Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரமதானம், முள்ளம்பன்றி மற்றும் சில

Featured Replies

“உங்கட மாடு போனது எங்கட மாடு வந்ததற்குச் சமன்” என்பது எங்களின் போட்டி, பொறாமை மிக்க சுயநல பாரம்பரியத்தைச் சித்தரிக்கும் ஒரு பேச்சு வழக்கு வாசகம். இவ்வாறு சுயநலம் மிக்க பிரயாசிகளாய் வாழ்ந்து வந்த எம் சமூகத்திலிருந்து “எங்கட உயிர் கொடுத்தேனும் உங்களிற்கு விடுதலை பெறுவோம்” என்று போராட்டம் உருப்பெற்ற போது திணறித் தான் போனோம். உணர்ச்சி மேலிட்டு எல்லாமே உணர்ச்சி சார்ந்ததாய் எமது சிந்தனை மாறிப்போனது.

சிவகுமாரனின் நஞ்சுண்ணல், காயப்பட்ட தன்னைச் சுட்டுவிட்டு ஓடிப்போகச் சொன்ன சார்ல்ஸ் அன்ரனியின கட்டளை, மில்லரின் வெடிப்பு, சுற்றி நின்ற இராணுவத்திடம்pருந்து தனது போராளி மகனைக் காப்பதற்காய் அம்மகனைத் தன்னோடு அணைத்தபடி இராணுவத்திடம் தாய் மன்றாடிக்கொண்டிருக்க மகன் குப்பி கடித்துத் தாயின் தோழில் பிணமான காட்சி, எம் கண்முன்னே விடமுண்ட கண்டர்களாகிப் போன எமது பாசமிகு போராளிகள், திலீபன், டோபீடோ வெடிக்கத்தவறியதால் முட்கம்பி வேலிமீது தான் சாய்ந்து தன் உடல் கொண்டு பாதை அமைத்த போராளி, கையிருந்த கடைசிக் குண்டோடு ராங்கிக்குள் பாய்ந்து எதிரியின் முன்னகர்வை முடக்கிய மாவீரன், மயங்கிய நிலையில் குப்பி அடிக்கமுடியாது எதிரியிடம் சிறைப்பட்டு,ப் பின் நினைவு திருப்பியதும் வைத்திய சாலைக் கட்டிலின் சட்டத்தோடு தனது தலையைத் தொடர்ந்து மோதி எதிரியின் பிடியிருந்து உயிர்நீத்து விடுதலை பெற்ற போராளி… இப்பிடி உணர்ச்சிகள் எங்களை ஆக்கிரமித்தன.

சுயநலம் மிக்க உலகில் பொதுநலத்திற்கும் இடமுண்டு என்று நம்பினோம். நீதி, தர்மம், உண்மை, இதயசுத்தி, பாரம்பரியம், என்று உலகில் “நல்ல” விடயங்களென்று நாசூக்காய்ச் சொல்லப்படும் எல்லா விடயங்களிலும் அப்பாவித்தனமாய் நம்பிக்கை வைத்தோம், கனவான்களை நம்பினோம். புத்தகங்களை நம்பினோம். எம்மையும் நம்பினோம்.

இறுதியில் உலகின் வளங்களிற்கான இருத்தலியற் போட்டியில் எல்லோரும் சேர்ந்து எம்மைத் தோற்கடித்து விட்டார்கள். காவியத்தரத்தில் நாம் கட்டமைத்து வைத்திருந்த கோட்பாடுகள் எல்லாம் சிதறிப்போகச் செய்து விட்டார்கள். புத்தகங்களையும் தத்துவங்களையும் வரலாறுகளையும் மாட்சிமைகளையம் வெறித்துப் பார்த்தபடி நிற்கின்றோம். எங்கள் பெறுமதிகள் பற்றிச் சிந்திக்கின்றோம். வைத்தியசாலையில் போதை மருந்துப் பழக்கத்தில் இருந்து விடுபடும் சிகிச்சைக்காக வந்து, இரு நாள் போதைப் பொருள் பாவியாத நிலையில் நிற்கும் ஒரு நோயாளி போல, உணர்ச்சிவயப்பட்ட வாழ்விற்குள் பிறந்த நாள் முதல் வாழ்ந்து பழகிவிட்ட நாங்கள் உணர்ச்சி இன்றி நிற்கின்றோம். பழக்கம் மறக்க நாட்கள்; செல்லும்.

