Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அகதிகள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் - பழ. நெடுமாறன் கடும் கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதன், பிப்ரவரி 3, 2010 15:22 | அகரவேல், சென்னை

அகதிகள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் - பழ. நெடுமாறன் கடும் கண்டனம்

செங்கற்பட்டு சிறப்பு முகாமில் எத்தகைய விசாரணையும் இல்லாமல் பல மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள 31 ஈழத்தமிழ் அகதிகள் மீது நேற்று இரவு 10 மணிக்கு மேல் காவல்துறையினரால் மிகக்கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என பழ.நெடுமாறன் கண்டனம் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு

செங்கற்பட்டு சிறப்பு முகாமில் எத்தகைய விசாரணையும் இல்லாமல் பல மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள 31 ஈழத்தமிழ் அகதிகள் மீது நேற்று இரவு 10 மணிக்கு மேல் காவல்துறையினரால் மிகக்கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தங்கள் குறைகளைத் தீர்ப்பதாக முதலமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, நேற்று அந்தக் கைதிகள் அனைவரும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். ஆனால் இரவு 10 மணிக்கு மேல் திடீரென 200க்கும் மேற்பட்ட காவல்படை வீரர்கள் உள்ளே புகுந்து உறங்கிக்கொண்டிருந்த அகதிகள் மீது மிகக்கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.

அதிகாலை 4 மணி வரை விடிய விடிய நடைப்பெற்ற இந்தத் தாக்குதலின் விளைவாக அகதிகள் அனைவருமே படுகாயமடைந்துள்ளனர். மிகமோசமான முறையில் பாதிக்கப்பட்டுள்ள 13 அகதிகளை மட்டும், அங்கிருந்து காவல்துறை அகற்றிவிட்டது. அவர்கள் கதி என்னவாயிற்று என்பதும் தெரியவில்லை. அகதிகளுக்குச் சொந்தமான துணிகள் மற்றும் பொருட்கள் அடியோடு அழிக்கப்பட்டுள்ளன. படுகாயமடைந்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படவில்லை. உணவும் தரப்படவில்லை..

தமிழ்நாட்டில் உள்ள அகதிகளுக்கு மேலும் பல வசதிகளை செய்துக்கொடுக்கப்போவதாக பசப்பிவரும் முதலமைச்சர் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை, உண்ணாவிரதம் இருந்த அகதிகள் மீது நடத்திய இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுப்படுத்தியிருக்கிறது.

படுகாயமடைந்த அனைத்து அகதிகளையும் உடனடியாக விடுதலை செய்வதோடு அவர்களை மருத்துவமனையில் சேர்த்து தக்க சிகிச்சையளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன் என அவர் மேலும் கூறியுள்ளார்.

pathivu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செங்கல்பட்டு சிறப்புமுகாம் இப்பொழுதன்னும் வெளிச்சத்துக்கு வந்தது நல்லதுக்குதான்.

இந்தியநீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் தமது தண்டனைக்காலம் முடிந்ததும் இந்த

முகாமுக்கு கொண்டுவரப்படுவார்கள்.பின்னர் இங்கு காலவரையின்றி இருப்பார்கள்.பதினைந்து வருடங்களாக

இங்கு இருப்பவர்களும் இருக்கிறார்கள்.நீண்டகாலமாகவே இந்த முகாமின் அத்தியாவசிய உரிமைகளுக்காக

உண்ணாவிரதம்தான் ஆயுதமாக இருந்துவந்துள்ளது.உறவினர்கள் வந்து பார்வையிடும் நேரம் அதிகரிக்க

படும் கோரிக்கைமுதல் பத்திரிகைபெறும் உரிமைவரை.

இந்தமுறை காட்டுமிராண்டி கருணாநிதி நடுநிசியில் புகுந்து எங்களின் உறவுகளை மிருகத்தனமாக தாக்கி

இருக்கிறார்கள்.

