Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய முன்னணி நடிகர்கள் வருகைதராத காரணத்தை அரசு புரிந்துகொள்ள வேண்டும் உரிய தீர்வைக்காண வேண்டும்; ஐ.தே.க. வலியுறுத்தல்

Featured Replies

இலங்கையில் தமிழ் மக்களுக்கு அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி இந்தியாவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதன் காரணமாகவே இந்திய முன்னணி நடிகர்கள் எவரும் கொழும்பில் நடைபெற்றுவரும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க வரவில்லை என்பதை அரசு புரிந்துகொண்டு அதற்கேற்றவாறான தீர்வுகளை முன்னெடுக்க வேண்டும். இல்லாவிடில் எதிர்காலத்திலும் இதுபோன்ற பாதகமான நிலைமைகளைச் சந்திக்க வேண்டி வருமென ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அக்கட்சியின் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரான ரோசி சேனநாயக்க உரையாற்றுகையிலேயே இவ்வாறு எச்சரித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது;

பயங்கரவாதம் தோல்வியடையச் செய்யப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் அரசியல் தீர்வு ஊடாக நாட்டின் பிரச்சினைக்குத் தீர்வுகாண முற்படுவதன் மூலம் முழு உலகுக்கும் எமது உண்மையான செயற்பாட்டை வெளிக்காட்ட முடியும். அத்துடன், சர்வதேச ரீதியில் எழுகின்ற அழுத்தங்களையும் தோல்வியடையச் செய்ய முடியும்.

இதற்கான நடவடிக்கையெடுக்கப்படாத பட்சத்தில் இஃபா நிகழ்வில் ஏற்பட்ட பாதகமான விளைவுகள் போல் வெளிநாட்டு உதவி,ஜி.எஸ்.பி+, சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் தவணைக் கடன் உதவி தொடர்பிலும் பாதகமான விளைவுகள் ஏற்பட்டு மக்கள் கஷ்டப்பட வேண்டியேற்படுவதுடன், அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியாது போகும்.

இஃபா விழாவானது இலங்கையில் நடைபெறுவது எனது கட்சிக்கு மட்டுமன்றி,முழு இலங்கையருக்கும் மகிழ்ச்சியளிக்கின்றது. உலகத்தில் 2/3 பகுதியினர் பொலிவூட்டின் ரசிகர்கள். பொலிவூட்டின் ஒஸ்கார் விருதுக்கு இரண்டாவது இடத்தில் இந்திய திரைப்பட அகடமி விருது விழா இருக்கின்றது.இந்த நிலையில், இதில் பங்குபற்ற வந்துள்ள கலைஞர்களையும் ஏனையவர்களையும் வரவேற்பதுடன், வருகை தந்ததையிட்டு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்தியத் திரையுலகின் பிதாமகனான அமிதாப்பச்சன், பிரதான ஹிந்தி நடிகரான ஷாருக்கான், மக்கள் ஆதரவு பெற்ற ஐஸ்வர்யாராய்,அபிஷேக்பச்சன் போன்ற முன்னணி நடிகர்கள் இந்நிகழ்வுக்கு வரவில்லை. சர்வதேச செய்திகளின் பிரகாரம் அமிதாப்பச்சனின் வீட்டுக்கு முன் தமிழ்நாட்டைச் சேர்ந்தோர் இலங்கைக்குச் செல்ல வேண்டாமெனக் கூறி நடத்திய ஆர்ப்பாட்டமே அவர்கள் கொழும்பு விழாவைப் புறக்கணிக்கக் காரணமாக அமைந்துள்ளது.

இலங்கையிலுள்ள தமிழ்ச் சகோதர மக்களுக்கு நடந்த அநீதிகளைச் சுட்டிக்காட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாலேயே முக்கிய நடிகர்கள் பங்குபற்றவில்லை. இதன் பின்னணி குறித்து அரசாங்கம் தேடிப்பார்த்து பிரச்சினைக்குத் தீர்வுகாண முன்வர வேண்டும். இதிலிருந்து தப்ப முயலக்கூடாது.

