Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டக்ளஸ் மீதான வழக்கு;மத்திய,மாநில அரசு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு

Featured Replies

இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்ட பாரம்பரியம் மற்றும் சிறுதொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக் கோரி தொடர்ந்த வழக்கு தொடர்பில் இந்திய மத்திய, மாநில அரசுக்கள் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீடிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் கடந்த வாரம் இந்தியா பயணமாகியிருந்த அமைச்சரை கைது செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக மக்கள் உரிமைக்கழகச் செயலாளரும், சட்டத்தரணியுமான புகழேந்தி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், 1986ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் திகதி சென்னையில் தங்கி இருந்த டக்ளஸ் தேவானந்தா, சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக் கொன்றதுடன் மேலும் 4பேரை காயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.

சில மாதங்கள் கடந்த நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்ட 1988ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10வயது சிறுவனொறுவனைக் கடத்திச் சென்று, 7 இலட்சம் கொடுத்தால் விடுவேன் என்று மிரட்டியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் 1989ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்ட டக்ளஸ் தேவான்ந்தா, அதன் பிறகு அவர் இலங்கைக்கு தப்பினார். இந்நிலையில் இலங்கையில் வைத்து கைது செய்யப்பட்ட அவரை இந்தியாவுக்கு அழைத்து வரும் சந்தர்ப்பத்தில், இலங்கையோடு இந்தியா சில ஒப்பந்தங்களை ஏற்படுத்தியதால், டக்ளஸ் கைது நடவடிக்கையில் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை.

இவ்வாறானதொரு நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த வாரம் இந்தியாவுக்கு பயணமாகியிருந்தார். இந்நிலையில் அவரைக் கைது செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூருத்த சட்டத்தரணி தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த 11ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அது இன்றைய தினம் வரையில் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தனது இந்திய பயணத்தை முடித்துக்கொண்டுநாடு திரும்பினார். குறித்த வழக்கினை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொன்ட நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து மத்திய மாநில அரசுகள் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர் என்று இந்திய செய்திகள் தெரிவித்தன.

http://www.tamil.dailymirror.lk/செய்திகள்/3074

  • கருத்துக்கள உறவுகள்

இவனுங்க அப்படியே உத்தரவு பிறப்பிச்சிட்டாலும்...... நரசம்ம ராவ் மீதான ஊழல் வழக்கு அவன் செத்து பாலூற்றி கருமாதி எல்லாம் முடிந்து 3 வருடம் கழித்து குற்றவாளி என்று தீர்ப்பு வருது.... கொஞ்சம் பவர் புல் என்றால் போபால் விசவாயு கேஸில் இருந்து ஆண்டர்சன் வெளிவந்தது போல உடனே வெளிவரலாம்.... :rolleyes:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

கடத்தல், கப்பம், கொலை, மாது புகழ் டக்கி, இந்திய பிணம் தின்னி நாய்களின் அனுசரணையுடன் தப்பி விடுவாரா?

குறிப்பு:

ஒரு சிலர் என்னிடம் விளக்கத்தை குறிப்பிட்டால் நல்லது என கேட்டதட்கமைய "இந்திய பிணம் தின்னி நாய்கள்" என அழைப்பதற்கான காரணம்: வன்னியில் இன்னமும் மாறு வேடங்களில் நிலை கொண்டுள்ள ஒருசில இந்திய ராணுவ, உளவுப் பயங்கரவாதிகளும், கண்ணிவெடி அகற்றும் குழு என்ற பெயரில் நிலைகொண்டுள்ள இந்திய பயங்கரவாதிகளும், இனப்படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட மக்களின் புதைகுழிகளை கிண்டி தடயங்களை அழிக்கும் வேலைகளை செய்து வருகின்றனர். இவர்களே மாவீரர்களின் துயிலுமில்ல கல்லறைகளையும் சிங்கள பௌத்த பயங்கரவாதிகளுடன் இணைந்து கிளறி அழித்து வருகின்றனர். எல்லை தாண்டிய இந்த பயங்கரவாத செயலை கண்டிக்க, தடுத்து நிறுத்த எந்த இந்தியனும் முன்வரவில்லை. இதனால் இவர்கள் "இந்திய பிணம் தின்னி நாய்கள்" என அழைக்கப்பட சகல தகுதிகளையும் கொண்டுள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.