Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாட்டு மக்கள் போராடவில்லையானால் ஈழத் தமிழர்களுக்கு நடக்கப்போவது எதுவும் இல்லை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நாட்டு மக்கள் போராடவில்லையானால் ஈழத் தமிழர்களுக்கு நடக்கப்போவது எதுவும் இல்லை: சென்னையில் ஊடகவியலாளர்கள்

ஜஞாயிற்றுக்கிழமைஇ 13 செப்ரெம்பர் 2009இ 04:51 பி.ப ஈழம்ஸ ஜதமிழ்நாடு நிருபர்ஸ

ஊடகவியலாளர் திசநாயகத்துக்கு சிறிலங்கா நீதிமன்றம் வழங்கிய 20 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை தீர்ப்பினை கண்டித்து 'சுதந்திரமான ஊடகங்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் ஒடுக்குமுறை' எனும் தலைப்பில் தமிழ்நாட்டில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள தியாகராஐ நகர் வெங்கட் நாராயண சாலையில் அமைந்துள்ள தெய்வநாயகம் பள்ளியில் நேற்று சனிக்கிழமை காலை 10:30 நிமிடத்துக்கு 'ளுயஎந வுயஅடை' என்னும் தகவல் தொழில்நுட்ப இளைஞர்களால் இக்கண்டனக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் திசநாயகத்துக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டுகால சிறைத் தண்டனையை உடனடியாக இரத்து செய்து அவருக்கு நிபந்தனை அற்ற விடுதலை வழங்கக் கோரியும்இ ஈழத் தமிழர்கள் அடைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்குள் அனைத்துலக ஊடகங்களை அனுமதிக்கக் கோரியும்இ சிங்கள அரசின் ஊடக ஒடுக்குமுறையைக் கண்டித்தும் இந்தியாவின் முன்னணி ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டு உரையாற்றினர்.

புகழ்பெற்ற இந்திய ஊடகவியலாளர் ஏ.எஸ்.பன்னீர்ச்செல்வம் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது:

"சார்க் அமைப்பு ஒன்றை உருவாக்கும் ஆலோசனைக் கூட்டம் நடந்தபோது அப்போதைய பாகிஸ்தான் அரச தலைவர் சியா உல் ஹக்கைச் சந்தித்த சிறிலங்கா அரச தலைவர் ஜெயவர்த்தனவிடம் அரச தலைவர் சியா "உங்கள் நாட்டின் அரசியல் சாசனத்தை நான் படித்தேன் உலகில் வேறு எந்த நாடுகளின் ஆட்சியாளர்களுக்கும் இல்லாத அளவுக்கு கட்டற்ற சுதந்திரம் உங்களின் அரசியல் சாசனத்தில் இருக்கிறது. ஆனால் எல்லோரும் என்னை சர்வாதிகாரி என்கிறார்கள். உங்களை ஜனநாயகவாதி என்கிறார்கள்" என்றாராம்.

இதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது. அன்று சியா சுட்டிக்காட்டிய அதிகாரக் குவியமே இன்றுவரை இலங்கையில் சிறுபான்மை மக்களை வதைத்துக் கொண்டிருக்கிறது.

இலங்கையின் இன்றைய நீதித்துறையில் முற்போக்காளராக தோற்றமளிக்கும் சில்வா உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த போதுதான் இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணைக்கப்பட்ட வடக்கு - கிழக்கு இணைப்பு செல்லாது என்று அறிவித்தார்.

நீதித்துறையும் சர்வாதிகார சிறிலங்கா அரசும் இணைந்து பயணித்து வந்ததன் விளைவே திசநாயகம் கைது. நாம் எல்லாம் திசநாயகத்துக்காய் குரல் எழுப்புவது ஒரு பக்கம் இருந்தாலும் மக்கள் இது குறித்து அக்கறையற்றவர்களாக இருந்தால் ஆகப் போவது ஒன்றும் இல்லை. ஆனாலும் நாம் தொடர்ந்து ஜனநாயகத்துக்காய் பேச வேண்டும் என்றார் அவர்.

புதுடில்லியில் இருந்து வந்திருந்த 'ஹெட்லைன்ஸ் டுடே' தொலைக்காட்சியின் இணை ஆசிரியர் இராஜேஸ்சுந்தரம் உரையாற்றியபோது தெரிவித்துள்ளதாவது:

கேள்விகளற்ற நிலைதான் அவர்களை என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்கிற நிலைக்குக் கொண்டு செல்கிறது. புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் ஆயுதப் போராட்டம் என்பது அமெரிக்க இரட்டைக் கோபுரத் தகர்ப்புக்குப் பின்னர் இலங்கையின் பொருளாதார பலத்தை பலவீனப்படுத்துவதாகவே இருந்தது.

