Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் உடனடிக் கவனத்துக்குரியவர்கள்" - தேவகெளரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் உடனடிக் கவனத்துக்குரியவர்கள்" - தேவகெளரி

dgowry.jpg

கவிஞர், பத்திரிகையாளர், எழுத்தாளர், பெண்ணிய செயற்பாட்டாளர் எனப் பன்முகப்பட்ட ஆளுமை கொண்டவர் எஸ். தேவகெளரி. தினக்குரல் வாரவெளியீட்டின் துணை ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றிய அவர், தற்போது இதழியல் கல்லூரியின் விரிவுரையாளராகப் பணிபுரிகின்றார். ஆண்டாண்டுகாலமாக பெண் இரண்டாம் தரப் பிரஜையாக நடத்தப்படுவதை எதிர்த்து தன் எழுத்தின் ஊடாகக் குரல் கொடுத்து வரும் தேவகெளரி தினகரன் வாரமஞ்சரி வாசகர்களுக்காக தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

பெண்கள் மீதான அடக்குமுறை காலத்துக்குக் காலம் வெவ்வேறு வடிவம் பெறுகின்றது. எம் நாட்டைப் பொறுத்தவரை உடனடிக் கவனம் செலுத்தப்படவேண்டிய பிரச்சினையாக எதைக் கருதுகின்றீர்கள்.

நாங்கள் இப்போது கூடுதலாகக் கேள்விப் படுவதும், கவலைப்படுவதும் போரால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றித் தான். போரால் பாதிக்கப்பட்ட பெண்களை தனிமைப்படுத்தப்பட்ட பெண்கள், திருமணமாகாத பெண்கள், துணையை இழந்த பெண்கள் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம். இவர்களில் ஊனமுற்ற பெண்கள் அதிகம். இவர்களைப் பற்றி நாம் அறிந்துகொண்டது மிகக் குறைந்தளவே.

பெண்களுக்கு இதுதான் பிரச்சினை என்று பொத்தம் பொதுவாகக் கூறிவிட முடியாது. பிரதேச ரீதியாக ஒவ்வொரு பெண்ணினது பிரச்சினையும் வேறுபாடானது. ஆனாலும், போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பில், ஏனைய பகுதியைச் சேர்ந்த பெண்களும் கவனம் செலுத்தவேண்டிய அவசரத் தேவையிருக்கின்றது.

மலையகப் பெண்களின் பிரச்சினை வித்தியாசமானது. மலையகப் பெண்கள் பொதுவாகவே சுயமாக ஆளுமைமிக்கவர்களாக இல்லை. மலையகப் பெண் இன்றும் ஆணைச் (தந்தை, கணவன், சகோதரன்) சார்ந்தவளாகவேயிருக்கிறாள்.

நகர்ப்புறங்களில் 90 வீதமான பெண்கள், வேலை பார்க்கின்றனர். அலுவலக தலைமைப் பதவியில் இருந்து கூலித்தொழில் வரை இது வேறுபட்டாலும். அனைவரும் பாதுகாப்பு ரீதியான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.

பொருளாதார ரீதியில் எல்லாரும் தங்களுடைய தொழிலை 2nd supportive ஆகத்தான் நினைக்கின்றனர். தான் என்ன வேலை செய்தாலும், அதில் முழு ஈடுபாட்டுடன், தன் முழு திறமையையும் வெளிப்படுத்த வேண்டும் என்று எண்ணும் பெண்கள் மிக மிகக் குறைவு. செய்யும் தொழிலில் தமது முழுத் திறமையையும் வெளிப்படுத்த முடியாமல் போவதற்கு அவர்களது இரட்டைச் சுமையும் ஒருகாரணமாக இருக்கலாம்.

இவ்வாறு பிரதேச ரீதியில் பார்க்கையில் பெண்ணுக்கான பிரச்சினை வேறுப்படுகின்றது. ஆனால் அந்தப் பெண்கள் எல்லோரும் சேர்ந்து யுத்ததத்தால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய காலகட்ட மீது என்று நினைக்கிறோம்.

ஏனெனில் போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் உடனடிக் கவனிப்புக்குள்ளாக்கப்பட வேண்டியவர்கள். இல்லாவிட்டால் அது எதிர்காலச் சந்ததியையே பாதிக்கும்.

இன்றும் வெளிநாட்டில் இருக்கும் பெண்கள் சிலரிடம் இப்பெண்களுக்கு உதவவேண்டும் என்ற ஆர்வமிருக்கின்றது. ஆனால் எவ்வாறு உதவுவது என்பது, அவர்களுக்குத் தெரியவில்லை. போரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவதற்கான வழியேதும் இருப்பதாகத் தெரியவில்லை.

