Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு குறுக்கே நிற்பது யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு குறுக்கே நிற்பது யார்?

வீரகேசரி வாரவெளியீடு 3/29/2009 3:56:54 PM -

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு இப் போது சர்வதேச ரீதியில் பேசப்படும் வலியுறுத் தப்படும் ஒரு விவகாரமாகி விட்டது.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப் பட வேண்டும். இராணுவத்தீர்வு சாத்திய மில்லை என்று பல்வேறு நாடுகள் இலங்கை அரசாங்கத்தை அழுத்திப் பிடிக்கத் தொடங்கி விட்டன.

இந்தக் கட்டத்தில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் பொறுப்பு யாருக்கு இருக்கிறது? அரசாங்கத் துக்கா? விடுதலைப் புலிகளுக்கா? சர்வதேச சமூகத்துக்கா? அல் லது வேறு அரசியல் கட்சிகளுக்கா என்ற கேள்வி எழுகிறது. அரசியல் தீர்வு காண்பதற்கு குறுக்கே நிற்பது யார் என்ற கேள்விக்கு தமிழ் மக்களிடத்தில் பதில் கேட்டால் அரசாங்கத்தின் மீதே அவர் கள் குற்றச்சாட்டை முன்வைப்பார்கள்.

அதேவேளை சிங்கள மக்கள் மத்தியில் கேட்டால் அவர்கள் புலிகள் மீது குற்றச் சாட்டை முன்வைக்கக் கூடும். இந்தக் கேள்விக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன் றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார்.

"ஏசியன் ரிபியூன்' இணையத்தளத்துக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ""தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்து ழைப்பு வழங்காததால்தான் இனப்பிரச்சினைக் கான அரசியல் தீர்வு குறித்துத் தீர்மானிப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். தொடர்ச்சியாக அழைப்புகள் விடுக்கப் பட்டபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேசத் தவறிவிட்டது.

இந்தநிலையில் எப்படி அதிகாரப் பகிர்வு யோசனை குறித்து நாம் திட்டமிட முடியும்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மூன்று தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்ட போதும் விடுதலைப் புலிகளின் கட்டளையின் பேரில் அவர்கள் அதற்கு வெளிப்படையாகவே பதிலளிக்கவில்லை.

இலங்கை அரசாங்கத்துடன் எதுவும் பேசக் கூடாது என்ற பிரபாகரனின் கடும் உத்தரவி னால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் கள் இருக்கிறார்கள் என நினைக்கிறேன். ஜனாதிபதி என்ற வகையில் நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பேச அழைக்கி றேன்.

அவர்கள் தமிழ்நாட்டுத் தலைவர்களிடமும் சர்வதேச சமூகத்திடமும் என்னிடம் பேசுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்'' என்றுகூறியுள்ளார். அத்துடன் ""தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளே அவர்களது யோசனையுடன் வந்து எம்முடன் பேசுவதற்கு விருப்பமில்லாமல் இருந்தால் அனைத்துத் தமிழ் சமூகமும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வுத் திட்டமொன்றை எம்மால் எப்படி ஏற்படுத்த முடியும்?'' என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை வழங்கும் திட்டம் இப்போதுகூட அரசாங்கத்திடம் இல்லாத நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் குற்றம்சாட்டத் தொடங்கியிருக்கிறது.

இதே மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திடம் ஜெனிவாவில் நடந்த இறுதிச் சுற்றுப் பேச்சின் போது அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வையுங்கள் பேசலாம், என்றனர் புலிகள்.

அப்போது அரசதரப்புப் பிரதிநிதிகள் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் கூட்டத்தில் ஆராய்ந்து தீர்வுத் திட்டத்தைத் தயாரித்துக் கொண்டு வருகிறோம் என்று கூறிவிட்டு வந்தனர்.

ஆனால், இன்று வரையில் இனப்பிரச் சினைக்கு அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைக்க முடியாத நிலையில் தான் அரசாங்கம் இருக்கிறது. தமது தரப்பு பலவீனத்தை மறைத்துக் கொள்வதற்காக, தமிழர் தரப்பே அரசியல் தீர்வுக்கு தடையாக இருப்பதான குற்றச் சாட்டை அரசாங்கம் இப்போது முன்வைக்கத் தொடங்கியிருக்கிறது.

புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட பின்னர் தமிழ்மக்களுக்கு புதியதொரு தலைமையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்றும் அது புலிகள் சார்பில்லாத ஒன்றாக இருக்க வேண் டும் என்றும் அமைச்சர் டியூ குணசேகர அண் மையில் கூறியிருந்தார்.

இன்னொரு புறத்தில் புலிகள் சார்புள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் பேச வராததால்தான் தீர்வுத் திட்டத்தைத் தயாரிக்க முடியவில்லை என்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அதேவேளை நாட்டில் இனப்பிரச் சினையே கிடையாது. பயங்கரவாதப் பிரச்சினை தீர்ந்தால் சரி என்று சில அமைச்சர்கள் கூறிவருகின்றனர்.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அப்பால் அதிகார பரவலாக்கம் öசய்ய முடியாது என்று சில அமைச்சர்கள் கூறிவருகின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அரசியல்தீர்வுக்குத் தடையாக இருப்பதாகக் குற்றம்சாட்டிய பின்னர் அவரது ஆலோசகர் பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா போன்றோர் இன்னொரு கருத்தை தெரிவித்திருக்கிறார் கள்.