ஆனால் இதே போராட்டங்களை நாம் காந்தீய வழிகளில் முன்னெடுக்க முடியும். நாம் 'ஏயர் லங்கா' அலுவலத்தில் போய் அங்கு வருகிற வாடிக்கையாளர்களிடம் நீங்கள் கொடுக்கிற பணத்தில் பெரும்பங்கு போருக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆகவே 'எயர் லங்கா'வில் பயணம் செய்யாமல் வேறு வானூர்தி சேவைகளை நாடுங்கள் என்று இலங்கையில் வர்த்தக நலன்களை பாதிக்கிற அளவுக்கு இயக்கம் கட்ட வேண்டும்.

இன்றைய சிறிலங்கா அரசு இனி ஈழ மக்கள் எழ மாட்டார்கள் என நினைக்கிறது. நான் அங்கே எஞ்சியுள்ள போராளிகளோடும் தமிழ் மக்களோடும் தொடர்பில் இருக்கிறேன் அவர்கள் தங்கள் மக்கள் கொல்லப்படுவதையும் முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஈழப் போராட்டம் முடிந்து விட்டதாக நான் நினைக்கவில்லை. சிறிலங்கா அரசு செய்து கொண்டிருக்கும் ஜனநாயகப் படுகொலைகள் மீண்டும் ஒரு ஈழப் போரை அந்த மண்ணில் உருவாக்கும் என்பது அந்த மக்களிடம் பேசிய மன நிலையிலிருந்து தெரிகிறது.

இந்திய அரசைப் பொறுத்தவரையில் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் தமிழ்நாட்டில் எழுந்த நெருக்கடிகளுக்காக செய்வது ஒன்று சொல்வது ஒன்றாக நடந்து கொண்டது.

நாங்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அவர்களை பாதுகாக்க முயற்சிக்கிறோம் என்று தமிழ்நாட்டு மக்களுக்குச் சொல்லி விட்டு சிறிலங்கா அரசுக்கு ஆயுதங்கள் வழங்கியதோடு போரை முட்டுக்கொடுத்தும் நடத்தியதும் இந்தியாதான்.

இந்த அதிருப்தி எல்லோருக்குமே இருக்கிறது குறிப்பாக தமிழர்களான உங்களுக்கும் இருக்கிறது. திசநாயகம் கைது மட்டுமல்ல ஒரு பெரிய போராட்டத்தையே இன்று நாம் ஜனநாயகத்துக்காய் நடத்த வேண்டிய தேவை எழுந்திருக்கிறது என்றார் அவர்.

'தி வீக்' இதழின் ஊடகவியலாளர் கவிதா முரளிதரன் உரையாற்றியபோது தெரிவித்துள்ளதாவது:

ஊடக அடக்குமுறை எவ்வாறு எல்லாம் இலங்கையில் இருக்கிறது என்பதை பட்டியலிட்டு விட்டு போர் நடந்து கொண்டிருந்தபோது தமிழ்நாட்டில் ஏராளமான போராட்டங்கள் நடந்தது. ஆனால் போருக்குப் பின்னர் மூன்று லட்சம் மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். ஊடகவியளார்கள் கொல்லப்படுகிறார்கள்இ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள் என்கிற சூழலில் ஏதோ சாதித்து முடித்து விட்ட மாதிரி இங்கே அமைதியாக இருக்கிறார்கள்.

என்னதான் நாம் பேசினாலும் எழுதினாலும் தமிழ்நாட்டு மக்கள் போராடவில்லை என்றால் இலங்கையில் எதுவுமே நடக்கப் போவதில்லை. மக்கள் ஈழத் தமிழர்களின் வாழ்வுக்காக போராட முன்வரவேண்டும் என்றார் அவர்.

மூத்த பத்தி எழுத்தாளரும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான தேவசகாயம் உரையாற்றியபோது தெரிவித்துள்ளதாவது:

தென் ஆபிரிக்காவில் நிறவெறிக் கொள்கை கடைபிடிக்கப்பட்டது. உலக நாடுகள் அதன் மீது பொருளாதார தடைகளைக் கொண்டுவந்த போதும் தென் ஆபிரிக்கா அசைந்து கொடுக்கவில்லை.

