Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்களின் எதிரிகளாகிய தமிழர்கள்?-1

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் எதிரிகளாகிய தமிழர்கள்?-1

“நாங்கள் விரும்பியோ, விரும்பாமலோ எம்மைப் போராட சிங்களதேசம் பணித்து விட்டது. 30 ஆண்டுகளாக போராடி இறுதி லட்சியமாம் தமிழீழத்தை அடையும் நேரம் வந்திருக்கும்வேளை, நீங்கள் போராட்டத்தை விடப்போகின்றீர்களா?

உங்கள் விடிவிற்காக நீங்கள்தான் போராட வேண்டும். நீங்கள் போராடாவிட்டால் உங்களுக்காக யார் போராடுவது? வன்னியில் இருக்கும் 2,50,000 பேரில் 50,000 பேர் போராட வலுவில்லாமல் இருக்கிறீர்களா? சிந்தித்துப் பாருங்கள் 50,000 இளைஞர், யுவதிகள் போராட்டத்தில் இணைந்து போராடினால் சிங்கள் இராணுவம் வந்த இடம் தெரியாமல் பறந்துவிடும்.

அன்பிற்குரிய தம்பி, தங்கை, அக்கா, அண்ணா உறவுகளே! போராட்டத்திற்கு வயதெல்லை கிடையாது. வயது பார்த்தா இராணுவம் உங்களை கொல்கின்றது. 1990 ஆம் ஆண்டு 14 வயதில் நான் போராட புறப்பட்டேன். காரணம் இடப்பெயர்வு, பாடசாலை இல்லை. நாம் நிம்மதியாக எமக்கென்று ஒரு நாடு வேண்டும் என்பதால். நீங்களும் அதேபோல்தான் நினைப்பீர்கள்.

உங்களது வலியை நேரில் தினம், தினம் கண்டு வெதும்பிக் குமுறுவதுபோல் இன்னொன்றையும் நினைத்து குமுறுகிறது உள்ளம். நீங்கள் தாங்குகின்ற வலியை உங்களது வயதில் நான் தாங்க வில்லை. அப்படியிருந்தும் என்னைப் போராட ஊந்தியது(அடிமைச் சூழல்). ஆனால், நீங்கள் எவ்வளவோ வலியை ஏற்படுத்திய சிங்கள இராணுவத்திற்கு எதிராகப் போராட ஏன் இன்னும் கிளர்ந்தெழாமல் இருக்கின்றீர்கள் என்பதை நினைக்க நினைக்க மனம் வெதும்புகின்றது.

சிங்கள் இராணுவம் ஏற்படுத்திய வலி காணாதா?

இன்னும் வலியை ஏற்படுத்தினால்தான் நீங்கள் போராடுவீர்களா? ”

மேற்கணட சொற்கள் வான்புலி ரூபன் கொழும்பில் தாக்குதல் நடத்தி தன்னை அழித்துக் கொள்ளும் முன் வன்னி மக்களுக்காக எழுதியது.

இந்த சொற்களுக்கு பொதிந்திருக்கும் வலி நம் உள்ளத்தை ஆழமாக தைக்கிறது. ஆனால், இனவெறி ஆதிக்கத்திலிருந்து விடுபட தமக்குள் விடுதலை உணர்வை, தமக்காக மட்டுமில்லாமல் தம் மக்களுக்காக போராடும் போராளிகளை பேரினவாதம் மட்டுமல்ல, அறிவுலக மேதைகள் என்று தம்மை பறைசாற்றிக் கொள்பவர்கள்

“மக்களை பலிகடா ஆக்குகிறார்கள், மனித கேடயமாக பயன்படுத்துகிறார்கள்.”என்று கொச்சைப்படுத்தி தம் இருப்பை பதிவு செய்து கொள்கிறார்கள்.

