Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிர்த்தெழுகிற நாட்கள். - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்தெழுகிற நாட்கள்.

- வ.ஐ.ச.ஜெயபாலன்

இலங்கையில் இடம்பெறும் சிங்கள பெளத்த பேரினவாத அசுரர்களுடனான யுத்தத்தில் யார் வீரமரணம் அடைந்தார்கள் யார் நாழைய வெற்றியை ஈட்டித்தர தப்பித்து இருக்கிறார்கள் என்பது தெரியாமல் அங்கலாத்துப் போயிருக்கிற தமிழ் கூறும் நல்லுலகின் புதல்வர் புதல்வியர்களுள் நானும் ஒருவன். போராளிகளில் பலர் எனது தோழதோழியர்கள். எங்களது சுயமரியாதையுள்ள இருப்புக்கும் விடுதலைக்குமாக அவர்கள் மேற்கொண்ட தியாகப் பாதையும் அர்பணிப்பும் காவியத் தன்மை கொண்டவை .ஆவர்கள் எங்கள் வரலாற்றின் தேவதைக் கதைகளின் நாயகர்களாக என்றென்றும் வாழ்வார்கள். எங்கள் கண்கண்ட அமரர்களுக்கு அஞ்சலி பாடிப் பணிகிற அதேசமயம் நாளைய வரலாற்றை வென்றுதருவுள்ள ஏனைய போராளிகளுக்கு எனது விசுவாசத்தையும் வாழ்த்துக்கலையும் பிரகடனப் படுத்தி இக்கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.

இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருந்தபோது மலேசிய தமிழ் தோழி ஒருத்தி தொடர்புகொண்டு தாங்கள் அழுது கொண்டிருப்பதாகவும் தலைவர் இறந்தது உண்மையா என்றும் கேட்டார். இதுபோன்ற விசாரனைகள் தமிழகத்தில் இருந்தும் உலகின் மறு பாகங்களில் இருந்தும் வந்துகொண்டிருக்கிறது. இலங்கை அரசு பிரபாகரனின் உடல் கிடைத்திருப்பதாக சொல்கிறது. விடுதலைப் புலிகளின் சர்வதேச உறவுகளுக்கான பொறுப்பாளர் செ.பத்மநாதன் சணல் 4 அளித்த பேட்டியில் பிரபாகரன் உயிருடனும் பாதுகாப்பாகவும் இருபதாக உறுதியாகக் கூறுகிறார். அவரது தமிழ் நெற் பேட்டி தலைவர்கள் பலர் வஞ்சகமாகக் கொல்லப் பட்டுவிட்டதாக கோடிட்டுக் காட்டுகிறது. இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரபாகரனின் இறப்பை விஞான ரீதியாக நிருபிக்கும்படி இலங்கையைக் கேட்டிருக்கிறது. சிறீலங்கா தரப்பில் இருந்து தாங்கள் யுத்தமுனையில் கைப்பற்றிய உடலின் அடையாளம் டிஎன்ஏ பரிசோதனைமூலம் உறுதி செய்யப் படும் என்கிறார்கள். இக்கட்டுரையை நீங்கள் வாசிக்கும்போது இன்று சர்ச்சைக்குரியதாக உள்ள பல விடயங்கள் தெளிவாகி விட்டிருக்கும். எது எப்படி இருப்பினும் நிகழ்வுகள் தமிழரது போராட்டத்தின் முடிவாக இல்லாமல் உலகமயமாதலுக்கு இணக்கமான புதியதொரு வடிவம் எடுக்கப் போகிறது என்பது மட்டும் உறுதியாகிவிட்டது.

