Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வீடு இல்லாதவன்

Featured Replies

எப்பவும் போல நான் அதே அவசரத்துடன் நடந்து கொண்டிருந்தேன் .என்னைப்போல் பலர் அப்படி.எங்கோ என்னத்துக்கோ என்று தெரியாமால் முட்டி மோதி கொண்டு நகர்ந்து கொண்டிருக்கும் நிலக்கீழ் சுரங்க நிலைய பாதையின் ஒரு மூலையில் எந்த வித சலனமுற்று தூங்கி கொண்டிருந்தான் ஒருவன்.பலர் இப்படி அங்கும் இங்கும் தெருவோர பாதைகளில் தூங்குவது ஒரு காலத்தில் சூரியன் மறையாத ராஜ்யம் வைத்திருந்தவர்களின் தலை நகரத்திலும் இப்ப சகஜம் என்றாலும்.எனக்கு அவன் ஒருவிதத்தில் பரிச்சயமானவன்.

இதே பாதையில் இதே அவசரத்துடன் இதே பட படப்புடன் கடந்த பத்து வருடங்களாக யாருடையதோ பண மூட்டையை நிமிர்த்தி வைக்க சென்று வருகின்றேன் .அவர்கள் தூக்கி எறியும் அற்ப சொற்ப பணத்துக்காக.இப்படி சென்று திரும்பு வழியில் தான் அவன் என் கண்ணில் தென்பட்டான்.

குளிர்காலம் என்றால் என்ன கோடைகாலம் என்றால் என்ன அவனது உடை ஒரே மாதிரி தான் .அவனது சவரம் செய்யப் படாதா முகமும் கத்தரிக்கோல் கண்டு பல யுகமாய் இருக்கும் என்று நினைக்க வைக்கும் தலை மயிரும் வயது போனவன் போன்று தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோற்றமளிக்கும்.அவனை அண்மிக்கும் போது எதையும் யாசிக்காத கூர்மையான பார்வையும் அர்த்தமில்லாத மென் சிரிப்பும் மிளிரும். .அத்தருணத்தில் இளமையின் இளம் கதிர்கள் சிதறி நிற்ப்பதை காணலாம்

இவனை முதன் முதலாக கண்டேன் எப்பவென்றால். பல வருடங்கள் முன்பும் இதே அவசரத்துடன் சென்று கொண்டிருக்கும் பொழுது தன்னை மறந்த நிலையில் கிட்டார் வாசித்து கொண்டிருந்தான்.அவன் முன்னால் பெரிய துணி ஒன்று விரித்து கிடந்தது ..அதில் அங்கும் இங்கும் நாணயங்கள் சிதறி கிடந்தன.நாணயத்திற்க்காக நாணயாமாய் நடித்து

பாடுபவன் போல் தோன்றாது.அவன் தன்னை மறந்து தான் பாடி தான் ரசித்து வாசித்து கொண்டிருப்பது போலத்தான் தோன்றும்.அந்த அவசரத்தில் செல்லும் அவசரக்காரர்களுக்கு கூட அங்கு அவன் மூலம் வரும் இசையினால் அவனை தாண்டி செல்லும் அந்த சிறு கணத்தில் மகிழ்வை கொடுத்திருக்க கூடும் .ஏனென்றால் அவனை திரும்பி பாராமல் சென்றவர்கள் குறைவு என்று சொல்லலாம் அந்த நகரும் கூட்டத்தில் .

சில நேரத்தில் எதுவும் செய்யாமால் சும்மா வெறித்து பார்த்தபடி அந்த தூணில் சாய்ந்தபடி இருப்பான் .அடிக்கடி காச்சல் தடிமன் வருத்தம் மனிதர்களுக்கு மட்டுமன்றி .இந்த ரயில்களுக்கும் ஏற்படும்,காய்ச்சல் அளவை தெரிவுக்கும் வெப்பமானி போல் தாமத கால அளவுகளை நிலைய ஒலிபெருக்கி தெரிவுக்கும்..அந்த சிறு கால தருணத்தில் அவனுடன் பேச்சு கொடுத்து பார்த்தால் என்ன என்று ஏனோ எனக்கு தோன்றும். அவனை நோக்கி சிறு புன்னகைப்பேன். அவன் ஒருமுறை பார்ப்பான் படாரென்று பார்க்க கூடாததை பார்த்த மாதிரி முகத்தை அங்கால் தூக்கி விடுவான்.இப்படி பல முறைகளாக பல காலங்களாக.

