Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் நல்லிணக்கத்துடன் வாழ தமிழர்களும் முல்லீம்களும் விரும்புகிறார்கள்

Featured Replies

கடந்த நூற்றாண்டில் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த போரின்போதும் தங்களது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லீம்கள் படிப்படியாக வீடு திரும்புகிறார்கள்.

ஆனால் கடந்த காலத்தின் கசப்பான நினைவுகள் பசுமரத்தாணி போலப் பதிந்திருக்கும் இந்த முல்லீம்களுக்கு அயலிலுள்ள தமிழர்களுடன் இணக்கத்துடன் வாழ்வது சவால் நிறைந்த காரியமாகவே இருக்கும்.

இவ்வாறு ஐ.நாவின் மனிதார்ந்த விவகாரங்களுக்கான செயலகத்தின் IRIN செய்தித் தளத்தில் எழுதப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக தமிழாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

அத்தளத்தில் தொடர்ந்து எழுதப்பட்டுள்ளதாவது,

தமிழர்களுக்குச் சுதந்திரத் தனிநாடு அமைப்பதற்காகப் போராடிவந்த விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியாவின் சில பகுதிகளிலிருந்து 1990ம் ஆண்டு 75,000 முல்லீம்களை வெளியேற்றியிருந்தார்கள்.

கடந்த மே மாதம் போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து முஸ்லீம்களது மீள்குடியேற்றம் தொடர்பான கேள்வி எழுந்தது.

'மீள்குடியேறிவரும் முஸ்லீம்களுக்கு உட்கட்டுமான மேம்பாடு மற்றும் பாடசாலைகள், நலவாழ்வு நிலையங்கள் போன்ற வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவேண்டும்' என கொழும்பு பல்கலைகழகத்தின் மானுடவியலாளரான பசானா ஹனீபா கூறுகிறார்.

இடம்பெயர்ந்த முஸ்லீம்களின் மேம்பாட்டுக்காக உழைத்துவரும் முஸ்லீம் அமைப்புக்களையும் மக்கள் அமைப்புக்களையும் தன்னகத்தே கொண்ட பொதுமக்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவராகவும் இவர் இருக்கிறார்.

இவ்வாறாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்;டின் கீழிருந்து இடம்பெயர்ந்த முல்லீம்கள் நாட்டினது வட மத்திய மாகாணத்தில் குறிப்பாக புத்தளம் மாவட்டத்தில் குடியமர்ந்தார்கள்.

'புத்தளத்திலும் வடக்கு முஸ்லீம்கள் இடம்பெயர்ந்து வாழும் இதர பகுதிகளிலும் அவர்கள் அந்தந்த சமூகங்களுடன் ஒன்றிணைந்துவிட்டார்கள் என்பதையும் நாம் கருத்திற்கொள்ளவேண்டும்.

இடம்பெயர்ந்து வசிப்பவர்களில் குறிப்பிட்ட சில பகுதியினர் மீண்டும் தங்களது சொந்த இடங்களுக்குச் செல்வதற்கு விரும்பமாட்டார்கள்' என ஹனீபா IRIN இடம் தெரிவித்தார்.

படிப்படியாக ஊர் திரும்பும் முல்லீம் குடும்பங்கள்

போரினால் சிதைந்துபோன நாட்டினது வடக்குப் பகுதிகளில் நிலவிவரும் நிலைமையின் அடிப்படையிலேயே முஸ்லீம்களும் தமது ஊர்களுக்குத் திரும்பிச் செல்கிறார்கள்.

யாழ்ப்பாணம் முஸ்லீம் தெரு

புலிகளால் கட்டாயமாக வெளியேற்றப்படுவதற்கு முன்னர், தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட யாழ் குடாநாட்டில் 5,500 முல்லீம் குடும்பங்களைச் சேர்ந்த முஸ்லீம்கள் வசித்து வந்திருக்கிறார்கள்.

புத்தளம் பகுதியில் இடம்பெயர்ந்து வசித்த வெறும் 100 முஸ்லீம் குடும்பங்களே 1995ம் ஆண்டு யாழ்.குடாநாடு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தவுடன் அங்கு மீள்குடியேறியதாக புள்ளிவிபரங்கள் கூறுகிறது.

மன்னார் மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் கடந்த ஓகஸ்ட் 2009ம் ஆண்டுக்குப் பின்னர் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லீம்கள் மீள்குடியேறி வருகிறார்கள்.

குடாநாட்டில் முன்பொரு காலத்தில் முஸ்லீம்களின் பிரபலமான வீதியாகக் திகழ்ந்த சோனகத் தெரு தற்போது திருத்தியமைக்கப்படாமல் சீரழிந்த நிலையில் இருக்கிறது.

யாழ் கண்டி நெடுஞ்சாலை பொதுமக்களின் போக்குவரவுக்காகத் திறக்கப்பட்ட பின்னர் 1,500 குடும்பங்களைச் சேர்ந்த 6,000 முல்லீம்கள் குடாநாட்டில் மீள்குடியேறிவிட்டார்கள் என உத்தியோகபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றபோதும், முறையான பதிவுகளை மேற்கொள்ளாது பல முஸ்லீம் குடும்பங்கள் மீள்குடியிருக்கிறார்கள் என அகதிகளுக்கான ஐ.நாவின் உயர் ஆணையகம் கூறுகிறது.

குழப்பத்தினைத் தந்த வெளியேற்றம்

முலீம்களின் மீள்குடியேற்றம் என்று வரும்போது, இழப்பீடு, வாழ்வாதார மேம்பாடு, வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொடுப்பது, சொத்துத் தொடர்பான பிணக்குகளைத் தீர்ப்பது போன்ற நல்லிணக்க முனைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.

