Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமக்குள் நாமே இரைதேடி சிங்களவனுக்கு இரையானோம்

Featured Replies

வன்னிப் பெருநிலப்பரப்பின் மொத்த சனத்தொகை நாலரை லட்சத்துக்கும் மேலாகும். இது மன்னார் மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்நதவர்கள், மற்றும் யாழ் மாவாட்டத்தில் இருந்து இடம் பெயர்ந்து மீள யாழுக்கு செல்லாத மக்கள் மற்றும் வன்னி வாழ் மக்கள் என அடங்குகின்றனர். இலங்கை அரசின் பாதுகாப்புத் தளத்தின் இறுதி கணக்குப்படி 145, 647 படையினர் வசம் வந்துள்ளனர். ஏறக்குறைய மூன்றரை இலட்சம் மக்களில் ஒரு இலட்சத்துக்கும் குறைவான மக்களே தன்னிச்சையாக படையினரிடம் சென்றவர்கள். எப்படி பார்த்தாலும் இரண்டு இலட்சமளவிலான மக்கள் குறித்த விபரம் இல்லை.

சர்வதேசம் உட்பட இந்திய அதிகார வர்க்கம் மற்றும் இலங்கை அரசுக்கு வக்காளத்து வாங்கும் தமிழர்கள் எல்லோரும் புலிகளின் அழிவு குறித்தே முழுக்கவனத்தையும் செலுத்தினார்கள். இரண்டு வருடமாக பலநூறு கிராமங்களில் இருந்து மக்கள் படுகொலை செய்யப்பட்டு விரட்டிவரப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள் தமது பூர்வீக வாழ்விடங்களை விட்டு தெருத்தெருவாக அலைந்தனர். குழந்தைகள் பாடசாலை அனைத்தையும் இழந்து கல்வியை இழந்து நிர்கதியாகினர். ஒரு பெரும் நிலப்பரப்பே சூனியமானது. மருத்துவ மனைகள் அனைத்தும் இழந்து தெருத்தெருவாக மக்கள் காயங்களாலும் நோய்களாலும் மடிந்து மாண்டு போனார்கள். இறுதியில் எங்கும் ஓட முடியாத ஒரு சிறு பிரதேசத்துள் முடக்கி மக்களை சிதைத்து சின்னபின்னமாகி பிணக்குவியல்களாக்கியது சிங்கள அரசு. கைப்பற்றிய மக்களை தொடர்புகள் இன்றி முகாம்களுக்குள் தனிமைப்படுத்தியது சிங்கள அரசு.

வன்னிப்பெருநிலப்பரப்பின் கதை இவ்வாறு ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றது. தவிர தென்னிலங்கையில் பல்லாயிரம் தமிழர்கள் காணாமல் போய் அவர்கள் கதை முடிந்து போனது. யாழ்பாணத்திலும் கிழக்கிலும் இவ்வாறே நடந்தேறியது. ஓட்டுமொத்தத்தில் இலங்கையில் தமிழ்ச்சாதியன் வாழ்வு சுறையாடப்பட்டது. வெளியுலகத்துக்கு தெரிந்தது ஒன்றுதான் இலங்கையில் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் நடக்கின்றது. புலியெதிர்ப்புவாதிகளுக்கு தெரிந்தது இலங்கையில் புலிகள் அழிக்கப்படுகின்றார்கள். சிங்கள மற்றும் இந்திய அதிகாரவர்க்கத்தின் குறிக்கோள் ஈழத்தமிழர்களை கருவறுப்பது ஆகும். இது பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில் வெற்றிகரமாக அரங்கேறியது. இலங்கை இந்திய அதிகாரவர்க்கத்தின் உதவியுடன் இதை உலகை நம்ப வைத்தது.

இந்த உலகத்தின் ஜனநாயக மனிதாபிமான முகங்களில் காறித்துப்பியபடி லட்சக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். எஞ்சிய மக்கள் காலமுள்ளவரை தொடர்ந்து காறித்துப்புங்கள் அல்லது அவர்கள் செருப்புகளை நக்குங்கள். இரண்டு தெரிவுகள் தான் உள்ளது.

