Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு; மாகாண சபை உறுப்பினர் அங்கம் வகிக்கும் மேல்சபை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு; மாகாண சபை உறுப்பினர் அங்கம் வகிக்கும் மேல்சபை

2010-01-11 07:22:25

யாழ்.பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு

தமிழ் மக்களுக்கு கௌரவமான நியாயமான அரசியல் தீர்வு ஒன்று வழங்கப்படும். மேல்சபை ஒன்று உருவாக்கப்படும். அதில் மாகாணசபை உறுப்பினர்கள் அங்கம் வகிப்பார்கள். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.

அவர் தமிழில் பேசுகையில் மேலும் கூறியதாவது:

வன்னியில் இருந்து மூன்று லட்சம் மக்கள் அகதிகளாக்கப்பட்டார்கள். தற்போது அவர்களை நாம் மீளக்குடியமர்த்த ஆரம்பித்து அந்தப்பணிகள் சுமுகமாக நடைபெற்று வருகின்றன. இலங்கையில் அகதிகள் யுகம் இனிமேல் இல்லை. தமிழ் மக்கள் எந்த நேரத்திலும் எங்கும் போய் வரலாம். எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இனி அவர்களுக்கு இருக்காது. விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் சுதந்திரமாகத் தொழில் செய்யக்கூடிய சூழ்நிலை இப்போது யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. பிள்ளைகளின் எதிர்காலம்தான் இங்குள்ள பெற் றோருக்கு முக் கியம். அவர் களின் எதிர் காலத்தைப் பாது காப்பது எங்கள் பொறுப்பு. அதற் காக வடபகுதி மாணவர்களின் கல்வித்துறை யில் நாம்அதிக கவனம் செலுத் துகின்றோம். விவ சாயிகளுக்குத் தேவையான நீர்ப் பாசன வசதி ஏற் படுத்திக்கொடுக் கப்படவுள்ளது. அதற்காக ஆறு ஒன்றை இங்கே திருப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இப்போது நிம்மதியாக வாழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது

பாடசாலைகள் முன்னேற்றப்படவுள்ளன. யாழ்.பல்கலைக்கழகம் அபிவிருத்தி செய்யப்படும். தமிழ் மக்களாகிய நீங்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. கோவில், பள்ளிவாசல் ஆகியவற்றுக்குத் தடையின்றிச் செல்ல முடிகிறது. கடலில் சுதந்திரமாகத் தொழிலில் ஈடுபடமுடிகின்றது. வயலில் விவசாயம் செய்ய முடிகின்றது.

வவுனியா நகரசபை, யாழ்.மாநகரசபை ஆகியவற்றுக்கான தேர்தல்களை நான் நடத்தினேன். அடுத்து வடமாகாண சபைத் தேர்தலும் உள்ளூராட்சித் தேர்தலும் விரைவில் நடைபெறவுள்ளன. இடம்பெயர்ந்த மக்கள் இப்போது தமது சொந்த இடங்களில் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றார்கள். இனி அகதிகள் யுகம் இலங்கையில் இல்லை. அன்று சிங்கள, முஸ்லிம்,தமிழ் மக்கள் ஒன்றாகி ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். அந்தநிலை இப்போது மீண்டும் ஏற்பட்டு வருகிறது. யாழ்.தேவி ரயிலில் நான் பலமுறை பயணம் செய்துள்ளேன். யாழ்.தேவி ரயிலை யாழ்ப்பாண மக்கள் பார்க்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை. ஏ9 வீதியூடாக இப்போது சுதந்திரமான போக்குவரத்து இடம்பெறுகின்றது. அது வடபகுதி மக்களின் சொர்க்கவாசல். ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாக யாழ்.பொதுநூலகம் திகழ்ந்தது. அதனை ஐக்கியதேசியக் கட்சியினர்தான் எரித்தார்கள். தமிழ்சந்ததிக்கு அவர்கள் செய்த மிகப்பெரிய அநியாயம் இது.

நியாயமான, கௌரவமான அரசியல் தீர்வு

தமிழ் மக்களுக்கு கௌரவமானநியாயமான அரசியல் தீர்வு ஒன்று வழங்கப்படும். மேல்சபை ஒன்று உருவாக்கப்படும். அதில் மாகாண சபை உறுப்பினர்கள் அங்கம் வகிப்பார்கள். தென்பகுதி மக்களுக்குத் தங்கம் என்றால் வடபகுதி மக்களுக்கு அது தகரமாக இருக்கமுடியாது. கல்வி, விவசாய, மீன்பிடித் துறைகளில் துரித அபிவிருத்தி மேற்கொள்ளப்படும். யாழ்.பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் ஆரம்பிக்கப்படும். ஆங்கில மொழி மூலம் கட்டாயமாக்கப்படும்.

