Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், இறைமை ஆகியவறின் அடிப்படையிலான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.

Featured Replies

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், இறைமை ஆகியவறின் அடிப்படையிலான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.

2004 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளை ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டு மேற்படி கொள்கைகளுக்காக உழைப்போம் என்ற உறுதிப்பாட்டுடன் த.தே.கூ இனால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தினை ஏற்றுக் கொண்டு தமிழ் மக்கள் வழங்கிய வாக்குகளின் மூலம் ‘22’ பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

கூட்டமைப்பின் அரசியல் வேலைத்திட்டங்களை இலகுபடுத்தும் நோக்கில் கிளிநொச்சியில் இடம் பெற்ற கலந்துரையாடல்கள் மூலம் வேலைத்திட்டங்களின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுக்களுக்குமான பொறுப்புக்கள் ஒதுக்கப்பட்டது. அதில் ஒரு குழு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெளிவிவகாரக்குழு.

அக்குழுவின் தலைவராக ஆரம்பத்தில் மறைந்த மாமனிதர் ஜோசப்பரராசசிங்கம் அவர்களும் உப தலைவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் நியமிக்கப்பட்டனர். அதன் அங்கத்தவர்களாக செல்வராசா கஜேந்திரன் ஆகிய நானும் திருமதி. பத்மினி சிதம்பரநாதன்இ செல்வம் அடைக்கலநாதன்இ ஜெயானந்தமூர்த்தி ஆகியோர் அங்கம் வகித்தோம். பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்ட நாளில் இருந்து தமிழ் தேசியக் கொள்கைகளுக்கான சர்வதேச அங்கீகாரம் பெறும் நோக்கில் வெளிநாட்டுத் தூதரக மட்டங்களிலும் வெளிநாட்டிலுள்ள அரசுகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்தி அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் செயற்பட்டு யுத்தத்தை நிறுத்தவும்இ தாயத்ததிலுள்;ள மக்களுடனும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுடனும் இணைந்து அரசியல் வேலைத் திட்டங்களை முன்னெடுத்தோம்.

2006ஆம் ஆண்டு யுத்த சூழல் உருவான போது விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று கூறி வன்னிப்பகுதிக்கு சர்வதேச இராஜதந்திரிகள்இ வெளிநாட்டுத் தூதுவர்கள்இ ஊடகவியலாளர்கள்இ வெளிநாட்டுப் பிரஜைகள் என எவரும் செல்லக்கூடாதென அரசு தடைவிதித்தது. அவ்வாறான சூழ்நிலையில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளாகிய நாமும் வன்னிக்கு செல்லாதிருந்தால் இலங்கை அரசு கூறுவது போல புலிகளை பயங்கரவாதிகள் என நாமும் ஏற்றுக்கொள்வதாக உலகம் கருதும் ஆபத்து ஏற்படக்கூடாது என்பதற்காக நானும் இன்னும் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் வன்னிக்குச் சென்று அங்கு 2006 – 2008 இறுதி வரை தங்கியிருந்தோம். அங்கிருந்து சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்ததுடன் அவ்வப்போது புலம்பெயர் தமிழ் மக்கள் வாழும் நாடுகளுக்கும் சென்று அங்கு வாழும் புலம்பெயர் மக்கள் மத்தியிலும்இ அரசுகள் மட்டத்திலும் அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டு திரும்பினோம்.

2006 ல் கிழக்கு மாகாணத்தைக் கைப்பற்ற அரசு யுத்தத்தைத் தீவிரப்படுத்திய போது அதற்கெதிராகவும் அங்கு இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்கு எதிராகவும் உறுதியாகக் குரல் கொடுத்தோம். பாராளுமன்றின் உள்ளேயும் வெளியேயும் ஐனநாயக ரீதியாக மேற்கொண்ட போராட்டங்கள் மூலம் தமிழ் மக்கள் மீது இடம்பெற்று வந்த இனப் படுகொலையை தடுக்க சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில் செயற்பட்டோம். அதன் விளைவாக சக நாடளுமன்ற உறுப்பினர்களான மாமனிதர் நடராஜா ரவிராஜ் மற்றும் மாமனிதர் Nஐhசப்பரராஐசிங்கம் அவர்களையும் நாம் இழந்தோம்

