Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளது – ஹர்ஷ டி சில்வா

Featured Replies

இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளது – ஹர்ஷ டி சில்வா

14 May 10 01:28 am (BST)

இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும், சிரேஸ்ட பொருளியல் ஆய்வாளருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கூடுதல் வட்டி வீதத்திற்கு கடன்களைப் பெற்றுக் கொள்ளாது அரசாங்கத்தினால் பொருளாதாரத்தை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வருமானம் குறைவடைந்துள்ளதனால் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் பொருளதார சரிவை எதிர்நோக்கிய கிரேக்கத்திடமிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடுப்பாடற்ற செலவு மற்றும் வர்த்தகக் கடன்களைப் பெற்றுக் கொள்வதன் மூலம் பாரிய பிரச்சினைகள் ஏற்படக் கூடுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் அடிப்படை பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

உட்கட்டுமான வசதிகளை விருத்தி செய்யும் நோக்கில் பிணைப் பத்திரங்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கும் அரசாங்கத்தின் நியாயப்படுத்தல் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எச்.எஸ்.பி.சீ வங்கியிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் முதலீட்டு விருத்திக்காகப் பயன்படுத்தாது, உணவுப் பொருட் கொள்வனவிற்காக பயன்படுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=24353&cat=1

இப்படியும் ஒரு நாள் நடக்கலாம்....

மேற்குலக முதலீட்டு வங்கிகள், அரசாங்கத்தின் கடன்பத்திரங்களில் முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அரை வாசித் தொகை திருப்பித் தரப் படும் என்று ஒப்பந்தம் போடலாம். மிகுதி அரைவாசி யார் தருவார்கள்? சந்தேகமில்லாமல் இலங்கை ஐடண்டிக்காட்(NIC) வைத்திருப்பவர்கள் தான். தமது சம்பளத்தை, ஓய்வூதியத்தை குறைத்து, காப்புறுதிகளுக்கு அதிக கட்டுப்பணம் கட்டி, வங்கிச் சேவைக்கு அதிக கட்டணம் செலுத்தி, கடனை அடைப்பார்கள்.

இவையெல்லாம் இலங்கை மக்களை ஆத்திரமுற வைக்காது காரணம் அப்போது ஏதாவது புலி வருது எலி வருது எண்டு சிங்கள தலைவன் ஆராவது ஏதாவது பூச்சாண்டி காட்டிக்கொண்டேயிருப்பான்.

தமது லாபத்தை குறைத்துக் கொள்ளாத முதலாளிகளும், ஆடம்பரங்களைக் குறைத்துக் கொள்ளாத பணக்காரர்களும் கடன் சுமையை பொறுப்பேற்க வேண்டும் என ஜே.வி.பி போன்ற இடது சாரிகள் கத்தலாம் ......இலங்கையின் தவறான முகாமைத்துவத்திற்கு இவர்கள் காரணமில்லையா?

இன்று ஜீ.எல் பீரிஸ் முன்வைக்கும் சிக்கலான பொருளாதார சூத்திரமெல்லாம் சாதாரண பொதுமகனுக்கு புரியாத சிதம்பர ரகசியம். ஆயினும் எதிர்காலத்ஹ்டில் அப்பாவி பொது மக்கள் தான் பொருளாதார பிரச்சினைக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.

இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினை டொலருக்கு எதிரான இலங்கை ரூபாய் வீழ்ச்சியடையும் . இது ஒரு வகையில் தமிழருக்கு நன்மையை தந்தாலும்(வெலிநாட்டு காசு வருமல்ல....), நீண்ட கால நோக்கில் தீங்கு விளைவிக்கலாம். ரூபாயின் பெறுமதி குறைந்தால் ஏற்றுமதி அதிகரிக்கும். இது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளுவதற்கு வழிவகுக்கலாம்.

ஆயினும் பணக்கார அமெரிக்க,ஐரோப்பிய, நாசமாப்போன இந்தியா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே இதனால் இலாபமடையும்

  • தொடங்கியவர்

இதுக்காக தமிழர்கள் மகிழ்ச்சி அடைய ஒண்றும் இல்லை... இதை சாதகமாக பயன் படுத்தும் நிலையிலும் இல்லை...

புலிகள் இருந்தவரைக்கும் இலங்கையை கையுக்குள் கொண்டுவர போதுமான நிதியை குடுத்து இலங்கையை தனது கைகளுக்குள் வைத்துக்கொண்டவர்... இப்போ நிதியை காரணம் காட்டி இலங்கையை பணிய வைத்து நலன்களை அனுபவிக்க பார்க்கின்றனர்...

புலிகள் பலமாக இருந்தவரைக்கும் இலங்கையின் பொற்காலமே...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிறீஸ் மாதிரி வந்தா ஒரேயடியா அமத்தி...சேத்து வச்ச காச காட்டி பெயிலவுட் செய்து...தமிழீழம் வேண்டலாமெண்டு பாத்தா அதுவும் ஏலாதாம். :rolleyes:

  • தொடங்கியவர்

கிறீஸ் மாதிரி வந்தா ஒரேயடியா அமத்தி...சேத்து வச்ச காச காட்டி பெயிலவுட் செய்து...தமிழீழம் வேண்டலாமெண்டு பாத்தா அதுவும் ஏலாதாம். :rolleyes:

தமிழன் தான் சிங்களவனை தூக்கி விடும் ஏணியாய் மாத்தி வைச்சு கொண்ட உங்களுக்கு தமிழீழம் ஒண்டுதான் கேடு...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.