Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘‘ஈழம் எங்கும் சிங்களம்!’’ வல்வெட்டித்துறை பயணம்; வேதனைப்படும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

‘‘ஈழம் எங்கும் சிங்களம்!’’ வல்வெட்டித்துறை பயணம்; வேதனைப்படும்

திருமாவளவன்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையான வேலுப்பிள்ளையின் மரணச்

செய்தி கேட்டதும், உலகத் தமிழர்களுக்கெல்லாம் கண்ணீர் கிளம்பியது!

செய்தி கேட்ட சில நிமிடங்-களிலேயே ஈழம் சென்று வேலுப்-பிள்ளைக்கு தமிழகம்

சார்பாக அஞ்சலி செலுத்துவதென முடிவெடுத்து கிளம்பிவிட்டார் விடுதலைச்

சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன்.

தான் மதிக்கும் தலைவனின் தந்தைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு தமிழகம்

திரும்பிய திருமா-வளவன்... தன் தந்தையின் உடல்நிலை சரியில்லாமல் போக...

அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்குச்

சென்றிருந்தார்.

தந்தையை பார்த்து விட்டு மருத்துவமனையிலிருந்து கிளம்பிய திருமாவோடு

காரில் பயணித்தபடியே அவரது வல்வெட்டித்துறை பயணம் பற்றி கேட்டோம்.

-கண்களில் நீர் துளிர்க்கப் பேச ஆரம்பித்தார்.

‘‘இலங்கை ராணுவ முகாமில் இருந்து தேசியத் தலைவரின் பெற்றோர், மாமியார்

ஆகியோரை மீட்டு இந்தியா, கனடா போன்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்கவேண்டும்

என்று விரும்பினேன். கடந்த அக்டோபர் மாதம் இலங்கைக்கு நாடாளுமன்ற

உறுப்பினர் குழுவில் நான் சென்றபோது, பசில் ராஜபக்ஷேவிடம் கோரிக்கை

வைத்தேன். அவரும் முறைப்படி விண்ணப்பிக்கவேண்டும் என்றார். தேசியத்

தலைவரின் தமக்கை வினோதினி விண்ணப்பித்தார். ஆனால், எந்தப் பலனும்

கிடைக்கவில்லை. இந்நிலையில் உடல்நலிவுற்று இறந்த இலங்கை அமைச்சர்

சந்திரசேகருக்கு அஞ்சலி செலுத்த இலங்கை சென்றேன். அப்போது, தேசியத்

தலைவரின் தந்தையை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்குமாறு அங்கே

வந்த பசில் ராஜபக்ஷேவிடம் மறுபடியும் கோரிக்கை வைத்தேன்.

அப்போது, ‘அவர்களை விடுவிக்க எந்தச் சிக்கலும் இல்லை. ரத்த உறவு மூலம்

உடனே விண்ணப்பியுங்கள்’ என்று பதில் சொன்னார். எனவே அவரது தமக்கை

வினோதினி மூலம் கனடாவிற்கு அழைத்துச் செல்லும் முனைப்பில் இருந்தோம்.

இந்த நிலையில்தான் அந்த அதிர்ச்சியான செய்தி ஜனவரி 7&ம் தேதி என்னை

எட்டியது. தலைவரின் தந்தையார் நலமுடன் இருப்பதாகத்தான் நான் நம்பிக்

கொண்டிருந்தேன். என்னிடம் பசில், ‘‘உடனே விண்ணப்பம் செய்யுங்கள்,

அனுப்பி வைக்கிறேன்’’ என்று அவர் கூறியதை நான் அப்போது நம்பினேன்.

ஆனால், இவ்வளவு மோசமான நிலையில் இருந்தபோதுதான் பசில் அவ்வளவு வேகமாக

பதில் சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

கடந்த அக்டோபர் மாதம் நாடாளுமன்றக் குழுவில் சென்றபோது,

‘‘இந்தியாவுக்கு மட்டுமே பிரபாகரன் பெற்றோரை அனுப்ப முடியும்’’ என்றார்.

இப்போது எந்த நாட்டுக்கும் அனுப்ப சம்மதித்து இருக்கிறாரே? அவர் சாகும்

தருவாயில் இருக்கிறார் என்ற நிலையில்தான், அப்படிச் சொல்லியிருக்கிறார்

என்று நினைத்து வேதனைப்பட்டேன்.

இரண்டு ஆண், இரண்டு பெண் பிள்ளைகளை பெற்ற நிலையில் ஓர் அநாதைபோல அவரது

உடல் எதிரிகள் முகாமில் கிடத்தப்பட்ட நிலையைக் கண்டு நொந்துபோனேன்.

