Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழமும் உலக மனிதாபிமானத்தின் ஆழமும்

Featured Replies

ஈழமும் உலக மனிதாபிமானத்தின் ஆழமும்

கடைசியில் உலகின் கழிவிரக்கதிற்காக, காத்துக்கிடக்கும் நிலை ஈழ மக்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடாது. உலக வரைபடத்தில் புள்ளியளவிலான சின்னஞ்சிறிய பரப்பும், சுமார் 30 லட்சம் மக்களும் கொண்ட ஈழம், 1½ இலட்சத்திற்கும் மேற்பட்ட தம் மக்களை இழந்துவிட்டது. இவ்விபரம் இந்திய விடுதலைப் போரில் 1½ கோடிப் பேர் கொல்லப்படுவதற்கு சமமானது. 2ம் உலகப்போரில் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கைக்கும், அன்றைய உலக மக்கள் தொகைக்கும் இடையிலான விகிதாச்சாரத்தை, விட அதிகமானது. மிகச் சிறிய நிலப்பரப்பிற்குள், பெரும் எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்பட்ட வரிசையில் ஹிரோஷிமா, நாகசாகியை அடுத்து தமிழீழம் வந்துள்ளது. முதலிடத்தை ஈழத்துடன் பகிர்ந்து கொள்ளவோ, ஜப்பான் இலங்கைக்கு ஆயுதம் வழங்கிக் கொண்டிருக்கிறது. கொத்துக்கொத்தாய் மக்கள் கொல்லப்படுவதற்கு, அணுஆயுதங்களோடு மட்டும் தான் அதற்கு உடன்பாடில்லை போலிருக்கிறது. எனவே அணுஅல்லாத ஆயுதங்களாக பார்த்து இலங்கைக்கு அனுப்பிக்கொண்டிருக்காலம்.

உலகில் பூர்வீக நிலப்பரப்பு இல்லாத ஒரே தேசிய இனம் யூத இனம். அன்று உலகம் முழுவதும் சிதறிக்கிடந்து போராடி, அதற்கென ஒரு இஸ்ரேலிய நாட்டைபெற்றது. இன்று 2000 ஆண்டு பூர்வீக நிலப்பரப்புக்குச் சொந்தமான ஈழத்தமிழ் இனம், உலகம் முழுவதும் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. நாடற்ற நிலையின் வேதனை அறிய முழுத்தகுதியும் கொண்ட யூத தேசிய இனம் இன்னொரு தேசிய இனத்தை நாடற்றவர்களாக்குவதற்கு இலங்கைக்கு ஆயுதம் வழங்கிவருவது ஓர் விந்தை. உலகப்பெரும் படுகொலைகளில், யூதப்பங்களிப்பு தவறாமல் இருப்பது இன்னொரு விந்தை. அன்று ஹிரோஷிமா, நாகசாகிப் படுகொலைகளில், ஒரு யூதரான இயற்பியல் மேதை ஜன்ஸ்டீன் ஒரு அறிவியல் காரணியாக இருந்துவிட்டார்.

மனிதநேயப்பற்றாளரான அவர், தான் எதிர்பாராத இந்நிகழ்ச்சிக்காக நரக வேதனை அடைந்தார். ஆனால் இன்றைய இஸ்ரேல் இலங்கைக்கு நீண்ட காலமாக ஆயுதம் கொடுத்து, ஐன்ஸ்டைன் காட்டிய குற்ற உணர்ச்சியை, யூதமாண்பை இழிவு படுத்திக்கொண்டிருக்கிறது.

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் எதிரெதிராய் நிற்கும் இந்திய-பாகிஸ்தானிய ஆயுதங்கள் அங்கே அன்போடு ஆரத்தழுவிக் கட்டிக்கொள்கின்றன. ரசிய, சீன “கம்யூனிசநாடுகளும்” ஆயுதம் அளிக்கின்றன. இந்நாடுகள் அனுப்பும் ஆயுதங்கள் பல தடை செய்யப்பட்ட வகையைச் சேர்ந்த குற்றச்சாட்டும் உள்ளது.

இலங்கைக்கு பக்கத்தில் எந்த பகை நாடு உள்ளது? எப்பகுதியில் எல்லைப் பிரச்சனை உள்ளது, என்று இவ்வாயுதங்களை அனுப்புகிறார்கள். சொந்தநாட்டு மக்களை கொல்வதை தவிர எந்த அந்நிய நாட்டிற்கெதிராகவும் பயன்படுத்தப் போவதில்லை என்பது மிகத்தெளிவாக தெரிந்தே, ஆயுதங்களோடு, தங்கள் மனிதாபிமானத்தையும், மனசாட்சியையும் இலவச சலுகையாக இணைத்து விற்கிறார்கள்.

