Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவர் மத்தியில் இன மோதல்களை ஏற்படுத்த சில தீய சக்திகள் முயற்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர் மத்தியில் இன மோதல்களை ஏற்படுத்த சில தீய சக்திகள் முயற்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன்

உயர் கல்வி அமைச்சருக்கு மகஜர்

2010-06-26 07:01:16

தமிழ்சிங்கள மாணவர்கள் மத்தியில் இன மோதல்களையும் முரண்பாடுகளை யும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் öசயற் படும் தீய சக்திகள் தொடர்பாக விழிப் புணர்வுடன் öசயற்படவேண்டும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பி னர் ஈ.சரவணபவன், உயர்கல்வி அமைச் சர் எஸ்.பி. திசõநாயக்கவுக்கு அ

மாணவர் மத்தியில் இன மோதல்களை

ஏற்படுத்த சில தீய சக்திகள் முயற்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் உயர் கல்வி அமைச்சருக்கு மகஜர்

கொழும்பு, ஜூன் 24

தமிழ்சிங்கள மாணவர்கள் மத்தியில் இன மோதல்களையும் முரண்பாடுகளை யும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் öசயற் படும் தீய சக்திகள் தொடர்பாக விழிப் புணர்வுடன் öசயற்படவேண்டும்

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பி னர் ஈ.சரவணபவன், உயர்கல்வி அமைச் சர் எஸ்.பி. திசõநாயக்கவுக்கு அனுப்பி யுள்ள மகஜரில் மேற்கண்டவாறு தெரிவித் துள்ளார்.

சமீபத்தில் யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக அவர் அனுப்பியுள்ள மகஜரின் முழு விவரம் வருமாறு:

அண்மையில் அனைத்திலங்கைப் பல் கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சில நிவா ரணப் பொருள்களை வழங்கும் பொருட்டு இங்கு வந்தபோது அவர்கள் யாழ். பல் கலைக்கழகத்திற்குள் உட்பிரவேசிக்க அனுமதிக்கப்படவில்லை. இச்செயலைக் கண்டித்து அவர்கள் கருத்து வெளியிட்ட மையும், யாழ். பல்கலைக்கழகம் எதிர றிக்கை விட்டமையும், பல்கலைக்கழக நிர் வாகத்தினர் மேற்கொண்ட நடவடிக்கைக ளுக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்தமையும், தென்னிலங்கை மாணவர்களுக்கு இழைக் கப்பட்ட அவமதிப்புகளுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கையை வெளியிட்டமையும் நடந்துமுடிந்த ஆனால், நடக்கக்கூடாத சம்பவங்களாகும்.

அனைத்து இலங்கையிலுமுள்ள மாணவர்கள் மத்தியிலும் ஓர் அந்நியோன்னி யமான உறவு நிலவுவதும், பல்கலைக் கழக நிர்வாகத்திற்கும் மாணவர்களுக்கு மிடையே ஒரு புரிந்துணர்வுடன் கூடிய ஐக்கியமும், ஒருமைப் பாடும் நிலவு வதும் மாணவர்களுக்கு மட்டுமன்றி சமூ கத்துக்கும் நல்ல ஆரோக்கிய மான விளை வுகளை ஏற்படுத்தும் என்பதை எவரும் மறந்துவிடமுடியாது.

யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திற் கும், மாணவர்களுக்குமிடையே காலம் காலமாக நிலவிவரும் சமூக உறவைச் சீர் குலைக்கவும், தென்னிலங்கை மாணவர் களுக்கும் எமது மாணவர்களுக்கு மிடையே முரண்பாடுகளையும், மோதல் களையும் உருவாக்கவும் ஒரு சில தீய அர சியல் சக்திகளால் இவை திட்டமிட்டு நகர்த்தப்பட்டன என மாணவர்கள் மத்தி யில் நிலவும் கருத்தை எவரும் இலகுவில் அசட்டை செய்துவிட முடியாது.