முஸ்லீம்கள் அவர்களது இடங்களிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டமையினால் காணி உள்ளிட்ட, சொத்து தொடர்பான அதிக பிரச்சினைகள் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இற்றைக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர். இதன் காரணமாக இரண்டு சமூகங்களுக்குமிடையிலான உறவுகள் ஏதுவுமின்றியே முஸ்லீம் மற்றும் தமிழ் சமூகங்களைச் சேர்ந்த புதிய தலைமுறையொன்று வளர்ந்திருக்கிறது.

'தற்போது முஸ்லீம்கள் மீள்குடியேறிவரும் நிலையில் அயலில் இருக்கும் தமிழ்க் குடும்பங்களின் இளைய தலைமுறையினருக்கு அந்த முஸ்லீம்களையும் தெரியாது. ஏன் வயதான தமிழர்கள்கூட முஸ்லீம்களுடன் தாம் நெருங்கிப் பழகிய நினைவுகளையும் மறந்துவிட்டார்கள்.

இரண்டு சமூகங்களையும் சேர்ந்தவர்களிடையேயான இடைத்தொடர்புகள் இடம்பெறும் போது ஏற்படக்கூடிய முறுகல் நிலை முளையிலேயே கிள்ளியெறியப்படவேண்டும்;' என ஹனீபா எச்சரிக்கிறார்.

முஸ்லீம்களுக்குப் போதிய கால அவகாசம் எதனையும் வழங்காது விடுதலைப் புலிகள் அவர்களைத் தீடீரென வெளியேற்றியிருந்தார்கள். ஒரு மணி நேரத்திற்குள் அனைவரும் வெளியேறிவிடவேண்டும் என அவர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தார்கள்.

'ஜானியா மைதானத்தில் உடனடியாகக் கூடுமாறு விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தார்கள். அனைத்து முஸ்லீம்களும் இரண்டு மணி நேரத்திற்குள் குடாநாட்டை விட்டு வெளியேறிவிடவேண்டும் என அவர்கள் எங்களிடம் அறிவுறுத்தினர்' என்று மூன்று பிள்ளைகளின் தந்தையான 55 வயதுடைய முகமட் ஜசித் கூறுகிறார்.

இவர் 1996ம் ஆண்டு புத்தளத்திலிருந்து குடாநாட்டுக்குச் சென்றுவிட்டுத் திரும்பினார்.

ஊருக்குச் சென்ற புழுகில் புத்தளத்திலுள்ள தனது வீட்டுக்குச் சென்ற முகமட் தான் யாழ்ப்பாணம் சென்ற செய்தியை மனைவியிடம் கூறியிருக்கிறார்.

'எனது மனைவி, நான் யாழ்ப்பாணம் சென்றுவிட்டுத் திரும்புகிறேன் என்பதை ஆரம்பத்தில் நம்பவில்லை. நான் பகிடி விடுகிறேன் என அவர் எண்ணியிருக்கிறார். பின்னர் அயலவர்களிடம் விசாரித்துவிட்டு அழுதுகொண்டு வீட்டுக்கு வந்தார்.'

முகமட்டினது மனைவி இதனை நம்ப மறுத்தை விளங்கிக்கொள்ளமுடிகிறது. வடக்கில் முஸ்லீம்களும் தமிழர்களும் எந்தவிதப் பிரச்சினையுமின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

தாங்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட துன்பியல் நிகழ்விற்கு முகமட் யாழ்ப்பாணத்துத் தமிழர்களைக் குறை கூறவில்லை. 'எங்களுக்கு உதவிசெய்ய முடியாத கையறு நிலையில் அவர்கள் இருந்தார்கள். எங்களுக்கு அவர்கள் உதவியிருந்தால் புலிகள் தமிழர்களையும் தண்டித்திருப்பார்கள்' என முகமட் கூறுகிறார்.

மீண்டும் நல்லிணக்கத்துடன் வாழவேண்டும் என்ற அவா

குடாநாட்டில் மீள்குடியேறிவரும் முஸ்லீம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் அமைதி நிலவுவதாகவே தெரிகிறது என பொதுமக்கள் ஆணைக்குழு கூறுகிறது.

முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட நிகழ்வினை நேரடியாகக் கண்ட பத்மராஜா என்ற ஒய்வுபெற்ற பாடசாலை ஆசிரியர் அவர்கள் குடாநாட்டுக்குத் திரும்புவதை வரவேற்கிறார்.

'முல்லீம்கள் குடாநாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என தமிழர்கள் ஒருபோதும் விரும்பியதில்லை. நாங்கள் ஒரே மொழியினைப் பேசும் மக்கள் குழுமம். எமக்கிடையே எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை' என்கிறார் அவர்.

முல்லீம்களுக்கு என்ன நடந்ததோ அதற்கு ஒட்டுமொத்தத் தமிழர்களும் மன்னிப்புக் கோரவேண்டும் எனப் பத்மராஜா நம்புகிறார்.

'முஸ்லீம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு அவர்கள் வெளியேற்றப்பட்ட துன்பியல் நிகழ்வினை வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தோமே என்ற குற்ற உணர்வு தமிழர்கள் மத்தியில் இருக்கிறது. இந்த நிலையில் எனது முஸ்லீம் நண்பர் ஒருவரை நான் எந்த முகத்தோடு வரவேற்பேன்' என்கிறார் பத்மராஜா.

http://www.puthinappalakai.com/view.php?20100430101025

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.