Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எண்ணப்போர் -2

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வகையான எண்ண போரில் 21 வயதுக்கு குறைவான நம் இளையோரும் , குழந்தைகளும் கூட பங்காற்ற முடியும்.

நம் குழந்தைகளுக்கு கோடு போட்ட/போடாத நோட்டு ஒன்று வாங்கி கொடுங்கள். அதில் ஒரு நாளைக்கு ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கம் கீழ்க்கண்ட வாக்கியத்தை பொறுமையாகவும் நிதானமாகவும், மன ஒருமைப்பாட்டுடனும் எழுத சொல்லுங்கள் .

"வெகு விரைவில் சுதந்திர தமிழ் ஈழம் மலரும்"

இதற்கு 'எழுத்து ஜெபம் ' என்று பெயர்.

இவ்வாறு நாம் நம் பங்களிப்பை தீவிரமாகவும், இடைவிடாமலும் அனைத்து வகையிலும் செய்யும்போது திறக்காத கதவுகளும் திறக்கும்.

நம் இனத்தில் ஒரு பிரபாகரன் சட்டென்று பிறந்துவிடவில்லை. பல ஆண்டுகள் நம் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளால் மனம் நொந்த நம் இன முன்னோர்களின், 'இந்த கொடுமையை நிறுத்த ஒருத்தன் வர மாட்டானா?' என்ற ஏக்கமே பிரபாகரனாக வடிவெடுத்தது என்று உறுதியாக நம்புகிறேன்.

அசுரர்கள் தவம் செய்து வரம் வாங்கி பலம் பொருந்தியவர்களாய் மாறி, தேவர்களுக்கும் மக்களுக்கும் சொல்லவொண்ணாத கொடுமைகள் செய்து வந்தார்கள் , தேவர்கள் ஈசுவரனிடமோ, விஷ்ணுவிடமோ சென்று முறையிட்டார்கள், அவரும் 'நாம் விரைவில் அவதாரம் செய்து அசுரனை ஒழிப்போம்' என்று வரம் வழங்கி, அவ்வாறே அவதாரம் செய்து அசுரர்களை கொன்று மக்களை காத்தார் என்று புராணங்களில் படித்திருப்போம். தம்மை காக்க வரும் இறைவன் என்று தாங்கம் நம்பும் சக்திக்கு மக்கள் உருவம் கொடுத்து வழிபட்டார்கள் . அனைத்தும் எண்ணமே.

பரஞ்சோதி மகானும் தன்னுடைய 'நான் கடவுள்' என்னும் புத்தகத்தில்,

'எண்ணமே உயிர், எண்ணமே உலகம், எண்ணமே கடவுள்' என்று கூறியுள்ளார்.

தீவிரமான எண்ணம் வெளிப்படும்போது , அந்த எண்ணம் செயல்படுவதற்கான காரணிகளை அது முடுக்கிவிடுகிறது .

"நீ மனித சஞ்சாரமற்ற இடத்தில் உள்ள ஒரு குகைக்கு சென்று, ஒரு எண்ணத்தை தீவிரமாக நினைத்து செத்துப்போனால் கூட, அந்த எண்ணம் உலக மக்களின் மூளையில் பிரதிபலித்து அதற்குண்டான விளைவை கொடுத்தே தீரும்" என்பது சுவாமி விவேகானந்தரின் வாக்கு.

கவலையோடிருப்பதும் , வீண் விவாதங்களும் மனதின் சக்தியை வெகுவாக குறைத்து விடும். கூடுமான வரை, நிதானமாகவும் அதிக உணர்ச்சி வசப்படாமலும் இருக்க பாருங்கள்.

"நடுப்பகலும், நாடு நிசியும் நெடு நேரம் நீடித்திருக்காதது போன்று உலக மக்களின் துன்பங்களும், நெருக்கடியும் நெடுங்காலம் நீடித்திருக்காது" எனபது பரஞ்சோதி மகானின் வாக்கு.