அனைத்திலங்கைப் பல்கலைக்கழக மாணவர்கள் அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு அண்மையில் வைத்து ஆயுததாரிகளால் உயிரச்சுறுத்தல் ஏற்படும் வகையில் மிரட்டப்பட்டதும், தென்னிலங்கைப் பத்திரிகைகளில் அனைத்திலங்கைப் பல் கலைக்கழக மாணவர்கள், யாழ். பல் கலைக்கழக மாணவர்களால் தாக்கப்பட்ட தாகச் செய்திகள் வெளிவந்தமையும் படு மோசமான உள்நோக்கம் கொண்டவையா கும். இவை சிங்கள, தமிழ் மாணவர்கள் மத் தியில் வெறுப்புணர்வை ஊட்டி மோதல் களை ஏற்படுத்தி ஐக்கியம் உருவாவதைத் தடுக்கும் கபட நோக்கம் கொண்டவை என்பதை எவராலும் புரிந்துகொள்ள முடியும்.

தங்கள் அதிகாரங்களையும், பதவி களையும் தக்கவைப்பதற்குக் கப்பம், கடத் தல், கொலை போன்ற சம்பவங்களை நடத்திக்கொண்டே சட்டத்தின் பிடியில் இருந்து தப்புவதற்கு சில தமிழ் அரசியல் வாதிகள் சிங்கள அரசியல் தரப்புகளுடன் ஐக்கியப்பட முடியுமென்றால், பலவித மான பாதிப்புக்கு உட்படுத்தப்படும் சிங் கள, தமிழ் மாணவர்கள் ஏன் ஐக்கியப்படக் கூடாது? ஏன் இவர்கள் இந்த ஐக்கியத்தைத் தடை செய்கின்றனர்? இன ஐக்கியம் என்பது ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்க ளுக்கும் அவர்களை அண்டிப் பிழைப் பவர்களுக்கும் என்றளவுக்கு மட்டுப்படுத் தப்பட்டுள்ளதா என்ற கேள்வி இங்கு எழு கிறதல்லவா?

உத்தரவிட்ட மேலிடம் எது?

தென்னிலங்கை மாணவர்கள் பல்க லைக்கழக வளாகத்திற்குள் உட்புக அனு மதி மறுக்கப்பட்டபோது அது மேலிடத்தின் உத்தரவு எனக் காரணம் கூறப்பட்டது. அந்த மேலிடம் எது என்பதுதான் எவராலும் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறது.

யாழ். குடாநாட்டில் வெளிப்படையில் அரசியல் சக்தியாகவும், பின்புலத்தில் ஆயுத வன்முறையுடன் கூடியதாகவும் ஒரு மேலிடம் செயற்பட்டு வருவதை நாம் அறிவோம். அந்த மேலிடத்தின் கட் டளைகளுக்குக் கட்டுப்பட மறுப்பவர்கள் உயிரச்சுறுத்தல் உட்படப் பலவித மோச மான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டி வருவது தவிர்கமுடியாததாகும். இவ்வகை யில் பல்கலைக்கழக நிர்வாகம் கூட விதி விலக்காகிவிட முடியாதல்லவா? பல் கலைக்கழக நிர்வாகம் இப்படியான ஓர் அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்டே சில நடவடிக்கைகளில் ஈடுபட்டது என மாணவர்கள் கருதுவதும் குறிபிடத்தக்து.

எனவே யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தைக் குறைகூறிவிட முடியாது என்ற போதிலும் தமிழ், சிங்கள மாணவர்கள் மத்தியில் இன மோதல்களையும் முரண் பாடுகளையும் ஏற்படுத்தும் நோக்கத்து டன் செயற்படும் தீய சக்திகள் தொடர்பாக அவர்கள் விழிப்புடன் செயற்படவேண் டும் என்பது எங்கள் அன்பான ஆனால் உரி மையுடன் கூடிய கோரிக்கையாகும்.

இதேவேளையில், யாழ். பல்கலைக் கழக மாணவர் சமூகத்திற்கும் ஒரு பெரும் பொறுப்பும் கடமையும் உண்டு. உலகின் பாரிய முற்போக்கான மாற்றங்களிலும் பல தேசங்களின் விடுதலையிலும் மாணவர்க ளின் பங்களிப்பும் அர்ப்பணிப்பும் அளப் பரியவை. கொடுமைகளுக்கெதிராகக் குரல் கொடுக்கவும் களமிறங்கிப் போராட வும் மாணவர்கள் என்றுமே பின்னின்ற தில்லை.