ஆனால்இ அனைத்துலக விளையாட்டுக்கள் எதையும் நிறவெறிக் கொள்கை கடைப்பிடிக்கிற வரை தென் ஆபிரிக்காவில் நடத்தப் போவதில்லை என்று உலக நாடுகள் முடிவு எடுத்த பின்புதான் அது தன் நிறவெறிக் கொள்கையை மறு பரீசிலனை செய்தது. அதுபோல சிறிலங்காவில் துடுப்பாட்டம் உள்ளிட்ட அனைத்துலக விளையாட்டுப் போட்டிகள் நடைபெறா வண்ணம் நாம் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுக்க வேண்டும். சிறிலங்கா அரசுக்கு நாம் காட்டும் எதிர்ப்புகளில் இதுவும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றார் அவர்.

'டெக்கான் குரோனிக்கல்' ஆங்கில நாளேட்டின் ஊடகவியலாளர் பீர் முகம்மது உரையாற்றியபோது தெரிவித்துள்ளதாவது:

அமெரிக்காவின் முக்கியமான மருத்துவரும் மனித உரிமை ஆர்வலருமான டொக்டர் எலின் சாண்டஸ் இலங்கையில் உள்ள முகாம்களை ஜேர்மனியின் நாஜி முகாம்களோடு ஒப்பிட்டார்.

அவர் எதிர்வரும் 15 ஆம் நாள் தொடங்கி 20 ஆம் நாள் வரை இனப் படுகொலைக்கு எதிராக தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார்.

இதற்காக அவர் நியூயோர்க்கில் இருக்கிற இந்திய தூதரகத்தில் விசாவும் பெற்றிருந்தார். ஆனால் தனது பிரச்சார பயணம் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறையிடம் பத்து நாட்களுக்கு முன்னர் அனுமதி கோரியிருந்தார்.

ஆனால்இ அவருக்கு பத்து நாட்களாக அதற்கான காவல்துறை அனுமதி கிடைக்கவில்லை என்பதோடு இந்த பத்து நாட்களில் நியூயார்க்கில் இருக்கிற இந்திய தூதரகம் அவருக்கு வழங்கியிருந்த விசாவை இரத்தும் செய்து விட்டது.

இதிலிருந்து தமிழ்நாட்டு உளவு காவல்துறையும் இந்திய புலனாய்வுத்துறையும் எப்படி எல்லாம் ஈழ மக்களுக்காக இங்கே பேசுவதை திட்டமிட்டு தடுக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இங்கே இருக்கிற மாநில முதல்வரோ அங்கே சுமூக நிலை நிலவுகிறது என்கிறார். இது எங்களை வேதனைப்படுத்துகிறது என்றார் அவர்.

வாரம் இருமுறை வெளிவரும் 'நக்கீரன்' புலனாய்வு ஏட்டின் உதவி ஆசிரியர் லெனின் உரையாற்றியபோது தெரிவித்துள்ளதாவது:

போர் நடந்தபோது தமிழ் ஊடகவியலாளர்களும் பல்வேறு அரசியல் சக்திகளும் போர் நிறுத்தம் கேட்டு போராடினார்கள். ஆனால் ஆங்கில ஊடகங்கள் இதில் அக்கறை இல்லாமல் நடந்து கொண்டார்கள்.

உண்மையில் அவர்கள் நினைத்திருந்தல் இலங்கை விவகாரத்தில் ஏதாவது ஒரு நெருக்கடியை ஏற்படுத்த முடியும். அதிகார மையங்களுக்கு நெருக்கமான ஆங்கில ஊடகங்கள் குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் ஆங்கில ஊடகவிலாளர்கள் இன்னும் அதிக கவனம் எடுத்து இலங்கை விவாகரத்தில் செயற்பட வேண்டும் என்றார் அவர்.

'ரைம்ஸ் ஓஃப் இந்தியா' ஏட்டின் வெங்கட்ரமணா உரையாற்றியபோது தெரிவித்துள்ளதாவது:

திசநாயகம் பயங்கரவாதியல்ல அவர் மனித உரிமைகளுக்காக தொடர்ந்து பேசினார். இன்றைய சிறிலங்கா ஆட்சியாளர்கள் இவர்களுக்குத் தேவைப்படும்போது அவரைப் பயன்படுத்தி விட்டு இப்போது அவரை சிறையில் அடைத்திருக்கிறார்கள் என்றார் அவர்.

ஊடகவியளார் டி.அருள் எழிலன் உரையாற்றியபோது தெரிவித்துள்ளதாவது:

திசநாயகம் செய்த தவறு என்ன? சுதந்திரமாக சிந்திக்கவும்இ சிந்திக்கிற ஒன்றை எழுதுகிற உரிமையும் ஏன் திசநாயகத்திற்கு மறுக்கப்பட்டது என்றால்இ அவர் போர் நிறுத்தக் காலத்தில் தனது கண்காணிப்பின் கீழ் வெளியான 'நோர்த் ஈஸ்டர்ன்' இதழில் இரண்டு கட்டுரைகள் எழுதினார்.

