Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

GSP+ யாத்திரையில் மத குருமார்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்து, இஸ்லாம், பெளத்தம், கிறிஸ்தவம், ஆகிய நான்கு மதத்தத் தலைவர்கள் ஒன்றினைந்து, கத்தோலிக்க மத்தின் நிர்வாக தலைமைத்துவம் ஆட்சி செய்யும் வத்திக்கானிலுள்ள உலகத்திலேயே மிகவும் பிரமாண்டமான தேவாலயம் என்று கருதப்படும்புனித பீட்டர்ஸ் தேவாலயத்தின் முன் நிற்கும் இந்தப்படத்தினைப் பார்க்கும் போது, உங்களுக்கு ஒரு ஆன்மீகப்பரவசம் ஏற்படலாம். தப்பேயில்லை.

மக்களை வாழ்விக்கும் மார்க்கங்கள் எனத் தோற்றம் பெற்ற மதங்கள், பிளவுபட்டு நின்று, மக்கள் வாழ்வுகளை கூறுபோடாது ஒன்றித்திருப்பது உலகத்திற்கு நன்மையே என்பது பொருத்தமான வாதமும், வாசகமும். மக்களை, மக்களின் வாழ்வினை, சுக துக்ககங்களை புரிந்தும், பகிர்ந்தும், அவர்களை ஆன்மீக உச்சநிலைக்கு அழைத்துச் செல்லும் பொருட்டு, துறவிகளும்,மதகுருமாரும் யாத்திரைகள் செய்வது மதங்கள் தோறுமுள்ள மரபு. ஆனால் இந்தப்படத்தில் உள்ள குருமாரின் யாத்திரை இதற்கு மாறுபட்டிருக்கின்றது. இவர்கள் மேற்கொண்டிருப்பது ஜி.எஜ்.பி யாத்திரை. என்ன புரிய வில்லையா..? மேலே படியுங்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி வரிச்சலுகை இலங்கைக்கு கிடைக்க வேண்டும் என்பதனை வலியுறத்தி, இலங்கையின் நான் மதங்களினதும் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து, உரோம கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசரினை சந்தித்து கோரிக்கை முன்வைத்துள்ளனர். பெல்லன்விலா ராஜா மஹா விஹாரவினை சேர்ந்த, பெல்லன்வில்ல விமலரத்ன நாயக தேரர், சிறீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தினை சேர்ந்த ஆர்க்பிஷப் வண.பிதா மல்கோல்ம் ரஞ்சித், வணக்கத்திற்குரிய கும்புருகமுவ வஜிரா நாயக்க தேரோ, ஐஷனியா அரபிக் கல்லூரியை சேர்ந்த மொஹ்மட் நியாஸ் மௌளாவி, இந்து சங்கத்தினதும், இந்துக்கல்வி விவகாரங்களுக்குமான பொறுப்பாளருமான பிரம்மசிறீ குஹானந்த ஷர்மா, கரித்தாஸ் நிறுவன இயக்குனர் டேமியன் பெர்ணாண்டோ, ஆகியோர் இவ்விஜயத்தில் இடம்பெற்றிருந்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளையும் சந்தித்த இவர்கள், இத்தாலியின் வெளிவிவகார அமைச்சர் பிரான்கோ, வத்திக்கான் புனிதத்தந்தை மேன்மை தகு போப்.பாண்டவர் 16 வது பெனெடிக்ட் அவர்களையும், வத்திக்கானில் வைத்து சந்தித்தனர். ஜீ.எஸ்.பி வரிச்சலுகை ஐரோப்பிய ஒன்றியத்தினால், இலங்கைக்கு கிடைக்கப்பெறும் பட்சத்தில், இடைத்தங்கல் முகாம்களில் அவதியுறும் மக்களின் உடனடித்தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும், வடக்கு மற்றும் கிழக்கு வணிக ரீதியான அபிவிருத்திகளை மேற்கொள்வதற்காகவும் பாரிய உதவியாக இது அமையும் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவ்வரிச்சலுகை கிடைக்கப்பெறூமாயின், இலங்கையில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய சமூகத்திற்கு 7,200 வகைப்பொருட்களை, Duty Free வரிச்சலுகை மூலம் ஏற்றுமதி செய்ய முடியும் எனவும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இவர்களுடைய இந்தப் பயணத்தை இலங்கை அரசே ஒழுங்குபடுத்திருக்கிறது. அத்துடன் மிக இரகசியமாகவே இந்தப் பயனத்திட்டங்களும் அமைந்திருக்கின்றன.

மனிதாபிமானத்தைச் சாட்சியங்களற்றவகையில் கொன்றொழித்த ஒர அரசுக்கு பொருளாதார வளம் வேண்டி, உண்டியல்தூக்கி யாத்திரை வந்திருக்கின்றார்கள் இந்த மதுகுருமார்கள் என்பதே இவர்களின் பயணத்தின் மீது வைக்கப்படும் விமர்சனமாக இருக்க முடியும். கடந்த ஏப்பிரல் மே மாதங்களில், உண்ண உணவின்றி, குடிக்கத் தண்ணீர் இன்றி, கொடிய குண்டு வீச்சக்களுக்கும் , விமானத் தாக்குதல்களுக்கும், தினந்தோறும் நூற்றுக் கணக்கான மக்கள் கதறிக் கதறிப் பலியாகிப் போனார்களே. அப்போது எங்கே போனார்கள் இவர்கள் ?.