ஈழ மக்களின் இன்றைய நிலைக்கு யார் பொறுப்பு? 1977 வரை சிங்கள அரசு பொறுப்பு 77க்குப்பிறகு சிங்களப்பேரினம் முழுவதும், சர்வதேசிய சமூகமும் பொறுப்பு. ஏனெனில் 77ல்தான் 90 சதவீதற்கும் மேற்பட்ட மக்கள் தேர்தல் மூலம் வாக்களித்து தமிழ்ஈழப்பிரிவினை வேண்டுவதை உலகிற்கு பகிரங்க பறைசாற்றினார்கள். ‘உலகில் ஓர் இனம் விருப்பதிற்கு மாறாக ஆளப்படுகிறது’ என்ற செய்தியை அறிந்ததிலிருந்தே அதைக் கண்காணிக்கவும் காப்பாற்றவும், பிரிவினையை அங்கீகரிக்கவுமான பொறுப்பு சர்வதேச சமூகத்திற்கு தொடங்குகிறது. முழுத்தமிழ் தேசிய இனமும் ‘தாம் இலங்கையர்’ என்ற இறையாண்மையை இழந்துவிட்ட உடனேயே, தமிழினத்தோடு சேர்ந்து வாழவோ, அதை ஆளவோ, முழுச்சிங்கள பேரினமும் தனது தார்மீக தகுதியை இழந்துவிட்டது. சிங்களதேசிய இனம், சனநாயகப் பண்புடைய இனமாக இருந்திருந்தால், நார்வே - ஸ்வீடன் அமைதிவழி போன்று பிரிந்திருக்க வேண்டும். கூடவே பரஸ்பர புரிதலை இழந்தமைக்காக வெட்கப்பட்.டிருக்க வேண்டும். அத்தகைய தனது இயலாமைக்காக வேதனைப் பட்டிருக்க வேண்டும். ஒன்றுபட்ட இலங்கையின் இறையாண்மையே இரண்டுபட்டு போன பிறகும், சட்டம், இராணுவம் மூலம் ஒன்றுபடுத்திக் காட்ட முயற்சித்தது. 32 ஆண்டுகளாய் இன்றுவரை இம்முயற்சியில் வெற்றிபெற முடியவில்லை.

77ன் தேர்தல் முடிவை மீறி, விருப்பமில்லாத மக்களை ஆளத் தொடராமல், சனநாயகப் பிரிவினையை அது ஏற்றிருந்தால்… பல பத்தாயிரம் தமிழ் மக்களும், சில பத்தாயிரம் சிங்கள இளைஞர்களும் (இராணுவம்) பலஆயிரம் இந்திய இராணுவ வீரர்களும் (ஐடஓஊ) இன்று நம்முடன் உயிரோடிருந்திருப்பர். பல்லாயிரம் மக்கள் உடலுறுப்புக்களை இழக்காமல், மனிதவடிவம் மாறாதிருந்திருப்பர். பல்லாயிரம் தமிழ் -சிங்கள -இந்திய விதவைகளும், ஒரே ஒரு இத்தாலிய விதவையும் வாழ்க்கைத் துணைவருடன் வாழ்ந்து கொண்டிருப்பர். ராஜீவும் பல இலங்கை அமைச்சர்களும், நடுநிலையான இலங்கை ஊடகவியலாளர்களும் தங்கள் முழு ஆயுளை கழித்துக் கொண்டிருப்பர்.

யுத்தங்களுக்கு செலவிட்ட தொகை, 20 இலட்சம் சிங்கள குடும்பங்களை செழிப்பாக்கியிருக்கும். இதையெல்லாம் விடுத்து வன்முறையில் ஒற்றுமைபடுத்த 32 ஆண்டுகளாய் எத்தனை பேரழிவுகள்? இப்பேரழிவுகளையெல்லாம் விட கொடியது இதை இன்னமும் நியாயப்படுத்தும் நயவஞ்சகவாதங்கள்.

இன்னமும் சர்வதேச சமூகம் இலட்சோப இலட்சம் மக்களின் ஈழவிருப்பத்தை, அதற்கான தியாகத்தை மதிக்கவில்லை. அதன் அவசரத்தை உணரவில்லை. ‘ஒன்றுபட்ட இலங்கை’ என்ற சிங்கள அரசு வாசகத்தையே அது மதிக்கிறது. அதுவே நியாயம் என்றும் கூறுகிறது.

ஈழம் ஒரு தெளிவான காட்சி. இதில் புரியக் கடினமான காட்சிக்குழப்பம் எதுவுமில்லை. இதை உள்ளபடி பார்ப்பதற்கு, இயற்கை கொடுத்த மனிதாபிமானமும், மனசாட்சியும் போதும், இதைப் புரிந்துகொள்ள மயிர் பிளக்கும் வாதங்கள் எவையும் அவசியமில்லை. மனிதாபிமான பார்வையிலும், மனசாட்சியிலும், சர்வதேச சமூகத்தின் மட்டம் அதலபாதாளத்தில் தென்படுவதால் ஈழப்பிறப்பு தள்ளிப்போகிறது. எனவே சர்வதேச சமூக மனசாட்சியின் முன் சிலகேள்விகள், சிலதர்க்கங்கள், சர்வதேச சமூகமே,

1. தே.இ.பிரச்சனைகள் உள்நாட்டுப் பிரச்சனைகளாக மட்டுமே கருதப்பட்டு வந்திருக்கிறதா? ஓர் எல்லைக்கு மேல் சர்வதேச பிரச்சனையாக்கப்பட்டு தீர்க்கப்பட்டிருக்கவில்லைய

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.