Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறைக்குள்ளேயே பொன்சேகா க்ளோஸ்...?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறைக்குள்ளேயே பொன்சேகா க்ளோஸ்...?

துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அந்தரப்படுவது போன்ற ஒரு நெருக்கடியை இலங்கை ஆட்சிப் பீடத்துக்குத் தந்திருக்கிறது பொன்சேகா விவகாரம்.

பிரபாகரன் ரகசியம் வெளிவராமல் தடுக்க

சிறைக்குள்ளேயே பொன்சேகா க்ளோஸ்...?

துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அந்தரப்படுவது போன்ற ஒரு நெருக்கடியை இலங்கை ஆட்சிப் பீடத்துக்குத் தந்திருக்கிறது பொன்சேகா விவகாரம்.

பொன்சேகா ஏதோ நாட்டுக்குப் பெரும் துரோகம் ஏற்படுத்தும் குற்றம் ஒன்றை ஏற்கெனவே இழைத்துவிட்டார் என இலங்கை ஆட்சிப்பீடம் துள்ளிக் குதித்தாலும் உண்மை அதுவல்ல. இனிமேல் அத்தகைய விஷயத்தை அவர் செய்துவிடுவார் என்பதுதான் மஹிந்தர் ஆட்சித் தலைமையின் பீதி, அச்சம், பயம் எல்லாமே. பொன்சேகா செய்தவைக்கல்ல, இனிமேல் செய்யப்போகின்றமைக்கு அஞ்சியே இப்படிக் கூப்பாடு போடுகின்றனர் கொழும்பு அதிகாரிகள்.

புலிகளுக்கு எதிரான வன்னி இறுதி யுத்தத்தின்போது மிக மோசமான போர்க் கொடூரங்களை இழைத்தன இலங்கைப் படைகள் என்பது அப்பட்டமான உண்மை. நாலாபுறமும் இலங்கைப் படைகளின் துருப்புகளினால் சூழப்பட்டு, ஒரு குறுகிய சிறிய நிலப்பரப்புக்குள் சிக்குண்டு கிடந்த பல லட்சக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் மீது கொத்துக் குண்டுகளைக் கண்மூடித்தனமாக வீசிப் பல்லாயிரம் அப்பாவிகளை ரத்தமும் சதையும் சிதறக் கொன்றொழித்தமை தொடக்கம், விடுதலைப் புலிகளின் போராளிகள் மீது நச்சுவாயு, ரசாயனக் குண்டுகள் உட்படப் போரில் பயன்படுத்தத் தடை செய்யப்பட்ட - கொடூரப் பேரழிவுகளைத் தரும் - ஆயுதங்களைப் பிரயோகித்தமை வரை, அங்கு அரங்கேறிய அராஜகங்கள் அநேகம். மனித குலத்துக்கு எதிரான பெரும் குற்றங்களாக சர்வதேச யுத்தக் குற்ற விசாரணை மன்றத்தினால் அடையாளம் காணக்கூடிய பல்வேறு அட்டூழியங்கள், அடாவடித்தனங்கள், கோரங்கள், கொடூரங்களைப் புரிந்தே இந்த யுத்தத்தில் வெற்றியீட்டின இலங்கைப் படைகள்.

யுத்தப் பிரதேசத்தை வெளியாட்கள் - ஊடகவியலாளர்கள், சர்வதேசப் பார்வையாளர்கள், பன்னாட்டுத் தொண்டர் அமைப்புகளின் பிரதிநிதிகள் ராஜதந்திரிகள், கண்காணிப்பாளர்கள் என எவருமே - அண்டவிடாமல் தடுத்தபடி, ஒரு பெரிய மனிதப் பேரவலத்தை அப்படியே அமுக்கி, மூடி மறைத்துக்கொண்டு, யுத்த வெற்றி கொண்டாட்டத்தில் திளைத்த கொழும்புக்கு பொன்சேகா ரூபத்தில் கிளம்பியிருக்கிறது கெட்டகாலம்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இலங்கைப் படைகளிடம் உயிரோடு சிக்கினார் -

அவரை இருபத்துநான்கு மணி நேரத்துக்கு மேல் தடுத்து வைத்திருந்த பின்னர்- - சுட்டு அல்ல, தலையில் கோடாரியினால் வெட்டியே கொலை செய்தனர் -

அவர் உண்மையில் சரணடையவில்லை. சர்வதேச பொது அமைப்பு ஒன்றின் பெயரில் நடத்தப்பட்ட சதி நாடகத்தில் அவர் ஏமாற்றப்பட்டு அதனால் சிக்கினார். என்பவை வரையான சகல விஷயங்களையும் நேரில் ஒரு பங்குதாரராகி அறிந்து கொண்டவர் பொன்சேகா.

