Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதிப் போர்! களத்திலேயே நிற்பேன்! பிரபாகரன் வீரசபதம்! இறுதிப் போர்! களத்திலேயே நிற்பேன்! பிரபாகரன் வீரசபதம்!

Featured Replies

இறுதிப் போர்! களத்திலேயே நிற்பேன்! பிரபாகரன் வீரசபதம்!

வெள்ளை மாளிகை புல்வெளியில் நின்று கடந்த புதன்கிழமை மதியம் ஒபாமா பேசினார். ""உணவு- குடிநீர் இன்றி வாழும் தமிழ் மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவி, சண்டை நிறுத்தம், நிரந்தர அரசியல் தீர்வு ஆகியவற்றை அவரது உரை வலியுறுத்தியது.

உண்மையா, இல்லையா என்பது தெரியாது. வாஷிங்டன் தமிழ் நண்பர் ஒருவர் ஒபாமா நிர்வாகத் துடன் தொடர்பில் இருக்கிறவர். அவர் சொல்கிறபடி, உரைக்கு முன் நடந்த ஆலோசனையின்போது ராஜபக்சே நிர்வாகம் மட்டில் கடும் அதிருப்தியும் கோபமும் வெளிப்படுத்தியிருக்கிறார் ஒபாமா. ""ராணுவமும் விடுதலைப்புலிகளும் சண்டையிட்டு அழியட்டும், எக்கேடும் கெட்டுப் போகட்டும். ஆனால் அப்பாவி மக்களை உலக மனிதாபிமான அமைப்புகள் சந்திப்பதை அனுமதிக்க முடியாது என்று சொல்ல ராஜபக்சே யார்? எல்லாவற்றிற்கும் சில எல்லைகள் உண்டு என்பதை அவருக்குச் சொல்லுங்கள்'' என உயர் அதிகாரிகளிடம் வெடித்திருக்கிறார்.

கடந்த மாதம் நான் படித்த புத்தகங்களில் இரண்டு ஒபாமா அவர்கள் எழுதியவை. ""நம்பிக்கையின் முரட்டுத் துணிவு'' மற்றும் ""எனது தந்தையின் காற்தடப் பாதையில்... உலக அளவில் 25 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுத் தீர்ந்து வெற்றிப் பதிவு செய்துவிட்ட புத்தகங்கள்.

"நம்பிக்கையின் முரட்டுத் துணிவு' புத்தகத்தில், தன்னை வழிநடத்தும் ஒழுக்க நெறிகளில் ஒன்றாக ஒபாமா "ஊம்ல்ஹற்ட்ஹ்'-யை பலமுறை குறிப்பிட்டிருந்தார். தமிழில் அதை புரிந்து கொள்ள நமக்கு வள்ளலார் போதும். வாடிய பயிரை கண்டு வாடும் உள்ளம், ஈடின் மானிகளாய், ஏழைகளாய் இருப்போரை கண்டு இரங்கும் உள்ளம், வீடுதோறும் இரந்தும் பசியறாது அயர்வோரைக் கண்டு பதைக்கும் மனம்... இன்னும் அணுக்கமாக "ஊம்ல்ஹற்ட்ஹ்'-யை கூறுவதானால்... ஒரு அரவாணியை, திருநங்கையை புரிந்துகொள்ள அவர்களது அனுபவத்தை உள்வாங்கி உணர்கிற ஆத்தும மேன்மை எனக்கு வேண்டும், இன்றைய ஈழத்தமிழனை புரிந்துகொள்ள நான் ஈழத்தமிழனாக இருந்து பார்க்க வேண்டும்.