விளையாட்டுத் துறை அபிவிருத்தி ஏற்படுத்தப்படும். தமிழ்வீரர்களும் சர்வதேச ரீதியில் புகழ்பெற வசதிகள் ஏற்படுத்தப்படும். எதிர்வீரசிங்கம் போன்று பல திறமையான வீரர்கள் எதிர்காலத்தில் இங்கு உருவாகுவார்கள். இலங்கை வலைப்பந்தாட்டத் தேசிய அணியில் இடம்பெற்றுள்ள மிக உயரமான தமிழ் வீராங்கனை தர்சினி சிவலிங்கம். சர்வதேச விளையாட்டரங்கு ஒன்று யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படும். சேர்.பொன்.இராமநாதன், சேர்.பொன் அருணாச்சலம் போன்ற ஜனநாயக அரசியல் தலைவர்கள் உருவாக வேண்டும். வெற்றியின் சின்னம் வெற்றிலைச் சின்னம் என்று கூறினார்.

நன்றி - உதயன் இணையம்

ஆகவே ஜனனாயக அரசியல் தலைவர்கள் எவரும் இப்போது நாட்டில் இல்லை.காலம் கடந்தாவது ஒதுக்கொண்டிருக்கிறார்.

80% பொதுமக்கள் எனக்கு ஆதரவு - எதிரணியின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா

முப்பது வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர சகல இராணுவத்தினரும் பூரண ஒத்துழைப்பு வழங்கினார்கள். தற்போது நான் அரசியலில் ஈடுபட்டுள்ளபோது 90 வீதமான இராணுவத்தினர் எனக்கு ஒத்துழைப்பு வழங்கிவருகின்றனர். அதேபோல 80 சதவீதமான பொதுமக்களும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

இவ்வாறு எதிரணியின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா பெல்மதுளை, எம்பிலிப்பிட்டிய நகரங்களில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் உரையாற்றும் போது கூறினார்.பெல்மதுளை தேர்தல் தொகுதியின் ஐ.தே.க. அமைப்பினர் தினேஷ் கங்கந்தவின் ஏற்பாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பொன்சேகா தொடர்ந்து பேசுகையில்;

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள மக்களின் அதிமுக்கிய தொழிற்றுறையான இரத்தினக்கல் வியாபாரம் தற்போது மந்த நிலையில் காணப்படுகின்றது. இதனால் இலட்சக்கணக்கானவர்கள் தமது தொழில்வாய்ப்பினை இழந்து வருகின்றனர்.

எனவே இத் தொழிற்றுறையை மேம்படுத்துவதுடன் உலகத்தில் புதிய சந்தை வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கவும் நான் உறுதிபூண்டுள்ளேன். அத்துடன் இறப்பர் தொழிற்றுறையும் அதிகரிக்கப்படும்.

ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் உயர்பதவிகள் வகிப்பவர்கள் இராணுவத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டவர்கள் "பல குற்றச் செயல்களிலீடுபட்டவர்கள்%27 இவர்கள் பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் துன்புறுத்தலிலீடுபட்டவர்கள். விசாரணை செய்த போது இவர்களின் குற்றம் உறுதி செய்யப்பட்டது. இதனால் நான் இவர்களை வீட்டுக்கு அனுப்பினேன். அதன் பின் அவர்கள் நீதிமன்றத்தை நாடிய போது நீதிமன்றமும் அவர்கள் குற்றவாளிகள் என உறுதி செய்தது. இந்நிலையில், அவர்களது வீண் பழி சுமத்தியதாகக் கூறி ரூபவாஹினியில் செய்தி வெளியிடப்படுகின்றன.

ராஜபக்ஷ குடும்பத்தினர் இன்று பல்வேறு ஊழல் மோசடிகளிலீடுபடுகின்றனர். உதாரணமாக ஒரு கிலோமீற்றர் வீதி அபிவிருத்திக்கு 30 மில்லியவ் ரூபா செலவு செய்யப்படும். ஆனால் அந்த வீதியை ராஜபக்ஷ குடும்பத்தினர் பொறுப்பேற்று ஒரு கிலோ மீற்றர் வீதியை செப்பனிட 113 மில்லியன் ரூபா செலவு எனக் கூறி ஒவ்வொரு கிலோ மீற்றர் வீதியிலும் சுமார் 83 மில்லியன் ரூபா கொள்ளையிட்டு வருகின்றனர்.

இராணுவ சீருடையிலிருக்கும் போது அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறிய நான் இன்று அரசியலுக்கு வந்துள்ளேன். அதற்குப் பிரதான காரணம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே.