எமது மனவமைப்பு மாற்றமே எமக்கான மருந்து. முதலில் இலக்கியத் தரத்திலமைந்த சரித்திர சிருஸ்ட்டிப்புக்களிற்குள் இருந்து நியத்திற்கு வருவோம். உள்ளதை உள்ளபடி பார்க்கப் பழகுவோம். இது பற்றியே இப்பதிவு பேச விழைகிறது.

ஜெர்மனியின் சிந்தனையாளர்களில் ஒருவர் N~hப்பன்ஹாவர். இவரது முள்ளம்பன்றித் தத்துவம் இன்றை எமது நிலைக்குப் பொருத்தம் என்பது எனது கருத்து.

குளிர்காலத்தில், குளிரின் கொடுமையில் இருந்து தப்புதற்காகச் சக முள்ளம்பன்றிகளின் உடல் வெளிவிடும் வெப்பத்தைப் பயன்படுத்த நினைத்து முள்ளம்பன்றிகள் ஒன்றை ஒன்று அண்மித்து வருமாம். ஆனால், அவ்வாறு அண்மிக்கையில், முள்ளம்பன்றியின் முட்கள் ஒன்றை ஒன்று குத்த, முள் குத்தும் வலியில் இருந்து விடுபட முள்ளம்பன்றிகள் விலகிச் செல்லுமாம். ஆனால் விலகியதும் குளிர் வதைக்க மீண்டும் அவை ஒன்றை ஒன்று அண்மிக்குமாம். இவ்வாறு குளிருக்கும் முட்களிற்குமான போட்டியில் இறுதியில் முள்ளும் குத்தாது வெப்பமும் பெறக்கூடிய ஒரு உச்சப் பலன் பெறும் இடைவெளியை முள்ளம்பன்றிகள் கணித்து அமர்ந்து கொள்ளுமாம். மனிதர்கள் சமூகமாக வாழ்வதும் இது போன்றது தான் என்பதே தத்துவம்.

இன்று நாம் நிற்கும் அநாதரவான நிலையில் தமிழர்களிற்குள்ளிருந்து மட்டுமன்றி உலகின் ஏழு பில்லியன் மக்கள் ஒவ்வொருவரிடமும் இருந்து நாம் பெறக் கூடிய நன்மைகள் அனைத்தும் எமக்குத் தேவைப்படுகின்றன. இருத்தலியல் நகர்வுகளில் நாம் இல்லாது போய்விடாதிருப்பது எமக்கு அவசியம். ஆனால், சக மனிதர்கள் சாதகமும் பாதகமும் கலந்த கலவைகள். இவர்களது நன்மைகள் எமக்கு அவசியம் (முள்ளம் பன்றியின் உடல் வெட்பம் போன்று). அதே நேரம் இவர்களின் தீமைகள் (முட்கள்) எம்மை அழிக்காது நாம் தப்புவதும் எமக்கு அவசியம், இதற்கு எமது சிந்தனையில், மனவமைப்பில் மாற்றம் அவசியம்.

பொதுநலத் தொண்டர்கள் எல்லோரையும் மில்லரின் உயரத்தில் வைத்துப் பார்க்கும் எமது மனநிலையும், உணர்ச்சி வசப்பட்ட சிந்தனையும் முதலில் மாறவேண்டும். தருமாஸ்பத்திரியில் கைவிடப்பட்ட நிலையில் நாம் இன்று காசு வாங்கும் தனியார் வைத்திய சாலைகளிற்குச் செல்வது தவிர்க்கமுடியாதது. எனவே, முதற்கட்டமாய், தன்னலமற்ற சேவை என்ற மனவமைப்பை நாம் முற்றாக ஒழிக்க வேண்டும். இந்த தன்னலமற்ற சேவை என்ற மனவமைப்புத் தான் எம்மை கேள்வி கேட்க விடாது, விமர்சிக்க விடாது கட்டிப் போடுகின்ற காரணி.

