Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காவல்துறைக்கு எங்கள் கெட்டித்தனங்களை காட்டுவதற்காக நாங்கள் கவனயீர்ப்புக்கள் செய்யவில்லை!

Featured Replies

அனைவருக்கும் இனிய வணக்கங்கள், தினமும் கவனயீர்ப்பு நிகழ்வுகளிற்கு சென்று வருபவன் என்றவகையில் சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வது நல்லது என நினைக்கின்றேன்.

உலகெங்கும் கடந்த சில மாதங்களாக தமிழ்மக்கள் தொடர்ச்சியாக செய்துவருகின்ற கவனயீர்ப்புக்கள் சர்வதேசத்தின் பார்வையை எம்மீது திருப்பியுள்ள அதேசமயம், எமக்குள் உள்ள ஒருசிலர் தெரிந்தோ அல்லது தெரியாமலோ, உணர்ச்சி மிகுதி காரணமாகவோ அல்லது திட்டமிட்டு குழப்புவதற்காகவோ செய்கின்ற செய்கைகள் எங்கள் போராட்டங்களை இக்கட்டான நிலமைகளில் மாட்டிவிடுமோ என்று நினைத்து அஞ்சவேண்டியுள்ளது. வெண்ணை திரண்டு வரும்நேரத்தில் பானை உடைவதுபோல் நம்மவர்களின் தொடர்ச்சியான முயற்சிகள், போராட்டங்கள் சில தவறான நடவடிக்கைகள் காரணமாக திசைதிரும்பிவிடாது பார்த்துக்கொள்ளவேண்டிய கடமை எங்கள் எல்லோருக்கும் இருக்கின்றது.

குறிப்பாக, காவல்துறையினருடன் நம்மவர்கள் தேவையற்ற பிரச்சனைகளை அண்மைக்காலங்களில் உருவாக்குகின்றார்கள் போல தெரிகின்றது. காவல்துறையினர் எமது போராட்டங்கள் அமைதியானமுறையில் நடைபெறுவதற்கு மிகுந்த ஒத்துழைப்பு தருகின்றார்கள். பலர் தனிப்பட்ட ரீதியில் ஆதரவுகூட தருகின்றார்கள். அவர்களின் உரையாடல்களில் இருந்து இதை அவதானிக்ககூடியதாக இருக்கின்றது. அவர்கள் எமது பிரச்சனைகள் பற்றி மிகுந்த கரிசனை கொண்டுள்ளார்கள்.

ஆனால்... நம்மவர்கள் சிலர் காவல்துறையினரை எதிரிகள்போல் நினைத்து செயற்படுகின்றார்கள். காவல்துறையினரை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடுகின்றார்கள். இது மிகவும் வேதனையைத் தருகின்றது.

எங்களுக்கு ஏதாவது ஆபத்து என்றால் 911ஐ தொலைபேசியில் அழுத்தும்போது உயிரைக்காப்பாற்றுவதற்கு அகாலநேரத்தில் வந்து உதவிசெய்பவர்கள் காவல்துறையினரே! காவல்துறையினரை பகைத்துவிட்டு நாங்கள் எவ்வாறு வாழமுடியும்? எமக்கு உள்ள உரிமைகள், சுதந்திரங்கள் அடுத்தவன் மூக்கை குத்துவதற்காக பயன்படுத்தப்பட முடியாது. அதை காவல்துறையும் அனுமதிக்காது.

காவல்துறைக்கு எங்கள் கெட்டித்தனங்களை காட்டுவதற்காக நாங்கள் கவனயீர்ப்புக்கள் செய்யவில்லை! தமிழர் தாயகத்தில் சிறீ லங்கா பயங்கரவாத அரசினால் மிகவும் திட்டமிட்ட முறையில் கனகச்சிதமாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மனிதபேரவலத்தை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்காகவே அனைவரும் ஒன்றிணைந்து இரவு, பகலாக குரல் கொடுக்கின்றோம்.

