Jump to content

இலங்கை VS இந்தியா


Recommended Posts

Posted

இலங்கை அணி தோத்தாலென்ன இந்திய அணி வெண்டால் என்ன.... இதுக்காண்டி முகத்தார் குருவி தலையில இருக்கிற மயிரை புடுங்கி தற்கொலை செய்யாதேங்கப்பா.... :) :x :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நடந்த இறுதி ஆட்டத்தில் இலங்கை 9 விக்கட்டுக்களை இழந்து 244 ஓட்டங்களைப்பெற்றது

அடுத்து ஆடிய இந்தியஅணி 39 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 245 ஓட்டங்களைப்பெற்று இந்த தொடரை 6.1 என்ற வீதத்தில...............

மீதியை நான் சொல்லவில்லை சிலர் வேதனைப்படுவார்கள். :lol::lol::lol::lol::lol:

http://news.bbc.co.uk/sport1/shared/fds/hi...l/scorecard.stm

Posted

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நடந்த இறுதி ஆட்டத்தில் இலங்கை 9 விக்கட்டுக்களை இழந்து 244 ஓட்டங்களைப்பெற்றது

அடுத்து ஆடிய இந்தியஅணி 39 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 245 ஓட்டங்களைப்பெற்று இந்த தொடரை 6.1 என்ற வீதத்தில...............

மீதியை நான் சொல்லவில்லை சிலர் வேதனைப்படுவார்கள். :lol::lol::lol::lol::lol:

விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம்..! :wink: :lol:

Posted

சரி அப்பிடித் தோத்தாலும் ரேட்டிங்கிலை முன்னுக்குத்தானே நிக்கிறாங்கள் பெடியள் என்ன 2வது இடத்திலை இருந்து 4வது இடத்துக்கு வந்ததுதான் கவலையாக்கிடக்கு

1 Australia

2 South Africa

3 Pakistan

4 Sri Lanka

5 England

6 New Zealand

7 India

8 West Indies

9 Zimbabwe

10Bangladesh

Last updated: 12 Nov 2005

http://www.icc-cricket.com/odi/

  • 4 weeks later...
Posted

1வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது

இலங்கை இந்தியா அணிகளுக்கு இடையில் நடை பெற்ற 1வது டெஸ்ட் போட்டி நேற்று வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது சென்னையில் கடந்த 2ம் திகதி ஆரம்பமாக விருந்த இந்த போட்டி 3நாட்கள் தொடர்ந்து பெய்த மழைகாரணமாக நடைபெறவில்லை இருந்தாலும் 4ம்நாள் மதியத்தின் பின் ரசிகர்களுக்கு ஒரு கண்காட்சிப் போட்டியாக அரம்பமானது நாணயச் சுழச்சியில் வெற்றி பெற்ற இந்தியஅணி முதலில் துடுப்பாட முற்பட்டது 4ம் நாள் முடிவில் 90/2 விக்கட்டுகள் எண்ட நிலையில் ஆட்டம் நிறுத்தப் பட்டது அடுத்தநாள் ஆட்டம் ஆரம்பமாகிய வேகத்திலேயே அடுத்தடுத்து விக்கட்டுகளை இழந்த இந்தியஅணி 167ஓட்டத்துக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது (சேவாக் -36 டோனி 30 ) இதன் பிறகு ஆட்டத்தைத் தொடங்கிய இலங்கையணி 168 ஓட்டத்தை 4 விக்கட்டுகள் இழப்புக்கு பெற்றதுடன் ஆட்டம் நிறுத்தப்பட்டது (மகல 76) டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் இலங்கை வீரர்கள் ஒருநாள் போட்டிபோலவே விளையாடியது போட்டியை விறுவிறுப்பாக்கியது ஏற்கனவே ஒருநாள் போட்டித் தொடரில் மோசமாக விளையாடிய இலங்கையணியின் டெஸ்ட் ஆட்டம் ரசிக்கத்தக்கதாக இருந்தது

ஸ்கோர் விபரம்

இந்தியா 1வது இன்னிங்ஸ் - 167

இலங்கை - 168/4

ஆட்ட நாயகன் சமிந்தா வாஸ் - 21 14 20 4

http://uk.cricinfo.com/db/ARCHIVE/2005-06/...-06DEC2005.html

Posted

2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 188 ஓட்டங்களால் வெற்றி

இன்று டில்லியில் நடந்து முடிந்த இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 188 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது ஆட்டம் பற்றிய குறுகிய விபரணம். . . .