முதலில் புலி களை அழித்து பயங்கர வாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம். அதற்குப் பின் னர் தான் அரசியல் தீர்வு பற் றிப் பேசலாம் என்று அவர்கள் கூறியிருக் கிறார்கள். அதாவது போர் முடியும் வரை அரசியல் தீர்வு பற்றி எந்தப் பேச்சும் கிடையாது என் பதே அவர்களின் கருத்து.

இதில் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியின் ஆலோசகர், சகோதரர். அதிகாரம் மிக்க அமைச்சர்களைவிட சக்திவாய்ந்தவராக இவர் கருதப்படுகிறார். அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பேச்சாளர். அவருக்குத்தான் அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பேட்டியானது அரசாங்கம் இப்போதே அரசியல் தீர்வுக்குத் தயாராக இருப்பது போன்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் அதற்குக் குறுக்கே இருப்பது போன்ற தொனியையும் வெளிப்படுத்துகிறது. அதேவேளை பசில் ராஜபக்ஷ மற்றும் அனுர பிரியதர்சன யாப்பா ஆகியோரின் கருத்துக்கள், போர் முடிவுக்கு வராமல் அரசியல் தீர்வு பற்றிப் பேச முடியாதென்ற தொனியில் இருக்கின்றன. ஆக மொத்தத்தில் அரசாங்கத் தரப்புக்கே அரசியல் தீர்வு பற்றிய தெளிவான முடிவு இல்லை.

குழப்பத்தின் உச்சியில் இருக்கின்ற அரசாங் கத் தரப்புக்கு வெளியுலக நெருக்கடிகள் வந்த தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது பழி போட்டுத் தப்பிக்கும் எண்ணம் வந்துவிட்டது போலும்.

சர்வதேச சமூகத்திடம் இருந்து இப்போது அரசியல் தீர்வு பற்றிய கருத்துகள் அதிகளவில் வெளிவரத் தொடங்கியுள்ளன. இந்திய வெளியுறவு செயலர் சிவசங்கர் மேனன் கூடுதல் அதிகாரங்களுடனான அரசியல் தீர்வின் மூலமே இனப்பிரச்சினைக் குத் தீர்வு காண முடியும் என்று அண்மையில் கூறியிருக்கிறார்.

ஆனால், இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்கத் தயாராக இல்லாத அரசாங்கம் அதற்கான பழியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது போட்டுவிட்டு தான் தப்பித்துக் கொள்ள முற்படுகிறது.

அரசாங்கம் முன்வைக்கும் அரசியல் தீர்வுத் திட்டம் நியாயமானதாகவோ, தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதாகவோ இருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கீகாரத்துக்காக காத்து நிற்கத் தேவையில்லை. ஏன் புலிகள் கூட வேண்டியதில்லை. அரசாங்கமே அதைச் செய்து விட்டுப் போகலாம். ஆனால் தமிழ்மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் நியாயமான அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைப்பதற்கு அரசாங்கம் துணியவில்லை.

அரசியல் தீர்வு பற்றிய பேச்சு என்று காலத்தை இழுத்தடிக்க இப்படியான நடைமுறைகள் அரசாங்கத்துக்குத் தேவைப்படுகிறது. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் என்ற குண்டுச் சட்டிக்குள் தான் அரசியல் தீர்வு என்ற குதிரையை ஓட்டுவதென்று தீர்மானித்து விட்டது அரசாங்கம்.

இதற்கு அப்பால் அரசாங்கம் வரத் தயாராக இல்லாத நிலையில் அரசியல் தீர்வு பற்றிப் பேச வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையோ, தமிழர் தரப்பில் இருந்து வேறொருவரையோ வருமாறு அழைப்பதில் அர்த்தமில்லை. அரசாங்கம் அரசியல் தீர்வு காண்பதென்று உறுதியான முடிவை எடுத்தால் முதலில் 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வைத் தேடுவதற்குத் தயாராக வேண்டும். நியாயமான அதிகாரப் பகிர்வுக்குத் தயாராக வேண்டும். இந்த மாற்றங்கள் ஏதும் நிகழாமல் இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பதென்பது, எந்தக் காலத்திலும் முடியாத ஒன்றாகவே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு குறுக்கே நிற்பது யார்?

வீரகேசரி வாரவெளியீடு 3/29/2009 3:56:54 PM -

இனப்பிரச்சினையைத் தோற்றுவித்த சிங்கள பேரினவாதக் கட்சிகள் முதலில் தமது தவறை ஒத்துக் கொண்டு திருந்துவதூடாக மட்டுமே உண்மையான தீர்வு பற்றிச் சிந்திக்க முடியும். ஆனால் இது நிகழப்போவதில்லை என்பது நாம் கண்ட பட்டறிவாகும்.சிங்களம் எப்போதும் தனக்கு நெருக்கடிவரும்போது அதனைத் திட்டமிட்டுத் திசைதிருப்பித் தமிழரின் தலையிற்ப் போட்டுவிட்டுத் தப்பிக்கொள்ளும் நரித்தனத்தில்(இராசதந்திரம்) கைதேர்ந்தது என்பதும் உண்மையானது.

இதனை நாமும் சரியான முறையில் பரப்புரையூடாக அனுக வேண்டும்.1920 முதல் இன்றுவரை சிங்களத் தரப்புச் செய்த தவறுகளைச் சரியாக நிரல்வாரியாக வெளியிடுவதூடாகத் தோலுரித்துக் காட்டலாம். ஏன் தமிழ் நாளிதழ் என்ற வகையிலே வீரகேசரி கூடச் செய்யலாமல்லவா?