அங்கு மட்டுமெல்ல நகரத்தின் பெருந்தெரு கரையோரங்களில் கூட அவன் தனித்து மட்டுமன்றி அவனை போல உள்ள கூட்டத்தோருடையும் சேர்ந்து இருக்க காணுவதுண்டு. ஒரு நாள் இப்படியே நான் நகர்ந்து கொண்டிருக்கும் போது நகரின் மையப் பகுதியே என உணர்வின்றி, எந்த வித சலனமின்றி அங்கு கிடைத்த யாரோ ஒருவளுடன் சல்லாபித்து கொண்டிருந்தான்.அத்தெருவினூடக சனங்கள் போகின்றார்களே வருகிறார்களே என்ற எந்த வித பிரகஞை இன்றி .அவனும் அவளும் அவர்களின் வேற உலகத்தில் .சொர்க்கத்தை கண்டு கொண்டிருந்தார்களோ என்னவோ.

தீடிரென்று ஒரு சத்தம் எங்கையோ வந்த கார் சாரதி ஏதோ நினைவில் பின் றிவர்ஸ் எடுக்கும் போது இவர்களது ஆனந்தமய நிலையை குழப்ப அங்கு ஒரு போர்க்களத்துக்கான நிலை எடுப்பு உருவாகி கொண்டிருந்தது.அங்கு வெற்றி தோல்வியை தராமால் அவ்விடத்தில் இரத்த வெள்ளத்தை தந்து கொண்டிருந்தது..

அந்த சம்பவத்தின் பின் அதன் காரணமான சாட்சி சம்பிரதாயத்துக்கு சென்றதன் காரணமாகத் தான் அவனுடன் ஆழமாக பழக ஏற்பட்டது.பேச்சு கொடுத்து பார்த்தேன் ,,பேச்சு கொடுத்து பேசி பழகுவது எல்லாருக்கும் இயல்பானது இலவகுவானது தானே என்று நினைத்திருந்தேன் அவனுடன் பழகும் மட்டும்.கேள்வி பதிலில் இன்னொமொரு தேவையற்ற கேள்விக்கு இடமின்றி அவனின் பதில் இருக்கும் ..அப்படி பல

அவன் ஒரு phd முடித்த கல்வியாளன் அவனுடனான உரையாடலிருந்து பெறும் தகவல்களில் இருந்து கண்டு கொண்டேன்.அந்த படிப்பை அந்த பட்டத்தை அலட்சியமாக அநாயசமாக வெறுப்பதாக கூறினான்..சராசரிகளின் எதிர்பார்ப்புக்கு எதிர்மாறக இருந்தது அவனது எதிர்பார்ப்பு .சீ எந்த வித எதிர்ப்பார்ப்பே இல்லாத ஒருவனாய் இருந்தானே.அவனது நாடோடி தன்மை அவன் அனுபவிக்கும் சுதந்திர காற்று என்னிடமில்லையே என்ற வேதனை பொறாமை எல்லாம் அவனை காணப்போகும் போதெல்லாம் எனக்கு ஏற்படும்.நாங்கள் எல்லாம் காற்றடித்த யாரோ ஒருவருடைய விருப்பு வெறுப்புக்கு ஏற்ப நடந்து கொண்டு இருக்கும், றீமோட்டோல் இயக்கும் பொம்மைகளாக தோன்றும் அப்போது.

காலம்களும் சும்மா இல்லை இயந்திரகதியில் நகர்ந்து கொண்டிருந்தது ..நான் அடிக்கடி சந்திக்கும நபர்களை கால இடவெளி காண நேரிடும் சந்தர்ப்பம் ஏற்படும். அவர்களிடம் இருந்து இளமையிலிருந்து இடம் மாறிய முதுமை தோற்றம் என்னுள் வந்ததை அப்ப தான் எனக்கு வந்து நினைவுறுத்தும் .இந்த இடைபட்ட காலங்களில் இவனை தேடி கண்கள் நான் போகும் இடம் எல்லாம் அலையும் ஆனால் .கண்ணில் படவில்லை .அவன்.எங்களைப் போல் அக்கம் பக்கம் கொஞ்ச நகராமால் அபாயத்தை துளியும் நேரிடயாக சந்திக்க துணிவில்லாமால் நேர்கோட்டில் வாழுபவனா .அவன்? .எங்காவது சென்று இருப்பான் என்று நினைத்தாலும் அவன் நினைவு என் மனதில் இருந்து கொண்டு தான் இருந்தது.