கிழக்கு மாகாணத்தை இராணுவம் ஆக்கிரமித்ததை தொடர்ந்து வன்னிப் பெருநிலப்பரப்பு மீது இலங்கையரசு யுத்தத்தை ஆரம்பித்ததில் இருந்து தொடர்ச்சியாக யுத்தம் நிறுத்த்பபடல் வேண்டும் எனக் குரல் கொடுத்து வந்தோம். யுத்தத்தை நிறுத்தி இராணுவம் பழைய நிலைகளுக்குத் திரும்ப வேண்டும் என வலியுறுத்தியதுடன் எமது உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டு;ம் எனவும் உறுதியாகச் சர்வதேச சமூகத்தை வற்புறுத்தினோம். யுத்தம் உச்சக் கட்டத்தை அடைந்து கொண்டிருந்த நிலையிலும் நாம் வன்னியில் தொடர்ந்து யுத்த அவலத்தில் வாழ்ந்த மக்களோடு மக்களாக தங்கியிருந்தோம். இதனை பொறுக்க முடியாத மகிந்த அரசு கிளைமோர் தாக்குதல் மூலம் வன்னிப் பகுதிக்குள் வைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் சிவநேசன் அவர்களை படுகொலை செய்தது.

2008ஆம் ஆண்டு இறுதிவரை வன்னியில் தங்கியிருந்து அந்த மக்களோடு மக்களாக நின்று உரிமைப் போராட்டத்தின் அங்கீகாரத்திற்காகவும் யுத்தம் நிறுத்தப்பட்டு இராணுவம் பழைய நிலைகளுக்குத் திரும்ப வேண்டும் பேச்சுக்கள் மூலம் பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டுமெனவும் குரல் கொடுத்தோம்.

இந் நிலையில் வன்னியில் யுத்தம் தீவிரமாகிப் பொது மக்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்ட போது அதனைத் தடுத்து நிறுத்ததுவதற்காக புலம் பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மக்களுடன் இணைந்து சர்வதேச சமூகத்திற்கு அழுத்தம் கொடுக்கும் போராட்டங்களை மேற்கொள்வதற்காக 2008 இறுதியில் புலம்பெயர் தேசத்திற்குச் சென்றோம்.

இவையெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கூட்டமைப்பின் மூத்த தலைவர்கள் வேறுபட்ட நிலைப்பாட்டைச் சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்திக் கொண்டிருந்னர். தமிழீழ விடுதலைப் புலிகளால் நிராகரிக்கப்பட்ட ஒஸ்லோ அடிப்படையில் தீர்வுகளை ஏற்றுக் கொள்ளத் தாம் தயார் என்ற நிலைப்பாட்டை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தி வந்தனர். மக்களால் தெரிவு செய்யப்பட்ட 22 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டமைப்புத் தலைமைகள் கொள்கைகளைக் கைவிட்டு தீர்வுகளை ஏற்றுக் கொள்ளத் தயார் என்ற நிலைப்பாட்டை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தி வந்த நிலையில் சில கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டுத் தூதரகங்களுடனும் சர்வதேச இராஜதந்திரிகள் மற்றும் வெளிநாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களச் சந்தித்து கொள்கை நிலைப்பாட்டை ஆணித்தரமாக வலியுறுத்த முற்படும் போது நாம் விடுதலைப் புலிகளைக் காப்பாற்றுவதற்காகவே இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பதாக அவர்களால் கருதப்பட்டதுடன் தமிழ் மக்களது நிலைப்பாடுஇ வேறுபட்டது என்றும் அவர்களால் கூறப்பட்டது.

தாயகம்இ தேசியம்இ சுயநிர்ணய உரிமைஇ தேசம்இ இறைமை என்ற நிலைப்பாடுகள் தமிழ் மக்களது கோரிக்கைகள் இல்லை என்றும் அது புலிகளதே என்ற கருத்து நிலை கூட்மைப்புத் தலைமைகளால் சர்வதேச மட்டத்தில் ஏற்படுத்தப்பட்டது.

மேற்படி கோரிக்கைகள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் இல்லை என்ற கருத்து நிலை கூட்;மைப்பின் மூத்த தலைவர்களால் ஏற்படுத்தப்பட்ட நிலையில் அக்கோரிக்கைகளின் அங்கீகாரத்திற்காக போராடிய விடுதலைப் புலிகளை அழித்தால் அக்கோரிக்கைகள் மீண்டும் எழாது என்ற கருத்து போராட்டத்தை அழிக்க விரும்பிய சக்திகளுக் வசதியாகிவிட்டது.

