Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழினம் இலங்கையில் இருந்த தடமே இல்லாது போகும் அபாயம் இருக்கிறது. அதனால் ஒன்றிணைந்து போராடுவதும், குரல் கொடுப்பதும் அவசியம்...!!!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழினம் இலங்கையில் இருந்த தடமே இல்லாது போகும் அபாயம் இருக்கிறது. அதனால் ஒன்றிணைந்து போராடுவதும், குரல் கொடுப்பதும் அவசியம்...!!!

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஸ்ரீலங்கா அரசின் செயல் திட்டங்களுக்கமைய சிங்கள மக்களால் துரிதகதியில் நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகிறது. போர்ச்சூழல் காரணமாக தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நிலங்களே அதிகமாக இவ்வாறு அபகரிக்கப்பட்டு வருகின்றன.

வறுமையில் வாடும் தமிழ் மக்களின் வறுமையை சாதகமாக பயன்படுத்தி அவர்களுக்கு அதிகளவு பணங்களை கொடுத்து அவர்களின் நிலங்களை பெரும்பாலான சிங்களவர்கள் வாங்கிவருகின்றனர்.

இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த சில வருடங்களில் வடபகுதி எங்கும் அதிகளவான சிங்களவர்கள் குடியேறிவிடுவர். அதன் பின் அவர்களுக்காக சிங்கள பாடசாலைகளும், பெளத்த விகாரைகளும் எங்கும் முளைக்கும். அதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாதுபோகும்.

அத்தோடு அடுத்த ஐந்து ஆண்டுகளில் நடைபெறும் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் சிங்களவர்களும் போட்டியிட்டு தேர்வாகும் வாய்ப்புக்கள் அதிகரிக்கவே இது போன்ற நடவடிக்கைகள் வழிகோலும் என்பதில் ஐயமில்லை.

எனவே இலங்கை வாழ் தமிழர்கள் என்ன நிலை ஏற்படினும் தமது நிலங்களையோ, சொத்துக்களையோ ஒரு சிங்களவருக்கு கூட விற்கக்கூடாது. முடிந்தவரையில் தாமே அதை பாதுகாத்துக் கொள்ள வேண்டு. அதையும் மீறிய தேவைகள், கஷ்டங்கள் ஏற்படுமிடத்து நிலங்களை விற்பதாயின் அதனை தமிழர்களுக்கு மட்டுமே விற்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மட்டுமே தமிழர்கள் தமது பூர்வீக தாயக நிலங்களை பாதுகாப்பாக தமிழர் நிலங்களாகவே பாதுகாக்க முடியும்.

அத்தோடு புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழீழ தமிழர்கள் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி இனிவருங் காலங்களிலாவது தமிழர் நிலங்கள் பாதுகாக்கப்படவேண்டியதன் அவசியத்தை புரிந்து கொண்டு தமது முதலீடுகளை வடக்கு கிழக்கு பகுதிகளில் கூடியளவு செலவிடவேண்டும் என்பதும் இன்றைய காலத்தின் கட்டாய தேவையாக உள்ளது.

இதுவரை காலமும் தமிழர் தாயகப்பகுதிகளில் கணிசமான அத்துமீறிய சிங்களக் குடியேற்றத்தையும், நில அபகரிப்புக்களையும் செய்து வந்த சிங்கள பேரினவாத அரசு தற்போது மிகவும் புத்திசாலித்தனமாக தமிழர் தாயகப்பகுதிகளில் உள்ள நிலங்களை தமிழர்களின் விருப்புடனேயே அவர்களின் வீடுகளையும், காணிகளையும் பணத்தைக்கொடுத்து வாங்கும் தந்திரத்தை அரங்கேற்றி வருகிறது.

இந்த சதிவலைக்குள் சிக்கி தமிழர் தாயக நிலப்பரப்புக்களை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தமிழரதும் இன்றைய வரலாற்றுக் கடமையாக உள்ளது.

இந்த மண்ணையும், மக்களையும் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து காப்பாற்றி சுதந்திர தமிழீழத்தை உருவாக்கி அதில் அனைத்து தமிழ் பேசும் மக்களும் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழ வேண்டும் என்பதற்காகவே 33,000 ற்கும் மேற்பட்ட மாவீரர்களும் போராடி தமது விலைமதிப்பற்ற இன்னுயிர்களை தமிழீழ விடுதலைக்காக உரமாக்கி விதைகுழிகளில் விதைக்கப்பட்டுள்ளனர் என்பதை ஒவ்வொரு வினாடியும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக ஆயுதப்போராட்டம் நடாத்திய போதும் சரி, பேச்சுவார்த்தைகள் என்று பல நாடுகளுடன் ஈடுபட்டிருந்த போதிலும் சரி தமிழரின் உரிமையையோ, தமிழீழக்கோட்பாட்டையோ விட்டுக்கொடுக்காது தமது பிரதிநிதித்துவத்தை சரிவர செயற்படுத்தி வந்தனர்.

இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் துணையோடு இலங்கை அரச இயந்திரம் மிக மூர்க்கமான தாக்குதல்களையும், சர்வதேசங்களினால் தடைசெய்யப்பட்ட போர் ஆயுதங்களையும் பயன்படுத்தி தமிழர் நிலங்களையும், தமிழ் மக்களையும் அழித்து தமிழினம் என்றும் கண்டிராத மிகப்பெரும் இனப்படுகொலையை சந்தித்த போது சர்வதேச நெருக்கடிகளை கருத்திற்கொண்டும், சர்வதேசம் தமிழர் பிரச்சனையில் அணுகமுனையும் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டும் தமிழர்களின் ஏகபிரதிநிதிகளாக இருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை மெளனித்தனர். இது அனைவரும் அறிந்த உண்மையே!

ஆனால் ஆயுதங்களை மெளனித்ததின் பின்னர் எத்தனை போராளிகள் மிகக்கொடூரமாக கொன்றழிக்கப்பட்டனர். தமது மண்ணினதும், தம் மக்களினதும் மானம் பெரிதென போராடியவர்கள் உடல்கள் கிழிக்கப்பட்டும், நிர்வாணப்படுத்தியும், பல துண்டுகளாக்கப்பட்டும் மனிதநேயமற்ற முறையில் சிங்கள இராணுவத்தினரால் படுகொலை செய்யப்படுவதை ஊடகங்கள் வாயிலாக பார்த்தும், கேட்டும் அதன் பின்னரும் உணர்வுள்ள தமிழராய் ஒன்றிணையாது தமிழர்களிடையே பிளவுகளை அதிகரித்துக்கொண்டே இருப்போமானால் தமிழினம் இலங்கையில் இருந்த தடமே இல்லாது போகும் அபாயம் இருக்கிறது. அதனால் ஒன்றிணைந்து போராடுவதும், குரல் கொடுப்பதும் அவசியம்.

இதை விடுத்து இன்னொருவரை தாக்குவதிலும், நான் பெரிதா? நீ பெரிதா? என முட்டி மோதிக்கொள்வதிலும் எந்த பலனும் இல்லை. தமிழ்த் தேசியத்தையும், தமிழர் நலன்களையும் விட்டு விலகி சலுகைகளுக்காக அரசியல் செய்வோரை அடையாளம் கண்டுகொண்டு அவர்களை மக்கள் புறம்தள்ளி அவர்களின் கருத்தை நிராகரிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தமிழர்கள் தமது பலத்தைக் கட்டிக்காப்பதோடு உட்பூசல்களை தவிர்த்து உறுதியான தமிழர் பிரதிநிதிகளின் வழியில் தமிழீழத்தை அடையமுடியும்.

அனைவரும் ஒன்றிணைந்து தமிழர் தாயக நிலப்பரப்புகளையும், தமிழீழ விடுதலைப் போராட்ட போராளிகளையும், அனாதைகளாக, அடிமைகளாக அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களையும் காப்பதே இன்று ஒட்டுமொத்த தமிழர்கள் (தமிழ் அமைப்புக்கள்) முன்னும் உள்ள மிக முக்கிய செயற்திட்டங்களாக உள்ளது என்பதை புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.

இந்த செயற்திட்டங்களை முன்னுரிமை கொடுத்து செயற்படுத்த அனைத்து தமிழ் அமைப்புக்கள், தமிழர் பிரதிநிதிகள் என அனைவருக்கும் புலம் பெயர்ந்து வாழும் ஒவ்வொரு தமிழரும் எடுத்துரைத்து அவர்களை செயற்பட வைப்பதும் மக்களின் தவிர்க்கமுடியாத வரலாற்றுக்கடமை என்பதையே இன்றைய காலம் உணர்த்தி நிற்கிறது.

http://www.tamilnews.cc/index.php?option=com_content&view=article&id=9166:2010-02-16-10-31-25&catid=37:singala-news&Itemid=72

முத்தமிழ் வேந்தன்

சென்னை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராடி அழிவை துரிதப்படுத்தினதுதான் மிச்சம். வெளிநாடு வந்த எவரும் போகப்போவதுமில்ல போராடி செத்தவர்கள் மீளப்போவதுமில்ல இறுதிநேரத்தில் குடுத்த குரலுக்கே பாராமுகமாக இருந்தவர்களுக்கு மீண்டும் குரல் குடுத்து எதுவும் ஆகப்போவதுமில்ல.