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதுவரை நடந்த பேச்சுக்களும் தோல்விக்கான காரணங்களும்

நான் எப்பொழுதும் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே செயலால் வளர்ந்த பின்னரே நாம் பேசத் தொடங்கவேண்டும்.

தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள்.

பேசித்தீர்க்கும் நடைமுறைகள் பல தடவை மேற்கொள்ளப்பட்டாலும் ஒன்றிலாவது தமிழர்களின் கோரிக்கை நிறைவேறவில்லை. 1920 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரையான காலம்வரை தமிழ் - சிங்களத் தரப்பினர் நடத்திய பேச்சுவார்த்தைகள் பலனளிக்கத் தவறியுள்ளன. அவை முடிவிலாது இழுபட்டபின் இறுதியில் கைவிடப்பட்டன. முறியும் தருவாயை நெருங்கும்போது பேச்சுக்களுக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சி எடுக்காமல் போருக்குச் செல்வதுதான் சிறிலங்காவின் வழமை. நாமே நாடு, நமக்கே எல்லாம் என்ற சிங்களத் தலைமையின் சிந்தனை பேச்சுக்களின் தோல்விக்கு அடிப்படைக் காரணமாக அமைகின்றது.

இலங்கையில் பேச்சுவார்த்தைகள் என்ற தலைப்பில் பத்திரிகைக் கட்டுரை எழுதிய அரசியல் துறைப் பேராசிரியர் ஜெயதேவ உயங்கொட, ஷஇலங்கையில் இனப்பிரச்சினை வரலாறு மீண்டும் மீண்டும் திரும்பி வருவதுதான் மிகவும் வருத்தமான அம்சம். தீர்வுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போதெல்லாம் வரலாறு மீண்டும் திரும்பி வருகின்றது| என்று சுட்டிக் காட்டியுள்ளார். இவர் குறிப்பிடும் வரலாறு பல தசாப்பங்களைக் கடந்து கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. வரலாறை மேலெழுந்தவாரியாக குறை கூறுவதில் பயனில்லை. வரலாறை இயக்கும் காரணிகளை நோக்கவேண்டும்.

பேராசிரியர் குறிப்பிடும் வரலாற்றுச் சுழற்சி 1920ல் ஆரம்பிக்கின்றது. அந்த நாட்களில் நடந்தவற்றை விரிவாக ஆராய வேண்டிய அவசியம் எழுகின்றது. வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்குதல், அப்பட்டமான பொய்யுரைகளைச் சொல்லிச்சொல்லி ஏமாற்றுதல் போன்ற கீழ்த்தரமான அம்சங்களை அங்கு சந்திக்கலாம். அன்றைய சிங்களத் தலைமை அவ்வாறு நடவாதிருந்தால் வரலாறு மீண்டும் மீண்டும் வருவதற்கு சந்தர்ப்பம் ஏற்படாது. 1920 ஆம் ஆண்டிற்குத் திருப்புமுனை முக்கியத்தவம் உண்டு. இலங்கையர்கள் என்ற பரந்த தேசிய அடையாளத்தை தூக்கிப்பிடித்த முத்துக்குமாரசாமி, இராமநாதன், அருணாசலம் போன்ற தமிழ்த் தலைவர்களின் சிந்தனை வேறுவிதமாக மாற 1920 நிகழ்வுகள் உதவின.

1920க்குப் பின் இக்காலகட்ட நிகழ்வுகளால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பொன். அருணாசலம் இதுவரை காலம் கடைப்பிடித்த பரந்துபட்ட தேசியத்தைக் கைவிட்ட இன அடையாளத்தை முதன்மைப்படுத்த ஆரம்பித்தார். இதை புதிய சகாப்பத்தின் பிறப்பாகக் கொள்ளலாம். சிங்கள மக்கள் மத்தியில் நெடிதுயர்ந்த தலைவர்கள் தோன்றாத காலத்தில் முத்துக்குமாரசாமி, இராமநாதன், அருணாசலம் போன்றோர் அக்குறையைத் தீர்த்துவைத்தனர்.

சிங்கள மக்களுக்காக அவர்கள் குரல் கொடுத்தனர். சிங்கள மொழிக்கும், பௌத்த மொழிக்கும், பௌத்த மதத்திற்கும் இடையூறு வந்த பொது இவர்கள் இரண்டையும் காத்துநின்றனர். அழிவுற்ற கீழைத்தேயப் பண்பாட்டை புனரமைக்கும் பணியினைத் தொடக்கியவர் கலாயோகி ஆனந்த குமாரசாமியின் தந்தையான முத்துக்குமாரசாமி, சிங்களவர் மத்தியில் கிறிஸ்தவப் பரப்பலைத் தடுத்து நிறுத்தவதற்கு சகோதரர்களான இராமநாதனும், அருணாசலம் பெரும் பிராயத்தனம் எடுத்தனர்.

