Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த்தேசிய அரசியலில் புலம்பெயர் சமூகம் தனக்கான நிலையை காப்பாற்றுமா?

Featured Replies

'புதினப்பலகை'க்காக நந்தன் அரியரத்தினம்

கொழும்பின் முக்கிய அரசியல் மூளைகளில் ஒருவரான தயான் ஜெயதிலக பற்றி தமிழ்த் தேசியர்கள் நன்கு அறிவார்கள்.

புலிகளை அழித்தொழிக்கும் நோக்கில் கொழும்பு மேற்கொண்ட முன்றுவருட கால யுத்தத்தின் போது கொழும்பிற்கு அழுத்தம் கொடுக்காத வகையில் ஜ.நா மற்றும் மேற்கு அரசுகளை கையாண்ட சாணக்கிய மூளையென தயானை நாம் வர்ணிக்கலாம், அந்தளவிற்கு தயானின் பங்களிப்பு சிங்களத்தைப் பொருத்தவரையில் பிரதானமானது.

குறிப்பாக லத்தீன் அமெரிக்க புரட்சிகர அரசியல் பின்புலம் கொண்ட நாடுகளைக் கூட கொழும்பின் பக்கமாக திருப்பியதன் பின்னாலும் தயான் ஜெயதிலகவின் சாணக்கிய மூளையே தொழிற்பட்டது.

நமக்கு அரசியல் அறிவிலியாகத் தெரிந்த மகிந்த குழுவினர் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை புதுப்பிக்க எண்ணியதும் முதலில் அதற்கு ஏற்றவகையில் புறச்சூழலை ஒழுங்குபடுத்தும் செயற்பாடுகளையே முன்னெடுத்திருந்தனர்.

இதில் முக்கியமானதுதான் வாதத்திறமையும் சிங்களத்தின் முன்னணி அரசியல் கருத்தியலாளருமான தயான் ஜெயதிலகவை ஜெனிவாவிற்கான வதிவிட பிரதிநிதியாக நியமித்தமையாகும்.

ஆனால் நாமோ எங்களிடம்தான் பலமுடைய புலம்பெயர் சமூகம் இருக்கிறதே என்ற துணிவில் இது குறித்தெல்லாம் அலட்டிக் கொள்ளவில்லை.

விடுதலைப்புலிகளின் 30 வருட கால இராணுவ வெற்றிகளின் போது பின்வாங்கி முன்னேறும் தந்திரோபாயமே பிரதான போரியல் நுட்பமாகக் கைக்கொள்ளப்பட்டது.

முன்னேற அனுமதிப்பதன் மூலம் எதிரிக்கு அதீத நம்பிக்கையை வழங்கி எதிரியை ஒருவகையான வெற்றிப் பெருமித உளவியலில் சிக்கவைப்பதன் மூலம் எதிரியின் போரிடும் ஆற்றலை மழுங்கடித்து திடீரென்று நாலாப்புறமும் சுற்றி வளைத்து அழிப்பது.

ஆனால் இந்த தந்திரோபாயம் இராணுவத்திற்கு மட்டும்தான் வரையறுக்கப்பட்டது என்று எண்ணியதில்தான் புலிகளின் தவறு இருக்கிறது.

அரசியல் என்பதும் யுத்தத்தின் இன்னொரு பகுதிதான்.

ஒரு பகுதிக்கு பயன்படும் அதே தந்திரோபாயம் மற்றைய பகுதிக்கு எவ்வாறு பொருந்திப் போகாமல் விடும் என்பது குறித்து சிந்திக்கும் அளவிற்கு நம்மிடம் ஆழ்ந்த தேடலோ அல்லது அதற்கான நிதானமோ இருக்கவில்லை.

ஆனால் கொழும்பு எப்போதுமே இந்த இடைவெளியைத்தான் தனக்கான காய்நகர்த்தல் புள்ளியாகக் கொண்டிருந்தது.

இப்பொழுது எல்லாவற்றையும் இழந்து நிற்கும்போதும் கூட நம்மிடம் ஒரு நிதானமான அணுகுமுறை இருக்கிறதா?