இக்கட்டுரையில் இன்றைய நெருக்கடிகளுக்களுக்கு வழி வகுத்த பிராந்திய சர்வதேச மட்ட இராஜதந்திர பிரச்சினைகளை ஆராயவில்லை. மாற்றுக் கருத்துக்கு எதிராக விமர்சனம் சுய விமர்சனத்துக்கு வழி வகுக்கும் அரசியல் விவாதங்களுக்குப் பதிலாக மோதல் முன்னிலை பட்ட துரதிஸ்டம் பற்றியும் ஆராயவில்லை. நீண்ட வாதப் பிரதி வாதத்துக்கு இடமளிக்கும் இப்பிரச்சினைகள்பற்றி பின்னர் தனியாக ஆராயலாம். எனினும் அவசியம் கருதி ஒரு சிறு குறிப்பு மட்டும் எழுத விரும்புகிறேன். அரசியலில் பெரும்பாலான அணுகுமுறைகளும் அவற்றின் பெறுபேறுகளான வெற்றி தோல்விகளும் காலம் காலமாக வரலாற்றில் இடம்பெற்று வருபவைதான். இதனால்தான் அரசியல் ஞானிகள் காலம்தோறும் வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தி வருகிறார்கள். தற்போது வெளிநாடுகளில் எமது போராட்ட நடவடிக்கைகள் பலத்தை நிரூபிக்கும் அடிப்படையில் அமைய வேண்டுமா வெளிநாடுகளில் உள்ள வென்றெடுக்கக் கூடிய சக்திகளை வென்றெடுக்கும் அடிப்படையில் அமையவேண்டுமா என்கிற விவாதம் மேலோங்கி இருக்கிறது. விமர்சிக்கப் படும் பலம்காட்டும் அணுகுமுறை ஒன்றும் வரலாற்றுக்கு புதிய நடவடிக்கையல்ல. அண்மைக்கால வரலாற்றில் துருக்கியின் கேடிஸ் மக்கள் கட்ச்சியான பி.கே.கே இதே அணுகுமுறையைத்தான் கையாளுகிறது. அந்த அமைப்பு மேற்குலகில் தடை பட்டதற்க்கும், மேற்குலகின் எதிர் நடவடிக்கைகளுக்கும் வெறுமனவே மேற்க்கு நாடுகளின் புவி அரசியல் நலன்களின் அடிப்படையிலான அணுகுமுறை மட்டுமே காரணம் என்று குருட்டுத் தனமாகப் புரிந்து கொண்டன. இதனால் கேடிஸ் போராளிகளின் ஆதரவு அமைப்புகள் மேற்குலகை அச்சுறுத்தும் தங்கள் பிழையான நடை முறைகளை விமர்சனத்துக்கு உட்படுத்தவில்லை. தங்கள் தரப்புத் அரசியல் இராஜதந்தர தவறுகளை அவர்கள் விமர்சிக்கவும் கண்டுகொள்ளவும் முயலவில்லை. ஒரு வன்முறை சார்ந்த இயக்கம் மேற்குலகிலும் வன்முறைக்கான வல்லமையை கொண்டிருந்தால், வன்முறை வழி முறைகளைக் கையாண்டால், தனது ஆதரவு வட்டத்தை மேற்க்கு நாடுகளில் பலப்பரீட்சை அடிப்படையிலான போராட்டங்களில் ஈடுபடுத்தினால் நசுக்கå படுகிற ஆபத்தை எதிர்நோக்கும் என்பதைத்தான் கடந்த காலத்தில் பி.கே.கே போன்ற அமைப்புகளின் வரலாறு எமக்குப் புலப்படுத்துகிறது. நாங்கள் அரசை நடத்தினாலும் இதுபோன்ற அணுகுமுறையைத்தான் கையாளுவோம். எங்கள் பிரச்சினைக்கு நாம் எங்கள் எதிரியார் என்பதை சரியாக அடையாளம் கண்டு அவனுடன் நாமும் அவனும் வாழும் புவியியலில் மட்டுமே மோதலை வளர்க்கலாம். ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடும் ஒரு அமைப்பு தங்கள் நாட்டில் தங்களுக்கு ஏற்புடைய வகையில் காரியங்களை ஆற்றுவதையே சந்தேகக் கண்கொண்டு பார்பார்கள். இது இயல்பு. இந்த நிலையில் பலம் காட்டுவதையும் வன்முறைக்கான திறனை வளர்பதையும் வெளிப்படுத்துவதையும் எந்த ஒருநாடும் ஏற்றுக் கொள்ளாது என்பதுதான் வரலாற்றின் பாடம்.