2004 ம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக கூட்டமைப்பின் தலைமைகள் செயற்பட்டமையின் விளைவு முள்ளிவாய்க்காலில் 50இ000கும் அதிகமான மக்கள் அழிக்கப்படவும் பலகோடி பெறுமதியான சொத்துடமைகளை அழிக்கப்படவும்இ மக்களின் வாழ்வும் வளமும் அழிக்கப்பட்டு சொந்த மண்ணில் இருந்து அவர்கள் துடைத்தெறியப்படவும் தூண்டுதலாக அமைந்தது.

விடுதலைப் புலிகள் பலமாக இருக்கும் வரை பொது மக்களுக்குத் தெரியாத வகையில் தவறான பாதையில் பயணித்த கூட்டமைப்புத் தலைமைகள் இப்போது வெளிப்படையாகவும் ஏதேச்சதிகாரமாகவும் கொள்கைகளுக்கு மாறாக செயற்படத் தொடங்கி விட்டன. கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாமல் இரகசியமாக அடிப்படைக் கொள்கைகளான தாயகம்இ தேசியம்இ சுயநிர்ணய உரிமைஇ தனித்துவமான தேசம்இ இறைமை ஆகிய கோரிக்கைகளைக் கைவிட்டு தீர்வுத் திட்டத்தைத் தயாரித்து அதனை இறுதி செய்துள்ளனர்.

கொள்கைகளைக் கைவிடக்கூடாது என நாம் வாதாடினோம். ஆனால் எமது கோரிக்கைகளை கூட்டமைப்புத் தலைமை அடியோடு நிராகரித்து விட்டது. கொள்கை என்று கோசங்கள் போட வேண்டாம் என்றனர். இந்தியா விரும்பாது என்றனர். இந்தியா விரும்புவததையே நாம் செய்;ய முடியும் என்றனர். இந்தியா விரும்பாததை செய்ய மாட்டோம் என்றனர். மேலும் தாம் தயாரித்துள்ள தீர்வுத்திட்டமே இறுதியானது அதனையே இனப்பிரச்சினைக்கான தீர்வுதிட்டாக முன்வைக்கப் போவதாகவும் கூறினர். மேலும் திரு சம்பந்தன் அவர்கள்இ 'நீங்கள் ஒத்துழைக்கா விட்டாலும் எஞ்சியவர்களது உதவியுடன் தீர்;வுத்திட்டத்தை முன்வைத்தே தீருவேன்" என்று அதிகாரத்துடனும் அகங்காரத்துடனும் கூறிவிட்டார். கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக நின்றமையினால் நானும் திருமதி பத்மினி சிதம்பரநாதன் அவர்களும் கூட்டமைப்பின் மூத்த தலைவர்களால் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டு வெளியேற்றப்பட்டோம்.

தமிழ் தேசிய இனத்தின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் தீர்வுத்திட்;டமானது அடிப்படை அரசியல் கொள்கைகளை உள்ளடக்கியதாக முன்வைக்கப்படும் என்ற எழுத்து மூல உத்தரவாதம் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை கூட்டமைப்பு தலைமைகளால் நிராகரிக்கப்பட்ட நிலையில்இ தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தினை மீள முடியாத ஆபத்தில் சிக்க வைக்கும் வகையில் கூட்டமைப்பு தலைமைகள் மேற்கொள்ளவுள்ள பேரழிவு நடவடிக்கைக்கு துணைபோக விரும்பாத நிலையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினுடைய பொதுச் செயலாளர் கNஐந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கூட்டமைப்பில் இருந்து வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இச் சூழ் நிலையில் இப் பாராளுமன்றத் தேர்தல் இடம் பெறவுள்ள நிலையில் கூட்டமைப்பு தலைமைகளின் நடவடிக்கைகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய வரலாற்றுக் கடமை அக் கூட்டமைப்பில் அங்கம் வகித்தவர்கள் என்ற வகையில் எங்களுக்கு எழுந்தது. இவ்வாறு த.தே.கூ தலைமைகளின் தவறான நடவடிக்கைகளை மக்களுக்கு தெளிவுபடுத்தும் பொழுது அந்த உண்மைகளை ஏற்றுக் கொண்டு த.தே.கூ தலைமைகளை நிராகரிக்க விரும்பும் மக்களுக்கு சரியான ஓர் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பும் எங்களுக்கு ஏற்பட்டாதல் இந்த தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்தோம்.

