Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புது மாத்தளன் முள்ளிவாய்க்கால் படுகொலைகள்

Featured Replies

புது மாத்தளன் முள்ளிவாய்க்கால் படுகொலைகள்

Children injured

இதே நாள்கடந்த வருடம் ( ஏப்ரல் 19 2009) புது மாத்தளனில் தொடர்ந்து இருப்பதா அல்லது முள்ளிவாய்க்கால் பக்கம் போவதா என மக்கள் முடிவெடுக்க முடியாது திக்கு முக்காடிக்கொண்டு இருந்தனர். கூடவே புது மாத்தளன் பகுதியில் இருந்து சுண்டிக்குளம் பக்கமும், கடல் பாதையாலும் சிலர் வெளியேறிக்கொண்டும் இருந்தனர்.வாழ்வா சாவா என்ற முடிவிலேயே மக்கள் இவ்வாறு முடிவெடுத்தனர்.

Two%20children%20lost%20their%20mothers%20fed%20by%20health%20staff.JPG

நேற்றைய தினம் 18/04/2009 அன்று மஹிந்த அரசினால் பாதுகாப்பு வலையம் என சொல்லப்பட்ட பகுதிகளில் சிங்களப்படைகள் கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டிருந்தன. கிபிர், மிக் போர்விமானங்கள், எம்.ஐ.24 உலங்கு வானூர்திகள், கனரக ஆட்டிலறிகள், பீரங்கிகள், கடற்படையினரின் பீரங்கி மற்றும் மோட்டார் உட்பட சிங்கள காலாட்படையினரின் நீண்டதூர வீச்சு க்கொண்ட துப்பாக்கிகளாலும் சாரமாரியான தாக்குதல் நடத்தப்பட்டன.

முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன், இரட்டைவாய்க்கால்,இடைக்காடு, வலைஞன் மடம் ஆகிய பகுதிகள் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த கொலைவெறிதாக்குதலில் சிறுவர், பெண்கள் உட்பட 169 பேர் கொல்லப்பட்டனர். 234 பேர் வரை காயப்பட்டனர். இந்த தொகை வைத்திய சாலைக்கு வந்த பதிவுகள் ஆனால் வராமல் ஆங்காங்கே சிதறுண்டு போன உடலங்கள் கணக்கிடப்படவில்லை என புனர்வாழ்வுக்கழகம் அறிவித்திருந்தது.

Elders%20were%20injured.JPG

Make shift hospital

இதே நேரம் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் யுனிசெவ் ஆகியன கடந்த 06 வாரங்களில் 2800 பேர் கொல்லப்பட்டும் 7000 பேர்வரை காயப்பட்டும் உள்ளதாக அறிவித்தது.

இதே நேரம் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை பெரும் தாகுதல் ஒன்றினை புது மாத்தளனில் இயங்கி வந்த வைத்தியசாலை மீது மேற்கொள்ளவும் அங்கு இருக்கும் மக்களையும் காயமடைந்த போராளிகளையும் கொல்ல, பிடித்து செல்லவும் திட்டமிட்டுகொண்டிருந்தனர் படையினர்.

புது மாத்தளன் தற்காலிக வைத்திய சாலையினை சுற்றி பெரும் தொகையான மக்கள் தங்கி இருந்தனர் காரணம் இரண்டு; ஒன்று வைத்தியசாலை என்றால் கொஞ்சம் தாக்குதல் குறைவு கூடவே உள்ளூர் தொண்டு நிறுவனங்களும் இருப்பதனால் சிறு உதவிகளும் கிடைக்கும். இரண்டாவது காயப்பட்டாலும் உடனடியாக சிகிச்சை ஏதாவது பெறமுடியும் என்பதே ஆகும்.

இது இவ்வாறு இருக்க வைத்தியசாலையில் சூழவுள்ள கூடாரங்களில் காயப்பட்ட பொதுமக்கள், போராளிகள் வெயில் வெட்கைக்குள் வெந்து கொண்டும் சிகிச்சைபெற்று கொண்டும் இருந்தனர். ஏனைய பொதுமக்களுள் சிலர் கடல் மூலமாகவும், தரைவழியாகவும் வெளியேறுவதற்காக திட்டமிட்டு கொண்டிருந்தனர். இதற்கு ஏதுவாக ஆயிரக்கணக்கான மக்கள் சுண்டிகுளம் பக்கமாக இருக்கும் காவலரண் பகுதியினை அண்மித்து இருந்தனர் என்பதும் குறிப்பிடதக்கது.