கருணாய்க்கு தெரியும்தானே நடுநிசியில் தூக்கி கைதுசெய்யும் துன்பத்ததை.

முன்னர் ஜெயலலிதா இவரை நடுநிசியிலி சாரம்அவிழ அவிழ கதற கதற இழுத்துக்கொண்டுபோனதை இவர் மறந்துவிட்டாரா???

  • கருத்துக்கள உறவுகள்

புதன், பிப்ரவரி 3, 2010 15:22 | அகரவேல், சென்னை

அகதிகள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் - பழ. நெடுமாறன் கடும் கண்டனம்

செங்கற்பட்டு சிறப்பு முகாமில் எத்தகைய விசாரணையும் இல்லாமல் பல மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள 31 ஈழத்தமிழ் அகதிகள் மீது நேற்று இரவு 10 மணிக்கு மேல் காவல்துறையினரால் மிகக்கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என பழ.நெடுமாறன் கண்டனம் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு

செங்கற்பட்டு சிறப்பு முகாமில் எத்தகைய விசாரணையும் இல்லாமல் பல மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள 31 ஈழத்தமிழ் அகதிகள் மீது நேற்று இரவு 10 மணிக்கு மேல் காவல்துறையினரால் மிகக்கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தங்கள் குறைகளைத் தீர்ப்பதாக முதலமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, நேற்று அந்தக் கைதிகள் அனைவரும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். ஆனால் இரவு 10 மணிக்கு மேல் திடீரென 200க்கும் மேற்பட்ட காவல்படை வீரர்கள் உள்ளே புகுந்து உறங்கிக்கொண்டிருந்த அகதிகள் மீது மிகக்கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளார்கள்.

அதிகாலை 4 மணி வரை விடிய விடிய நடைப்பெற்ற இந்தத் தாக்குதலின் விளைவாக அகதிகள் அனைவருமே படுகாயமடைந்துள்ளனர். மிகமோசமான முறையில் பாதிக்கப்பட்டுள்ள 13 அகதிகளை மட்டும், அங்கிருந்து காவல்துறை அகற்றிவிட்டது. அவர்கள் கதி என்னவாயிற்று என்பதும் தெரியவில்லை. அகதிகளுக்குச் சொந்தமான துணிகள் மற்றும் பொருட்கள் அடியோடு அழிக்கப்பட்டுள்ளன. படுகாயமடைந்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படவில்லை. உணவும் தரப்படவில்லை..

தமிழ்நாட்டில் உள்ள அகதிகளுக்கு மேலும் பல வசதிகளை செய்துக்கொடுக்கப்போவதாக பசப்பிவரும் முதலமைச்சர் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை, உண்ணாவிரதம் இருந்த அகதிகள் மீது நடத்திய இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுப்படுத்தியிருக்கிறது.

படுகாயமடைந்த அனைத்து அகதிகளையும் உடனடியாக விடுதலை செய்வதோடு அவர்களை மருத்துவமனையில் சேர்த்து தக்க சிகிச்சையளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன் என அவர் மேலும் கூறியுள்ளார்.

pathivu

கண்டனம் கத்திரிக்காய் கிலோ நாலு ரூபாய்.. இதற்கெல்லாம் ஒரே வழி அண்ணன் பிரபாகரன் காட்டியதுதான்....

தமிழினத் துரோகி கருணாநிதிக்கும் விபச்சாரி சோனியாவுக்கும் சொல்லிவையுங்கள் இந்தியா மீண்டும் தவறிளைக்கிறது.தொடர்ந்தும் தவறே இளைக்கிறது. வெகு விரைவில் இதற்கான பதில் இந்தியாவுக்கு கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

துரோகி என்று சொல்லி பலரை எதிரியாக்காதேங்கோ,இப்படி பலர் இருக்கிறார்கள் இவர்களையெல்லாம் சேர்த்துத்தான் தமிழன் தம்ழீழம் வாங்கப்போறான் இது தான் மே 2009 க்கு பின்னான அரசியல் இராஜ தந்திர(?) நகர்வுகள்!