புலம் பெயர்ந்த தமிழர்களின் அடுத்த தலைமுறை ஈழத் தேசிய வாதத்தை வரித்துக் கொள்ளாது என்பதுதான் அண்மைக்காலம்வரை உலக ஆய்வாளர்கள் பலரது கருத்தாக இருந்தது. எனினும் காலம் அவர்களது கூற்றை பொய்ப்பித்துவிட்டது. 4வது ஈழ யுத்தம் புலத்தில் பிறந்த தமிழ் இளையவரை பரவாலாக ஈழ தேசியவாத அரசியல் மயப் படுத்தியுள்ளது. இன்று இனக் கொலையை எதிர்த்து மேற்கு நாடுகளில் வீதி மறியல் செய்வதும் உண்ணாவிரதம் இருப்பதும் அவர்கள்தான். மேற்குலக மொழிகளின் தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் தொலைக் காட்சிகளிலும் பத்திரிகை மாநாடுகளிலும் இளமையான கருத்துக்களைத் தெரிவிக்கிறதும் அவர்கள்தான். இலங்கையிலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் இளைய தலை முறையும் தமிழகம் மலேசியா சிங்கப்பூர் தெனாபிரிக்கா போன்ற நடுகளில் வீதியில் இறங்கியுள்ள இளம் தமிழ் ஆர்வலர்களும்தான் எதிர்காலப் ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் மூலைக் கல்லாக அமையவுள்ளனர் என்பது தெரிகிறது. தமிழகம் மலேசியா தெனாபிரிக்கா போன்ற நாடுகளில்கூட ஈழத்தை ஆதரிக்கும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பரவலான தலைமுறை மாற்றம் வெற்றிகரமாக ஏற்பட்டுள்ளது. இத்தகைய மாற்றம் பரவலாக ஏற்பட்டதற்க்கு உலகமயமாதல் பின்னணியில் ஈழத் தமிழர்களது போராட்டம் தொடர்வது முக்கிய காரணியாகி உள்ளது. தலைவர்கள் பலர் வீரமரணம் அடைந்துள்ள இந்த சந்தர்பத்தில் ஏற்பட்டிருக்கிற இந்த தலை முறை மாற்றம் ஈழப் போரின் எதிர்காலத்தில் பாரிய செல்வாக்குச் செலுத்தப் போகிறது. கொழும்பில் வாழும் எனது தமிழ் தமிழ் பேசும் முஸ்லிம் நண்பர்கள் இத்தகைய ஒரு முடிவை எதிர்பார்க்கவில்லை. தொலைபேசியில் பேசும்போதே அவர்களது குரல் உடைந்து கண்கள் கசிவதை உணர்த்தியது. கனடாவிலும் லண்டனிலும் இளையவர்கள் தங்கள் பெற்றோரின் தலைமுறையின் கட்டுப்பாட்டில் இல்லை. அவர்கள் "நாங்கள் இந்த நாட்டில் பிறந்தவர்கள் எங்களுக்கு நீங்கள் ஒத்துழைத்தால் போதும்" என்று ஆங்கிலம் கலந்த தமிழில் கூறியபடி வீதிமறியல் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இனக்கொலை சேதிகளால் அதிர்ந்துபோய் இருந்தாலும் இந்த இளைஞர்கள் அடிப்படையில் மேற்குலக ஜனநாயகத்தின் புதல்விகளும் புதல்வர்களுமாவர். என்னுடன் பேசிய இளைஞர்கள் நோவீஜிய மொழியும் ஆங்கிலமும் தமிழும் கலந்த வார்த்தைகளில் "பலத்தால் மட்டும் வெல்லக் கூடியதை பிரபாகரன் வென்று தந்திருக்கிறார். எஞ்சியுள்ள மக்களாலும் அரசியலாலும் இராஜதந்திரத்தாலும் சாதிக்க வேண்டிய மிகுதியை நாங்கள் சாதிப்போம்" என்று உறுதியாகச் சொன்னார்கள். அவர்கள் மத்தியில் கடந்தகாலம் பற்றிய உறுதியானதும் ஆக்கபூர்வமானதுமான சுய விமர்சனம் உள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடுகள், கொசோவோ, கிழக்கு தீமோர் தலைமைகள்போல வீதிக்கு இறங்கும் துணிவும் தெளிவும் உள்ள மக்கள் தலைமையை பலத்தை உணத் தவறிவிட்டதாகவும் எதிர்காலத்தில் அந்த தவற்றை திருத்த வேண்டும் என்றும் சில இளைஞர்கள் சொன்னார்கள். இப்போது ஊர்வலங்களில் மக்களையா அல்லது தடைசெய்யப்பட்ட பதாகைகளையா முன்னிலைப் படுத்துவது என்கிற விவாதம் அவர்கள் மத்தியில் இடம்பெறுகிறது. இளையவர்கள் நம்பிக்கை தருகிறார்கள். இந்த உலகளாவிய தமிழ் இளையோர் வட்டம் ஈழப் போராட்டத்தை ஜனநாயகப் படுத்துவதிலும் சர்வதேச மயப் படுத்துவதிலும் வெற்றி பெறுவார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