அதற்கான பொறுமையுடன் கூடிய தேடல் இருக்கிறதா? மீண்டும் இவ்வாறான கேள்விகளை எழுப்ப நேர்ந்தது ஒருவகையில் துரதிஸ்டவசமானதே

தயான் ஜெயதிலகவின் அண்மைய நேர்காணல் ஒன்றில் புலம்பெயர் சமூகம் குறித்து இவ்வாறு கூறுகின்றார்.

“ LTTE is zero military wise in Sri Lanka but they have strong global networks and they are acting as global moment in few countries. We must counter that”

இத்தனைக்கும் தயான் தற்போது மகிந்த நிர்வாகத்துடன் நெருக்கமாகவும் இல்லை. இங்கு தயான் குறிப்பது நாம் நமது பலமாகக் கருதும் டயஸ்போரா என்பதைத்தான்.

ஆனால் நமக்கு நமது பலம் தெரிந்திருக்கிறதா அல்லது தெரிந்து கொள்ள வேண்டுமென்ற முனைப்பாவது நம்மிடம் இருக்கிறதா?

கடந்த காலத்தில்கூட புலம்பெயர் செயற்பாடுகளின் பலம் பலவீனம் குறித்ததொரு தெளிவான பார்வை நம்மிடம் இருந்திருக்கவில்லை.

பணம் திரட்டுவதற்கும் வெறும் உணர்ச்சிவயப்பட்ட முழக்கங்களை முன்னிறுத்துவதற்குமான களமாக புலம்பெயர் தேசங்கள் பயன்பட்டதே தவிர ஆக்கபூர்வமானதொரு அரசியல் பின்தளமாக அது அமைந்திருக்கவில்லை.

இதனை முதலில் நாம் மனம் திறந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். இலங்கைக்கான பிரஞ்சுத் தூதரக அதிகாரி ஒருவர், இவ்வாறு கூறியதாக எனது நன்பரொருவர் குறிப்பிட்டார், தமிழ் டயஸ்போராவின் போராட்டங்களில் மக்கள் குறித்த கோரிக்கைகள் இல்லையே! புலிகள் குறித்தும் அதன் தலைவரை ஏற்கவேண்டுமென்னும் சுலோகங்கள்தானே அதிகம் இருக்கின்றன.

அந்த அதிகாரியின் கூற்றில் உண்மை இல்லாமலில்லை. பெரும்பாலான புலம்பெயர் நடவடிக்கைகள் புலிகளை மையப்படுத்தியதாக இருந்ததே தவிர ஈழத் தமிழ் மக்களை மையப்படுத்தியதாக இருக்கவில்லை.

நாங்கள் சொல்லலாம் ‘புலிகள்தான் மக்கள் மக்கள்தான் புலிகள்’ என்று அதனை வேண்டுமானால் சம்பூரிலும், கிளிநொச்சியிலும் சொல்ல முடிந்திருக்கலாம் ஆனால் மேற்கின் வீதிகளில் சொல்ல முடியாது.

அது மேற்கின் ஜனநாயக நெறிமுறைக்குள் மிகவும் பலவீனமானதொரு வாதமாகும். ஆனால் இவற்றையெல்லாம் உணர்ந்து உள்வாங்கி செயலாற்றும் அளவிற்கு நம்மிடம் அன்று தெளிவு இருக்கவில்லை.

இந்திய-விடுதலைப்புலிகள் மோதலுக்கு பின்னர் அதிலும் குறிப்பாக ராஜீவ் கொலைக்கு பின்னர் இந்தியாவில் செயற்படுவதற்கான தகுதியை முற்றிலுமாக புலிகள் இழக்கின்றனர்.

அதுவரைக்கும் தமிழர் விடுதலைப் போராட்டத்தின் ஆதரவுத் தளமாக இந்தியாவே இருந்தது. இதன் பின்னர்தான் போராட்டத்தின் ஆதரவுத் தளம் அல்லது பின்தளம் ஜரோப்பிய நாடுகளை நோக்கி நகர்ந்தது.

இந்த தளமாற்றத்தை பிறிதொரு அர்த்தத்தில் பார்ப்பதானால் இந்தியாவை நிரந்தர எதிரியாக்கியதன் மூலம் ஆசியப்பிராந்தியத்தில் செயலாற்றுவதற்கான தகுதிப்பாட்டை இழந்த புலிகள் மேற்கின் ஜனநாயகச் சூழலை தமக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள விழைகின்றனர்.