இலாபநோக்கற்ற நிறுவனங்கள் என்ற மனவமைப்பில் இருந்து வினைத்திறன் மிக்க நிறுவனங்கள் பேரில் எமது சிந்தனை மாற வேண்டும். அதாவது, எமக்குத் தேவைகள் உள்ளன என்பது நாம் அறிந்தது. எமது தேவைகள் என்ன என்பதனை நிரைப்படுத்துவதும் எம்மால் முடிந்தது. அவ்வாறு நிரைப்படுத்தப்பட்ட தேவைகளை அடைவது என்று வரும்போது, அதற்கு தியாகிகளையும் சமூகசேவகரையும் தேடுவதை விடுத்து, எமக்குத் தேவையானவற்றை வினைத்திறன் மிக்க வகையில் நாம் பெறுவதற்கு உலகில் எந்த நிறுவனம் உகந்தது என்று எமது பணபலத்தின் அடிப்படையில் நாம் தீhம்மானித்து அத்தகைய நிறுவனங்கள் வாயிலாக எமது தேவைகளை நாம் பூர்த்தி செய்யப் பழகிக் கொள்ளவேண்டு;ம். அத்தகைய ஒரு கட்டமைப்பில், சிந்தனை அமைப்பில், கொடுத்த காசிற்கான உச்சப் பலன் பெறும் மனவமைப்பும், தவறுகளை கூர்மையாகக் கவனிக்கும் கிரகிக்கும் தன்மையும் எமக்குத் தானாக வந்து விடும். எமக்குத் தேவை, எமது தேவைகள் வினைத்திறன் மிக்க வகையில் விரைவில் அடையப்படவேண்டியதே அன்றி தியாகி போன்ற முத்திரை குத்தல்கள் அல்ல.

இலாப நோக்கிலமைந்த நிறுவனங்கள் என்று வரும் போது அது தமிழரல்லாத நிறுவனங்களாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. எம்மவர்கள் கூட எமது தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிறுவனங்களைக் கட்டமைக்கலாம். நிறுவனங்களிற்குள் தரத்திற்காக போட்டிகள் வளர வேண்டும். இவ்வாறு ஒரு நிலை ஏற்படுகையில், மக்களை மருட்டும் சுத்துமாத்துக்கள், ஏய்த்துப் பிழைத்தல்கள், வஞ்சனைகள் முதலியனவற்றிற்கான அடிப்படை இல்லாதொழிந்து போகும். சமூக நல சேவகர்களாக வேடம் பூடும் சாத்தியம் வேடதாரிகளிற்கு இல்லாது போய்விடும். எல்லாவற்றிற்கும் மேலால், திறமை அடிப்படையில் நிறுவனங்கள் போட்டியிடும் என்பதனால் பதர்கள் தானாக அகன்று விடும்.

சிரமதான அடிப்படையில் கிராமத்திற்கு மைதானம் அமைத்தல் என்ற மூன்றாம் வகுப்புப் புத்தகத்தின் கதை முடிந்ததாக இருக்கட்டும். சேவை, தியாகம், வீரம் என்ற புல்லரிப்புக்களிற்கு முற்றுப் புள்ளி வைப்போம். உணர்சிவசப்படல் என்ற போதையிலிருந்து விடுபடுவோம். அறிவு சார்ந்து சாத்தியங்களை ஆராய்வோம். தேவையானவற்றை வினைத்திறன் மிக்க வகையில் ப+ர்த்தி செய்யப் பழகிக் கொள்வோம்.

சிரமதான சிந்தனை இனி செத்துப் போகட்டும்.

நீங்கள் சொல்லும் பல விசயங்கள் யதார்த்தமாய் இருக்கின்றன இன்னுமொருவன். நாங்கள் தாயகவிடுதலைப் போராட்டத்தில் ஆயுதரீதியாக தோல்வி அடைந்தமைக்கு வியாபார நுணுக்கங்கள் தெரியாமல் இருந்ததும் காரணம்.

உலகம் மனித உரிமை, மனிதாபிமானம் என்று சும்மா பேச்சுக்குத்தான் சொல்லிக்கொண்டு இருக்கும். ஆனால்... எல்லாம் வியாபார வசதி, வாய்ப்புக்களின் அடிப்படையிலேயே செயற்பாடுகள் நடக்கின்றன.

எங்கள் மூலம் மற்றவர்களுக்கு - குறிப்பாக சர்வதேசத்துக்கு வியாபார ரீதியாக குறுகிய மற்றும் நீண்டகால ரீதியாக உள்ள வாய்ப்புக்கள் ஆராயப்பட்டு அவை சாணக்கியமான முறையில் சந்தைப்படுத்தல் செய்யப்படவேண்டும். அப்போதுதான் எங்களுக்கு உதவிசெய்ய சர்வதேசத்தில் உள்ள ஒருசில நாடுகளாவது பகிரங்கமாக முன்வரும்.

