Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவிகளை அதிகரிக்க சீனா விருப்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவிகளை அதிகரிக்க சீனா விருப்பம்

திகதி: 23.05.2010 // தமிழீழம்

வடபகுதியில் இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளை அதிகரிப்பதற்கு சீனா விரும்புவதாக சிறீலங்காவுக்கான சீனா தூதுவர் யாங் சூசுபிங் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவின் புதிய பிரதமர் டி எம் ஜெயரட்னாவை சந்தித்த போதே சீனா தூதுவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறீலங்காவுக்கு சீனா அதிக உதவிகளை வழங்கி வருகின்றது. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நெல்விளையும் பிரதேசங்களான மன்னார், கிளிநொச்சி, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளுக்கு தேவையான உபகரணங்களை சீனா வழங்கியுள்ளது.

சிறீலங்காவில் முதலீடுகளை மேற்கொள்ளும் சீனா நிறுவனங்கள் சிறீலங்கா பணியாளர்களையே 91 விகிதம் பயன்படுத்தி வருகின்றன. சீனா தொழிலாளர்கள் 9 விகிதமே பயன்படுத்தப்படுகின்றனர்.

நாம் எமது கல்விமுறைகளை சிறீலங்காவில் அறிமுகப்படுத்த உள்ளோம் அதற்காக கண்காட்சி ஒன்றையும் அங்கு நடத்த திட்டமிட்டுள்ளோம். மேற்குலகத்தின் அழுத்தங்களினால் சீனா அதிகம் பதிப்படைந்திருந்தது.

சீனாவின் தொழில்துறைக்கு தேவையான றப்பர் பொருட்களை இறக்குமதி செய்வதை கூட மேற்குலக நாடுகள் 1950 களில் தடுத்திருந்தன. ஆனால் அந்த சமயத்தில் சிறீலங்கா எமக்கான உதவிகளை வழங்கியிருந்தது.

எனவே சீனாவும், சிறீலங்காவும் நீண்டகாலம் வலுவதன உறவுகளை கொண்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சங்கதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவின் துரோகத்தனத்திற்குப் பதிலடி கொடுக்க சிங்களவனுடனோ, இல்லத சீனாவுடனோ தமிழன் சேருவதில் குற்றமொன்றும் இல்லை. இந்தியா பக்கத்துணையாகவோ, வெளிநாட்டுப்பிரச்சாரத்திலோ ஈடுபட்டிருக்காவிட்டால் எமது விடுதலைப்போராட்டத்தை இவ்வளவு தூரம் பின்னோக்கித்தள்ளி இருக்கமுடியாது. சீனாவை முழுமனதுடன் அங்கீகரித்து இந்தியாவை இலங்கையிலிருந்து அன்னியப்படுத்தலில் தமிழர்கள் முன்னின்று செயல்படவேண்டும். இந்தியாவின் எந்தவொரு பரிந்துரைக்கும் செவிசாய்க்கக்கூடாது. சீனாவை இலங்கையில் பலமாகக்காலூன்ற வைத்து இந்தியாவை உடைக்கும் வழிக்கு இது ஒரு சிறந்த ஏற்பாடாகும். இந்தியா இந்தியாவாக இருக்கும்வரை தான் இலங்கையில் தமிழன் நிம்மதிப்பெருமூச்சு விடமுடியாது. குறைந்தது இவர்களைப் பழிவாங்கவாவது முடியும். ராஜபக்ஷ போர்வெற்றியை மார்தட்டிக்கொண்டாலும் அது அவருடைய வெற்றியல்ல. இந்தியாவினுடையதே என்பது பலருக்குப்புரியாத புதிர். போர்க்குற்றங்கள் மறைக்கப்படுவதும், இலங்கi அரசு போர்க்குற்றம் பற்றி செட்டையாக இருப்பதுக்கும் காரணம் விசாரணை என்று வரும்போது இந்தியாவின் உண்மைமுகம் வெளிக்கொணரப்படும். அப்போது இந்தியாவே போர்க்குற்றவாளி என்ற நிலை உருவாகும். வல்லரசின் மீது வோர்க்குற்றம் சுமத்தப்படுவதை வல்லரசுகளும் ஆதரிக்காது. இதனால் தான் போர்க்குற்ற விசாரணைகளும், அறிக்கை சமர்ப்பிப்புக்களும் பின்னே தள்ளிச் செல்கின்றன. இந்தியா போரில் தலையிட்டபோது ஐ. நாவின் செயற்பாட்டளராக விஜய் நம்பியார் இலங்கைக்கு அனுப்பப்பட்டதே நீதிக்குப்புறம்பான செயற்பாடு. இரசாயனக்குண்டும் கொத்தணிக்குண்டுகளும் போன்ற தடைசெய்யப்பட்ட குண்டுகளைப்பாவித்ததே உலகப்போர்விதிகளை மீறிய குற்றம். அதையே உலகம் கண்டுகொள்ளவும் இல்லை. கண்டிக்கவும் இல்லை. மொத்தத்தில் பார்த்தால் சர்வ வல்லரசுகளும் தமிழர்மீது போர்க்குற்றம் புரிந்துள்ளன. யார் மீது யார் பழி சுமத்துவது? ஆனால் உலகம் இந்தியாவை உடைப்பதில் முனைப்பாக இருக்கின்றன எனபதைத்தமிழர்கள் புரிந்து கொண்டு விய+கங்களை மாற்றி அமைக்கவேண்டும் என்பதே எனது கருத்து.

சீனாவை வரவேற்கும் அதே வேளை, இந்திய பயங்கரவாதத்தை அழிக்க உதவவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.