இந்த பின்புலத்தில்தான் புலம்பெயர் தமிழர்கள் ஒரு பிரதான சக்தியாக உருவெடுக்கின்றனர். 90களுக்கு பின்னரான புலிகளின் இராணுவக் கட்டமைப்புக்களின் அபார வளர்ச்சிக்கு பின்னால் மேற்படி புலம்பெயர் சமூகத்தின் நிதிசார் பங்களிப்பு இருந்தது.

ஆனால் புலிகளின் அதிர்சிகரமான தோல்விக்கு பின்னர் புலிகளின் வலுவான பின்தளமாக இயங்கிய புலம்பெயர் சமூகம் குழப்பமடைந்துள்ளதுடன் தடுமாற்றத்திற்கும் ஆளாகியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் போது இந்த தடுமாற்றம் அம்பலமானது.

அத்துடன் புலம்பெயர் சமூகத்தினர் தமது முக்கியத்துவம் என்ன? அடுத்த கட்ட அரசியல் நகர்வில் தமது பங்களிப்பு எவ்வாறானதாக அமைய வேண்டுமென்பதில் தெளிவற்றிருப்பதும் துலாம்பரமாகியது.

புலிகளின் அழிவுக்கு பின்னர் ஈழத்தின் அரசியல் குறித்து சிந்திக்கும் புலம்பெயர் தரப்பினரை, அடிப்படையில் இரு வகையில் நோக்க முடியும்.

எனது இந்த அவதானம் சமீபநாட்களில் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு புலம்பெயர் தரப்பினர் தமக்குள் முரண்பட்டுநின்றதை அடிப்படையாகக் கொண்டதாகும்.

ஒரு தரப்பினர் புலிகளை ஒரு குறியீடாகக் கொண்டு தொடர்ந்தும் அதேவகையான அரசியல் பண்பை தொடர முற்படுபவர்களாகவும், மற்றைய தரப்பினர் கள யதார்த்தத்தை கருத்தில் கொண்டு செயலாற்ற வேண்டுமென்ற நிலைப்பாட்டிலும் தம்மை இணைத்து நிற்கின்றனர்.

பெரும்பாலான புலம்பெயர் தரப்பினர் இரண்டாது நிலைப்பாட்டில் உடன்பட்டிருப்பதாகவே தெரிகிறது.

உண்மையில் யதார்த்தத்தை கருத்தில் கொண்டு செயற்படுவதில் உடன்படுபவர்களே இன்றைய சூழலில் முன்னேறிய பிரிவினராகக் கொள்ளப்பட வேண்டியவர்கள்.

இந்த இடத்தில் ஒரு தெளிவான விடயத்தை புலம்பெயர் தரப்பினர் குறித்துக் கொள்ள வேண்டும்.

களத்தை களத்தின் அரசியல் தலைமை தீர்மானிக்க வேண்டுமேயொழிய புலம்பெயர் சமூகம் தீர்மானிக்க முடியாது.

இன்று தமிழ் மக்களால் பெரும்பான்மையாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பக்கபலமாகத் தொழிற்படுவதே புலம்பெயர் சமூகத்தின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும்.

அவ்வாறானதொரு புரிதல் புலம்பெயர் தளத்தில் ஏற்படாதவிடத்து களமும் புலம்பெயர் தேசமும் ஒரு இடைவிலகிய அரசியல் செயற்பாட்டையே மேற்கொள்ள நேரும்.

இது மேலும் கொழும்பு நமது மக்களுக்கான அரசியல் தீர்வை பின்தள்ளிப் போடவே பயன்படும்.

இன்று புலம் பெயர் சமூகத்தின் முன்னால் பாரிய பொறுப்புக்கள் உள்ளன.

உண்மையிலேயே ஈழத் தமிழ் மக்கள் மீது அக்கறை இருப்பின். தேர்தல் காலத்தில் சம்பந்தரையும், கூட்டமைப்பையும் விமர்சிக்க ஒதுக்கிய நேரத்தில் சிறிதளவேனும் இன்று தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளுக்காக, குறிப்பாக பெண் போராளிகளுக்காக சர்வதேசத்தின் மனச்சாட்சியை உலுப்பும் நோக்கில் செலவிட்டிருக்கலாம்.