2

இலங்கையில் போர் முடிந்துவிட்டதாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரகடனம் செய்துள்ளார். எனினும் உலகளாவி எழுச்சி பெறுகிற ஈழ - உலக தமிழர் சக்திகள் இனிமேல்தான் தமக்கும் சிங்கள இன ஒடுக்குதல் அரச பயங்கரவாதத்துக்கும் எதிரான 5ம் ஈழப்போர் ஆரம்பமாகப் போகிறது என்கிறார்கள். முதலாவது ஈழப்போரில் மக்கள் மத்தியில் வாழ்ந்த தமிழ்ப் போராளிகள் மோதலும் பாய்தலுமாக கெரிலா தந்திதோபாயத்தை முனிலைப் படுத்தினார்கள். இதனால் உருவான நிவாகம் அற்றுப்போன விடுதலைப் பிரதேசங்களில் அவர்கள் மாற்று நிர்வாகத்தை கருநிலை அரசைக் உருவாக்கும் முயற்ச்சிகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து முகாம்வாசிகளான நேரடி இராணுவ பிரிவை கட்டி எழுப்புதை முதன்மைப் படுத்தினார்கள். இதற்க்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் வளங்கள் அடிப்படையாக இருந்தது. மக்களில் தங்கியிருந்த கெரிலா அமைப்புக்குப் பதிலாக புலம் பெயர்ந்தவர்களின் வளங்களில் தங்கியிருந்த நேரடி இராணுவம் முதன்மைப் பட்டது. இன் நிலையில் அமைப்பு தன்னை நேரடி இராணுவ பிரிவை வைத்திருக்கும் கெரிலா அணி என்று கோட்பாட்டு ரீதியாகச் சரியாக அடையாளப் படுத்திச் செயல்பட தவறி விட்டாரள். போராளிகள் தவறாக தங்களை நேரடி இராணுவத்தை வைத்திருக்கும் அரசு என்று பிழையாக அடையாளப் படுத்தி விட்டார்கள். இதனால் ஒருபுறத்தில் கெரிலா அமைப்புக்கு கொடுக்க வேண்டிய பிரதானத்தை தவறுதலாக நேரடி இராணுவத்துக்குக் கொடுத்துவிட்டார்கள். இவற்றை விரிவாக ஆராய்வது இச் சிறு கட்டுரையின் நோக்கமல்ல. என்னும் ஒரு அரசு உருவாகமுன்னம் விடுதலை அமைப்பின் அடிப்படையான கெரிலா தன்மையை இழந்துபோனதும் அரசையும் நேரடி இராணுவத்தையும் கட்டி எழுப்புவது என்கிற நிலையை எடுத்ததும் துரதிஸ்ட வசமானதாகும். இந்த தவறான போக்கு 2002 போர் நிறுத்தத்தின்போது பலப்பட்டது. துர் அதிஸ்ட வசமாக எதிரியின் உளவுபார்க்கும் விமானங்களுக்கு தெளிவாகும் வரையில் கட்டிடங்கள் தலைவர்களின் வாகனங்கள் கட்டுமானங்கள் என வன்னி முழுவதும் பரந்துபட்ட வழ்க்கை முறைமை ஒன்று சமாதான காலக் கட்டத்தில்தான் உருவானது. நுனி மரத்தில் இருந்தபடி அடி மரத்தை வெட்டுவதுபோல கெரிலா அமைப்பை பின்தள்ளிவிட்டு ஒரு அரசும் படைகளுமாக ஒரு சின்னம் சிற்றினத்தின் விடுதலை அமைப்பு இப்படித்தான் தோல்விப் பதையில் கால் எடுத்து வைத்தது.

