Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரகீத் கடத்தப்பட்டது ஏன்? கொழும்பில் கடத்தப்படட்ட தமிழர்களுக்கு என்ன நடந்தது? போரில் இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டனவா? லங்கா.ஈ நியூஸ் ஆசிரியர் வெளிப்படுத்துகிறார் ‐ தொகுப்பு – விசேட தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள்‐

Featured Replies

பிரகீத் கடத்தப்பட்டது ஏன்? கொழும்பில் கடத்தப்படட்ட தமிழர்களுக்கு என்ன நடந்தது? போரில் இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டனவா? லங்கா.ஈ நியூஸ் ஆசிரியர் வெளிப்படுத்துகிறார் ‐ தொகுப்பு – விசேட தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள்‐

15 May 10 06:58 pm (BST)

பிரகீத் எக்னலியகொட லங்கா ஈ நியூஸ்இன் அரசியல் பத்தியாளராக இருந்தார். அத்தோடு கடந்த இரண்டு வருடங்களாக அவர் கேலிச்சித்திரங்கள் வரைவதிலும் ஈடுபட்டிருந்தார். இன்றோடு அவர் காணாமல் போய் 106 நாட்களாகி விட்டன. அவர் காணாமல் போனதிலிருந்து அவருடைய நண்பர்கள் அவரைத் தொடர்ந்தும் தேடி வருகிறார்கள்.

இதேவேளை ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்ரர் ஐவன் பிரகீத்இன் பெயருக்கு இழுக்கு ஏற்படும் வகையில் அவர் காணாமல் போனது பற்றி தனது கற்பனைகளை அண்மையில் எழுதி இருக்கிறார்.

இப்போது ஐலண்ட் பத்திரிகையின் அரசியல் பத்தியாளரான சி.ஜே. சந்திரப்பெருமா கடந்த ஏழாம் திகதியும் எட்டாம் திகதியுமாக இரண்டு நாட்கள் பிரகீத் எக்னலியகொடவின் விடயங்கள் என்ற தலைப்பில் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவர் அக்கட்டுரையில் 20 வருடங்களாகத் தனக்குப் பிரகீத்தைத் தெரியும் என்றும் அவர் காணாமல் போனதற்கு முதலைக் கண்ணீர் வடிப்பதோடு. அதற்குக் காரணம் ஊடகவியலாளர்களே எனவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இந்தக் கட்டுரையினூடாக அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால் அவர் கடத்தப்பட்டுக் காணாமல் போகவில்லை, அவர் தானாகவே போய் எங்கோ ஒழிந்து கொண்டுள்ளார். மறுபக்கத்தில் பிரகீத் ஒரு ஊடகவியலாளர் அல்ல. அவர் ஒன்றுக்கும் பிரயோசனமற்ற சாதாரணமான ஓராள். இதற்கும் மேலாக சந்திரப்பெருமா பிரகீத்தைப் பற்றிய சித்திரத்தை எவ்வாறு கொடுக்க முனைகிறார் என்றால் "பிரகீத் வறுமையில் அடிபட்ட ஒரு மனிதன். தன்னுடைய குழந்தைகளைப் பராமரிக்க வக்கில்லாத ஒருவர். அதனால் ஏதாவதொரு நாடொன்றில் அரசியற் தஞ்சம் கோருவதற்காக அவர் ஒழிந்து கொண்டுள்ளார் என்பதனையே.

இவ்வாறு பிரகீத் காணாமற் போனதன் பிற்பாடு அது குறித்து வேறுபட்ட பலர் பல்வேறுபட்ட கதைகளைக் கூறியுள்ளனர். லங்கா ஈ நியூசின் ஆசிரியரான நான் இதுவரை மௌனமாகவே இருந்தேன். ஆனால் அமைச்சர் ஒருவரின் சகோதரருக்குச் சொந்தமான ஐலன்ட் பத்திரிகையில் அதனுடைய அரசியற் பத்தியாளரான சந்திரப் பெருமா (இவர் பரா குறூப் என அழைக்கப்பட்ட அரச இராணுவத்தோடு சேர்ந்தியங்கிய படுகொலைக் குழுவொன்றின் உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது) எழுதிய கட்டுரையே என்னை இதனை எழுதத் தூண்டியது.