1ம் நாள் ஆட்டம் : முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 3 விக்கட்டுகள் இழப்புக்கு 232 ஓட்டங்களை ஆட்ட நேர முடிவில் பெற்றிருந்தது சச்சின் தனது 35வது சதத்தினைப் புூர்த்தி செய்து உலக சாதனையை நிலை நாட்டீனார்

2ம் நாள் ஆட்டம் : மிக பெரிய எதிர்பார்ப்புடன் இன்று ஆட்டத்தை தொடங்கி இந்திய அணி முரளியின் பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கட்டுகளை இழந்தது முரளி 23ஓட்டங்களை குடுத்து 5 விக்கட்டுகளை எடுத்தன் மூலம் இந்தியா சகல விக்கட்டுகளையும் இழந்து 290 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது (முரளி மொத்தம் 7 விக்கட்டுகள் )அடுத்து களமிறங்கிய இலங்கைணி ஒரு கட்டத்தில் 163ஓட்டத்துக்கு 3 விக்கட்டுகளை மாத்திரம் இழந்திருந்தது ஆனால் கும்ளேயின் சூழல் பந்து வீச்சு இவர்களையும் நிலை குலைய வைத்தது மாவன் சிறப்பாக ஆடினாலும் (88) இறுதி ஓவரில் கும்ளேயிடம் அவுட்ஆனதால் இலங்கையணி ஆட்டநேர முடிவில் 198 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுகளை இழந்திருந்தது

3ம் நாள் ஆட்டம் : இன்றும் கும்ளேயிடம் இலங்கை வீரர்கள் திணறினார்கள் ஆட்டம் தொடங்கி சிறுது நேரத்திலேயே இலங்கையணி சகல விக்கட்டுகளையும் இழந்து 230 ஓட்டங்களை பெற்று இந்தியாவை விட 60 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்தது கும்ளே 6 விக்கட்டுகளை கைப்பற்றியிருந்தார் 2வது இன்னிங்ஸ்யை தொடங்கிய இந்திய அணி இர்பான் பத்தானின்(93) சிறப்பான ஆட்டத்தின் மூலம் 5 விக்கட்டுகள் இழப்புக்கு 237 ஓட்டங்களை ஆட்ட நேர முடிவின் போது எடுத்திருந்தது

4ம் நாள் ஆட்டம் : தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்திய அணி யுவராஜ் சிங்(77) டோனி(51) இருவரின் இணையாட்டமூலம் 375 ஓட்டங்களை 6 விக்கட்டுகள் இழப்புக்கு எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது மொத்தம் 435 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி எண்ட நிலையில் தனது 2வது இன்னிங்ஸ்யைத் தொடங்கிய இலங்கையணி 1விக்கட் இழப்புக்கு 108 எண்ட இலக்கை அடைந்திருந்தது ஆனா என்னவோ தெரியவில்லை இறுதிநேரத்தில் அடுத்தடுத்து 5 விக்கட்டுகளை இழந்து 123 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டம் நிறுத்தப்பட்டது மாவன்(67)

5ம் நாள் ஆட்டம் : மிகுதி 5 விக்கட்டுகளையும் எடுத்தால் வெற்றி என்ற தெம்புடன் இன்று களத்தில் இறங்கியது இந்திய அணி. ஆரம்பத்திலேயே 1 விக்கட் விழ அவர்களின் வெற்றி தெட்டத் தெளிவானது மகல ஜெயவர்தனாவில் (67) விக்கட் விழுந்ததுடன் இலங்கையின் ஆட்டம் முடிவுக்கு வந்தது மதிய இடைவேளையின் பின்னர் இலங்கையணி 247 ஓட்டங்களை பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது

ஸ்கோர் விபரம்

இந்தியா - 298 . 375/6 dec

இலங்கை 230 - 247

இந்தியா 188 ஓட்டங்களால் வெற்றி பெற்றது

ஆட்ட நாயகன் : அனில் கும்ளே 10விக்கட்டுகள்(இந்தியா)

http://usa.cricinfo.com/db/NEW/LIVE/frames...-14DEC2005.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானும் என்னவோ சென்னையில நடந்த போட்டியில இப்படி இலங்கை அணி திமிறுதே என்று பார்த்தன். ஆனால் டில்லியில கவுட்டு போட்டுதே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நானும் என்னவோ சென்னையில நடந்த போட்டியில இப்படி இலங்கை அணி திமிறுதே என்று பார்த்தன். ஆனால் டில்லியில கவுட்டு போட்டுதே.