நாங்கள் கவனயீர்ப்பு போராட்டங்களின்போது செய்கின்ற ஒவ்வொரு தவறுகளும், ஒவ்வொரு சட்ட அத்துமீறல்களும் நீண்டகால நோக்கில் நமது சமூகத்தை பாரதூரமாக பாதிக்கும் என்பதை நாங்கள் நினைவில் வைத்து இருக்கவேண்டும்.

முற்றிலுமாக சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட முறையிலேயே காவல்துறையினரின் ஆதரவுடன் நாம் எவ்வளவோ காரியங்களை வெளிநாடுகளில் சாதிக்க முடியும். இதற்கு தனது உடலை உருக்கி உண்ணாநோன்பு இருந்த சகோதரன் பரமேஸ்வரன் ஓர் நல்ல எடுத்துக்காட்டு.

பல ஆயிரம்பேர் ஒன்றுகூடியுள்ள நிலையில் தெருவை வழிமறிப்பது வேறு. அப்படியான நிலமையில் காவல்துறையே வீதியை மூடி ஒத்துழைப்பு தருவார்கள். ஆனால்.. சிலபத்து அல்லது சிலநூறுபேர் ஒன்றுகூடி தெருவை இடைமறித்தால் உள்ளேபோய் கம்பி எண்ணவேண்டியதுதான்.

எங்களுக்கு உணர்வு மிகவும் முக்கியமானது. அதேசமயம் நாங்கள் அனைவரும் புத்திசாலித்தனமாக செயற்படவேண்டும். குறுகிய காலநோக்கில் மட்டும் சிந்திக்காது நீண்டகாலநோக்கில் திட்டமிட்டு செயற்படவேண்டும். அப்போதுதான் வலிமையான, ஆரோக்கியமான, துடிப்புள்ள சமுதாயத்தை கட்டி எழுப்புவதோடு தாயக விடுதலையையும் வென்றெடுத்து தாயக மக்கள் சுபீட்சமாக, சுதந்திரமாக வாழ நாங்கள் முழுமையாக உதவமுடியும்.

எங்கள் தொடர் போராட்டங்களை சீர்குலைக்க சிறீ லங்கா பயங்கரவாத அரசாங்கம் திரைமறைவில் செய்கின்ற நடவடிக்கைகளுக்கு நாங்களே எமது அறிவீனம் காரணமாக துணைபோகக்கூடாது.

நன்றி!

பி/கு: இன்று நம்மவர்களில் சிலருக்கு காவல்துறையினருடன் ஏற்பட்ட முறுகல்களை நேராக பார்த்தபின்பே இந்தப்பதிவை இங்கு தரவேண்டிய அவசியம் ஏற்பட்டது.

சில குறிப்புக்கள்:

  • வேற்றின மக்கள் எம்முடன் போராட்டத்தில் கலந்துகொள்வது வரவேற்கத்தக்கது. ஆனால்.. அவர்களின் வருகை காவல்துறைக்கும் நம்மவர்களிற்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே அவர்களிற்கு இடைப்பட்ட தனிப்பட்ட பிரச்சனைகள் எங்கள் போராட்டங்களை பாதிக்கவிடக்கூடாது.
  • நியூயோர்க் பேரணியில் பயன்படுத்தப்பட்டது போன்ற மரம், உலோகங்களிற்கு பதிலாக மட்டை // கடதாசியில் செய்யப்பட்ட தடி // கம்பங்களை கொடிகளிற்கு பயன்படுத்த வேண்டும்.
  • மதுபோதையில் வரும் நம்மவர்களை போராட்டம் நடைபெறும் இடங்களில் இருந்து நாங்கள் அப்புறப்படுத்த வேண்டும்.
  • போராட்டம் // கவனயீர்ப்பு நடைபெறும் இடங்களில் இருந்து புகைப்பிடிக்கும் நம்மவர்களை நாங்கள் அப்புறப்படுத்த வேண்டும்.

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதோ ஒரு இடத்தில் உங்கள் கருத்தோடு ஒத்துபோக வேண்டியுள்ளது கலைஞன்!

