Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு கடந்த தமிழீழ அரசும் அதன் தேவையும்

Featured Replies

நாடு கடந்த தமிழீழ அரசும் அதன் தேவையும்

தற்போதய சூழ்நிலையில் தாயகத்தில் அரசியல் செய்ய முடியாத நிலையுள்ளது

அப்படி அரசியல் செய்தாலும் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தமிழீழத்தை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இலங்கை அரசு இல்லை

அதை எற்றுக்கௌ;ள வைப்பதற்கு தமிழர்களின் அரசியல் பலம் போதுமாக இல்லை அத்துடன் தமிழர்களிடையே ஒற்றுமையின்மை நிலவும் நிலையில்

ஒட்டு மொத்த தமிழர்களின் குரலாக இந்த நாடுகடந்த தமிழீழ அரசு அமையும். வெளிநாடுகளுடன் சட்டரீதியான முறையில் ஜனநாயக வழியில் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ள முடியும்.

இது தொடர்பாக......

காணொளி

அன்புத் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம்

முக்கியமான காலகட்டத்தில் நிற்கின்றது.

முள்ளிவாய்க்காலின் பின் தமிழர்களுடைய எதிர்காலம் எவ்வாறு அமையப் போகின்றதோ என்ற தவிப்பும் அச்சமும் பலமட்டங்களில் மேலேழுந்துள்ள இவ்வேளைஈழத்தமிழ் மக்கள் தங்களுடைய அரசியல் இருப்பு எவ்வாறு அமைந்தாக வேண்டும் என்ற தங்கள் மனக் கிடக்கையை சனநாயக வடிவில் உலகுக்கு உணர்த்தும் வாய்ப்பாக இரண்டு தேர்தல்களை எதிர்கொண்டு நிற்கும் முனைப்பான காலகட்டமே இது.

தமிழர்களின் அரசியல் தளத்தை சிதைத்து

எஞ்சியிருக்கும் நம்பிக்கைகளை அகற்றி

தனது பேரினவாத பிடிக்குள் தமிழர்களை வைத்திருக்கவே

சிறிலங்கா அரசு உறுதியோடு துணிந்து நிற்கின்றது.

நாடு கடந்த தமிழீழ அரசினை உடைப்போம் என சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோஹித்த போகெல்லாகம கொக்கரித்த சூழுரைப்பு இதன் சமீபத்திய சாட்சியாகும்.

தமிழ் மக்களின் சுதந்திர வேட்கையை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியாது சிறிலங்காவின் பேரினவான கோரப்பிடிக்குள் சிக்கியிருக்கும் எமது தாயக உறவுகளுடைய உரிமைக்குரலாக உலக அரங்கில் ஓங்கி ஒலிக வேண்டிய பொறுப்பு இன்றைய காலகட்டத்தில் புலத்து தமிழர்களுடையதே என்பதை நாம் மறக்கவோ தட்டிக்கழிக்கவோ முடியாது.

விடுதலைப் புலிகளின் உயர் அரசியல் ஆலோசனை பீடத்தால் முள்ளிவாய்காலின் பின் முன்வைக்கபட்ட நாடு கடந்த தமிழீழ அரசு என்பது தமிழர்களின் எதிர்கால இருப்புக்கு உறுதியாக வழிகோலப் போகும் ஒப்பற்ற உயர் அரசியல் பீடமாகும்.

எமது இலட்சியத்தை அடைவதற்கு சமகால உலக அரசியல் ஒழுங்கினை கருத்தில் கொண்டுசனநாயக அடிப்படையில் உருவாக்கம் பெற்றுள்ள இந்த செயல்திட்டம் தமிழீழ அரசை நிறுவுவதை இலட்சியமாக கொண்டு தாயக உறவுகளின் வாழ்வுரிமையை பாதுகாப்பதோடு புலத்து தமிழர்களின் எதிர்கால அரசியல் இருப்புக்கும் உறுதியாக வழிகோலுகின்றது.

இத்தகயை அரசியல் வல்லமை பொருந்திய ஒரு புதுமையான அரசியல் வேலைத்திட்டத்தை குழப்பும் நோக்கில் சிறிலங்கா அரசு பல மறைமுக நாசகார வேலைத்திட்டங்களை துரிதமாக புலத்தில் ஏவி வருகின்றது.

நாடு கடந்த தமிழீழ அரசினை தோல்வியுறச் செய்வதன் ஊடாக விடுதலைப் புலிகளினால் முன்வைக்கப்பட்ட அரசியல் வேலைத்திட்டத்தை தமிழர்கள் புறக்கணித்து விட்டனர் என்ற பரப்புரையை உலக அரங்கில் மேற்கொள்ளவும் அது முனைப்புக் காட்டி வருகின்றது.

இதன் பொருட்டு நாடு கடந்த தமிழீழ அரசு குறித்தான பொய்யான கருத்தினை தமிழர்கள் மத்தியில் பரப்ப முனைந்துள்ளது. இதற்கான முகவர்களை தமிழர்கள் மத்தியில் நடமாட விட்டுள்ளதோடு மட்டுமல்லாது பொய்யான பரப்புரைப் பணியில் சில ஊடகங்களையும் உருவேற்றி மறைமுகமாக ஊக்குவித்தும் வருகின்றது.

இத்தகைய சூழ்ச்சிக்குள் தமிழ் மக்கள் சிக்காது

ஒரு பலமான அரசியல் தளமாக நாடு கடந்த தமிழீழ அரசினை அமைக்க திடசங்கற்பம் பூணுவோம். இதன் வழி தமிழீழ தனியரசை மண்ணில் அமைப்போம்.

புலத்தில் வாழ்ந்து வரும் இளையோர்களே கல்விமான்களே அறிஞர்களே சமூக ஆர்வலர்களே வளம் நிறைந்த பெருமக்களே தமிழினத்தின் உறுதியான பலமும் நிறைவான வளமும் நீங்களே! உங்களுடைய பல வடிவப் பங்களிப்பே நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பலமாகும் என்பதனை ஐயம்திரிபற நம்புங்கள்.

இந்த நாடு கடந்த தமிழீழ அரசியல் பீடத்துக்கான தேர்தலில்

இயலுமானவர்கள் வேட்பாளர்களாக முன் வரட்டும் !

அனைவருமே வாக்களர்களாக பங்கெடுப்போம் !

தமிழ் மக்களுக்கான வளம் நிறைந்த

ஓர் அரசியல் எதிர்காலத்தை அனைவரும் கூடி உருவாக்குவோம்

அன்புக்குரிய உறவுகளே !

முள்ளிவாய்காலுடன் தமிழர்களின் விடுதலைத் தீ அணைந்து விட்டதெனச் சூளுரைக்கும் சிறிலங்கா பேரினவாத அரசுக்கு சனநாயக ரீதியில் தகுந்த பதிலுரையை கூறுவோம் !

தமிழர்களை வென்றுவிட்டதாக

ஸ்ரீலங்கா அரசு கொக்கரித்த மே-17ம் நாள்

நாடு கடந்த தமிழீழ அரசினை அமைத்து

தமிழர்களின் பலமான அரசியல் இருப்பை

பிரகடன முழக்கம் செய்வோம்.

திரண்டு வாரீர்….!

சுதன்ராஜ்

தமிழ் சமூக மேம்பாட்டு அசைவியக்கம் – பிரான்சு

Edited by suryaa

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.