நம்புங்கள். இந்த துன்பமும் கடந்து போகும். வருடம் முழுவதும் குழந்தையை சுமந்தாலும், பிள்ளை பெரும் நேரத்தில் ஒரு தாய் அனுபவிக்கும் வேதனையை நாம் இப்போது அனுபவிக்கிறோம். இதுவும் கடந்து போகும். நல்ல காலம் பிறக்கும்.

பிராந்திய நலனுக்காய் ஆடுகளைபோன்று முகமூடி அணிந்த ஓநாய்களை கவனிக்காமல் விட்டது எம்மினத்தின் தவறு என்றால், அந்த ஓநாய்களுக்குள் சண்டை மூளும் நாள் வெகு தொலைவில் இல்லை. விழிப்பாய் இருப்போம், சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் பயன்படுத்திக்கொள்ளுவோம்.

எல்லாம் முடிந்தது, இனி ஒன்றுமேயில்லை என்று துவண்டு போகும் நேரங்களில் எல்லாம் வியக்கத்தக்க வகையில் துன்பப்படும் மக்களுக்கு உதவிகள் கிடைத்திருக்கிறது. பரஞ்சோதி மகானின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை, அவர் எழுதிய புத்தகத்தில் உள்ளது, விவரிக்கிறேன்.

கேள்வி: பொறுமைக்கு எல்லை உண்டா சுவாமி?

பதில் : உண்டு. அதாவது காரிய வெற்றி கிடைக்கும் வரை பொறுமை கொள்ளுவது மிக மிக அவசியமாகும்.

என் அனுபவம் ஒன்றை இங்கே குறிப்பிட்டால் அது நன்கு விளங்கும். 1933-இல் வியாபார சம்பந்தமாக பர்மாவில் உள்ள மர்க்கி என்னும் தீவுக்கு போயிருந்தேன். அங்கு விற்க வேண்டிய சரக்குகளுக்கு ஆர்டர் பெற்று தவாய்க்கு திரும்புகையில் டிக்கட் வாங்கத்தான் கையில் பணம் இருந்ததே ஒழிய கை செலவுக்கு சல்லிக்காசு கூட இல்லை. என்ன செய்வது, உடனிருந்த வியாபாரிகளிடம் கேட்கவும் கூச்சம். கையிலிருக்கும் மாதிரி சாமான்களை விற்று பணமாக்கலாம் என்றாலோ, மற்ற வியாபாரிகள் இளக்காரமாக எண்ணுவார்களோ என்ற பயம். சுமார் 5 ரூபாய் மதிப்புக்கு தபால் வில்லைகள் என்னிடமிருந்தும், அதை செலவுக்குன் எவ்வாறு பயன்படுத்துவது? இப்படி நிர்கதியாய், சொல்லவும் மாட்டாமல் இரண்டு நாள் பசியையும் பொறுத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தோம். பசியின் கொடுமையால் கண்கள் குழிந்து போக, முகமும் வாட அவஸ்தை படலானேன்.

