Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாங்கள் பெருமளவிலானவர்களை விடுவித்தோம். ஆனால் மறுபடியும் அவர்களை முகாமிற்கு இழுத்துவருமாறு சரத் பொன்சேக்கா உத்தரவிட்டார் ‐ கோத்தபாய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எத்தகைய குற்றச்சாட்டுக்களின் கீழ் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார்?

எத்தகைய குறிப்பான குற்றச்சாட்டுக்கள் என்பது பற்றி நான் பேசப் போவதில்லை. ஏனெனில் ஆதாரங்களின் அடிப்படையில் இராணுவ அதிகாரிகளால் குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டு வருகிறது. வழக்குத் தொடுனரின் பணி அது. இந்த நியாயமான ஒரு விசாரணைக்கு உத்தரவாதம் வழங்க முடியும்.

ஆனால், இதுவரை எத்தகைய குறிப்பான குற்றச்சாட்டுக்களும் இல்லாத நிலையில் இது தனிப்பட்ட பழிவாங்கல் போலத் தெரிகிறதே?

அவ்வாறொன்றும் இல்லை. அவர் இராணுவத்தில் இருந்த பொழுது இராணுவத்திற்கு அவர் ஏற்படுத்திய பாதிப்;புக்கள் குறித்து பெரும்பாலானவர்கள் அறிந்திருக்கவில்லை. அந்த நிலையிலேயே அவர் அரசியலுக்குள்ளும் பிரவேசித்திருக்கிறார்.

அவர் அரசியலுக்கு வராமலிருந்திருக்க வேண்டும். தேர்தலில் ஜனாதிபதிக்குச் சவாலாக இல்லாதிருந்திருக்க வேண்டும் என்று கூறுகிறீர்களா? என்னவகையாக பாதிப்புக்கள் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள்?

அவருக்கு ஜனநாயக உரிமைகள் இருக்கின்றன. ஆனால், அவர் அதனை தவறாகத் துஷ்பிரயோகம் செய்து விட்டார். பெரும்பாலானவர்கள் இதனை எளிமைப்படுத்தி மூன்றாக வகைப்படுத்தி உள்ளனர். முதலாவது அவர் போரை வெற்றிகரமாக முடித்தார் என்பது. இரண்டாவது, அவர் இராணுவ ஜெனரலாக இருந்தார் என்பது, மூன்றாவது, தேர்தலில் அவர் ஜனாதிபதிக்குச் சவாலாகப் போட்டியிட்டதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது. அவர் ஏற்படுத்திய பாதிப்புக்களுக்காகத் தான் அவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்பதே உண்மையான காரணம். அதாவது அவர் இராணுவத்தை அரசியல் மயப்படுத்தி இருந்தார். இந்தியாவும் நாங்களும் பெருமைப்படும் வகையில் இந்தப் பிராந்தியத்தில் எமது இரண்டு நாட்டு இராணுவங்களும் மட்டுமே நடுநிலையாகவே இருந்து வந்த ஒரு பாரம்பரியம் எமக்கிருந்தது. இலங்கையில் இந்தப் பாரம்பரியம் பொன்சேகாவால் அழிக்கப்பட்டு விட்டது. அவர் மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர எமக்கு வேறு வழி இருக்கவில்லை.

ஒரு வெற்றி நாயகன் என்ற வகையில் அவர் ஏராளமானவர்களால் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உள்ளானார். அவர்கள் அவரைப் போட்டியிடுமாறு தூண்டியிருக்கலாமல்லவா?

இராணுவத்திலிருந்து முற்றாகத் துண்டித்துக் கொண்ட பிறகு அவர் அரசியலுக்குள் நுழைந்திருக்க வேண்டும். அவருக்கு அதிகாரத்திலிருந்த பேராசையின் காரணமாக தனது பதவிநிலையையும் தொடர்புகளையும் தனது சொந்த இலாபங்களுக்குப் பயன்படுத்தியுள்ளார். அவர் இராணுவத் தளபதியாக இருந்த போதும் பாதுகாப்பு அதிகாரிகளின் தலைமையதிகாரியாக இருந்த போதும் அவர் இதனைச் செய்துள்ளார். அவர் இராணுவத் தளபதியின் பங்களாவிலிருந்தபடியே தனது அரசியல் நடவடிக்கைகளுக்கும், தனது அதிகார நிலைக்கேற்ப இராணுவ வளங்களை தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காகவும் பாவித்து வந்தார்.