சம்பந்தர் பாராளுமன்றம் போய் என்னத்தைக் கிழிக்கப் போகின்றார்?தொடர்ந்து பல ஆண்டுகளாக சம்பந்தன் திருமலை எம்பியாக இருந்து வருகின்றார்.இதுவரை எதையும் சாதித்ததாகத் தெரியவில்லை.சென்ற முறை 2 எம்பிக்களை திருகோணமலையில் இருந்து புலிகள் ஆனுப்பினார்கள்.இந்த முறை ஒரு ஆசனமும் கிடைக்காமல் போனால் அதற்குக் காரணம் சம்பந்தரே ஆவார்.எந்த முன் யோசனையும் இன்றி இந்தியாவின் தாளத்திற்கு ஆடுபவர்கள் பாராளுமன்றத்திற்குப் போனால் என்ன போகாவிட்டால் என்ன தமிழரின் வாழ்வில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை.தமிழ் தேசியத்தை ஆதரிப்பவர்களை ஆதரிப்பதன் மூலம் தமிழர் தங்கள் அபிலாசையை மீண்டும் ஒரு முறை வெளிக்காட்டலாம்.மாறாக சம்பந்தர் கோஷ்டியை ஆதரித்தால் சிங்களவர்களுக்கு அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்ததற்குச் சமனாகும்.

விரும்பினால் சிங்கள மயமாக்கலை தாமதிக்கலாம் ஆனால் தடுக்க முடியாது.

வெளிநாட்டுக்குப் போனவங்கள் மாத்திரம் என்ன எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றா இருக்கிறார்கள்?

இன்னும் எத்தனை காலத்துக்குக் தமிழ்? உலகில் வேகமாக அழிந்துவரும் மொழி மற்றும் கலாச்சாரங்களில் தமிழும் ஒன்றாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களை இலங்கைத்தீவிலிருந்து அழிப்பதன்முன் நகர்வாக முள்ளிவாய்க்காலில் தமிழர்களின்போராட்ட அமைப்பை அழித்த இந்தியாவுக்கு சாமரம்வீசும் சம்பந்தர் வென்றுவந்து எப்படி தமிழினஅழிப்பை நிறுத்துவார்.

பாராளுமன்றத்தில் 25 தமிழ்உறுப்பினர்கள் என்னதான் கோசம்போட்டு குளறினாலும் எதுவும் ஆகாது.

இதில் ஒன்றாநின்றாலும் பிரிந்துநின்றாலும் சிங்களவன்தானாக மனம்உவந்து ஏதாச்சும் தந்தால்தான் உண்டு.

கொல்லப்பட்ட பா.உறுப்பினர்களின் கொலைகளைப்பற்றியே வாய்திறக்காத உலகசமுகம் இனித்தான் இவர்கள் ஒன்றாகப்போய்த்தான் வாய்திறக்குமாக்கும்.

இலங்கையில் தமிழினமே அழிக்கப்பட்டாலும் சம்பந்தரும்,மாவையும் இருப்பினம்.அவர்களின் இருப்பு அப்பிடி.... :rolleyes:

போராடி அழிவை துரிதப்படுத்தினதுதான் மிச்சம். வெளிநாடு வந்த எவரும் போகப்போவதுமில்ல போராடி செத்தவர்கள் மீளப்போவதுமில்ல இறுதிநேரத்தில் குடுத்த குரலுக்கே பாராமுகமாக இருந்தவர்களுக்கு மீண்டும் குரல் குடுத்து எதுவும் ஆகப்போவதுமில்ல.

போராடுறவர் வெற்றி பெற சந்தர்ப்பம் உண்டு ஆனால் போராடதவன் தோல்வியை மட்டும் தான் பெற்றுக்கொள்கிறான்...