முதலாவதாக விக்டர் ஐவனும், சந்திரப்பெருமாவும் என்ன அடிப்படையில் இவ்வாறான கட்டுரைகளை எழுதியுள்ளார்களென நான் அவர்களிடம் கேட்க விரும்புகிறேன். இதில் எங்கே எக்னேலியகொட தொடர்பான நிலைப்பாடு உள்ளது. காணாமற் போனவர்கள் தொடர்பான விடயங்களை வெற்றிகரமாக மூடி மறைக்கும் ராஜபக்ச அரசாங்கத்தின் வழிமுறைதான் இது. கொழும்பில் மட்டும் 600 பேர் காணாமற் போயுள்ளார்கள். அவ்வாறாயின் முழு நாட்டிலும் எத்தனை ஆயிரம் பேர் காணாமற் போயிருப்பார்கள். இன்னும் எவ்வளவு பேர் காணாமற் போகப் போகிறார்கள். லங்கா ஈ நியூஸ் அவ்வப்போது காணாமற் போனவர்களுடைய பெயர், அவர்களுடைய முகவரி, அவர்கள் கடத்தப்பட்ட இடம் என்பன குறித்த தகவல்களை வெளியிட்டு வந்துள்ளது.

கொழும்பில் காணாமற் போன 600 பேரும் தமிழர்களும், முஸ்லிம்களுமே. சிங்கள மக்களோ வழமைபோல இவர்கள் புலிகள் என்று சொல்லி விடுவார்கள். அவ்வாறு 600 புலிகள் கொழும்பில் இருந்தால் நிச்சயமாக அவர்களிடம் 24 பிளட்டுன்கள் இருந்திருக்க வேண்டும். இவ்வளவற்றையும் வைத்துக் கொண்டு அவர்கள் ஏன் கொழும்பில் ஒன்றும் செய்யவில்லை? அவர்களால் ஏன் கொழும்பில் ஒன்றையும் செய்ய முடியாமற் போனது? இவையெல்லாமே வெறும் பொய்கள். காணாமற் போனவர்கள் பலர் அப்பாவி இளைஞர்களும் யுவதிகளுமே. இவர்களைக் கடத்திய குழுக்கள் அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டின. இந்தக் கடத்தல்களுக்கும் காணாமற் போதல்களுக்கும் பிரதான காரணமாக இருந்த ஒரு கடற்படை அதிகாரி என்னுடைய நண்பர் ஒருவருக்குச் சொல்லியிருக்கிறார் "நாங்கள் ஒருவரைக் கடத்திய பின் அவருடைய கைத்தொலைபேசியிலுள்ள முதற் பத்து நபர்களையும் கடத்துவோம். பின்னர் அந்தப் பத்து நபர்களினுடையதும் தொலைபேசிகளிலுள்ள முதற் பத்து நபர்களைக் கடத்துவோம்."

வெள்ளை வான்களில் கடத்தப்பட்ட இவர்கள் எவரும் வீடு திரும்பியதில்லை. பிரபல ஊடகவியலாளரான ரிச்சர்ட் டி சொய்ஸா கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் அவரது சடலம் கடற்கரையில் வீசப்பட்டிருந்தது. அவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டதன் பின்னர் எழுந்த சிக்கல்கள் காரணமாக கடத்தல்காரர்கள் புதிய வழிமுறைகளைக் கையாளத் தொடங்கினார்கள் இந்த இடத்தில் நான் இதனோடு சம்பத்தப்பட்ட இன்னொரு விடயத்தைச் சொல்கிறேன்.

