Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு எம்.பிக்கள் 21 ஆம் திகதி வன்னிக்கு பயணம்

Featured Replies

எதிர்வரும் 21 ஆம் திகதி கூட்டமைப்பின் 14 எம்பிக்கள் வன்னிக்கு செல்கின்றனர். இதுவே வன்னிக்கு கூட்டமைப்பின் எம்.பிக்கள் சென்று மக்களை சந்திக்கும் முதலாவது உத்தியோக பூர்வ நிகழ்வாகும். வன்னியல் மீளக்குடியமர்ந்த மற்றும் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஓர் அணியாகச் சென்று சந்தித்துக் கலந்துரையாட வுள்ளனர்.

எதிர்வரும் 21ஆம் திகதிமுதல் 24ஆம் திகதிவரை வன்னியில் தங்கியிருக்கும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள நலன்புரிநிலையங்கள் மற்றும் மீளக்குடியமர்ந்துள்ள இடங்களுக்கும் நேரில் செல்வர்.

எதிர்வரும் 21ஆம்திகதி காலை 7மணிக்கு வவுனியாவில் ஒன்று கூடும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் தலைமையில் சென்று கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மீளக்குடியமர்ந்துள்ளவர்களைச் சந்தித்து அவர்களின் வசதிகள், தேவைகள் மற்றும் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்வர்.

www.eelanatham.net

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலம் கனிந்துவர கனவுகண்டேன்.... :lol:

இறந்தோரின் நினவுதினத்தைச் சீர்குலைக்கும் துண்டுப் பிரசுரம் : வவுனியாவில் வெளியீடு

வன்னியில் இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து உயிரிழந்த மக்களை நினைவுகூரும் நிகழ்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வவுனியாவில் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நினைவு தின நிகழ்வைச் சீர்குலைக்கும் வகையில் 'மக்கள் பாதுகாப்பு இயக்கம்' என்ற பெயரில் துண்டுப் பிரசுரம் ஒன்றுவெளியிடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்..

அந்தக் துண்டுப் பிரசுரத்தில், .

"எதிர்வரும் 17 ஆம் திகதி புலிகள் இயக்க உறுப்பினர்கள் கொல்லப்பட்டுத் தமிழ் மக்கள் விடுதலை பெற்ற நாள். எனவே இந்தத் தினத்தை, தமிழ் மக்கள் இறந்த தினமாகக் கூறி ஒரு சில தீயசக்திகள் துக்கம் அனுஷ்டிப்பு வாரம் எனப் பிரகடனப்படுத்தி, வியாபார நிலையங்களை மூடி ஹர்த்தால்களையும் ஊர்வலங்களையும் அஞ்சலிக் கூட்டங்களையும் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. .

தமிழ் மக்கள் மரணித்ததை நினைவுகூருவதென்றால் வேறு தினத்தில் அதனை அனுஷ்டிக்க முடியும். ஆனால் தமிழ் மக்களை பல வருடங்களாகத் துன்புறுத்திய புலிகள் கொல்லப்பட்ட தினத்தை அனுஷ்டிக்கும் நோக்கத்துடனேயே அவர்கள் செயல்படுகிறார்கள். இவ்விடுதலையின் பின், எமது மக்கள் தற்போது மீள் குடியமர்த்தப்பட்டு வருவதோடு அமைதியாகவும் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் புது வாழ்க்கையை ஆரம்பிக்கத் தொடங்கியுள்ளனர்..

எனவே, இந்தச் சதி திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி எமது தமிழ் மக்களை மேலும் கஷ்டப்படுத்த முயற்சித்தால் நீங்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்படுவீர்கள் எனக் கவலையுடன் அறியத் தருகின்றோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

===========================================================================================================

இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு வவுனியாவில் அஞ்சலி

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்த தமிழ் மக்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு, வவுனியா நகரசபை மண்டபத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று மாலை இடம்பெற்றது.

இதன்போது உயிரிழந்த மக்களை நினைவுகூர்ந்து, சர்வமத பிரார்த்தனைகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். அத்துடன் வவுனியா நகரசபைத் தலைவர், உப தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை, வன்னியில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூர்ந்து வவுனியா நகரிலுள்ள இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களிலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனைகள் இடம்பெற்றுள்ளன.

வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று நடைபெற்ற மேற்படி நினைவஞ்சலி நிகழ்வானது வவுனியா, சுத்தானந்தா இந்து இளைஞர் மன்றத்திலேயே நடத்த ஏற்பாடாகியிருந்தது.

இருப்பினும், பிரதேச பொதுமக்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தொடர்ந்து விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக அதனை வவுனிய நகரசபையில் நடத்த நேர்ந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சற்றுமுன் தமிழ்மிரர் இணையத்தளத்திடம் தெரிவித்தார்.

http://www.tamil.dailymirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2475-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.