Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்ஸில் உடனடி கூட்டம் Paris "Invalides" merto: 13

Featured Replies

மக்கள் படுகொலைக்கு எதிராக கூட்டம் இன்று இரவுமுழுவதும்

m° : INVALIDES no : 13 தயவுசெய்து வாருங்கள இந்த செய்தியை கேள்விப்பட்ட நண்பர்கள் உள்நாட்டோ வெளிநாட்டு நண்பர்களோ இதை பாரிஸ் உங்கள் நண்பர்களுக்கு தெரிவித்து அவர்களை இக்கூட்டத்தில் பங்கு பெற செய்யுங்கள் உங்கள் கால்களில் விழுந்து வணங்கி கேட்கிறேன் தயவு செய்து

மட்டுனத்தர்களும் யாழ்கள உறவுகளும் இதற்க்கு உதவி செய்யுங்கள்....

நான் கூட்டத்துக்கு போகிறேன் நன்றி

பிரான்ஸ் பாரிசில் நடைபெறுகிற திடீர் பேரணி நிகழ்வு வளரி தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

http://www.valary.tv/

பிரான்சில் உள்ளவர்கள் உடனடியாக நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். இரவு முழுதும் நிகழ்வு தொடரும் என அறியப்படுகிறது.

இன்று மதியம் தொடங்கிய இந்த போராட்டம் தற்பொழுது இரவு 12 மணி ஆகியும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

முடிவு வரும் வரை எழுந்திருக்கப் போவதில்லை என்று மக்கள் அங்கேயே இருக்கிறார்கள்..

இப்படியே தூங்காமல் தொடந்து இருக்கப்போகிறோம்.

காலையில் வரக்கூடிய மக்கள் குறிப்பிட்ட இடத்துக்கு உடனடியாக வந்து சேருங்கள்.

இப்பவும் வந்து இணைந்து கொள்ளலாம்...

தயவு செய்து எல்லோரும் வாருங்கள்!

எங்கள் மக்களின் உயிரைக் காக்கும் பொறுப்பு எங்கள் கையிலேயே உள்ளது

Edited by வசி_சுதா

எதற்கும் அஞ்ச வேண்டாம். பிரான்ஸ் காவல்துறை இரண்டு பேரை பிடித்து வைத்துக்கொண்டு மக்களை கலைந்து செல்லுமாறும் அல்லாவிடின் அந்த ரெண்டு பேரையும் கைது செய்வோம் எனவும் கூறியது. மக்களும் அசரவில்லை. அந்த ரெண்டுபேரும் அசரவில்லை. கடைசியில் காவல்துறை இரண்டுபேரையும் விடுவித்துவிட்டது. இது பின்னேரம் நடைபெற்ற சம்பவம்.

பிறகு காட் இல்லாதவர்களை பிடிக்கப்போவதாக காவல்துறை வெருட்டியது. அதற்கும் அசராத மக்கள் பரவாயில்லை பிடித்துக்கொண்டு போங்கள் என்று காவல்துறைக்கு சொல்லிவிட்டார்கள். காவல்துறையால் எதுவும் செய்ய இயலவில்லை.

தொடர்ந்தும் மக்கள் எழுச்சியுடன் அங்கு இருக்கிறார்கள். காவல்துறை தற்பொழுது அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருக்கிறது.

நேற்று தொடங்கிய மறியல் இரவு தொடர்ந்து இன்று காலை ஆகியும் தற்பொழுது வரை மக்கள் கலையாமல் அங்கேயே நிற்கிறார்கள். ஏறக்குறைய பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இங்கு நிற்கிறார்கள். வேலை, குழந்தை என்ற சாட்டுகள் இல்லை ஒருவரிடமும். எல்லோரும் சோர்வடையாமல் நிர்க்கிறார்கள்.

Edited by வசி_சுதா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவனயீர்ப்புத் தொடர்பான கவனயீர்ப்புக்கு நன்றி வசி.

எம் மக்களின் சாத்வீகப் போராட்டைக் கண்டு பிரெஞ்சுக் காவல்துறை அசந்தது என்றுதான் சொல்ல வேண்டும். குறித்த இடத்தில் அமைந்த சதுரவடிவப் புல்வெளியின் வெளிவிளிம்புகளில் பதாகைகளுடனும் கோசங்களுடனும் உணர்ச்சி வழிய எம்மவர்கள் நின்றிருந்தனர். காவல் கைகட்டி வாய் பொத்தி நின்றது. மக்கள் அதிகமாகத் திரளத் தொடங்க பிரதான வீதியின் பக்கமாக தமது வாகனங்களை நிறுத்தி பொல்வெளியின் ஒரு பக்கம் அடைக்கப்பட்டது. மற்றய பக்கங்களில் குவிக்கப்பட்ட காவர்கதுறை பக்க நிரையாக நின்று மக்களை சதுர வியூகத்துக்குள் அடைத்தது. பொங்கும் உணர்ச்சியை அடைக்கவோ தடுக்கவோ இயலவில்லை.

அடுத்த கட்டமாக மக்களை பயமுறுத்தும் விதத்தில் ஐந்து இஅளையோரை பிடித்து தம் பேருந்தில் அடைத்தனர். அப்போதும் நம்மக்கள் காவலுக்கு எதிரான கோசங்களையோ வன்முறைப் பிரயோகங்களையோ செய்துவிடவில்லை. மக்கள் குழம்புவார்கள் அவர்கள் மீது கலகம் ஒடுப்பு மேற்கொள்ளலாம் என்று நப்பாசையுடன் காத்திருந்த காவலுக்கு எம்மவர் உறுதி வைத்தது ஆப்பு. எதுக்காக கூடினோமோ அதுக்காக மட்டும் சக்தியை பிரயோகித்தனர். அந்த சக்தி பேருந்தில் அடைபட்டிருந்த இளையோரை விடுதலை செய்தது.