இதுதான் நவீன வன்னி அரசு எதிரியால் இலகுவாகச் சுற்றி வளைக்கக் கூடிய சூழலை உருவாக்கிய கதை. கெரிலா அமைப்பு முதன்மைப் பட்டிருந்தால் வன்னி போன்ற தமிழ் பகுதிக் காடுகள் மட்டுமன்றி யால காடுமுதல் வில்பத்துவரையிலான சிங்களக் காடுகளிலும் தமிழ்ப் போராளிகள் இருந்திருப்பார்கள். மக்களைவிட ஆயுத பலத்திலும் பயிற்ச்சியிலும் போராளிகளின் எண்ணிக்கையிலும் நம்பிக்கை வைத்து தன்னம்பிக்கையுடம் சுற்றி வளைப்பு என்கிற நச்சு வட்டத்துக்குள் தற்காப்பு யுத்த அணியாக பின்வாங்கிச் சென்றிருக்க மாட்டார்கள். இப்போது தாய் மண்ணில் ஏற்பட்டுள்ள பின்னடைவு ஈழப்போராட்டம் 5 ஆயுதங்களில் அல்ல அடிப்படையில் தாய்மண்ணிலும் புல மண்ணிலும் அணிதிரளும் மக்களிலேயே தங்கி இருக்கும். தாய் மண்ணில் பின்னடைவு ஏற்பட்டாலும் வெளிப் புலத்தில் அமைப்பு என்றுமில்லாத வகையில் இளம் இரத்தம் பாச்சபாடு பலப் பட்டுள்ளது. பல்தேசிய தமிழர் மத்தியிலும் ஒருபோதுமில்லாத ஆதரவு பெருகியுள்லது. எனவேதான் முழுமையான தோல்வி என்னாமல் பகுதிசார்ந்த பின்னடைவு என்று எழுதுகிறேன்.

3

வெளிவிவகாரங்களைப் பொறுத்து இந்தியா சார்பாக குறிப்பாக இந்திரா காந்தி அம்மையாரின் மரணத்துக்குப்பின் பின்னடைவுகள் ஆரம்பித்து விட்டன. போராளிகளுக்கு ஆரம்பத்தில் இருந்தே குறித்த ஓர் இன அதிகாரிகளுடன் பனிப் போர் இருந்தது. அந்தப் பனிப்போரை இரு தரப்புகளும் இனம் கண்டு திருத்தத் தவறி விட்டதுதான் துர் அதிஸ்ட்டம். அது இந்திய அமைதிப்படைகால தவறுகளுக்கும் பின்னர் ஏற்பட்ட அனர்த்தங்களுக்கும் அடிப்படையாக அமைந்துவிட்டது. இந்த மோதல் இந்திய நலன்களுக்கும் ஈழத் தமிழர்களது விடுதலைக்கும் எதிரானதாகும். ஜெ.ஆர்.ஜெயவர்த்தனாவின் காலத்திலேயே சிங்கள அரசுகள் இந்த மோதலை சரியாக அடையாளம் கண்டுகொண்டு தமக்குச் சார்பாக கையாளத் தவறவில்லை. நாங்கள் கணிசமான மலையாள தொடர்புள்ளவர்கள் என்பதை எடுத்துச் சொல்ல தவறி விட்டொம். இது தவிர இலங்கைத் தமிழர் மத்தியில் பிராமனர் பிராமணர் அல்லாதோர் பிழவு இல்லை. எங்கள் நாட்டுப் பிராமணர்கள் அடிப்படையில் நிலமற்ற எழைப் பூசாரிகள். எங்கள் மாவீரர்களில் பல பிராமனர்களும் இருக்கிறார்கள். தமிழ் நாட்டில் இது புரிந்து கொள்ளப் படவில்லை. தமிழ்நாடு தன்னைப்போலவே எங்களையும் பார்த்ததில் இதனைப் புரிந்து கொள்ளவில்லை. தமிழ் நாட்டின் மேற்படி பிழவு அன்யாயத்துக்கு எங்கலை வெகுவாக பாதித்து விட்டது. எதிரியும் குறிப்பாக ஊடகத்துறை சார்ந்து இந்தப் பிழவை அடையாலம் கண்டு பயன்படுத்த முனைந்து வருகிறான்.