போராட்டத்திற்காக பிள்ளைகளையும் கொடுத்துவிட்டு அடுத்த வேளை உணவுக்காக பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கும் நமது மக்களின் எதிர்காலம் குறித்து செயலாற்ற முற்பட்டிருக்கலாம்.

வெறுமனே 'தேசியம்-விசுவாசி-துரோகி' என்னும் முச்சொல் இணைவானதொரு விவாதமே இன்றைய புலம்பெயர் அரசியலாக இருக்கின்றது.

இது எந்தவகையில் சரியானது? இது நமது எதிர்கால அரசியலுக்கு என்னவகையான பங்களிப்பை வழங்க முடியும்?

இன்று நடந்து முடிந்துள்ள பொதுத் தேர்தலில் 70 வீதமான தமிழ் மக்கள் பங்கு கொள்ளவில்லை.

இதனையும் நாம் நமது தேசிய விவாதத்திற்கே பயன்படுத்திக் கொள்ள முயல்கிறோம். மக்கள் இவர்களிலிருந்து வேறுபட்ட தேசியத் தலைமையொன்றை தேடுவதாகவும் சில புலம்பெயர் நண்பர்கள் ஆய்வுகளை செய்ய விழைகின்றனர்.

உண்மையில் எந்தவொரு தமிழ்த் தலைமையின் மீதும் மக்களுக்கு பெரிதான நம்பிக்கை இல்லை. இதன் காரணமாகவே மக்கள் வாக்களிப்பில் பெருவாரியாக பங்கு கொண்டிருக்கவில்லை.

இதுவரை அவர்கள் நம்பிய எந்தவொரு தேசியத் தலைமையும் அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யவில்லை, அந்த அதிருப்தியின் தொடர்ச்சிதான் இப்போது இருப்பவர்களையும் எதிர்காலத்திற்கான தலைமைகளாக அவர்களால் நோக்க முடியாமலுள்ளது.

இன்று மக்களை அரசியல் அர்த்தத்தில் அணிதிரட்ட வேண்டிய வரலாற்றுப் பொறுப்பு விரும்பியோ விரும்பாமலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது விழுந்திருக்கிறது.

இதனை கூட்டமைப்பு சரியாக பயன்படுத்தத் தவறின் இதுதான் கூட்டமைப்பின் இறுதிக்காலமாகவும் இருக்கும்.

த.தே.கூட்டமைப்பு தமது பொறுப்பை சரியாக நகர்த்திச் செல்வதற்கு புலம்பெயர் சமூகமானது ஆக்க பூர்வமான ஆலோசனைகளையும் பங்களிப்பையும் வழங்க முடியும். அதுதான் புலம்பெயர் சமூகம் ஆற்ற வேண்டிய வரலாற்றுக் கடப்பாடுமாகும்.

இன்றைய சூழலில் சிதைவடைந்து கிடக்கும் நமது தேசத்தை மக்களை மீளக் கட்டியெழுப்புவதற்கான ஒரேயொரு நம்பிக்கையாக புலம்பெயர் சமூகம் மட்டுமே இருக்கின்றது என்பதில் கருத்து பேதமில்லை.

ஆனால் புலம்பெயர் சமூகம் களநிலைமைகளை புரிந்து கொண்டு செயலாற்றுவதில் தவறிழைக்குமாயின் மீதமிருக்கும் ஈழத் தமிழ் மக்களையும் தமது நலன்களுக்காக புதை குழிக்கு அனுப்பிய பழிக்கே ஆளாக நேரிடும்.

* நந்தன் அரியரத்தினம், இலங்கையி்ல் வாழும் ஒர் அரசியல் ஆய்வாளரும் இலக்கியவாதியுமாவார். கட்டுரை பற்றிய கருத்துகளை அவருக்கு எழுதுவதற்கு: AriNanthan@gmail.com

http://www.puthinappalakai.com/view.php?20100414100906

உவருக்கு விலைபோன சம்பந்த விசுவாசி எண்ட பெயர்தான் கிடைக்கப் போகுது.