யுத்தத்தில் வெற்றிபெற்றுள்ளோம். இந்நிலையில், சமாதானம்,சுபீட்சம் மற்றும் அபிவிருத்தி என்பவற்றை மேற்கொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதென்பதை இந்த இஃபா நிகழ்வு வெளிக்காட்டியுள்ளது. எனவே, நாட்டின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண அரசாங்கம் உண்மையுடன் செயலாற்ற வேண்டும். இல்லையேல் இஃபா நிகழ்வில் ஏற்பட்ட பாதகமான நிகழ்வுகள்போல் தொடர்ந்து எதிர்காலத்தில் அபிவிருத்தி, முதலீடு மற்றும் உல்லாசப் பயணிகளின் வருகை தொடர்பிலும் எதிர்கொள்ள வேண்டிவரும்.

அரசியலமைப்பு மாற்றம் மற்றும் ஆசியாவின் ஆச்சரியம் மிகுந்த நாடாக இலங்கையை மாற்றுவது குறித்து பேசுகின்ற அரசிடம் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள தற்போதைய பொன்னான சந்தர்ப்பத்தில் நாட்டின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வினை முன்வைத்து முழு உலகுக்கும் உண்மையான செயற்பாட்டை வெளிக்காட்டுமாறு கோருகின்றேன். இதன் மூலம் சர்வதேச ரீதியில் எழும் அழுத்தங்களை தோல்வியடையச் செய்ய முடியும்.

இல்லாது போனால் வெளிநாட்டு உதவி, ஜி.எஸ்.பி+, சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் தவணைக் கடன்கள் தொடர்பில் பாதகமான விளைவுகள் ஏற்பட்டு மக்கள் கஷ்டப்படும் நிலையேற்படுமென்பதுடன், அபிவிருத்திகளையும் மேற்கொள்ள முடியாதென்பதை தெளிவாகச் சொல்லிவைக்க விரும்புகின்றேன்.

இஃபா நிகழ்வை தென்னிந்திய முக்கிய நடிகர்களான கமலஹாசன், ரஜினிகாந்த் மற்றும் பிரபல இயக்குநர் மணிரத்னம் ஆகியோர் பகிஷ்கரித்துள்ளனர். இதற்குப் பின்னால் உள்ள சர்வதேச சக்திகள் குறித்து அரசு சிந்திக்க வேண்டும். அரசாங்கம் இடம்பெயர்ந்து முகாம்களிலுள்ளவர்களில் 90 வீதமானவர்களை மீளக்குடியேற்றியதாகக் கூறியுள்ளது. உண்மையில் 1/3 பகுதியினர் கூடச் சரியாக அவர்களது இடத்தில் மீளக்குடியேற்றப்படவில்லை.

நல்லிணக்கம் ஏற்படுவதற்கான ஆணைக்குழு அரசினால் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இதன் ஊடாக உலகை ஏமாற்ற முற்பட்டால் பாதகமான விளைவுகள் ஏற்படும். உலக நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் இலங்கையில் அப்பாவி மக்களுக்கு இடம்பெற்ற அநீதி குறித்து நன்கு தெரிந்துவைத்துள்ளனர்.

இஃபா போல் பாதகமான விளைவுகள் ஏற்படாமலும் எதிர்காலத்தில் நாட்டின் நற்பெயருக்குக் குந்தகம் ஏற்படாமலும் அரசு செயற்பட வேண்டும். இதற்கு நாட்டின் பிரச்சினைக்கு சரியான தீர்வை முன்வைக்க அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

:mellow: எந்த ரோஸி இவ?? ஐ.டி.என் இல செய்தி வாசிக்கிற அந்தக் கிப்பி வெட்டின பறங்கி அக்காவோ??

காலம்தான், ஆர் ஆர் அரசியல் கதைக்கிறதென்டு விவஸ்த்தை இல்லாமப் போட்டுது. மாலையானதும் தண்ணியடிச்சுப் போட்டுக் குத்தாட்டம் போட்ட இவவெல்லாம் இண்டைக்கு அரசியல் செய்யிறா??

:o மன்னிக்க வேணும், இவ வந்து நீச்சலுடையில கலக்கினதால உலக அழகு ராணியா வந்தவ ஆக்கும்!!!!!!!அவ வேற, மேல உள்ள செய்தியக்கா வேற.

Edited by ragunathan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.