தூக்கியபோது பிள்ளையாகவும், கிடத்திய போது பிணமாகவும் கிடத்திய தந்தையாய், சிங்களம் கொன்ற பிள்ளையை மடியிலும் கைப்பிள்ளையை மார்பிலுமாய் அணைத்து துடிக்கிற தாயாய், இயற்கைத் தேவைகளுக்குக்கூட வெளியே வரமுடியாமல் பதுங்கு குழிக்குள் உயிர் பதைத்துக் கிடக்கும் குடும்பமாய், ஒரு குவளை தவிட்டுக் கஞ்சிக்காய் ஒரு மணிநேரம் வரிசையில் நிற்கும் உள்நாட்டு அகதியாய், அனுராதபுரத்தில் வன்புணர்வு முடிந்தும் வக்கிரம் தீராத சிங்கள ராணுவத்தினரால் மார்பு அறுக்கப்படும் தமிழச்சியாய், ராணுவ உயர் அதிகாரிகளின் குடும்பத்தில் நோயுற்றவர்களுக்காய் உயிரோடு உடல் பிளக்கப்பட்டு சிறுநீரகம், ஈரல், கண்கள் அகற்றப்படும் இளைஞனாய் -சுருங்கக் கூறின் ஈழத்தமிழனாய் இருந்து பாருங்கள் உணர்வில்.

கடந்த வியாழன் பெங்களூரு விலிருந்து ஓர் தொலைபேசி அழைப்பு. அழைத்தவரது பெயர் அமிதாப். இளைஞர். முதலில் என்னோடு பேசியதோ அவரது அம்மா கிருஷ்ணவேணி. அய்யங்கார் குடும்பம். நக்கீரன் வாசகர்களாம். 1991 டிசம்பரில் காவிரி நீர் தமிழகத்திற்குத் தரக்கூடாதென கன்னடர்கள் நடத்திய கலவரத் தில் ஒரே ஒரு நாள் அகதிகளான அனுபவம் கிடைக்கப்பெற்றவர்கள். கிருஷ்ணவேணி அம்மா என்னிடம் கூறினார்: ""ஒரே ஒருநாள் வீட்டிலிருந்து விரட்டப்பட்டு அகதியான அனுபவத்தின் வலியை 18 ஆண்டுகள் ஆகிவிட்ட பின்னரும் என்னால் மறக்க முடியவில்லை...'' என்றார். தனது மகன் அமிதாப் ஈழத்தமிழ் மக்கள் மீதான இன அழித்தலை உலக நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல தயாராய் இருப்பதாகக் கூறினார். இதற்குப் பெயர்தான் ஒபாமா குறிப்பிடும் "ஊம்ல்ஹற்ட்ஹ்'.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் எஞ்சியிருக்கிறவர்கள் 15,000-லிருந்து 20,000 பேர் வரை என இலங்கை அரசு சொல் கிறது. ஆனால் களத்தில் மக்களிடையே பணி யாற்றிவரும் அருட்திரு. எட்மன்ட் ரெஜினால்ட் நமக்குத் தருகிற தகவலின்படி இன்னும் அங்கு உணவு மருந்து, குடிநீர் இன்றி வாழும் தமிழர்கள் 1,65,000 பேர். இவர்களை குறிவைத்து கடந்த ஞாயிறு இரவு தொடங்கி பத்துமணிநேரம் தொடர் எறிகணை வீச்சு நடத்தியது சிங்கள ராணுவம். பி.பி.சி. தகவல்படி 378 தமிழர் பலி. இவர்களில் நூற்றுக்கும் மேலானோர் குழந்தைகள், 1112 பேர் படுகாயம். ஆனால் உண்மையான எண்ணிக்கை, கொல்லப்பட்டது சுமார் 1700 பேர், படுகாயமுற்றதும் அதே எண்ணிக்கையில். நமது கடற்கரையிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் நடந்த இக்கொடுமையை ஐ.நா. அமைப்பு, அமெரிக்கா, பிரித்தானிய நாடுகள் ""இரத்தக் குளியல்'' எனக் குறிப்பிட்டு கண்டித்தன.

