Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'கப்டன் அலி' நிவாரணப் பொருட்கள் ஒரு மாதத்துக்கு மேலாக கொழும்பு துறைமுகத்தில் தேக்கம்

Featured Replies

வன்னி மக்களுக்கு உதவுவதற்காக புலம்பெயர் தமிழர்களால் சேகரித்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் அனைத்தும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கொழும்புத் துறைமுகத்திலேயே தேங்கிக் கிடக்கின்றன.

660 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் துறைமுகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. அவற்றில் அடங்கியுள்ள பொருட்களின் தரம் மற்றும் பாவனைக்கு உகந்த நிலை என்பன குறித்து பரிசோதித்து ஆவணங்களை வழங்க வேண்டிய அரச நிறுவனங்கள் இன்னும் அவற்றை வழங்காததே தாமத்துக்கு காரணம் என்று இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

கொள்கலன்கள் துறைமுகத்திலேயே கிடப்பதால் துறைமுக அதிகார சபைக்குச் செலுத்த வேண்டிய வாடகை 15 லட்சமாக உயர்ந்துவிட்டதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நடவடிக்கைகளுக்கான இயக்குநர் நாயகம் சுரேன் ஜே.எஸ்.பீரிஸ் தெரிவித்தார்.

கொள்கலன்களில் உள்ள பொருட்கள் பாவனைக்கு உகந்தவையாக என்பதை சுகாதார அமைச்சு, தரக்கட்டுப்பாட்டு நிறுவனம், அணுசக்தி அதிகார சபை ஆகியன பரிசோதித்து சான்றிதழ்களை வழங்க வேண்டும். இதுவரை அது வழங்கப்படவில்லை. எதிர்வரும் புதன்கிழமை சான்றிதழ்கள் கிடைத்துவிடும் என செஞ்சிலுவைச் சங்கம் எதிர்பார்க்கிறது.

பால் சார்ந்த பொருட்களை சோதிப்பதிலேயே தாமதம் ஏற்படுவதாக தகவல் வட்டாரங்கள் கூறின.

'கப்டன் அலி' கப்பலில் அனுப்பி வைக்கப்பட்ட இந்தப் பொருட்களை ஏற்க முடியாது என சிறிலங்கா அரசு திருப்பி அனுப்பி இருந்தது. அதன் பின்னர் இந்தியா தலையிட்டு அந்தப் பொருட்களை இந்திய செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக வேறு கப்பல் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைத்தது.

புலம்பெயர் தமிழர்களின் பொருட்கள் இடம்பெயர்ந்த பின் வன்னியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்குச் சென்று சேரக்கூடாது என்ற அரசின் பிடிவாதத்தின் காரணமாகவே பொருட்களை துறைமுகத்தை விட்டு நகர்த்துவதற்கான அனுமதி தாமதப்படுத்தப்படுகின்றது என தமிழ் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஒரே தடவையில் தேவையான ஆவணங்களைப் பெற்று பொருட்களை வெளியே அனுப்புவதற்குப் பதில், முதல் கொள்கலன்களில் உள்ள பொருட்களின் விபரங்கள் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தால் அனுப்பப்படவில்லை என்ற காரணமும் இப்போது தரநிர்ணய அமைப்புக்களின் சான்றிதழ் கிடைக்கவில்லை என்ற காரணமும் சொல்லப்படுகின்றன என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அடுத்த புதன்கிழமையின் பின்னர் கொள்கலன்களை வெளியேற்றாமல் இருப்பதற்கு அவர்கள் வேறு காரணங்களைச் சொல்வார்கள் என்றும் தமிழ் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மொத்தத்தில் முடிந்தவரைக்கும் காலத்தை இழுத்தடித்து பின்னர் பாவனைக்கு உதவாத பொருட்கள் என்று கூறி அவற்றை கடலில் கொட்டிவிடுவதற்கே சிறிலங்கா அரசு திட்டமிடுகின்றது எனவும் தமிழர் தரப்பில் இருந்து குற்றம் சாட்டப்படுகின்றது.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் இந்தவிடயத்தைக் கூடச் சிறிலங்காவினது பொய்முகத்திரையைக் கிழிக்கப் பயன்படுத்தலாம். "கப்படன் அலி" பொருட்களை எடுத்துவழங்காத அரசா, வெளிநாடுகளில் பெறும் நிதியைக் கொண்டு தமிழருக்குப் புணர்வாழ்வளிக்குமா? என்பதை நாம் சுட்டிக்காட்ட வேண்டும்.

வெளிநாடுகளில் பொருளாதார உதவிக்குக் கையேந்தியவாறு இந்தப் பொருட்களை அழியவிட்டுள்ள சிறிலங்கா அரசினையும் அதனது அமைச்சுகள் நிறுவனங்களினதும் நடவடிக்கையை நாம் வெளிக்கொணர்வதோடு, இந்தப் பொருட்களை அழியவிட முனையும் இவர்களது இந்தச் செயலை உலகநாடுகள் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தூண்ட வேண்டும்.

இதற்கானதொரு ஆங்கில மொழியிலான மாதிக்கடிதத்தை யாழ்க்கள உறவுகள் யாராவது இணைப்பதூடாக அனைவரையும் இந்தப் பரப்புரையில் இணைக்கலாம்.

நன்றி.

இந்த லட்சணத்தில் புணர்வாழ்வு நடவடிக்கைக்கு புலம்பெயர்ந்துவாழும் இலங்கையர் உதவ வேண்டுமென பதியுதீனென்ற அமைச்சர் கோரிக்கையாம். ?????????????????????????????????????????

Third Committee (UNO)

Secretariat

* Mr. Moncef Khane (Secretary)

Tel: 1 (212) 963-2322

o Assisted by Ms. Nancy Beteta

Tel: 1 (212) 963-5722

* Mr. Otto Gustafik (Deputy Secretary)

Tel: 1 (212) 963-9963

o Assisted by Ms. Maureen Otto

Tel: 1(212) 963-7855

* Ms. Anja Kallmeyer (Assistant Secretary)

Tel: 1 (917) 367-9459

o Assisted by Ms. Lorna Fidler

Tel: 1-(212) 963-2319

http://www.un.org/ga/third/index.shtml

ICRC headquarters in Geneva

Postal address

International Committee of the Red Cross

19 avenue de la Paix

CH 1202 Geneva

Fax

ICRC general: ++ 41 (22) 733 20 57

Production, Multimedia, Distribution Division: ++ 41 (22) 730 27 68

Phone

++ 41 (22) 734 60 01

Sri Lanka

ICRC delegation

29, Layards Road

COLOMBO 5

P.O.BOX 2100

Tel.: (+9411) 250 33 46 / 250 33 47

Fax: (+9411) 250 33 48

e-mail

Head of delegation: Mr CASTELLA Paul

Media contact person: Ms ROMANENS Sophie

Mobile: (++94 77) 728 96 82

Languages spoken: French/English/German

Contacting WFP

Mailing Address

Via C.G.Viola 68

Parco dei Medici

00148 - Rome - Italy

Tel: +39-06-65131

Fax: +39-06-6590632

WFP Colombo

No. 6, Joseph Lane, Colombo 4, Sri Lanka

Phone: +94 11 2586244

Fax: +94 11 2502468

Edited by nochchi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.