தேசியத் தலைவரின் தந்தைக்கு, உரிய மருத்துவச் சிகிச்சை அளித்திருந்தால்

இன்னும் பல காலம் அவர் வாழ்ந்திருப்பார். வயதானவர்களை அகதிகள்

முகாமில்கூட வைக்காமல், ராணுவ முகாமில் வைத்தது சிங்கள அரசின்

ஈவிரக்கமற்ற செயல். எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை. எப்படியாவது அவரது

உடலுக்கு வீரவணக்கம் செலுத்தவேண்டும் என்று எண்ணினேன். இலங்கை நாடாளுமன்ற

உறுப்பினர் சிவாஜிலிங்கம், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரை

தொடர்புகொண்டு அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்த-வேண்டும் என்று கேட்ட-

போதுதான், உடலை வல்வெட்டித் துறைக்குக் கொண்டு செல்லும் முயற்சிகள்

நடப்பதாகச் சொன்னார்கள்.

உடலை தராமல் இலங்கை அரசாங்கமே அடக்கம் செய்துவிடும் என்றுதான் நான்

முதலில் நினைத்தேன். ஆனால், இலங்கையில் தற்போது தேர்தல் நேரம் என்பதால்

இதற்கு இலங்கை அரசு ஒப்புக்கொண்டது என்ற பேச்சும் அடிபட்டது.

கொழும்பில் இருந்து வல்வெட்டித்துறைக்குச் செல்ல வெளிநாட்டுப்

பயணிகளுக்கு ராணுவத்திடம் அனுமதி பெற வேண்டும் என்றும், அந்த அனுமதி

எனக்குக் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் குறிப்பாக நான் வரக் கூடாது என்று

ராணுவ அதிகாரிகள் சொன்னதாக சிவாஜிலிங்கம் என்னிடம் கூறினார்.

இருந்தாலும் நான் கொழும்பு செல்வது, என்ன ஆனாலும் அங்கே போயே தீருவது

என்று தீர்மானித்து, 8&ம் தேதி பிற்பகல் கிளம்பிவிட்டேன்.

அதற்குள்ளாக ஏ&9 சாலையில் செல்ல அனுமதி கிடைத்துவிட்டது என்ற தகவலும்

கிடைத்தது. என்னுடன் சந்திரசேகரன், பிரபு என்ற இரு வழக்கறிஞர்கள்

விண்ணப்பிக்க... அவர்களுக்கும் அனுமதி தரப்பட்டது. 8&ம் தேதி இரவு

வவுனியா சென்றோம். எங்களுக்கு முன்னதாக தந்தையாரின் உடல் சென்றுவிட்டது.

அங்குதான் அவரது பூத உடலுக்கு நான் அஞ்சலி செலுத்தினேன்.

கொழும்பில் இருந்து வழி நெடுக நூறு அடிக்கு ஒரு செக்போஸ்ட். எங்கு

பார்த்தாலும் ராணுவ வீரர்கள், காவலர்கள். அவர்கள் நினைத்த நேரத்தில்

நினைத்த வாகனங்களை நிறுத்தி சோதனை என்ற பெயரில் கெடுபிடியில் இருந்தனர்

ராணுவத்தினர். அவர்களது நோக்கம் தலைவரது தந்தையாரின் இறுதி ஊர்வலம்,

மற்றொரு போராட்ட விதையாக அந்த மண்ணில் பதிந்துவிடக் கூடாது

என்பதுதான்.

வல்வெட்டித்துறையில் புலேந்திரன், குமரப்பா ஆகியோருக்கு மக்களால்

எழுப்பப்பட்ட சதுக்கத்தில், தலைவரின் தந்தையார் உடல், மக்களின்

பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

நூறுபேருக்கும் குறையாமல் பூத உடலைச் சுற்றியிருந்தனர். அதில் இளைஞர்கள்,

பெண்கள் மட்டுமே இருந்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன்

தலைமையில் எம்.பி.க்கள் வந்திருந்தனர். அஞ்சலி செலுத்துவதற்கு வந்த

மக்கள் அஞ்சியபடி இருந்தனர்.

‘என்ன... என் உயிர்போகும்! என் தலைவரின் தந்தைக்கு அஞ்சலி செலுத்துவதால்

அதுபோனால் போகிறது’ என்று அங்கிருந்த இளைஞர்கள் துணிந்து பேசினர்.

அவர்களை ராணுவம் மற்றும் காவலர்கள் கண்காணித்தபடி இருந்தனர். என்னையும்

ராணுவம் கண்காணித்தது.