இரத்தக் குளியல் கொடுமைதான் ஒபாமா அவர்களின் கோபத்தை கடுமையாக்கியதாகக் கூறப்படுகிறது. இலங்கை அரசின் அனுமதி இல்லாம லேயே உயிர்வாடி நிற்கும் 1,65,000 மக்களுக்கு உணவு மற்றும் மனிதாபிமான உதவிகள் வழங்கத் தயாராகும்படி அமெரிக்கா வின் பசிபிக் பெருங்கடல் கப்பற்படை பிரிவுக்கு அறிவுறுத்தல் வழங்கிய தாகவும் சொல்லப்படுகிறது. அமெரிக்கா களம் இறங்கினால் இன அழித்தல் திட்டத்தை முழுமையாக்க முடியா தென்பதை நன்கே அறிந்த ராஜபக்சே கும்பல் அமெரிக்க கப்பல்கள் புறப்படு முன்னரே இறுதி யுத்தத்தை கடந்த வெள்ளி அதிகாலை தொடங்கினார்கள். ரசாயனத் தாக்குதல் நடத்தி பல்லாயிரம் மக்களையும், போராளிகளையும் கொன்று குவித்தபின் முன் நகர்ந்திருக்கிறது ராணுவம். எங்கு நோக்கினும் பிணக்குவியல்... தாயின் கரம் பற்றியபடி கருகிக் கிடக்கும் பிஞ்சுகள்... 15 வயதுக்கு கீழான பிள்ளைகள் ஆயிரத்திற்கும் மேல்... என நெஞ்சை உலுக்கும் செய்திகள் வந்து கொண்டிருக் கின்றன.

களத்தின் உண்மையை எனக்குச் சொல்லி வந்த அருட் தந்தையர்களின் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. உயிரோடிருக்கிறார்களா, இல்லை ரசாயனக் குண்டுகளில் மூச்சடங்கிப் போனார்களாவென்பது தெரியவில்லை.

களத்தில்தான் நிற்கிறாராம் வேலுப்பிள்ளை பிரபாகரன். தளபதிகள் பலமுறை கெஞ்சி மன்றாடியும் நகர மறுத்து வந்தாராம். தன்னை நம்பி நின்று களமாடும் போராளிகளோடு தானும் போரிட்டு மடிவதென்பதில் உறுதியாக இருந்ததாய் சொல் கிறார்கள். ஆனால் வெள்ளி மதியம் தளபதிகளே இணைந்து முடிவெடுத்து தலைவருக்கு உத்தர விட்டிருக்கிறார்கள். ""விடுதலைப் போராட்டம் பாதுகாக்கப்படவேண்டுமென்றால

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பதிவை இணைத்த உங்களுக்கு நன்றி. நேற்று தான் நமது கஸ்பர் அடிகளாரை காணவில்லையே என்று எண்ணினேன். இன்று அவரது அறிக்கை. நன்றி.

அடிகளார் நமது எதிரிகளை சரியாக சொல்லிஇருக்கிறார். ஆனால் நமது முதல் துரோகி சொந்த பந்தங்களையே ஒன்றாய் பழகி ஒரே கொள்கையில் எழுந்து பணத்திற்க்காகவும் பதவிக்காகவும் காட்டிகொட்டுகும் முரளிதரனை விட்டு விட்டார். நம் போராளிகளின் வித்துடல்களை கூட அடையாளமும் கட்டுகிறான் என்று இன்றைய செய்தி அறிந்து பதறித்தான் போனேன்.

துடிகாதா இவனுக்கு இன உணர்வு? யூதாஸ் அழிவு வராத? எந்த அரகர்கள் போட்ட பிச்சைக்காக வால் ஆட்டுகிறனோ அதே அரகர் கையால் அவன் மடியட்டும்.

எதிரிகள் எமக்கு பிரச்சினை இல்லை. ஆனால் துரோகிகள் ?????

ஈழத்தமிழர்களின் முதல் எதிரி இந்தியா

ஈழத்தமிழர்களின் இரண்டாவது எதிரி இந்தியா

ஈழத்தமிழர்களின் மூன்றாவது எதிரி இந்தியா

ஜானா

தலைவர் எப்பொழுது சபதம் எடுத்தார்?. நாங்கள் இறுதிப்போர் இறுதிப்போர் என்று சொல்லி எங்களை கடைசியில் சிங்களவன் இறுதிப்போர் கொண்டாடுகிறான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.