Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் தேசம் எங்களை நம்பி இருக்கிறது.. கவிஞர் வசீகரனுடனான சந்திப்பு | வளரி வலைக்காட்சியில் இருந்து

Featured Replies

+++

கவிஞர் வசீகரனின் சில படைப்புக்கள்:

எழுது எழுது என் அன்பே-ஒரு

கடிதம் எழுது என் அன்பே

உன்னை நான் நேசிக்கிறேன்

அதனால் தானே சுவாசிக்கிறேன்

சரணம் 1

பனியில் உறையும் என் விழிகள்-ஒரு

நொடியில் உருகிடும் உனைப்பார்த்து

பாசம் நேசம் தருவாயே-என்பாதை

எங்கும் வருவாயே பார்த்த விழி பூத்திருந்தேன்-என்

பார்வை நீயேன் வரவில்லை ?

அலையாக நீ வந்து அணைப்பாயா-அந்தி

மழையாக என்னை வந்து நனைப்பாயா?

சரணம் 2

மனசில் பூக்கும் என் பூக்கள்- உன்

மாலை ஆகும் வேளை வரும்

பூவின் வாசம் தருவாயே - என்

மேனி எங்கும் சிலிர்ப்பாயே - இங்கு

எனக்காக நீ வந்து கவிபாடு- அங்கு

இருளோடு உனக்கென்ன விளையாட்டு-என்

உயிரோடும் உடலோடும் நீதானே- உன்

உறவாலே எனை வந்த தாலாட்டு

காதல் வாழ்க காதல் வாழ்க

பூமி சுற்றும்வரை காற்று உள்ளவரை

காதல் வாழ்க காதல் வாழ்க

பாடல் : வசீகரன்

குரல் : ஸ்ரீநிவாஸ்

இசை : வி.எஸ்.உதயா

எண் : 01

ஏட்டில் : 20.03.2000

வசீகரனின் இசைப்படைப்புக்களை நீங்கள் இங்கு பெற்றுக்கொள்ளலாம்:

VN.Music Dreams- Norway

Martin Børrebekkens vei 24, 0584 Oslo 5

vnmusicdreams@gmail.com

(+ 47) 22 21 74 53

(+ 47) 91 37 07 28 (Mobil)

Ayngaran International- London

Ayngaran Video

30, High Street, Collierswood, London SW19 2AB, United Kingdom.

(+ 44) 208 540 1500

(+ 44) 208 543 8400

Ayngaran International- London

Ayngaran Video- Eastham

367, High Street North, London E 12 6 PG, United Kingdom.

(+ 44) 208 471 3133

(+ 44) 208 471 3111

GJ VideoClub- London

317,High Street North, London E126sl. Eastham

(+ 44) 208 471 6500

(+ 44)

Ganapathy Arts & Crafts- London

241,High Street North, London Manor Park E126sJ. Eastham

(+ 44) 208 503 5599

(+ 44)

Akilan Enterprises- London

274,High Street North, London E126sa Eastham

(+ 44) 208 548 0033

(+ 44) 208 548 0300

Lune New International- France

12,Rue Perdonnet, 75010 Paris

La Chappelle ou Gare du nord

(+ 33) 1 42 09 21 43

(+ 33) 1 42 09 06 38

Ayngaran International- France

29,Philippe De Girard,

75010 Paris La Chappelle ou Gare du nord

(+ 33) 1 42 05 52 12

கனடா: ஐங்கரன் வீடியோ, இறா சுப்பர் மாக்கெற்

+++

இணையத்தில் இறுவட்டு வாங்க விரும்புகிறவர்கள்:

வசீகரனின் paypal account விபரம்: vaseeharan@hotmail.com

தற்சமயம் விற்பனையில் இருக்கும் இசைத்தட்டுக்கள்

1.காதல் கடிதம்

2.காதல் மொழி

3.காதல் வானம்

4.குருதி வலி

ஒரு இசைத்தட்டினை பெறுவதற்கான அன்பளிப்பு தபால் செலவுகளுடன் சேர்த்து $20.00 - இருபது டாலர்கள்

Edited by மச்சான்

  • தொடங்கியவர்

பல்லவி

ஆண்:

யாரும் எழுதாத பாடல் எழுதத்தானே ஆசை

என் வாழ்வு இருக்கும் போதே

எழுதி உயரத்தானே ஆசை

உனக்காக எழுதும் பாடல் எந்த மெட்டிலும்

இணைய வேண்டும்

இசைத் தாளத்தில் மூழ்காமல் உயிர்வரிகளாய்

இருக்க வேண்டும்

பெண்:

