Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலைக் கழகத்தினது மாணவர் அமைப்புப் பிரதிநிதிகள் என்ற பெயரில் நடத்தப்பட்ட சந்திப்பு குழப்பகரமான சூழ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக் கழகத்தினது மாணவர் அமைப்புப் பிரதிநிதிகள் என்ற பெயரில் நடத்தப்பட்ட சந்திப்பு யாழ் மாணவ அமைப்புகளிடையே பெரும் பிளவினை ஏற்படுத்தியுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தினது மாணவர் ஒன்றியத்தினது ஒப்புதலின்றி யாழ் பல்கலைக்கழக மாணவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக குழுவொன்று ராணுவத் தளபதியைச் சந்தித்திருக்கின்றது. யாழ் மாவட்ட ராணுவத் தளபதி ஹத்துரசிங்காவுடன் நேற்றைய தினம் யாழ் நகரின் சிவில் நிர்வாக காரியாலயத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. நீண்டகாலமாக யாழ் பல்கழக மாணவர்களுக்கும் படைத்தரப்பிற்கும் இடையே சுமுகமான சூழல் காணப்படவில்லை. கடந்த காலங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் கடத்தப்பட்டமை, படுகொலை செய்யப்பட்டமை போன்றன தொடர்பால் பல்கலைக்கழக மாணவர் தரப்புகளில் படைத்தரப்பிற்கு ஓத்துழைப்பின்மையே காணப்பட்டிருந்தது.

பல்வேறு தடவைகள் படைத்தரப்பு பல்கலைக்கழக வளாகத்தினுள் உள் நுழைய முற்பட்ட போதும் அதுவும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் தற்பொழுது சில சதி முயற்சிகளாக இந்த சந்திப்புகள் இடம்பெற்றிருக்கலாம் என பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முக்கிய பிரமுகர்கள் பலரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

இடம்பெயர்ந்த மாணவர்களின் நலன்களென பல்வேறு காரணங்களைக் கூறி இந்தச் சந்திப்புக்கு சென்ற போதிலும் இந்த சந்திப்பின் உண்மையான விடயம் தொடர்பாக வெளியோ சொல்லப்படாமையால் பல்கலைக்கழகத்தின் முக்கிய செயற்பாடுகளைக் காட்டிக் கொடுக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக இது இருக்கலாமோ என பலரும்

2ஆம் இணைப்பு படங்களுடன்:‐ இராணுவ அதிகாரிகளுக்கும் யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சில மாணவர்களுக்கும் இடையில் சந்திப்பு :

யாழ் மாவட்டப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துர சிங்காவுக்கும் நீதிநியாயத்திற்க்குமான மாணவர் அமைப்புக்கும் இடையேயான சந்திப்பொன்று யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இடம் பெற்றது.

இக் கலந்துரையாடலில் யாழ் மாவட்ட படைகளின் உயர் அதிகாரிகள் மாணவர் அமைப்பின் பிரதி நிதிகள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

மாணவர்கள் தற்போது எதிர் நோக்கும் பிரச்சனைகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக வன்னியில் இருந்து இடம் பெயர்ந்த மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் முகாம்களில் உள்ள மாணவர்களின் நிலமைகள் பல்கலைக்கழக அனுமதி பெற்று முகாம்களில் உள்ள மாணவர்களின் தொடர் கல்வி நடவடிக்கைகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டுள்ளது

இராணுவ அதிகாரிகளுக்கும் யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சில மாணவர்களுக்கும் இடையில் சந்திப்பு : ஊடகவியளாலர் மாநாட்டை தவிர்த்த மாணவர்கள்:‐

2010‐04‐25 14:39:44

யாழ் சிவில் நிர்வாக அலுவலகத்தில் யாழ் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சிவில் நிர்வாக அதிகாரிகளுக்கும் யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் சிலருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றிருக்கிறது.

மக்களது பிரச்சினைகள் மற்றும் படையினருடனான உறவுகள் குறித்து பல்கலைக்கழக மாணவர்களுடன் சந்திப்பு நடைபெறுவதாக கூறிய இராணுவ சிவில் நிர்வாக அதிகாரிகள் ஊடகவியாளர்களை அழைத்திருந்தனர். எனினும் வருகை தந்த மாணவர்கள் ஊடக மாநாடு நடத்த விரும்பாததை அடுத்து ஊடகவியாளாலர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

யாழ் பல்கலைக்கழகத்தின் கொமும்பில் உள்ள சட்ட பீடத்தை சேர்ந்த மாணவர் ஒருவராலேயே இந்த சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவரது வேண்டு கோளின் அடிப்படையில் சிவில் நிர்வாக அதிகாரிகள் சந்திப்பை நடத்தும் வேண்டுகோளை வரவேற்று, தமது விருப்பத்தை தெரிவு செய்திருந்தனர்.

குறித்த மாணவன் அண்மையில் நீதி நியாயத்திற்கான மாணவர் அமைப்பு என்ற பெயரில் தமிழ் அரசியல் கட்சிகளை விவாதத்திற்கு ஒழுங்குபடுத்தியவர் என்றும் குறிப்பிடப்படுகிறது

globaltamilnews

கூட்டமைப்பை மீறி பிரச்சினைகளை தீர்க்க மக்கள் அமைப்பு ஒண்று கிளம்பியதின் பீதியில் சிலர் சொல்லும் சேதியோ எண்டுதான் எண்ணத்தோண்றுகிறது...

தங்களுக்கு அரசியல் வாதிகளால் கிடைக்காத அனுகூலங்களை அரசியல் சாராத அமைப்புக்களாக மக்கள் தீர்க்க புறப்பட்டது அரசியல் வாதிகளின் வயிற்றில் புளியை கரைச்சு இருக்கலாம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.