இப்படியாக சிங்களவர்களோடு ஊடும் பாவும் போல், நகமும் சதையும் போல செயற்பட்ட தமிழ்த் தலைவர்களின் மனம் மாறுவதற்கு என்ன காரணம்? 1913 இல் நீண்ட கால அரச சேவையில் இருந்து பொன். அருணாச்சலம் ஓய்வுபெற்றார். தனது ஓய்வுகாலத்தை அரசியலுக்கு அர்ப்பணித்த அவர், 1917 இல் அரசியல் சீர்திருத்தக் கழகத்தை உருவாக்கி பூரண சுதந்திரத்திற்காக குரல் கொடுத்தார். இதற்கான பிரச்சாரத்தை தீவின் பல பாகங்களில் மேற்கொண்டார். அத்தோடு இனரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் செயற்பட்ட பல்வேறு பொது அமைப்புகளையும் தானே முன்னின்று ஒன்றிணைத்து 1919 இல் இலங்கை தேசிய காங்கிரசை உருவாக்கினார்.

1920 வரை சிங்கள அரசியல் தலைவர்களிலும் பார்க்க சிறந்த தேசிய வாதியாகத் திகழ்ந்த அருணாசலத்திற்கு அவர் வளர்த்தெடுத்த சிங்களத் தலைவர்கள் பலமான அடி கொடுத்தனர். அதன் பயனாய் இலங்கைன் என்ற அடையாளத்தைத் தாங்கி நின்ற அவர் தமிழர் என்ற அடையாளத்தை நோக்கி அடிவைத்தார். தேசிய காங்கிரசை உருவாக்கிய அருணாசலம் அந்த அமைப்பின் சாதாரண அங்கத்தவர் என்ற பதவியையும் உதறித்தள்ளிவிட்டு வெளியேறினார். இலங்கை தேசிய காங்கிரசின் முதலாவது தலைவராகப் பதவிவகித்தவர் அருணாசலம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கூறிய இலங்கை தேசிய காங்கிரசை உருவாக்கும் காலத்தில் சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இலங்கை தேசிய சங்கத்தையும், தமிழர்களை மாத்திரம் கொண்ட யாழ் சங்கத்தையும் ஒன்றிணைக்கும் சாதனையை அருணாசலம் நிறைவேற்றினார். இரு அமைப்புகளும் வௌ;வேறு நிலைப்பாடுகளைக் கொண்டிருந்த காரணத்தால் அருணாசலத்தின் பணி மிகவும் கடினமானதாக இருந்தது. இலங்கை தேசிய சங்கம் இனவாரிப் பிரதிநிதித்துவத்தைப் புகுத்தும் நோக்கில் செயற்பட்டது. யாழ் சங்கமோ இனவாரிப் பிரதிநிதித்துவம் நீக்கப்படுமாயின் சமபலப் பிரதிநிதித்துவம் பேணப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இறுக்கமாக நின்றது.

இலங்கை தேசிய சங்கத்தின் தலைவர்களான ஜேம்ஸ் பீரிஸ், ஈ.ஜே. சமரவிக்கிரமசிங்க, எவ்ப். ஆர் சேனாநாயக்கா ஆகியோர் எதுவிதமாகிலும் இனவாரிப் பிரதிநிதித்துவம் அகற்றப்படவேண்டாம் என்பதில் பிடிவாதமாக இருந்தனர். இதனால் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தைக் கூட்டவேண்டிய கட்டாயம் தோன்றியது. அருணாசலம் இரு சங்கங்களின் தலைவர்களையும் சந்தித்து சமரசம் செய்ய விளைந்தார். தமிழர்களுக்குத் திருப்திகரமான பிரதிநிதித்துவ ஒழுங்கைச் செய்யும் நோக்குடன் அவர் சிங்களத் தலைவர்களை பலமுறை சந்தித்தார்.

வடமாகாணத்தில் மூன்றும். கிழக்கு மாகாணத்தில் இரண்டும், மேல்மாகாணத்தில் ஒன்றும் வரக்கூடிய தேர்தல் தொகுதிகளை தமிழர்களுக்கு விட்டுக் கொடுப்பதற்கு இலங்கை தேசிய சங்கத் தலைவர்கள் ஒத்துக்கொண்டனர். இதற்கான உறுதிமொழி அடங்கிய கடிதத்தை சிங்களத் தலைவர்கள் சார்பில் ஜேம்ஸ் பீரிஸ், ஈ.ஜே. சமரவிக்கிரம ஆகிய இருவரும் தமது கையொப்பத்துடன் அருணாச்சலத்திடம் கொடுத்தனர். இக்கடிதத்தை யாழ் சங்கத் தலைவர் ஏ. சபாபதியிடம் தேர்தல் திட்டத்திற்கு அருணாசலம் ஒப்புதல் வாங்கினார்.

டிசெம்பர் 11, 1919 இல் இலங்கை தேசிய காங்கரசின் அங்குரார்ப்பணக் கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. அதன் தலைவராக அருணாசலம் ஏகமனதாகத் தெரிவானார். கடும் பிராயத்தனம் செய்து பலதரப்பட்ட அமைப்புக்களை ஒன்றிணைத்து பல்லினமும் ஐக்கியப்பட தேசிய இயக்கத்தை தோற்றுவித்த அதே அருணாசலம் சில காலத்தின் பின் மனமுறிவுடன் வெளியேறிய வரலாறு இலங்கை இனமுரண்பாட்டின் அடித்தளமாக அமைகின்றது. இலங்கையின் முதலாவது தமிழ்த் தேசிய அமைப்பையும் சிறிது காலத்தின்பின் உருவாக்கினார் என்பது மறுக்கமுடியாத வரலாறு.