யாரும் எழுதாத பாடல் கேட்கத்தானே ஆசை

என் வாழ்வு மலரும் போதே

அதைக் கேட்கத்தானே ஆசை

சரணம் 1

ஆண்:

கண்ணுக்குள்ளே நீ எங்கே என்று

என் கவிதைகளும் உளவு பார்த்ததோ

நெஞ்சுக்குள்ளே நீ எங்கே என்று

என் கனவுகளும் கேட்டு நின்றதோ

பெண்:

கண்ணுக்குள்ளே கலகம் செய்தாய்

என் இதயத்தின் புதுத் திருடா

கவலைகள் ஏனடா

காதல் யுத்தம் செய்யப்போகிறேன்

காத்திருந்து வாழப் போகிறேன்

ஆண்:

யாரும் எழுதாத பாடல் எழுதத்தானே ஆசை

என் வாழ்வு இருக்கும் போதே

எழுதி உயரத்தானே ஆசை

சரணம் 2

பெண்:

என் ஐன்னல் ஓரம் ஒரு பார்வை பார்க்கிறாய்

என் மூச்சைக்கூட இரவல் கேட்கிறாய்

என் பேச்சைக்கூட பதிவு செய்கிறாய்

என் கால்த் தடத்தை களவு செய்கிறாய்

ஆண்:

புதியதோர் உலகம் வேண்டும்

அங்கு எனை வெல்ல நீ வேண்டும்

காதலே வந்ததே

புதிய வாழ்வின் அர்;த்தம் சொன்னதே

மீண்டும் மீண்டும் பிறக்கச் சொன்னதே

பெண்:

யாரும் எழுதாத பாடல் கேட்கத்தானே ஆசை

என் வாழ்வு மலரும் போதே

அதைக் கேட்கத்தானே ஆசை

எனக்காக எழுதும் பாடல் எந்த மெட்டிலும்

இணைய வேண்டும்

இசைத் தாளத்தில் மூழ்காமல் உயிர்வரிகளாய்

இருக்க வேண்டும்

ஆண்:

யாரும் எழுதாத பாடல் எழுதத்தானே ஆசை

என் வாழ்வு இருக்கும் போதே

எழுதி உயரத்தானே ஆசை

பாடல் : வசீகரன்

குரல் : உன்னிமேனன், ஐPவரேகா

இசை : வி.எஸ்.உதயா

எண் : 02

காதல் கடிதம்

பல்லவி

ஒரு நதியின் பெயரோடு பிறந்தவளே

பெரு நதியாய் என்மேல் பாய்ந்தவளே

உன் உயிராலே என்னைத் திறந்தவளே

என் உயிரோடு வந்து கலந்தவளே.

என் விழியோரம் தினம்தினம் மிதக்கின்றாய்

ஏதேதோ புதுப்புது ரகசியம் கதைக்கின்றாய்

காதலா...காதலா... காதலா...

காதலா...காதலா...காதலா...

சரணம் - 1

கனவில் கிளித்தட்டு ஆடிடும் வேளை

புதுமெட்டு போடுகிறாய்

மழையெனும் இசைதனில் மூழ்கிடும் வேளை

தீயினை மூட்டுகிறாய்

தாலாட்டும் மடிமீது இடம் கேட்கிறேன்- நீ

பாராட்டும் மொழிமீது குளிர் காய்கிறேன்

தினம் தோறும் கவி பூக்கும்

இசைவந்து தேன் வார்க்கும்!

நீயின்றி என் வாழ்வு இல்லையே!

சரணம்- 2

தாமரைக் குளத்தில் சூரியக் கதிராய்

தினம் தினம் குதிக்கின்றாய்

ஆலமரத்தில் பேசிடும் கிளியாய்

செவிகளில் நிறைகின்றாய்

உன் பார்வை வரம் கேட்கும்

ஏழை யாசகன்

உன் பேரை தினம் பாடும்

நானோர் வாசகன்

நறுமுகையே குறுநிலவே

தரு நிழலே குளிர் மழையே

நீயின்றி என் வாழ்வு இல்லையே.

