முகவர்ணணைக்கு நன்றி ரகு. பங்கு பற்றிய, இந்நிகழ்வை ஒருங்கிணைத்த அனைவருக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆதரவிற்கு நன்றி நுணா!

  • கருத்துக்கள உறவுகள்

சில தமிழ் நாட்டுத் தமிழர்கள் , வெள்ளைக்காரர்கள் உட்பட வேறு நாட்டவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்ட நையீரியா நாட்டவர் ஒருவரின் புகைப்படம்

sydney20090328005.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.