அரசியல் நடவடிக்கைகள் என்று எதனைக் குறிப்பிடுகிறீர்கள்?

அவர் பாதுகாப்புத் தலைமை அதிகாரியாக இருந்த போது மற்றைய கொமாண்டர்களிடமும் சிரேஷ்ட அதிகாரிகளிடமும் படையினரிடமும் தனக்காகப் பணிபுரியுமாறு கேட்டுக் கொண்டதாக தற்போது குற்றச்சாட்டுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. தெட்டத் தெளிவாகவே அவர் இராணுவத்தை தனது அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தி இருக்கிறார். இந்த இடத்தில் நாங்கள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் இன்னும் பலர் இவ்வாறான முயற்சிகளில் இறங்கக்கூடும். நடுநிலையான இராணுவம் என்ற பெரு மதிப்புமிக்க பாரம்பரியம் இல்லாது போய்விடும். இது எங்களையும் ஏன் இந்தியாவையும் கூடப் பாதிக்கக்கூடும்.

படையினரைப் பாவித்தல் என்ற குற்றச்சாட்டை இன்னும் குறிப்பாக விளங்க வைக்க முடியுமா?

கீழ் மட்டத்திலிருந்த படையினர் தெருவோரம் இருந்த பாதுகாப்பு நிலைகளில் வாகனங்களை நிறுத்தி ஜெனரலுக்கு வாக்களிக்குமாறு கேட்டுள்ளார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் வயதில் மிகவும் இளையவர்கள். கடந்த மூன்று வருடங்களுக்குள்ளேயே அவர்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய கொமாண்டரே தேர்தலில் நின்றதனால் அவர்கள் மிகவும் குழப்பத்திற்குள்ளானார்கள். அதேவேளை இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்ததனூடாக அவர்களிடமிருந்தும் ஆதரவைப் பெற முயன்றுள்ளார்.

இவற்றையெல்லாம் அவர் பாதுகாப்புத் தலைமை அதிகாரியாக இருந்த போதே செய்துள்ளார். அதிகாரிகளையும் படையினரையும் பயன்படுத்தி இராணுவத்துள் தனக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கின்றது என்பதனைக் கணிப்பிட்டிருக்கிறார். இதனை அவர் இராணுவத் தளபதியாக இருந்த போது ஆரம்பித்துள்ளார். இவற்றை நாங்கள் கண்டு பிடித்ததால் தான் 15 இராணுவ அதிகாரிகளைக் கட்டாய லீவில் அனுப்பியிருக்கிறோம்.

ஜனாதிபதியையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்ய இராணுவத் தளபதி மேற்கொண்ட சதி முயற்சி தவிர்ந்த வேறேதாவது முக்கியமான குற்றச்சாட்டுக்கள் உண்டா?

நல்லது, அவை சிவில் சட்டத்தின் கீழானவை. வேறான வழிமுறைகளின் கீழ் அவை பற்றிய குற்றவியல் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இராணுவத் தளபதியின் கைதும் அவருடன் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அவர் இராணுவச் சீருடையில் இருந்த போது மேற்கொள்ளப்பட்டவையே.

ஆனால், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் ஏன் அவர் தங்கியிருந்த ஹோட்டலை இராணுவத்தினரைக் கொண்டு சுற்றி வளைக்க வேண்டிய தேவை ஏன் எழுந்தது?

அந்த நிலைமையை அவரே உருவாக்கினார். அவர் தாஜ் ஹோட்டலில் 70 அறைகளை முன்பதிவு செய்திருந்தார். அதேபோல் சினமன் ஹோட்டலிலும் இன்னும் 70 அறைகளை முன்பதிவு செய்திருந்தார். எதற்காக இதெல்லாம்? நாங்கள் ஹோட்டலைச் சுற்றிப் பாதுகாப்பு படையினரை அனுப்பி வைத்தோம். ஏனெனில் தேர்தலுக்குப் பின்னான வன்முறைகளைத் தடுக்க வேண்டும் என்பதற்காக. அந்நேரம் என்னுடன் பேசிய ரணில் விக்ரமசிங்கவிற்கு நான் சொன்னேன். நாங்கள் உங்களையோ அல்லது அவரையோ கைது செய்யவில்லை. நீங்கள் தானே ஹோட்டலைப் பதிவு செய்துள்ளீர்கள் என்று.