இப்படியான சந்தர்ப்பங்களிளெல்லாம் யாழ். மாணவ சமூகத்தின் பெரும் பங்களிப்பை எவரும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.

இவ்வகையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் கட்டியெழுப்பப்பட்ட தமிழ்த் தேசிய உணர்வு வடக்கு, கிழக்கு எங்கும் வியாபித்து மக்களை அரசியல் நாட்டம் கொள்ள வைத்தமையை நாம் மறக்க முடியாது.

ஆனால், அண்மைக் காலங்களில் ஏற்பட்ட சில நெருக்கடிகள் காரணமாகவும், போர், இடப்பெயர்வு என்பனவற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாகவும் எமது மாணவர்களின் வீச்சு சற்றுப் பலவீனப் படுத்தப்பட்டு விட்டது உண்மையாகும்.

பல்கலைக்கழக மாணவர்கள் தம்மைத் தாமே ஐக்கியப்படுத்தி ஒரு பலம் வாய்ந்த சக்தியாக மேலெழவேண்டும். இந்த சக்தி பல்கலைக்கழக நிர்வாகத்திற்குத் தோள்கொடுத்து வெளியார் அழுத்தங்களுக்குப் பணிந்து போகாத ஒரு தென்பையும் துணிவையும் வழங்கவேண்டும். எமது மாண வர்கள் ஏனைய பல்கலைக்கழக மாணவர் களுடனும் நெருக்கமான ஐக்கியத்தைப் பேணி ஒரு சுதந்திரமான தனித்துவமான ஒரு கல்விக் கூடமாக யாழ். பல்கலைக் கழ கம் மிளிர்வதை உறுதிசெய்யவேண் டும்.

நன்றி - உதயன் இணையம்

மாணவர் மத்தியில் இன மோதல்களை ஏற்படுத்த சில தீய சக்திகள் முயற்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன்

சரவணாபவா! உங்களுக்கு வேற வேலையில்லை என்றால் உங்கள் அரைவேக்காட்டுத் தனத்தை வெளிப்படுத்தாமல் வாயை மூடிக்கொண்டு இருங்கள்.

உங்கள் கீழ்தர புத்திகளால் யாழ் மாணவர்களுக்கும், பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் உரசல்களை ஏற்படுத்தி அரைவேக்காட்டு அரசியல் செய்து தமிழினத்தின் கல்வியை நாறடிகாதீர்கள்.

வெறும் 300,000 ரூபா நிவாரணப் பொருட்களுடன் ஜே. வீ. பி. பயங்கரவாதிகளின் சதி முயற்சியில் இருந்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் காப்பாற்றப் பட்டனர். இந்த நிவாரணப் பொருட்களுக்கு ஒருசிலர் விபரம் அறியாது அங்கலாய்த்தனர் என்பது வேறு கதை.

பொதறிவு அற்றதுகலெல்லாம் அரசியல் செய்ய வெளிக்கிட்டால் தமிழனின் பாடு இன்னும் மோசமே. வித்தியாதரனின் முயற்சியை முதலாக்கி வந்தவர்கள் நீங்கள் என்பதையும் மறக்க வேண்டாம்.

கொஞ்சமாவது புத்தியிருந்தால், யாழ் மண்ணில் பௌத்த ஆக்கிரமிப்பு பற்றி கடிதம் எழுதுங்கள். உயர் பாதுகாப்பு வலயம் பற்றி கடிதம் எழுதுங்கள். யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் திறப்பதைப் பற்றி கடிதம் எழுதுங்கள். கொக்கிளாய் குடியேற்றம் பற்றி கடிதம் எழுதுங்கள்.

அதைவிட்டுவிட்டு புதிய பிரச்சினையை கிளறி தமிழினத்தை அடிமையாக்கும் முயற்சிகளை கைவிடுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.