சமாதானச் செயற்பாட்டாளரும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சமாதானத்திற்கான ஆலோசகருமான கலாநிதி குமார் ரூபசிங்கவுடன் நடந்த ஒரு விவாதத்தை இங்கு குறித்துக் காட்ட விரும்புகிறேன். அவர் அந்த விவாதத்தின் போது என்னிடம் கேட்டார் "கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நடக்கின்றது என்பது உமக்குத் தெரியுமா? என்று. எனக்குத் தெரியாதென்று நான் சொன்னேன். அவர் சொன்னார் அவர்கள் கொல்லப்படுகிறார்கள். அவர்களுடைய தலையும் உடற் பாகங்களும் துண்டு துண்டாக வெட்டப்பட்டு படகில் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் வீசப்படுகிறது. இவ்வாறு நடுக்கடலில் வீசப்படுவதால் உடலும், தலையும் நீரின் அடிப்பாகத்திற்குப் போய்விடுகிறது. இதனால் எவராலும் எத்தகைய ஆதாரத்தையும் தேடிக் கண்டு பிடிக்க முடியாது" என அவர் தெரிவித்தார். இதனைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன்.

போர்க்காலத்தின் போது என்னுடைய இன்னொரு நண்பரைச் சந்தித்தேன். அவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அடுத்த கட்டிலில் இருந்தவர் ஒரு கடற்படை அதிகாரி அந்தக் கடற்படை அதிகாரியின் மனைவி தனது கணவன் குறித்துக் கூறிப்புலம்பியதை நான் என் காதால் கேட்டேன். "என்னுடைய கணவர் அர்த்த இராத்திரியில் சடலங்களைக் கொண்டு போய்க் கடலில் போட்டு வந்தவர். இதனால் அவர் மூளைக் கோளாறுக்கு ஆளாகி விட்டார்" என அவர் மனைவி புலம்பினார்.

நான் இங்கு குறித்துக் காட்டிய தகவல்கள் ராஜபக்ச அரசாங்கத்தில் கடத்தப்பட்டவர்களினதும், காணாமற் போயுள்ளவர்களினதும் நிலைமைகள் என்னவாகியிருக்கிறது என்பதனை விளக்குகிறது. இவ்வாறான குற்றச் செயல்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதும் இவை குறித்த விசாரணைகள் நடத்தி உண்மைகளைக் கண்டறிவதும் அரசாங்கத்தின் கடமை.

கொழும்பில் காணாமற் போன முதல் ஆள் அல்ல பிரகீத். ஆனால் சிங்கள இனத்தைச் சேர்ந்த காணாமற்போன முதலாவது ஊடகவியலாளர் இவர். இந்தக் கடத்தல்கள் நடைபெற்ற காலப் பகுதியில் ஊடகவியலாளர்கள் இரகசியமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். ஐவனும், சந்திரப் பெருமாவும் இந்தக் கால கட்டத்தைப் பற்றி என்ன நினைக்கிறார்கள். இந்தப் படுகொலை அரசாங்கத்தை அவர்கள் பாதுகாக்கப் போகிறார்களா? விழுமியங்களையும், ஒழுக்கவியலின் அடிப்படை நெறிகளுக்கமையவும் எழுதி வந்த சக ஊடகவியலாளர்களை வேட்டையாடும் இந்தப் பேயாட்சிக்கு இவர்கள் வெள்ளையடிக்கப் போகிறார்களா?

சந்திரப் பெருமாவினுடைய கட்டுரையில் பிரகீத் கடத்தல் குறித்து பல்வேறு கதைகள் சொல்லப்பட்டாலும் பிரகீத் முதல் தரம் கடத்தப்பட்டது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். போரில் ஈடுபடும் இரண்டு தரப்பும் பயன்படுத்தும் பயங்கரமான ஆயுதங்கள் பற்றிய தகவல்களைப் பிரகீத் சேகரித்து வந்ததாகவும், அதனால் அரசாங்கத்தின் கோபத்திற்கு ஆளாகி இருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதைத் தான் சாக்குக்குள்ளிருந்து பூனை வெளியே வந்தது என்று சொல்வது. ஐலண்ட் பத்திரிகை அமைச்சரின் சகோதரரின் பத்திரிகை ஐலண்ட். லக்பிம பத்திரிகை அரசாங்கத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமானது. இவ்விரண்டு பத்திரிகைகளும் வஞ்சகமான முறையில் பிரகீத்க்கும் எனக்கும் எதிரான பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட ஆரம்பித்துள்ளன. இதனூடாக இரசாயன ஆயுதங்கள் பற்றிய கதையை மறைத்து விட முனைகின்றன.