இப்போது இந்த நிலைமையை சமாளிக்க எவ்வளவு பொறுமை வேண்டும் பாருங்கள். "தயங்காதே; மயங்காதே; இதோ இன்றிரவு தவாய்க்கு போனதும் உனக்கு நல்ல உணவு தருகிறேன்" என்று என் வயிற்றுக்கு ஆடுதல் மொழி கூறிக்கொண்டே, மிகப்பொறுமையுடன் வரும் சமயம் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. அதாவது ஓடிக்கொண்டிருக்கும் காரின் டயர் வெடித்து நின்று விட்டது. டிரைவர், "அடடா; இதை சரிசெய்ய இன்று முடிகிறதோ அல்லது நாளையும் ஆகுமோ" என்று சொல்லிக்கொண்டே கீழே இறங்கினார் பாருங்கள், பொறுமையிழக்கும் நேரமும் வந்துவிட்டது. ஆனால் இப்போது முன்னிருந்ததைவிட அதிக உறுதியும், பொறுமையும், சிரிப்பும் கொள்ளலானேன். காரை விட்டு கீழிறங்கி ஏதோ யோசித்துக்கொண்டு நின்றிருந்தேன். அப்போது ஒருவர் வந்து, "முதலாளிகள், நீங்கள் வாருங்கள். எங்கள் முதலாளி கூப்பிடுகிறார்" என்றார். "என்னையா?" என்று சந்தேகத்துடன் கேட்டேன். ஏனெனில் அங்கு என்னுடன் காரில் வந்தவர்களை தவிர எனக்கு அறிமுகமானவர் எவரும் கிடையாது. கூப்பிட்ட ஆளும், "ஆம், உங்களைத்தான்" என்று கூறி அழைத்து சென்றார். அருகில் செடிபடர்ந்த இடத்தில் விரிப்பின் மேல் ஒரு கனவான் உட்கார்ந்துகொண்டு என்னை வரவேற்றார். விரிப்பின் மீது கோதுமை ரொட்டியும், கோழி கறியும் பரிமாறப்பட்டிருந்தது. அந்த பெரியவர் வெகு மரியாதையுடன் என்னை துவக்கம் செய்ய கேட்டுக்கொண்டார். எனக்கு மிகுந்த ஆச்சர்யமாயிருந்தாலும், எல்லாம் பொறுமையின் பலன் என்று எண்ணிக்கொண்டே, கருணையுடன் துவக்கிச் சாப்பிட்டுக்கொண்டே வியாபார சம்பந்தமாக பேசினோம். அவர் ஒரு இரும்புச் சுரங்க முதலாளியாம். மீதப்பட்ட ரொட்டி, கறியை காரில் வந்த மற்றவர்களுக்கும் கொடுக்கச் சொன்னேன். அந்நேரத்தில் வேறொரு பஸ் அவ்வழியே வர, அதிலிருந்து ஒரு மாற்று டயர் மாற்றிக்கொண்டு அன்றிரவு ஒரு மணிக்கு தவை வந்து சேர்ந்தோம். இப்போது விளங்குகிறதா பொறுமைக்கு எல்லை எதுவென்று? பொறுத்திருந்து காரிய சித்தி அடைவதே சிறந்ததாகும்.

கவன ஈர்ப்பு நிகழ்வுகளை மேற்கொள்ளும் மக்கள் பொறுமையை கருத்தில் இருத்தில் வெற்றியடைய உலகின் அனைத்து நல்ல உள்ளங்களையும் வேண்டுகிறேன்.

மற்றுமொரு இடத்தில்,

'ஒருவன் மிகுந்த நல்லெண்ணமும், உயர்ந்த ஒழுக்கமுமுடையவனாக இருந்தால், அவனுடைய எண்ணத்தின் வேகம் பொது மக்களின் மூளையில் தாக்கி, பெரும்பான்மையான மக்களுக்கு நலனைத் தரத்தக்க ஆராய்ச்சி செய்து, அனுபவிக்கத்தூண்டுவதோடு, அவனது பண்பாட்டிற்கேற்ப, சுற்றுச்சார்பிலுள்ள மக்கள் ஒத்துழைக்க முற்படுவதுடன், அவர்கள் துன்பமும் நீங்குகிறது. '

என்றும்,

நல்லெண்ணமே இருதயத்தையும் மூளையையும் குளிர வைக்கும்,

நல்லெண்ணமே இருதயத்தையும் மூளையையும் திடப்படுத்தும்,

நல்லெண்ணமே ஊக்கத்தை உண்டாக்கி, உலகத்தையே சிறப்பிக்கும்.

எண்ணமே கடவும், எண்ணமே உயிர், எண்ணமே உலகம்.

என்று கூறியுள்ளார்.

புலம் பெயர் நாடுகளில் தொடர்ச்சியான கவன ஈர்ப்பு நிகழ்வுகளில் ஈடுபடும் எம்மக்களின் நல்லெண்ணம், அந்த அந்த நாடுகளில் உள்ள மக்களின் கருணையை எம்பக்கம் திருப்பட்டும். நிச்சயம் திருப்பும்.