அவங்கள் வெறும் பதினைந்து வீதக் காரர் எண்டு சொல்லுறாங்கள் நீங்கள் என்னெண்டால் ஒன்றாக பயணிக்கவேண்டும் என்று சொல்லுறிங்கள்.

மேற்கு ஐரோப்பாவிலும் வட அமெரிக்க கண்டத்திலும், அவுஸ்திரேலிய கண்ட நாடுகளிலும் வாழ்கின்ற புலம்பெயர் சமூகங்களினை ஒப்புநோக்கும்போது ஈழத் தமிழர்கள் வெற்றிகரமான சமூகங்களில் ஒன்றாகவே கணிக்கப்படுகின்றார்கள். அவர்களது கடின உழைப்பும், கல்வி அறிவும், தொழிலாற்றலும், நிறுவன விசுவாசமும் கீழ்ப்படிதலும் சிக்கனமான வாழ்க்கை முறையும் சொத்து உடமையும், கூட்டு வாழ்க்கையும் தாயக உறவுகளின் மீது கொண்டுள்ள பற்றும் பாசமும் மிகவும் வியந்து பாராட்டப்படுகின்றது.

a) http://tamilnet.com/art.html?catid=79&artid=31537

b) தற்போது முன்மொழியப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற வேலைத்திட்டத்தினை வளரவிட்டால் அது தங்களால் என்றுமே வெற்றிகொள்ளப்படமுடியாத பலம் கொண்ட ஈழத் தமிழரின் போராட்ட வடிவமாக மாறிவிடும் என்று கருதுகின்றனர்.

c) சிறிலங்கா தான் வெற்றி பெறக்கூடிய களத்திற்குள் ஈழத் தமிழரின் போராட்ட வடிவத்தினையும் மட்டுப்படுத்தவே முயற்சிக்கின்றது. களத்தின் விளையாட்டு விதிகளினை தீர்மானிக்கும் கட்டுப்பாட்டினை தனக்குள் வைத்திருக்கவே முயல்கின்றது.

புலம்பெயர் சமூகம்:

d) சிறிலங்காவின் ஆட்சியாளர்களினால் அங்கு வாழும் தமிழ் மக்களின் மீது நிகழ்த்தப்படும் அநீதிகளினையும் புறக்கணிப்புக்களினையும் பழிவாங்கல்களினையும் கட்டுப்படுத்துவதற்கு வேண்டிய மாற்று முயற்சிகளினை அனைத்துலக மட்டத்தில் இராஜதந்திர ரீதியாக முன்னெடுத்தல்.

e) புலம்பெயர் தமிழர்களின் ஆற்றல்களினையும் வளங்களினையும் ஒன்றுதிரட்டி வழிப்படுத்துவதன் மூலம் தாயகத்தின் வளங்களினையும் வாய்ப்புக்களினையும் சிங்கள பௌத்த மேலாதிக்க சக்திகள் சூறையாடுவதனையும் உரித்துக் கொண்டாடுவதனையும் தடுத்து நிறுத்தி தமிழர்பால் தக்கவைத்தல்

f)அனைத்துலக உதவி வழங்கும் நிறுவனங்கள், நன்கொடை அமைப்புக்கள், இருதரப்பு மற்றும் பல்தரப்பு அபிவிருத்தி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் உறவுகளினை ஏற்படுத்தல்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்த வரையில் இதுவரை உலகத்தமிழர்களுக்கு ஒரே ஒரு தேசியத்தலைமையே இருந்தது.

அத்தலைமையே தமிழரின் குரலை உலகெங்கும் ஓங்கி ஒலிக்க வைத்தது.உலகத்தமிழர்கள் யாவரையும் ஒருங்கிணைத்தது.கடைசித்தமிழன் உலகில் இருக்கும் வரை அவரே தமிழ்த்தேசியத்தின் தலைவர்.

இப்போது இருப்பவர்கள் யாராகினும் அவர்கள் வெறும் அரசியல் தலைமைகளே.

அரசியல் தலைமைகளில் சுய நலம் சார்ந்தவர்களும் பொது நலம் சார்ந்தவர்களும் இருக்கின்றார்கள்.