அவரிடம் புதைந்து கிடக்கும் பரம ரகசியங்கள் அம்பலமானால் - பகிரங்கமானால் - இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷேவினதும் அவரது ஆட்சிப் பட்டாளத்தினதும் நிலைமை அதோ கதிதான்.

இலங்கையில் நடந்த போர்க் கொடூரங்கள் தொடர்பில் செயற்கைக் கோள்கள் மூலமான படங்கள், ஆதாரங்களோடு, இலங்கை ஆட்சிப்பீடம் மீது பாயக் காத்திருக்கும் மேற்குலகுக்கு ஜெனரல் பொன்சேகா போன்ற ஒரு வலுவான சாட்சியம் - 'அப்ரூவர்' - கிடைப்பாரானால் கொழும்பு ஆட்சியாளர்களின் கதை கந்தலாகிவிடும். பிறகு சந்தேகத்துக்கு இடமின்றி, ஹேக் நகரில் இருக்கும் சர்வதேச யுத்தக் குற்ற விசாரணை ஆயத்தின் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் மஹிந்த ராஜபக்ஷேவும், அவரது சகோதரர்களும், அந்த அதிகார மையமும் தத்தமது வாழ்நாளின் எஞ்சிய காலத்தைக் கழிக்க வேண்டியதுதான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இப்படித் தனது கழுத்துக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருப்பதால்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜெனரல் பொன்சேகாவை அலேக்காக மடக்கி ராணுவக் காவலில் வைத்திருக்கின்றார் மஹிந்தர்.

போதாக்குறைக்கு யுத்த முனையில் இழைக்கப்பட்ட மனிதாபிமானக் குற்றங்களில் தொடங்கி, போர்த்தளவாடக் கொள்முதலில் இடம்பெற்ற பல்வேறு ஊழல்கள், சுத்துமாத்துக்கள் வரை பல ஜிகினா வேலைகள் தொடர்பான ஆவணங்கள், தஸ்தாவேஜுக்கள், சான்றுப் பத்திரங்கள் போன்றவற்றின் பிரதிகளை எல்லாம் முன்னெச்சரிக்கையாகச் சுருட்டி பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்திவிட்டார் பொன்சேகா என்பதும் அரசுத் தலைமைக்கு நன்கு தெரியுமாம்!

இப்போது இலங்கையில் பொதுத் தேர்தல் காலம். இவ்வேளையில் பொன்சேகா வெளியில் இருந்து அவர் எதிரணியின் சார்பில் ஓர் எம்.பி.யாகிவிட்டால் - சில சமயங்களில் குறைந்தபட்சம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் கூட உயர்ந்துவிட்டால் - அவருக்கென்று ஓர் அரசியல் அந்தஸ்து, பாதுகாப்புச் சூழல் வந்துவிடும். அதன் பின்னர் பொன்சேகாவை மடக்குவது என்பது மிகச் சிரமமான காரியம். எனவே ராணுவத் தளபதி பதவி இழப்பு, ஜனாதிபதித் தேர்தல் தோல்வி போன்றவற்றால் துவண்டு கிடக்கும் பொன்சேகாவை மடக்க இதுவே சரியான தருணம் என்று கணக்குப் போட்டிருக்கிறது மஹிந்தரின் மூளை.

நாட்டைக் காட்டிக் கொடுத்தார், ராணுவச் சதிப் புரட்சிக்குத் திட்டமிட்டார், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷேவையும் அவரது குடும்பத்தவர்களையும் கொல்லச் சதி செய்தார் என்றெல்லாம் பல்வேறு குற்றச்சாட்டுகள் பொன்சேகா மீது அடுக்கப்படுகின்றன. இவை எல்லாம் சுத்த 'ஹம்பக்' என்பது கொழும்பில் உள்ள ராஜதந்திரிகளில் இருந்து சாதாரண பிரஜைகள் வரை அனைவருக்கும் தெரியும்.