அவர்கள் தமக்கு தெரிந்த வகையில் போராடுகிறார்கள், அவர்கள் ஒன்றும் பல்வேறு நாட்டின் தொழில்நுட்ப, பொருளாதார உதவியுடன் போராட வரவில்லை. தமக்கும், தம் அன்பானவர்களுக்கும் இழைக்கப்பட்ட துன்பங்களில் ஆழமான உள்ளத்தின் அழுத்தத்தினால் போராட வந்தார்கள். இவர்களின் போராட்டம் இறுதி இலக்கை அடைவதை விரும்பாத வல்லரசுகள் இவர்களின் போராட்டத்தை தடுக்க இவர்களுக்கே பயிற்சி கொடுத்து போராளிகளுக்குள்ளேயே மோதவிட்டார்கள். இந்திய வல்லாதிக்கத்தின் சதிகார உளவுக்கும்பல் போராளிகளுக்கு சண்டை மூட்டி பார்த்தது ,சண்டையில் மிஞ்சியவர்கள் புலிகள்.

இவற்றை எழுதுவதற்கு எமக்குள்ள தகுதி, நாம் மனிதனாக இருக்க முனைவதும், இனத்தின் மீது கொண்ட பற்றுதலுமே காரணம். போராட்டத்திற்கான கரு தோன்றிய, சிங்கள இனவெறி அடக்குமுறையின் தொடக்கத்தில் என் பெற்றோர்கள் பிறந்திருக்கவில்லை, புலிகள் மற்றும் இன்னபிற ஆயுதம் தாங்கிய போராளிகள் பிறந்த பொழுது நானும் பிறந்திருக்கவில்லை, ஆனாலும் சிங்கள இனவெறி தொடர்ந்து கொல்கிறது, நான் பதின்பருவம் கடந்த பின்னும் கொல்கிறது.

புலியாக இருப்பவன் யார்? என் சகோதரன்.

இயல்பான மனிதர்களின் வாழ்வின் மென்னுணர்வுகள், பாசம், இளைப்பாற உறவு, துன்பம் பகிர்ந்து கொள்ள நண்பன் என அடிப்படை தேவைகள் அடங்கிய ஆழ்ந்த விருப்பங்களை தொலைத்து, தம்மை மறந்து தம் இனத்திற்காக, தம் இனத்தின் விடியலுக்காக, அடுத்த தலைமுறைக்காக போராட முனைந்த ஒருவனை உலகம் வல்லாதிக்கங்கள் அழிக்க முனைந்தாலும், அறிவு ஜீவிகள் மாற்று பிரச்சாரங்களை செய்தாலும், உள்ளம் ஏனோ வெறுக்க மறுக்கிறது.

நாம் இங்கே எழுத முனைந்தது புலிகள் மீது ரசிக மனோபாவம் கொண்டல்ல மாறாக அங்கு புலிகளாக அங்கே போராடுபவர்கள் எம்மை போன்ற மனிதர்கள், எம் இனவழி சகோதரர்கள் என்ற ஆழ்ந்த அன்பின் காரணமாக…….. சிங்கள் பேரினவாதத்திலிருந்து புலிகள் மட்டும்தான் உருவாக முடியுமா? வேறு யாராகவும் உருவாகியிருக்க முடியாதா?என்று சிலர் கேள்வி கேட்கின்றனர். அடிபட்டு, மிதிபட்டு தனக்கென சிங்கள் பேரினவாதம் பச்சைகுத்திய சொந்த காயங்களின் வடுகளோடு போராட வந்தவர்கள்தாம் புலிகள். புலிகள் என்ற அமைப்பு உருவான உடன் சிங்கள் பேரினவாதம் தலைதூக்க வில்லை, சிங்கள பேரினவாதம் தலைதூக்கியதால்தான் போராளிகள் தோன்றினார்கள், அவர்களில் ஒரு பிரிவினர் புலிகள்.

அடிப்பவனை, காயப்படுத்துபவனை, கொடுமைப்படுத்துபவனை எதிர்த்து தற்காத்து கொள்ள போராடுபவனை நோக்கி அறிவுரைக் கூறுவதும்.

இல்லை! இல்லை!! இப்படி போராடக் கூடாது, இப்படித்தான் போராட வேண்டும், என்று போராட்டத்தில் கலந்து கொள்ளாதவன் பேசக்கூடாது இல்லையா.