இவர்கள் எல்லோரும் மக்களை வைத்தே அரசியல் செய்கின்றார்கள்.

ஆனால் மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அளிப்பதில்லை.

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தேசிய அரசியலில் ஆர்வம் காட்டும் தமிழனின் கருத்திற்கு மதிப்பளிக்கப்பட வேண்டும்.

இந்திய அரசியல் செய்பவர்களால் ஈழத்தில் நிலைத்து நிற்க முடியாது.

இது வரலாறு தந்த பாடம்.

இந்திய ஆதரவு எமக்கு வேண்டும். அந்த ஆதரவு ஒரு தீர்வை மக்களின் மீது திணிப்பது அல்ல.

ஒரு நல்ல தீர்வைப் பெற்றுத்தருவதற்கானதாக இருக்க வேண்டும்.

வாத்தியார்

..............

எனக்குத் தெரிந்த வரையில் இதுவரை உலகத்தமிழர்களுக்கு ஒரே ஒரு தேசியத்தலைமையே இருந்தது.

அத்தலைமையே தமிழரின் குரலை உலகெங்கும் ஓங்கி ஒலிக்க வைத்தது.உலகத்தமிழர்கள் யாவரையும் ஒருங்கிணைத்தது.கடைசித்தமிழன் உலகில் இருக்கும் வரை அவரே தமிழ்த்தேசியத்தின் தலைவர்.

இப்போது இருப்பவர்கள் யாராகினும் அவர்கள் வெறும் அரசியல் தலைமைகளே.

அரசியல் தலைமைகளில் சுய நலம் சார்ந்தவர்களும் பொது நலம் சார்ந்தவர்களும் இருக்கின்றார்கள்.

இவர்கள் எல்லோரும் மக்களை வைத்தே அரசியல் செய்கின்றார்கள்.

ஆனால் மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அளிப்பதில்லை.

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தேசிய அரசியலில் ஆர்வம் காட்டும் தமிழனின் கருத்திற்கு மதிப்பளிக்கப்பட வேண்டும்.

இந்திய அரசியல் செய்பவர்களால் ஈழத்தில் நிலைத்து நிற்க முடியாது.

இது வரலாறு தந்த பாடம்.

இந்திய ஆதரவு எமக்கு வேண்டும். அந்த ஆதரவு ஒரு தீர்வை மக்களின் மீது திணிப்பது அல்ல.

ஒரு நல்ல தீர்வைப் பெற்றுத்தருவதற்கானதாக இருக்க வேண்டும்.

வாத்தியார்

..............

குறை நினையாதேங்கோ

இதை கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற பதத்தில் எடுக்கலாமா?

குறை நினையாதேங்கோ

இதை கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற பதத்தில் எடுக்கலாமா?

தம்பி சூறாவளி!

குறை நினைக்க வேண்டாம். சிங்களவன் கடந்த காலங்களில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும், மற்றும் மேர்குலகத்திற்கும் பல முகம்களை காட்டி எம்மை இந்த நிலக்கு கொண்டு வந்துவிடான்கள். அதுபோல் இனி நாமும் பல முகம்களை காட்ட வேண்டும் அது இந்தியா என்ன பாகிஸ்தான் என்ன மடகஸ்கார் கூடவாக இருக்கலாம். தனியே இந்தியா என்று கட்டி பிடித்தால் அது முடியாது. இந்த த தே கூ எல்லா ராஜதந்திரிகளுடனும் அடிக்கடி சந்திப்புகளை மேற்கொள்ள வேண்டும். பார்ப்பாம். கோவிலில் பொன்னாடை போர்த்தினால் சரிவராது பாருங்கோ?

  • கருத்துக்கள உறவுகள்

சூறாவளி அண்ணா,

இது கூழும் இல்லை குடிக்கிறவனின் மீசையும் இல்லை.

விரும்பினால் உதவி செய்யுங்கள்.இல்லாவிட்டால் உபத்திரவமாவது செய்யாது இருங்கள் என்றும் கூறலாம் தானே.

இந்திய ஒற்றுமை என்ற பெயரில் ஈழத்தில் ஒத்திகை வேண்டாம்.

வாத்தியார்

...............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.