நாங்கள் பின்னர் கண்டு பிடித்தோம். அந்த ஹோட்டலின் பாதுகாப்பு அதிகாரி – அவர் ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி – பாதுகாப்பு கமெராவின் எல்லா பதிவுகளையும் அழித்து விட்டிருந்தார். அத்தோடு தனக்கேற்ற விதத்தில் ஹோட்டல் பதிவுப் புத்தகத்திலும் மாற்றங்களைச் செய்திருந்தார்.

உலகம் குறிப்பாக மேற்கின் ஊடகங்களும் மனித உரிமை அமைப்புக்களும் அவருடைய கைதையும் அவர் மீதான குற்றச்சாட்டுக்களையும் பழிவாங்கும் நடவடிக்கையாக முக்கியப்படுத்தியிருந்தனவே...

தான் தேர்தலில் வெற்றி பெற்றால் ஜனாதிபதியையும் அவரது அமைச்சர்களையும் கூண்டுக்குள் அடைப்பேன் என்று தேர்தலில்போது அவர் விடுத்த பகிரங்க அறிவிப்பை இவ்வூடகங்கள் ஏன் முக்கியப்படுத்தவில்லை என்று நான் அறிய விரும்புகிறேன்.

அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் அவர் இராணுவத் தளபதியாக இருந்து போது மேற்கொள்ளப்பட்டவை என்கிறீர்கள். அவர் தன்னுடைய பதவியைப் பயன்படுத்தி இராணுவத்திலிருந்து அதிகாரிகள் மீது தனது செல்வாக்கைப் பிரயோகித்து தன்னுடைய மருமகனான தனுக திலகரட்ணவின் ஹைகோப் இன்ரநஷனல் என்ற நிறுவனத்தூடாக ஆயுதக் கொள்வனவை மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அவ்வாறானால் ஏன் அவரை அப்போதே கைது செய்யவில்லை?

நல்லது, இப்போது தான் விபரங்கள் வெளிவருகின்றன. சந்தேகத்திற்குரியவர்களிடமிருந்து விபரங்கள் இப்போது தான் பெறப்படுகிறது.

அவருடைய ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உடனடியான அரசியல் தீர்வு, போர்க்குற்றங்கள், இடம் பெயர்ந்தோரின் விரைவான மீள்குடியேற்றம் என்பவை குறித்து அவர் பேசியதாலேயே அவர் கைது செய்யப்பட்டார் என்று.

நான் விரும்புகிறேன். பல ஊடகவியலாளர்கள் வீட்டுப்பாடம் செய்யவேண்டும் என்று. போர் முடிந்த கையோடு அவர் இராணுவச் சீருடையில் இருந்த போது அவர் பேசிய பேச்சுக்களை ஏன் நீங்கள் இலகுவாக ஆய்ந்து பார்க்கக்கூடாது. அத்தோடு அவர் வேட்பாளரானதற்குப் பின்னாலான பேச்சுக்களையும் ஆய்ந்து பார்த்திருக்கலாம். போர் முடிந்ததும் படையினர் மத்தியிலான அவருடைய முதல் பேச்சில் இவ்வளவு படையினர் தமது உயிரைக் கொடுத்ததும், அவர்கள் இரத்தம் சிந்தியதும் அரசியல்வாதிகள் அரசியல் தீர்வை முன்வைப்பதற்காகவல்ல. நாங்கள் அதனை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று அவர் தெரிவித்திருந்தார். இது அரசியல் அமைப்புக்கு எதிராக இராணுவத்தை முன்னிலைப்படுத்தும் ஒரு நடவடிக்கை அல்லவா? ஒரு இந்திய இராணுவ அதிகாரி இவ்வாறு பேசியிருப்பாரானால் உடனடியாக அவர் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பார்.