அதோடு , இழவு வீட்டில் போய் இறந்தவரின் உடலுக்கு அருகே அமர்ந்து கொண்டு அவரின் உறவுகளிடம், இறந்தவரை பற்றி குறை கூறுவது,எந்தளவு காயப்படுத்துமோ, அந்தளவு காயப்படுத்துகிறது, புலிகள் மீதான இன்றைய விமர்சன தொகுப்புகள். புலிகளை விமர்சியுங்கள், மறுக்க வில்லை, ஆனால், இது தருணமில்லை.

பாலஸ்தீனத்தில் அந்நிய ஆக்கிரமிப்புகள் நிகழ்ந்த போதெல்லாம் ஒதுங்கியே இருந்த யூதன், தப்பித்து வேறு நாட்டிற்கு தன் உயிர் காக்க நாடோடிகளாக திரிந்த யூதன் உலக வல்லாதிக்கத்தின் துணை கொண்டு , இரண்டாம் உலகப் போருக்கு பிறகு 1948 இல் தன்னுடைய புராண(பழைய) தொடர்பு , நம்பிக்கையை மையப்படுத்தி இஸ்ரேல் என்னும் தேசம் அமைத்தான்

அந்நிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டங்களில் கைகொடுக்காமல், நம் வியர்வையால், உழைப்பால் கட்டிக்காத்த மண்ணை, சூழ்ச்சியால் நம்மை வஞ்சித்து நாடு மட்டும் பிடுங்கிக் கொள்ள இவனுக்கு(யூதனுக்கு) என்ன உரிமை உண்டு? என்ற பாலஸ்தீனியர்களின் நெருடல் தானே இன்று வரை பாலஸ்தீனத்தில் விடுதலை போராட்டமாக தொடர்கிறது.

அதேபோல, புலிகளை விமர்சித்து விட்டு தமிழர்களை கொன்றொழிக்கும் பேரினவாதத்திடம் கை கோர்த்து நிற்கும் கருணா வகையறா கோஷ்டிகளும், புலிகள்-கருணா கோஷ்டி என பாரபட்சம் இல்லாமல் திட்டி தீர்க்கும், விமர்சிக்கும் கோஷ்டிகளும், களத்தில் நின்று தாம் விரும்பும் மாற்றத்திற்கு போராடாமல், தமக்கு தெரிந்த வகையில் போராடும் புலிகளை மட்டும் விமர்சிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது.

“ மக்களை மந்தைகளாக்கி விட்டனர் புலிகள், தமக்காக தாமே போராட மக்களை அனுமதிக்க வில்லை ”

என்றெல்லாம் உண்மையான அக்கறையோடோ (அல்லது) உள்ளார்ந்த சூழ்ச்சியோடோ விமர்சிக்கும் தோழர்கள், மேற்குறிப்பிட்ட மடலில் வான்புலி ரூபன் அழைத்தது போல மக்களை தற்போதைய சூழலின் படி புலிகளோடு சேர்ந்து போராடத்தானே மக்களை தயார்ப்படுத்தியிருக்க வேண்டும். அதற்கான பிரச்சாரத்தைதானே இன்று இந்த மாற்று சிந்தையானளர்கள் செய்ய வேண்டும்.

மாறாக புலிகள் அழிந்துவிட்டால் மக்கள புரட்சிகர பாதையில் பயணித்து தானே போராடி தம் விடுதலையை வென்றெடுத்துவிடுவார்கள், பேரினவாதம் அழிந்து ஒழிந்து போகும் என்பதைப் போல மாயையை ஏற்படுத்துவது எந்த வகையிலான நியாயம். (நம் மக்கள் ஏற்கனவே மத, சாதி பிரிவுகளின் மந்தைகளாகத்தான் உள்ளனர்)

புலிகள் அமைப்பில் கொள்கை ரீதியாக சரியான கட்டமைப்பு இல்லையென்றால், அது நம் பிள்ளைகள் போராடும் களம், நம் பிள்ளைகள் உருவாக்கிய அமைப்பு என்றுஅங்கு தாமே முன்வந்து உண்மையான உணர்விருந்தால் இன்னின்ன திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று திருத்தங்கள் கூறியிருக்க வேண்டும். திருத்தங்களுக்காக போராடியிருக்க வேண்டும். புலிகள் பற்றி அவ்வளவாக தெரியாவிட்டாலும், புலிகளின் இராணுவ ஆற்றலை சரியாக பயன்படுத்தியிருக்க வேண்டிய கடமை, அறிவுஜீவிகளுக்குத்தானே உள்ளது.