மற்றுமொரு இடத்தில்,

கேள்வி: சாமி, முயற்சி உடையவனுக்கு தோல்வி உண்டா?

பதில் : பறவை உட்காரும்போது கொம்பு ஒடிந்துவிட்டால் மேலும் பறந்து மறுகொம்பில் உட்காரும். அதுபோன்று, முயற்சி உடையவனுக்கு தோல்வி இல்லை.

என்று கூறியுள்ளார்,

கவன ஈர்ப்பு நிகழ்வுகளில் ஈடுபடும் இளையோர் மீது நம்மின மக்களே நிறைய குற்றச்சாட்டுகள் கூறுகிறார்கள், தடங்கல்களை ஏற்படுத்துகிறார்கள் என்று கேள்விப்படுகிறோம்,.

பரஞ்சோதி மகானின் இயல்பையே நாமும் கைகொல்லுவோம்:

'எடுத்த காரியத்தை முடிக்க விடாமல் இன்னல் பல கொடுப்போரும் உண்டு. அப்படிப்பட்டோருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் அவர்கள் மீது எடுக்காமல், வைராக்யமும் பொறுமையும் கொண்டு உழைத்து காரிய வெற்றியடைந்து நாம் சந்தோஷிக்கும் காலத்தில், நமக்குச் செய்யப்பட இடையூறுகள் அனைத்தும் நமக்கு சாதகமாகவே அமைந்திருக்க காண்போம். அப்போதுதான் நடந்ததெல்லாம் பெரும் நன்மைக்கே என்று சந்தோஷிக்க வேண்டியதாகவிருக்கும். அதே சமயத்தில் இன்னல் விளைவித்தவர்களையும் நாம் மனதில் நினைத்து சந்தோசம் கொள்ளவேண்டும். ஏனெனில் நம் காரிய வெற்றிக்கு அன்னாரின் இன்னல்களே காரணமாயிருந்ததால்.'

விடுதலை போரில் எதிரியாக நிற்பவர்களையும், துரோகியாக நிற்பவர்களையும் ஒரு நாளைக்கு ஒரு தடவையேனும் நினைத்து, அவர்களின் எண்ணம் மாறி, எம்மின மக்களின் நியாயமான கோரிக்கைகளை அவர்கள் மதிக்க வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும் என்றும் நம் எண்ணத்தை திடமாக செலுத்துவோம்.

'உலக நல்லடியார்களே! நீங்கள் இனியவை உண்டு மகிழ்ச்சியாய் இருக்கும்போது நல்லடியார்களை நினைப்பதுடன், ஒரு பொல்லாத குணமுடையவனையும், அவன் நல்லறிவுக்காளாக வேண்டுமெனும் நினைத்துக்கொள்ளுங்கள். அப்போது அவன் நல்லரிவுக்காலாகிறான்.'

நிச்சயம் நம் நல்லெண்ணம் எதிரிகளையும், துரோகிகளையும் மாற்றும். நம்புவோம்.

நிச்சயம் நல்லது நடக்கும்.

'வருந்துவதேல்லாம் வல்லமைக்குறைவே. கிடைக்கும் துணிவை உணர்தல் வேண்டும். நடந்ததெல்லாம் அனுபவத்தில் உள்ளது.'

எத்தனையோ அரசர்கள் எதிரிகளிடம் நாட்டை பறிகொடுத்து விட்டு, அனைத்தையும் இழந்து, சமயம் வாய்க்கும்போது எத்டிரிகளை நிர்மூலமாக்கிவிட்டு அனைத்தையும் திரும்ப பெற்றிருக்கிறார்கள் நாம் களத்தைத்தான் இழந்திருக்கிறோம்; யுத்தத்தை அல்ல. யுத்தம் என்பது ஆயுதங்களால் மட்டும் செய்யப்படுவது அல்ல. உணர்வோம், ஒன்றுபடுவோம், விடுதலை பெறுவோம்.

இது இரவானால், பகல் வந்தே தீர வேண்டும், இது இயற்கையின் நியதி . பகலுக்காய் காத்திருப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.