உரிமைகளை பெறவேண்டும் என்ற வேணவாவில் உயிர் கொடுத்த மக்களதும் இளைஞர்இ யுவதிகளதும் தியாகங்களை எம் நெஞ்சினில் சுமந்து சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு அடிபணியாது உறுதியாக நின்று கொள்கைப் பற்றுடன் தாயகத்திலும் புலத்திலும் வாழும் தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அவர்களுடன் கரம்கோர்த்து எமது உரிமைகளுக்காக இறுதி மூச்சு வரை உறுதியுடன் உழைப்போம்.

போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களது மீள்குடியமர்வுஇ புனர்வாழ்வுஇ புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக புலம்பெயர் தமிழ் மக்களதும்இ சர்வதேச சமூகத்தினதும் உதவிகளை பெற்றுக் கொடுக்க அற்பணிப்புடன் உழைப்போம்.

உரிமைப் போராட்ட காலத்தில் சிறீலங்கா அரச படைகளாலும் ஈபிடிபி உள்ளிட்ட துணை இராணுவக் குழுக்களாலும் கடத்தப்பட்டு காணமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கும்இ தடுப்பு முகாம்களிலும்இ சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி இளைஞர்கள்இ முன்னாள் போராளிகள் அனைவரதும் விடுதலைக்காகவும் அக்கறையுடன் தொடர்ச்சியாக குரல் கொடுப்போம்.

பிறசக்திகளின் நலன்களுக்காக எம் மக்களின் வாழ்வை மீண்டும் சீரழிக்க கங்கணம் கட்டிநிற்கும் த.தே.கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய சக்திகளை நிராகரித்து நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து உங்களது அரசியல் உரிமைகளுக்காக குரல் கொடுக்கக் கூடிய உண்மையானஇ நேர்மையானஇ கொள்கை கொண்ட எம்மை பலப்படுத்துங்கள்.

அதற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு வாக்களியுங்கள்.

செல்வராசா கஜேந்திரன்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

11-03-2010

Edited by aathirai

இப்படியே, குற்றச்சாட்டுக்களை ஆளாளுக்கு முன்வைத்து கடிபடவேண்டியதுதான். நல்ல அறிக்கை. மக்களின் முடிவுகளுக்காகக் காத்திருப்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி சரி இந்தமுறையும் முதலாவதா வந்து பாராளுமன்றம் போய் " தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், இறைமை ஆகியவறின் அடிப்படையிலான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பதே.... " எண்டு சத்தியப்பிரமாணம் செய்து ஒரு கலக்கல் கலக்குங்கோ. யாழ்பாணத்திலயிருந்து நீங்கள் சொன்னளவு பெட்டி போகேல்ல....அதெல்லாம் பழையகதை...புதிசாசெய்யிறதுக்கு உத சொல்லி சத்தியப்பிரமாணம் செய்தா புரட்சியாயிருக்கும். :)

உது Once upon a time கதை...

இப்ப வேற மாதிரி கதை..

சரி சரி இந்தமுறையும் முதலாவதா வந்து பாராளுமன்றம் போய் " தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், இறைமை ஆகியவறின் அடிப்படையிலான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பதே.... " எண்டு சத்தியப்பிரமாணம் செய்து ஒரு கலக்கல் கலக்குங்கோ. யாழ்பாணத்திலயிருந்து நீங்கள் சொன்னளவு பெட்டி போகேல்ல....அதெல்லாம் பழையகதை...புதிசாசெய்யிறதுக்கு உத சொல்லி சத்தியப்பிரமாணம் செய்தா புரட்சியாயிருக்கும். :rolleyes:

அப்ப என்ன சொல்லுறீயள் தமிழ் மக்களின் உணர்வுகளை பாராளுமண்றம் போய் சொல்லி வேலை இல்லை எண்டோ....???? இதை புலிகள் செய்த போது கடுமையாக உங்களுக்கு முதுகு எல்லாம் சொறிஞ்சுதே...???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப என்ன சொல்லுறீயள் தமிழ் மக்களின் உணர்வுகளை பாராளுமண்றம் போய் சொல்லி வேலை இல்லை எண்டோ....???? இதை புலிகள் செய்த போது கடுமையாக உங்களுக்கு முதுகு எல்லாம் சொறிஞ்சுதே...???

கனகரத்தினம் ஐயா நீங்கள்தான் கடைசிவரை இருந்து முள்ளிவாய்காலால தப்பி வந்தியள். அண்ணைக்கு கடிக்குதாம்.....சொறிஞ்சுவிடுங்கோ. :rolleyes::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.