புலிகள் தோற்கவில்லை. அவர்களுக்கு தோல்வி என்பது கிடையாது. மாவீரர்களுக்கு தோல்வி என்பது கிடையாது. ஆம் இந்த இனம் 30 வருடங்களாக சிங்கள அரசுடன் போரிட்டது ஒரு மாபெரும் வெற்றியே, சிங்கள அரசு என்பது உலகில் விதிவிலக்காகவும் நூதனமாகவும் பலம்பொருந்தியது. அதன் கைகளின் பலமானது உலகின் அத்துணை வல்லரசுகளின் தொழில்நுட்பம் பொருந்தியது. அமரிக்கா பிரிட்டன் ரசியா சீனா போன்ற நாடுகளின் இராணுவத் தொழில்நுட்பம் மற்றும் உதவிகள், இந்தியா பாகிஸ்தான், இஸ்ரவேல் ஈரான் போன்ற முரண்பட்ட நாடுகளின் இராணுவ உதவிகள். ஜப்பான் மற்றும் மேற்குலக நாடுகளின் உதவிகள் என உலகின் அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து தருவிக்கப்பட்ட போர்க்கருவிகளும் இராணுவ உதவிகளும் கூடிய பலத்துடன் புலிகள் 30 வருடம் போராடியுள்ளனர்.

சிங்களத்துடன் இணைந்து கொண்ட இந்திய அரசுடன் புலிகள் போராடி உள்ளனர். இந்திய அரசு என்றால் அது சாதராண விடயம் இல்லை. உலகில் இந்திய அதிகாரவர்க்கம் தனது ஆண்மையை காட்ட ஒரு பலவீனமான இடம் ஈழமாக இருந்தது. தனது வல்லரசுக் கனவுகளின் ஆதிக்கத்தை காட்ட ஈழம் அதற்கொரு களமாக இருந்தது. அதன் உளவு நிறுவனங்கள் தமது பலத்தை பரீட்சிப்பதற்கு ஈழம் ஒரு களமாக இருந்தது. இந்த அதிகாரவர்க்கத்தின் ஆழுமை பற்றி அதிகம் எழுதத் தேவை இல்லை. உலகில் தனது பெருமளவு குடிமக்களையே நசுக்கி ஜனநாயகம் பேசும் ஒரு அரசுதான் இந்திய அரசு. பல மில்லியன் தாழ்த்தப்பட்ட மக்களின் முதுகில் ஏறிநின்று ஜனநாயகம் பேசும் அரசுதான் இந்திய அரசு. உலகின் வல்லரசுக் கனவுடன் இந்திய அதிகாரவர்க்கம் எழுகின்றது. அமரிக்காவுக்கு நிகராக தன்னை அது கற்பனை செய்கின்றது. அமரிக்காவின் மொத்த சனத்தொகைவிட கூடுதலான மக்களை தீண்டத்தகாதவர்கள் என்று நசுக்கிக்கொண்டு வல்லரசுக் கனவுடன் ஜனநாயகம் பேசி வலம்வருகின்றது இந்திய அதிகாரவர்க்கம். அமரிக்காவின் முன்னாள் கறுப்பின அடிமை இன்று அந்த நாட்டின் ஜனாதிபதி. அவர்கள் சந்தித்த மாற்றம் அவ்வாறானது. இன்றும் மேல்சாதித் தெருவில் கீழ்சாதி செருப்பு போட்டு போக முடியாத நிலை இந்தியாவில் உள்ளது. இந்தியாவின் மாற்றம் இத்தகையது. கங்கையில் பிணங்கள் நீரை அசுத்தம் செய்வது உண்மையாகினும் அதை எடுத்துக்கூறிய இந்திய விஞ்ஞானி மாற்றம் செய்விக்க முன்வர மாட்டான் காரணம் அவனுக்க அழிவை விட பாரம்பரியம் முக்கியம்.

இந்திய அதிகார வர்க்கம் என்பது ஆரிய ஆழுமைக்கு கட்டுப்பட்டது. இலங்கையில் சிங்கள இனத்தை ஆரிய இனமாக அது சிங்களத்துடன் கைகோர்க்க முனைந்துள்ளது.