தலைவர் இருக்கேக்க உள்ளூராட்சியில இருந்து மாகாண சபை,வரைக்கும் வந்திது இப்ப உள்ளூராட்சி சபை அதிகாரம் கூட இல்லை இதுதான் இவையிட இராஜ தரித்திரம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களில வெள்ளைக்காரனுக்கு இருக்கிற அன்பு, எங்கட "தமிழ்" நாட்டில "அகதிகளாக" இருக்கும் "தமிழரில்" இல்லை. 300 கோடி ரூபால தமிழ் மாநாடு வைச்சு நீ பெரிசோ நான் பெரிசோ எண்டு அலட்ட போயினம். இந்த கூட்டத்துக்கு எல்லாம் மதிப்பும் மரியாதையும் குடுக்கிரவையளுக்கு முதல்ல தமிழ் ஏமாளிகள் சங்கத்தில் இருந்து வாழ்த்து அனுப்பவேண்டும்.

ஒவ்வொரு தமிழர் வாழும் நாட்டிலும் மக்கள் சிறு குழுக்களாக சேர்ந்து இந்தியாவில் வதை முகாம்களில் தவிக்கும் தமிழ் அகதிகளுக்கும் நீதி கேட்டு போராடவேண்டும். இவர்கள் தமது ஊர்களுக்கு திரும்ப வழி செய்யவேண்டும்.

வெள்ளைக்காரன் காந்திக்கு அடித்ததில் தப்பில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பழ .நெடுமாறன் அவர்கள் மீது நமக்கு எளிமையான மனிதர்.. ஈழத்திற்காக தனது வாழ்நாளை பெரும் பகுதியை அர்ப்பணம் செய்தவர்.. என்ற மரியாதை இருப்பினும்.அவர் செய்யும் வழிமுறைகள் நமக்கு ஒப்புமை இல்லை..செயலை கால ஒப்புமை நோக்கி செய்தல் சிறப்பு எனும் வள்ளுவர் வாக்கிற்கு இணங்க ஊரே மாணவர் அமைப்புகள் வழங்கறிஞர்கள் என ஈழத்திற்காக தெருவில் இறங்கி இருக்க .. உண்ணாவிரத போராட்டம் ஊதுவத்தி போராட்டம் என நடத்துதல் அழகா? ஊர்வலத்தில் நடக்கும் இளைஞரகள் ஏதோ ஈழத்திற்காக வெட்டி(?) முறித்துவிட்டோம் எனும் திருப்தியோடு கலைந்து செல்வதை காண எரிச்சலாக உள்ளது..

கட்சி ஊர்வலத்தில் செல்லும் போது எதிர்கட்சி அலுவலகங்களை தாக்கி எரியூட்டுவது போல் .. இதற்கு காரணமான மத்திய அரசு அலுவலகங்களை தாக்கி எரியூட்ட வேண்டாமா? ஒருவேளை இவர் இதற்கு முன் காங்கிரசு கட்சியில் இருந்தால் என்னவோ இவ்வாறான சிந்தனைகள் இடம்பெற வாய்ப்புண்டு.ஆனால் அது விலை போகா சரக்கு என்பதை நெடுமாறன் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சுருங்க சொன்னால் கயவன் கருநாகம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார் இவரும் கண்டித்து கடிதம் எழுதுகிறார் டெல்லி ஏகாதிபத்தியத்தில் இக்கடிதத்திற்கான ஒரே அளவுகோல் "குப்பை தொட்டி" .அடுத்து இன்னும் இலங்கையால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து என்று குரல் எழுப்புவருகிறார்.. தமிழீழம் தான் பாதுகாப்பு என்ற நிலை உறுதி என அனைவருக்கு தெரிந்த பிறகு.. இன்னும் ஏன் பொந்தியா கண்டுகொள்ளவில்லை? காரணம் .. பொந்தியா தமிழர்களை மனிதனாகவே மதிக்கவில்லை என்று இவருக்கு தெரியாதா? இன்னும் ஏன் கெஞ்சல் .. கூத்தாடல்..? நம் மண்ணை மீட்க ஏன் இவர்களிடம் கெஞ்ச வேண்டும் என ஒர் உரையை இதுவரை நிகழ்த்திருப்பாரா?