நேரம் மாலை ஆறைத் தாண்டியது. அந்தப் புல்வெளியோ தமிழ் மக்கள் நிறைந்த ஆறானது. உணர்ச்சி அலைகள் பொங்கின. "அமைச்சகங்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. அதனால் உங்களுக்கு முடிவு சொல்ல இப்போது இயலாது "என்ற காவலின் அறிவிப்புக்கு "பரவாயில்லை... நாளை காலை அமைச்சகங்களுக்கு அதிகாரிகள் வரும் வரை இங்கே இருக்கிறோம்" என்று சொன்னதுடன் செயலிலும் காட்டினர் மக்கள்.

அடுத்த இருமாணி நேரம் கழித்து உற்க்கத்திலிருந்த அமைச்சகப் பிரதானியை எழுப்பி மக்கள் பிரதிகள் ஐவரை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர் காவல்துறையினர். ஏறத்தாழ இரு மணிநேரம் நடந்த சந்திப்பில் இரண்டு நாள் அவகாசம் தாருங்கள் என்று அமைச்சகத்தால் கோரப்பட்டது. தருகிறோம்... ஆனால் இந்த இஅடத்திலேயே இருப்போம்.. இம்மியும் நகர மாட்டோம் என்று உறுதிபடப் உரைத்தது நம்மினமானம். நம்மின உணர்வு. மணி பன்னிரண்டு.. வானம் அழ தொடங்கியது. கொட்டும் மழையில் நனைந்தபடி உறுதி கலையாதபடி உணர்வு சொட்ட மக்கள் நிறிரிந்த போது விழியோரம் ஒரு துளி கருக்கட்டியதை தடுக்க முடியவில்லை.

மணி இரண்டு.. அதிகாலை இரண்டு.. பில்வெளிக்குப் பக்கத்திலிருந்த சந்தியை முற்றுகை இட்டனர். காவல் அலறி அடித்து கலவர பூமி பிறக்கப் போகுதி என்று ஓடுப்பட்டுத் திரிய மக்கள் அமைதியாக சன்கிரில் முகாமிட்டனர். வியக்காலை தாண்டியும் தொடர்ந்த இப்போராட்டாத்தில் அந்த அதிகாலை வேளையிலும் தூரலுக்கு நடுஇலும் இரவில் தம் வரலாற்றுக் கடமைகளை செய்த உறவுகள் இயர்கைக் கடமைகளை முடிக்க கை கொடுத்தனர் எம்மவர்கள். ஆம்.. அஞ்சல் ஓட்டம் போஇல் பதகைகள் கைமாறி புத்துணர்வுடன் போராட்டம் தொடர்கிறது.

அறுதியான ஒரு முடிவு வரும் வரை தொடரும் என்றே தெரிகிறது.

Edited by வாசகி

  • தொடங்கியவர்

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

France%206th%20(8).JPG

உலகின் பல பாகங்களிலிருந்தும் வரும் உல்லாசப்பயணிகள் கூடும் இந்தப்பகுதியில் பிரான்ஸ் தமிழ் இளையோர் அமைப்பினரால் தமிழர் போராட்டம் தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டு விளக்கமளிக்கப்படுகிறது.

பிரான்சின் சுரங்கவழி தொடருந்து நிலையங்களில் ஒன்றான எக்கோல் மிலித்தர் (மெற்றோ இல. 8) பகுதியில் தொடர்ந்து இடம்பெற்று வரும் இந்தப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் பிரான்சில் வாழும் தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்று திரளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்

  • தொடங்கியவர்

கள புதிய பழைய களநண்பர்களுக்கும்.... அதில் இப்பவும்... கவிதையும்... கதையும்... உங்கள் இணையங்களும்.... உங்கள் தகவல்களும் முக்கியம் பெறவேண்டும் என்ற மறைமுக த்துடன் உலாவரும் களநண்பர்களும்.... அறிமுக நண்பர்களை உற்சாகமுட்டும் நண்பர்களுக்கும்... இப்பவும் இப்படியான கருத்துக்களுக்கு விடையளிக்கவேண்டுமா பார்கவேண்டுமா

இவர் இப்படியானவர் இப்படித்தான் எழுவார் என அவைகளை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கும் நண்பர்களுக்கும்... கீழே திண்ணை பகுதியில் இன்றையநிலமையிலும் கருத்தாடம் நண்பர்களுக்கும் வாருங்கள் பாருங்கள் உங்கள் உறவுகளுக்கும் உங்கள் உறவுகளின் நிலமைகளைபாருங்கள் இவைகளை நீங்கள் கட்டாயம் அமத்திபார்திருக்கமாட்டீர்

From_Pokk_09_0_09_05.jpg

From_Pokk_09_0_09_04.jpg

10_04_09_rain.jpg

இதன்பின் நீங்கள் உங்கள் சுற்றுலாக்களையும்.... கொண்டாட்டங்களையும்.... நய்யப்புடைப்பதையும்..... நமது சினிமாவாழ்கையையும்.... வியாபாரவாழ்கையையும்... மனச்சாச்சியுள்ள ஒவ்வொரு தமிழர் நாம் தொடருவோம்... இதன்பின் வாருங்கள்... பாருங்கள் எம்மையே... நாம் எமது நிலைமைகளை.... :D

  • தொடங்கியவர்

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=505337

சிலவற்றை இன்றைய நிலைகளில் கட்டாயம் நாம் வாசிக்கவேண்டியகட்டாயம் உள்ளது கட்டுரை நீண்டு கொண்டு போனாலும் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.