மஹிந்தரின் ஆட்சிப் பீடம் இருக்கும்வரை பொன்சேகா சிறைக்கம்பிகளுக்கு வெளியே வருவதென்பது பெரும்பாலும் சாத்தியப்படப் போவதில்லை. சிறைக்குள்ளேயே அவரது குரல் அடங்கிவிடும் வகையிலான கைங்கரியம் அரங்கேறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

மாஸ்கோவிலிருந்து கொடுத்த உத்தரவு!

பொன்சேகா விவகாரத்தில் குழம்பிப் போயிருப்பது கொழும்பு அரசும், இலங்கை அரசியலும் மாத்திரமல்ல, புது டெல்லியும் கூடத்தான்.

'இலங்கையில் அப்பாவித் தமிழர்களைக் கண்மூடித்தனமாகக் கொன்றொழிக்கும் யுத்தக் கொடூரங்களை இலங்கை அரசு புரிந்தபோது அதனைத் தடுப்பதற்கு வழியின்றி பார்த்திருந்தது என்ற குற்றச்சாட்டு இந்திய அரசு மீது உள்ளது.

போதாக்குறைக்கு இந்த யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துவதற்கான பிரேரணையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு முன் மேற்கு நாடுகள் கொண்டு வந்தபோது, விழுந்தடித்துக் கொண்டு போய் அதைத் தடுத்து, முறியடித்து கொழும்பை பெரும் ஆபத்பாந்தவனாய்க் காப்பாற்றிய தனிப் பெருமையும் இந்தியாவுக்கே உண்டு.

இந்த நிலையில் ஜெனரல் பொன்சேகா வெளிநாடு ஒன்றுக்குத் தப்பிச் சென்று உண்மைகளை உளறிக் கொட்டிவிடுவாரானால், அதனால் இலங்கைக்கு மட்டுமல்ல, அதன் யுத்தக் குற்றங்களை மூடி மறைக்க உதவிய புது டெல்லிக்கும் நெருக்கடி ஏற்படும்' என்கிறார் இவ்விஷயங்களில் நன்கு பரிச்சயமுள்ள - கொழும்பிலிருந்து இயங்கும் ராஜதந்திரி ஒருவர்.

''புலிகளுக்கு எதிரான வன்னி யுத்தம் தொடர்பில் புது டெல்லி தன்னை வெறும் பார்வையாளனாக மட்டும் வெளியில் காட்டிக்கொண்டாலும், உண்மை

நிலைமை அதுவல்ல, ஒளிவு மறைவாக இந்த யுத்தத்தில், இலங்கைக்குஆதரவை வழங்கியுள்ளது புது டெல்லி.

'அதனால்தான் பொன்சேகா கைது விஷயத்தில் நீண்ட நாட்கள் அமானுஷ்ய அமைதி காக்கிறது புது டெல்லி. அமைதி மாத்திரமல்ல, அத்தகைய கைது, ராணுவத் தடுப்புக் காவல் போன்ற நடவடிக்கைகளுக்கு முன்கூட்டியே புது டெல்லியிடம் சொல்லிவிட்டுத்தான் அந்நடவடிக்கையில் குதித்தது கொழும்பு என்பதும் அரசல் புரசலான கதை' என்கிறார் அந்த ராஜதந்திரி.

பொன்சேகா கைது விஷயத்தில் இன்னொரு சர்வதேச அரசியல் பரிமாணமும் உண்டு.

ஐ.நா. சபையில் 'வீட்டோ' அதிகாரம் கொண்ட சீனா, இப்போது மஹிந்தரின் ஆட்சிப்பீடத்தின் கொல்லைக்குள் ஒரு காலை வைத்தபடி உள்ளது என்பதும், சர்வதேச மட்டத்தில் கொழும்பைக் காப்பாற்ற சீனா எச்சமயத்திலும் பின் நிற்காது என்பதும் சர்வதேச அரசியலில் அரிச்சுவடி படித்தவருக்குக் கூட நன்கு தெரியும்.

