Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னிப் பேரழிவும் தொடர்ந்து செய்யவேண்டிய பணிகளும்

Featured Replies

கடந்த 16.05.2009 தொடக்கம் 18.05.2009 வரை அதீத நம்பிக்கையினாலோ, அதி மேதாவிகளின் ஆலோசனைகளினாலோ நயவஞ்சகர்களின் துரோகத்தினாலோ, உலக வல்லரசுகளின் கூட்டு நடவடிக்கையினாலோ ஏற்பட்ட வரலாற்று அழிப்பின் பின்னர் நாம் எல்லோரும் அநாதைகள் போலும் ஆதரவற்றவர்கள் போலும் இவ் உலகின் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு இனமாகவும் உணரத்தலைப்பட்டுள்ளோம்.

இந்த எண்ணம் எம் எல்லோருக்கும் உளவியல் ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இதிலிருந்து நாம் உடனடியாக மீன்டாகவேண்டிய தேவை உலகம் முழுதும் பரந்து வாழும் தமிழினத்துக்கு ஏற்பட்டுள்ளது.

35,000 க்கு மேற்பட்ட மாவீரர்களினதும், 200,000 க்கு மேற்பட்ட தமிழ் மக்களின் சாவுடனும் மதிப்பிட முடியாத உளவியல் , பொருளாதாரா, கலாச்சார, கல்வி சொத்தழிவுகளுக்கும் மேல் நாம் இன்று நிற்கின்றோம்.

இன் நிலையில் எமது மக்களின் விடிவுக்காக நாம் இனிமேல் என்ன செய்யப் போகிறோம் என்பதே எல்லோரினதும் விடை காண முடியாத கேள்வியாக உள்ளது.

1.

தமிழர்களின் ஏக பிரதினிதிகளாகிய தமிழீழ விடுதலைப் புலிகள் 30 வருட காலமாக உலகின் எந்த சக்திக்கும் அடிபணியாது பெரும் கட்டுக்கோப்புடன் உலகமே வியக்கும் வண்ணம் சொந்த மக்களின் பலத்துடன் முப்படைகளையும் கொண்டு ஆட்சி நடத்தி இறுதியாக அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளின் முதல் நிலை ஆலோசனையுடன் இந்தியாவின் வளிநடத்துதலில் சீனா, ரசியா, பாகிஸ்தான், ஈரான் பொன்ற நாடுகளின் முழுமையான ஆயுத உதவியுடன் உலக போர்த் தர்மங்களுக்கு அப்பாற்பட்டு 34 மாத காலமாக தொடர்ந்து நடாத்தப்பட்ட ஒர பெரும் போரை போர்த்தர்மத்துடன் எதிர்கொண்டு ஒரு வரலாற்றுப் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். இதனூடாக அவர்கள் எமக்கு சர்வதேச அரங்குகளில் பெரும் அரசியல் களபோராட்டங்களை விட்டு வைத்துள்ளனர். நாம் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெரும் போராட்ட வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டும் புலிகள் இருக்கிறார்களா இல்லையா என்ற ஆராட்சியை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் மீண்டும் ஒரு வரலாற்றுத் தேவை ஏற்படும்போது அவர்கள் மீண்டும் வருவார்கள் என்பதை மனதில் இருத்திக் கொள்வோம்.

2.

ஈழத் தமிழர் பாதுகாப்பு நிதியம் அமைக்கப்பட வேண்டும்.. (தமிழீழ வைப்பகம்) இது முறையாக சர்வதேச அரங்குகளில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு சர்வதேச சட்ட விதிகளுக்கு அமைவாக நடத்தப்பட வேண்டும். இதன் நடவடிக்கைகள் அனைத்தும் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். இதற்கூடாக மக்களின் நன்மதிப்பைப் பெறறலாம் இதன் நோக்கம்.

1. தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்கு உதவி செய்தல்.

2. இதனூடாக பல்லின மக்களின் பங்களிப்புடன் உலகெங்கும் பார்க்கக்கூடிய

ஆங்கில , தமிழ் தொலைக்காட்சி ஒன்று தொடங்கப்பட வேண்டும்

3. சர்வதேச ரீதியில் நடைபெறும் அறவளிப் போராட்டங்கள், மானாடுகள், சட்ட முன்னெடுப்புக்களுக்கான செலவுகள் இதனூடாக செய்யப்பட வேண்டும்.

4. உலகின் தமிழர் வாழும் நாடுகளில் இதன் கிழைகளை நிறுவி பெரும் நிதி நிறுவனமாக உருவாக்கப்பட வேண்டும்.;

3.

தமிழினத்துக்கு எதிராக செயற்படும் பிபிசி தமிழோசை, கலைஞர் தொலைக்காட்சி சன் தொலைக் காட்சி போன்ற ஊடகங்களின் பொய் முகத்தை உலகத்தின் பார்வைக்கு கொண்டுவந்து அவர்களின் நம்பகத்தன்மைய இல்லாதொழிக்க வேண்டும். இவ் ஊடகங்கள் எமது வாழ்வுரிமைப் போராட்ட நியாயத்தன்மையை பதிவுசெய்ததேயில்லை மாறாக எமக்கெதிரான கருத்துக்களையும் பேரினவாதத்தின் கருத்துக்களையுமே வழங்கி வருகின்றது.

