Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனநாயகத்தின் பெயராலும் புலிஅழிப்பின் பெயராலும் தொடரும் ஓர் இனத்தின் அழிவு, ராஜா பரமேஸ்வரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகத்தின் பெயராலும் புலிஅழிப்பின் பெயராலும் தொடரும் ஓர் இனத்தின் அழிவு , ராஜா பரமேஸ்வரி:

வவுனியா இடைத்தங்கல் முகாம் ஒன்றில் நேற்று முன்தினம் ஒரு வயோதிபர் மரணமடைந்து விட்டாராம். ஆனால் அவரது மரணம் அந்த முகாமில் தங்கியிருந்த எவரது கவனத்தையும் தொட்டு நிற்கவில்லை என அங்கிருக்கும் ஒருவர் கூறினார்.

முகாமில் இருந்தவர்கள் மிகவும் சர்வசாதாரணமாக தமது கடமைகளில் ஈடுபட்டிருந்ததனை அவர் மிகவும் துயரத்துடன் விவரித்தார்.

ஆம் வன்னியில் கடந்த பல மாதங்களாக தொடரும் யுத்தம் அதற்குள் அழிந்து போன அமிழ்ந்து போன மனித வாழ்வு, துயரங்களின் எல்லை கடந்து அப்பாலும் சென்று கொண்டிருக்கின்றன. அதனால் அன்றாடம் நிகழும் அகோரமான வான் தாக்குதல்கள் எறிகணைவீச்சுக்கள் பல்குழல் வெடிப்புத் தாக்குதல்கள் எனத் தொடரும் இன்னோரன்ன தாக்குதல்களினால் கைகள, கால்கள், கண்கள் என அவயவங்களை இழப்பதோ அல்லது அவற்றின் இறுதியான மரணத்தை அடைவதோ வெறும் சர்வசாதாரணமாகி விட்டன.

ஆனால் யுத்தத்தை, கனரக ஆயுதங்களின் தாக்குதல்களை, விடுதலைப்புலிகளின் வழிமறிப்புக்களை, வரும் வழி நெடுகிலும் படையினரின் இம்சைகளை இவை எல்லாவற்றையும் தாண்டி மூச்சு விடுவதற்கோர் இடம் கிடைத்ததாக எண்ணி கட்டாந் தரைகளில் வெறும் படங்கு விரிப்புகளுக்குக் கீழ் வாழ்வை ஓட்ட முனையும், இந்த மக்களின் துயரங்கள் கொடுமைகள் துன்புறுத்தல்கள் இன்னும் நீங்கிவிடவில்லை. அவர்களின் வாழ்வில் விதி தொடர்;ந்தும் புகுந்து விளையாடத்தான் செய்கின்றது.

ஐ.நா அமைப்பின் மனிதாபிமான விவகாரங்களுக்கான விசேட பிரதிநிதி ஜோன் கோம்ஸ் இரண்டு முறை வவுனியா சென்றார்.

பிரித்தானிய அpபிவிருத்தி அமைச்சரும் வவுனியா சென்றதாகக் கூறப்படுகின்றது.

விநோ நோதராதலிங்கம் சென்றார். சில சமயப் பிரமுகர்கள் சென்றார்கள். அமைச்சர்கள் சென்றார்கள். சில மனித உரிமை ஆர்வலர்களும் சென்றார்கள்.

ஐ.நா பிரதிநிதிக்கு மக்கள் கூறியதனை அமைச்சர் ரிசாத் பதியுதீனே மொழி பெயர்த்தும் விளக்கினார்.

வீடியோப் படம் எடுத்தார்கள். ஒளிப்படமும் பிடித்தார்கள். செவ்வி எடுத்தார்கள். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான நரக லோகத்திலிருந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதியான சொர்க்க லோகத்திற்கு மக்கள் வந்ததாகவும் உலகறியக் கத்தினார்கள்.

ஆனால் அங்கு நடப்பதுவோ வேறு.

ஒருவேளை உணவு உண்பதற்கும் ஒரு கோப்பை நீர் அருந்துவதற்கும் வாரம் ஒருமுறை குளிப்பதற்கும் அரசின் இந்த சொர்க்க லோகத்திலும் தவமாய்த் தவமிருக்கிறார்கள் இந்தப் பாவப்பட்ட மக்கள்.