இந்திய அதிகாரவர்க்க குணத்தை இங்கு விபரிப்பதற்கு காரணம் ஈழத்தில் அதன் குணம் எவ்வாறு ஈழத்தமிழர்களின் இரத்தம் குடித்தது என்பதை புரிந்து கொள்வதற்கே, இயக்கங்களுக்குள் மோதலை தோற்றுவித்ததும் புலிகளிடம் ஆயுதங்களை பறித்துவிட்டு முதுகில் குத்தியதும் சிங்கள அரசுடன் சேர்ந்து இறுதியல் ஈழத்தமிழினத்தை கருவறுத்ததுமான செயல்களை அனைத்தும் அதன் அதிகாரவர்க்க குணங்களுக்கும் ஆரிய ஆழுமைக்கு உட்பட்டது. பலவீனமானவர்களை முதுகில் குத்தும் மரபை கொண்டது. இவ்வாறான இந்திய அதிகாரவர்க்கத்தின் ஒடுக்கு முறைகளை கடந்து போராட்டம் 30 வருடங்களுக்கு மேலாக நடந்துள்ளது.

இந்த போராட்டம் என்பதன் புறநிலைக் காரணங்கள் மிகப் பெரியது. சர்வதேச நாடுகளின் போட்டிகள் சூழ்ந்தது. ஈழத்தில் கொல்லப்பட்டவர்கள் காயமடைந்தவர்களின் உடல்களில் துளைத்த குண்டுகளை சேகரித்து அவை உற்பத்தி செய்யப்பட்ட இடங்களுக்கு அனுப்புவார்களானால் உலகின அனைத்து வல்லரசுநாடுகள் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அது போய்ச்சேரும்.

இவ்வாறான புறநிலைச் சக்திகளை எதிர்கொண்டு 30 வருடம் போராடிய புலிகளின் முயற்ச்சி அதைவிட மோசமான அகநிலை முரண்பாடுகள் ஊடாக போராடியது. ஆம் எமது இனத்துக்குள் எத்தனை முரண்பாடுகள்! அடிமைக் குணங்கள் ! பலவீனங்கள் ! பிரச்சனைகள். சொல்லி மாழாதது.

சாதிகள் மதங்கள் வர்க்கங்கள் புத்திஜீவிதம் போன்ற காரணிகளுக்குள் ஈழத்தமிழன் சிறைப்பட்டிருந்தான். அவனால் அவ்வளவு இலகுவாக அதிலிருந்து வெளியே வந்து தமிழ்த்தேசியத்தில் இணைய முடியவில்லை. அவன் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்தச் சிறையில் இருந்து வருகின்றான். தமிழன் என்று உணர்ந்து சாதிகலந்து திருமணம் செய்யக் கூட அவனால் முடிந்ததில்லை.

அவனது அதிகாரம் அவனுக்குள் சுழண்டது. ஒரு சாதி அடுத்த சாதியை அதிகாரம் செய்தது. அடுத்த சாதி அடுத்ததை அதிகாரம் செய்தது. ஒன்று அதிகாரம் செய்தது மற்றது அடிமையாகியது. அடிமைக்குணம் இரத்தத்தில் கலந்தது. எல்லாத்துக்கும் மேலான சாதி உலகில் எவன் அதிகாரம் பொருந்தியவனோ அவனது காலை நக்கியது. அதையே சமூகத்தின் கௌரவம் என்று நிறுவியது. பிரிட்டிஷ்காரன் அலுவலகத்தில் குப்பைகொட்டுவது தான் உச்ச ஸ்தானம். அதுவே மற்றவர்களும் பின்பற்ற நேர்ந்தது. ஆங்கிலம் பேசுவதும் எஞ்சினீயர் ஆவதும் வைத்தியர் ஆவதும் கோயிலில் சாமி தூக்குவதும் கீழ்சாதியை எள்ளிநகையாடுவதும் அரச உத்தியோகம் பார்ப்பதும் உச்ச ஸ்தானம் என்றது தவிர நாங்கள் தமிழர் எங்களை நாங்கள் ஆழவேண்டும் என்பது முதன்மையானது அல்ல. அடிமைக்குணத்தை இயல்பாக ஏற்றுக்கொண்ட ஒரு இனம் தான் தமிழினம்.

ஈழத்தமிழ் இனத்தில் அடிமைக்குணம் என்பது உயர்வகுப்பினர் இடையேதான் மிக அதிகமாக இருந்தது. அரசை அண்டிப்பிழைப்பதும் நக்குவதும் கொளரவம் என்று அது கருதியது. அதற்காக அது தனது இனத்தின் தாழ்ந்த மக்களை விற்கவும் தயங்கியதில்லை. இதற்கு ஒரு உதராணம் கதிர்காமர். நவாலித் தேவாலயத்தில் சிங்களம் குண்டுவீசி நூற்றுக்கணக்கானவர்களை கொன்றபோது அதை சர்வதேசம் அமைப்புகள் கண்டித்தது. அவ்வாறான கண்டனங்களுக்கு எதிராக அதிகமாக குரல் கொடுத்தது சந்திரிக்கா அம்மையாரைவிட கதிர்காமரே அதிகம். அந்த வரிசையில் ஈழத்தின் புத்திஜீவிகள் அரசியல்வாதிகள் என பலர் அடங்குகின்றனர்.