சந்திரப் பெருமா இது குறித்து தனது கட்டுரையில் முதலாவது தகவலைத் தந்ததற்கு அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். இது தான் அவர் முதல் முறை கைது செய்யப்பட்டதற்கும் விடுவிக்கப்பட்டதற்கும் பின்னணியில் காரணமாக இருந்திருக்கிறது என்பது தற்போது வெளிப்பட்டிருக்கிறது.

போர் நடைபெற்ற காலப்பகுதியில் அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் இரசாயன ஆயுதங்களைப் பாவித்தார்களா என்ற தகவல்களைத் தேடிக் கொண்டிருந்தார் பிரகீத். உலகப் போர்களின் போது இரசாயனப் பாவனைக்கு அங்கீகரிக்கப்பட்ட அளவை விட அதனையும் மீறிப் பாவித்தருக்கிறார்களா எனவும் அவர் தகவல் திரட்டிக் கொண்டிருந்தார். இது தொடர்பாக விக்ரமபாகு கருணாரத்னவின் கட்சி உறுப்பினர்களுக்கு அவர் விரிவுரையும் ஆற்றியிருக்கிறார். இவை தொடர்பாகக் காலத்திற்குக் காலம் அவர் சேகரித்த தகவல்களை அவர் எனக்கு சமர்ப்பித்துக் கொண்டிருந்தார்.

எங்களது இணையத் தளத்தில் வெளியான கட்டுரை ஒன்று சம்பந்தமாக என்னிடம் விசாரணை நடாத்துமாறு பாதுகாப்பு செயலாளர் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர்கள் என்னை நான்காம் மாடிக்கு விசாரணைக்கு அழைத்தனர். அங்கு நான் 8 மணித்தியாலங்களாக விசாரிக்கப்பட்டேன். விசாரணை முடிந்து அங்கிருந்து நான் வெளியேறிய போது எனக்குத் தெரிந்த சட்டத்தரணி ஒருவரும் இராணுவ அதிகாரி ஒருவரும் என்னைச் சந்தித்து உரையாடினர். ஆந்த இராணுவ அதிகாரியின் பெயர் மேஜர் குமார. பின்னர் அவர் வவுனியாவில் கடமையாற்றிய போது போர் நிலவரங்கள் குறித்த தகவல்களை எனக்குத் தந்துதவினார். சட்டத்தரணி ஊடகவே அவர் எனக்கு அறிமுகமாகியிருந்தார். எனது சட்டத்தரணி அவருக்காக ஒரு வழக்கில் ஆஜராகி இருந்தார். அவர் வழக்கிற்காகக் கொழும்புக்கு வந்திருந்தார்.

சட்டத்தரணியுடனான உரையாடலுக்குப் பின்னர் நாங்கள் வேறோரிடத்திற்குச் சென்று உரையாடினோம். அந்த இராணுவ அதிகாரி தான் ஆயுதக் களஞ்சியத்திற்குப் பொறுப்பாக இருப்பதாகக் கூறினார். களஞ்சியத்தில் வைத்து சில வகையான தோட்டாக்களின் உட்பொருட்கள் அகற்றப்பட்டு இரசயனங்கள் நிரப்பப்பட்டு பாவிக்கப்பட்டதாக அவர் கூறினார். பத்து தோட்டாக்களில் மூன்று அல்லது நான்கு இவ்வாறு இரசாயனங்களால் நிரப்பப்பட்ட தோட்டாக்களாக இருந்தன என்றும் அவர் சொன்னார். களமனையில் இருந்த படையினர் இது குறித்து அறிந்திருந்தார்களா என்று நான் கேட்ட போது அவர்கள் இவை எவை பற்றியும் அறிந்திருக்கவில்லை என்றும் அவர் சொன்னார். இந்த இரசாயனம் நிரப்பப்பட்ட தோட்டாக்கள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் கேட்டதற்கு உட்புகமுடியாத தடைகளைத் தகர்க்க வழி செய்யும் என்பதோடு அப்பகுதியிலுள்ள எல்லாவற்றையும் சாகடித்து விடும் என்றும் அவர் சொன்னார்.