வவுனியா முதல் வல்வெட்டித்துறை வரை எங்கும் ராணுவ மயம், சிங்கள மயம்.

எல்லா அறிவிப்புப் பலகைகளும் சிங்களத்தில் வழிகாட்டுகிறது. தமிழே அங்கு

இல்லை. முற்றிலும் அழிக்கப்பட்டிருக்கிறது.

ராஜபக்ஷே தேர்தல் பிரசாரத்திற்கு வருகிறார் என்பதால் கூடுதல் பாதுகாப்பு.

எல்லா வாகனங்களும் கடுமையான சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டன. என்

வாகனமும் மறிக்கப்பட்டது. நான் இந்தியாவில் இருந்து வரும் எம்.பி.

என்றதும் தொடர்ந்து செல்ல என் வாகனம் அனுமதிக்கப்பட்டது. தமிழர் வாழும்

பகுதிகள் அச்சத்தில், பீதியில் உறைந்து போயுள்ளன.

ஜனவரி 10&ம் தேதி காலை அங்கு உறவினர் வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக

அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டில் நூற்றுக்கணக்கான பெண்கள்

அழுது கொண்டிருந்தார்கள். பலர் மார்பில் அடித்து கொண்டு அழுதார்கள்.

பிரபாகரனின் தாயார், தன் தலையில் அடித்தபடி அழுதார். பேச்சு வராமல் அவர்,

‘என் அய்யா...என் அய்யா’ என்று திரும்பத் திரும்பச் சொல்லி அழுதார்.

சின்ன குழந்தைபோல அவர் தேம்பித் தேம்பி அழுதபடி இருந்தார். அந்தக்

காட்சியை கண்ட நான் உள்பட அங்கிருந்த அனைவரும் கண்ணீர் விட்டுக் கதறி

அழுதோம். பல மணிநேரம் கண்ணில் இருந்து வந்த கண்ணீர் நிற்கவேயில்லை.

பிள்ளைகள் இருந்தும் இந்த நிலையா? என்று நினைத்தபோது கண்ணீரின் வேகம்

அதிகரித்தது எனக்குள். ராணுவம், போலீஸ் என்று சுற்றியிருந்ததைப் பற்றிக்

கவலைப்படாமல், ‘மாவீரனை பெத்து கொடுத்த ராசா, என்றும் எங்கள் தலைவரின்

நினைவுகளோடு இருப்போம். அவர் காட்டிய வழியில் நடப்போம். சுதந்திர ஈழம்

மலரும்’ என்று கதறி அழுதபடி அய்யாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் ஓர்

அம்மா. அவருக்கு வயது 60. அந்தத் தள்ளாத வயதிலும் ஈழத்தின் மீதான அவரது

உறுதி என்னை உலுக்கியது.

அவரது வீட்டில் நடந்த இரங்கல் கூட்டத்தில், ‘‘நாம் விரும்பி பயணம் செய்த

வண்டி, பாதியில் நின்றுவிட்டது. பாதியில் விட்டுவிட்டுத் திரும்பவும்

முடியாது. போகாமல் இருக்கவும் முடியாது. மாற்றாக வேறு ஏதேனும் வழியில்

நாம் சென்று சேர வேண்டும். ஆயுதம் இல்லாவிட்டால் அறவழியிலாவது இந்தப்

பயணம் தொடர வேண்டும். விடுதலைச் சிறுத்தைகள் அவர்களுக்கு என்றும்

உறுதுணையாக நிற்கும்’’ என்று பேசினேன்.

அப்போது அங்கிருந்த இளைஞர்கள் ராணுவத்தைப் பற்றி கவலைப்படாமல் என் கைகளை

குலுக்கி, ‘உங்களின் பேச்சு எங்களுக்குப் புத்துணர்ச்சி அளித்துள்ளது.

ஈழம் மலரும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. அண்ணா உங்களுக்கு நன்றி’ என்று

சொன்னார்கள்.

‘தலைவர் இருக்கிறார். தனி ஈழம் கிடைக்கும். தமிழனாகப் பிறந்தவனை உலகில்

யாராலும் அழிக்கமுடியாது. நமது விடுதலை உணர்வை யாராலும் அழிக்க முடியாது’

என்று அவர்களிடம் நம்பிக்கையை விதைத்தேன்.

இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுடுகாட்டுக்கு அய்யாவின் உடல்

மரியாதையோடு எடுத்துச் செல்லப்பட்டது. ராணுவத்திற்குப் பயந்து மக்கள்

வெளியே வரத் தயங்கினர்.