இராணுவத்தினர், கடற்படையினரின் நகர்வுகள் தொடர்ச்சியான தாக்குதல்கள், இராணுவ வண்டிகளின் இரைச்சல்கள், இராணுவத்தினரின் சத்தங்கள் என்பன தாக்குதலிற்கான சமிக்ஞைகளை உணர்த்தி கொண்டிருப்பதாக வன்னியில் இருந்து பேசிய லோரன்ஸ் கிறிஸ்டி தெரிவித்தார்.

ஆனால் உண்மையிலேயே அந்த பொதுமக்கள் மீதான, வைத்தியசாலை மீதான மிகக் கொடூரமான தாக்குதல் இப்படித்தான் நடைபெறும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

நாள் தோறும் 300 தொடக்கம் 400 பேர் வரையானோர் காயப்பட்டுக்கொண்டிருந்தனர். அதில் குறிப்பிட்ட வீதமான மக்கள், போராளிகள் அடுத்தடுத்த நாட்களில் சாவடைந்து விடுவார்கள். காரணம் சாதாரண அஸ்பிரின் தொடக்கம் உயிர்காப்பு மருந்துவரை எதுவுமே இல்லை. எல்லாமே எப்போதோ தீர்ந்துவிட்டது. புதுமாத்தளனில் இருந்து வைத்தியர்கள் மூலிகை வைத்தியம் செய்யலாம் என்று சிந்தித்தால் கூட அந்த கடற்கரை வெளியில் எங்கே மூலிகை கிடைக்கும்.

ஆதலால் வெட்டும் கொத்துமாக எல்லா வகையான கூரான ஆயுதங்களும் சிகிச்சைக்கு பாவிக்கப்பட்டன. எல்லா வகையான துணி வகைகளும் காயக்கட்டுக்கு பாவிக்கப்பட்டன. கொதித்த நீர், சுண்ணாம்பு போன்றவைகளும் முக்கிய மருந்தாக பயன்படுத்தப்பட்டு கொண்டிருந்தன.

இதே வேளை காயப்பட்ட மக்களுக்கு இரத்தம் கொடுத்தும் மக்கள் அலுத்துபோய்விட்டனர். அலுத்தது மட்டுமல்ல தொடர்ந்து இரத்தம் எடுக்கமுடியாத நிலை காரணம் நீண்ட நாட்களாக போசாக்கு உணவு இல்லை ஏன் ஒரு நேர உணவு கூட ஒழுங்காக இல்லை ஆகவே இரத்தம் எடுப்பதும் மிக கடினமாகவே இருந்தது.

300 பேர்களை மட்டுமே கொண்டு செல்ல முடிந்த செஞ்சிலுவை சங்கம் இடைக்கிடையே தான் வரும், இந்த கப்பலில் வந்த மருந்தும் உணவும் மூன்று கிழமைக்கு முன்பாகவே தீர்ந்துபோய்விட்டது.

சர்வதேச சமூகத்தை ஏமாற்றவும் மஹிந்த அரசு தமது பட்டிணி மூலமான இன ஒழிப்பினை நியாயப்படுத்தவும் பாதுகாப்பு வலையத்தில் இருக்கும் மக்களின் தொகைகளை குறைத்து கூறி வந்தது. ஆனால் அங்கு இருகின்ற அரச அதிபர், புனர்வாழ்வுக்கழகம் ஆகியோர் உண்மையான தொகையினை கூறிவந்த போதும் அதனை சர்வதேசம் நம்ப மறுத்தமையும் அதே நேரம் அரசாங்கத்தின் சொல்லை நம்பியமையும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இருந்தது.பசிக்கொடுமையினை விட, மக்கள் சாகின்றார்களே என்பதனைவிட சர்வதேசத்தின் இந்த பாராமுகம் மிகவும் வேதையாக இருந்தது.