Edited by மாப்பிள்ளை

  • தொடங்கியவர்

மாப்பிள்ளை, உங்கள் கருத்திற்கு நன்றி. நீங்கள் கூறுவதும் உண்மை தான். குதிரை நடக்க வேண்டும் எனில் ஒன்றில் அதற்குக் "கரட்" கொடுக்கப்படவேண்டும் (நடப்பதால் கிடைக்கும் ஆதாயம்) அல்லது "கம்பு" பாவிக்கப்படவேண்டும் (நடக்காமல் விட்டால் ஏற்படும் பாதகம் என்ற வெருட்டல்). இந்த அடிப்படையில் தான் உலகின் கொள்கை வகுப்புக்களும் கூட ஓரளவிற்கு இடம் பெறுகின்றன. பலம் குன்றிய எமக்கு "கம்பு" என்பது ஒரு தெரிவாக அமைய முடியாததால் "கரட்" பற்றிய ஆராய்ச்சிகள்--அதாவது எமக்கும் சாதகமான, பிற சக்திகளிற்கும் சாதகமான ஒரு பொது நிலை---எமக்கு நன்மை தான்.

எனினும் இக்கட்டுரையி;ல் நான் கூறவந்தது, உலகம் பற்றியது மட்டுமல்ல, நமக்குள்ளான மனநிலை பற்றியதும். அதாவது, நாலு தொண்டர் சேர்ந்து ஏதோ அன்றைய தேவைக்கு வேண்டியதை, எவ்வித திட்டமிடலுமின்றி, தூரப் பார்வை இன்றி, பெறுபேறுகள் பற்றிய மதிப்பீடு இன்றி, மாற்றுத் திட்டங்கள் இன்றி செய்து முடிக்கும் மனநிலை பற்றியது. சமூக நலன் தொடர்பில் புலத்தில் செயற்படுபவர்களை எடுத்த எடுப்பில் புனிதர்கள் அல்லது தியாகிகள் ஆக்கிவிட்டு பின் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் கேள்விகள் கேட்கப்படுவதை நாமே தடை செய்து விடுகின்றோம். துரதிஸ்ரவசமாக, இந்நிலைப்பாடு வருங்கால சந்ததியினரிற்கும் இன்று கடத்தப்படுகின்றது. உதாரணமாக, இன்று இளையோரை நோக்கி "மாணவச் செல்வங்கள், இளையோர் இளவால்கள், கண்மணிகள்" என்ற வார்த்தைப் பிரயோகங்கள் பாவிக்கப்படுபமை மேற்படி மனவமைப்பின் வெளிப்பாடே. தொண்டர் மனவமைப்பில் இது தவிர்க்கமுடியாதது. ஆனால் எமது தேவை என்பது ஒரு இனத்தின் இருப்புப் பற்றியது. உலக ஒளுங்கி;ல், உலகின் சக்திகளின் இயங்கங்களிற்கிடையே இவ்வினத்தின் இருப்பை உறுதி செய்தல் பற்றியது. இத்தகைய தேவை என்பது தொண்டர் மனவமைப்பினால் மட்டும் அடைந்துவிடப்படக்கூடியதல்ல என்பது எனது கருத்து.

காசு கீசும் கொடுக்கிறது இல்லை. வேற வசதிகளும் செய்து குடுக்கிறது இல்லை. எண்டபடியால அப்பன், செல்லம், குஞ்சு இப்பிடி ஆகக்குறைஞ்சது வார்த்தைகள் மூலமாவது பாராட்டினால்தான் தொண்டர்களின் சேவைகளை தொடர்ந்து பெறமுடியும். பாராட்டுவது என்பது ஊக்கப்படுத்தல் என்று எடுத்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால் தொண்டனாய் இருப்பவனுக்கு முதலில் தான் செய்வது சரியானதா... தான் வேலைவெட்டி இல்லாமல் நேரத்தை போக்கின்றேனா என்று தனக்குள் சந்தேகம் வரத்தொடங்கிவிடும். சோர்வை நீக்கும்வதற்கு பாராட்டுக்கள், உற்சாகப்படுத்துதல் முக்கியம் என்று நினைக்கிறன்.

Edited by மாப்பிள்ளை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.