யுத்தத்தினை இன்னொரு இராணுவத் தளபதிக்கு வழங்கமாட்டேன். அத்துடன் விடுதலைப் புலிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவும் அனுமதிக்க மாட்டேன் என்று பொது மக்களுக்கு உறுதியளித்தேன். அதன்படியும் செய்து காட்டினேன். தற்போது ஊழலற்ற, சமத்துவமான நாட்டைக் கட்டியெழுப்புவேன் என்பதனை உறுதி கூறுகின்றேன்.

இலங்கை வாழ் மக்கள் அனைவரும் சந்தோசமாக நிம்மதியாக வாழ வேண்டும் அதுதான் எனது ஆசை. அந்த ஆசை நிறைவேறுமென நம்புகிறேன்.யுத்த வெற்றி தனிமனிதன் ஒருவரின் வெற்றியென பறைசாற்ற முடியாது. ஆனால், நாட்டில் அதுதான் நடைபெற்று விடுகின்றது. கார்ட்போர்ட் (பலகை) வீரர்கள் இதனையே செய்து வருகின்றனர்.

குளிரூட்டி அறைகளில் டை கட்டி அமர்ந்திருப்பவர்களால் யுத்தம் செய்ய முடியாது. 15 வருடங்களுக்கு முன்னர் யுத்தத்திற்கு பயந்து நாட்டை விட்டு ஓடிய பாதுகாப்புச் செயலாளர் இன்று குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து கொண்டு யுத்தம் நடத்தியதாகக் கூறுகின்றார்.ஜனாதிபதிக்கும் அமைச்சர்களுக்கும் மலசல கூடங்கள் அமைக்க அரச பணமான மக்களின் வரிப்பணத்தில் பல இலட்சம் ரூபா செலவு செய்யப்படுகின்றது. ஆனால் இராணுவத்தினருக்கு "அபிவெனுவன் அபி%27 எனும் நிவாரண செயல்திட்டத்தில் பணம் சேகரிக்கப்படுகின்றது.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட பணத்தில் கூட மோசடிகள் இடம்பெறுகின்றன. 50 ஆயிரம் வீடுகள் இராணுவத்தினருக்கு அமைப்பதாகக் கூறி 1500 வீடுகள் மட்டுமே அமைக்கப்பட்டன. இதுவும் கெக்கிராவ காட்டுப்பகுதியில். மனித வாழ்க்கைக்கு உகந்ததாகத் தெரியவில்லை.

நாட்டில் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் ஊழல் மோசடியாகும். பெண்கள் வீதியில் செல்ல முடியாத நிலை, எதிர்காலம் இல்லாத நிலையில் இலங்கை மக்கள் வாழுகின்றனர்.இவ்வாறான சூழ்நிலையில் தான் நான் அரசியல் குறித்து சிந்தித்து 2009 நவம்பர் 12 ஆம் திகதி இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று அரசியலிலீடுபட்டேன்.அரசியலிலீடுபடத் தீர்மானித்த பின்னர் ஊழல் மோசடியிலீடுபடாத அரசியல் தலைவர்களை சந்தித்தேன். அவர்களின் அழைப்பினை ஏற்று அரசியலுக்கு வந்தேன். அன்றிலிருந்து நான் அரசாங்கத்திற்கு துரோகி ஆகிவிட்டேன்.

ஊனமுற்ற இராணுவ வீரர் ஒருவருக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பரிசில் மற்றும் சான்றிதழ் வழங்கினார். உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்ட அந்தச் சான்றிதழ் இராணுவத்தினரை அவமதிக்கும் வகையில் இடம்பெற்றது. இரு கால்களையும் இழந்த அந்த இராணுவ வீரரை கதிரையிலிருந்து கீழே இறக்கி அதன் பின் சான்றிதழ் வழங்கப்பட்டது.மக்களை ஏமாற்றும் திட்டங்கள் ஜனாதிபதியிடம் உள்ளது. ஆனால் எம்மிடம் மக்களை வளமுள்ளதாக்கும் திட்டமே காணப்படுகின்றது.

கொழும்பிலுள்ள மின்கம்பங்களை ஜனாதிபதியின் கட்டவுட்கள் ஆக்கிரமித்து விடுகின்றன. சுதந்திரப் பொலிஸ் ஆணைக் குழு அமைக்கப்படும் என்றார்.இங்கு பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் கங்கந்த, தலதா அத்துக்கோரள, விஜித்த ஹேரத், அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்.