ஆனால், பிறகு அரசியலில் அவர் நுழைந்த பிறகு,..நேரடியாக இராணுவம் அதழகாரத்தைக் கைப்பற்றுவது எனும் அவருடைய தந்திரோபாயம் மாற்றமடைந்து அரசியல் வழிமுறைகளினூடாக அவர் அதை மேற்கொள்ள முயன்றார்.

வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த புலிகளின் தலைவர்களை சுட்டுக் கொல்லுமாறு நீங்கள் உத்தரவு பிறப்பித்ததாக அவர் மேற்கொண்ட குற்றச்சாட்டுக் குறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புவீர்கள்?

முpளவும் பதிவு செய்யப்பட்டவற்றைப் படியுங்கள். ஊங்களுடைய வீட்டுப் பாடங்களைச் செய்யுங்கள். முன்னர் அவர் வேறு விடயங்களைப் பற்றிப் பேசினார். போர் முடிவடைந்தவுடன் அவர் தான் படித்த பாடசாலையில் உரையாற்றும் போது அரசியல் தலைமை விடுதலைப் புலிகளைப் பாதுகாக்க முனைந்தது.அவர்களைச் சரணடையச் சொல்லவே அவர்கள் விரும்பினார்கள். ஆனால் அது ஒரு போர்ச்சூழல். ஆவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்று சொன்னார். ஆனால் இப்போது அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார். இப்போது அரசியல் தீர்;வு பற்றிப் பேசுகிறார். வெள்ளைக் கொடியுடன் வந்தவர்களைச் சுட நான் உத்தரவிட்டதாகச் சொல்கிறார்.

உண்மையில் என்ன நடந்தது?

இது தான் நடந்தது மே18, 2009 அந்நாளில் பிரபாகரன் கொல்லப்பட்டார். 400 ஓ 400 மீற்றர் பரப்புக்குள் புலிகளின் தலைவர்கள் அகப்பட்டுக் கொண்டார்கள். ஏறத்தாழ 200 பேர் வரை இருக்கும். இராணுவத்தினர் அவர்களைச் சுற்றி வளைத்திருந்தனர். அது பின்னிரவு நேரம். நுள்ளிரவைத் தாண்டியிருந்தது. இந்தச் சூழலை மனதில் உருவாக்கிக் கொள்ளுங்கள். அந்தக் காரிருளில் அந்த அடர்ந்த காட்டின் மத்தியில் வெள்ளைக் கொடியுடன் வருபவர்களை காண உங்களால் முடியுமா? சுpல பயங்கரவாத உறுப்பினர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். புpரபாகரன் அந்த முற்றுகையை உடைத்துக் கொண்டு வாவிப்பக்கமாக தப்பிச் செல்ல முயன்றார். அவருடைய மகன் இன்னொரு திசையில் சென்றான். ஆதேவேளை பத்தாயிரம் சரணடைந்த உறுப்பினர்கள் இன்னொரு பக்கமாக வந்து கொண்டிருந்தார்கள். இவ்வாறான ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் அண்மையில் படையில் இணைத்துக் கொள்ளப்பட்ட ஒரு படையினர் விடுதலைப் புலிகளின் சிலேஷ்ட உறுப்பினர்களை இனம் கண்டு சுட்டுக் கொல்லவோ அல்லதுதெரிவு செய்து தப்பித்து விடவோ முடியுமா?

போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டு இன்னமும் நீடிக்கிறதே. அதனை ஒரு விடயமாக நீங்கள் கொள்கிறீர்களா?