பிரிட்டிசாரிடமிருந்து இலங்கையர்களுக்கு படிப்படியாக அதிகாரம் கைமாறிய போது அத்தகைய அதிகாரங்களை சிங்களவர்களுக்கு மாத்திரமே என்று சிங்களத் தலைவர்கள் எண்ணினர். தேசாதிபதி மானிங் அரசியல் சீர்திருந்தம் என்பதின் கீழ் நடந்த தேர்தலில் 13 சிங்களவர்களும், வடக்கு கிழக்கு ஆகியவை ஒவ்வொன்றிற்கும் தலா ஒருவர் தெரிவானார். தேசிய காங்கிரஸ் வாக்களித்தபடி வடகிழக்கில் இருந்து 5 பிரதிநிதித்துவமும், மேல் மாகாணத்தில் ஒரு பிரதிநிதித்துவமும் கிடைத்திருக்கவேண்டும். இச்சந்தர்ப்பத்தில் இனப்புறக்கணிப்பின் சுயரூபத்தை அருணாசலமும் தமிழர்களும் உணர்ந்தனர். தேசாதிபதி மானிங் மாத்திரம் மனமிரங்கி தனது சீர்திருத்த ஒழுங்கின் கீழ் சிறப்பு உறுப்பினர்களின் ஒருவராக இராமநாதனை நியமித்தார்.

இதனால் மூன்று தமிழர்கள் பிரதிநிதிகளாயினர். நடுவராக நின்ற அருணாசலம், சிங்களத் தலைவர்களின் வாக்குறுதி சம்பந்தமாக நேரில் சென்று பேசினார். அருணாசலத்தை அவர்கள் அவமதித்து அனுப்பினர். தமது உறுதிமொழிகளைத் தாமே உதாசீனம் செய்தனர். இதற்கு இரு காரணங்களையும் அவர்கள் கூறினர். பீரிசும், சமரவிக்கிரமவும் தமது சுயவிருப்பில் மாத்திரம் கடித மூலமான உறுதிமொழியை வழங்கினர். அவர்கள் தேசிய காங்கிரஸ் சார்பாக உறுதிமொழி வழங்கிவில்லை. இரண்டாவதாக, உறுதிமொழி இலங்கை தேசிய சங்கம், இலங்கை சீர்திருத்த சங்கம் போன்றவற்றைக் கட்டுப்படுத்துமே ஒழிய கடிதம் வழங்கப்பட்டபின் உருவாகிய இலங்கை தேசிய காங்கிரசை கட்டுப்படுத்தமாட்டாது.

தீட்டிய தடியில் கூர்பார்க்கும் இந்த விதண்டாவாதப் போக்கு அருணாச்சலத்தை மனமுடையச் செய்தது. தமிழர்கள் ஏமார்ந்தது இதுவே முதல் தடவை. மனம் வெதும்பிய அருணாச்சலம் யாழ் திரும்பினார். பொதுக் கூட்டங்களைக் கூடித் தமிழர்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய வகையில் ஷதமிழ் ஈழம்| ஒன்றை அமைப்பதே நன்றெனப் பகிரங்கமாகப் பேசினார். இந்த நோக்கத்தை எட்டுவதற்காக அவர் ஆகஸ்ட் 15, 1921இல் தமிழர் மகாஜன சபை என்ற அமைப்பை உருவாக்கினார். ஜனவரி 09, 1924இல் அவர் மதுரை மீனாட்சி அம்மன் தரிசனத்திற்காக சென்ற வேளையில் அங்கு திடீர் மரணமடைந்தார். இதனால் தமிழர் மகாஜன சபையும் வலுவிழந்தது. இறுதிவரை சிங்களவரின் நம்பிக்கைக்குரியவராக இருந்த தமையன் இராமநாதன் 1930 வரை உயிர் வாழ்ந்தார்.

'உடைந்த உடன்படிக்கையின் சிதறல்களை கடந்த ஐம்பது வருடகாலம் பழமை வாய்ந்த இரு இன உணர்வுப் பாதையில் பரவிக்கிடப்பதாக" இலங்கை இனத்தவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உடன்படிக்கையைச் செய்யும் போது அதை எப்படி உடைக்கலாம் அல்லது சமயோசிதமாக மீறலாம் என்ற முன்யோசனையுடனேயே சிங்களத் தலைவர்கள் கைச்சாத்திடுகின்றனர் என்ற நியாயமான விமர்சனமும் நிலவுகின்றது. சிங்களவர்களின் இந்த வகை நடவடிக்கைகளுக்கு தமிழ்த் தலைவர்களும் உடந்தையாக இருக்கின்றனர். நம்ப நட ஆனால் நம்பாதே என்ற பழமொழியை இவர்கள் அறியவில்லைப் போலும்.

வவுனியாப் பாராளுமன்ற உறுப்பினர் காலஞ்சென்ற சி. சுந்தரலிங்கம், முதன்முதலாக தமிழ் ஈழக் கோரிக்கையை முன்வைத்ததாகச் சொல்லப்பட்டாலும் அது உண்மையல்ல. முதற்குரல் எழுப்பியவர் அருணாசலம் என்பதே உண்மை. இருவரும் ஏமாற்றபப்ட்டு மனமுடைந்த நிலையிலேயே இக்கோரிக்கையை விடுத்தனர். 1931இல் டொனமூர் ஆணைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஸ்ரேற் கவுன்சில் (ளுவயவந ஊழரnஉடை) ஆட்சி முறையின் கீழ் 1936 இல் தனிச் சிங்கள அமைச்சரவையை அமைப்பதற்கு தனது கணித மூளையைப் பயன்படுத்தி ஆலோசனை வளங்கியவர் தான் மேற்கூறிய சுந்தரலிங்கம். இவர்களுடைய ஈழத்திற்கான குரல் கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரத்திற்கு ஒப்பானதாகும்.