சரியான புள்ளிவிபரங்களை வழங்கிய கிளி அரச அதிபர் உட்பட புனர்வாழ்வுக்கழக உறுப்பினர்கள் இன்னமும் சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆகவே அரசு குறைத்து கூறும் பொய்க்கணக்கிற்கு அதாவது இரண்டரை இலட்சம் மக்களுக்கு பதிலாக வெறும் 50ஆயிரம் தொடக்கம் 80 ஆயிரம் வரையான மக்கள் தான் என்ற மஹிந்த அரசின் கூற்றுக்கு ஏற்பவே உணவு , மருந்து வினியோம் இருந்தது.

காயப்பட்ட மக்கள் ஒருபுறம் போராளிகள் இன்னொரு புறமாக வைத்தியசாலையிலும் அதற்கு அருகாமையிலும் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்தனர்.

காயப்பட்ட போராளிகளும் அவரவர் பெற்றோர்கள், உறவினர்களின் பொறுப்பிலேயே விடப்பட்டனர். காரணம் புலிகளின் மருத்துவமனைகள் மருத்துவ போராளிகள் அனைவரும் சமர்களங்கள் மற்றும் பொது வைத்தியசாலையிலேயே பணி புரிந்து கொண்டிருந்தனர். கூடுதலாக தாய்மார்கள், சகோதரிகள், பெண்கள் காயப்பட்டோரை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

திகதி 20 ஏப்ரல் 2009 பயங்கரம், இனப்படுகொலையின் உச்சம்

கொடுமையிலும் கொடுமையிலும் கொடிய தாக்குதல் என்றே கூறமுடியும் உணவுக்கப்பலை எதிர்பர்த்து சலித்த மக்கள் இன்றுவரும் இன்று வரும் என்று தமது பார்வை முயற்சியினை கைவிடவில்லை. ஏதாவது சமாதானம் பேசி அமைதி வருமா என்று ஒருபுறம் பெரியோர்கள் ஏங்கி ஏங்கி செத்துக்கொண்டே இருந்தார்கள். மருந்து கப்பல் வருமா காயக்காரர்களை அனுப்ப முடியுமா என மருத்துவர்கள் ஏங்கி கொண்டிருந்தார்கள் ஆனால் 20ம் திகதி வந்ததோ பீரங்கி குண்டுகளும், இரசாயன குண்டுகளும், கொத்துக்குண்டுகளும் தான் . ஆம்..

அதிகாலையில் இருந்து மதியம் 11 மணிவரை புதுமாத்தளன் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை பரந்திருந்த மக்கள் மீதும் அங்கு இருந்த தற்காலிக மருத்துவ மைகள் மீதும் குண்டு மழை பொழிந்தது சிங்களப்படைகளின் விமானங்களும் பீரங்கி மோட்டார்களும். கடற்கரை மணலினுள்ளும், கடலிற்குள்ளும், ஏன் ஓர் சிறு மறைவு இருந்தால் கூட அதனுள்ளும் மறைந்து தம்மை காக்க முயன்ற குழந்தைகள், சிறார்கள் உட்பட 985 அப்பாவி மக்களின் உயிர்கள் சிங்கள அரசின் 5 மணித்தியால பேயாட்டத்தில் பறிக்கப்பட்டன. 2300 பேர்வரை காயமடைந்தனர்.

காவல் அரண்களிற்கு தப்பி ஓடிய மக்களை பிடித்து கொண்டு மீண்டும் புதுமாத்தளன் வைத்தியசாலை பக்கம் முன்னேறிய படையினர் அங்கு இருந்தவர்களை, காயப்பட்டிருந்த பொதுமக்கள் போராளிகளையும் சாரமாரியாக சுட்டனர். முன்னதாக இரசாயன குண்டுதாக்குதலினாலும் மயக்க வாயுக்களினை கொண்ட குண்டுகளாலும் தாக்கப்பட்ட வேளை வைத்தியசாலையினை சூழவுள்ளோர் மயக்கமடைந்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

புது மாத்தளன் பகுதியில் ஊடுருவிய படையினன் ஒருவன் 19 வயதுடைய தலையில் காயமடைந்து மயக்கத்தில் இருந்த ஒரு பெண் பிள்ளையினை அர குறை உடையோடு இழுத்து செல்ல முற்பட்டவேளை அந்த பெண்பிள்ளையின் அக்கா ` விடடா பிள்ளையை வேணுமெண்டால் என்னை கொண்டுபோ இல்லாட்டி என்ன சுட்டுவிட்டு போ` என்று கூறவும் உடனே அந்த சிப்பாய் நெஞ்சிலும் தலையிலும் சுட்டு விட்டு சென்றான். நினைவிழந்த நிலையில்பொதுமக்களால் காப்பாற்றப்பட்டு பின்னர் முகாம் கொண்டு செல்லப்பட்ட அந்த சகோதரி இப்போதும் முகாமில்தான் உள்ளார்.