ஆம் போர்க்குற்றம் என்றால் என்னவென்று நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். படுகொலை செய்வதற்காகவே போரைத தொடுப்பது, கடத்தல், பணயம் போன்றவற்றை இராணுவ நடவடிக்கைகளின் போது மேற்கொள்வது குற்றமாகும். இச்சம்பவங்களில் ஈடுபட்ட படையினரைக் கைது செய்து நாங்கள் தண்டனை வழங்கியிருக்கிறோம். சில அதிகாரிகளைச் சிறையிலடைத்திருக்கிறோம். ஆனால் சில சந்தர்ப்பங்களில் எங்களுடைய கட்டுப்பாட்டில் இல்லாமல் நிலைமைகள் இருந்திருக்கின்றன. உதாரணமாக வைத்தியசாலைகள் என்று அடையாளமிடப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நாங்கள் குண்ட வீச்சு நடாத்தினால் அது தவறானது. ஆனால் நாங்கள் அப்படிச் செய்யவில்லை. ஆனால் போரின் கடைசி நிலவரத்தைப் பாருங்கள். புலிகள் ஒரு சதுர கிலோ மீற்றருக்குள் அகப்பட்டுக் கொண்டார்கள். இத்தகைய ஒரு சூழலில் குண்டு தற்செயலாக வைத்தியசாலையைத் தாக்குவதைத் தவிர்க்க முடியாது. ஆதற்கும் மேலாக இத்தகைய ஒரு சூழலில் நோயாளர்கள் சிவிலியன்கள் என்று பார்ப்பது சாத்தியமில்லை. இவ்வாறான மிக கிட்டிய தூரத்தில் நடைபெறும் ஒரு யுத்தத்தின் நிலைமையை முதலில் ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும்.

பல மேற்குலக நாடுகள் இன்னமும் போர்க்குற்ற விசாரணை பற்றிப் பேசுகின்றனவே? இத்தகைய நாடுகள் இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முனைகின்றன. ஏன் அவை ஒரு இராணுவதளபதிக்கு ஆதரவளிக்கின்றன?

இதற்கு மூன்று காரணங்கள் இருக்கலாம். முதலாவது, பலமிக்கதும் பணவசதி படைத்ததுமான ஒரு புலம்பெயர்ந்த மக்கள் கூட்டம் இந்த நாடுகளில் செல்வாக்குச் செலுத்தும் நிலையில் உள்ளன. துஙடகளது வாக்கு வங்கியையும் ஊடகங்களையும் இதற்குப் பாவிக்கின்றன. இரண்டாவது, சில தந்திரோபாயக் கொள்கைகளில் இலங்கை கயிறு கட்டி இழுக்கவில்லை. மூன்றாவது, மனித உரிமை அமைப்புக்கள் போர்க்குற்ற விசாரணையை அழுத்துவதற்குக் காரணம் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியை நம்புகிறார்கள். ஐக்கிய தேசியக்கட்சி ஜெனரலுக்கு ஆதரவளிப்பது அவர்களுக்கு இணக்கமாக இருக்கிறது.

இடம் பெயர்ந்த மக்களை நடாத்துவது அவர்களை மீளக் குடியமர்த்துவது என்பது தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கைகள் மீது ஜெனரலின் விமர்சனம் தொடர்பாக உங்களுடைய அபிப்பிராயம் என்ன?

யதார்த்தம் இது தான். ஜெனரல் சீருடையில் இருந்த போது இடம் பெயர்ந்த மக்களை உடனடியாக மீளக் குடியமர்த்துவது தொடர்பில் எமது பாதுகாப்புக் கவுன்ஸிலில் எதிர்த்த ஒரேயொரு நபர் அவர் தான். ஆவர் அது பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாக இருக்குமென்று வாதித்தார். அந்த ஒரேயொரு காரணத்தால் தான் இடம் பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் தாமதமானது. பின்னர் அவர் எதிர்க்கட்சிகளுடன் இணக்கப்பாட்டிற்கு வந்த பின்னர் தேர்தலின் போது அரசாங்கத்தைக் குற்றம்சாட்ட இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினையைப் பாவித்துக் கொண்டார்.

இறுதியாக என்ன நடந்தது?