இந்த இரண்டு கட்டுரைகளுக்காகவும் தான் அவருக்கு 20 ஆண்டுகால சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

இரண்டு கட்டுரைகளின் மூலம் திசநாயகம் இலங்கையின் புனிதத்திற்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாகவும்இ அபகீர்த்தியை ஏற்படுத்தி விட்டதாகவும் அவரை கைவிலங்கிட்டு சிறைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

ஆனால்இ திசநாயகம் 80-களில் தொழிலாளர்களுக்காக போராடி தன் வேலையை இழந்தவர். காணாமல் போனவர்களுக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தவர்.

வடக்கில் காணாமல் போனவர்கள் குறித்து அவர் ஆவணப்படம் ஒன்றையும் இயக்கியுள்ளார். போர் மனித உறவுகளைச் சிதைப்பது குறித்த ஆழ்ந்த கவலை அவருக்கு இருந்தது.

இன ரீதியான பிரச்சினைகளை வன்முறை வழியில் இல்லாமல் அரசியல் ரீதியாக தீர்ப்பது குறித்த ஆய்வை செய்தவர் அவர். தான் கைது செய்யப்படும் வரை போருக்கு எதிராகவும் சமாதானம் தொடர வேண்டும் என்றும் உறுதியாக இருந்தார்.

ஆனால்இ போரை தீவிரப்படுத்துவதில் குறியாக இருந்தவர்களுக்கு மிகவும் இடையூறு செய்து கொண்டிருந்த திசநாயகத்தை கையில் விலங்கிட்டு முடக்கினார்கள்.

திசநாயகம் கைது செய்யப்பட்ட பின்பு லசந்த கொலை செய்யப்பட்டார். அவர் போரின் பங்காளிகள் குறித்து புலனாய்வு செய்து போர்இ ஆயுதக் கொள்வனவுஇ அதில் சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கு உள்ள தொடர்பு குறித்தெல்லாம் அதிர்ச்சியான பல உண்மைகளை லசந்த வெளிக்கொண்டு வர இருந்தப்போது கோழைத்தனமான முறையில் அவரைக் கொன்றார்கள். அவரது துணைவியார் சோனாலி சமரசிங்க குழந்தைகளோடு இலங்கையில் இருந்தே தப்பிச் சென்றார்.

லசந்த கொலைஇ திசநாயகம் கைது என தமிழ் மக்கள் மீது காட்டப்பட்ட போர் வெறி நியாயமான கருத்துக்களை வெளிப்படுத்தி வந்த சிங்கள ஊடகவியளார்கள் மீதும் காட்டப்பட ஒரு நியாயவாதி கூட அங்கு வாழ முடியாது என்று ஊடகவியளார்கள் தப்பித்து ஓடினார்கள் இன்றுவரை உலகெங்கிலும் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்றார் அவர்.

கேலிச்சித்திரம் வரையும் பாலா உரையாற்றியபோது தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் உண்மைக்காக பேசிய ஊடகவியளார்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

ஆனால்இ தமிழ்நாட்டில் உண்மை பேசக்கூடாது என்பதற்காக சிறிலங்கா தூதுவர் அம்சாவிடம் சன்மானம் பெறும் ஊடகவியலாளர்களும் இருக்கிறார்கள்.

போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் அவர்கள் கொடுத்த அன்பளிப்புக்களுக்காக இனத்தையே காட்டிக் கொடுத்து துரோகம் செய்து விட்டார்கள். பல நேரங்களில் இதை நினைக்கும்போது அருவருப்பாக இருக்கிறது.

தமிழ் ஊடகவியலாளர்கள்தான் இப்படி என்றால் ஆங்கில ஊடகங்களோ தமிழ்நாட்டு தமிழ் மக்கள் மீது ஒரு போரையே தொடுத்தது.

சிறிலங்கா அங்கே தமிழர்களைக் கொன்றார்கள். இங்குள்ள ஆங்கில ஊடகவியளார்களோ போரின் முடிவை பெரும் வெற்றியாக கொண்டாடினார்கள்.

ஆனாலும் சிறிலங்கா அரசின் அரசின் பாசிசப் போக்குக்கு எதிராகப் பேசவும் இதுபோன்ற ஊடகவியலாளர்கள் இருக்கிறார்கள் என்கிற மன நிம்மதி இருக்கிறது என்றார் அவர்.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.