Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறத் தலைவன் (மறை)யவில்லை அறப்போரால் அகங்குளிர்வோம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்ல தமிழீழமென்னும் வலிமைகொண்ட யாழ்மண்ணில்

வெல்லவொரு வேங்கை தந்த வேலுப்பிள்ளை யண்ணல்

கருச்சுமந்த யன்னையாம் பார்வதி வயிற்றினிலே

அருகேகிப் பழமென்று சூரியனை பிடித்தவெங்கள்

மாருதியின் பலபொருந்த அவதாரமெடுத்த வொரு

சுயபல மிகுத்தவொரு சுந்தரக் கரிகாலன்

மருவுபெயர் தாங்கியவன் மாயா வுலகினிலே

மண்ணுமொத்துச் சீராட்ட மறத்தமிழன் தமிழ்மணக்க

எங்களுயிர் கலந்திருந்து எடுத்தநல் சேனையுடன்

வீரத்தின் வித்தகனாய் உலகத்தமிழ் நெஞ்சமதில்

மனமுருகி இன்றுனக்கு வாழத்துகின்ற வேளையிலே

வாடாத பாமாலை அணிவதற்கு விளைகின்றேன்

தமிழீழப் பெருஞ்சுவையாய் வற்றாத கனவோடு

எண்ணமதில் பிறந்த மண்ணின் விடிவுக்காய்

ஈரெட்டு வயதினிலே எடுத்தவுன் சுதந்திரத்தின் மூச்சாகி

உன்னை யுருக்கி வீரர்களை யுருவாக்கி

விடுதலைப் புலிகளென்று வீறுநடை போட்டுநின்று

ஜாதிகள் பேதமற்று இளைஞர்கள் யுவதிகளை

தேசமெனும் பற்றுணர்த்தி படையெடுக்கப் பாசறையும்

உனையீன்ற மண்ணிற்காய் உத்தமனே யமைத்துநின்றாய்

சிம்மாசன மேற்கும் காலமது விரைவினிலே

மணிமகுடம் தேடிவரும் காலமது தூரமல்ல

வீர விருந்து வைக்கும் வீரவேங்கை நீயன்றோ

அர்த்தமது புரிந்துகொண்டால் மெய்யொருகால் ஆடிவிடும்

எந்தநாட்டுத் துணையுமின்றி நின்காலின் நின்றவன் நீ

நெடுநாளாய் மௌனமது காட்டிவிடும் போதினிலே

கடுப்போனவர்கள் கரிசனையாய் கார்த்திகையைப் பார்த்திருப்பார்

உன்பேச்சின் ஆற்றலையும் உன்மௌன ராகத்தையும்

ராஜபக்ச உள்ளிட்ட நாசகாரக் கும்பல்களும்

செவிமடுக்கக் காத்திருக்கும் மாவீரர் உரைதானே

உலகமெலாம் உன்பக்கம் பார்வைதன்னைத் திருப்பிவிட

விலைபோகா வீரனுன்னை வீழ்த்தியதாய் செய்தியிங்கு

கலங்கவைத்துத் தேற்றயது காரணத்தை யாமறிவோம்

குலக்கொழுந்தை யழித்தாராம் கொடும்பாவி யாட்சியினர்

என்றவிடு கதையும் ஏமாற்றும் வித்தையென்றும்

ஊன்றிப் போனவர்கள் உரைக்கின்ற தேற்றத்தால்

சான்றுபல திரட்டியங்கே சோர்வகற்றி வைத்தார்கள்

தமிழ்த்தாயின் மடிபிறந்து தன்மான மிழப்போரால்

தமிழினத் தலைவனையே தகனஞ் செய்தபின்னர்

ஆமிக்கே வெற்றியன்று அகமகிழ்வோர் மிகுவாக

நீதிக்கே பொய்யுரைத்து நாடுபலகடந்து வந்தோம்

மேதினியில் மேவுசுகம் மிகுவாகப் பெற்றபின்பும்

சேதிபல மொழிவதற்கு சொர்க்கபுரி யிதுவாமே

நாதியற்று வந்தெமக்கு நாடொன்று தேவையென

ஆதிமுத லொற்றுமையாய் அணைந்துநாம் நின்றிருந்தால்

பாதித்தமிழினத்தின் பேரழிவைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை

உண்மைத் தமிழரென்று உலக முரைக்கையிலே

எண்ணத்தில் எள்ளளவும் எமக்குள்ளே ஒற்றுமையில்லை

கண்ணாலே கடந்தபல காட்சிகளை கண்ணுற்றும்

கண்ணிலே ஊனாகி சாட்சிகளைப் பொய்யாக்கி

மண்ணோடு மரணித்த மனச்சாட்சி அடகுவைத்து

பண்பிலே தமிழினத்தை பாகுபட வைத்தனரே

இந்நிலை யெப்போதும் இல்லா தொழிவதற்கு

சுந்தரத் தமிழீழம் சுலபமாய் அமைவதற்கும்

வெந்தழல் நீறிட்டோர் வெகுண்டுமுழி பிதுங்குமாறு

சிந்திய குருதியங்கே செருக்களத்தில் காயுமுன்னர்

விந்திய மலைபோல வீரனேநீர் வரவேண்டும்

சொந்தமாய் யுயிர்த்தமிழின் உயர்மூச்சைக் கொண்டவர்க்கு

செந்தமிழின் பாகனேநீ பல்லாண்டு வாழ வேணும்

தமிழினத்தின் தவப் புதல்வா தரணியெங்கும் புகழ்தலைவா

நிழலின்றித் தவிப்பவர்க்கு நிழற்குடையாய் ஆனவன் நீ

தென்றலாய் என்வாழ்த்து சேர்ந்தங்கே ஆர்ப்பரிக்கும்

தமிழர்களின் தாகத்தை தந்துஎம்மை மகிழ்விக்கும்

தேசியத்தின் தலைவனே தமிழீழச் சூரியனின் கதிரெழவே

இவன்தானைத் தலைவெனென்று தரணியெங்கும் வாழ்தொலிக்க

சிவனார் அருளோடு சிறப்புற்று வாழியவே

அளவையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாதியற்று வந்தெமக்கு நாடொன்று தேவையென

ஆதிமுத லொற்றுமையாய் அணைந்துநாம் நின்றிருந்தால்

பாதித்தமிழினத்தின் பேரழிவைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை

உண்மைத் தமிழரென்று உலக முரைக்கையிலே

எண்ணத்தில் எள்ளளவும் எமக்குள்ளே ஒற்றுமையில்லை

இதை புரிந்து கொண்டு செயற்படுவோமாக.....

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவன் இருக்கிறானா இல்லையா? - இதுதான் தலையாய கேள்வி! தளர்ந்து போகின்றோம் தடுமாற்றம் கொள்கின்றோம் நிலை குலைந்து உண்மை நிலைநாட்ட மறுக்கின்றோம்! எது உண்மை? எது பொய் எவருக்கும் தெரியவில்லை கடவுள் போல எம்தலைவன் காத்திருந்தான் எம்மை! இன்றுவரும் செய்திகளால் நாம் எல்லாம் சவமானோம் உண்மை!

ஆய்வுகள் விட்டு விட்டு எம் செயலில் நிலை நாட்டுவோம்! புலம் பெயர்ந்த நாட்டில் எல்லாம் ஈழமானம் நிலைநாட்டுவோம் பேதங்கள் களைந்துவிட்டு ஒன்றாகிச்சுழலுவோம்! இடையில் வந்து தடைகள் போடும் துரோகிகளைத் துகிலுரித்து தலைவன் சொன்ன வழி நின்று 'ஈழம்' வெற்றி காணுவோம்!

எம் உணர்வில் உயிரில் உன்னதமாய் கலந்துவிட்ட தலைவன் இருப்பது உண்மை! கனவல்ல தமிழீழம் அதுவே ஈழத்தின் தன்மானம் தற்கொடைகள் தந்த போராளிகளுக்கு நாம் கொடுக்கின்ற வெகுமானம்! உயிரோடு உள்ளது எம் உணர்வுகள் அந்த உணர்வுக்குள் ஒளிர்கின்றான் எம் உன்னத தலைவன்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.