மேஜர் பிரகீத்க்கு தேவையான தகவல்களைத் தரக் கூடும் என்ற படியால் பின்னர் நான் அந்த மேஜரை இரசாயன ஆயுதங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டிக் கொண்டிருந்த பிரகீத்க்கு அறிமுகம் செய்து வைத்தேன்.

முதல்முறை பிரகீத்தைக் கடத்திய போது கடத்தியவர்கள் அந்த மேஜருக்கும் பிரகீத்க்கும் என்ன உறவு என்று விசாரித்துள்ளார்கள். மேஜரிடமிருந்து பல தொலைபேசி அழைப்புக்கள் வந்ததற்கான ஆதாரங்கள் பிரகீத்தின் கைத்தொலைபேசியில் இருந்துள்ளது. பிரகீத் விடுதலையான பின்னர் அந்த மேஜரைத் தொடர்பு கொள்ள பலமுறை முயன்ற போதும் அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. அப்போதிருந்து மேஜர் குமாரவுக்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரிய வரவில்லை. போர் முடிவடைந்த பின்னரும் கூட அவர் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. அவர் தனது வழக்கில் ஆஜராகக் கூட அதன் பின்னர் வரவில்லை.

முதன்முறை பிரகீத் கடத்தப்பட்ட போது அது தவறுதலாக நடைபெற்றது என்று கூறி அவர் விடுவிக்கப்பட்டார். முதன்முறை பிரகீத் தான் மேஜரிடமிருந்து பெற்ற தகவல்கள் எதனையும் வெளிப்படுத்தவில்லை. பின்னர் ஜனாதிபதித் தேர்தலின் போது பிரகீத் சரத் பொன்சேகாவுக்கான பிரச்சாரப் பணியில் ஈடுபட்டார். ஜனாதிபதித் தேர்தலின் போது சரத் பொன்சேகா போர்க்குற்றங்களில் ஈடுபட்டோர் மீது தான் நடவடிக்கை எடுக்கப் போவதாக வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். இது தான் பிரகீத் இரண்டாவது முறை கடத்தப்பட்டதற்குக் காரணமாக இருந்திருக்கிறது.

அரசாங்கமும் புலிகளும் இரசாயன ஆயுதங்கள் பாவித்திருப்பார்களானால் பிரகீத் காணாமல் போனதுடன் அவர் சேகரித்த அந்த தகவல்களும் காணாமல் போயிருக்கும்.

இந்நிலையில் விக்ரர் ஐவனும் சந்திரப் பெருமாவும் தங்களது ஊகங்களினடிப்படையில் தங்களது தலைவருக்குப் பிடித்ததை எழுதி அவர்களைப் பாதுகாக்க முனைகிறார்கள்.