4.

உலக தமிழர் பேரவை தனது செயற்பாட்டை விரிவுபடுத்தி ஒரு ஜனநாயக பொறிமுறையினூடாக தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒருங்கிணைத்து உலக அரங்கில் ஈழத் தமிழருக்காக பேரம் பேசும் ஒரு அரசியல் சக்தியாக உருவெடுக்க வேண்டும் இதனை கால நீடிப்புச் செய்யாமல் உடனே செய்ய வேண்டும்.

5. தமிழ்நாடு நாடு.

தாய்த்தமிழ்நாடு உறவுகள் என்றும் எம்முடனே இருக்கிறார்கள் அவர்கள் எமது இரத்தம். ஆவர்களை குளப்புவது அங்குள்ள சுயநலவாத அரசியல்வாதிகளும் அவர்கள் சார்ந்த ஊடகங்களும்தான். இவர்களுக்கு ஒரு பொது வேலைத்திட்டத்தின்கீழ் சரியான செய்திகள் சென்றடைய சரியான பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

6. ஒருங்கமைப்பு

உலகில் உள்ள எமக்காக குரல் கொடுக்கும் சட்டவாளர்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கலைஞர்கள், மாணவர்கள் கல்விமான்களை ஒருங்கிணைத்து பெரும் செயற்பாட்டுக் களங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

7. சினிமா.

இது ஒரு சிறந்த ஊடகம். நாம் இதை இதுவரை சரியாகப் பயன்படுத்தியதே இல்லை. இனிவரும் காலங்களில் எமது போராட்டம் சம்பந்தமான அதிகளவிலான சினிமாக்கள் உருவாக்கப்படலாம் அதனூடாக எமது போராட்டம் கொச்சைப்படுத்தவும் படலாம் (உம்.) (ராஜீவ் கொலையின் பின் வந்த சில திரைப்படங்கள்) எனவே எமக்கு இவற்றால் பெரும்; பாதிப்புக்கள் ஏற்படலாம் எனவே இவற்றைத் தடுப்பதற்கான மன்முயற்சிகளும் , எமது போராட்டத்தை நியாயப்படுத்தும் சர்வதேச தரத்திலான (அங்கில, தமிழ்) திரைப்படங்களை உருவாக்குதலும் அதக்கெதிரான பிரச்சார திரைப்படங்களை தோல்வியடையச் செய்தலும்.

8. இந்தியா

;. இலங்கை அரசு யுத்த நிறுத்தத்துக்கு விரும்பினாலும நாராயணன், சிவசங்கர் மேனன், சதீஸ் நம்பியார், விஜை நம்பியார் போன்ற மலையாளிகள் (பழைய சேர நாடு) யுத்த நிறுத்தத்துக்கு விரும்பவில்லை இந்த நாராயணன் குழுவினால் இந்திய தர்ம தேசம் என்ற வரலாற்றுப் பெயரிலிருந்து கொலைக்கு உதவும் தேசமாக மாறி இருக்கிறது. இந்தக் காத்தல் கடவுள்களால் ஐந்து மாதத்துக்குள் 50,000 த்துக்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் 30,000 தமிழர்கள் முடமாக்கப்பட்டுள்ளர்கள் 300,000 தமிழர்கள் ஏதுமற்ற அனாதைகளாக உலகிலேயே மிகப் பெரிய மனித வதைமுகாமில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

கேரள மக்கள் எமது போராட்டம் தொடர்பாகவும் தேசியத் தலைவர் தொடர்பாகவும் நல்லெண்ணம் கொண்டவர்கள் ஆனால் இந்த மேதாவிகளால் மொத்த கேரள மண்ணுக்கே கெட்ட பெயர் வந்திருக்கிறது. இனியாவது இந்திய மேலாதிக்கம் மனம் மாறும் என்று நம்புகின்றோம்.

9. சிங்கள மக்கள்.

சிங்கள் மக்களுக்கு நாம் சரியான முறையில் பரப்புரை செய்யவில்லை என்பதை மறுக்கமுடியாது. கோட்டியா ( புலிகள் ) என்றால் மிகக் கொடிய கொலைகளைச் செய்யும் பயங்கரவாத இயக்கம் என்பது மட்டும்தான் சாதாரண சிங்கள மக்களுக்குத் தெரியும் ஏனென்றால் அரசாங்கத்தால் அவை திட்டமிட்டுப் பரப்பப்பட்டவை. 16.05.2009 அன்று சாவின் விளிம்பில் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்த விடுதலைப் புலிகள் 7 சிங்கள்ப் போர்க் கைதிகளை விடுதலை செய்து உலகற்கு தமது உச்சக்கட்ட மனிதநேயத்தை வெளிப்படுத்தினார்கள். ஆனால் இந்தச் செய்திகூட சிங்கள மக்களுக்குத் தெரியாது ஏன் இந்த உலகிற்கே அந்த விடுதலையின் தார்ப்பரியத்தை புரிந்துகொள்ளவோ மதிப்பீடு செய்யவோ முடியவில்லை.