அப்போது உணர்ச்சிவசப்பட்ட தம்பி ஒருவர், ‘ஈழம் வெல்வது உறுதி. நான்

கத்துகிறேன் என்பதற்காக ராணுவம் என்னை வெள்ளை வேனில் ஏற்றி தூக்கிச்

சென்றாலும் நான் கவலைப்பட மாட்டேன், சாவுக்குப் பயப்பட மாட்டேன்’ என்று

கோஷம் எழுப்பினார். அதைக் கண்டு என் உடல் சிலிர்த்தது.

இடது முன்னணியைச் சேர்த்த சிங்களரான தர்மஸ்ரீ என்பவர், ராஜபக்ஷேவின்

கொடுமைகளைக் கண்டித்து பேசியபோது, இழவு வீடு என்றுகூட பார்க்காமல்

உள்ளே புகுந்த காவலர்கள், ஒலிபெருக்கி இணைப்பைத் துண்டித்தனர். ஊர்வலம்

முடிந்த பிறகு அவர் உள்பட சில இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.

‘இந்த நிலையில்தான் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். இதுதான் எங்கள்

வாழ்க்கை’ என்று வேதனையோடு வெளிப்படுத்தினர் வயதான பெரியவர்கள்.

தந்தை இறந்த செய்தியை பிரபாகரன் அறிந்திருப்பார். அவர் மனம் என்ன

பாடுபடும் என்பது ஒருபுறம். பெற்ற பிள்ளைகளும் உடனில்லை. துணையாக இருந்த

கணவரும் காலமாகிவிட்டார் என்ற நிலையில் அன்னை பார்வதி அம்மாளின் மனநிலை.

அவர் மனம் எப்படியெல்லாம் பதைபதைக்கும். இந்த எண்ணங்கள் விவரிக்க முடியாத

வேதனையை எனக்குள் தந்தன. அந்தத் தாய் பொங்கிப் பொங்கி அழுத காட்சி

இன்னமும் என்னை நிலைகுலையச் செய்து கொண்டிருக்கிறது.

தமிழ் மண் முற்றிலுமாக சிங்கள ராணுவ மயமாகிவிட்டது. அங்கே தமிழரின்

உயிருக்குப் பாதுகாப்பு இல்லை. புலிகள் ஆண்ட தேசம் இன்று சிங்கள

காடையர்களின் விளையாட்டுக் கூடாரம். துளியும் அச்சமில்லாமல் முழு

சுதந்திரத்தோடு சிங்கள சிறுவர்களும், பெரியவர்களும், இளைஞர்களும்

கிரிக்கெட், கோலி என்று பலவிதமான விளையாட்டுக்களை விளையாடுகின்றனர்.

தமிழனின் வாழ்வாதாரமான விவசாய பூமியில் நடைபயிற்சியும்,

ஓட்டப்பயிற்சியும் செய்து கொண்டிருக்கிறார்கள் சிங்கள ராணுவத்தினர்.

கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியில்லாமல் ராஜபக்ஷே, பொன்சேகா தமிழரின்

பகுதிகளில் வந்து வாக்கு கேட்க முடிகிறது. அதுவும் பயங்கரவாதத்தை

ஒழித்துவிட்டோம் என்று சொல்கின்றனர். அவர்களை எதிர்த்து குரல்

கொடுக்கக்கூட திராணியில்லாமல் அங்கு அழிந்து கிடக்கிறது தமிழ் இனம்.

அதுவும் ராஜபக்ஷே, தமிழில் பேசி வாக்கு சேகரிக்க என்ன துணிச்சல்

ஏற்பட்டிருக்கிறது!

‘இந்த சிங்களர்களிடம் இருந்து ஈழ மண்ணை இனி எப்படியும் மீட்டேயாக

வேண்டும். இனி அடிக்கடி ஈழத்திற்கு வருவேன். உங்களைச் சந்திப்பேன்’ என்று

ஏதோ ஒரு நம்பிக்கையில், என்னைச் சுற்றி நின்ற இளைஞர்களிடம் சொன்னேன்.

இலங்கை மண்ணில் இருந்து தமிழக மண்ணுக்கு நான் விமானத்தில் பறந்து

வந்தாலும், அந்தத் துயரத்தில் இருந்து என்னால் மீளமுடியவில்லை. அதே

மனநிலையில்தான் இருக்கிறேன். அந்தத் துக்கத்தின் தாக்கம் என்னைவிட்டு

இன்றளவும் அகலவில்லை’’

கண்களில் விரல் பதித்து கலங்குகிறார் திருமாவளவன்!

http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=803&rid=43

Muthamizh

Chennai

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.