எமது நாட்டில் உள்ள பெண்கள் அமைப்புகள் என்ன செய்துகொண்டிருக்கின்றன?

சில அமைப்புகள், கல்வி தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கின்றன. மலையகப் பெண்களின் ஆளுமை விருத்திக்கான கூடுதல் முயற்சிகள் இடம்பெறுகின்றன.

ஆனால் போரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான வேலைத் திட்டங்கள் எவையுமே இவர்களது நிகழ்ச்சித் திட்டங்களில் இருப்பதாகத் தெரியவில்லை.

சில பெண்கள் அமைப்புகள் பெண்களின் ஆளுமை விருத்தி தொடர்பான கலந்துரையாடல்களில் ஈடுபடுகின்றன. ஆனால் பெண்கள் எவ்வளவு தூரம் இக்கலந்துரையா டல்கள் பற்றிக் கவனம் செலுத்துகிறார்கள் என்பது தெரியவில்லை.

கொழும்பில் உள்ள பெண்கள், வடக்கு, கிழக்கோடு ஏதோவொரு வகையில் தொடர்புபட்டவர்கள். ஆனால் அவர்கள் கூட வடக்கு, கிழக்கு பெண்கள் பற்றி குறிப்பாகப் போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றிக் கவனம் செலுத்தக்கூடிய நிலையில் இல்லை. போரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் பெண்கள் அனைவரும ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

பொதுவாகவே பெண்களை ஒன்றிணைத்துச் செயற்படுவதென்பது மிகவும் கடினமானது.

அவர்கள் அந்தத் தடைகளைத் தாண்டும்போதுதான் என்ன செய்யலாம் என்பது பற்றிக் கதைக்கலாம்.

ஆளுமை நிறைந்த பெண்கள், தொழிற் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த பெண்கள் தலைமைப் பதவிகளில் இருக்கும் பெண்கள் இது தொடர்பில் நேரத்தை ஒதுக்கிச் செயற்படுவது மிகக் குறைவாக உள்ளது. இன்னோர் பெண்ணுக்கு நேரும் அவலம் குறித்துச் சிந்திக்கவே அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.

அதற்காக நேரம் ஒதுக்கவும் அவர்கள் தயாராக இல்லை. அவர்கள் எல்லோரையும் ஒன்றிணைக்கும் போதுதான் ஆக்கபூர்வமான செயற்திட்டங்களை முன்னெடுக்கலாம்.

பெண்களுக்கு வலிமையளிக்கும் ஊடக செயற்பாடுகளே இன்றைய தேவை

தினக்குரல் வாரவெளியீட்டின் ‘இவள்’ பகுதியின் பொறுப்பாசிரியையாக நீண்டகாலம் பணியாற்றியிருக்கிaர்களசமூகத்தின் அடிமட்டப் பெண்கள் இத்தகைய பக்கங்களால் பயனடைகின்றார்களா?

தொண்ணூறுகளின் ஆரம்பக் காலகட்டங்களில் பெண்கள் பக்கங்கள் தொடர்ச்சியாக ஒரே மாதிரியாகத்தான் வெளிவந்து கொண்டிருந்தன. அழகுக் குறிப்பு, சமையல் குறிப்புகள் எல்லாம் கட்டாயமாக வெளிவரவேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது. எனக்கு ஒரு பெண் பக்கம் பொறுப்பாகத் தரப்பட்டபோதும் அதே எதிர்பார்ப்புத்தான் இருந்தது, ஆனால் என்னால் அதற்கு உடன்படமுடியவில்லை.

பெண்களும் பங்குகொள்ளத்தக்க வகையில் பக்கத்தை வடிவமைக்க வேண்டும் என்று எண்ணினேன். பக்கத்தை வாசிக்கும் பெண்கள் நாங்கள் வெளியிடும் ஆக்கம் தொடர்பாக தங்களது கருத்தைத் தெரிவிக்கும் வகையில் ஒரு கருத்துக் களமாக ‘இவள்’ உருவெடுத்தது. பெண்கள் தாங்கள் விரும்பிய விதத்தில் சூழ்நிலைகளைப் பார்க்கவைத்ததில் சிலரையேனும் சிந்திக்கவைத்ததில், ‘இவளுக்கு’ பங்குண்டு.

ஆனால் வாரத்தில் ஒரு நாளைக்கு ஒரு பக்கத்தை பெண்ணுக்கென்று ஒதுக்குவதில் பெரிதாகப் பலனொன்றும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. மற்றைய பக்கங்களில் எல்லாம், பெண்களை காட்சிப் பொருளாக்கிவிட்டு ஒரு பக்கத்தை பெண்ணுரிமைக்கென ஒதுக்குவதால் என்ற பயன்.