இதே ஸ்ரேற் கவுன்ஸில் அரசமைப்பில் சபாநாயகர் பதவி வகித்த வயித்திலிங்கம் துரைசாமி என்பவரும் தமிழர்களின் உரிமைகளை வென்றேடுப்பதற்கு சிங்களத் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தினார். இவருடைய வேலணை வீட்டில் வைத்து சிங்கள - தமிழ் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இது ஓசைப்படாமல் சிங்களத் தலைவர்களால் கைவிடப்பட்டது. ஆனால் பதவியே கதியென்று வயித்திலிங்கம் துரைசாமி வாளாவிருந்தார்.

1948 இல் சிங்களவர்கள் சுதந்திரம் பெற்றபின் தமிழர்களை ஏமாற்றும் நடைமுறை தொடர்ந்தது. 1956இல் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் பின்வருமாறு கூறினார். 'சிறுபான்மையினரின் உரிமைகளை மறுக்கமாட்டார்கள் என்ற அடிப்படையில் சிங்களத் தலைவர்களின் நம்பகத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு பிரிட்டிசார் அரசுரிமையை சிங்களவர் வசம் ஒப்படைத்தனர். தங்களுடைய பெரும்பான்மையை பயன்படுத்தும் சிங்களத் தலைமை தங்களுடைய உரிமைகளை மறுக்கின்றது". தமிழர்களின் சுயநிர்ணயக் கோரிக்கையின் சாராம்சத்தை இவ்வுரை கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதைத் தொடர்ந்து 1957 இன் நடுப்பகுதியில் இலங்கைப் பிரதமருக்கு 'தமிழர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்பதை நான் இப்போது நம்புகிறேன். சிங்களக் குடியேற்றம் மூலமான அழிவிலிருந்து தமிழர்கள் தமது எதிர்காலச் சந்ததியினரைக் காத்துக்கொள்ள வேண்டும். தன்னாட்சி பெற்ற தமிழ் இலங்கை ஒன்றுதான் எமக்குள்ள ஒரே வழி" என்ற வாசகங்கள் அடங்கிய பகிரங்கக் கடிதத்தை வவுனியா சுந்தரலிங்கம் பிரதமர் பண்டாரநாயக்காவுக்கு எழுதினார்.

ஜுன் 1956 இல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தனிச் சிங்களச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இனத்துவ வரலாற்றில் ஒரு மைல் கல்லாகவும், இரு இனங்களையும் சட்டபூர்வமாக மொழி அடிப்படையில் பிளவு படுத்திய விதிமுறையாகவும் இது கருதப்படுகின்றது. இச்சட்டம் நிறைவேறிய மூன்று மாதங்களின் பின் ஆகஸ்ட் 1956 இல் சம~;டிக் கட்சி செல்வநாயகம் தலைமையில் திருகோணமலை மகாநாட்டைக் கூட்டியது. இந்த மாநாடு நான்கு முக்கிய கோரிக்கைகளை விடுத்தது. சம~;டி அரசமைப்பு அடிப்படையில் வடக்கு கிழக்கிற்குச் சுயாட்சி, வடக்குக் கிழக்கில் சிங்களக் குடியேற்ற நிறுத்தம், தமிழ் - சிங்கள மொழிகளுக்கு உத்தியோகபூர்வ சமத்துவம், மலையகத் தமிழர்களுக்கு இலங்கைக் குடியுரிமை.

இதைத் தொடர்ந்து 1957 இல் பண்டா - செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதற்கான சட்டவரைபு மே. 17 1957 இல் பிரசுரிக்கப்பட்டது. இது பின்வரும் விடயங்களை ஏற்றுக்கொண்டது:- இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாகச் சிங்களம் தொடரும், வடக்குக் கிழக்கின் நிர்வாக மொழியாக தமிழ் இடம் பெறும். நாடு பூராகவும் பிராந்திய நிர்வாக அமைப்பு அறிமுகப்படுத்தப்படும். குடியேற்றத்தை நிறுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிக்கப்படும். இவை யாவும் இதன் பின் நடந்த நிகழ்ச்சிகள் காரணமாக பிரமதர் பண்டாரநாயக்காவினால் ஒரு தலைப்பட்சமாக கைவிடப்பட்டதோடு உடன்படிக்கையும் அவரால் கிழித்தெறியப்பட்டது.