:lol::lol::lol:

Posted

தகவலுக்கு நன்றி இலங்கை நன்றாக வாங்கி கட்டுது

Posted

பின்ன கும்பிளேய இறக்கிட்டினமில்ல. திணறாம என்ன செய்யுறது...! :wink: :)

Posted

நானும் என்னவோ சென்னையில நடந்த போட்டியில இப்படி இலங்கை அணி திமிறுதே என்று பார்த்தன். ஆனால் டில்லியில கவுட்டு போட்டுதே.

ஜெயசூர்யா வடிவா விளையாடுறார் இல்லையெண்டுபோட்டு தரங்காவையும், முபாரக்கையும், போட்டுப்பார்த்தினம், இரண்டுபேரும் முரளிண்ட பற்றிங்க் சாதனையை முறியடிச்சிட்டினம்,,, :wink: :P :P

Posted

3 ஆவது டெஸ்டில் 259 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி

sp21.jpg

இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும் வென்றதன் மூலம் இந்திய அணி 2-0 என்னும் ரீதியில் இந்தத் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இப்போட்டியில் இந்திய அணி 259 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்தியாவில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதலாவது போட்டி மழையினால் பாதிக்கப்பட்டதோடு, டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி 188 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

மூன்றாவது போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை அஹமதாபாத்தில் ஆரம்பமாகியது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 97 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சற்றுத் தடுமாறியபோதும், 6 ஆவது விக்கெட்டுக்காக லக்ஷ்மனுடன் ஜோடி சேர்ந்த தோனி 49 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து அணியை வலுவடையச் செய்தார்.

இதன் பின் ஜோடி சேர்ந்த லக்ஷ்மனும், பதானும் இணைந்து நிதானமாகத் துடுப்பெடுத்தாடி 7 ஆவது விக்கெட் இணைப்பாட்டமாக 125 ஓட்டங்களைப் பெற்றனர்.

இறுதியில் இந்திய அணி அதன் முதல் இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 398 ஓட்டங்களைப் பெற்றது. இதில் லக்ஷ்மன் 104 ஓட்டங்களையும், பதான் 82 ஓட்டங்களையும் குவித்தனர். இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் மலிங்க மற்றும் முரளிதரன் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் தான் தொடரைக் சமப்படுத்தவாவது முடியுமென்ற இக்கட்டான சூழ்நிலையில் முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததுடன், டில்சான் மட்டுமே அரைச் சதத்தை (65 ஓட்டங்கள்). முடிவில் இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 206 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இந்திய அணி சார்பாக பந்துவீச்சில் ஹர்பஜன் சிங்க 62 ஓட்டங்களைக் கொடுத்து 7 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இதனையடுத்து 192 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த இந்திய அணி தனது 2 ஆவது இனிங்ஸை ஆரம்பித்தது.

9 விக்கெட்டுகளை இழந்து 316 ஓட்டங்கங்களைப் பெற்ற வேளையில் தனது ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. இதில் யுவராஜ்சிங் 79 ஓட்டங்களையும், ஹர்பஜன்சிங் ஆட்டமிழக்காது 40 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணிசார்பாக பந்துவீச்சில் முரளிதரன் மற்றும் பண்டார ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

509 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு தனது 2 ஆவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி அனில் கும்ப்ளேயின் பந்து வீச்சில் தடுமாறி இறுதியில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 249 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

இதில் மஹேல ஜயவர்தன 57 ஓட்டங்களையும், டில்சான் 65 ஓட்டங்களையும் குவித்தனர். இந்திய அணி சார்பாக பந்துவீச்சில் கும்ப்ளே 5 விக்கெட்டுகளையும், ஹர்பஜன்சிங் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இறுதியில் இந்திய அணி 259 ஓட்டங்களால் இறுதிப்போட்டியிலும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது. ஆட்டநாயகனாக பத்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஹர்பஜன் சிங் தெரிவு செய்யப்பட்டார்.

thinakkural

Posted

sp2.jpg

துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்கத் தவறிவிட்டனர் இதுவே தோல்விக்கு காரணமென்கிறார் முரளி