இப்பொழுது பால்நிலை உணர் திறன் மிக்க ஊடகம் (gender sensitive journalism) என்பது, இதழியல் கல்வி கற்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கின்றது. ஒரு கருத்துக் கணிப்பு எடுப்பதென்றால் கூட, கருத்துச் சொல்வோரில் எத்தனை பேர் பெண்கள் என்ற கணக்கிருக்க வேண்டும். அனேக செய்திகள் பெண்ணை அனுதாபத்துக்குரிய வளாகவே காட்டுகின்றன.

ஒரு வீட்டில் பத்திரிகை வாங்குவதா இல்லையா என்பதை ஆண்தான் தீர்மானிக்கின்றான். இங்கு ஆண் தீர்மானிப்பதைத்தான் பெண் வாசிக்க வேண்டியிருக்கின்றது.

சினிமா கூட ஆணின் ரசனைக்கு ஏற்றதாகவே எடுக்கப்படுகின்றது. அதனை பெண்ணின் ரசனைக்கு ஏற்றதாக மாற்றுவது எப்படி என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும்.பெண்கள் தொடர்பான வேலைத் திட்டங்கள் பரந்தளவில் இடம்பெற வேண்டும். நிறையப் பேசவேண்டும். ஒரு பகுதியினரை மாத்திரம் வைத்துக்கொண்டு எல்லாவற்றையும் சாதித்துவிட முடியாது. அனைத்துப் பெண்களின் பங்களிப்பும் அவசியமானது.

ஊடகங்கள் எல்லாம் பெண்களை நன்கு பயன்படுத்திக்கொள்கின்றன. ஆனால் பெண்கள் ஊடகங்களால் என்றுமே பயனடைவதில்லை. ஒரு பத்திரிகையில் பெண்ணை எங்கு பார்க்கக் கூடியதாக இருக்கின்றது? விளம்பரத்திலோ, பரிசு வழங்கும் நிகழ்விலோ ஒரு நடன நிகழ்விலோதான் முன்னொருகாலத்தில் தினசரி பத்திரிகைகளின் முதற் பக்கத்தில் நடிகைகளின் படங்களே போடப்பட்டன. அதற்குக் கூறப்பட்ட காரணம் நடிகைகளின் படங்கள் போடப்பட்ட பத்திரிகைகளைத்தான் ரசிகர்கள் வாங்குவார்கள் என்பது.

இப்போது அந்த வழக்கம் இல்லை. ஆனாலும் குறிப்பிட்ட அந்தப் பத்திரிகைகள் நன்றாக விற்கின்றனவே?

ஆண்கள் எதற்குமே ஊடகத்தை தமது ஆயுதமாக எடுப்பார்கள். எல்லாப் பெண்களும் ஊடகத்தை ஒரு கருவியாக்க வேண்டும்.

இப்போதெல்லாம் ஊடகத்தில் நிறையப் பெண்கள் எழுதுகிறார்கள். ஆனால் அவர்களும் கதை, கவிதையோடு நின்றுவிடுகின்றார்கள். ஒவ்வொரு பெண்ணும் எவ்வளவு பிரச்சினைகளை எதிர்கொள்கிறாள்? பிரச்சினைகளை எவ்வாறு கையாளுவது? பெண்ணை ஆளுமையுள்ளவளாகச் சித்தரிப்பது எப்படி போன்ற முயற்சிகளே இப்போதைய அவசியத் தேவை. போரால் பெண்களே அதிகளவு பாதிக்கப்படுகின்ற நிலையில், பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் நாளாந்தம் அதிகரிக்கின்ற நிலையில், பெண்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் ஊடகச் செயற்பாடுகள் அமைதல் வேண்டும்.

பெண்கள் சரியாகச் சோர்ந்துபோயிருக்கும் காலகட்டம் இது. இவையெல்லாம் உங்களால் செய்யமுடியாதவை என்பதை திரும்பத்திரும்ப வலியுறுத்துவதை விட்டுவிட்டு, அவர்களது பிரச்சினைகள் கஷ்டங்களில் இருந்து மீளும் வழிகாட்டிகளாய் ஊடகங்கள் அமைய வேண்டும்.

அன்றாடம் எமது ஊடகங்களில் ஒளிபரப்பாகும் நாடகங்களும் திரைப்படங்களும் பெண் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதையே திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றன. அவ்வகையான சித்தரிப்புகள் உடைத்தெறியப்பட வேண்டும்.