எமது போராட்டங்களில் அண்மைக்காலமாக அறிவுக்கு பதில், உணர்வு மேலோங்கியுள்ளது. நாம் எல்லோரும் உணர்வுக்கு அடிமையானவர்கள். உண்மையில் வீதி மறியில் தோல்விக்கு காரணம் காவல்த்துறை என்று பலர் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அதுவல்ல உண்மை.. எமது மக்களே அதற்க:கு முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும். இளைஞர்கள் வீதியை மறிக்க முனைந்து கைது செய்யப்பட்டவுடன் ஒரு சிலருக்கு இருந்த அந்த இன உணர்வு பெரும்பாலனா கனேடிய தமிழர்களிடம் ஏறப்படவில்லை. அந்த இளைஞர்கள் உணர்வினைக் கொண்டு மடிவெடுக்காது அறிவார்ந்த ரீதியில் செயற்ப்பட்டிருக்கலாம்.

கடந்த இரு நாட்களாக கவனயீர்;ப்பில் கலந்த கொள்ள முடியவில்லை என்ற கவலை இருக்கிறது. பெரும்பாலனா சந்தர்ப்பங்களில் காவல்த்துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே நடைபெறும் பிரச்சினைகளுக்கு மூலக்காரணமாக நான் கருதுவது அல்லது அதை நீக்க கூடிய வழிவகைகளாக கருதுவது,

முழுமைக்குமான தொண்டர்களை நியமித்தல் அதாவது சுயறச்சி முறையில் இளைஞர்கள் பிரிக்கப்பட்டு ஒழுங்கு படுத்த விடப்பட வேண்டும். அவர்களை காவல்த்துறையினரின் அனுசரணையாளர்களாகவும், பொது மக்களின் உதவியாளர்களாகவும் செயற்ப்பட வைக்க வேண்டும். தற்போது நடைபெறும் போராட்டத்தை பொறுத்தவரை ஒழுங்கமைப்பாளர்கள் இதை செய்ய தவறிவிட்டனர்.

மது போதை, புகைத்தல் பேர்வழிகளோடு யாரும் மல்லுக்கட்ட முடியாது முடிந்தளவு போராட்டம் நடைபெறும் கூ+ழலிருந்து அவர்களை விலக்குவது நல்லது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சறியாக சொன்னீர்கள் கலைஞன். இவாரன மோதல் போக்கில் ஈடுபடுபவர்கள் உணர்ச்சி பெருக்கால் தான் இவ்வாரு செய்கிறார்கள் என்பது கிடையாது... சிறி லங்கா மற்றும் இந்தியாவின் தூணடுதளால் இவ்வாறு செய்கிறர்களா என்றும் பார்க்க வேண்டும்..

But if they are genuine protesters they should be educated about the dire impact of such short sighted activities.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கும் காவல்துறைக்குமிடையே நல்லதொரு புரிந்துணர்வு நிலை உள்ளது. அதனைப் பேண வேண்டும்.

மதுபோதை, புகைபோதை என்பவற்றை விடமுடியாதவர்கள் அவர்களுக்குப் பதிலாக வேறுயாரையாவது அனுப்பலாம். அல்லது உரிய நாளிலாவது விரதமிருக்கலாம்.

இளையோரின் கொதிப்பென்பது இயல்பானது, இதனிடையே விசமிகள் பற்றி விழிப்பாக இருக்க வேண்டும். ஒழுங்கமைப்பாளர்கள் பார்ப்பார்கள் என்று இருக்காது இது தமிழ்த்தேசியத்துகான பணி. இதில் எல்லோரும் எப்போதும் விழிப்பு நிலையில் இருந்து எமது பணியை நாம் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும். எலலோருக்குமான கடப்பாடு இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகச் சரியான கருத்து !!

இது எங்களுடைய போராட்டத்தை திசை திருப்பக் கூடியது !!

மிக விரைவாக ஒழுங்கமைப்பாளர்கள் கவனத்திலெடுக்க வேண்டிய விடயம் !!!

நானும் இதை அவதானித்திருக்கிறேன்,அண்மைய

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.