Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திபெத்திய ஏதிலிகளுக்கு வெண்ணெய் ஈழத் தமிழ் ஏதிலிகளுக்குச் சுண்ணாம்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திபெத்திய ஏதிலிகளுக்கு வெண்ணெய்

ஈழத் தமிழ் ஏதிலிகளுக்குச் சுண்ணாம்பு!

இந்தியாவில் திபெத்திய ஏதிலிகள் மற்றும் ஈழத் தமிழ் ஏதிலிகள் பலர் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு இந்திய அரசு செய்யும் உதவி(?)களை இங்கு பட்டிய

லிட்டுள்ளோம்.

கர்நாடகாவிலுள்ள திபெத்திய ஏதிலிகள் முகாம்

ஏதிலிகள் எண்ணிக்கை. ஒரு முகாம் 22 பகுதிகளாகப் பிரிக்கப்பட் டுள்ளது. 5,232 ஏதிலிகள் உள்ளனர்.

வாழ்விடம்

தாங்கள் விரும்பியது போல் வீடு களைக் கட்டிக் கொள்வதற்கு அனுமதி (அனைத்தும் மாடி வீடுகள் மற்றும் அவர் களின் கலாச்சாரப்படி கட்டப்பட்ட ஓட்டு வீடுகள்)

சுகாதார வசதி:

தனியாக ஒவ்வொரு பகுதிக்கும் திபெத்தியர்களுக்கு தரமான, நவீன வசதி களுடன் தனி மருத்துவமனை (5 மருத்துவ மனைகள், 15 செவிலியர்களுடன் இயக்கப் படுகிறது) அவர்கள் தாங்களே வடிவமைத்துக் கொண்ட கழிப்பறை, குளியலறை.

கலாச்சாரம்

புத்த மத கலாச்சாரத்தின்படி, தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வும். உடைகள் அணியவும், வீடுகளைக் கட்டிக் கொள்ளவும், தங்கள் மொழியைப் பாதுகாத்துக்கொள்ளவும். அவர்களுக்கு முழு சுதந்திரம் இருக் கின்றது. (நாங்கள் அங்கு சென்று பார்த்த போது அது குட்டி திபெத் போல் தெரிந்தது)

மத சுதந்திரம்

தனியாக நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட புத்த கோயில் மற்றும் தலாய் லாமா கோயில்கள் (சுமார் பரப்பளவு 1 ஏக்கர் நிலத்தில்) தனியாக சுமார் ஐம்பது மாணவர் படிக்கக் கூடிய மதப்பள்ளி ஒன்றும். அதே போல் மதக் கல்லூரி ஒன்றும், தனித்தனியான மாணவர் விடுதிகள் உள்பட.

கல்வி

சகல வசதிகளுடன் ஈஇநஈ பாடத் திட்டத்தில் - தில்லி அரசாங்கத்தின் அனு மதி பெற்ற, திபெத்திய ஏதிலிக் குழந்தை களுக்கு மட்டுமான பள்ளி கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இது பத்தாம் வகுப்பு வரை மட்டும். 11, 12 படிக்க அரசே உதவி செய்து சிம்லா அனுப்பி வைக்கிறது. (அனைத்து செலவுகளையும் ஏற்று) மருத்துவ மற்றும் பொறியியல் படிப்புகள் படிக்க முறையே 3, 5 இடங் கள் ஒதுக்கப்படுகிறது. (அரசு செலவுடன்) திபெத்தியர்கள் தங்கள் உயர் கல்வியைத் தொடர கர்நாடகத்தில் எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம், அகதிகள் என்ற முத்திரையுடன்.

விவசாய நிலம்

மொத்தமாக இருக்கக் கூடிய மக்கள் தொகையில் 5232 பேர்களுக்கு பண்படுத்தப் பட்ட நீர் வசதியுடன் விவசாயம் செய்யத்தக்க 3,500 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தகவல் தொடர்பு

தனியாக இணைய வசதி இலவச மாக வழங்கப்படுகிறது. 22 பகுதிகளுக்கும் தனித்தனியாக செல்போன் டவர்கள் உள்ள தொலைபேசி வசதிகள்.

வங்கி

மொத்தம் நான்கு வகையான வங்கிகள், சிண்டிகேட் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், கூட்டுறவு வங்கி, வெளிநாட்டு பணம் பெற்றுக்கொள்ள ரங்ள்ற்ங்ழ்ய் மய்ண்ர்ய் ஙர்ய்ங்ஹ் பழ்ஹய்ள்ச்ங்ழ்.

தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள்

சுயமாக பால் பண்ணை வைக்க, பொருட்கள் உற்பத்தி பண்ணை, கடை வைத்துக் கொள்ள அரசே வட்டி மற்றும் நிபந்தனை இல்லாமல் கடன் வழங்கு கிறது. அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை வெளியில் சென்று விற்கவும், கடையில் சென்று விற்கவும் அனுமதிக்கப்படுகிறது.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் முகமாக பணி மனை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குடும்பத்திற்கு மாதம் 5000 ரூபாய்க்கும் மேல் வழங்கப்படுகிறது.

ஆய்வு

திபெத்திய ஏதிலிகளுக்கு தனி அலுவலகம் அமைக்கப்பட்டு அதற்காக அமைக்கப்பட்ட அதிகாரி மாதமொரு முறை மைய அரசுக்கு அறிக்கை அனுப்புகிறார். மற்றபடி முழு சுதந்திரமாக உள்ளனர்.

திபெத்திய ஏதிலிகளுக்கு உள்ள மற்ற சிறப்பியல்புகள்

இளைஞர்களுக்கு தனியாக அமைக்கப்பட்ட வர்ன்ற்ட் ஈர்ய்ஞ்ழ்ங்ள்ள் மக்கள் ஒன்றாக கூடுவதற்கு ஙன்ப்ற்ண்ல்ன்ழ்ல்ர்ள்ங் ஐஹப்ப், அவர்கள் நாட்டில் இருந்து வருபவர்களை தங்க வைக்க அரசு ஓய்வு விடுதி அவர்கள் விரும்பும் இடத்தில் மத வழிபாட்டுத் தலங்கள், வெளியில் சென்று தொழில் தொடங்க வசதி, கர்நாடக மக்களுடன் இயல்பாக கலந்து கொள்ள அனுமதி, ஆனால் ஈழ அகதிகள் அனுமதிக்கப் படுவதில்லை ஆகியவை ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்கள் நிலை

ஈழத் தமிழர் ஏதிலிகளின் முகாம் களின் எண்ணிக்கை மொத்தம் 103 உள்ளன.

ஏறத்தாழ 75,000க்கும் மேல் உள்ள னர். (தினந்தோறும் தங்கள் உடைமைகளை இழந்து உயிரை மட்டும் கொண்டு நூற்றுக் கணக்கான பேர் வந்து கொண்டு இருக்கின்றனர்.)

வாழ்விடம்

அரசாங்கங்கள் கட்டிக் கொடுக்கும் குடிசைகள் மற்றும் ஈழ அகதிகள் தாங்க ளாக கட்டிக் கொள்ளும் குடிசைகள், 90% வீடுகளில் மின்சாரமே இல்லை. பெரும் பாலும் மேற்கூரை சரியாக இல்லாத வீடு கள் அதிகமாக உள்ளன.

சுகாதார வசதி

அருகில் உள்ள பொது மருத்துவ மனைகளில் உடல் நலம் பாதிக்கப்படும் பொழுது, முகாம் பாதுகாவலர் அனுமதி பெற்று பார்த்துக் கொள்ளலாம். பாதி முகாம்களில் கழிப்பிட வசதி இல்லை. ஒரு சில முகாம்களில் இடிந்து போய் பராமரிப்பு அற்று நாய்களும், பன்றிகளும், (மனிதன் போக தகுதியற்ற) மலம் கழிக்கக் கூடிய கழிப்பறை, எதற்கும் மேற்கூரை கிடையாது. திறந்த வெளி கழிப்பிடம் பெண்கள் குளிப்பதற்கான நான்கு பக்மும் ஓலைகளால் வேயப்பட்ட குளியலறை.

கலாச்சாரம்

அனைத்து உரிமைகளும் ஈழத் தமிழர்களுக்கு மறுக்கப்படுகிறது. பொது வாக ஈழத்தில் உள்ள பெண்கள் குட்டைப் பாவாடை அணிவது வழக்கம். அதனை இங்குள்ள காவல் துறையினர் மற்றும் ஊழியர்கள் "நீங்கள் ஆபாசத்தை தூண்டு கின்றீர்கள்" என்று பாலியல் ரீதியாக தொந்தரவு செய்கின்றனர்.

மத சுதந்திரம்

மனித உரிமையே இல்லாத இடத் தில் மத சுதந்திரம் எதிர்பார்த்தது எங்கள் அறியாமையே.