பாடல் : வசீகரன்

குரல் : விதுபிரதாபன்

இசை : வி.எஸ்.உதயா

எண் : 07

ஏட்டில் : 07.11.2001

  • தொடங்கியவர்

பல்லவி

ஈழப் பெண்ணே ஈழப் பெண்ணே

சின்னக் கவிபாடடி

உன் கண்ணுக்குள்ளே ஏன் ஓவியத்தை

வரைந்தவர் யார் சொல்லடி

உன் நினைவுகள் என்னை உருக்கும்

பல பட்டாம் பூச்சிகள் பறக்கும்

ஆயிரம் வண்ணங்கள் சிரிக்கும்

என் வாசலில் வானவில் உதிக்கும்

தினம் தினம் மின்மினி

பறக்கின்றதே

சரணம் 1

நிலவின் மடியில் உலகம் மயங்கும்

அவசரமாய் காலை விடியும்

மஞ்சள் பூக்கள் ரோஐh கூட்டம்

அழகழகாய் நம்மை வாழ்த்தும்

மின்னல் மேகம் வந்து சால்வை போர்த்தும் போது

மழைத்துளி எட்டிப் பார்க்கும்

மஞ்சள் வெயில் வந்து மண்ணைப் போர்த்தும் போது

மனசெங்கும் பரவசமே...

கொள்ளை கொள்ளை இன்பம்

எல்லை இல்லா வானம்

விண்ணுக்கொரு பாலம் செய்வோம்

பூப்பறிப்போம்

சரணம் 2

மூன்றே மாதம் மூன்றே மாதம்

கோடைகாலம் பூத்து விரியும்

மஞ்சள் பூக்கள் மஞ்சள் பூக்கள்

இளம் கூந்தல் தேடித் திரியும்

பருவப் பூக்கள் சேலை கட்டும் போது

பனித்துளி எட்டிப் பார்க்கும்

ஆக்கப் பிறிக் கடற்க்கரையில்

அலைகள் மோதும் மோதும்

சிலைகள் கால் நனைக்கும்

சிறைகள் தாண்டிப் போவோம்

சிறகுகள் இரண்டு கேட்போம்

நீயும் நானும் காதல் செய்து

வேர்த்திருப்போம்.

பாடல் : வசீகரன்

குரல் : மதுபாலகிருஷ்ணன்

இசை : வி.எஸ்.உதயா

எண் : 03

ஏட்டில் :

காதல் கடிதம்

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...எங்கள் கலைஞர்களை நாங்கள் ஊக்குவிக்க வேண்டும்.

  • தொடங்கியவர்

தொடர்ந்து ஊக்குவிப்போம். நன்றி ரதி

இணைப்பிற்க்கு நன்றி மச்சான் வசிகரன் அண்ணாவின் காதல் கடிதம் பாடல்கள் நான் விரும்பி கேட்பவை அதிலும் ஒரு நதியின் பெயரோட பிறந்தவளே இந்த பாடலை நான் எத்தினை முறை கேட்டன் என்று எனக்கே தெரியாது :unsure: மேலும் மேலும் வசிகரன் அண்ணா முன்னேற என் வாழ்த்துக்களும்

Edited by சுஜி

  • தொடங்கியவர்

எனக்கு காதல் கடிதம் பாடல்களில இந்தப்பாடல் மிகவும் பிடித்து இருக்கிது:

எழுது எழுது என் அன்பே-ஒரு

கடிதம் எழுது என் அன்பே

உன்னை நான் நேசிக்கிறேன்

அதனால் தானே சுவாசிக்கிறேன்

யாரும் எழுதாத பாடல் என்கின்ற பாடலில ஏனைய பாடல்களைவிட காட்சியமைப்பு மிகநன்றாய் இருக்கிது.

அன்புள்ள மச்சான்,

பாசம் கலந்த நன்றிகள். என்னுடைய படைப்புகளை தேடி எடுத்துவந்து யாழ்கள உறவுகளுடன் பகிர்ந்துகொள்கின்றமை மனதிற்கு பெருமகிழ்சியை தருகின்றது.

குருதிவலி இறுவட்டு விநியோகம் காரணமாக தொடர்ச்சியாக இங்கு வரமுடியவில்லை. வளரி வலைக்காட்சியில் எனது நேர்காணலை பார்த்து கருத்துக்கள் வழங்கிய ரதி,சுஐP, இருவருக்கும் நன்றிகள். குருதிவலி இறுவட்டினை நோர்வே, பிரான்ஸ், பிரித்தானியா, டென்மார்க் போன்ற நாடுகளில் தற்பொழுது பெற்றுக்கொள்ளலாம். கனடாவில் மிகவிரைவில் பெற்றுக்கொள்ளலாம்.

அன்புடன்.

வசீகரன்.சி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.