எல்லாப் பெண்ணுமே படித்தும் உயர் பதவிகளில் அமர வேண்டுமென்பதில்லை.

சிறிய தொழில் செய்தாலும், அது குறைவானதல்ல என்ற எண்ணப்பாங்கு அவசியமானது.

வேலை பெரியதோ சிறியதோ அதில் நாம் எவ்வாறு நமது திறமையை வெளிப்படுத்துகின்றோம் என்பதே முக்கியமானது.

ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் ஒரேவிதமான தொழிலையே 10 வருடங்களுக்கும் மேலாகச் செய்துகொண்டிருப் பார்கள், அதற்குப் பழக்கப்பட்டுவிட்டால், அப்பால் போக இயலாது நாம் எதைப் புதிதாகச் செய்யலாம் என்றே சிந்திக்கவேண்டும்.

ஊடகத்துறையிலும் நிறையப் பெண்கள் பணியாற்றுகிறார்களே?.

ஊடகத்துறையில் நிறையில் பெண்கள் வருகிறார்கள். ஆனால் அவர்களும் ஒருமட்டத்துக்கு மேல் போகிறார்கள் இல்லை. இதற்குக் காரணம் அவர்கள் தங்களை update பண்ணிக்கொள்ளாமை தான். எல்லாத் துறைசார்ந்த அறிவும் ஓரளவுக்கு அவர்களுக்கு இருக்கவேண்டும். இதற்குத் தேடல் அவசியம். இப்போதுதான் இணையத்தின் வாயிலாக எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடிகின்றதே.

அடுத்தது, ஆராய்ந்து எழுதும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் அப்போதுதான் வெறுமனே ஒருவர் சொல்வதை மாத்திரம் எழுதாமல் தாமாகவே சுயமாக கருத்துக்களை முன்வைத்து எழுதக் கூடியதாயிருக்கும்.

பெண்ணியம் ஆண்களுக்கு விரோதமானது, பெண்ணியவாதிகள் ஆண்களுக்கு எதிரானவர்கள் என்ற கருத்துக்கள்பற்றி.

பெண்ணியம் ஆணுக்கு விரோதமானதோ எதிரானதோ அல்ல. பெண் விடுதலைப் போராட்டங்களில் முனைப்புடன் ஈடுபட்ட, ஈடுபடும் ஆண்கள் இருக்கின்றார்கள். ஆனால் பெண்நிலைநின்று சிந்திப்பதென்பது ஆணால் செய்ய முடியாதது. எல்லாவற்றிலும் இன்று பெண்கள் இருக்கிறார்கள் என்று சொன்னாலும், பாரபட்சம் இருக்கத்தான் செய்கின்றது.

உயர்தரக் கல்வியில் முதற்தரச் சித்திக்கு ஒரு ஆணும் பெண்ணும் தகுதி பெற்றிருந்தாலும் அதனை ஆணுக்குக் கொடுக்கவே விரும்புகிறார்கள். காரணம் அனேக பெண்களுக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்பென்பன வெல்லாம் இரண்டாம் பட்சமாயிருப்பதே தனது சம்பளம் முக்கியமானது என்று பெண் எண்ணுவதில்லை. தானும் உழைத்தால் கணவனுக்கு உறுதுணையாயிருக்குமே என்றே எண்ணுகிறாள்.

பெண்ணியம் என்றவுடன் அது பெண்ணாதிக்கம் என்பதாக தவறாகப் பொருள்கொள்ளப்படுகின்றது. மாறாக, இருவருமே சமவாய்ப்பு, சமஅந்தஸ்துடன் ஜனநாயகமாக வாழ்வதையே பெண்ணியக் கோட்பாடுகள் வலியுறுத்துகின்றன. பெண்கள் யாருக்கும் தாழ்ந்தவர்கள் இல்லை.

பெண் என்பதற்காகவே, எங்கெல்லாம் அவளது உரிமை மறுக்கப்படுகின்றதோ, இரண்டாம் தரப்பட்சமாக நடாத்தப்படுகின்றாளோ, அங்கெல்லாம் பெண்ணிநிலை வாதம் தேவைப்படுகின்றது

நன்றி - தினகரன்வாரமஞ்சரி

பெண்ணியம் இணையத்தில் எடுத்ததை இங்கு பதிவிடுகிறேன்.

http://www.penniyam.com/2009/10/blog-post_1121.html

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டாண்டுகாலமாக பெண் இரண்டாம் தரப் பிரஜையாக நடத்தப்படுவதை எதிர்த்து .

இதை சொல்லி சொல்லி ஆண்களை கடுப்பேத்திராங்களப்பா இந்த பெண்கள் :lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.