இந்திய தொடர் எங்களுக்கு சோகமானதாக அமைந்துவிட்டது. தொடரில் பெரும்பாலும் இந்திய வீரர்களே ஆதிக்கம் செலுத்தினார்கள். எங்கள் துடுப்பாட்ட வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஜொலிக்கவில்லை. சிறப்பான தொடக்கம் பெற்றாலும்இ நடுவரிசை துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களைக் குவிக்கத் தவறியதால் பெரிய அளவில் ஸ்கோர் செய்ய முடியவில்லை. பந்துவீச்சிலும் சில தவறுகளினால் இந்திய அணியை விரைவில் சுருட்ட முடியாமல் போய்விட்டதாக இலங்கையின் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில்இ இந்தியாவுக்கு வரும்போதுஇ வெற்றிபெற முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் அடியெடுத்து வைத்தோம். ஆனால்இ எங்கள் துரதிர்ஷ்டம்... சென்னையில் நடந்த முதல் போட்டியில் மழை வந்துஇ மூன்று நாள் ஆட்டத்தைப் பாதித்துவிட்டது. அடுத்த இரண்டு நாட்களில் எங்கள் வீரர்கள் சிறப்பாக ஆடினார்கள். அப்போது இந்திய அணி மிகவும் தடுமாறியது. இதேபோல்இ டில்லியிலும் தொடக்கத்தில் நாங்கள் ஆதிக்கம் செலுத்தினோம்.

ஆனால்இ அனில் கும்ப்ளே அபாரமாக பந்துவீசி எங்கள் வீரர்களை விரைவில் சுருட்டிவிட்டார். இதுவே தொடரின் திருப்புமுனையாக அமைந்தது. டில்லி டெஸ்டின் கடைசி மூன்றுநாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடிஇ வெற்றிபெற்றார்கள்.

ஆமதாபாத்தில் 509 ஓட்ட இலக்கு நிர்ணயித்தார்கள். இதிலும் கும்ப்ளேஇ ஹர்பஜன் ஜோடி அசத்தியதால் எங்களால் இலக்கை எட்ட முடியவில்லை.

இத்தொடரில் சச்சின்இ லக்ஷ்மன்இ யுவராஜ் சிங் தவிர இந்திய அணியின் நடுவரிசை வீரர்கள் நன்றாக விளையாடவில்லை. ஆனாலும்இ பந்து வீச்சாளர்கள் துடுப்பாட்டத்திலும் கைகொடுத்து அணிக்கு வெற்றிதேடித் தந்திருக்கிறார்கள்.

பதான் மிகச்சிறந்த சகலதுறை வீரராக முன்னேற்றம் கண்டு வருகிறார். தவிரஇ கும்ப்ளே

thinakkuaral

  • 2 weeks later...
Posted

இஞ்சை பாத்தீங்களோ கூத்தை இலங்கை பெடியள் தான் இந்தியாவுக்குப் போய் வாங்கிக்கட்டிக்கொண்டு வந்திருக்கினம் எண்டு பாத்தால் பெம்பிளையளும் போய் நல்லா வாங்கியிருக்கினம்

பெண்கள் ஆசியா கிண்ணத்துக்கான 2005 -06 போட்டி கராச்சியில் நடைபெறுகிறது அதில் இலங்கை இந்தியாவுக் கெதிரான போட்டி 1ம் திகதி நடை பெற்றது இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி சகல விக்கட்டுகளையும் இழந்து 124 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது

இதை தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இந்திய அணி விக்கட் இழப்பின்றி 125 ஓட்டங்களைப் பெற்றது (29.1ஓவர்)

ஸ்கோர்

இலங்கை -124/all out

இந்தியா -125/0

இந்தியா 10 விக்கட்டுகளால் வென்றது

http://www.cricinfo.com/db/ARCHIVE/2005-06..._01JAN2006.html

sp1.jpg

இந்திய வீராங்கனை ஜெயா சர்மா துடுப்பெடுத்தாடுவதை இங்கு காணலாம்.

Posted

Women's Asia Cup, 2005-06, Final

India Women

National Stadium, Karachi 4 January 2006

நேற்று நடைபெற்ற இந்தியா இலங்கை மகளிர் அணியினருக்கான ஆசியா கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணி 97 ஓட்டங்களால் வெற்றி பெற்று ஆசியா கிண்ணத்தை சுவீகரித்தது

முதலில் ஆடிய இந்தியா அணி நிர்ணைக்கப்பட்ட 50 ஓவர்களில் 4விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 269 ஓட்டங்களைப் பெற்றது

J Sharma - 62

*M Raj -108

இதுக்கு பதிலளித்து ஆடிய இலங்கையணி 50ஒவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 172 ஓட்டங்களையே பெற முடிந்தது

PRCS Kumarihami - 58

*HASD Siriwardene- 55

ஸ்கோர்

இந்தியா - 269/4 (50 ஓவர்)

இலங்கை - 172/9

http://usa.cricinfo.com/db/ARCHIVE/2005-06..._04JAN2006.html

57449.jpg

Mithali Raj with the Asia Cup

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.