இவ்வாறாக ஆக குறைந்தது சில மணித்தியாலங்களில் கோரத்தாண்டவம் ஆடிய சிங்களப்படை இயலுமானவரை சுட்டும் குண்டுதாக்குதல் மூலமும் மக்களையும் காயப்பட்டவர்களையும் கொன்று குவித்தனர் எஞ்சியோர்களை இழுத்து சென்றனர். கூடவே சிக்கிய 18,000 பொதுமக்களும் சிங்களப்படைகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் சென்று அங்கு தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.

Pokkanai%20area%20under%20attack%20and%20civilians%20are%20leaving%20to%20Mullivakkal%20area.JPG

civilian forced to move GoSL area from PMatalan

ஆனால் மஹிந்த அரசு தப்பி சென்றவர்களுக்கு தண்ணியும் பாணும் கொடுப்பதனை படம் பிடித்து சிங்களப்படையினரின் மனிதாபிமான நடவடிக்கை 20 ஆம் திகதியாகிய இன்று வெற்றிகரமாக முடிந்தது என பறை கொட்டியது. 80,000 பேர் வரை தமது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டார்கள் என கதை விட்டது. இதன்படி இனி இருப்போர் எல்லாம் புலிகள் தான் என்ற பாணியிலேயே இந்த அறிக்கையினை வெளியிட்டது.

திகதி 21 ஏப்ரல் 2009 .... நாளை தொடரும்

நன்றி: அறிவன்

http://www.eelanatham.net/node/4992

பாவப்பட்ட இனமானோமோ நாம்? என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. எவ்வளவு அழிவுகள், அவை பகிரங்கப்படுத்தப்பட்டும் எவரும் அதற்கு நீதி தரவில்லை. யாரிடமிருந்து நீதியை எதிர்பார்ப்பது? மனிதநேயம் பேசுவோரும் மௌனிகளாகிவிட்டனர்.

பலியான அனைத்து தமிழர்களுக்கும் வீரர்களுக்கும் அஞ்சலிகள்....

grenade-that-spreads-light4.jpg

Edited by தயா

  • தொடங்கியவர்

இன்று (21.04.2009) வலைஞன் மடம் வைத்தியசாலை மீது தாக்குதல்

சிங்களப்படைகளின் நேற்றைய கண்மூடித்தனமான தாக்குதலில் சின்னபின்னமாய்ப்போன புதுமாத்தளன் மக்களில் ஒருபகுதியினர் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் விரட்டி செல்லப்பட ஏனையோர் காயமுற்றவர்களையும் காவிக்கொண்டு கடற்கரை வழியே வலைஞன் மடத்திற்கு சென்றனர். ஆனால் அங்கும் தற்காலிக வைத்தியசாலை காயமுற்றவர்களால் நிரம்பி வழிந்தது.

16.JPG

injured people

நேற்றைய தாக்குதலை உலகம் முழுக்க அறிவித்துக்கொண்டு இருந்த வைத்தியசாலை டாக்டர்கள் மற்றும் புனர்வாழ்வுக்கழகத்தை சேர்ந்த லோரன்ஸ் கிறிஸ்டி ஆகியோர் அவசர அழைப்பினை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கு மன்றாட்டமாக கேட்டுக்கொண்டிருந்தனர். ஈராயிரத்திற்கு மேற்பட்டோர் காயமுற்ற நிலையில் அங்கவீனமடைந்த காயப்பட்டோர்மட்டும் ஆயிரத்தை தாண்டும். இவர்கள் கடலைப்பார்த்த வண்ணம் கடற்கரை நீளம் கப்பல் வரும் என கொண்டு சென்று விடப்பட்டுக்கொண்டு இருந்தனர்.