இவ்வாறு ஐ.நாவில் 'வீட்டோ' அதிகாரம் கொண்ட மற்றைய நாடு ரஷ்யா. முப்பத்தைந்து வருடங்களுக்குப் பின்னர் இலங்கையின் அரசுத் தலைவர் ஒருவர் அங்கு சென்றமை இப்போதுதான். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷே இந்த மாதத்தின் இரண்டாம் வாரத்தில் அங்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு மாஸ்கோ ஆட்சிப்பீடத்துடன் உயர்மட்டப் பேச்சுக்களில் ஈடுபட்டார். அந்தப் பேச்சுக்களின் இடையேதான், கொழும்பில் பொன்சேகாவை அதிரடியாகக் கைது செய்வதற்கான சமிக்ஞையை மாஸ்கோவிலிருந்தபடியே அதிகாரிகளுக்கு வழங்கினார் என்று கூறப்படுகிறது.

அதாவது தமது இந்த அதிரடி நடவடிக்கைக்கு இன்னொரு பலமான நாடு ஒன்றின் ஆதரவையும் தாம் வகித்துக்கொண்டுதான் காய்களை நகர்த்தியிருக்கி றார் என்பதை மேற்குலகுக்கு அவர் சூசகமாக உணர்த்தத் தவறவில்லை என்கின்றன உள்ளீட்டுத் தகவல்கள்.

சீனா, ரஷ்யா பொன்ற வலிமையான நாடுகளின் இணக்கம், புது டெல்லி எதிர்க்காத அமைதி போன்ற வலுவான பின்னணியுடன்தான் பொன்சேகாவை வளைத்துப் போடும் தனது திட்டத்தை மஹிந்தரின் அரசுத் தலைமை முன்னெடுத்திருப்பதால் இந்த விஷயத்தில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகு எவ்வளவு துள்ளிக் குதித்தாலும் - அழுத்தம் கொடுத்தாலும் - அந்தப் பருப்பு மஹிந்தரிடம் வேகாது என்கின்றனர் நோக்கர்கள்.

வாயைத் திறந்தார்.. உடனே கைது!

'இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைகள் தொடர்பான நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க வேண்டிய தேவை எழுந்தால் அதை முன்னெடுக்கவும் பின் நிற்கமாட்டேன்' - என்று ஜெனரல் பொன்சேகா சூளுரைத்து சில மணி நேரத்துக்குள் அவர் ராணுவப் போலீஸாரால் அவரது அலுவலகத்திலிருந்து தரதரவென்று இழுத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச யுத்தக்குற்ற விசாரணைக்கு மஹிந்தரையும் அவரது அணியினரையும் இழுப்பதன் மூலம் அவரது அரசுத் தலைமைக்கு நல்லதோர் பாடம் புகட்ட பொன்சேகா முன்பே திட்டமிட்டாராயினும் தமது அரசியல் எதிர்காலத்தைத் தென்னிலங்கை பௌத்த - சிங்கள மக்கள் மத்தியில் அது கெடுத்துவிடும் என்பதால் அவர் பொறுத்திருந்திருக்கிறார்.

ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் ஓய்வு பெற்றிருந்த பல ராணுவ அதிகாரிகள் பொன்சேகாவுக்காகக் களத்தில் இறங்கிப் பிரசாரம் செய்திருந்தனர். தேர்தல் முடிந்த கையோடு அவர்களை எல்லாம் அள்ளிக் கைது செய்து, தடுப்புக் காவலில் வைத்துள்ளது இலங்கை அரசு. இப்படி முப்பதுக்கும் அதிகமான முன்னாள் படை அதிகாரிகள் சிறையில் வாடுகின்றார்கள். அவர்களின் மனைவி, பிள்ளைகள், உறவினர்களைக் கடந்த எட்டாம் தேதி மதியம் கொழும்பில் உள்ள தமது அலுவலகத்தில் பொன்சேகா சந்தித்தார். அப்போது, தேவைப்பட்டால் சர்வதேச யுத்தக் குற்ற விசாரணை மன்றத்தில் தாம் மஹிந்தர் ஆட்சியின் வண்டவாளத்தைத் தண்டவாளம் ஏற்றவும் தயங்கமாட்டேன்' என்று பொன்சேகா கூறியிருக்கிறார். தனது உளவு வட்டாரங்கள் மூலம் அத்தகவலை அறிந்துகொண்ட அரசு முந்திக் கொண்டுவிட்டது. சில மணி நேரங்களிலேயே ராணுவக் காவலுக்குள் கொண்டு வரப்பட்டார் பொன்சேகா.

http://www.suriyakathir.com/issues/2010/Feb16-28/pg4.php

முத்தமிழ்வேந்தன்

சென்னை

பொன் சேகா சிறைக்குள் வாயைத் திறக்காதவரைக்கும் உயிருக்குப் பாதுகாப்புத்தான்.