உற்றாரை உறவினரை அயலில் உள்ளவரைப் பார்ப்பதற்கும் தடை. சுதந்திரமாகப் பேசுவதற்கும் தடை.

காயப்பட்ட கணவன் வைத்தியசாலையில், மனைவி ஒரு இடைத்தங்கல் முகாமில,; அவர்களது பிள்ளைகள் ஒருசிலர் வன்னியல், மற்றும் சிலர் விசேட தடுப்பு முகாமில். என்ன கொடுமை..

அரசின் சொர்க்காபுரியில் இத்தோடு இந்தக் கொடுமைகள் முடியில்லை. நேற்று முன்தினம் அவை புதிய வடிவில் ஆரம்பித்திருக்கின்றன.

கடந்த இரண்டு நாட்களாக பவல் வாகனத்தில் ஒலிபெருக்கி வடிவில் களை எடுப்பு ஒன்று ஆரம்பித்திருக்கின்றது. படையினரின் ஒலிபெருக்கி மூலமான இந்த அறிவிப்பைக் கேட்டு துயரத்தின் விளிம்பில் இருக்கும் இந்த மக்கள் அதிர்ந்து போயிருக்கின்றார்கள்.

விடுதலைப்புலிகளிடம் ஒரு நாள் பயிற்சி பெற்றவர்கள், அல்லது அவர்களுடைய பொது அமைப்புக்கள் நிறுவனங்களில் கடமை புரிந்தவர்கள், புலிகளின் இலக்கத் தகடுகளை வைத்திருப்பவர்கள், அல்லது ஏதோ ஒரு வகையில் அவர்களுடன் தொடர்புகளையோ உறவுகளையோ வைத்திருந்தவர்கள், உதவி புரிந்தவர்கள் எவராக இருந்தாலும் வயது வித்pயசமநன்றி படையினரிடம் தம்மைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அந்த பவல் வாகன ஒலிபெருக்கி அலறியிருக்கின்றது.

அவ்வாறு பதிவு மேற்கொள்ளாதவர்கள் படையினரால் பின்பு கண்டு பிடிக்கப்பட்டால் அவர்களுககு; எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறைச்சாலைக்கு அனுப்பப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.

கடந்த ஒரு தசாப்த்தத்திற்கும் மேலாக புலிகளின் கட்டுப்பாட்டில் வாழ்ந்த இந்த மக்கள் ஏதொ ஒருவகையிலும் தொடர்பில்லாமல் எப்படி வாழ்ந்திருக்க முடியும்?

இதனையடுத்து ஏற்பட்ட பயப்பீதியால் பலரும் படையினரிடம் தமது பெயர்களைப் பதிவு செய்துவருகின்றனர்.

இவ்வாறு பதிவு செய்தவர்களில் தேர்நதெடுக்கப்பட்டவர்கள் கடந்த இரு நாட்களில் 14 முதல் 20 பேரூந்துகளில் ஏற்றப்பட்டு வவுனியா நெலுக்குளம் தொழில்நுட்பக்கல்லூரியில் அமைந்துள்ள படையினரின் விசேட முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

700 முதல் 1000 வரையிலானவர்கள் அங்கு எவருக்கும் தெரியாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வவுனியா நலன்புரி முகாம்களின் விசேட கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பாதுகாப்புத் தரப்பின் மூலம் இந்தத் தகவல் கசிந்துள்ளது.

இதேவேளை வவுனியாவில் பெயர் குறிப்பிடப்படாத இடம் ஒன்றில் நாலாயிரத்து எழு நூறு பேர் வரை வடிகட்டப்பட்டவர்கள் என்ற வரையறைக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பிறிதொரு தகவல் கூறுகின்றது.

இதற்கிடையில் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து சென்று வவுனியாவில் உள்ள முகாம்களில் தங்கியுள்ள மக்களிடையேயுள்ள பல இளைஞர்கள் ராணுவத்தினரினரின் புலனாய்வுப்பிரிவனரால் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவது குறித்து அங்குள்ள மக்களிடையே பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளதாக அங்கு சென்று திரும்பிய அரச சார்பற்ற அமைப்புக்கள் கவலை தெரிவித்துள்ளன.