10. கவனயீர்ப்புப் போராட்டம்.

உலகில் எம் மக்களால் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் சம்பந்தமாக உலக ஊடகங்களில் வரும் விமர்சனங்கள் கவனயீர்ப்பு ஏன் நடைபெறுகிறது என்ற செய்தியை சொல்வதிலும் பார்க்க அந்தக் கவனயீர்ப்பு போராட்டம் எப்படி நடத்தப்பட்டது என்பவை சம்பந்தமான செய்திகளே அதிக அளவில் வெளியாகி அவை விமர்சிக்கப்பட்டும் உள்ளது. இதை யாரும் கவனத்தில் எடுப்பதாகத் தெரியவில்லை. எமது போராட்டத்தின் பலனாக உலக மக்களின் அனுதாபத்தை பெறவெண்டுமே ஆனால் நாம் எமது திட்டமிடப்படாத போராட்டங்களுடாக பெருமளவில் எதிர்ப்பையே சம்பாதித்துள்ளோம்.

11. உலகம்.

இன்றைய உலக ஒளுங்கில் எமக்காகக் குரல் கொடுப்பதற்கு எந்த நாடும் இல்லை இது எமக்கு பாரிய அரசியல்த் தோல்வி. நாம் உலகில் உள்ள முக்கிய நாடுகளுடன் இராஜ தந்திர உறவுகளை வளர்க்க வேண்டும் முக்கியமாக ஒவ்வொரு நாட்டின் கொள்கை வகுப்பாளர்கள் உதாரணமாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட புலனாய்வு அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் முக்கிற ஊடகவியலாளர்கள் ஒவ்வொர நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் புத்திஜீவிகள் இவர்களுடன் தொடர் ஆலோசனைகளையும் நல்லுறவையும் வளர்க்க வேண்டும். (இவ் உலகில் யாரும் தனித்து இயங்க முடியாது) இன்றைய இராஜதந்திரம் எனபது ஒரு வியாபாரமே இதைக் கருத்தில் கொண்டு எமது எதிர்கால நகர்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும. உலகம் இன்னும் எமது பிரச்சனையை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது அண்மைய உலகத் தலைவர்களின் கருத்துக்களில் இருந்து தெட்டத் தெளிவாகத் தெரிகிறது. நாம் எமது பரப்புரை முறைமையை மீழாய்வு செய்ய வேண்டும். உதாரணாமாக இஸ்ரேலியர்களின் ஆலோசனைகளையும் அவர்களின் போராட்ட தந்திரோபாயங்களையும் ஒவ்வொரு தமிழனும் அறிந்திருத்தல் அவசிய தேவையாகிறது.

சகலதும் நல்ல விடயங்கள் இதை நடைமுறைப்படுத்த முயற்சிக்கவேண்டும்.

இன்றைய உலக ஒளுங்கில் எமக்காகக் குரல் கொடுப்பதற்கு எந்த நாடும் இல்லை இது எமக்கு பாரிய அரசியல்த் தோல்வி. நாம் உலகில் உள்ள முக்கிய நாடுகளுடன் இராஜ தந்திர உறவுகளை வளர்க்க வேண்டும் முக்கியமாக ஒவ்வொரு நாட்டின் கொள்கை வகுப்பாளர்கள் உதாரணமாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட புலனாய்வு அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் முக்கிற ஊடகவியலாளர்கள் ஒவ்வொர நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் புத்திஜீவிகள் இவர்களுடன் தொடர் ஆலோசனைகளையும் நல்லுறவையும் வளர்க்க வேண்டும். (இவ் உலகில் யாரும் தனித்து இயங்க முடியாது) இன்றைய இராஜதந்திரம் எனபது ஒரு வியாபாரமே

11 பந்தியில் கூறிய விடயங்களை எம்மவர்கள் செய்தவர்கள் ஆனால் பயங்கரவாதம் என்ற ஒரு சொல்லால் எல்லாத்தையும் தட்டி கழித்துவிட்டார்கள்.இனிமேல் அப்படி தட்டிகழிக்க முடியாது என்று நினைக்கிறன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாமே நல்ல விடயங்கள் .....ஒற்றுமையாய் உழைப்போம் ...வேற்றுமை மறப்போம் ...

எம்மிடையே கருத்து வேறு பாடு இருக்கலாம் , விவாதம் செய்யலாம் ஆனால் எமது இலட்சியம் ஒன்றுதான் ...அதனை காட்டிக் கொடுக்க முற்படக் கூடாது ....விரக்த்தியின் காரணமாக, அளவு கடந்த நம்பிக்கையின் காரணமாக , எல்லாத்தையும் போட்டு உடைத்து விடாதிர்கள் ...நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு , நம் மக்களின் சுபிட்சமான வாழ்வே பெரிது என்று நினைப்போம் ..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.