ஏப்ரல் 09, 1958 இல் பண்டாரநாயக்கா வீட்டின் முற்றத்தில் சில பிக்குகள் பண்டா - செல்வா உடன்படிக்கையை எதிர்த்து சத்தியாக்கிரகம் செய்தனர். இதைவிட ஜெயவர்த்தனா தலைமையில் யூ.என்.பி. கட்சியினர் இதற்கு முன்பே 1957 ஒக்டோபர், 2-3 இல் கண்டிக்குப் பாதையாத்திரை சென்றார்கள். இந்த எதிர்ப்புடன் பண்டாவின் கட்சியில் சிலரும் உடன்படிக்கைக்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள். சத்தியாக்கிரகம் செய்த பிக்குகளின் கோரிக்கைக்கு அமைவாக உடன்படிக்கை ஒரு தலைப்பட்சமாக பண்டா நிராகரித்தார். 1956இல் மீண்டுமொரு உடன்படிக்கையை அப்போது பிரதமர் பதவி வகித்த டட்லி சேனாநாயக்காவுடன் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் செய்துகொண்டார். இது டட்லி - செல்வா உடன்படிக்கை என்று அறியப்படுகின்றது. இந்த உடன்படிக்கை பின்வருவனவற்றை உள்ளடக்கியது. வடக்குக் கிழக்கில் நிர்வாக மொழியாகத் தமிழ் இடம்பெறும். வடக்கு கிழக்கில் நீதிமன்றங்களில் தமிழ்மொழி பயன்படுத்தப்படும். மாவட்ட சபைகள் மூலம் அதிகாரப்பங்கீடு செய்யப்படும். தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் நியாயமானளவுக்கு சிங்களக் குடியேற்றம் நிறுத்தப்படும். மகா சங்கத்தினர் மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்ப்புக் காரணமாக இதுவும் கைவிடப்பட்டது. 'கடவுள் தான் இனி தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும்" என்ற பிரகடனத்துடன் எஸ்.ஜே.வி. கையை விரிக்கிறார்.

1970 களில் தமிழர்களுக்காகப் பேசும் ஏகபோக உரிமையைத் தமிழ் அரசியல்வாதிகள் இழக்கின்றார்கள். பொறுமை இழந்த ஆயுதம் தரித்த தமிழ் இளைஞர்கள் உரிமைப் போரைத் தொடக்குகின்றனர். இவர்கள் முதன்முறையாகத் தமிழர் பிரதிநிதிகளாகப் பேச்சுக்களில் ஈடுபடுகின்றனர். பூட்டான் தலைநகர் திம்புவில் 1985 இன் திம்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. தமிழர் தரப்பில் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை உட்பட நான்கு முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. சிறிலங்காவின் இறைமைக்கும் தளப்பரப்பு ஒருமைக்கும் அவை முரணானவை என்று காரணம் காட்டி அவற்றை அரச தரப்பினர் நிராகரிக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து தமிழர் கூட்டணி (வுருடுகு) தலைமையிலான சர்வ கட்சி மாநாடு கொழும்பில் 1986 இல் நடைபெறுகின்றது. பலதரப்பட்ட கோரிக்கைகள் கூட்டணியினரால் முன்வைக்கப்பட்டன. ஆனால் ஒரு தீர்மானமும் எட்டப்படாமல் இழுபறி தொடர்ந்தது. தாம் ஒரு செல்லாத காசு என்பதைக் கூட்டணியினர் இதன்மூலம் நிரூபித்துள்ளனர்.

இதற்கு அடுத்த கட்டமாக சிறிலங்கா - இந்தியா உடன்படிக்கையில் (வுhந ளுசi டுயமெய - ஐனெயை யுஉஉழசன ழக 1987) ராஜீவ், ஜெயவர்த்தனா ஆகியோர் தமது நாடுகளின் சார்பில் கையொப்பமிட்டனர். பெயரளவில் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாக இவ்வுடன்படிக்கை பிரகடனப்படுத்தப்பட்டாலும் அது இந்திய நலனைக் குறிவைத்தே செய்யப்பட்டது. நடுவராக நுழைந்த இந்தியா, சிங்கள அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டதோடு தமிழர்களுக்கு எதிராக இராணு ரீதியாகச் செயற்படத் தொடங்கியது. இந்திய இராணுவம் தன்னை அமைதிப்படை என்று கூறிக்கொண்டாலும் தமிழர்கள் அதனை ஆக்கிரமிப்பப் படையாகவே பார்த்தனர். இந்தியத் தலையீடு ஒரு பாரியளவு தோல்வியாக முடிந்தது. கிடப்பில் போடப்பட்டதாக முன்பு சொல்லப்பட்டாலும் இந்த உடன்படிக்கை மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஜனாதிபதி பிரேமதாசா தலைமையிலான சிறிலங்கா அரசுக்குமிடையிலான பேச்சுக்கள் இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்துடன் ஆரம்பமாகின. இவை ஹில்ரன் (ர்டைவழn வுயடமள) என்று அழைக்கப்படுகின்றன. சிறிலங்கா அரசுடன் பேச்சுவார்த்தைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தை அணியினர் ஹில்ரன் நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டதன் காரணமாக இவ்வாறு அழைக்கப்படுகின்றது. 1989 தொடக்கம் 1990 வரை இப்பேச்சுக்கள் நீடித்தன. விடுதலைப் புலிகள் இப்பேச்சின் போது அரசின் இழுத்தடிப்பு உபாயத்தை நேரடியாகச் சந்தித்தனர்.

வடக்கு கிழக்கு நிரந்தர இணைப்பையும் கூடுதல் அதிகாரப்பகிர்வையும் புலிகள் இப்பேச்சின் போது கேட்டனர். இராணுவம் முகாமிற்குள் முடங்கியிருக்க வேண்டுமென்றும் சில இடங்களிலிருந்து இராணுவம் முற்றாக வெளியேறவேண்டும் என்றும் புலிகள் கோரினர். தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் தமிழீழக் காவல்துறை சட்டம் ஒழுங்கிற்குப் பொறுப்பாக இருத்தல் வேண்டும் என்றும் பிறிதோர் கோரிக்கையை புலிகள் முன்வைத்தனர். அரசு இழுத்தடிப்பில் குறியாக இருந்தது. இதனால், புலிகள் வெறுப்படைந்தனர். இதற்கிடையில் புலிகள் தம்மைப் பலப்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டை சிறிலங்கா இராணுவம் எழுப்பியது. பேச்சுக்கள் தோல்வியுற மீண்டும் போர் தொடங்கியது.