அவன் தூங்கி கொண்டு இருக்கிறான் என்றல்லா நினைத்து விட்டேன் ,ஏது நடந்து விட்டது .அவனை சுற்றி நிற்க்கும் பொலிஸ் உடை அம்புலன்ஸ் உடை தரித்தவர்கள் பரபரப்படன் இயங்கி கொண்டிருப்பதை பார்க்கும் போது செத்து கொண்டிருக்கிறானா செத்துவிட்டானா..என்ற ஏக்கம் என்னுள்.

அங்கு அவனை தூக்கி செல்கிறார்கள் .பார்க்க முடியவில்லை பரபரப்பாக செல்லும் கூட்டம் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறது.வாழ்வதாக நினைத்து கொண்டு சடமாக வாழும் இந்த கூட்டம் வாழ்வையும் சாவையும் ஒன்றாய் நினைத்து வாழும் போதே வாழ்ந்து விட்டு செத்தவனை பார்க்க என்னமாய் அங்காலாய்க்கிறது என்று ஆத்திரமாய் வந்தது எனக்கு.

எல்லா பக்கம் செல்லும் நிலக்கீழ் ரயில்களுக்கும் ஒரே நேரத்தில் காச்சல் பீச்சல் ஏற்பட்டு விட்டதோ என்னவோ தெரியவில்லை.வழமையாக இதே நேரத்தில் பரபரப்பாக அசைந்து கொண்டு இருக்கும் கூட்டம் அசைவிற்று சிதறி நிற்பது போல தென்பட்டது ..இந்த இடையில் நிற்பவர்களின் வம்பு பேச்சை கேட்டு பார்க்கவேண்டும். கேட்டு பாருங்களேன் ஒரு ஆராய்ச்சியே செய்து முடித்திருப்பார்கள்.

இவர்களால் நகரின் அழகே கெடுது என்று பக்கத்தில் நின்ற மற்ற ஒருவனிடம் கூறிக்கொண்டு நின்றது . பார்க்க சகிக்காத கடுமையான மூஞ்சியை முகத்தில் ஒட்டியிருந்தது போல இருந்த கோட்டு சூட்டு போட்ட அழகற்ற கபோதி ஒன்று.

அதற்கு தலை ஆட்டி விட்டு தொடங்கியது மற்றவன். அதை போல இருந்த இன்னொன்று .அந்த ஆட்டத்துக்கு அர்த்தம் ஒம் என்றுதா இல்லை என்றதா கொள்ள முடியமால் இருந்தது.

இவையளை ஒழுங்கு படுத்தி ஒரு வீட்டு வசதி செய்தாலும் அதுகள் திரும்ப வந்து றோட்டுக்கு வந்து படுக்குதுகள். அதுக்கு அரசாங்கம் என்ன செய்யிறது என்று தொட்ரந்து கொண்டு இருந்தார்.

அவன் இறந்து விட்டான் .அடுத்த நாள் பப்பராசி பத்திரிகையில் அவனது படத்துடன் முகப்பு செய்தியாக வந்ததது பெரிதாக ஆச்சரியமாக படவில்லை

அதை விட ஆச்சரியம் எனக்கு காத்திருந்தது. அவன் உண்மையில் பரம்பரை கோடிசுவரன் என்ற உண்மையை வெளியிட்டு இருந்தது தான் ..இனிமேல் அவனை பற்றி உண்மை பொய்யும் கலந்து வெளியிட்டு பல கதைகள் சொல்லும் வேலையை அவர்களே செய்வார்கள் என்று நினைத்து கொண்டு நிலசுரங்க ரயில் நிலைய படிக்கட்டுளூடகா அதே படபடப்புடன் அதே அவசரத்துடன் சென்று கொண்டு இருக்கிறேன்

இப்பொழுது அந்த இடத்தில் அந்த பிளாட்பார தூணுக்கு கீழ் வேறு ஒரு வீடு அற்றவன் படுத்து கொண்டு இருக்கிறான்.

http://mithuvin.blogspot.com/2009/12/blog-post_14.html

Edited by நாகேஷ்

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நாகேஷ்! இது நிஜமோ அன்றி கற்பனையோ தெரியாது, ஆனால் சில நிடங்கள் கற்பனையைவிட அதீதமானவை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.