நேற்றைய தினம் பல முகாம்களில் இவ்வாறு பல இளைஞர்கள் கடத்தப்படுவதற்கு எதிராக மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டங்கள் ஈடுபட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரச படையினரின் புலனாய்வுத் துறையினர் தடுப்பு முகாம்களில் உள்ள நூற்றுக் கணக்கான இளைஞர்களை விசாரணை செய்ததுடன் மேலதிக விசாரணகளுக்கென ராணுவ வாகனங்களில் ஏற்றிச் சென்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் அங்குள்ள மக்களிடையேயும் குடும்பஸ்தர்களிடையேயும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் நேற்று பல முகாம்களிலும் திரண்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் அந்த முகாம்களிற்கு பொறுப்பாக இருந்த கிராம சேவையாளர்களையும் தாக்கியுள்ளனர்.

இச்சம்பவத்தை அடுத்து படையினரின் உயர் அதிகாரிகள் முகாம்களுக்கு சென்று மக்களிடம் மன்னிப்புக் கோரியதுடன் குறித்த இளைஞர்களின் பாதுகாப்பிற்கான உறுமொழியை வழங்கினர்.

எனினும் மக்கள் இதனை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்தும் குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னிப் பகுதியிலிருந்து அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உறுதிமொழியை ஏற்று அரச கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் வந்தவர்களே விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என தெரிவித்து ராணுவ புலனாய்வுப் பிரிவினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

வவுனியாவின் நிலைமைகள் இவ்வாறிருக்க கிளிநொச்சி வைத்தியசாலையை அண்மித்த பகுதி, காண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவு என்பவற்றில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேர் வரையிலானோரை படையினர் முழுமையான கட்டு;பாட்டுக்குள் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மைய நாட்களில் தொடரும் கடுமையான யுத்தத்தின் இடையேயும் ஏ9 வீதியூடாக குடாநாட்டுக்குள் பிரவேசிக்க முற்பட்ட எவரும் படையினரால் அனுமதிக்கப்படவில்லை.

கடல்வழியாகவே வன்னிப் பகுதியில் அகப்பட்ட மக்கள் குடாநாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஏ9 வீதியூடாக குடாநாட்டுக்கான மக்கள் அழைத்துச் செல்லப்பட்டால் படையினரால் இடையில் தடுத்து வைக்கப்பட்ட மக்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகலாம் என படையினர் கருதியதாக தெரிய வருகின்றது. அத்துடன் குடாநாட்டிற்கு எவரும் இனி அழைத்து வரப்பட மாட்டார்கள் என படையினர் அரச அதிபரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தாமாகப் படையினரிடம் சென்றவர்கள் தனியாகவும், படையினரால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் சுற்றிவளைக்கப்பட்டவர்கள் தனியாகவும் பிரித்தெடுக்கப்படும் நிலையில் 4500 பேர் வரையில் இந்தப் பிரதேசங்களிலும் படையினரால் தனியாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகின்றது.

இதேNவைளை சில தொண்டு நிறுவனங்களிடம் படையினர் உணவுப் பொதிகள் வழங்கு மாறு கோரியுள்ளனர். ஆனால் அந்த உணவுப் பொதிகள் ஏன் யாருக்கு என்ற கேள்விகளுக்கு படையினர் பதிலளிக்காமையினால் அந்தத் தொண்டு நிறுவனங்கள் உணவு வழங்க மறுத்துள்ளன.

இதற்கிடையில் அண்மையில் கிறிஸ்தவ மதப் போதகர் ஒருவரும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பணியாளர் ஒருவரும் சென்ற, தென்மராட்சியின் சாவகச்சேரிப் பிரதேசத்தில் பெருமளவிலான பெண்கள் கட்டை முடியுடன் மிகவும் அழுக்குப் படிந்த உடைகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதனை நேரடியாகக் கண்ணுற்ற போதும் அதனை வெளிப்படையாக தெரிவிக்க முடியாத நிலையில் உள்ளனர்.

