Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 14 மில்லியன் பேர் தொலைபேசி பாவனை உலக கோடீஸ்வரர்கள் அம்பானி சகோதரர் அடுத்த வாரம் இலங்கை வருகை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 14 மில்லியன் பேர் தொலைபேசி பாவனை உலக கோடீஸ்வரர்கள் அம்பானி சகோதரர் அடுத்த வாரம் இலங்கை வருகை

இலங்கையின் மொத்த சனத்தொகையான 20 மில்லியன் பேரில் 14 மில்லியன் பேர் தொலைபேசி பாவனை செய்கின்றனர். தொலைத் தொடர்புத் துறையில் இலங்கை முன்னேற்றமடைந்து வருவதையே இது குறிக்கிறது என பிரதி நிதி அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார. இலங்கையில் தொலைத்தொடர்பில் முதலீடு செய்வதற்காக உலக கோடீஸ்வரர்களான அம்பானி சகோதரர்கள் அடுத்த வாரம் இலங்கை வர உள்ளதாகவும் அவர் கூறினார்.

சர்வதேச தொலைத் தொடர்பு இயக்குநர் அறவீடு தொடர்பான ஒழுங்குவிதிகளை நீக்குவது தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அமைச்சர், தொலைத் தொடர்புத்துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆனால், முன்பு தொலைபேசி இணைப்பொன்றைப் பெற 10 வருடங்கள் வரை சென்றது. ஆனால் இன்று ஓரிரு நாட்களிலே தொலைபேசி இணைப்பைப் பெற முடியும்.

மஹிந்த சிந்தனையினூடாக இலங்கையை ஐங்கேந்திரமாக முன்னேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையை வலயத்தின் பிரதான தொலைத் தொடர்பு கேந்திரமாக மாற்றப்படும்.

இலங்கையில் மலேஷியா, இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள் என்பன தொலைத் தொடர்புத் துறையில் முதலீடு செய்து வருகின்றன. இன்று 3ஜி (3மி)தொழில் நுட்பமும் இலங்கையில் வேகமாக வியாபித்து வருகிறது.

தொலைபேசி நிறுவனங்களுக்கிடையிலான போட்டி காரணமாக பாவனையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கப்படுவதோடு குறைந்த கட்டணத்தில் தொலைபேசி அழைப்புப் பெற முடிகிறது. முன்பு ஒரு தொலைபேசி அழைப்பிற்கு 20 ரூபா வரை அறவிடப்பட்ட போதும் இன்று 50 சதம் முதல் ஒரு ரூபா வரையே அறவிடப்படுகிறது.

பீ.பி.ஓ (கிஜிலி) தொழில் நுட்பமுறையும் இலங்கையில் வேகமாக முன்னேற்றமடைந்து வருகிறது. இந்த முறை மூலம் இலங்கைக்கு பெருமளவு வெளிநாட்டு வருமானம் கிடைக்கிறது.

இந்தியா அதிக அளவில் தொலைத் தொடர்பு சேவை மூலம் அதிக வருமானம் ஈட்டுகிறது. அம்பானி சகோதரர்கள் கூட இந்தத்துறையில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் முதலீடு செய்வதற்காக அம்பானி சகோதரர்கள் அடுத்த வாரம் இலங்கை வர உள்ளனர். எதிர்வரும் இரண்டு வருடங்களில் உலகில் தொலைத்தொடர்புத் துறை இந்தியாவிலும் சீனாவிலும் பெருமளவு வியாபிக்கும்.

இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சர்வதேச தொலைத் தொடர்பு இயக்குனர் அறவீடு தொடர்பான ஒழுங்கு விதிகளில் உள்ள சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி பெறவே சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தினூடாக தொலைத் தொடர்பு கம்பனிகள் செலுத்தும் வரியை பின்தங்கிய தொலைத் தொடர்புத் துறை முன்னேற்றத்திற்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக வழங்கப்படும் கால எல்லை குறைவாக இருக்கலாம். இது தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுப்போம்.

=====

Ask Ambani Brothers Not to Invest in Srilanka

Mukesh D. Ambani, Chairman & MD, Reliance Industries Limited

Email: mukesh.ambani@ril.com

Maker Chambers IV, 4th Floor

222, Nariman Point

Mumbai 400021

Phone: 91 22 2287 1418, 2204 5523

Fax : 91 22 2287 0303

Anil Ambani

Email: anil.ambani@ril.com

neeraj.bist@relianceada.com

sudha.vutukuru@relianceada.com

karen.ansar@relianceada.com

pallavi.singh@relianceada.com

Geetika.G.Saxena@relianceada.com

Priya.Shankar@relianceada.com

vijay.kakwani@relianceada.com

Sonia.Pillai@relianceada.com

mukesh.jadwani@relianceada.com

deepa.suresh@relianceada.com

mary.chandrasekhar@relianceada.com

vikas.r.mahendra@relianceada.com

ritu.thapar@relianceada.com

venkatesh_seshadri@ril.com

girija_nair@ril.com

technical_petmkt@ril.com

contact@relianceada.com

=====

Muthamizh

Chennai

சிங்கள பௌத்த பயங்கரவாத அரசின் இனப்படுகொலைகளுக்கு மறைமுகமாக உதவிவரும் Air Tel தொலைபேசி சேவையை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.