Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளிநொச்சியில் மலசல குழிக்குள் படுகொலை செய்யப்படோரின் சடலங்கள்

Featured Replies

கிளிநொச்சியில் அண்மையில் மீள் குடியேறிய மக்கள் தமது வீட்டு மலசல குழியில் ஐந்துக்கு மேற்பட்ட சடலங்களை பிளாஸ்ரிக் பைகளில் இடப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதை கண்டுள்ளனர். உடனடியாக இராணுவத்தினரும் பொலிசாரும் அப்பகுதிக்கு விரைந்துள்ளதாக தகவல்..

Dead bodies located inside a toilet pit in Ki'linochchi

[TamilNet, Saturday, 29 May 2010, 15:45 GMT]

Members of a family recently resettled in Ka'neasapuram in Ki'iinochchi after being displaced from their house, located Saturday dead bodies of massacred victims, buried inside their toilet pit, sources in Ki'linochchi said. The house was located 1 km west of A9.

The residents in the area who witnessed the the bodies said Sri Lanka Army and Police rushed to the spot as they witnessed at least five bodies inside the pit.

There could be more dead bodies. The bodies were packed in plastic bags, dumped inside the pit and covered with sand.

A proper investigation by a reliable third party should be carried out before the SLA and the police twist the story, a concerned human rights activist who did not wished to be named told TamilNet.

தமிழ்நெட் : http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31856

Edited by Yaalpaanathan

அங்கு குடியேற்றப்பட்டவர்கள் யார்? அவர்களை கண்கானிப்பவர் யார்? .... கேள்விகளுக்கு பதில் ?????

இது அங்கு தொடர்ந்து நடைபெறப்போகிறது! ... இச்செய்திகள் இலங்கைத்திருநாட்டை கட்டி எழுப்புவர்கள் பார்ப்பார்களா????

... மீள்குடியேற்றம் பற்றி இன்றொருவர் குறிப்பிடும்போது, அவரது குடும்பம் மல்லாவியை சார்ந்ததாம் .... சில நாட்களுக்கு முன் வவுனியா முகாமில் இருந்து அழைத்துக் கொண்டு சென்று வீட்டை கொண்டுபோய் காட்டினாங்களாம், வீடு ஓரளவு சேதம்தானாம், கொஞ்சம் என்றாலும் இருந்ததாம். பின் மீண்டும் மீள்குடியேற்றம் என இன்னொரு-ணால் வாகனங்களில் ஏற்றி மல்லாவியில் ஓரிடத்தில் இறக்கி விட்டாங்களாம். அவர்கள் தமது வீட்டுக்கு போனால் .... வீடு முற்றாக உடைத்து கல்லுகளூம் எல்லாம் தட்டி எடுக்கப்பட்டு ஏற்றிச் சென்ற அடையாளாம்!! அப்பகுதியில் உள்ள ஏறக்குறைய எல்லா வீடுகளும் உடைத்து அழிக்கப்பட்டும் இருந்தனவாம்! ... இன்று நாலு தகரங்களின் கீழ் திறந்த சீவியமாம்!!

இங்கு வந்து யாரும் எழுதுங்கோவன் .... இன முரன்பாட்டை வளர்க்காதீர்கள் என்று!!

  • தொடங்கியவர்

கிளிநொச்சியில் மலக்குழி ஒன்றில் ஐந்துக்கும் மேற்பட்ட சடலங்கள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கிளிநொச்சி கணேசபுரத்தில் ஐ.நா அலுவலகம் அமைந்திருந்த காணிக்கு மிக அருகாக உள்ள ஒரு காணி ஒன்றின் மலக்குழி ஒன்றிலேயே இச் சடலங்கள் காணப்படுகின்றன.

சற்று முன்னர் கிடைத்த இந்தத் தகவல் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த காணியினைத் துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மலக்குழியினை துப்புரவு செய்ய முற்பட்டவேளை அது நிரவப்பட்டிருந்த மணலினை வெளியெடுத்திருக்கின்றனர்.

அவ்வேளை குறித்த குளியினுள் கறுத்தப் பைகளால் முடிக்கட்டப்பட்ட நிலையில் பொதிகள் காணப்பட்டுள்ளன. அவற்றினை பிரித்துப் பார்த்தபோது பெண்களின் சலங்கள் காணப்பட்டிருக்கின்றன.

ஐந்துவரையான பொதிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளபோதிலும் இன்னமும் அதிகமான சடலங்கள் அதே குழியினுள் இருக்கலாம் என அங்கு சென்ற மக்களால் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் உடனடியாக படையினருக்கும், பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இவ் அறிவிப்பினை அடுத்து அங்கு சென்ற குறித்த தரப்பினை அங்கிருந்து அனைவரையும் வெளியேறுமாறு மிரட்டியிருக்கின்றனர். ஆனாலும் பெருமளவு மக்கள் திரண்டு அவற்றினைக் கண்ணுற்றதாகத் தெரியவருகின்றது.

இதேவேளை இன்று பிற்பகல் இச் சம்பவம் இடம்பெற்ற போதிலும் இன்று இரவு 7.30மணிவரை கிளிநொச்சி மாவட்ட நீதிபதிக்கு இச்சம்பவம் குறித்த முறைப்பாடு எதுவும் வழங்கப்படவில்லை என அங்கிருந்து கிடைக்கும் நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்அடிப்படையில் குறித்த சடலங்கள் இரவோடு இரவாக அங்கிருந்து அகற்றப்படலாம் என்ற அச்சநிலையும் எழுந்திருக்கின்றது.

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடங்கிய காலப்பகுதியில் இதே கணேசபுரம் பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து இரண்டு பெண்களில் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி - நெருடல் : http://www.nerudal.com/nerudal.16401.html

Edited by Yaalpaanathan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.