இந்த உயர்வகுப்புத்தான் முதன் முதலில் மேற்குநாடுகள் நோக்கி பயணத்தை ஆரம்பித்தது. அதுவே உயர் அந்தஸ்த்தாக விஸ்த்தரித்தது. அரசை அண்டிவாழ்வது நல்லது என்று போதிக்கப்பட்டது. உயர்குடிகள் அரச உத்தியோகங்களிலும் அனுசரணையுடனும் வாழ்வதை நியாயப்படுத்தி அதையே கொளரவம் என்று ஏனைய மக்களுக்கு போதித்தது. யாழில் இருந்து வன்னிக்கு நகர்ந்த மக்கள் இராணுவத்தின் பிடிக்குள் மீளப்போனதுக்கும் இதுவே அடிப்படை. பல லட்சம் மக்கள் புலம்பெயர்ந்ததுக்கும் இதுவே அடிப்படைக்காரணம். பல்லாயிரம் மக்கள் தென்னிலங்கைக்கு நகர்ந்ததுக்கும் இதுவே அடிப்படைக்காரணம். இன்றும் மக்கள் சாகவும் தப்பி சிங்களத்தின் காலடியில் விழவும் இதுவே அடிப்படைக்காரணமாகின்றது.

அடிமைக்குணம் என்பது இனம் எங்கும் வியாப்பித்து ஒவ்வொருவரையும் ஆழுமைசெய்கின்றது. இயக்கும் சக்தியாக அடிப்படையில் உள்ளது. அதிகாரம் உயிர் வாழ இரையை தனினித்துக்குள்ளாகவே தேடுகின்றது. சாதி பிரதேசம் வர்க்கம் புத்திஜீவிதம என்பன தன்னினத்தரிடையே தனது மேலாண்மைக்கான இரையை தேட பழக்கப்படுத்துகின்றது. அடயாள அந்தஸ்;து போட்டியை தோற்றுவிக்கின்றது. அது தாம் ஒரு இனம் என்று பரந்து இனத்துக்கு வெளியில் தனது இரையை தேடவில்லை. தன்னினத்துக்குள்ளாகவே இரையை தேடுகின்றது. சிங்கள பேரினவாத கொடுங்கோலை அலட்சியம் செய்து புலிகளை மூர்கத்தனமாக விமர்சனம் செய்யும் தமிழர்களின் அடிப்படை இந்த தன்னித்துக்குளாகாக இரைதோடும் குணாம்சம் பழக்கவழக்கம் ஊடாக வியாப்பித்து நிற்கின்றது. இவ்வாறு தமிழினம் தன்னினத்துக்குள்ளாக இரைதேடிக்கொண்டிருக்கையில் சிங்களம் தமிழரை தனது பேரினவாதப் பசிக்கு இரையாக்கியது.

இன்று சிங்களம் வெற்றிவிழாவாக கொக்கரிக்கின்றது. நாலரை லட்சத்துக்கும் மேற்பட்ட வன்னிவாழ் மக்களில் இரண்டு லட்சம் மக்கள் எங்கே என்று தெரியவில்லை. புலிகளை அழிவை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்த தன்னின இரைதேடிகளால் இந்த மக்கள் குறித்து அரசிடம் கேள்வி எழுப்ப முடியாது. அவர்களுக்கு தேவை அனைத்து மக்களும் அழிந்தாலும் புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்ற இரைதேடும் குணமே தவிர தன்னினத்தை சிங்களம் உண்கின்றதே என்ற நோக்கு எதுவும் இல்லை. சிங்களம் தன்னித்தை உண்ணும் போது வாயில் இருந்து வழிந்து விழும் மிச்ச எச்சம் போதும் அந்த மிச்சங்களை ஆழுமை செய்வதே இந்த இரைதேடிகளின் இறுதி இலக்கானது.