எனவெ வயதில் மூத்த நெடுமாறன் போன்றோர்.. இனியும் இளைஞர்களுக்கு வழிவிடுதல் நன்று.உண்ணவிரதம் மவுன விரதம் தீப்பந்த பேரணி என்று இளைஞர்களை கிலுகிலுப்பை காட்டி காயடித்து விடாமல் அவர்களை அவர்களுடைய "பாணியில்" போராட விடுவது நனறு.. அது "எதிரியே நமது ஆயுதத்தை தீர்மானிக்கிறான்" "அவலத்தை தந்தவனுக்கே அதை திருப்பி கொடு" என்ற புரட்சியாளர் தமிழீழ தேசிய தலைவரின் பாணியாகும்...அதுதான் தற்போதைய "பாணியுமாகும்"..

புரட்சிகர தமிழ்தேசியன் -திருவண்ணாமலை

புரட்சிகரத் தமிழனே ! உங்கள் வேகங் கண்டு மகிழ்ச்சியாகத்தானிருக்கிறது. ஆனால் இப்போதுதான் நாங்கள் ஈழத்தமிழர்கள் பிராந்திய உலக வல்லாதிக்கங்களால் நசுக்கப்பட்டு அதன் வலிகளை மாற்ற முடியாதிருக்கிறோம். உலக நியமங்கள் எமது தேவைக்கு மாற்றமடைவதில்லை. அதற்கேற்ப எமது வழிமுறைகளையும் கையாண்டு கொள்ள வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் நெடுமாறன் ஐயா அவர்களும் தேவையான ஒருவரே. இளையோர் பலமானவர்கள்தான், அதில் மாற்றுக்கருத்தில்லை. இனையோர்கள் நெடுமாறன் அவர்களுடன் இணைந்திருத்தல் வேண்டும். ஈழத்தமிழர்கள் தமது தாயகத்தில் மட்டுமல்ல, உலகெங்கிலும் இன்றுவரை அரசியல் அனாதைகளாகவேயுள்ளனர். மேற்கத்தைய நாடுகளில் வாழ்வோர் அந்த நாடுகளின் மனிதவுரிமைச் சட்டங்களால் பாதுகாக்கப்படுகின்றனர். ஆசிய நாடுகளில் அது கிடைப்பதில்லை.

ஈழத்தமிழர் தாக்கப்பட்ட விடயமும் இது சம்பத்தப்பட்டதுதான். இந்தியாவில் வாழ்கின்ற ஈழத்தமிழரின் மனிதவுரிமைகள் பாதுகாக்கப்பட்டாலே போதும் அவர்கள் அராஜகங்களுக்காட்படாமல் இருப்பார்கள்.

நாடு இல்லாத அகதி நாய்களுக்கு பாவம்னு இடம் குடுத்தா விடுதலையாம்ல வேணும்? கிடைக்குற சோரத் தின்னுபுட்டு கிடங்கடா அகதிப் பயலுகளா…..

அநாதை அகதிப் பயலுகளா..என்னடா விடுதலை வேண்டிக் கிடக்குது உங்களுக்கு அனாதப் பயலுகளா? நாடு இல்லாத அகதி நாய்களுக்கு பாவம்னு இடம் குடுத்தா விடுதலையாம்ல வேணும்? கிடைக்குற சோரத் தின்னுபுட்டு கிடங்கடா அகதிப் பயலுகளா…..செங்கல்பட்டில் ஒலித்த அதிரடிப்படை அதிகாரி ஒருவரின் குரலில் தான் எத்தனை கம்பீரம், எத்தனை சிறப்பு!!! ஓசிச் சோறு திங்கற உங்களுக்கு என்னடா விடுதலை??? இதுதான் தமிழகக் காவல்துறை ஈழத் தமிழ் மக்கள் மீது காட்டும் பரிவும் பாசமும்.