இந்தப் பிரதேசத்தில் காணப்பட்ட பிறிதொரு முகாமில் முட்கம்பிகளுக்கு அப்பால் காணப்பட்ட பெருமளவிலான மக்கள் தமக்கு உண்ண உணவு இல்லை என்றும் தமக்குப் பாணாவது தருமாறு கெஞ்சியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவை யாவற்றுக்கும் அப்பால் கிளிநொச்சியின் மையப்பகுதியை படையினர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போது 100 முதல் 125 வரையிலான இளைஞர் யுவதிகள் காணாமல் போனதாகவும் அவர்களுக்கு என்ன நடந்தது என்னவென்பதை எவரும் அறிநிதிருக்கவில்லை எனவும் பிறிதொரு மனிதநேயப் பணியாளர் தெரிவிக்கின்றார்.

அதேநேரம் யாழ்ப்பாணம் தடுப்பு முகாம்களில் இருந்து ஏற்கனவே முதல் கட்டமாக 65 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு தெல்லிப்பழை புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் எஞ்சியவர்களை இரண்டாம் கட்டமாகக் கைது செய்ய ராணுவ புலனாய்வுப் பரிவினர் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அங்கு அரச சார்பற்ற தரப்பினர் கவலை தெரிவித்துள்ளனர்.

ஆனால் உலகில் எங்குமே இடம்பெற்றிருக்காத இந்த சாட்சியில்லா யுத்தத்தில் மீட்கப்பட்ட மக்கள் முகாம்களில் தடுத்து வைக்கப்படுவதும், பிரித்தெடுக்கப்படுவதும், வடிகட்டப்படுவதும், தனியான விசாரணை முகாம்களுக்கு கொண்டு செல்லப்படுவதும், நியாயமானதே என இன்றும் சில தமிழ்ப் புத்தி ஜீவிகளும் புலம்பெயர் ஜனநாயக மீட்பர்களும் வன்னி மக்களின் பாதுகாவலர்கள் எனத் தம்மைக் வெளிக்காட்டுபவர்களும், புலி எதிர்ப்பாளர்களும் தெரிவிப்பதுதான் புதுமையிலும் புதுமை.

யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் துர்நாற்றம் வீசுகின்றன. மலசல கூடங்கள் நிரம்பி வழிகின்றன. அவற்றிலிருந்து கிருமிகள் வெளிக் கிளம்புகின்றன. ஆனால் இவற்றின் அருகே உள்ள மக்களை சுற்றி முட்கம்பிகள் வேயப்பட்டுள்ளன. உண்பது உறங்குவது இருப்பது என எல்லாமே மலசல கூடங்களுக்கும் துர்நாற்றங்களுக்கும் கிருமிகளுக்கும் மத்தியிலேதான்.

இவை எல்லாவற்றையும் அறிந்த பின்பும் புலிகள் அழிந்தால் எல்லாமே சரியாகி விடும் வட கிழக்கு சொர்க்காபுரி ஆகிவிடும் எனக் கூறும் ஜனநாயவாதிகள் உள்நாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும் கடைவிரித்திருக்கிறார்கள்.

புலிகள் இல்லாத இவர்களின் சொர்க்காபுரிகளின் உள்ளுராட்சி சபைகள், மாகாண சபைகள் என்பவற்றிலும் நாடாளுமன்ற தேர்தல்களிலும் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகார நாற்காலியில் அமர்ந்து குறுநில மன்னர்களாக வருவதற்கு துடியாய் துடியாய் துடிக்கிறார்கள்.

அதற்காக புலம் பெயர் தேசங்களில் தஞ்சம் அடைந்து அந்தத் தேசங்களின் பிரஜைகளான பலரும் அஞ்ஞாதவாசம் புரிந்தவர்களும் வடக்கு மக்களில் கருணை கொண்டு அவர்களை மீட்பதற்கு தாயகம் சென்று கொண்டிருக்கிறார்கள்.

இது மட்டுமா அளவிட முடியாத துயரங்களைச் சுமந்து யாழ் குடாநாட்டிலும், வவுனியாவிலும் தற்காலிக முகாம்கள் பலவற்றில் வாழும் இந்த மக்களிடம் கூட்டமைப்புக்கு வாக்களித்தனால் நேர்ந்த கதியை உணர்ந்து எதிர்வரும் தேர்தல்களி;ல் தமக்கே வாக்களியுங்கள் என்று வாக்குக் கேட்கும் ஒரு கூட்டம் அலைந்து திரிகின்றது.

வாழ்க ஜனநாயகம்.

http://www.globaltamilnews.net/tamil_news....=8950&cat=5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.