நீங்கள் அழியத்தான் போறியள் எண்டால் அது எப்ப அழிஞ்சால் தான் என்ன...???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தை ஒரு புறம் வைத்துவிட்டு இந்தியாவிற்கெதிரான சதியை தனியாகவோ, அல்லத கூட்டாகவோ ஆரம்பியுங்கள். ஈழத்திற்கெதிரான சர்வதேசம் உங்கள் கைகளுக்கு வலுச்சேர்ப்பதை நீங்கள் கடுகதியில் பெற்றுக்கொள்வீர்கள். ஏனெனில் வல்லரசுகள் நேரடியாக ஒன்றை ஒன்று மோதாது. முதலில் சிறு இனங்களின் பிரச்சனைகளைக் கிண்டிவிட்டு அதன் மூலம் தான் உள்செல்லும். உதாரணமாக ரஷ்சியாவும், அமெரிக்காவும் மோதவில்லை ஆனால் மோதிக்கொண்டன. ரஷ்சியாவைப்பிரித்தும்விட்டனர். தமிழர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டால் முடியாதது இல்லை. ஈழவிடியலுக்குமுன் முடிக்கவேண்டிய காரியங்கள் எமது பாதையில் நிறையவே உள்ளது. பாதையில் உள்ள முட்களை அகற்றவேண்டியதும் எமது பொறுப்பே. இந்தியாவிற்கு எதிரான சக்திகள் உலகில் எவ்வளவோ இருக்கின்றது. அந்தவலுவை எங்களுடன் இணைத்துக்கொள்வதும் செயற்படுவதும் தான் எங்கள் கைகளின் இன்றையபலம். காலங்கள் ஆகலாம். திட்டமிடல் மிகவும் முக்கியம். சிங்களவனைவிட இந்தியாவே எங்கள் எதிரி (இந்தியத்தமிழர்கள் அல்ல) ஒவவொருவர் மனதிலும் இருக்கவேண்டியது. இன்றைய உலகில் வெல்லவேண்டுமென்றால் அரசியல் சூழ்ச்சிகளில் நாமும் குதிக்கவேண்டும். தமிழருக்கு எதிரான போரில் இந்தியாவும், பாகிஸ்த்தானும் சீனாவும் ஒரு கட்சியில் இருக்கவில்லையா? காரியம் ஆகணும் என்றால் எதிரியுடன் சேர்ந்து அவனைப்பாவிப்பதிலும் குற்றமில்லை. இன்றைய முள்ளிவாய்க்கால் கொலைகளுக்கு முழுப்பொறுப்பு இந்தியாதான் என்பது பலருக்கு விளங்காத புதிர்

தமிழர்கள் தங்கள் பொருளாதார பலத்தைக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராடுறவர் வெற்றி பெற சந்தர்ப்பம் உண்டு ஆனால் போராடதவன் தோல்வியை மட்டும் தான் பெற்றுக்கொள்கிறான்...

நீங்கள் அழியத்தான் போறியள் எண்டால் அது எப்ப அழிஞ்சால் தான் என்ன...???

ஓமண்ணை ....இப்பிடி சொல்லித்தான் 3 1/2 லச்சத்த கூட்டிக்கொண்டு போனது லச்சக்கணக்கில வீதிக்கும் இறக்கினது. இருக்கிற செய்திகூட குறைஞ்சுபோச்சு , வணக்க நிகழ்வையும் கானேல்ல , எப்பிடி இருந்த நாங்கள் இப்பிடியா போனம். :rolleyes:

ஓமண்ணை ....இப்பிடி சொல்லித்தான் 3 1/2 லச்சத்த கூட்டிக்கொண்டு போனது லச்சக்கணக்கில வீதிக்கும் இறக்கினது. இருக்கிற செய்திகூட குறைஞ்சுபோச்சு , வணக்க நிகழ்வையும் கானேல்ல , எப்பிடி இருந்த நாங்கள் இப்பிடியா போனம். :rolleyes:

இப்ப எங்களுக்கு கூட்டமைப்பு உடைஞ்சு போச்சுதே எண்டு கவலைப்படவே நேரம் போத இல்லை இதுக்க வணக்க நிகழ்வோ ? நாங்கள் எப்பவும் ஏறின ஏணியை திரும்பி பாத்து கீழை விழ விரும்புறதில்லை கண்டியளோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப எங்களுக்கு கூட்டமைப்பு உடைஞ்சு போச்சுதே எண்டு கவலைப்படவே நேரம் போத இல்லை இதுக்க வணக்க நிகழ்வோ ? நாங்கள் எப்பவும் ஏறின ஏணியை திரும்பி பாத்து கீழை விழ விரும்புறதில்லை கண்டியளோ.

கெட்டியா புடிச்சிருங்கோ விழுந்தா அவிட்தான்.......உடையார்கட்டிலிருந்த சறுக்கி வந்து முள்ளிவாய்க்காலிலதான் விழுந்தனான் , காயத்தோட தப்பிட்டின். இனி கனவிலயும் ஏறமாட்டன். :rolleyes:

கெட்டியா புடிச்சிருங்கோ விழுந்தா அவிட்தான்.......உடையார்கட்டிலிருந்த சறுக்கி வந்து முள்ளிவாய்க்காலிலதான் விழுந்தனான் , காயத்தோட தப்பிட்டின். இனி கனவிலயும் ஏறமாட்டன். :D

நீங்கள் ஏன் அண்ணை திரும்பி பாக்கிறீயள்.? எப்பவும் உங்களுக்கு கிடைக்கும் எலும்பு கிடைக்காமலே போகப்போகுது.?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.