காயப்பட்டவர்களை ஏற்றி செல்லவும் உயிர்காப்பு மருந்துகளையும் வழங்கும் முகமாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கப்பல் வருவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் காயப்பட்ட மக்கள் முண்டியடித்துக்கொண்டு இருந்தனர். கப்பல் கடலில் தெரிந்தது எல்லோருக்கும் சிறிது ஆறுதல் காரணம் கப்பல் வந்து செல்லும் நேரம் காயப்பட்டவர்களை அனுப்பலாம் என்பது மட்டுமல்ல அந்த நேரம் கொஞ்சமாவது சிங்களப்படையினரின் தாக்குதல் உக்கிரம் குறையும் என்பதனாலும் ஆகும்.

2.JPG

injured people

ஆனால் இந்த தடவை எதிர்பார்த்ததை விட எதிர்மாறாக நடந்தது. சர்வதேசமே கைவிட்ட நிலையில் தமிழ் மக்களை காப்பாற்ற, அநியாயத்தை தட்டி கேட்க யாரும் அற்ற நிலையில் செஞ்சிலுவை சங்கத்தின் கப்பல் கரைக்கு வருமுன்னரே வலைஞன் மடம் கடற்கரையோரத்திற்கு சாரமாரியாக படையினர் வட்டுவாகல், ஆனந்த புரம் பகுதிகளில் இருந்து எறிகணைகளை பொழிந்தனர். இதனால் கரையோரம் கப்பல் வரும் என காவல் இருந்த காயப்பட்டோர் உட்பட பலர் அதிலேயே மடிந்தனர்.

வரவர சிங்களத்தின் தாக்குதல் அதிகரித்தது. இதனால் செஞ்சிலுவை சங்கத்தின் கப்பல் கரைக்கு வரவில்லை பாதுகாப்பு கருதி அவர்கள் திரும்பி சென்றுவிட்டனர். கப்பல் திரும்பி சென்றதும் பொதுமக்கள் மீதும் வலைஞன் மடம் தற்காலிக வைத்திய சாலை மீதும் ஆட்லறி மற்றும் மோட்டார் தாக்குதல்கள், கிளஸ்ரர் குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் 400 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். 800 பேர்வரை காயமுற்றனர்.இவர்களுள் அனேகமானோர் முதல் நாள் தாக்குதலில் புதுமாத்தளன் மற்றும் வலைஞன்மடம் ஆகிய பகுதிகளில் படையினரின் தாக்குதலில் படுகாயமுற்றவர்களாவர்.

Patiets%20ready%20to%20go%20Ship%20and%20displaced%20civilians%20are%20comming%20to%20mullivaikkal%20.JPG

patient waiting for the ship

வலைஞன் மடம் தற்காலிக வைத்தியசாலையிலிருந்த நோயாளர்கள், தாதியர்கள், மருத்துவ தொண்டர்கள் ஆகியோரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர். அத்துடன் மருத்துவர் சிவா அவர்களும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். கூடவே னோயாளருக்கு கஞ்சி வழங்கி கொண்டிருந்த புனர்வாழ்வுக்கழக தொண்டர்கள் 06 பேரும் கொலப்பட்டனர்.

இந்த வைத்திய சாலைமீதான கொலைவெறி தாக்குதலினால் காயப்பட்ட மக்கள் வைத்திய சாலைக்கு செல்ல அஞ்சினர். காயப்பட்டவர்கள் தாம் மறைந்து இருந்த இடங்களிலேயே தம்மால் ஆன முதலுதவிகளை செய்தனர். இதனால் காயப்பட்டவர்கள் உரிய சிகிச்சை இன்றி காயங்கள் அழுக தொடங்கின. இதனால் பலர் ஆங்காங்கே பதுங்கு குழிகளிலும், மறைவிடங்களிலும் சாவடைந்தனர்.

இந்த உடலங்களை தமிழீழ காவல்துறை மற்றும் புனர்வாழ்வுகழகத்தை சேர்ந்தவர்களும் பொது குழிகளை தோண்டி புதைத்தனர். பெயர் அடையாளங்கள் கிடைத்தவற்றையும் சொப்பிங் பையினுள் வைத்து அவர்களது உடலங்களோடு புதைத்தனர். நேற்று முந்தினத்துடன் நோயாளருக்கு வழங்கப்பட்ட கஞ்சி திட்டமும் ஒரு நாளைக்கு ஒரு தடவை அல்லது அதுவும் இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர்.

நாளை தொடரும்.... நன்றி அறிவன்

http://www.eelanatham.net/node/5017

Edited by பொய்கை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.