அடுத்தாக, யாழ்ப்பாணப் பேச்சுக்கள் 1994 இல் தொடங்கி 1995 வரை இடம் பெற்றன. இப்பேச்சுகள் யாழ்நகரில் நடந்த காரணத்தால் இப்பெயர்வரக் காரணமாகியது. ஹில்ரன் பேச்சுக்களை யூ.என்.பி. அரசும், யாழ்ப்பாணப் பேச்சுக்களை சந்திரிகா தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி அரசும் நடத்தின. இப்பேச்சுவார்த்தைக்காக உலங்கு வானூர்தி மூலமாக கொழும்பிலிருந்து யாழ் வந்த அரசு தரப்பு பிரதிநிதிகளுக்குப் போதுமானளவு அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. அவர்கள் உயர் மட்டத்தினரும் அல்ல. புலிகள் தரப்பில் அதியுயர் உறுப்பினர்கள் பேச்சில் பங்கு பற்றினர். எல்லாவற்றிற்கும் மேலாக பேச்சுகள் நடந்துகொண்டிருக்கும் போதே பெருமளவு இராணுவத்தினர் தாக்குதலுக்குத் தருணம் பார்த்து பலாலியில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருந்தனர். பேச்சுக்கள் மீண்டும் ஒரு ஏமாற்று வித்தையாக அமைந்தது.

யாழ். பேச்சுக்களில் புலிகள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்தனர். வடக்கு மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடை நீக்கப்படவேண்டும். பூநகரி படைமுகாம் அகற்றப்படவேண்டும். கிழக்கில் ஆயுதம் தரித்து நடமாடுவதற்குப் புலிகள் அனுமதிக்கப்படவேண்டும். இவற்றை ஏற்றுக்கொள்ள அரசு சம்மதிக்காத காரணத்தால் பேச்சுக்கள் தோல்வியடைந்தன. தடைவிதிக்கப்ட்ட சில பொருட்கள் மீது தடைநீக்கம் செய்வதாக அரசு கூறியது. ஆனால், வவுனியா போன்ற இராணுவ முகாம்கள் தடையை அமுலாக்கின. பேச்சுவார்த்தை முறிந்த பின் கடும் போர் மூண்டது.

அடுத்த பேச்சுக்கள் வெப்ரவரி 22, 200 இல் செய்யப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையயோடு இன்று நிறுத்தப்பட்டிருந்தாலும், தொடரும் வாய்ப்புக்கள் தென்படுகின்றன. நோர்வே ஒழுங்குசெய்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் போர் நிறுத்த உடன்படிக்கையும் உள்ளடங்குகின்றன. வெப்ரவரி 24, 2002 தொடக்கம் போர்நிறுத்தம் அமுலில் இருக்கின்றது. சிறிலங்கா - இந்தியா உடன்படிக்கையின் கீழ் அமுலாக்கப்பட்ட போர்நிறுத்தம் யாழ் பேச்சுக்களின் போது தேசியத் தலைவர் அவர்களும் சந்திரிகாவும் செய்துகொண்ட ஜனவரி 08, 1995 போர்நிறுத்த உடன்படிக்கை (ஊநளளயவழைn ழுக ர்ழளவடைவநைள) ஆகியவற்றிற்கும் இப்போதைய போர் நிறுத்தத்திற்கும் இடையில் பாரிய வித்தியாசமொன்று உண்டு.

முதல் கூறியவை இரண்டும் இரு பகுதியினர் இணைந்து செய்துகொண்ட உடன்படிக்கைகள். இறுதியானது முன்றாம் தரப்பு அனுசரணையுடன் செய்யப்பட்டது. 1920 இல் இருந்து 2002 வரை செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் பற்றிய மேலோட்டமான விவரங்களை மாத்திரம் இங்கு தரக்கூடியதாக இருக்கின்றது. விரிவாக இவ்விடயத்தை ஆராய முற்படின் அது பெருமளவு பக்கங்களைக் கொண்ட ஆய்வு நூலாக இடம்பெறும். இப்போதைய பேச்சுக்களைப் பொறுத்தளவில் வரலாறு திரும்பினாலும் வியப்படைய தேவையில்லை.

'இலங்கையில் இனப்பிரச்சினை வரலாறு மீண்டும் மீண்டும் திரும்பி வருவதுதான் மிகவும் வருத்தமான அம்சம். தீர்வுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போதெல்லாம் வரலாறு மீண்டும் திரும்பி வருகின்றது"

Political war 1905

Riots 1915

Tamil Independence struggle began in the 1925

Banda - Chelva Pact, 1957

Dudley - Chelva Agreement 1965

District Councils White Paper, 1968

Vaddukoddai Resolution-1976

District Development Councils, 1979

Annexure C Proposals, 1983

The Thimpu Declaration-1985

Indo - Lanka Agreement, 1987

Sri Lanka - LTTE Talks: 1989/90

Chandrika - LTTE Talks: 1994/95

நன்றி - நிதர்சனம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.