யுத்த பிரதேசத்துக்குள் அல்லறும் மக்களை மேலும் அழித்தொழிக்கும் நோக்கில், உணவுத் தடையினைக் கூட ஆயுதமாகப் பாவித்தது இலங்கை அரசு. அந்தச் சந்தர்ப்பத்தில் யுத்த நடவடிக்கைகளை இலங்கை அரசு தணிக்க வேண்டும், மனித உரிமை மீறல் செயற்பாடுகளை நிறுத்திக் கோள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கையாக ஐரோப்பிய ஒன்றியம், இலங்கைக்கான ஜி.எஸ்.பி வரிச்சலுகையை மறுத்திருந்தது.

ஐரோப்பிய ஒன்றியம் இந்த அழுத்தத்தைப் பாவித்த போது, இலங்கை அரசின் அமைச்சர்களும், சிங்களப் பேரினவாதக் கட்சிகளின் தலைவர்களும், GSP சலுகையை வைத்து இலங்கையைப் பணிய வைக்க முடியாதெனவும், பணிந்து போகக் கூடாதெனவும், வாய்சவாடல்கள் விட்டிருந்தார்கள். யுத்தம் முடிவுக்கு வந்த பின்னும், மக்களின் புனர்வாழ்வு முறைப்படுத்தபட்டால் மட்டுமே வரிச்சலுகை உதவி என ஐரோப்பிய ஒன்றியம் திடமாக அறிவித்தது. அந்தப் பொழுதுகளிலெல்லாம் மெளனமாவிருந்த மத குருமார்கள், இன்று ஐரோப்பிய யூனியனிடம் யாத்திரைத் தூதுவர்களாக வந்து GSP வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்கக் கோருகின்றார்கள். இவர்களின் அன்றைய மெளனத்துக்கும், இன்றைய இரத்தலுக்கும் பின்னாலிருப்பது இலங்கை அரசுதான் என்பதில் சந்தேகமில்லை.

அன்று ஐரோப்பிய யூனியன் GSP வரிச்சலுகையை இலங்கை அரசு மீது அழுத்தமாகப் பாவிப்பதற்கு முக்கிய காரணமாகவிருந்தவர்கள், ஐரோப்பா வாழ் புலம் பெயர் தமிழர்கள். அன்று அவர்கள் நடத்திய ஆரப்பாட்டங்களும், பேரணிகளும், இந்த வரித் தடை எழப் பெருங் காரணமாக இருந்தது. ஆனால் உரத்துக்குரல் எழுப்பிய புலம் பெயர் தமிழ் மக்கள் இன்று மெளனமாகியுள்ளார்கள். அந்த மக்களுக்குத் தெரியாமலே இந்தத் தடை அழுத்தம் நீக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதனாற்தான் குருமாரின் இந்தச் சுற்றுப் பயணத்திட்டம் மிக இரகசியமாக வைக்கப்பட்டிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யுத்தத்தின் காரணமாக எழுந்த பொருளாதார வீழ்ச்சி, சமகால தொழில் மந்த நிலை, வேலையிழப்பு , ஆகிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் இலங்கை அரசு, தமிழ்மக்கள் மீதான போரியல் நடவடிக்கைகளினால் குறறப்பட்டிருப்பதை மேற்குலகம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது. அதனை நேரடியாகச் சந்திக்க அரசியலாளர்கள் தயங்குகின்றார். சிரமப்படுகின்றாரகள். இந்த நெருக்கடிநிலையில் இருந்து இலங்கை அரசை மீட்கும் மீட்பர்களாகவே இந்த மத குருமார்கள் ஐரோப்பாவிற்கு வந்துள்ளார்கள்.

மதகுருமார்களின் இந்தச் செயற் பயணத்தைக் கண்டித்து சிங்கள, தமிழ மதகுருமார்கள் இலங்கையிலிருந்து கண்டனம் தெரிவித்ததுடன், ஐரோப்பாவிலுள்ள பல மத நிறுவனங்களுக்கும் இந்தச் செயலை விளக்கி கடிதம் எழுதியுள்ளனர். (அதில் கையொப்பமிட்ட குருமார்களின் தனிப்பட்ட பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர்கள் பெயர்கள் காட்சிப்படுத்தப்படவில்லை. பெரிதாகப் பார்க்க படத்தின் மேல் அழுத்துங்கள்.)

வெட்ட வெளிச்சமாகவே இனப்படுகொலைகளைப் புரிந்தும், மனித நேயப்பணிகளை தடுத்தும், மிக மோசமான அரசியல் புரிந்தது இலங்கை அரசு. நடந்த குற்றங்களுக்கு முறையான விசாரணையோ, தடுத்து வைக்கபட்டிருக்கும் மக்களின் மறுவாழ்வு குறித்த முறையான செயற்திட்டமோ, சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் குறித்த விபரங்களை வெளியிடுவதிலோ முறையாகச் செயற்படாத அரசாகவே சிறிலங்காவின் அரசியல் இருக்கிறது. அத்தகைய நேர்மையற்ற அரசியலுக்குத் தூது வந்திருக்கும் இந்த குருமாரின் செயல்களுக்கு இலங்கைத்தீவில் சக மதகுருவானர்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றார்கள். அரசின் இறுக்கமான சூழலிலும் மனிதத்தை மதிக்கும், நேசிக்கும், மதகுருமார்கள் இணைந்து இந்த நடவடிக்கைக்கு எதிர்புத் தெரிவித்திருக்கின்றார்கள். ஆனால் இந்தத் தடை எழுவதற்கு உந்து காரணமாயிருந்த புலம் பெயர் தமிழர்கள்....?

- நாகன்

செய்தி மூலம்

Edited by forlov

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.