கல்வி அந்தப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஈழக் குழந்கைகள் 1 முதல் +2 வரை சேர்த்துக் கொள்ளப்படு கிறார்கள் ஆனால் மண்டபம் பள்ளியில் நேரடியாக +1 மற்றும் +2 வகுப்புகளில் மாணவர்கள் சேர்த்து:க கொள்ளப்படுவது இல்லை. அதற்கு பள்ளி நிர்வாகம் சொல் லும் காரணம் என்னவெனில் +2 வகுப்பு தேர்வு முடிவுகள் பாதிக்கப்படும் என அச்சம் கொள்வதாக சொல்கிறது. மண்ட பம் பள்ளியின் தற்போதைய நிலை என்ன வெனில் மொத்தம் இராமநாதபுரம் மாவட்டத் தில் உள்ள 129 மேல்நிலைப் பள்ளிகளில் தர நிலையில் 128வது இடத்தில் உள்ளது.

ஒரு சில ஈழ முகாம்களில் 1 முதல் 5 வரையான வகுப்புகள் உள்ள பள்ளிகள் உள்ளன. அங்கு ஆசிரியர்களாக ஏதிலிகளால் நியமிக்கப்பட்ட ஏதிலிகள் முகாம்களில் உள்ள படித்த அதிகபட்ச இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர்.

பள்ளிக் கட்டிடம் பெரும்பாலும் பாழடைந்து ஓட்டை உடைசலாகத்தான் உள்ளது. உயர் கல்வியில் 2003 வரை இருந்த இடஒதுக்கீடு நீக்கப்பட்டதால், உயர்கல்வி முழுமையாக மறுக்கப்பட்டுள்ளது. (வசதி உள்ளவர்கள் தனியார் கல்லூரிகளில் படிக்க அனுமதியுண்டாம். நம் நாட்டின் தனியார் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் எவ்வளவு என்று நமக்கே தெரியும்)

விவசாய நிலம்

குடியிருக்க இடம் கொடுக்காத நாட்டில் விவசாய நிலம் கேட்பது நமது முட்டாள்தனம்தான்.

தகவல் தொடர்பு

நாட்டுப் பிரச்சனைகள் பேசினால் தீவிரவாதி என்று முத்திரை குத்தி சிறப்பு முகாம்களுக்கு அனுப்பப்படும் சூழ்நிலையில் மற்ற முகாம்களில் இருக்கும் உறவினர்களு டன் தொடர்பு கொள்ள எஸ்.டி.டி.பூத்துகளை யும், 1 ரூபாய் நாணயப் பெட்டியையும் பயன்படுத்துகின்றனர். ஆனால் இதற்கு முகாம் காப்பாளரின் அனுமதி வேண்டும்.

தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள்

மண்டபம் முகாமில் மூன்று நாள் மட்டுமே வெளியே சென்று கூலி வேலை பார்க்க அனுமதி.

மற்ற முகாம்களில் அருகிலுள்ள ஊர்களில் சென்ற வண்ணமடித்தல், கல்லு டைத்தல், விவசாயத்தில் கூலி வேலை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர், கடுமையான நிபந்தனைகளுடன்.

பண உதவி மற்றும் பொருளுதவி

குடும்பத் தலைவருக்கு ரூ.72ம், பெண்ணுக்கு ரூ.50 மற்ற உறுப்பினர் க ளுக்கு ரூ.45 சிறு குழந்தைகளுக்கு ரூ.12.50, 15 நாளுக்கு ஒருமுறை வழங்கப் படுகிறது.

ஆய்வு

மண்டபம் முகாம்களில் அறி விக்கப்படாத தினந்தோறும் ஆய்வும் மற்ற முகாம்களில் மூன்று நாட்களுக்கு ஒருமறை ஆய்வும் நடைபெறுகிறது. ஆய்வின் போது தங்கள் சொந்த மண்ணைப் பற்றி (ஈழம்) பேசினால் தீவிரவாதி என்ற முத்திரை குத்தப்பட்டு, செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். தன் நாட்டை விட்டு இங்குவரும் ஏதிலிகளிடம் மூன்று நாட்கள் மண்டபம் முகாமில் உள்ள தனி சிறையில் அடைக்கப்பட்டு அவர்கள் ஆயுதப் பயிற்சி பெற்றுக்கொண்டவர்களா என்ற சந்தேகத்துடன் சோதனை செய்யும் போது சற்று வட்ட சாட்டமான இளைஞர்கள் கோபப்பட்டால், அவர்களை உடனேயே செங்கல்பட்டு சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கின்றனர். செங்கல்பட்டு சிறப்பு முகாம் என்பது அறிவிக்கப்படாத ஒரு சிறை சித்திர வதைக் கூடம். இந்திய அரசு ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்துப் பார்ப்பதை விட்டுவிட்டு திபெத்திய ஏதிலிகளைப் போல் தமிழர்களைப் பார்க்கவில்லை என்றாலும், குறைந்தபட்சம் ஏதிலிகளாக வரும் தமிழர்களை மனிதர்களாவாவது பாவித்து, வாழ்வுரிமையைப் பாதிக்காத அளவு வாழ்வதற்கான உத்தரவாதத்தினை அளிக்க வேண்டும். மேற்கண்ட வைகள் அனைத்தும் நாம் தமிழகத்தில் காணலாம்.