ஓட்டுமொத்த வன்னி மக்களை கொன்றும் ஊனமாக்கியும் வீடுவாசல் தோட்டம் துரவு கல்வி மருத்துவம் அத்தனையையும் பறித்து முட்கம்பிவேலி முகாம்களுக்குள் சிறைவைத்தபடி சிங்களம் வெற்றி விழாக் கொண்டாடுகின்றது. சிங்களம் தமிழர்களை வென்றுவிட்டது. அடிமைப்படுத்தி விட்டது. ஒரு பஞ்சாயத்து சபை அதிகாரம் கூட தமிழர்களுக்கு கொடுக்காமல் நிர்கதியாக்கி விட்டது. இந்தநிலையில் வெற்றி விழாக்கொண்டாடுகின்றது. ஈழத்தமிழா நீ உயர்ந்த சாதியாய் இருந்தாலும் வர்க்கமாக இருந்தாலும் புத்திஜீவியாக இருந்தாலும் இன்னும் உன் இனத்துக்குள் உன்னை தனித்துவமாக காட்ட உனக்கு எத்தனை கொம்புகள் முளைத்திருந்தாலும் நீ இப்போது சிங்களத்தின் அடிமை. உனது கால்நூற்றாண்டுக்கும் மேலான அறவழிப்போராட்டத்திலும், கால் நூற்றாண்டுக்கு மேலான ஆயுதப்போராட்டத்திலும் உனக்கு ஒரு துரும்பு அதிகாரம் கூட கிடைக்கவில்லை. எனவே நீ சிங்களத்தின் அடிமை என்பதை மீள உறுதிப்படுத்தவேண்டிய அவசியம் இல்லை. நீ அடிமையே.

ஆகநிலையில் இவ்வாறான அடிமைக்குணங்கள் வியாப்பித்த சமூகத்தில் புலிகள் 30 வருடம் போராடி உள்ளனர் என்பது புறநிலையில் உள்ள பலத்தை சமாளிப்பதை விட பன்மடங்கு அதிகப்படியான சாதனை. இந்த இனம் வென்றால் தான் அது ஒரு பெரிய விடயம் தோற்றால் அது ஒரு பெரிய விடயம் இல்லை. ஏனெனில் அடிமைக்குணம் மிகுந்த சமுதாயம். சிங்களம் அடித்து மிதித்து துவைத்தாலும் கூட அவன் காலடியிலேயே மண்டியிடும் நிகழ்வுகளுக்கு இந்த அடிமைக்குணம் காரணமாகின்றது. எனவே தோல்வி என்பது பெரியவிடயம் இல்லை.

போராளியும் மாவீரரும் தோற்பதில்லை. அவர்கள் அடிமைகள் இல்லை. சிங்களத்துக்கு அடிபணிந்தவர்கள் இல்லை. இனம் என்பதை பி;னதள்ளி சாதி மதம் வர்க்கம் புத்திஜீவிதங்களை முன்வைத்து வாழ்ந்த அத்தனை மக்களையும் இனமாக நேசித்து மடிந்தவர்கள். அவர்களே எமது வழிகாட்டிகள். சுதந்திரப்போராட்ட வீரர்களும் அவர்களே சுதந்திரமானவர்களும் அவர்களே. அவர்கள் தோற்பதில்லை. தோற்றது தமிழனின் கேடுகெட்ட குணங்கள் பழக்கவழக்கங்கள் தவிர புலிகள் இல்லை.