உத்தியோகபூர்வமற்ற ஜனாதிபதியின் ஆலோசகர் விக்ரர் ஐவன் பிரகீத்இன் உண்மையான படிமத்தை மறைப்பதனூடாக மகிந்த அரசாங்கத்திற்கு சேவகம் புரிய முற்படுகிறார். பிரகீத் அமைச்சர் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுதியதால் தான் அவர் காணாமவ் போனார் என்று ஐவன் குறிப்பிடுகிறார். உண்மை என்னவென்றால் பிரகீத் எழுதிய அந்தக் கட்டுரைக்கும் அவர் கடத்தப்பட்டதற்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என்பதாகும். ஆந்தக்கட்டுரையைப் பிரசுரித்ததற்கான முழுப் பொறுப்பையும் அதன் ஆசிரியர் என்ற வகையில் நான் ஏற்றிருக்கிறேன். பாலியன் மனவிகாரமுள்ள ஒரு அமைச்சரைப்பற்றி எழுதுவது ஒன்றும் தனிப்பட்ட விவகாரமல்ல. அது பொது நலன் சம்பந்தப்பட்டது. ஆகக் குறைந்த பட்சம் வாக்களிக்கும் பெண் வாக்காளர்கள் தாம் எப்படிப்பட்டவருக்கு வாக்களிக்கிறோம் என்று அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்குமல்லவா? ஏன் விக்ரர் ஐவன் நீதிபதி லெனின் ரட்நாயக்காவினதும் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவினதும் பாலியல் முறைகேடுகள் பற்றி எழுதவில்லையா?

இன்னொரு இடத்தில் சந்திரப் பெருமா குறிப்பிடுகிறார். தமிழர்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு சிங்களவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடத்துவதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என் சந்திரப் பெருமா ஓரிடத்தில் வினவுகிறார். அவருடைய வார்த்தைகளின்படி அவர் தமிழர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடத்தப்படுவதனை ஒப்புக் கொள்கிறார்.

சந்திரப் பெருமா கூறுவதன்படி எழுதத் தெரியாத ஒன்றுக்கும் பிரயோசனமற்ற ஒருவரை பலம் மிக்க இந்த அரசாங்கம் எதற்காகக் கடத்த வேண்டும். அதேபோல் ஒன்றுக்கும் பிரயோசமற்ற 600 தமிழர்களை ஏன் கடத்த வேண்டும் என்று நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன்.

இந்தக் கட்டுரையை மீள் பதிவு செய்பவர்கள் தெகுப்பு – விசேட தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள் எனக் குறிப்பிட்டு பதிவுசெய்யவும்.

(இடதுசாரிக் கண்ணோட்டம் கொண்ட பிரகீத் எக்னெலியகொட ஊடகவியலாளராகவும் கேலிச்சித்திரக்காரராகவும், மனித உரிமையாளராகவும் தொடர்ந்து செயற்பட்டு வந்திருக்கிறார். பல்லினசமூகமொன்றிற்கான போராட்டத்தில் பிரகீத்தின் முக்கியத்துவம் என்ன என்பதையும் அவருடைய விடுதலையின் அவசியத்தையும் உணர்ந்தே குளோபல் தமிழ் செய்திகள் அது தொடர்பாகத் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. )

நன்றி: globaltamilnews.net

தமிழர்களின் உடற்பாகங்கள் வெட்டி பாக்கு நீரிணையில் வீசப்படுகின்றது என்ற உண்மையை நிதர்சன்ம் இணையம் 2007 இல் வெளியிட்ட போது இதே யாழில் நிதர்சன்ம் இணையம் பற்றி பல பொல்லாப்புகள் பேசிநோம் ஆனால் அது இன்றுதான் உறிதியாகியுள்ளது....

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் உடற்பாகங்கள் வெட்டி பாக்கு நீரிணையில் வீசப்படுகின்றது என்ற உண்மையை நிதர்சன்ம் இணையம் 2007 இல் வெளியிட்ட போது இதே யாழில் நிதர்சன்ம் இணையம் பற்றி பல பொல்லாப்புகள் பேசிநோம் ஆனால் அது இன்றுதான் உறிதியாகியுள்ளது....

நாங்கள் எப்போதும் உண்மைகளை உடனடியாக ஏற்பதைவிடப் பொய்களையே விழுந்து உபசரிக்கப் பழகிவிட்ட பழக்க தோசமாகும். நிதர்சனத்தினது செய்தியை மூன்றாண்டுகள் கழித்து உறுதி செய்யப்படுகிறது. அதேபோல் தான் நாமும் அடுத்த மூன்றாண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்குமா? நா................................................!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.