ஆண்டன் பாலசிங்கம் சரியில்லை, பிரபாகரன் சரியில்லை, சரி நீங்கள் தலைமையேற்றிருக்க வேண்டியதுதானே.

பெரியார்

“ என்னைவிட தகுதியான நபர்கள் யாரும் இந்த பணிக்காக தம்மை அர்பணிக்க முன்வராததால், நான் இந்த சமூக சீர்திருத்த பணியை மேற்கொண்டிருக்கிறேன், அந்த பணியை வேறு யாரவது தகுதியான செய்ய முன்வந்தால், நான் அவர்களுக்கு விட்டுக் கொடுக்க தயாராயிருக்கிறேன்.”

என்று கூறியதாகப் படித்தேன். அதே போல, பிரபாகரன் சரியில்லாத தலைவர், என்றால் அறிவுஜீவிகள், போராட்டக் களம் கண்டு சிங்கள பேரினவாதத்தின் ஆணிவேரை பிடுங்கியிருக்க வேண்டியதுதானே.

பாலஸ்தீனத்தில் அறிவாளிகள் அடங்கிய ஹமாஸ் இயக்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில் யாசர் அராஃபத்தின் பி.எல்.எஃப்போடு வேறுபட்டிருந்தாலும், அவருடைய இயக்கத்தை முழுமையாக நிராகரிக்க வில்லை, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. யாசர் அரபத்துக்கு இஸ்ரேல் நாட்டினால் ஆபத்து என்ற போது, அவரை காப்பாற்ற முன்முயற்சி எடுத்தவர்கள் பிஎல்எஃப் போராளிகள், மற்றும் ஹமாஸ் இயத்தவர்கள்………..

நமக்கான போராட்டத்தை நீ போராடக்கூடாது, நாம்தான் போராட வேண்டும் என்றால், முதலில் நாம் உருப்படியாக போராடத் தயாராக வேண்டும், அதுவரை, போராடுபவர்களை விமர்சிக்கலாம், கொச்சைப்படுத்த துணியக் கூடாது. அதுவரை,எழுத்து ரீதியிலான புரட்சி ஒன்றுக்கும் உதவாது, நான் எழுதும் இந்த கட்டுரையும் இதற்குள் அடங்கும்.

இது வளர்ந்தும், வளராத கருத்து மொட்டின், சமூக போராளியாக உருவெடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கும், மொட்டின் உள்ளத்தின் ஆதங்கங்கள் மட்டுமே. திருத்தங்கள் இருந்தால் உடனே தெரிவிக்கவும் ,திருந்திக் கொள்ள தயாராக இருக்கிறேன்.ஏனென்றால், என்னை பண்படுத்துவதும் அறிவுஜீவிகளின் கடமை என்று நினைக்கிறேன்.

அதோடு, துரோகிகளும் துரோகங்களும், கருணா…க்கள் வடிவிலும், மக்களின் அலட்சியத்திலும், தன்னார்வ மிகுந்த விருப்பத்தாலும் நிறைந்து கிடக்கிறது. அடுத்த பதிவில் பட்டியலை கொட்டி தொலைக்கிறேன்.

அடுத்து, சமூகத்திற்குள்ளே நமக்கு எதிராக இருக்கும் எதிரிகளான சாதி, மத, அரசியல் பிரிவினைகள், முதலாலித்துவ சிந்தனைகள் நிரம்பி வழியும் தமிழர்கள் குறித்து.

http://makizhnan.wordpress.com/

நன்றி - மகிழ்நனின் வலைப்பூ

Edited by nochchi

போராட்டத்திற்கு ஆட்களை தெரிவு செய்வதற்கு மகிழ்நனை வவுனியா முகாமுக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்!

- அடங்காத் திமிருடன் முகாம்வாழ் வன்னி மக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.