இதில் திபெத்தியர்களைவிட ஈழத் தமிழர்கள்தான் அந்நிய செலவாணி வரவினை அரசுக்கு ஈட்டிக் கொடுக்கின்றனர். திருட்டு விசிடி காரணமாக திரைப்படத் தொழில் மூழ்கும் அபாயம் இருந்த பொழுது அதைத் தூக்கி நிறுத்தியவர்கள் ஈழத்தமிழர்கள்தான்.

இந்தியாவைத் தவிர்த்து மற்ற நாடு களுக்கு ஏதிலியாக சென்ற ஈழத் தமிழர்களை மற்ற நாடுகள் தன் நாட்டு குடிமகன் போல் மதித்து தனது அரசு பொறுப்புகளிலும் அமர்த்தியுள்ளார்கள். ஆனால் இந்திய அரசு ஈழத் தமிழர்களை மனிதர்களாகக் கூட நினைக்க மறுக்கிறார்கள்.

சிங்களவர்களின் பூர்வீகம் இந்தியா என்பதாலா?

ஒரிசா மற்றும் வங்காள தேசத்தை தாயகமாக கொண்டவர்கள்தான் சிங்களவர்கள் என்பதால்தானா இந்திய அரசு தமிழர்களை மனிதர்களாகப் பார்க்க மறுப்பது? இலங்கை என்பது தமிழர்களின் தாயகம். சிங்களவர்கள் இந்தியாவைச் சேர்ந்த வந்தேறிகள் என்பதால்தானா?

உண்மை வெல்லும் ஒரு நாள் தமிழினம் தலை நிமிர்ந்து நிற்கும் விரைவில்.

- விடுதலை முழக்கம் (மார்ச் 2009)

தென்செய்தி

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றான் தாய் மனப்பான்மையென்பது எங்களுக்கு மட்டுமல்ல. தமிழகத்துத் தொப்புள்கொடி உறவுகளுக்கும்தான் என்பதை, பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இந்திய நடுவணரசு வெளிப்படுத்தி வருகின்றது. இதற்கு மிகச் சிறந்த எடுகோளாக தமிழக அளவில் ஒணேகல் நதிநீர் பங்கீடு, தமிழ் மக்களின் அவலம் தொடர்பில், தன்னையே உருக்கித் தீயாகினானே முத்துக்குமாரு அவனது ஈகத்தை மதிக்காது காலில் போட்ட மத்திய அரசு மிதித்தபோது நிருபணமாகியதென்பதே உண்மையாகும். எனவே இந்த இடத்திலே இருந்து தமிழக உறவுகள் தமது வாக்குச் சீட்டுக்களை சரியான முறையில் பயன்படுத்தி நல்லதொரு பாடத்தைப் புகட்ட முன்வருமாயின் உலகத் தமிழினம் தலை நிமிரும். தமிழினத்தை அவமானப்படுத்தி அடக்கி ஒடுக்க முனையும் இந்திய நடுவணரசுக்கும், அவர்களுக்கு பட்டாடை விரித்துத் தமிழினத்தைப் பாடையிலேற்ற முனையும் தமிழக அரசியல்வாதிகளுக்கும் நல்லதொரு படிப்பினையை தமிழக உறவுகள் கொடுப்பது ஒன்றே இன்றைய வரலாற்றுக் கடமையாகக் கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தீபத்து எதிலிகள் ....இந்தியாவின் எதிரியால் உருவாக்கப்பட்டவர்கள்...

ஈழத்து எதிலிகள் ...இந்தியாவின் நன்பனால் உருவாக்கப்பட்டவர்கள்.....

:D அதுதான் இந்த ஒரவஞ்சகம்

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவோடு போர் தொடுத்து தோற்ற வடு இருக்கும் வரை இந்த.. செவிலித்தனம் இந்தியாவிடம் இருக்கும் திபெத்தியர்கள் மீது. அதிலும்.. அரைகுறை செவிலித்தனம் தான். சீனா கொஞ்சம் உறுக்கினால் போதும்.. ஆயுதம் கொடுத்து இதே மக்களை கொல்லவும் ஆட்களை அனுப்பும் இந்தியா.

எம்மை முன்னொரு காலத்தில் கையாண்டது போல அவர்களையும் கையாள்கிறார்கள். நாளை கையும் கழுவி விடமாட்டார்கள் என்றில்லை..! :D

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.