வாழ்ந்த வீடும் இழந்து, வாழ்வதற்கு இருந்த நம்பிக்கைகளும் இழந்து உப்புச் சப்பற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை தங்கள் வாழ்க்கையின் நிரந்தர அடையாளமாய்ச் சுமந்து திரியும் ஈழத் தமிழ் அகதிகள் கடைசியில் தமிழகத்திலேயே தாக்கப்பட்டிருப்பது வேதனைக்குரியது மட்டுமன்றி கடுமையான கண்டணத்திற்குரியது.

இந்த தேசத்தில், நீங்கள் வங்கிகளைக் கொள்ளையடித்து குற்றம் சுமத்தப்பட்டிருந்தால் உங்களுக்கு நாங்கள் பத்ம பூஷனோ, இல்லை பத்மஸ்ரீயோ கொடுத்துக் கொண்டாடி இருப்போம், உங்கள் குற்றங்களை எங்கள் தேசிய மலக்கிடங்கில் மறைத்து சிதம்பரம் ஐயாவின் வேட்டியைப் போட்டு மறைத்து விடுவோம், நீங்கள் பாவம் வாழ வழியின்றித் தொப்புள் கொடி உறவுகளைத் தேடி வந்தீர்கள், இங்கே பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளையும் நீங்கள் உங்கள் உறவுகள் என்று கருதி விட்டீர்கள், அவர்களுக்கு கூட்டணி தர்மங்களையும், ஆட்சிக் கட்டில்களையும் காப்பாற்றும் மிக உன்னதமான பணி இருக்கிறது, இந்திய இறையாண்மையை அலுங்காமல் பாதுகாக்கும் அளப்பரிய பணிக்கு இடையூறாக உங்கள் போராட்டம் இருக்குமேயானால் இப்படித்தான் அடிப்பார்கள், அது முள்ளிவாய்க்காலோ இல்லை செங்கல்பட்டோ எதுவாய் வேண்டுமானாலும் இருக்கலாம், வேறுபாடின்றிப் பேரினவாதத்தின் தடிகள் இப்படித்தான் இறங்கும்.

அதிரடிப்படைத் தாக்குதல் நடத்தப்பட வேண்டுமானால் அதற்கு மாவட்ட அளவில் இருக்கும் உயர் அதிகாரிகளின் அனுமதி பெறப்பட வேண்டும், மிகுந்த உணர்வுப் பூர்வமான சிக்கல்கள் நீடிக்கும் ஒரு ஏதிலிகளின் சிறப்பு முகாமில் இது போன்ற தாக்குதல் நடத்தப்பட வேண்டுமாயின் அதற்கு உறுதியாகத் தமிழக அரச தலைவர்களின் வாய்மொழி உத்தரவாவது பெறப்பட்டிருக்க வேண்டும், என்கிற நிலையில் இது அனுமதி பெற்று நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் என்றே கருத இடமிருக்கிறது.

நீங்கள் ஏழைகளுக்கு வழங்கும் அரிசியைக் கடத்திப் பிழைப்பு நடத்தும் ஒருவராக இருந்தால் உங்களை நாங்கள் ஏற்றுமதியாளர் என்று சிறப்புச் செய்து விரைத்த காவல்துறை வணக்கம் வைப்போம், நீங்களோ பாவம் உழைக்கவும், பொருள் ஈட்டவும் வழி இல்லாத ஈழத் தமிழர்களாய்ப் போனீர்கள், உங்களை அடித்துத் துவைப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

நீங்கள் மணல் கொள்ளை நடத்தி மானம் கேட்ட வாழ்வு நடத்தும் மதிகெட்டவராக இருந்தால் உங்களுக்கு சாமரம் வீசி வரவேற்கும் அல்லக்கைகளாக நாங்கள் இருந்திருப்போம், நீங்களோ பாவம், பிழைக்கவே வழி இல்லாத பஞ்சப் பரதேசிகள் ஆனீர்கள், உங்களை எப்படி நாங்கள் விட்டு வைப்போம் உரிமைகள் கேட்க????