- தினக்குரல்

.... ராஜபக்ஷ குடும்பத்தினர் இன்று பல்வேறு ஊழல் மோசடிகளிலீடுபடுகின்றனர். உதாரணமாக ஒரு கிலோமீற்றர் வீதி அபிவிருத்திக்கு 30 மில்லியவ் ரூபா செலவு செய்யப்படும். ஆனால் அந்த வீதியை ராஜபக்ஷ குடும்பத்தினர் பொறுப்பேற்று ஒரு கிலோ மீற்றர் வீதியை செப்பனிட 113 மில்லியன் ரூபா செலவு எனக் கூறி ஒவ்வொரு கிலோ மீற்றர் வீதியிலும் சுமார் 83 மில்லியன் ரூபா கொள்ளையிட்டு வருகின்றனர். ......

- தினக்குரல்

மன்னார் பகுதிகளில் ஒரு கிலோ மீட்டருக்கு சிறந்த கம்பள வீதி அமைக்க செலவு 35 இலட்சம் மட்டுமே. ஆனால் மரியதாசன் தலைமையில் பொறியியலாளர்கள் 70 இலட்சம் என போட்டு ஊழல் கணக்கு குடுக்க, பசில் அதை 110 இலட்சமாக உயர்த்தி மாபெரும் ஊழல் ஆரம்பமாகியுள்ளது. சீன அரசு / வங்கி பணம் கொடுக்க இணங்கி விட்டது.

1 km க்கான இந்த மேலதிக 75 இலட்சத்தில், 40 இலட்சம் பசிலுக்கும், 20 இலட்சம் மன்னார் பேராயருக்கும், 15 இலட்சம் மரியதாசன் தலைமையிலான வீதி அபிவிருத்தி உயர் அதிகாரிகளுக்கும் என தெரிய வருகிறது.

ஊழல் சக்கரவர்த்தியான இந்தியாவை சீனா ஊழலில் விஞ்சிவிடுமா என தமிழ் மக்கள் அங்கலாய்க்கிறார்கள்.

வடக்கின் வசந்தம் என பசில் கொள்ளையடிக்க, கொழும்பு தமிழ் வர்த்தகர்களை கடத்தி கோதபாய பணம் பறிக்க (கடந்த 2 மாதங்களில் செட்டிதெரு வர்த்தகர்கள் சிலர் கடத்தப்பட்டு, பணம் கொடுத்து வெளியே வந்து மௌனமாக உள்ளனர்), சிறிய வர்த்தகர்களிடம் டக்ளசும் சித்தார்த்தனும் கருணாவும் கொள்ளையடிக்க, பௌத்தராகிய பான் கீ மூன் வழிநடத்தும் ஐக்கிய நாடுகள் சபை தலைமையிலான சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் இலங்கையில் ஜனநாயகம் கொடிகட்டி பறக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையால் தடை செய்யப்பட்டவற்றை வெற்றிகரமாக செய்வதால் இவர்கள் ஜனநாயகவாதிகள்.

ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உரிமைக்கு போராடுபவர்கள் தான் பயங்கரவாதிகள்.

Edited by Aasaan

ஆக மாகானசபை உறுப்பினர்கள் மேல்ச்சபையில் அங்கம் வகித்து பதவிக்கு வந்துவிட்டால் அந்த பதவியில் அமர்ந்தவருக்கு நல்லதுதான்... ஆனால் தமிழர்களுக்கு என்ன நன்மை....??

  • கருத்துக்கள உறவுகள்

]

வடக்கின் வசந்தம் என பசில் கொள்ளையடிக்கஇ கொழும்பு தமிழ் வர்த்தகர்களை கடத்தி கோதபாய பணம் பறிக்க (கடந்த 2 மாதங்களில் செட்டிதெரு வர்த்தகர்கள் சிலர் கடத்தப்பட்டுஇ பணம் கொடுத்து வெளியே வந்து மௌனமாக உள்ளனர்)இ சிறிய வர்த்தகர்களிடம் டக்ளசும் சித்தார்த்தனும் கருணாவும் கொள்ளையடிக்கஇ பௌத்தராகிய பான் கீ மூன் வழிநடத்தும் ஐக்கிய நாடுகள் சபை தலைமையிலான சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் இலங்கையில் ஜனநாயகம் கொடிகட்டி பறக்கிறது.

புலம் பெயர் தமிழர்கள் புடுங்குப்பட்டு வகுப்பெடுக்க.....

Edited by விசுகு

சிங்களவன் ஒருவனை தலைவனாக தெரிவு செய்து சிங்கள தலைவனில் இருக்கும் நம்பிக்கையை உலகுக்கு தேர்தல் மூலம் சொல்ல என்னமா துடிக்கிறாகள்.. இதுக்கை தமிழர் எண்டு பெருமை வேறை...

டக்கிளசுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்...??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.