புதிதாக விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள் குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பிரதேசங்களில் இடம் பெயர்ந்த மக்களுக்கு பாதுகாப்பானவை. அவர்கள் அங்கு மீள் குடியேற்றத்துக்காக அங்கு அனுப்பி வைக்கப்பட வேண்டுமென்பது எனது அபிப்பிராயமாக இருந்தது. ஆனால் பொன்சேகா அதனை திட்டவட்டமாகவே மறுத்தார். ஆனால் நான் அவர்களை அங்கு அனுப்பி தற்காலிக முகாம்களிலாவது வைத்திருக்குமாறு சொன்னேன். நாங்கள் ஆயிரக்கணக்கானவர்களை விடுவித்தோம். ஆனால் பொன்சேகா அவர்களை மறுபடியும் முதலில் தடுத்து வைத்திருந்த முகாமிற்கு கொண்டுவருமாறு உத்தரவிட்டார். ஐநாவும் ஏனைய அமைப்புக்களும் இது தொடர்பில் எங்களுக்குப் பாரிய அழுத்தத்தைத் தந்தன. ஆனால், ஜெனரல் பாதுகாப்பைக் காரணம் காட்டி அதனை மறுத்து விட்டார்.

இறுதியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலையிட்டு, எந்தப் பாதுகாப்பைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார்;. மூன்று இலட்சம் மக்கள் முகாம்களுக்குள் இருக்கிறார்கள். ஆனால், இருபதாயிரம் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் முகாம்களிலிருந்து தப்பிச் சென்றிருக்கிறார்கள். ஆக, பாதுகாப்பு எங்கே இருக்கிறது? அவர்கள் உடனடியாக மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என்றார்.

தெஹல்கா

20 ஆயிரம் விடுதலைப் புலிகள் தடுப்பு முகாம்களிலிருந்து தப்பிச் செல்லும் போது சரத் பொன்சேக்கா அந்த முகாம்களின் பாதுகாப்பு குறித்து வாதிட்டதாக பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ இந்தியாவின் தெஹல்கா வாராந்த சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்களை விரைவாக விடுவிக்கும் தேவை அரசாங்கத்திற்கு இருந்தது. எனினும், சரத் பொன்சேக்கா அதனை நிராகரித்தார். முகாமிலிருந்த ஆயிரக் கணக்கானவர்கள் விடுவிக்கப்பட்ட போதிலும் அவர்களை மீண்டும் முகாமிற்கு இழுத்துவருமாறு சரத் பொன்சேக்கா உத்தரவிட்டார்.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய நாடுகள் இடம்பெயர்ந்தவர்களை விடுவிக்குமாறு எமக்கு அழுத்தம் கொடுத்த போதிலும் சரத் பொன்சேக்கா பாதுகாப்பு குறித்து வாதிட்டார். இறுதியில் ஜனாதிபதி அதில் தலையிட நேர்ந்தது.

மூன்று லட்சம் பேர் முகாம்களில் இருந்தனர். 20 ஆயிரம் விடுதலைப் புலிகள் தப்பிச் சென்றுள்ளனர். எங்கே பாதுகாப்பு இருக்கின்றது என ஜனாதிபதி பொன்சேக்காவிடம் கேட்டார் எனவும் கோதாபய குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தற்போது ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்தை மாற்றும் தேவை மேற்குலக நாடுகளுக்கு இருக்கிறது. போர் குற்றம் குறித்து விசாரிக்க வேண்டும் என இந்த நாடுகளே கூறிவருகின்றன. ஜெனரல் சரத் பொன்சேக்கா 70 அறைகளை ஒதுக்கியிருந்த விடுதியின் பாதுகாப்பு அதிகாரி முன்னாள் இராணுவ அதிகாரியாவார். அவர் பதிவுசெய்யப்பட்ட சகல வீடியோ காட்சிகளையும் அழித்துள்ளதுடன் வரவு குறிப்பேட்டிலும் மாற்றங்களை செய்திருப்பதாக தெரியவந்துள்ளதெனவும் கோதாபய ராஜபக்ஷ தனது செவ்வியில் கூறியுள்ளார்.

www.globaltamilnews.net/

ஆகா என்னே அற்புதம்.

முகாமிலிருந்த ஆயிரக் கணக்கானவர்கள் விடுவிக்கப்பட்ட போதிலும் அவர்களை மீண்டும் முகாமிற்கு இழுத்துவருமாறு சரத் பொன்சேக்கா உத்தரவிட்டார்.

www.globaltamilnews.net/

கிழக்கில் உது நடந்ததாக முன்னரே நான் அறிந்திருந்தேன்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.