எமது குறைகள் புரிந்து கொள்ளப்பட்டு பின்னடைவுகளுக்கான அடிப்படைக்காரணங்கள் புரிந்துகொள்ளப்பட்டு புதிய ஒன்றுபட்ட சக்தியாக எழுவோம். தாயகத்தில் ஒவ்வொருவனும் கொழும்புக்கு ஓடிவருவதும் விளக்கில் வீழ்ந்து மடியும் விட்டில் பூச்சியாக மடிந்து போவதுக்கும் வழிகாட்டிகள் நாங்களே. நாம் எமக்கு முன்னோர் வெளிநாட்டுக்கு வழிகாட்டியதால் வந்தோம், இன்று நாம் எமது தாயக மக்களுக்க தாயகத்தை விட்டு வெளியேற வழிகாட்டிகளாக உள்ளோம். தவிர்க்கமுடியாமல் இது நிகழ்கின்றது. எதிரியுடன் எதிர்த்து போராட துணியாமல் மக்கள் பின்னடைவதற்கு நாமது வழிகாட்டல் பிரதானமானது என்ற உண்மை உணரப்பட வேண்டும். எமது நிலை மாறுதல் வேண்டும். இங்கே தமிழீழ தனியரசுக்கான எழுச்சி பன்மடங்காக வேண்டும். மாவீரர் துயிலும் இல்லங்கள் எல்லாம் தாயகத்தில் சிங்களத்தால் அழிக்கப்பட்டுவிட்டது ஆனால் உலகெங்கும் அது நிறுவப்படுகின்றது. அவ்வாறு செய்தல் வேண்டும். எமது தவறான வழிகாட்டல் தாயகத்துக்கான வழிகாட்டலாக மாறுதல் வேண்டும். புலிக் கொடி எமது இனத்தின் கொடியாக ஒவ்வொரு தமிழனுக்கும் சொந்தமான கொடியாக உலகெங்கும் வாழும் தமிழர்களில் அதிகாரம் பெறுகின்றது. ஆயிரம் புலிகள் மாண்டார்கள் லட்சக்கணக்கான புலிகள் புதிய மாற்றங்களுடனும் ஒற்றுமையுடனும் உலகெங்கும் பிறக்கின்றார்கள். போராட்டத்தில் தற்போது ஏற்பட்ட பின்னடைவு விரைவில் மீளப்பெற்று இலக்கு நோக்கி பயணிப்பது புலம்பெயர் மக்கள் கைகளில் தங்கியுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுகன், இந்த நேரத்துக்கு அவசியமான கட்டுரை, நன்றி

புலம் பெயர் மக்களில் தான் எதிர் கால போராட்டம் தங்கியுள்ளது. உண்மையில் புலம் பெயர் நாடுகளில் நாம் வெகு தாமதமாக எமது போராட்டங்களை ஆரம்பித்திருக்கிறோம். ஆனால் மக்களின் போராட்டத்தை புலிகளுக்காகவே இவர்கள் போராடுகிறார்கள், என கொச்சை படுத்திய அரசுகளும் ஊடகங்களும் அதிகம். சிறிலங்கா அரசு அனைத்து பகுதிகளையும் கைப்பற்றிவிட்டது, பல முக்கிய தளபதிகள் வீரச்சாவடைந்து விட்டார்கள். ஆனால் எமக்கான இலக்கு அடையப்படவில்லை, எம்மீதான அங்கிருக்கும் மக்கள் மீதான அடக்குமுறை நீங்கபோவதில்லை...... எனவே புலம் பெயர் நாடுகளில் எமது போராட்டம் தொடரவேண்டும்......

ஆனால் எம்மவர்கள் எல்லாம் முடிந்தது என ஓய்ந்து விடுவார்களோ என பயமாக இருக்கிறது. நாம் புலம் பெயர் நாடுகளில் எமது போராட்டங்களை ஓய விட்டோம் என்றால், இதுவரை மக்களின் போராட்டங்களை புலிகளுக்காக, புலிகளின் ஆதரவாளர்களின் தூண்டுதலால் நடாத்தப்பட்டவை என முத்திரை குத்திய சிறிலங்கா அரசு, மேற்குலக அரசுகள், மேற்குலக ஊடகங்களின் கூற்றை மெய்ப்பித்தவர்களாவோம்..... அதன் மூலம் இதுவரை நாம் முன்வைத்த சிறிலங்காவில் இனப்படுகொலை நடப்பதாக நாம் செய்த போராட்டம் கூட அதன் அரத்ததை இழந்து விடும்..........

(அதற்காக புலிகளை மக்கள் ஆதரிக்கவில்லை, அல்லது புலிகளுக்கு மக்கள் ஆதரவு தெரிவித்தது தவறு/ தெரிவிப்பது தவறு என்று நான் சொல்வதாக யாரும் பின்னர் வந்து முட்டையில் மயிர் பிடுங்க வேண்டாம்)

அங்கு மக்களின் அவலங்கள் தொடரும் வரை, எமது உரிமைகள் கிடைக்காத வரை எமது போராட்டங்கள் ஏதோ ஒரு வடிவில் தொடர்ந்த படியே இருக்க வேண்டும்.

ஆனால் போராட்ட வடிவங்கள் கால நேரங்களுக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்ய வேண்டியதும் முக்கியமானது.

Edited by yarlpaadi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.