எப்போது அந்த நல்ல செய்தி நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன். மாரடைப்பால் மரணமாகலாம். வைத்திய சிகிச்சை பலனளிக்கவில்லை, இப்படி ஏராளமான காரணங்னள் இருக்கின்றன. போட்டுத் தள்ளுங்கையா.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இலங்கைப் படைகளிடம் உயிரோடு சிக்கினார் -

அவரை இருபத்துநான்கு மணி நேரத்துக்கு மேல் தடுத்து வைத்திருந்த பின்னர்- - சுட்டு அல்ல, தலையில் கோடாரியினால் வெட்டியே கொலை செய்தனர் -

அவர் உண்மையில் சரணடையவில்லை. சர்வதேச பொது அமைப்பு ஒன்றின் பெயரில் நடத்தப்பட்ட சதி நாடகத்தில் அவர் ஏமாற்றப்பட்டு அதனால் சிக்கினார். என்பவை வரையான சகல விஷயங்களையும் நேரில் ஒரு பங்குதாரராகி அறிந்து கொண்டவர் பொன்சேகா.

எல்லாம் ............ :o:D

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

"விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இலங்கைப் படைகளிடம் உயிரோடு சிக்கினார் -

அவரை இருபத்துநான்கு மணி நேரத்துக்கு மேல் தடுத்து வைத்திருந்த பின்னர்- - சுட்டு அல்ல, தலையில் கோடாரியினால் வெட்டியே கொலை செய்தனர்" -

தொடங்கிட்டாங்களய்யா, தொடங்கிட்டாங்க!

உண்மைகள் உறங்கலாம் ஆனால் அழிவதில்லை!

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் உண்மையில் சரணடையவில்லை. சர்வதேச பொது அமைப்பு ஒன்றின் பெயரில் நடத்தப்பட்ட சதி நாடகத்தில் அவர் ஏமாற்றப்பட்டு அதனால் சிக்கினார். என்பவை வரையான சகல விஷயங்களையும் நேரில் ஒரு பங்குதாரராகி அறிந்து கொண்டவர் பொன்சேகா.

ஆமாம், சர்வதேச பொது அமைப்பு என்ற பெயரில் உள்ள அமைப்பில், எமது புலம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கும் பங்குண்டு. புலம் பெயர்ந்த தமிழ் மக்களில் ஒரு சாரார் பிரபாகரனின் தலமைத்துவத்தையும் புலிகளையும் விரும்பாமல் அவரை அழிப்பதற்கு 15 வருடங்களுக்கு முன்பு வழி வகுத்தனர். அதற்கு ஏனைய புலம் பெயர்ந்த துரோகிகளும் துணை போனார்கள். துரோகிகளை வைத்து ஊடுருவி ஒற்றர் வேலைகளை செய்து, எமது இனத்தையே அழித்தார்கள்.புற்றுக்குள் இருந்த ஈசல்களும், பாம்புகளும், ஊரூம் விஷக்கிருமிகளும், புலிகள் பலம் இழந்ததும், இன்று வேறு தோற்ற மெடுத்து வெளி வந்து ஆட்டம் ஆடுகின்றார்கள். என்னே தமிழ் இனம்.

தாங்கள் சரியாக சொன்னீர்கள். பிரபாகரன் சரணடையவில்லை. பிடி பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு அதன் பின்பு கொலை செய்தார்கள். பிரபாகரன் இறந்தது வைகாசி 18 அல்ல. அதற்கு முன்பே அவர் கொல்லப்பட்டார். அவர் உடம்பு முல்லிவாய்களில் போடப்பட்டது. இதன் உண்மை 25 வருடங்களுக்கு பின்பு ஏதாவது நாளிதழில் வரலாம்.

நன்றி

வணக்கம்

சாண்டில்யன்

Edited by Sandilyan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.