இவை எல்லாம் போக நீங்கள் தமிழர்களாய் அல்லவா போனீர்கள், தமிழர்களுக்கு வாக்களிக்க உரிமையுண்டு, தேர்வு செய்ய உரிமையுண்டு, ஏனென்றால் நீங்கள் தேர்வு செய்வதற்கு அவர் பணம் அல்லவா கொடுக்கிறார், சோற்றுப் பொட்டலங்களுக்கு வோட்டுப் போடும் சோரம் போன நமக்கு யாரையும் கேள்விகள் கேட்கும் அதிகாரமெல்லாம் எதற்கு?? உலகெங்கும் ஒடுக்குமுறையைச் சந்திக்கும் நமக்கு இன்னும் விஜய் படம் ஓட வேண்டுமா? அஜித் படம் ஓட வேண்டுமா என்பது பற்றித் தானே அதிக அக்கறை.

முகாம்களில் வாழும் ஈழத் தமிழர்களே, இனி உங்கள் உரிமைகளைப் பெறுவதற்கு ஒரு எளிமையான வழி இருக்கிறது, போராட்டமெல்லாம் வேறு இனத்தவர்களுக்கு, தமிழர்களுக்கு இருக்கும் ஒரே வழி அண்டிப் பிழைப்பது, உங்கள் முகாமுக்கு அருகில் வாழும் ஆளுங்கட்சியின் செல்வாக்குப் பெற்ற தலைவரைப் பிடித்து முதலில் மாலை போடுங்கள், பிறகு மனுக்கொடுங்கள், ஐயாவின் ஆட்சியோ, இல்லை அம்மாவின் ஆட்சியோ தான் இந்த உலகின் தலை சிறந்த ஆட்சி என்று யாராவது ஒரு பத்திரிக்கையாளரைக் கூப்பிட்டு குனிந்து காதிலாவது சொல்லி வையுங்கள், குறைந்த பட்சம் அடி வாங்குவதில் இருந்தாவது தப்பிக்க வழி கிடைக்கும்.

யாரையும் குறை சொல்லிப் புலம்பிக் கொண்டு திரிவதில் எந்தப் பயனும் இல்லை உறவுகளே, இனி ஒவ்வொரு ஈழத் தமிழ்க் குடிமகனும் அவனுடைய குழந்தைகளும் கல்வியிலும், பொருளாதாரத்திலும் தன்னிறைவு காணும் நிலை பெறப்பட வேண்டும், காலம் வழங்கிய அநீதியைத் துடைத்து வரலாற்றில் வெற்றி

பெற்ற இனமாக மாறும் வெறியோடு உழைப்பதும் திட்டமிட்டு ஒருவருக்கொருவர் உதவும் நோக்கோடு பயணம் செய்வது

பயன் தரும். புலம் பெயர்ந்த மக்கள் நடத்தும் பகட்டு விழாக்களைக் குறைத்து, ஈழத்தின் பெயரில் வாழ்க்கையும் அரசியலும் நடத்தும் போலி வேடதாரிகளைப் பல லட்சம் செலவு செய்து அழைப்பதை விடுத்து இனி வருங்காலங்களில் பொருளாதார ரீதியில் வலுவிழந்து காணப்படும் உறவுகளை கைதூக்கி விடுவதிலும், கல்வி மற்றும் சமூக ரீதியில் இளைய தலைமுறையை மேன்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவதிலும் தான் முகாம்களில் வாடும் ஏதிலிகளின் வாழ்க்கை உள்ளடங்கி இருக்கிறது.

செய்வார்களா புலம் பெயர் உறவுகள்??

அறிவழகன்

http://www.manithan.net/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.