இந்த விடயங்களை எல்லாம் நாம் இதுகாறும் விவாதிக்கத் தவறிவிட்டோம். இந்தியாவுக்கும் எங்களுக்கும் இடையில் கலாசாரத்தாலும் வரலாற்றாலும் பொது எதிரியான சீனாவின் அணியில் சிங்கள ஸ்தபனம் இருப்பது தொடர்பாகவும் ஒருங்கிணைந்த கேந்திரக் கடல் தொடர்பாகவும் வலுபெற்றுள்ள நலன்களின் பிணைப்பைக்கூட நாங்கள் கண்டுகொள்ளத் தவறி விட்டோம். அமரிக்க மைய உலக மயமாதல் பல்தேசிய தமிழ் இனங்களை பலமாக ஒருங்கிணைக்கிறது. இலங்கைப் பிரச்சினையை பிழையாகக் கையாளுவதன் மூலம் உலகத் தமிழர்களை முற்று முழுதாக அமரிக்காவின் முகாமுக்குள் தள்ளிவிடுகிற தவற்றை இரு தரப்பும் செய்து விடக்கூடாது.

இலங்கையில் இடம்பெறுகிற தமிழ் இனக்கொலைக்க்கு எதிராக ஐநாவைச் செயற்பட விடாமல் தடுத்த சீனாவை ஈழத் தமிழ் மக்கள் இனியாவது உணர்ந்து கொள்ள வேண்டும். அனுபவங்கள் உலக தமிழ் பங்காளிகளின் பலத்தில்தான் நம் எதிர்காலம் தங்கி இருக்கிறது என்பதை தெளிவாக்கி விட்டது. உலகத் தமிழர்களின் கலாச்சாரப் பங்காளியானஇந்தியாவுடனன எங்கள் உறவு எப்போதும் முன்னுரிமையைப் பெறுகிறது. உலகத் தமிழினம் அமரிக்க மைய உலகமயமாகும் பின்னணியில் மேற்க்கு நாடுகளில் புலம் பெயர்ந்த ஈழ உலகத் தமிழர்களின் பலம்பெற்றுவரும் இருப்பு மேற்க்கு நாடுகளுடனான உறவுகளை தீர்மானிப்பதாக அமையப் போகிறது. இந்த விடயங்கள் புரிந்து கொள்ளப் பட்டிருந்தால் தற்கொலை தாக்குதல்களைக் கைவிட்டுவிட்டு சர்வதேச சமூகத்துடம் எம்மால் வெற்றிகரமாகச் செயல் பட்டிருக்க முடியும்.

நிலைமைகள் ஈழத் தமிழர்களது போராட்டம் முடிந்து விட்டதை அல்ல முன்னெப்போதையும் விட பலமாகவும் வெற்றிகரமாக முனெடுத்துச் செல்லப் படும் என்பதையே காட்டுகிறது. அதற்க்கான ஆற்ரலையும் வளங்களையும் ஈழத் தமிழர்கள் உலகத் தமிழர்கள் ஆதரவுடனும் சரியான வெளியுறவுக் கொள்கைமூலமும் மிக இலகுவாக திரட்ட முடியும்,

"ஆயிரம் காட்டுத் தீகளும் அணைந்தே போகும்

முகம் கொடுத்த புல்வெளியோ பூத்துக் குலுங்கும்"

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.